செவ்வாய், 30 செப்டம்பர், 2014

கல்யாணி ஏன் சிரித்தாள்? 05 மன்னித்து விடு, மறந்துவிடு!


முந்தைய பகுதி சுட்டி இங்கே: பணத்திமிர் 
  
மங்களாம்பிகா கோஷ்டி, புடவைக் கடையிலிருந்து கிளம்பி செல்லும் வரை மங்கா மாமிக்கு என்ன செய்வது, என்ன சொல்வது என்று தெரியவில்லை. தன்னுடைய குழுவினருடன் புடவைகள் தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக, ஆனால் அதிகம் கவனமில்லாமல் இருந்தாள். 
          
தாங்கள் வாங்கிய புடவைகளுக்குரிய பணத்தைக் கொடுக்க கல்லா அருகே வந்தபோது, கல்லாவில் இருந்தவரிடம், மங்கா மாமி கேட்டாள் "அந்த பண்ணையார் வீட்டுக்கார அம்மா அடிக்கடி இந்தக் கடைக்கு வருவதுண்டா?" 
  
"ஆமாம் எப்பவும் இங்கேதான் புடவைகள் வாங்குவாங்க, அடிக்கடி வருவாங்க." 
    
"அவங்க பையனுக்குக் கல்யாணமா?" 
    
"ஆமாம். ரெண்டு மூணு மாசத்துக்குள்ள பையனுக்குக் கல்யாணம்; அதோட சேர்த்து அந்தப் பையனின் தங்கைக்கும் கல்யாணம் என்று சொன்னார்கள். இங்கேதான் எல்லாவற்றுக்கும் புடவைகள் வாங்க வருவேன் என்று சொல்லியிருக்கிறார்கள்." 
    
அதற்குள்  மங்கா மாமி கோஷ்டியிலிருந்த ஒரு மாமி, "ஆமாம், பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுக்கறாங்க என்று கேள்விப்பட்டேன். ரொம்ப பெரிய இடமாம். ஏழு தலைமுறைக்குச் சேர்த்து, சொத்து இருக்கின்ற இடமாம். ஏற்கெனவே இந்தப் பண்ணையாரினி  வானத்தைப் பார்த்துக்கொண்டு நடப்பா. இனிமேல அவளைக் கையில புடிக்கமுடியாது."  
     
மங்கா மாமியின் மனதுக்குள் இடி இடித்தது. 'அப்போ, அந்தப் பையன் கல்யாணம் செய்துகொள்ளப் போவது கல்யாணியை இல்லையா?'  
    
'அடக் கடவுளே கல்யாணி இதைத் தாங்கமாட்டாளே. நான் என்ன செய்வேன்? என்ன செய்யப் போகின்றேன்? கணேஷ மூர்த்தி சொன்னது போலவே பணக்கார சிநேகிதம் பாதாளத்தில் தள்ளிவிடும் போலிருக்கே - போலிருக்கு என்ன? தள்ளிடுச்சு.' இந்த வகையில் மங்கா மாமியின் எண்ணங்கள் சுற்றிச் சுற்றி வந்தன.   
    
வீட்டுக்கு வந்து சேரும் வரையிலும் மங்கா மாமிக்குக் குழப்பமாகவே இருந்தது.  

வீடு பூட்டியிருந்தது. 

அரைமணிநேரம் கழித்து, கல்யாணி, தன தோழியின் வீட்டிலிருந்து வந்து சேர்ந்தாள். 

மங்கா மாமியைப் பார்த்ததும், "அம்மா" என்றாள். அவ்வளவுதான்! அவள் கண்களிலிருந்து 'பொல பொல' வெனக் கண்ணீர் அவளுடையக் கன்னங்களை நனைத்து, கீழே விழத் துவங்கியது. 
                        
    
மங்கா பதறிப் போனாலும், கல்யாணியின் கண்ணீருக்கானக் காரணத்தை யூகித்துவிட்டாள்.   

"என்னம்மா கல்யாணி? விஸ்வம் கடிதம் எழுதவில்லையா?" 

"இல்லை அம்மா - கடிதம் எழுதியிருக்கிறார். அதுதான் கண்ணீரை வரவழைத்துவிட்டது" என்று சொல்லியபடி, கடிதத்தை நீட்டினாள் கல்யாணி. 
      
