திங்கள், 28 ஜூலை, 2014

அலேக் அனுபவங்கள் 140728 ஆரம்ப காலத்தில் .....

             
அப்ரண்டிஸ் ஆக இருந்த பொழுது முதல் இரண்டு அல்லது ஒன்றரையாண்டுகள் பல பிரிவுகளிலும் பயிற்சி. மெஷின் ஷாப் முதல் அக்கவுண்ட்ஸ் செக்சன் வரையிலும் எல்லா பகுதிகளிலும் குறைந்த பட்சம் ஒருநாள் அதிகபட்சம் ஒருமாதம் என்று பயிற்சி உண்டு. (காண்டீனில் மட்டும் பயிற்சி கிடையாது) 
         


ஒவ்வொரு பகுதிக்கும் ட்ரைனிங் சென்ற நாட்களில் அங்கு அரட்டை அடிக்க சில ஆட்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வேன். அதற்கு ஆள் பிடிப்பது ரொம்ப ஈசி. 
            
அந்தந்தப் பகுதிகளில் உள்ள யாராவது ஒருவர், நீங்கள் யார், பெயரென்ன, எங்கிருந்து வருகிறீர்கள், எந்த ஊர் என்று ஏதாவது கேட்டுவிட்டால் போதும். விலாவாரியாக விவரங்கள் கூறி, அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டு, அவருடைய இண்டரஸ்ட் என்ன என்று தெரிந்துகொண்டு, அந்த சப்ஜெக்டிலேயே பந்து போட்டு, பந்தடித்து விளையாட ஆரம்பித்துவிடுவேன். 
            
ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தபட்சம் ஒரு நண்பர் அதிக பட்சம் அந்தப் பகுதியில் இருப்பவர்கள் எல்லோரையும் நண்பராக்கிக் கொண்டுவிடுவேன். சந்தடிசாக்கில் நண்பருடைய பிறந்தநாள் எது என்று தெரிந்து வைத்துக்கொள்வேன். டயரியில் எழுதி வைத்துக்கொள்வேன். பிறந்தநாளில் அவரை நேரில் சென்று கைகுலுக்கி வாழ்த்திவிட்டு வருவேன். 
              

சூப்பர்வைசர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் (என்னுடைய பேட்ச் ஆட்களைத் தவிர) யாரும் சுலபமாகப் பழகமாட்டார்கள்.  அவர்கள் எல்லோரும் மேலதிகாரிகளுக்கு நிறைய பயப்படுபவர்கள். எனவே எனக்கு அதிக நண்பர்கள் தொழிலாளர் வர்க்கத்தினர்தான். அதிலும் குறிப்பாக செமி ஸ்கில்டு  / அன் ஸ்கில்டு /  காஷுவல் /  தொழிலாளத் தோழர்கள் அதிகம். ஜாதி, மத, இன வித்தியாசமே கிடையாது. எல்லோரும் நன்கு பழகுவார்கள். 
                
நான் வடிவமைப்பு & அபிவிருத்திப் பகுதியில் நிரந்தர வேலை செய்ய ஆரம்பித்த பிறகு கூட, மற்றப் பகுதிகளில் ஏதேனும் வேலை ஆகவேண்டியிருந்தால், (உதாரணத்திற்கு) ஒரு சாம்பிள் பிராக்கெட் செய்ய ஸ்டீல் ப்ளேட் 7" X 8" தேவை என்றால், ஷியரிங் செக்சன் சென்று, அங்குள்ள நண்பரிடம் என் தேவையைக் கூறி, யாரிடம் கேட்டால் காரியம் ஆகும் என்று தெரிந்துகொண்டு அவரின் சிபாரிசோடு வேலையை முடித்துக்கொண்டு வருவேன். 
      
    

மெஷின் ஷாப்பில் ஓல்ட் மெஷின்ஷாப், நியூ மெஷின்ஷாப் என்று இரண்டு மெஷின்ஷாப்கள். 
                
அதில் ஓல்ட் மெஷின்ஷாப்புக்கு ட்ரைனிங் சென்றிருந்த பொழுது அங்கிருந்த ஒரு நண்பர், ஆரம்பக் காலத்தில் (ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டு / ஐம்பதுகளில்) லேலண்டு கம்பெனி எப்படி இருந்தது என்று விவரமாகச் சொன்னார். 
                
