திங்கள், 30 செப்டம்பர், 2013

ஏழ்மையில் தவிக்கும் தி ஜ ர குடும்பம்.



சமீபத்தில் சலூனுக்குச் சென்றிருந்தபோது ஜூலை மாதத்து 'தினகரன் வசந்தம்' வாரமலர் கண்ணில் பட்டது. அதில் கே. என் சிவராமன், மற்றும் ப்ரியா எழுதியிருக்கும் கட்டுரை கண்ணில் நீரை வரவழைத்தது.
                                                  
                                                     

தி ஜ ர.  தி ஜ. ரங்கநாதன். தமிழின் ரீடர்ஸ் டைஜஸ்ட் என்று அறியப்படும் மஞ்சரியின் ஆசிரியர். 5 சிறுகதைத் தொகுதிகள், எண்ணற்றக் கட்டுரைத் தொகுதிகள், 20 மொழிபெயர்ப்பு நூல்கள், கணக்கற்ற குழந்தை இலக்கிய நூல்கள் என  படைத்தவர்.  

                                      
                                                   
"இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர். அதற்காக சிறைவாசமும் அனுபவித்திருக்கிறார். ஆனால், இந்தியா சுதந்திரமடைந்ததும், தியாகிகளுக்கான 5 ஏக்கர் நிலத்தையோ, மாதாந்திர கவுரவ ஊதியத்தையோ பெற மறுத்து விட்டார். 'நாட்டு சுதந்திரத்துக்காகப் போராட வேண்டியது என் கடமை. அதற்கு எந்தப் பிரதிபலனும் வேண்டாம்' என்று சொல்லி விட்டார்."


இப்படிப் பட்டவருடைய வாரிசுகள்தான் இன்று அடுத்தவேளைச் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுகிறார்கள்.

                                             



72 வயது வரையிலும் மஞ்சரியில் வேலை பார்த்திருக்கிறார்.

பேத்தி சொல்வது :

"அவரோட கடைசி காலத்துல மந்தவெளி குடிசை மாற்று வாரியத்துல அவருக்கு வீடு ஒதுக்கினாங்க. அங்க நாங்க போறப்ப எங்க எல்லாரையும் நிக்கவச்சு படம் எடுத்தாங்க. தாத்தா கைல ஒரு சிலேட்டைக் கொடுத்து அதைத் தூக்கிப் பிடிக்கச் சொன்னாங்க. அதுல அவருக்குன்னு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டோட விலாசம் சாக்பீஸ்ல எழுதியிருந்தது. இப்ப அந்த ஃபோட்டோவைப் பார்த்தாலும் கண்ணுலேருந்து ரத்தமா வரும். எப்பேர்ப்பட்ட மனுஷன்... கைல சிலேட்டைத் தூக்கிப் பிடிச்சுகிட்டு..."

"ஒரு கட்டத்துக்குப் பிறகு தாத்தாவால முடியலை. அதனால வேலைக்குப் போகலை. இந்த நேரத்துல பாட்டிக்கு ரொம்ப முடியாமப் போச்சு. அதனால எங்க பெரிய மாமா வீட்டுக்கு சிகிச்சைக்காகப் போனாங்க...கூடவே தாத்தாவும் போனாரு. ஆனா, அவர் திரும்பி வரவேயில்லை"

அவர் மகன்களைப் பற்றி மகள் சொல்லும்போது,

"அண்ணனும் தம்பியும் எங்களைப் பத்திக் கவலைப் பட்டதில்லை. அவங்க வீட்டுக்கு நாங்க வர்றோம்னு தெரிஞ்சாலே, வீட்டைப் பூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க.அவ்வளவு, ஏன், தங்களோட வீட்டு நல்லது கெட்டதுக்குக் கூட எங்களைக் கூப்பிட்டதில்லை"
சமீபத்தில் மறைந்த எழுத்தாளர், தி ஜ ரவின் சிஷ்யர் மலர்மன்னன் இவர்களுக்கு அவ்வப்போது உதவியிருக்கிறார்.

அந்தக் கட்டுரையின் கடைசி பாரா அப்படியே கீழே...

"சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்மொழியை வளர்த்தவரும், சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு எழுத்தாளரும், தமிழ்ப் பத்திரிகையுலகின் பிதாமகரும் தி.ஜ.ர.வின் குடும்பத்துக்கு உதவ நினைப்பவர்கள், தங்களால் இயன்றதைக் கொடுத்து உதவலாம். அவர் பேத்தி சத்யபாமாவின் வங்கிக் கணக்கு விவரம் : R. Sathyabama, SB A/c No. 37950100001010, IFSC code BARBOTHICHE,[NOTE 0 NOT o] Micr code 600012047 Bank of Baroda, Thiruvanmiyur Branch, Chennai-41 

திண்ணையில் இது சம்பந்தமாக வெளிவந்துள்ள பதிவு.
திரு வெங்கட் சாமிநாதன் எழுதியுள்ளது.


தினகரன் வசந்தம் இதழில் கட்டுரையை முழுமையாக வாசிக்க...[இந்த இதழை இணையத்தில் தேடிப் பார்த்தபோது குறிப்பிடப்பட்டுள்ள  கட்டுரை வெளிவந்திருக்கும் 5 முதல் 8 வரையினாலான பக்கங்கள் மட்டும் அந்த இதழில் மிஸ்ஸிங்!]


சனி, 28 செப்டம்பர், 2013

பாஸிட்டிவ் லாஸ்ட் வீக்...



1) எளிமையாய் குடிசையில் வாழ்ந்து மக்களுக்குச் சேவை செய்யும் ஊராட்சி மன்றத் தலைவர் ராமையா.

                                    
                                                                    


2) மரியாதையில்லாமல் பேசிய எம் டி ஸி நடத்துனரிடம் நியாயத்தை, நியாயமான முறையில் வாங்கிய பெண்மணி.