   
அதை வாங்கிப் பார்த்த மங்கா மாமிக்கு, கடைசி நான்கு வரிகள் மட்டும் பெரிய எழுத்துகளில் எழுதியிருந்தது கண்களில் பட்டது. 

"கல்யாணீ - உன்னை நான் அடுத்த முறை பார்க்க நேர்ந்தால், உன் கணவனுடனும், குழந்தையுடனும், சிரித்த முகத்தோடு பார்க்க வேண்டும்.
என்னை மன்னித்துவிடு, மறந்துவிடு." 
    
(தொடரும்) 
         
             

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஞாயிறு 273 :: செவ்வாய் மர்மங்கள்


ஒன்று : டைனோசர் எலும்புக்கூடு? 

     
இரண்டு: இது என்ன? (உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. சுவையான கற்பனையாகவும் இருக்கலாம்!) 

                   
             
(குறிப்பு: இரண்டு படங்களும் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்டவை. நெட்டிலே சுட்டவை.)
     

சனி, 27 செப்டம்பர், 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.1) "வாழ்ந்து காட்ட வேண்டும்... உலகில் மனிதனாக வேண்டும்.." - ரயில் இன்ஜின் ஓட்டுனர் அனிதா.
 2) ஹைதராபாத் எஸ்.ஆர். நகரில் வசித்து வரும் லத்தீப்.
 
 4) பெங்களூரில் வசிக்கும் அலோக் ஷெட்டி
 


5) குப்பையும் கொலுவாகும் - திறமை இருந்தால்! இந்திராணி.
 


6) பார்வைக் குறைபாடு உள்ளவர்களை வழிநடத்தும் ஷூக்கள். அனிருத் ஷர்மாவின் கண்டுபிடிப்பு. 
 7) நம்பிக்கை ஏற்படுத்தும் மகாராஷ்டிர கிராமம்.
 8) ஆண்களுக்கே இல்லாத துணிச்சல். ரினி பிஸ்வாஸ்.
 


9) கற்கை நன்றே. சங்கர்.
 
 

10) டி. கல்லுப்பட்டியின் குப்பை மேலாண்மைச் சாதனை.
 


11) பாராட்டப்பட வேண்டிய, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, நெல்லை - விருதுநகர் இடையே, எக்ஸ்பிரஸ் ரயிலில் டீ வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த,  நெல்லை, ராஜவல்லிபுரத்தை சேர்ந்த, 42 வயது அர்ஜுனன்.
12) 101 வயது, 'இளைஞர்' ரங்கராஜன்.


13) பூனம் ஷ்
ருதி.செவ்வாய், 23 செப்டம்பர், 2014

கல்யாணி ஏன் சிரித்தாள்? 04 பணத்திமிர்.

                      
முந்தைய பகுதி சுட்டி : இங்கே :: கோலமயில் 
               
மங்கா மாமியின் குழுவினர் பணிபுரிந்த திருமணங்கள் அதிகமாக, அதிகமாக, கும்பகோணத்தில் அலமேலுமங்கா கல்யாண சேவை நிலையம் மங்கா புகழ் அடைந்திருந்தது. இப்போ கல்யாணியும் வந்து சேர்ந்துகொண்டவுடன், கும்பகோணம் முழுவதும் அவர்களின் கல்யாண சேவை மையம் கொடி கட்டிப் பறந்தது. 
                 
கல்யாணப் பெண் வீட்டார் எல்லோரும் மங்கா மாமியையும் கல்யாணியையும் அவரவர்கள் வீட்டில் நிகழ்கின்ற மங்கள காரியங்களுக்கு அழைப்பு விடுவார்கள். 

அப்படி வந்த ஒரு அழைப்புதான், மங்கா மாமிக்கு, அவளுடைய தோழி ஒருவர் விடுத்த அழைப்பு. 
                 
"மங்கா மாமி - இந்த நவராத்திரி வெள்ளிக்கிழமை அன்று, வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை கொண்டாட உள்ளோம். உங்களுக்கும் உங்க பெண்ணுக்கும் மற்றும் வருகின்ற சுமங்கலிக்கும் கொடுக்க, பட்டுப்புடவைகள் செலெக்ட் செய்யவேண்டும். நீங்க உங்க பெண்ணை அழச்சுண்டு திருபுவனம் வரேளா? பட்டுப்புடவைகள் செலெக்ட் செய்ய எங்களுக்கும் ஹெல்ப் வேணும். நீங்களும் உங்களுக்கு வேண்டிய நிறத்தில் புடவை செலெக்ட் செய்துகொள்ளலாம்."
                  