அதை அடுத்த பதிவில் பார்ப்போம். 
                  

ஞாயிறு, 27 ஜூலை, 2014

ஞாயிறு படம் 264 : "உன்னுள்ளே ஊடாடி ..."






உயிரோடு நீ வாழ
  

உன்னோடு ஊடாடி 

உச்சி வரையும் 

உன்னுள்ளே
உடன் வருவேன்
  
வேர் நான் துணையாக..

கிளை வளர்த்து 

நிழல் பரப்பி 

வாழ்ந்திருப்போம் நெடுங்காலம்!

சனி, 26 ஜூலை, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) விடாமுயற்சிக்கு ஒரு அண்ணாதுரை 



 
2) இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஸ்பெஷல் சில்ரன்ஸ் கூட இந்தப் பாடமுறையை எளிதில் புரிந்து கொள்கிறார்கள். எங்கள் வீட்டில் ஒன்பது பிள்ளைகள். அதில் நான் ஐந்தாவது. என் அப்பா ஆடு வெட்டும் தொழில் செய்பவர் அப்படி இருந்தும் எவ்வளவு கஷ்டமிருந்தாலும் எங்கள் ஒன்பது பேரையும் நன்றாகப் படிக்க வைத்துள்ளார். நான் எம்.ஏ.பிஎட் படித்திருக்கிறேன். தற்போது எம்.எட். படிக்க முயற்சி செய்து 
 வருகிறேன். எனது வெற்றிக்குப் பின்னால் என் கணவரின் உழைப்பும் இருக்கிறது'' என்றார். ஜரீனா பானு   



 
3) (படம் இல்லை) ஷாலினி

 
4) 'ஒரு வைராக்கியத் தாயின் வெற்றிக் கதை!'
 


 
5) 25 ரூபாய்க்கு அன்லிமிடட் சாதம். சுத்தமான தண்ணீர், சுத்தமான குடிநீர்...  //நீண்டு செல்கிற வரிசை ஓரிடத்தில் கை கழுவி விட்டு மீண்டும் வரிசையாகவே செல்கிறது.உணவுக்கூடத்திற்குள் நுழையும் போது ஒரு கல்யாண மண்டபம் போல் விரிந்து கிடக்கிற ஒரு ஹாலுக்குள் எங்கும் மனித தலைகளே.// சாந்தி கேண்டீன் , சிங்கநல்லூர், கோவை.
 


 
6) விவசாயத்தில் சாதித்த தமிழன்! முருகன் 
 

 
7) மதியம் வரை சேவை . மதியத்துக்கு மேல் வேலை. மதுரை அஜ்மல், பிரசன்னா  
 
 
8) பிரேமலதா 85 வயது!
 

 
 
 
 
10) எங்கள் கரும்பாலை பகுதியிலிருந்து 25 ஆசிரியர்கள், 3 வக்கீல்கள், 20 பொறியாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். நிறைய பேர் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக் கிறார்கள். இந்த ஆண்டு முதல் முறையாக 2 பேர் பிஹெச்.டி. பண்ணுகிறார்கள். இவர்கள் அத்தனை பேருமே முதல் தலை முறை பட்டதாரிகள் என்பது முக்கிய மான விஷயம்.. பெருமிதத்துடன் சொன்னார் கார்த்திக் பாரதி.
 

 

வியாழன், 24 ஜூலை, 2014

கங்கை கொண்ட சோழபுரம்




அரியலூர் அருகே உள்ளே கங்கை கொண்ட சோழபுரம் 11 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலை நகரமாக இருந்துள்ளது. இதைத் தலைநகரமாக ஆக்கியது முதலாம் ராஜேந்திர சோழன்.




இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை இவை. இது பற்றிய தமிழ் இந்து கட்டுரை படிக்க படிக்க இங்கே க்ளிக்கி படித்து மகிழவும்.