                                                


3) கொசுவை விரட்ட புதிய கருவி கண்டுபிடித்து சான்றிதழ் பெற்றிருக்கும் மாணவிகள் பற்றி...

                                         

4) எவ்வித அறுவை சிகிச்சையும் இன்றி, ரத்தக் குழாயில் உள்ள அடைப்பை, விரல் நுனியிலேயே கண்டறியும் கருவியை கண்டுபிடித்த, கேரி பியர்ஸ் சொல்கிறார்....

                                             

 5) பாடத்தைப் பாடலாக்கிய பாஸிட்டிவ் ஆசிரியர்.

                                         



6) தன்னார்வத்துடன் கிரா­மங்­களில் சேவை செய்யும், எய்ட்ஸ் விழிப்­பு­ணர்வை ஏற்படுத்­தி­ய­தற்­காக, 196 நாடு­களின் சர்­வ­தேச எய்ட்ஸ் மாநாட்டில் பங்­கேற்ற  நித்தியானந்தம்.
                                                      

7) மந்தாரக்குப்பம் கிறிஸ்தவ பள்ளி தாளாளர் பாதிரியார் டான்போஸ்கோவுக்கு ஒரு சபாஷ். இந்திராவின் தகப்பன் காப்பிக்கு ஒரு சபாஷ். இந்திரா காப்பி டீச்சர்... (தமிழ் இந்து)

                                                     


8) காதலித்து மணந்த கணவன் கயவனாகிக் கொடுமைப் படுத்தியும், ஒரு காலையே வெட்டியும் போன்ற கொடுமைகளை மீறி வாழ்வை எதிர்த்துப் போராடும் நான்கு குழந்தைகளின் தாய் பற்றிய செய்தி தி இந்து நாளிதழில்.

                                         

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130927:: கேள்வியும் பதிலும்... சிவாஜியின் கேள்வியும், தேங்காயின் பதிலும்!


வண்ணத்தில் கேள்வி;




 கருப்பு வெள்ளையில் பதில்!


ரெண்டு ஓவர்ல யார் ரொம்ப ஓவர்? 
 
(அக்டோபர் ஒன்றாம் தேதி, சிவாஜி கணேசனின் எண்பத்தாறாவது பிறந்தநாள்.)  
            

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

உள் பெட்டியிலிருந்து 9 2013



<> எது இழப்பு?
 
மரணம் என்பது பெரிய இழப்பில்லை. உயிரோடு இருக்கும்போதே உறவுகள் பிரிவதுதான் பெரிய இழப்பு.


<> பொறுப்பான பதில்!


பதிலெதுவுமே சொல்லாமலிருப்பதுகூட ஒரு பதில்தான்! நாம் செய்யாமலிருக்கும் ஒரு செயலுக்குக் கூட நாமே பொறுப்பு!

                                                    

                                                        

<> வேண்டாமே...!

உங்கள் உணர்ச்சிகளைக் காட்ட கண்ணீரை ஒரு கருவியாக உபயோகிக்க வேண்டாம். உங்கள் கோபத்தைக் காட்ட வார்த்தைகளின் துணையை நாட வேண்டாம்.

முழு புரிதல் உணர்வு இல்லாமல் ஒரு உறவை நெருக்கப்படுத்திக் கொள்ளவும் வேண்டாம். சிறு சச்சரவில் ஒரு உறவை முறித்துக் கொள்ளவும் வேண்டாம்.


<> ஜோக் ஜோக்!
                                              

                                                                       
பேஷன்ட் : "நீண்டநாள் உயிர் வாழ வழி ஏதும் இருக்கா?"
டாக்டர் : "கல்யாணம் செய்துகொள்!"
பேஷன்ட் : "அது உதவுமா?"
டாக்டர் : "இது மாதிரி விபரீத எண்ணங்களைத் தடுக்கும்"


<> நட்பு பற்றி இரண்டு விஷயம்!


1) நட்பு என்பதைப் பற்றி எல் கே ஜி மாணவன் சொன்னது : டை இல்லாமல் நான் ஸ்கூல் சென்றபோது என் நண்பன் தான் அணிந்திருந்த டையை அவிழ்த்து எடுத்து பைக்குள் வைத்துக் கொண்டதுதான் நட்பு!

                                                              
2) உலகின் வெற்றிகரமான. சந்தோஷமான நண்பர்களுக்கிடையே ஒத்த உணர்வு இருப்பதில்லை. ஆனால் தங்களிடையே இருக்கும் வித்தியாசங்களைப் பற்றிய புரிதல் இருக்கிறது.


<> உண்மைதாங்க...

புன்னகையும் தூக்கமும் மனிதனின் மகிழ்ச்சிக்கு செலவில்லாத மருந்துகள். நிம்மதியாய்த் தூங்கிப் புன்னகையுடன் எழுவோம்.


நம்முடன் ஒத்துப் போகிறவர்களுடன் வாழ்வது நமக்கு வசதியாகத்தான் இருக்கும். ஆனால் உண்மையில் நாம் வளர்வது எதிர்மறைக் கருத்து கொண்டவர்களுடன் பழகும்போதுதான்.

 <> குழப்பாதீங்க...!


"கடவுள் இருக்கிறார் என்பதை எப்படி நம்புகிறீர்கள்?"

                                                            
இருக்கிறது என்பதற்கான அத்தாட்சியின்மை இல்லை என்பதற்கான அத்தாட்சியில்லை"

 
<> சக்களத்தி!

சிலசமயங்களில் மூளை ஏற்கெனவே அறிந்ததை ஒத்துக்கொள்ள இதயத்துக்கு/மனதுக்கு  சற்று அதிக நேரம் பிடிக்கிறது.


<> சில அறிவுரைகள்..