மங்கா மாமி ஒப்புக்கொண்டாள். 
              
திருபுவனம் கிளம்ப வேண்டிய நாளில், கல்யாணியைக் கூப்பிட்டால், கல்யாணி உற்சாகமின்றி இருந்தாள். 
                    
"என்னம்மா கல்யாணி? ஏன் ஒரு மாதிரியா இருக்கே? கடைக்குப் போகலாம் என்றால் உற்சாகமாக வருவாயே?" 
                  
"நான் வரவில்லை அம்மா. அவரிடமிருந்து வழக்கமாக வருகின்ற கடிதம் எதுவும் இந்த வாரம் வரவில்லை. நான் இன்று மீண்டும் தோழி வீட்டுக்குப் போய் நேற்று, இன்று, ஏதாவது கடிதம் வந்ததா என்று கேட்டு வருகின்றேன். நீங்க போயிட்டு வாங்கோ. எனக்கு எது பிடிக்கும் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியுமே!"
                  
திருபுவனம் செல்வதற்கு, காரில், தோழி வீட்டாருடன் சேர்ந்து கிளம்பினாள் மங்கா. 
                 
திருபுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பட்டு மாளிகை. கடை மிகவும் பெரியதாக இருந்தது. கடையில் நிறைய பேர். கல்யாணப்பட்டு, விஷேஷங்களுக்காகப் பட்டு, நடன அரங்கேற்றத்திற்காக பட்டு வாங்குவோர் என்று கூட்டம். 
                  
மங்கா மாமியும், உடன் வந்திருந்தோரும் பட்டுப் புடவைகள் செலெக்ட் செய்து கொண்டிருந்தபோது, பக்கத்தில், விலை ரொம்ப அதிகமான பட்டுப்புடவைகள் இருக்கின்ற, (அதனாலேயே அதிகம் கூட்டம் இல்லாத) ஒரு இடத்திலிருந்து, ஒரு மாமி உரத்த குரலில், " இந்த நாலஞ்சு பட்டுகளில் இரண்டு மூன்று செலெக்ட் செய்யணும், எல்லாத்தையும் வெளியில சூரிய வெளிச்சம் இருக்கற எடத்துக்குக் கொண்டு வாங்கோ. நல்லா பார்த்து செலெக்ட் செய்யணும்" என்றாள். 
               
எல்லோர் கவனமும் அந்தப்பக்கம் சென்றது. பொன் ஃபிரேம் மூக்குக் கண்ணாடி, மஞ்சள் பட்டுப்புடவை, ஸ்டிக்கர் பொட்டு, தலையைப் பின்னலிடாமல், உதிரி முடிகள் பூந்தொடப்பம் போன்று காட்சியளிக்க, தலையில் சாயம் பூசிய ஒரு மாமிதான், அப்படிக் கட்டளை இட்டுவிட்டு, கடையின் வாயிலை நோக்கி திம் திம்மென்று நடந்து சென்றாள். 
                 
(ஆமாம் மாதவன்! இது மங்களா மாமி இல்லை. நியர் இகுவேலண்ட்!) 


"யாரு அது?" மங்கா மாமி கேட்டாள். 
             
மங்கா மாமியின் அருகில் இருந்த ஒரு மாமி, "இவங்கதான் உமாமகேஸ்வரபுரம் பண்ணையார் பொண்டாட்டி, மங்களாம்பாள். சுற்றுப்புறத்தில் இவங்களுக்கு பண்ணையாரினி என்ற பெயரும் உண்டு. பண்ணையார் எந்த அளவுக்கு நல்லவரோ அதற்கெதிராக பலமடங்கு திமிர், அகம்பாவம், ஆணவம் எல்லாம் உண்டு, இவங்களுக்கு. பண்ணை சொத்து எல்லாம் இவங்க தாத்தா மூலமாக வந்தவை. வீட்டில் மீனாக்ஷி ராஜ்யம்தான்!"
                    
மங்கா மாமி இந்த விவரங்களைக் கேட்டு அதிர்ந்து போனாள்.
                 
கடைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த மங்களாம்பிகாவிடம் சென்று, தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளலாம் என்று தயக்கத்துடன், பட்டுகளுக்கு நடுவே இருந்த பகட்டை நோக்கி நடந்தாள். 
                
" இதோ இந்தப் பட்டை நிச்சயம் செலெக்ட் செய்யலாம்! கொழந்தைக்கு ரொம்ப நன்னா இருக்கும்" என்று ஒரு அரக்கு நிறப் பட்டைக் காண்பித்து, பெரிய குரலில் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தாள் பண்ணையாரினி. 
                  
மங்கா மாமி சற்று அருகே சென்று மங்களாம்பிகா கண்களில் படும்படி நின்றாள். மங்களாவோ - மங்கா மாமி போன்று ஒருத்தி அருகே நிற்பதை லட்சியம் செய்யவில்லை. திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பட்டுகளை செலெக்ட் செய்வதிலேயே மும்முரமாக இருந்தாள். 
                
"இதோ இதுகூட கொழந்தைக்கு ரொம்ப எடுப்பா இருக்கும்!"
                  
அப்பொழுது இந்தக் கூட்டத்தை வேடிக்கை பர்ர்க்க வந்த, சாதாரண சேலையணிந்த ஒருத்தி, "இது என்ன விலைம்மா?" என்று கேட்டாள். 
                 
மங்களம் மாமி உடனே, " ஓ இதுவா? ஒரு மீட்டர் ஐயாயிரம் ரூபாய்தான்! உள்ளே போயி எவ்வளவு மீட்டர் வேணுமோ அவ்வளவு மீட்டர் வாங்கிக்க!" என்றாள் எகத்தாளமாக. அப்படியே கடை சிப்பந்தி ஒருவரிடம், பெரிய குரலில், "இதோ இந்த அம்மா வாங்கிகிட்டுப் போன அப்புறம் ஏதாவது பாக்கி இருந்தா எனக்குச் சொல்லியனுப்புங்க. அடுத்தது என்னுடைய பொண்ணு கல்யாணமும், புள்ள கல்யாணமும் வரப்போறது, அதுக்கு புடவை எடுக்க வரும்பொழுது, மிஞ்சியத நான் வாங்கிக்கறேன்" என்றாள். 
                 
எல்லாவற்றையும் பார்த்து, கேட்டுக் கொண்டிருந்த மங்காவுக்கு தலை சுற்றி, மயக்கம் வந்துவிட்டது. 
             
(தொடரும்) 
                  

சனி, 20 செப்டம்பர், 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரத்தில்.. 


2) நானே எனக்கு வழியானேன். ரமேஷ்குமார்  

3) டெனித் ஆதித்யா  

4) விஜயலட்சுமி  

5) சோலைக் கிளி
 

6) பார்வதி கோவிந்தராஜ். 

7) மத்திய அரசின் ஓய்வு பெற்ற அதிகாரியான சுப்பிரமணியன். 

8) ஷ்ரவனி 

9) அமுதா

 

 
 

 
11) ஆசிரியர் கருணாகரன்
 

 
12) பெய்யெனப்பெய்யும் மழை - இவர்கள் போல் ஊரெங்கும் நிறைந்தால்! நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
 


 
13) முயற்சி திருவினையாக்கும். தன்னம்பிக்கை வாழவைக்கும். ஆர்.மணிகண்டன்.
 

 
14) "இத பார்றா" என்று ஆச்சர்யப்பட வைக்கும் ஆறு வயதுச் சிறுவன் அனக் அனன்யா
 
 

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

கல்யாணி ஏன் சிரித்தாள்? 03 :: கோல மயில்.

             
முதல் பகுதி சுட்டி இங்கே: மங்கா  
             
இரண்டாம் பகுதி சுட்டி இங்கே: விஸ்வம். 
            
கல்யாணி ஒன்றும் சொல்லவில்லை. 
                
அதற்குள் மங்கா மாமியின் குழுவைச் சேர்ந்த ஒருவர் வந்து, "மாமி கோலம் போடுகின்ற மாமி எங்கே? மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இங்கே ஒரு ரூமில் மாக்கோலம் போடவேண்டும் என்கிறார்கள். குலதெய்வ பூஜை செய்யவேண்டுமாம்!"
               