இந்த வருடம் மார்ச் மாதத்தில் சென்று வந்தது.உடனடியாகப் பதிவு போடமுடியாமல் தள்ளிக் கொண்டே வந்தது. இப்போதும் அடுத்த வாரம் வெளியிடலாம் என்று முதலில் தோன்றியது. ஆனால் இந்நாளின் சிறப்பு கருதி இன்றே இந்தப் பதிவை வெளியிடுவது என்று தீர்மானித்து, அங்கு எடுத்த புகைப்படங்களுடன் பகிர்கிறேன்.





தஞ்சைப் பெரிய கோவிலும் கங்கை கொண்ட சோழபுரமும் அண்ணன் தம்பிகள்! அண்ணன் பெரிய கோவில் 20 வருடம் மூத்தது.






"கொள்ளைக்காரர்களால் ஒரு கட்டிடத்துக்குச் சேதம் ஏற்படுவது போல, இந்தக் கால பொறியியல் வல்லுநர்களால் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குப் பெருங்கேடு உண்டாக்கப்பட்டிருக்கிறது" என்கிறது விக்கி!  விக்கி சுட்டியைக் க்ளிக்கி விவரங்களை அங்கு படிக்கவும்.




இயற்கைச் சீற்றங்களாலும் அந்நியப் படையெடுப்புக் கொள்ளையர்களாலும் சிதைக்கப்பட்டுள்ள கட்டடக் கலையின் உச்சமான இந்த சோழர்களின் மாபெரும் கலைப் படைப்பில் காலெடுத்து வைக்கும்போதே ஒரு அதிர்வு ஏற்படுவது உண்மை. 



ராஜேந்திரச் சோழன் உள்ளிட்ட பெரும் சோழ மன்னர்கள் காலடி பட்ட தடங்களில் நடக்கும்போது உணர்வுகள் பொங்கி வருகின்றன.



தாராசுரத்திலிருந்து இங்கு வந்த நேரம் பிற்பகல் 12 மணியைத் தாண்டியிருக்க,  சன்னதி மூடியிருந்தது. எனவே உள்ளே செல்ல முடியவில்லை.



கிளம்ப மனமின்றி புறப்பட்டோம். 





 

செவ்வாய், 22 ஜூலை, 2014

பிரபலங்களின் எழுத்துகளில் வர்ணனைகள்


சில புத்தகங்களை எடுத்தால் விறுவிறுவெனப் படித்துக் கொண்டு போக முடிகிறது. சில புத்தகங்களை எடுத்தால் தொடர்ந்து
படிக்க ஓடவே மாட்டேன் என்கிறது. இதற்கு உதாரணம் ஜேகே சில குறிப்புகள்!

நாய் வாய் வைப்பது போல இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று படிக்கிறேன்! திடீரென பிரபலங்களின் எழுத்துகளைப் பகிர்ந்து ரொம்ப நாளாச்சே என்று தோன்றவும், உடனடியாக ஒரு பதிவு கிடைத்தது என்று பதிவிடுகிறேன்! முன்னர் இவற்றைப் பகிர்ந்து யாருடைய எழுத்து என்று கேள்வி கேட்போம்! இப்போது எதை எதை யார் யார் எழுதியது என்று சொல்லியே உங்கள் ரசனைக்கு விடுகிறோம்! இந்த மூன்றில், எது உங்களைக் கவர்ந்தது?

சாண்டில்யன் கதைகளைத் தொடங்குமுன் எழுதும் வர்ணனைகள் மிகப் பெரிது.  கல்கியும்! முதலில் படிக்கும்போது (சிறு வயதில்) வர்ணனைகளை ஒதுக்கி விட்டு கதையை மட்டும் படிப்பேன். அப்புறம் வர்ணனைகளையும் படிக்கத்தொடங்கினேன்.  கதையோடு சம்பந்தம் இல்லா விட்டால் வர்ணனைகள் நேரத்தைக் கொல்வது போலத் தோன்றியது என்பதால் இப்போதும் அனாவசிய வர்ணனைகளை பெரும்பாலும் விட்டு விடுகிறேன். ஆனால் இவற்றில் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களின் முத்திரை இருக்கிறதா என்று தெரியவில்லை. ரசனையாக எழுதுகிறார்கள். உதாரணமாக எஸ்ரா எழுதி இருப்பது கதை அல்ல. அது அனுபவம். மழை பற்றிய அனுபவம். மனதில் நிற்கிறது. 