வெற்றிக்கான ஒரு வரி! "உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே!" அல்லது "உன்னிடமே நீ பொய் சொல்லாதே!"
மனதைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது சிறந்த தத்துவம். வெற்றி மகிழ்ச்சி தருமோ, தராதோ.. மகிழ்ச்சியான மனநிலை நிச்சயம் வெற்றியைத் தேடித் தரும்.
                                                        

                                                                    
பல்லிருக்கும் வரை வாய்விட்டு நகைத்து விடுங்கள். புன்னகையைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

சனி, 21 செப்டம்பர், 2013

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்



1) திரௌபதிக்கு உடையளித்த கிருஷ்ணன் அந்தக் காலம்.  தனியொருவராய் 400க்கும் மேற்பட்ட நபர்களுக்குத் தேடிச் சென்று உணவளிக்கும் இந்தக் காலக் கிருஷ்ணன் பற்றித் தெரிந்து கொள்ள...
                                            


2) படிப்பில்லாமல் குடிசைவாழ்க் குழந்தைகள் சமூகவிரோதிகளாகும் அபாயத்தைத் தடுக்க, 22 குழந்தைகளுடன் தொடங்கி, இன்று 250 குழந்தைகளுக்கு கல்வியும் மதிய உணவும் இலவசமாகவே கொடுத்து வரும் முத்துகிருஷ்ணன்.
                                                 


3)  'டயல் ஃபார் ப்ளட்' என்ற வாசகத்துடன் டி ஷர்ட் அணிந்திருக்கும் 27 வயது தருமபுரி இளைஞர் பற்றி விகடனில் செய்தி. அங்கு இந்தியன் பில்லர்ஸ் என்று இதற்காகவே பிரத்தியேக கால் சென்டர் நடத்தி வரும் வினோத் அமைப்பில் இதுவரை சுமார் 20,000 பேர் இரத்ததானமும், 218 பேர் கண் தானமும் செய்திருக்கிறார்களாம். ரத்த தானத்துக்குச் செய்யும் தொலைபேசிக் கட்டணத்தைத் தாங்கத்தான் அரசாங்க உதவியை நாடுகிறார் வினோத். அவர் கேட்பது ஒரு டோல் ஃப்ரீ நம்பர். இவரது தொலைபேசி எண் 9488848222. ரத்ததானம் செய்ய விரும்புவோர் இந்த தளத்துக்குச் சென்று பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம் என்கிறார்.


4) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற இதய மருத்துவ நிபுணர் டாக்டர் ஃபிரான்சிஸ் ஃபாண்டன் பெயரில் இயங்கும் இதய-மார்பு  மருத்துவ நிபுணர்களுக்கு என ஏற்படுத்திய EUROPEAN ASSOCIATION FOR CRDIO THORASIC SURGERY (EACTS) உலகம் முழுதும் உள்ள இத்தகைய மருத்துவர்களில் சிறந்தவரைத் தேர்ந்தெடுத்து வழங்கும் 'ஃபிராண்டன் பிரைஸ்' விருதைப் பெற்ற முதல் இந்திய மருத்துவர் சென்னையைச் சேர்ந்த சௌம்யா ரமணன். இவர் சென்னை முகப்பேரில் உள்ள டாக்டர் கே எம் செரியன் ஹார்ட் ஃபவுண்டேஷனில் ஃ பிரான்டியர் ஹெல்ப்லைன் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர்.

                    
                                            

  5) இவரல்லவோ மனிதர்


                               


6) பெரிய நிறுவனம் என்று தயக்கம் பாராமல், நேரம் கெடுமே என்று சுணக்கம் பாராமல்,  நியாயத்துக்காக தைரியமாகப் போராடிய மெல்லிசைக்குழு நடத்தி வரும் ஸ்ருதி பாலாஜி பற்றிய செய்தி இட்லி வடையில்.

                                  

7) கடல் சுழலில் மாட்டிய தனது நண்பர்களைக் காப்பாற்றிய பள்ளி மாணவன் ரிஷி பற்றி அறிய...

                                                       

                              
                                                        
8) கடமையைச் செய்ய பயப்படாத துணிச்சல் பெண் சுகி பிரேமலா பற்றி... இந்த வருடம் முதல்வரிடமிருந்து 'கல்பனா சாவ்லா' விருது பெற்றவர் இவர்.

                                                     


9) கர்நாடக அமைச்சர் ஒருவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது அதிவேகத்தில் அவரது குழுவைத் தாண்டிச் சென்ற 7 பேர்கள் அடங்கிய கார் ஒன்று சற்று தூரத்தில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்ததையும், அதிலிருந்த ஒருவர் உதவி கேட்டு ஜன்னல் வழியே கை நீட்டிக் கதறுவதையும் பார்த்து அமைச்சர் வண்டியை நிறுத்தி, அவரது ஓட்டுனர் (ரவிச்சந்திரன் என்று படித்த நினைவு) நீரில் குதித்துக் காரில் இருந்தோரைக் காப்பாற்ற, அமைச்சர் அருகிலிருந்த அதிகாரிகளுக்குத் தொலைபேசி, இவர்களுக்கு உதவ ஆவன செய்தாராம். பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர்கள் யாருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் ஆபத்தில் இருந்தவர்களைக் காப்பாற்றிய ஓட்டுனரின் செயல் பாராட்டுக்குரியது.


 10) இயலாமை, முடியாது என்ற சொல்லையே மறக்கச் செய்த சக்கரநாற்காலியில் ஒரு சாதனையாளர்.

                                                     

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130920 :: சிறுத்தைப் புலியின் கருணை!



பாதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா! 
மீதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா! 
   

புதன், 18 செப்டம்பர், 2013

அலேக் அனுபவங்கள் 23:: மாடு பிடித்த கதை!