"கோலம் போடுகின்ற மாமியை வேலை எல்லாம் முடிஞ்சாச்சுன்னு நாந்தான் அனுப்பினேன். இப்போ என்ன செய்வது?"
        
"அம்மா - நான் கோலம் போடுகிறேன்!" என்றால் கல்யாணி. 
              
"மாக்கோலம் - இழைக் கோலம் போடத் தெரியுமா?"
           
"ஏதோ ஓரளவுக்குத் தெரியும்."
         
மங்கா மாமி கல்யாணியை அனுப்பி வைத்தாள். 
             
பிறகு மற்ற வேலைகளை கவனிக்க சென்றுவிட்டாள். 
              
******** ******** ********** ************** 
            
இரண்டு மணி நேரம் கழித்து கல்யாண மண்டபத்தில் ஆங்காங்கே சிலர் கூடி அதிசயமாக எதையோ சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்ததை மங்கா மாமி பார்த்தாள். தன்னுடைய குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் என்ன விஷயம் என்று கேட்டாள். 
              
அவர் சென்று குழுவாகப் பேசிக்கொண்டிருந்த சிலரிடம் கேட்டு, வந்து, விஷயத்தைக் கூறினார். "மாப்பிள்ளை வீட்டார் ஒரு அறையில் மாக்கோலம் போடவேண்டும் என்று கேட்டிருந்தார்களாம். மாக்கோலம் போட்டாச்சு என்று சொன்னதும் அங்கு போய்ப் பார்த்தவர்கள் அதிசயப்பட்டுப் போய்விட்டார்கள்! மிகவும் பிரமாதமான கோலம்! மாப்பிள்ளை வீட்டார் கூட்டத்தில் வந்திருந்த சில நண்பர்கள், கோலத்தை ஃபோட்டோ எடுத்து, கோலத்தை வரைந்தவர் யாரோ அவர்களையும் சேர்த்து ஃபோட்டோ எடுக்கவேண்டும் என்று பிரியப்பட்டார்களாம்! அதற்கு அந்தப் பெண் ஒப்புக்கொள்ளாமல், அங்கிருந்து மாயமாக மறைந்துவிட்டாளாம்!"
            
அப்பொழுதுதான் மங்கா மாமிக்கு கல்யாணியின் நினைவே வந்தது! 
             
எங்கே போயிருப்பாள்? 
           
முதலில் சென்று எல்லோரும் சிலாகிக்கும் அந்தக் கோலத்தைப் பார்ப்போம் என்று மங்கா மாமி அந்த அறைக்குச் சென்றால். 
              
ரூமுக்கு வெளியிலிருந்தே ஒரு ரசிகர் கூட்டம், உள்ளே செல்லாமல் கோலத்தை பல கோணங்களிலும் இரசித்துக் கொண்டிருந்தது! 
          
கோலத்தை எட்டிப் பார்த்த மங்கா மாமி மயங்கி விழாத குறை! 
             
அடேடே கோலம் போடுவதற்கே கடவுள் இந்தப் பெண்ணுக்கு நளினமான விரல்களைப் படைத்திருக்கின்றான் போலிருக்கு! திருஷ்டிப் பட்டுவிடும் அளவுக்கு அழகான கோலம்! படைப்புக் கடவுளாகிய பிரம்ம தேவன் இவள் விரல்கள் மூலம் அழகிய படைப்புகளை  உருவாக்க இவள் கைகளிலேயே நிரந்தர வாசம் செய்ய வந்து விட்டானோ?
                
"நல்லா இருக்கா அம்மா?" பக்கத்தில் வந்து, நின்ற கல்யாணியின் குரல்! 
             
"கல்யாணி!" என்று சொல்லியபடி, மங்கா மாமி கல்யாணியின் கையைப் பிடித்து, அவளுடைய விரல்களைக் கண்களில் ஒற்றிக்கொண்டாள். வாயில் மேலும் பேச்சு வரவில்லை! கண்களில் கண்ணீர்! 
             (குறிப்பு: இவைகள் கல்யாணி போட்ட கோலம் இல்லை. கூகிள் போட்டவை கல்யாணி போட்ட கோலத்தை படம் எடுக்கவிடவில்லை)  

இந்த ஆனந்தம் அப்பொழுது மட்டும் இல்லை - பிறகு பல நாட்கள், பல சந்தர்ப்பங்கள்! கல்யாணி செய்த கை முறுக்கு, கல்யாணி செய்த தேங்குழல், என்று பலப்பல விஷயங்களில் கல்யாணியின் நேர்த்தி மங்கா மாமியை ஆச்சரியமடைய வைத்துவிட்டது.  
              