சில வர்ணனைகள் மனதில் நன்றாகவே பதியும். வயதானவர், தலை முன்னாளல் முடி கொஞ்சமாகவும், பின்னால் பம்பையாகவும் என்று படித்துக் கொண்டு வரும்போது உருவம் ஒரு பிம்பமாக மனதில் விழ ஆரம்பிக்கிறது. பஞ்சு போல வெண்மையான தலை என்னும்போது மனப்பிம்பத்தின் உருவத்தின் தலையும் நரைத்து விடுகிறது!
 
============================

                                                                      Image result for si su chellappa images

1)  இரண்டு சிறு குன்றுகளுக்கு நடுவேயுள்ள ஒரு பள்ளத்தாக்கின் வழியே அகன்று வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது அந்தக் கூடு சாலை. அதன் இரு பக்கங்களிலும் நெருக்கமாக வளர்ந்திருந்த ராக்ஷஸ புளி, ஆலமரங்களின் கொப்புகள் சாலை நடுவிற்குக் கவிந்து வந்து கூடி வானம் தெளிவாகத் தெரியாதபடி ஒரு கூடுபோல்,  குடைந்த சுரங்கப் பாதை போல் அமைந்திருந்தது. விதானத்திளிருந்து சரங்கள் தொங்குவதுபோல  ஆலம் விழுதுகள் மெல்லிய காற்றில் அலைபட்டு ஊசலாடிக் கொண்டிருந்தன.


மோதிவரும் மேக அலைகளை ஒதுக்கி ஒதுக்கி விட்டு வெளிக்கிளம்பி நீந்திக் கொண்டு இருக்கும் நிலாவின் ஒளி மரக்கிளை இடுக்குகள் வழியே நழுவிச் சாலை எங்கும் வெள்ளித் துண்டுகளாய் சிதறிக் கிடந்தது. சாலையில் போக்குவரத்து அஸ்தமித்து பத்து நாழிகைக்குமேல் ஆகிவிட்ட படியால் குறைந்துபோய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அகாலத்தில் கிராமத்துக்குத் திரும்பும் ஒன்றிருவரின் நிழலசைவையும் தூரத்துக் கொடிக்காலிருந்து கிளம்பும் ஏற்றப்பாட்டின் மெல்லிய ஒலியையும் மரக்கிளைகளில் திடீர் திடீறேன்றுக் கிறீச்சிடும் குரங்கு சப்தத்தையும் தவிர வேறொரு சப்தமும் ஸ்பஷ்டமாகக் கிளம்பவில்லை.


இருளை உள்ளடக்கி கம்மென்றிருந்த கூடுசாலை நடுவில் அசைநடை போட்டு வந்துக் கொண்டிருந்த ஜோடிக்காளைகளின் குளம்புகள் கம்பி ரோட்டில் படும் சப்தம் விட்டு விட்டுத் துல்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.  சற்று எட்டியுள்ள கிராமம் நோக்கி நேரம்கழித்துத் திரும்பும் அந்த வில்வண்டி சக்கரங்கள் பதறாமல் மெதுவாகச் சுழன்று கொண்டிருந்தன.  சாலைச் சரளைக் கற்களில் குளம்புகள் பட்டு ஒன்றிரு தீப்பொறிகள் தெறித்தன.


கூடுசாலை -  சி சு செல்லப்பா

==============================
==============

                                                        

                                                                 Image result for laa sa raa images
 2)  அதே வயல்கள்தாம். அதே பச்சைக் கதிர்கள்தாம். அதோ தூரத்தில் ஏற்றத்தை இறக்கிக் கட்டிய உறை கிணறுதான். இப்பவும் ஒருவரும் அதைத் தூக்கிக் கொண்டு போய்விடவில்லை. ஆனால் எல்லாமே ஏதோ ஒரு முறையில் மாறியிருந்தன. திடீரென ஏதோ ஒரு மந்திரக்கோல் பட்டு உயிர் பெற்று மூச்சு  விட ஆரம்பித்து விட்டன.