     
வெகு பழங்காலத்தில், என் உடன் பணியாற்றிய நண்பர், அவருடைய மேலதிகாரி பற்றி, அவரின் விசித்திர பழக்கங்கள் பற்றி, என்னிடம் சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். மதிய உணவு நேர அரட்டை கச்சேரிகளில், மேலதிகாரிகளின் தலைகளை நிறைய உருட்டுவோம். 
            
பெயர்கள் ஒன்றும் குறிப்பிடாமல், சம்பவங்களை மட்டும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். 
              
நண்பரும், அதிகாரியும், ஒரு குறிப்பிட்ட லாரி வகை ஒன்றைப் பார்த்து, அதனுடைய கேபின் வடிவமைப்புப் பற்றி ஆராய்ந்து, சில அளவுகள் எடுப்பதற்காக, அண்ணா சாலையில் உள்ள, ஒரு டீலர் பாயிண்ட்டுக்குச் சென்றிருக்கின்றார்கள். 


டீலர், குறிப்பிட்ட அந்த (போட்டியாளர்) வண்டி, இரவு பதினொரு மணிக்குத்தான் அங்கு வரும் என்று கூறியிருக்கிறார். 
        
நண்பரும், மேலதிகாரியும் இரவு எட்டு மணிக்கே அங்கு சென்று விட்டதாலும், அதிக நேரம் காத்திருக்க வேண்டும் என்பதாலும், பக்கத்தில் உள்ள உணவகம் சென்று, அங்கே இரவு உணவை முடித்துக் கொண்டு வந்து விடலாம் என்று சென்றிருக்கிறார்கள். 

இனி நண்பர் கூறியது, அப்படியே: 

ஹோட்டலில் நுழைவதற்கு முன்பு, ஹோட்டல் வாசலில் எழுதியிருந்த மெனுவை, நன்கு, ஊன்றிப் படித்து, மனனம் செய்து கொண்டார் அதிகாரி. உள்ளே நுழைந்து, முதலில் ஓரிடத்தில் உட்கார்ந்து பிறகு அந்த இடம் வேண்டாம், சுத்தமாக இல்லை என்று வேறு ஒரு இடத்தில் போய் உட்கார்ந்தார், என்னையும் இழுத்துக் கொண்டு. 
     
அதிகாரி: நீ என்ன சாப்பிடறே?
               
'எனக்கு நான்கு இட்லிகள் போதும்' என்றேன். 
                
அவர் சர்வரை அழைத்து, மள மள வென்று, செட் தோசை, சப்பாத்தி, ஆனியன் ரவா, தயிர் சாதம் என்று பெரிய மெனு கொடுத்து, இவருக்கு நாலு இட்லி என்று கூறினார். எல்லாவற்றையும் அவர் சாப்பிட்ட வேகம் அசாத்தியமாக இருந்தது. இதெல்லாம் முடிந்தவுடன், சர்வரிடம், ஒரு பால், ஒரு காபி என்றார். 
    

"எனக்கு எதுவும் வேண்டாம்." என்று நான் சொல்லிய பொழுது, 'இரண்டுமே எனக்குதான்' என்றார். 

"எதற்கு இரண்டும்?"

"பால் ஹெல்த்துக்காக,காபி தூக்கம் வராமல் இருக்க - வண்டி வந்து, அளவுகள் எடுத்து முடித்து, வீட்டுக்குப் போய்ச் சேரும் வரை தூக்கம் வராமல் இருக்கணுமே!"

"ஓஹோ? சரிதான்!"

அத்தோடு விட்டாரா? ஹோட்டலுக்கு வெளியே வந்ததும், அங்கே இருக்கின்ற கடையில், அரை டஜன் பச்சை வாழைப் பழம் வாங்கினார். சரி, இரவு வெகு நேரம் ஆகிவிட்டால், வயறு காயக்கூடாது என்று, பிறகு கடைகள் மூடிவிடுமே என்ற பயத்தில், முன்னேற்பாடாக வாங்குகிறார் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன். 
  

"நீ பழம் சாப்பிடுறியா?" 

"வேண்டாம்! வேண்டாம்! நாந்தான் சொன்னேனே - இரவு உணவு நான் எப்பவுமே ரொம்ப சிம்பிளாதான் சாப்பிடுவேன்!"

அவர், கடைக்காரர் பழங்களைப் போட்டுக் கொடுத்த கேரி பாகிலிருந்து ஒவ்வொன்றாக பழத்தை எடுத்து, உரித்துச் சாப்பிட்டு, பழத்தின் தோலை, அதே கேரி பாகில் போட்டார். ஆறு பழங்களையும் சாப்பீட்டு முடித்து, பையில் ஆறு பழத்தின் தோல்களையும் பத்திரப் படுத்திக் கொண்டார். இன்னும் ஒரு மணி நேரம் கழித்து அதையும் சாப்பிட்டு விடுவாரோ என்று சந்தேகம் வந்தது. 

"இரவு சாப்பாட்டிற்குப் பிறகு, எப்பவும் கொஞ்சம் வாக்கிங் போகணும். அதுதான் ரொம்ப நல்ல பழக்கம் என்று எங்க தாத்தா சொல்லியிருக்கார். வா என்னோடு!"

அவர் பின்னேயே சென்றேன். நேராக ஜெமினி மேம்பாலம் வரை சென்றோம். 
     
மேம்பாலத்தின் கீழே, சில மாடுகள் உட்கார்ந்து, அசை போட்டுக் கொண்டிருந்தன. 
      

உட்கார்ந்திருந்த ஒரு மாட்டை அவர் சுற்றி வந்தார். மாடு அவரைப் பார்த்து கொஞ்சம் மிரண்டது போல இருந்தது. அதன் முகத்தின் அருகில் போய் நின்று கொண்டார். கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். பிறகு, மாட்டின் வால் பக்கம் வந்து, "ஹேய்" என்று லேசாக அதட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மாட்டிற்கும் ஒன்றும் புரிந்திருக்காது போலிருக்கு. அவரை இக்னோர் செய்து, அசை போடுவதில் கவனமாக இருந்தது. 