கல்யாணி ஒருநாள் ஒரு கடிதத்தைக் கொண்டுவந்து மங்கா மாமியிடம் கொடுத்தாள்.
            
விஸ்வம் எழுதியதுதான்! "உனக்கு ஒரு அம்மா கிடைத்திருப்பதைப் பற்றி உன் தோழியிடமிருந்து தெரிந்துகொண்டேன். உன்னுடைய சந்தோஷத்தை விட எனக்கு ஒரு நல்ல மாமியார் கிடைத்திருக்கிறார் என்று எனக்கு ஆயிரம் மடங்கு அதிக சந்தோஷம்! சிடுமூஞ்சி மாமனார் பற்றி எனக்கு இனி கவலை இல்லை!" 
              
"கல்யாணி! இது என்ன? என்னைப் பற்றியும் சொல்லிவிட்டாயா?"
              
"ஆமாம் அம்மா! என்னுடைய சந்தோஷம் அவருக்கு இன்னமும் சந்தோஷம் கொடுக்கும் என்பதால் உங்களைப் பற்றி என் தோழியிடம் சொல்லி எழுதச் சொல்லியிருந்தேன்!"
                   
பிறகு இரண்டு மாதங்கள் கழித்து வேறு ஒரு கடிதத்தை கல்யாணி மங்கா மாமியிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னாள்.
              
"என்னுடைய தங்கை நாட்டியம் கற்றுக்கொள்கிறாள் என்று முன்பு எழுதியிருந்தேன் அல்லவா! இன்னும் இரண்டு மாதங்களில் நாட்டிய அரங்கேற்றம். அநேகமாக அது குடந்தையில் நடைபெறும். இப்போவே பெண் கேட்டு பலர் சம்பந்தம் பேச வருகிறார்கள். கல்யாண தரகரும் அடிக்கடி வந்து சில வரன்கள் பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறார். தங்கை நடன அரங்கேற்றம் முடிந்தவுடன், கூடிய சீக்கிரம் நிச்சயதார்த்தம் நடத்திவிடலாம் என்று அம்மா பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். அப்புறம் என்ன? நம்ம கல்யாணம்தான்!"
            
கல்யாணி முகம் மலர, மங்கா மாமியை, அவள் கடிதத்தைப் படித்து முடிக்கும் வரைப் பார்த்திருந்தாள். பிறகு கடிதத்தை வாங்கி ஆசையாக மீண்டும் ஒருமுறைப் படித்தாள். 
          
மங்கா மாமி, மேற்கொண்டு இது சம்பந்தமாக எதுவும் செய்யுமுன் மூர்த்தியிடமும், விஸ்வத்தின் பெற்றோரிடமும் பேசி விட்டுச் செய்யலாம் என்று முடிவெடுத்தாள். 
          
விஸ்வத்தின் அம்மாவை, எதிர்ச்சையாக சந்திக்கவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் என்று மங்கா மாமிக்கு அப்பொழுது தெரியவில்லை! 
         
எப்படி? எங்கு? 
    
(தொடரும்) 
       
 (அடுத்த வாரம் முடிச்சு வந்துவிடும் போலிருக்கே!) 
                    

திங்கள், 15 செப்டம்பர், 2014

தி கி 140915:: தி அ - சப்பாத்தி.

                            
எனக்கு சப்பாத்தி அறிமுகமானது, பத்து வயது ஆன சமயத்தில். அண்ணன், பாலிடெக்னிக்கில் படித்துக்கொண்டிருந்த காலம். . அவரே கோதுமை வாங்கி, அரைத்து வாங்கி வருவார். அவரே சப்பாத்தி மாவு பிசைந்து தருவார். அம்மா சப்பாத்தியை தோசைக்கல்லில் இட்டு, சுட்டுத் தருவார். அண்ணன் இரண்டு அல்லது மூன்று சப்பாத்தி சாப்பிட்டு, பாலிடெக்னிக் உள்ள திசை நோக்கி நடையைக் கட்டுவார். 
               