இருந்தாற்போல் இருந்து கதிர்களின் பச்சைகளிடையில் வெள்ளை அசைவுகள் ஒருமித்து ஒன்றே ஆகி அவ்வுயிரின் உரு தன்னிரு பக்கங்களிலும் இரு  வளைவுகளைக் கற்பித்து விரித்துக்கொண்டு கிளம்புகையில், ஒரு பட்சியின் வடிவமாய் அந்தரத்தில் பிதுங்கியது. கீழே உதைத்துக் கொண்டு அது அப்படிக் கிளம்பும் வேகமும் அழகும் என்னுடல் புல்லரித்தது. அதை எதிர்த்துக்கொண்டு என் நெஞ்சம் நெஞ்சுக்குழி வரை எழும்பித் "தடால்" என்று தன்னிடத்தில் வீழ்ந்தது.


ஏதோ இவ்வுலகத்தையே, கோளத்தையே சுழற்றி எறிவதுபோல்  அது எழும்பிய வேகத்தில் நீல மெத்தையில் வைர நகை உருண்டாற்போல், அதன் வெண்மை வானில் ஜ்வலித்தது. நான் பரவசமானேன். என் கைகள் என்னையறியாமல் வானை ஆலிங்கனம் செய்ய விரிந்தன.


காயத்ரீ - லா ச ராமாமிருதம்.

==============================
============

                                                                      

                                                        Image result for s.ramakrishnan images
3)  இரவில் மழை தனித்த சுபாவமுடையதாக இருக்கிறது. அது எப்போது சீறும் எப்போது தணியும் என்று அறிய முடியாது. பள்ளி வயதில் ஒரு நாளிரவு தூக்கத்தினூடே ஏதோ சத்தம் கேட்டு விழித்துக் கொண்டேன். வெளியே மழை பெய்துகொண்டிருந்த சப்தம் கேட்டது. மின்விசிறி சுழலும் ஓசைதான் அப்படி இருக்கிறதா அல்லது மழைதானா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஜன்னல்கள் அடைத்து சாத்தப் பட்டிருந்தன.

மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சம் சுவர்களில் ஊர்ந்து கொண்ருந்தது. பின்னிரவில் வீடு கொள்ளும் தோற்றம் விவரிக்க முடியாதது. அதன் தன்னியல்பிற்கு திரும்பியிருப்பதுபோல இயக்கம் ஓய்ந்து சாந்தம் கொண்டிருந்தது. 

வீட்டின் இயக்கம் பேச்சால்தான் உருவாகிறது போலும். பேச்சு நின்று போனால் வீடு நிம்மதியிழந்து விடுகிறது. பகல் சொற்களின் விளைநிலம், இரவு சொற்களற்ற தியானவெளி.  ஒரு மாலைக்கு எவ்வளவு பேசுகிறோம், எவ்வளவு சொற்கள் உதட்டிலிருந்து உதிர்ந்துபோகின்றன, பேச்சு துவங்கி  பேச்சு ஓயும் வரை பகலெல்லாம் வீடு உருமாறிக் கொண்டேயிருக்கிறது.

மழை என்ன செயும் - எஸ்ரா

சனி, 19 ஜூலை, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்



1) நடிகை டிஸ்கோ சாந்தியின் சேவை.


2) சென்னையின் கொசுக் கஷ்டம் தீர உதவும் 'சீட் டிரஸ்ட்' அறங்காவலர், ரட்சகன்






4) ஒரு கிராமத்தின் போதைப்பழக்கத்தை மாற்றிய மங்களதாஸ் சோனி 



5) ‘பழங்குடியின மக்களின் பிள்ளைகளை பட்டதாரிகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத் தலைவர் கருப்புசாமி.



6) கலைஞர்களையும், அந்த வகையில் கலைகளைக் காக்கும் கல்யாணராமன் 




7) சந்திரசேகரின் சாதனை.