அடுத்து அவர், தன் வலது கால் ஷூ வை தரையில் சத்தமாக உதைத்து, "ஹேய்" என்றார். மாடு, 'இது ஏதடா இந்த மனுஷன் நம்மை நிம்மதியாக உட்கார்ந்து அசை போட விட மாட்டான் போலிருக்கே' என்று நினைத்து, சிரமப்பட்டு கால்களை ஊன்றி, எழுந்தது. இருட்டில், அந்த மாட்டின் அடிப் பாகத்தை உன்னிப்பாக கவனித்த அதிகாரி, "ச்சே! காளை மாடு" என்று அலுத்துக் கொண்டு அடுத்த மாட்டை நோக்கி நகர்ந்தார். 
              
அதிகாரி, அப்புறம் சொன்னார், "பழத் தோலை, பசு மாடுகளுக்கு உண்ணக் கொடுத்தால், ரொம்ப புண்ணியம் என்று தாத்தா சொன்னார் .... " 
     

திங்கள், 16 செப்டம்பர், 2013

பக்கப் பார்வை பாருங்கள்.

ஒரு பொருளை, மேலிருந்து பார்த்து வரையப்படுகின்ற படம், பிளான் என்று அழைக்கப்படும். 
          
அதே பொருளை, நேரே பார்த்து வரையப் படுகின்ற படம், எலிவேஷன். 
         
இடது பக்கத்திலிருந்தோ அல்லது வலது பக்கத்திலிருந்தோ பார்த்து வரைவது, சைட் வியூ. 
    
மேலே காட்டப்பட்டுள்ள படத்தில், பிளான் மற்றும் எலிவேஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருளின் சைடு வியூ எப்படி இருக்கும் என்று யூகித்து, உங்களால் வரைய முடியுமா? முடிந்தால், ஒரு தாளில் வரைந்து, அதைப் படம் எடுத்து, எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.  
   
(இந்தப் பதிவு, ஹுஸைனம்மா அவர்கள் சென்ற பதிவின் கருத்துரையில் கேட்டுக் கொண்டதன் பேரில், இங்கே)
     
ஹுஸைனம்மா said...
’அங்கே’ கேட்ட கேள்வியை இங்கேயும் கேக்குறது? (பதில் என்னன்னு தெரியாம மண்டை காயுதுல்ல) :-))))
             

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

ஞாயிறு 219::பொறியாளர் தினம்.

                         
                         
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா (கன்னடம்ಶ್ರೀ ಮೋಕ್ಷಗುಂಡಂ ವಿಶ್ವೇಶ್ವರಯ್ಯசெப்டம்பர் 15, 1860 - ஏப்ரல் 14, 1962) புகழ்பெற்ற இந்திய பொறியாளர் ஆவார். தாய்மொழி தெலுங்கு. இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னாவை 1955ம் ஆண்டு பெற்றவர். இவர் நினைவாக செப்டம்பர் 15 இந்தியாவில் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.    
          
கி பி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எட்டாம் ஆண்டில், அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன்பே (வி ஆர் எஸ்) விருப்ப ஓய்வு பெற்றவர்!  
                 

சனி, 14 செப்டம்பர், 2013

நல்லதா நாலு செய்திகள்!

           
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சொத்து விபரம், கல்வித்தகுதி மற்றும் கடந்த கால குற்ற பின்னணிகள் ஆகியவற்றின் முழுமையான, உண்மையான விபரத்தை சமர்ப்பிக்காவிட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என சுப்ரீம் கோர்ட் நேற்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது
              
சென்னையில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகின்றது. 
               
மழை, காற்று, பவர் கட் என்று ஊரே அல்லோகலப் படுவதால், எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் இணையப் பக்கம், வலைப் பக்கம் வந்து வாசகர்களை துன்புறுத்தாமல், சமர்த்தாக முகநூலில் மட்டும் அவ்வப்போது முகம் காட்டி சென்று கொண்டிருக்கின்றார்கள்! 
              
வாசகர்கள் எல்லோரும், மின்சக்தியை அதிகம் பயன்படுத்தாமல், சிக்கனமாக சிறுசேமிப்பு செய்து, சந்தோஷமாக பொழுதைக் கழித்து வருகிறார்கள். 
           


செவ்வாய், 10 செப்டம்பர், 2013

கொலுசு எங்கே?

    
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் நான் நுழைந்தபோது மாலை ஐந்து மணி இருக்கும். இன்னும் ஒரு மணி நேரம் இங்கேதான் நேரத்தைக் கடத்த வேண்டும். பேரக் குழந்தை டான்ஸ் கிளாஸ் முடிந்து வரும்வரைக் காத்திருக்க வேண்டும். 
  


பச்சைச் செடிகளும், பவள வண்ண மலர்களும், நீல நிற நீச்சல் குளத் தண்ணீரும், ஆங்காங்கே வித விதமான ஆடைகள் அணிந்த சிறுவர்களும், சிறுமியரும், உற்சாகமாக ஓடி விளையாடிய காட்சி, மனதுக்கு இதமாக இருந்தது. 
    
வயதில் மிகவும் சிறிய குழந்தைகள், அவர்களுடைய அம்மாவுடனோ, அல்லது அவர்கள் வீட்டு பணிப்பெண்ணுடனோ வந்திருந்தனர். அப்படி வந்த ஒரு பணிப்பெண், தொலைக்காட்சி வந்த புதிதில், கருப்பு வெள்ளை நாடக நாட்களில் அடிக்கடி சென்னை தொலைக்காட்சியில் நடித்த ஒரு பெண்ணின் சாயலோடு இருந்தாள். (நித்யா?) அவளோடு வந்தது ஒரு மூன்றாம் பிறை. மூன்று வயதுப் பெண் குட்டி. 
  