சப்பாத்திக்கு மாவு பிசையும் பொழுது சப்தம் இல்லாமல் பிசைவார். கொஞ்சம் சப்தம் கேட்டாலும்  எங்கேயோ பர் பர் என்று பாட்டு இசைத்துக் கொண்டிருக்கின்ற என்னுடைய தம்பி, அங்கே ஓடிவந்து, பிசைந்த சப்பாத்தி மாவை  அப்படியே வாங்கி, வாங்கி சாப்பிட ஆரம்பித்துவிடுவான்! 
            
அவனுக்கு பயந்து, எங்கள் வீட்டில் அஹிம்சை முறையில்தான் சப்பாத்தி தயாராகும். 
                  


ஆனாலும் சப்பாத்தி கல்லில் இடப்பட்டு எண்ணெய் ஊற்றப்பட்டவுடன் எழுகின்ற சப்தத்தைக் கேட்டு,  மணத்தை மூக்கு உணர்ந்தவுடன் - ஓடி வந்துவிடுவான், "ஆ ! சப்பாத்தி!" என்று அலறிக்கொண்டு! 
               
என்னுடைய இண்டரெஸ்ட் எல்லாம் சப்பாத்தி கிடையாது, அதனுடைய சைடு டிஷ். அம்மா செய்கின்ற பயத்தம் பருப்பு டால், உருளைக்கிழங்கு மசால் என்று எதுவாக இருந்தாலும் அதை அப்படியே சாப்பிட்டு விடுவேன்! பயத்தம்பருப்பு டால்! எலுமிச்சம்பழம் பிழிந்து, பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு! அந்தப் புளிப்பும் காரமும்! அடாடா! பச்சைமிளகாயைக் கடித்து, கண்களில் நீர் மல்க, தண்ணீர் தேடிய நாட்கள்! சப்பாத்தி - ஊஹூம் முதலில் தட்டில் போட்ட சப்பாத்தி அப்படியே இருக்கும். சைடு டிஷ் மட்டும் காலி பண்ணுவேன். இன்னும் சைடு டிஷ் வேண்டும் என்று அடம் பிடிப்பேன். 
                       


சப்பாத்தியிலிருந்து இரண்டு வாய் மட்டும் சாப்பிட்டுவிட்டு, மீதியைப் பிடிக்கவில்லை என்று தட்டோடு வைத்துவிட்டு ஓடிவிடுவேன். 

தம்பிக்கு மாவு பிடிக்கின்ற அளவுக்கு சப்பாத்தி பிடிக்காது. அப்படி சப்பாத்தி சாப்பிட்டால் அவனுக்கு சர்க்கரை தவிர வேறு எதுவும் தொட்டுக்கொள்ளப் பிடிக்காது. 

பிறகு சப்பாத்தி சாப்பிடுவது தவிர்க்க இயலாததாக ஆகிவிட்ட நாட்களில், சப்பாத்தியை லேயர் லேயராக எடுத்து சாப்பிடுவதுதான் எனக்குப் பிடிக்கும். சப்பாத்தி இடும் பொழுது, மடித்து, மடித்து வைத்து, எண்ணெய் தடவி செய்தால்தான் லேயர் லேயராக வரும். 
             


லேயர் லேயராக இல்லாமல், மொத்தையாக இருக்கின்ற சப்பாத்தி எனக்குப் பிடிக்காது. 

வேலைக்குச் சென்று வந்த நாட்களில் நான் சப்பாத்திக்கு மாவு பிசைந்ததோ அல்லது சப்பாத்தி இட்டதோ இல்லை. மனைவி செய்து கொடுக்கின்ற சப்பாத்திகளை வேகமாக சாப்பிட்டு, ஓடிப்போயிடுவேன் (வேலைக்குதான்!) 

ரிடையர் ஆனா பிறகு, பெரும்பாலும் சப்பாத்திக்கு மாவு பிசைவது என்னுடைய வேலை ஆகிவிட்டது! 
               
என்னுடைய மனைவியிடம், 'எவ்வளவு மாவுக்கு எவ்வளவு தண்ணீர்? பை வால்யூம் ஆர் பை வெய்ட்' என்றெல்லாம் கேட்டு என்னுடைய இஞ்சினீரிங் அறிவை   பறைசாற்றுவேன். அவர், "இதுக்கல்லாம் ஃபார்முலா எதுவும் கிடையாது. ஒவ்வொரு பிராண்ட் மாவு ஒவ்வொரு தினுசு - எல்லாம் நாம்ப திட்டமா போட்டுத் தெரிஞ்சக்கணும்" என்பார். 
       