புதன், 16 ஜூலை, 2014

ப்ளாக் மேஜிக்




                                                           
                                                    
சின்ன வயசுல லீவு நாள்னா எப்பப் பார்த்தாலும் வெளில வெளில ஓடிடுவோம். வீட்டுல தங்கற நேரம் கம்மி. 'அவன எங்கடா காணும்?' னு அம்மா கேட்டா,  அடுத்தவன்,  'வெளாடப் போயிருக்காம்மா' ம்பான்... 'நீ போவலையாடா'ன்னா  'ந்தா.. நானு பம்பரம் எடுக்க வந்தேன். போயிட்டே இருக்கேன்' ம்பான் அவன். 


                                                         
நாடா வச்ச டிராயர் போட்டிருப்பேன். எனக்கு என்ன எரிச்சல்னா என்னோட வலது பக்க நாடா தோள்ளேருந்து நழுவி நழுவி விழுந்துகிட்டே இருக்கும். அதை ஒரு கையால புடிச்சுகிட்டே வெளாடறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா...அதோட நெத்தில வந்து விழுந்து கண்ண மறைக்கும் முடியை ஒதுக்கிக்கணும்.. இருந்தா செந்தில் மாதிரி இருக்கணும்... அவன் எப்பவும் மொட்டை..
ஆனா செஞ்சேனே... அதுவும் செஞ்சேனே...

ஒருவாட்டி அண்ணன் கூட ஒரு அல்ப மேட்டர்ல பெட்டு வச்சு தோத்துட்டேன். தோத்தா மொட்டையடிக்கணும்னு சொல்லியிருந்தான். நாங்கள்லாம் என்ன மாரி பரம்பரை... பெட்டு வச்சா ஏமாத்த மாட்டோம்ல.... செந்தில் ஞாபகத்துல மொட்டை அடிச்சிட்டேன். 
                                                                  
                                        
 நான் மொட்டை அடிச்சேன். அப்பா என்ன அடிச்சார்! சும்மா பின்னு பின்னுன்னு பின்னிட்டார். 50 பைசாவுக்கு (அப்போ) ஒரு தொப்பி வாங்கி முடி வளர்ற வரைக்கும் போட்டுக்கிட்டிருந்தேன்! அப்பாதான் வாங்கிக் கொடுத்தார். ஹலோ ப்ரதர்... 50 பைசால்லாம் அப்போ பெரிய அமௌன்ட்டாக்கும்!

                                            
வெய்யில் காலத்துல மதியானத்துல வெளில வெளாடப் போமுடியாம கதவப் பூட்டிடுவா அம்மா. உள்ளேயே கிடக்கணும். மழ வந்தாலும் கஷ்டம்தான். அப்போல்லாம் ஆடு புலி ஆட்டம், புள்ளி வச்சு கட்டம் போடறது (கட்டத்துக்குள்ள எங்க இன்ஷியல் எழுதுவோம்), திருடன் போலீஸ் -நோட்டுல பேர் எழுதி விளையாடுவோம், பரமபதம், பல்லாங்குழி, செஸ்  இப்படி விளையாடி பொழுது போகும். இல்லாட்டி ஒருத்தருக்கொருத்தர் அடிச்சுக்குவோம். சண்டை மண்டை உடையும். ஒரே களேபரம்தான்! 

                                                      
அம்மா மூஞ்சில துண்டப் போட்டுக்கிட்டு 'எப்படா இந்த சனியன் பிடிச்ச ஸ்கூல் தொறக்கும்'னு மனசுக்குள்ள நொந்துகிட்டு படுத்திருப்பா.... இந்த  களேபரத்துல எங்க தூங்கறது?
 

                                                                     

அப்பப்போ ஊர்லேருந்து மாமாக்கள் வரும்போது புதுசு புதுசா கத்துக் குடுத்துட்டுப் போவாங்க.. ஹலோ சிஸ்டர்.... கத்துக் குடுக்கறதுன்னா உக்கார வச்சு கிளாஸ் எடுக்கறதில்ல... எங்கள கேள்வி கேப்பாங்க... கேள்வி கேக்கறதுன்னா சும்மா இல்லங்க.. அந்தக் கேள்விக்கான பதிலை அவங்க சொல்ல மாட்டாங்க... கேள்வி மட்டும்தான்.  சந்தேகம்னா 'அஞ்சு சான்ஸ்' பதிவு படிச்சுப் பாருங்க.. அந்த மாரி நேரத்துல பெரும்பாலும் தப்பிச்சி வெளில தெறிச்சு ஓடிடுவோம்னு வச்சுக்குங்க...