இந்தக் குட்டிப் பெண் நுனிக் கால்களால் நடந்து வந்தாள். காலில் ஏதாவது முள் குத்திவிடுமோ என்று அஞ்சியபடி நடந்தது போலவும் இருந்தது. ஆனால் முகத்தில் கொள்ளைச் சிரிப்பு. அந்தப் பக்கம் வந்தவர்கள் எல்லோரையும் நட்பான புன்னகையுடன் பார்த்து, வலது கையை மடக்கி ஆட்டியபடி, "டா டா டா டா" என்றாள். அந்த வழியே சென்றவர்களும் அவளைப் பார்த்துப் புன்னகைத்து, அல்லது அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டியபடி, சென்றனர், வந்தனர். 
    

அந்தக் குழந்தையின் கால்களில், கெட்டியான வெள்ளிக் கொலுசுகள். அவளுடைய கால்கள், அந்த கனமான கொலுசுகளின் எடையைத் தாங்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஒருவேளை அந்த கொலுசுகள் மிகவும் கனமாக இருந்ததால்தான் அந்தக் குழந்தை நுனிக் கால்களால் நடக்கின்றதோ என்ற சந்தேகமும் எழுந்தது. 

பணிப்பெண் அங்கே குழுமியிருந்த மற்ற பணிப்பெண்கள் (சிறார் காப்பாளர்கள்தான்) சிலருடன் சுவாரஸ்யமாக அரட்டையடிக்கத் தொடங்கினாள். எல்லா பணிப்பெண்களிடமும் ஒரு செல்ஃபோன்! சிலவற்றில் காமிரா இருந்தது போலிருக்கு. காமிரா செல்ஃபோன் வைத்திருந்த பணிப்பெண்கள் மற்றவர்களை படம் எடுப்பது, உடனே அதை அவர்களின் படத்தை அவர்களிடமே காட்டி சிரிப்பது என்று பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள். விளையாடிக் கொண்டிருந்த, அவர்கள் அழைத்துக்கொண்டு, தூக்கிக் கொண்டு வந்திருந்த குழந்தைகளை ஒரு கண் பார்த்து, அவர்கள் முள் செடி பக்கம் போகாமல் பார்த்துக் கொண்டனர். 
   
நான் என்னுடைய ஹாண்ட் பாக் திறந்து, அதனுள் இருந்த அமேசான் கிண்டிலை வெளியே எடுத்தேன். அதில் லா ச ரா எழுதிய 'அபிதா' நாவலை ஏற்கெனவே விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினேன்.  
   
"... கண்கூடாக நடப்பது கொண்டே கதை எழுதுகிறதென்றாலும் கதையில் படிப்பது அனுபவமாக நிகழ்ந்திடில், அது சமாதானமாவதில்லை. அதில் கதையின் இன்பமில்லை.   ஒரு தினுசான பீதிதான் தெரிகிறது. எந்தச் சமயம் கனவு கலைந்து எப்போ நனவில் விழிப்போம் எனக் கனவு கலையும் சமயத்திற்கஞ்சி நனவை நானே எதிர்கொள்ளக் கண்ணைக் கசக்கிக்கொள்கிறேன். ஆனால் நான் காண்பதாக நினைத்துக் கொள்ளும் கனவேதான் நான் கண் விழித்த நனவு எனத் தெளியத் தெளியக் குழப்பம்தான் கூடுகிறது." 

தெளியத் தெளியக் குழப்பம்தான் கூடுகிறது! என்ன சொல்கிறார் இவர்! கடைசி வாக்கியத்தைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தாலும் மனதுக்குப் பிடிபடவில்லை. முழங்காலில் ஏதோ ஒன்று ஊர்ந்தது. என்ன என்று திடுக்கிட்டுப் பார்த்தேன். அந்தக் குழந்தைதான். இதனிடம் என்ன பாஷையில் பேசுவது? 

எல்லா பாஷைகளையும் கலந்து, அபிநய சரஸ்வதியாக, "நீ பேரு எந்தா?" என்று கேட்டேன். அந்தக் குழந்தை சந்தேகமாக என்னைப் பார்த்து, " நின்ன்ணீ " என்றது. பிறகு, என்னுடைய கைப் பையை நோக்கிக் கையைக் காட்டியது. பையை அதனிடம் கொடுக்க நீட்டினேன். அதற்குள் அந்தக் குழந்தையை அழைத்து வந்த பணிப்பெண், "நிம்மி இல்லி ஏனு மாடி?..." என்று கேட்டவாறு தூக்கிச் சென்று, தன்னருகே வைத்துக் கொண்டு அரட்டைக் கச்சேரியைத் தொடர்ந்தாள். அடுக்கு மாடிக் கட்டிடங்களில் பணி புரிகின்ற பணிப்பெண்களுக்கு நான்கைந்து பாஷைகள் தெரிந்துள்ளது. கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி. சிலர் ஆங்கிலம் கூட பேசுகிறார்கள். ஆனால் எல்லா மொழிகளிலும் அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா? சந்தேகம்தான். 

லா ச ரா வைத் தொடர மனம் வராமல், அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் சொந்த வீடுகளில் குடியிருப்போர், வாடகைக்குக் குடியிருப்போர், அங்கு பணிபுரிபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்திருப்பவர்கள் என்று பலரைப் பற்றியும் சிந்தனை தொடர்ந்தது. வீட்டு வேலை செய்பவர்களுக்கு இந்தக் காலத்தில் கணிசமாக சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. குடியிருப்பில் பணி புரிய உள்ளே வருபவர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை எல்லாம் உண்டாம். ஏதேனும் ஒரு பொருளை நாம் அன்பளிப்பாக அவர்களுக்குக் கொடுத்தால் கூடவே மெயின் கேட் செக்யூரிட்டி ஆட்களுக்கு ஒரு கடிதம் கொடுக்க வேண்டுமாம். இன்னின்ன பொருளை பிளாட் எண் --- இல் வசிக்கின்ற நான், இந்தக் கடிதம் கொண்டு வருகின்ற, இந்தப் பெயருடைய அம்மணிக்கு கொடுத்திருக்கின்றேன். (கையொப்பம்) அதை அவள் எடுத்துச் செல்ல அனுமதிக்கவும் என்று என் ஆர் எம் ஜி பி (NRMGP = Non returnable material gate pass) போட்டுக் கொடுக்க வேண்டுமாம்! நான் பார்த்த வரை, இங்கு உள்ளே வருகின்ற பணிப்பெண்களும், வெளியேறுகின்ற பணிப்பெண்களும் கையில் எதுவுமே எடுத்து வருவதில்லை, எடுத்துச் செல்வதில்லை, செல்போனைத் தவிர. 
   