முதன்முதலில் நான் மாவு பிசைந்து கொடுத்தபொழுது, "சப்பாத்திக்கு மாவு பிசையச் சொன்னால் பூரிக்கு ஏன் பிசைந்து கொடுக்கறீங்க?" என்று கேட்டாள்! எனக்கு ஒரே ஆச்சரியம்! இதே மாவில் சப்பாத்தி செய்ய முடியாதா என்று கேட்டேன்! இரண்டுக்கும் ஒரே மாவு கிடையாதா? "சப்பாத்தி மாவு நெகிழ இருக்கும், பூரி மாவு இப்போ நீங்க பிசைந்து கொடுத்திருக்கீங்களே அந்தமாதிரி கெட்டியாக இருக்கும்" என்றாள்! என்னுடைய அறிவுக்கண் திறந்தது, நான் நெகிழ்ந்து போனேன்! 
           
நாங்க எப்பவும் பயன்படுத்துவது, ஆசீர்வாத் மல்டி கிரெயின் ஆட்டா. (மனைவி உட்பட) எல்லோர் மீதும் இருக்கும் கோபத்தை, மாவு மீது காட்டி, பிசைவேன். மாவு ரொம்ப சூப்பராக வரும். 
                 


இப்போ சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள, காரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி என்று டெக்னிக் கலர் சமாச்சாரங்கள் போட்டு ஒரு கூட்டு செய்கிறார்கள். (உங்க காதைக் கொடுங்க! படு திராபையான சைடு டிஷ் இதுதான்!) அம்மா செய்த பயத்தம்பருப்பு டால் மனதில் ஓட, இந்த உப்பில்லாத சப்பில்லாத கூட்டு, சப்பாத்தியுடன் சேர்ந்து, உள்ளே போய் வயிற்றை நிறைக்கின்றது. 
           
சப்பாத்தி சப்பாத்திதான், டாலு டாலுதான்! 
                

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

ஞாயிறு 271 :: மரத்தில் மறைந்தது .....

   
               
    
இதோ அதே படம் - கொஞ்சம் ஒளி கூட்டி!

(யோசனை & படம் அளித்த ராமலக்ஷ்மி அவர்களுக்கு நன்றி!)

                                    

சனி, 13 செப்டம்பர், 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்
1) இது ஒரு நல்ல முயற்சி.

 

3) 16 வயது அர்ஷ் ஷா வின் உபயோகமான கண்டுபிடிப்பு. 
4)  Did anyone come forward to help or even displayed basic courtesy to ask me what was wrong? The answer was a big, unsurprising NO HOW DARE YOU?


 
5) ராமசாமி, திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், இடைநிலை கட்டளைதாரர்.

6) இந்தக் காலத்தில் இது பொருத்தமா? தெரியவில்லை! ஆனாலும் இது பாராட்ட வேண்டிய விஷயம்தான்!

7) இது சரியா, தவறா? தெரியவில்லை. ஆனால் மாற்றுத்திறனாளி மாணவிகள் கஷ்டப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு இல்லாமல் உழைக்கும் ஆசிரியை சுகுணாவைப் பாராட்டுவோமே...

8) சென்னையில் மின்வண்டியிலோ, பேருந்திலோ செல்லும்போது எனக்கு இப்படி ஏதும் ஏற்பாடு செய்ய மாட்டார்களா என்று தோன்றும். செயல்படுத்திக் காட்டி விட்டார் பள்ளி ஆசிரியை வெங்கடேஸ்வரி 


 
9) குனியமுத்தூர் லக்ஷ்மி நாராயணன்காட்டிய வழி! சாமுண்டீஸ்வரி.


 
10) தன்னைப் போல் கணவனை, மகனை, தகப்பனை இழந்து நிற்கும் அபலைக் குடும்பங்களுக்கு குத்துவிளக்கேற்றும் அறப்பணியைத் தொடரும் நெஞ்சுரத்துக்குச் சொந்தக்காரர் சுபாஷினி வசந்த். 


11) மதம் கடந்த மனிதாபிமானம்.