அப்படியும் அவ்வப்போ உக்காரவச்சி கேக்க ஆரம்பிச்சுடுவாங்க.. ஒரு வாட்டி இங்கிலிஷ்ல Aல ஆரம்பிக்கற வார்த்தைகள் வரிசையாச் சொல்லணும்னு... A ன்னு இல்ல.. ஏதாவது ஒரு எழுத்து.. அப்புறம் ஒரே மீனிங்க்ல வெவ்வேறு வார்த்தை.. இப்படி!

சொல்லப்போனா சினிமாப் படம் பேரு முதலெழுத்தும் கடசி எழுத்தும் சொல்லி என்ன பேருன்னு கேக்கற வெளாட்டு கூட அவங்க சொல்லிக் குடுத்ததுதான். அட, இப்படில்லாம் சுவாரஸ்யமா எல்லாம் இருக்கான்னு அப்பப்போ அவங்க சொல்றதை கவனிக்க ஆரம்பிச்சோம்.

                                                          
அப்போ இந்த கட்ட விரல் மேஜிக் செய்வாங்க.. ஆன்னு பாப்போம். 'ஐயோ'ன்னு அலறுவோம். இந்த ஆடியன்ஸ் வேல எல்லாம் நமக்கு நல்லா வரும்ங்க... செய்யறவங்களையும்  உற்சாகப்படுத்தணும் பாருங்க.... இப்படி இருக்கச் சொல்ல, ஒரு வருஷம்,  இப்போ சொல்றேனே, இந்த ப்ளாக் மேஜிக் விளையாடினாங்க.

                                                                   
ஒரு மாமா தூரத்துல இருப்பார். இன்னொரு மாமா நம்ம கிட்ட இருப்பார். நம்ம ஒரு பொருளை இவர்கிட்ட காதுல சொல்லணும். உதாரணமா 'பாம்பு'ன்னு சொல்றோம்னு வைங்க.. அவர் தூரத்துல இருக்கற மாமாவப் பார்த்து 'ரெடியா'ம்பார்.  அவரும் 'ரெடி'ம்பார்.  உடனே வரிசையா ஏதாவதொரு பொருள்கள் சொல்லி 'அதுவா, அதுவா?' என்று கேட்டுகிட்டே இருப்பார். "இல்லை" "இல்லை" ன்னு சொல்லிகிட்டே வர்ற அந்த மாமா சரியா 'பாம்பா'ன்னு இவர் கேட்டதும் மட்டும் "ஆமாம்" என்பார்!


                                                        
நாங்களும் இவர் ஏதோ அவருக்கு சிக்னல் கொடுக்கறார் என்றும், சரியா இத்தனாவது நம்பர் கேள்வியா கேக்கறார் என்றும் இன்னும் விதம் விதமாகவும் சந்தேகப் பட்டோம். ஆனா அவங்க வெவ்வேறு பக்கம் திரும்பி உட்கார்ந்துகிட்டு எல்லாம் சொல்வாங்க.... அப்பவும் சரியா இருக்கும்.  நாங்கள் சொல்லும் எண்ணிக்கையில் எல்லாம் கேட்பார்கள். அப்பவும் சரியாச் சொல்வாங்க. ஆனா ஒண்ணு, எடுத்தவுடனே மட்டும் சரியான விடையைக் கேட்டதில்லை.


                                                                      

எங்களோட ஆச்சர்யம் தீர கொஞ்ச நாளானது. அவங்கதான் எப்படின்னு வேற சொல்லித் தர மாட்டாங்களே.... திரும்பத் திரும்ப விளையாடி ஒரு வழியாக் கண்டு பிடிச்சோம்.
                                                              
                                                                                
அப்புறம் என்ன.... எங்க ஃபிரெண்ட்சை உட்காரவைத்து ப்ளாக் மேஜிக் விளையாடத் தொடங்கி விட்டோம்!
அவ்ளோதான்... கதை முடிஞ்சிடுச்சிங்க.... இனி நீங்க கமெண்ட் போடலாம்.