பேரக் குழந்தை வந்தாச்சு. கிளம்ப வேண்டியதுதான். நிம்மி பக்கம் பார்த்துக் கொண்டே கிளம்பினேன். நிம்மி நுனிக் கால்களால் நடந்துகொண்டே என்னைப் பார்த்துக் கையை ஆட்டினாள். நானும் கையை ஆட்டியபடி கிளம்பும்பொழுதுதான் பார்த்தேன், நிம்மியின் இடது கால் கொலுசு அவள் காலில் காணோம்! வலது கால் கொலுசு மட்டும் இருந்தது. நேரே அந்தப் பணிப்பெண்ணிடம் சென்று, நிம்மியின் கால் கொலுசு காட்டி, எனக்குத் தெரிந்த மொழிகள் எல்லாவற்றையும் கலந்து, "ஒன்றைக் காணவில்லையே பார்"  என்றேன். அவள் பரபரப்பாக அக்கம் பக்கத்தில் தேடத் தொடங்கினாள். செடிகள், புதர் பக்கம் எல்லாம் தேட ஓடினாள். அவள் முகத்தில் கலவரம், பயம் எல்லாம் தெரிந்தது. இருள் கவ்வும் நேரம். அவளுடைய மற்ற தோழிகளும் சேர்ந்து தேடத் துவங்கினர். 
   

எனக்கும் கவலை தொற்றிக் கொண்டது. குழந்தையின் பெற்றோர், இந்தப் பணிப்பெண்ணை சுடு சொற்கள் கூறி வசை பாடுவார்களோ? சம்பளத்தில் பிடித்துக் கொள்வேன் என்று கூறுவார்களோ? வேலையை விட்டே நீக்கிவிடுவார்களோ? பாவம் அந்தப் பெண். ஆனாலும் இவர்கள் இந்த மாதிரிக் குழந்தைகளை விளையாடுமிடத்திற்கு அழைத்து வரும் பொழுது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படி பல எண்ணங்களோடு வீடு வந்து சேர்ந்தேன். இனிமேல் அடுத்த வாரம்தான் அங்கு செல்வேன். பேரக் குழந்தைக்கு இன்னும் நான்கு நாட்கள் கழித்துதான் அடுத்த நடன வகுப்பு. அப்போ போகும்பொழுது அந்தப் பெண் மற்றும் அவளுடன் நிம்மி எலோரும் வருகிறார்களா என்று பார்த்துக் கொள்ளலாம். இல்லையேல் அவளுடைய நண்பர் குழாத்திடம் விவரங்கள் விசாரித்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். 
**** **** **** 
அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் எனக்கு சென்னைப் பயணம். முன்பே பிரிண்ட் எடுத்து வைத்திருந்த இரயில் டிக்கெட் என்னுடைய கைப் பையில் இருந்தது. இரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் அந்த டிக்கெட் காட்டி, அவர் அதில் கிறுக்கிக் கொடுத்ததும் அதை வாங்கி சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன். அமேசான் கிண்டில் கையில் எடுத்து, அபிதாவை விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினேன். 
                 
படித்துக் கொண்டிருக்கும் பொழுது, பை மேலே கையை ஓட விட்டேன்.  உள்ளே கோகுலாஷ்டமி முறுக்கு போல ஏதோ ஒன்று  தட்டுப்பட்டது. பேரக் குழந்தை என்னுடைய கைப் பைக்குள் முறுக்கைப் போட்டிருக்கு போலிருக்கு. பயணத்தில் வெறும் வாயை மெல்லுவதற்கு பதில், அதையாவது மெல்லலாம் என்று நினைத்தேன். பையிலிருந்து அதை எடுத்து ஆவலோடு பார்த்தால், அது நிம்மியின் கொலுசு! 
                       
(இதில் சில சம்பவங்கள் மட்டுமே உண்மை. மீதி யாவும் கற்பனை. இப்போ கேள்வி உங்களுக்கு. நீங்கள் இந்த நிலைமையில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? எதிர்பாராத வகையில், காணாமல் போன கொலுசு உங்கள் பையில் - நிம்மி போட்டது. என்ன செய்வீர்கள்?)
                   

திங்கள், 9 செப்டம்பர், 2013

அலுவலக அனுபவங்கள் - பெஞ்சமினும் சீனுவும்



அமைதியான ஒரு அலுவலக வேலை நாள். சிறிய சலசலப்பான குரல்களுடன் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது.

திடீரென பக்கத்துக் கட்டத்திலிருந்து அழுகுரல் கேட்டது.

அதுவும் எங்கள் அலுவலகத்தின் பகுதிதான்.

"ஸார்....ஸார்... கேஷியர் பெஞ்சமின் செத்துப் போயிட்டார் ஸார்..." பியூன் கோவிந்த் ஓடிவந்து சொன்னான்.


'என்னடா இது.. கேஷியர் செத்துப்போனதுக்கு ஆஃபீஸ் மக்கள் இவ்வளவு அழுகிறார்களா?' அலுவலகத்திலேயே நிகழ்ந்திருக்கும் அவர் திடீர் மரணத்தை விட, இந்தக் கேள்வி மனதில் தலை தூக்கியது. ஏனென்றால் சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் செத்துப்போன அலுவலக நண்பர்கள் வீட்டுக்கு வந்த சக ஊழியர்கள் அளவை விரல் விட்டு எண்ணி விடலாம்!

எப்போதும் அவரைச் சுற்றி நாலு பேராவது இருந்து கொண்டே இருப்பார்கள். அந்தப் பிரியம்தான் போலும்.


பெஞ்சமின் 'டர்ன் டியூட்டி' பார்க்கும் நாட்களில் உடன் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று வாங்கிக் கொடுப்பார் என்று கேள்விப்படும்போது ஆச்சர்யமாக இருக்கும். 

மற்றவர்கள் அவரைப்பற்றிச் சொல்லும்போது 'நீங்கள் அப்படி எல்லாம் வாங்கித் தருவது இல்லை' என்ற மறைமுகக் குற்றச்சாட்டு இருக்கும்.
என்ன செய்ய... எப்படி இருந்தாலும் இதற்காக என்னால் இப்படி எல்லாம் செலவு செய்ய முடியாது! அதனால் பெஞ்சமினை நினைத்து ஆச்சர்யமாக இருக்கும்.

பெஞ்சமின்....

கலகலப்பாகப் பேசுவார். பாக்கு மென்றுகொண்டே இருப்பார். யாரைப் பார்த்தாலும் சத்தமாக அவர் பெயர் சொல்லி அழைத்து ஏதாவது குசலம் விசாரிப்பார். எல்லோர் குடும்ப விவரமும் அவருக்கு அத்துபடி.

சம்பவ இடத்துக்குச் சென்றபோது பெஞ்சமின் உடல் ஒரு அறையில் கிடத்தப்பட்டிருக்க - 'மாஸிவ் அட்டாக்' காம் ஸார்... இப்போதான் டாக்டர் வந்து போனார்" பியூன் கோவிந்த் - அழுபவர்கள் வேறு அறையில் தனியாக அழுது கொண்டிருந்தனர். காரணமும் தெரிய வந்தது!

எல்லோருமே பெஞ்சமினுக்குக் கடன் கொடுத்தவர்கள். ஒவ்வொருவரும் புலம்பியதிலிருந்து ஒருவாறாக விஷங்கள் வெளிவந்தன.
சிக்கன் பிரியாணியும் மட்டன் பிரியாணியும் வாங்கித் தந்தது வசியம் பண்ணத்தான் என்று தெரிந்தது.

"குமார்... இந்த மாசத்தோட உன் சொஸைட்டி லோன் முடியுது... ஒண்ணு பண்ணு... புது லோன் அப்ளை பண்ணு.. அட, தலையைச் சொறியாதே.. உனக்கில்லை.. நான் வாங்கிக்கறேன். மாசாமாசம் உனக்குப் பிடித்தமாகிற தொகையை நான் உனக்குக் கொடுத்து விடுகிறேன். யார் கிட்டயும் சொல்லாதே...."
                                                  
                                                           

"வள்ளி! தீபாவளி முன்பணம் வேண்டாமா... நல்லது! நீ அப்ளிகேஷன் எழுதிக் கொடு. நான் எடுத்துக்கறேன். மாசா மாசம் தவணையை நான் உன் கையில் கொடுத்து விடுகிறேன். யார் கிட்டயும் சொல்லாதே..."

"ஹுசைன்..  இந்த மாசத்தோட ரிடையர் ஆகப் போறே... என் கையில் ரெண்டு லட்சம் ரூபாய் கொடு. மாசம் பத்து பெர்சண்ட் வட்டி தர்றேன். எல்லார் கிட்டயும் சொல்லிடாதே... எல்லாருக்கும் இதுமாதிரி என்னால தர முடியாது..ஏதோ உனக்காகத்தான்.."

இந்த 'யார் கிட்டயும் சொல்லாதே.. உனக்காகத்தான்' என்கிற மந்திர வார்த்தைகள்தான் சம்பந்தப்பட்டவர்களை யாரிடமும் சொல்லாமல் வைத்திருக்க வைத்தது போலும்!

இப்படி எல்லோரிடமும் வாங்கியிருக்கிறார் என்று தெரிந்தது. மிகவும் உஷார் பார்ட்டி என்று அறியப்பட்ட கீதா, ராஜி, ரஞ்சனி எல்லோரும் கூட எப்படி ஏமாந்தார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது. 

இந்நிலையில் சீனு மட்டும் அசந்தர்ப்பமாகச் சிரித்துக் கொண்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. 

"என்ன சீனு சிரிக்கறே..?"
                                        
                                                            
                                        [ குடிப்பழக்கம் உடல்நலத்திற்குத் தீங்கானது ]

"நேற்றுதான் ஸார் 'பார்'ல வச்சு பெஞ்சமின் ஸார் கிட்ட பத்தாயிரம் வாங்கினேன். யாரும் இல்லை பக்கத்துல...இப்போ தர வேண்டியதில்லை பாருங்க!"

"என்ன சீனு... தப்பில்லை?"

"அவர் செஞ்சது...?"

பின்னாட்களில் பெஞ்சமின் மனைவி யாருக்கும் பணம் தரச் சம்மதிக்கவில்லை என்று தெரிந்தது. 'எனக்கு ஒன்றும் தெரியாது. என்கிட்டே அவர் அப்படி எதுவும் சொன்னதுமில்லை. பணம் தந்ததுமில்லை. சொஸைட்டி கடன் அவர் பேரிலா இருக்கு? உன் பேர்லதான... நான் எப்படித் தர முடியும்? தீபாவளி முன்பணம் உன்பேர்லதான போட்டே... நான் எப்படித் தரமுடியும்?' என்று சொல்லி விட்டாளாம்!