சனி, 28 மே, 2022

ஒரு கைப்பிடி அளவு மண்ணை கூட... ​மற்றும் 'நான் படிச்ச கதை' (JC)

 மும்பை : மும்பையில் பூ வியாபாரம் செய்து வந்த மாணவிக்கு, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலையில், பி எச்.டி., எனப்படும் ஆராய்ச்சி படிப்பு படிக்க இடம் கிடைத்துள்ளது.

வெள்ளி, 27 மே, 2022

வெள்ளி வீடியோ : நீ பார்த்ததும் நான் வந்ததும் தேனானதே வாழ்வில்

உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம் எழுதிய பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்க, சீர்காழி கோவிந்தராஜன் குரலில் இன்றைய தனிப்பாடல்.  "காவிரி சூழ்பொழில்" பாடலுடன் அப்போதெல்லாம் ரேடியோ பக்தி மாலையில் பெரும்பாலும் ஜோடியாக ஒலிக்கும் பாடல்.

வியாழன், 26 மே, 2022

சிக்குபுக்கு சிக்குபுக்கு ஜிகுஜிகு .. யாதோங் கி பாராத் .

 எவ்வளவு வயதானாலும் சில விஷயங்களை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.  அவற்றில் என்னைப் பொருத்தவரை முதன்மையானது யானை.  அப்புறம் ரயில்.  அப்புறம் ஆகாய விமானம், குழந்தைகள்...  யானைக்கும், ரயிலுக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகம்!  என்ன சொல்கிறீர்கள்?

செவ்வாய், 24 மே, 2022

சிறுகதை - மொழிபெயர்ப்பு- தலைகுளத்தூர் பட்டதிரி 6- ஜெயக்குமார் சந்திரசேகரன் 

 

கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய

ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு கதை

தலைகுளத்தூர் பட்டதிரி.

மொழியாக்கம்

ஜெயக்குமார் சந்திரசேகரன்

பாகம் 6 (நிறைவுப் பகுதி.) 

திங்கள், 23 மே, 2022

"திங்க"க்கிழமை :  கொண்டைக்கடலை சாதம் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 கொண்டைக்கடலை சாதம்.  இதுவும் எல்லா மசாலா சாதங்களைப் போலத் தான். ஆகவே சுலபமாகவே செய்துடலாம். நான்கு பேருக்கு எனில் சின்னக் கிண்ணத்தில் ஒரு கிண்ணம் கொண்டைக்கடலை, (நான் அநேகமாய்க் கறுப்புக் கொண்டைக்கடலை தான் பயன்படுத்துவேன். நீங்க உங்கள் விருப்பம் போல் போட்டுக்கலாம்.) ஊற வைச்சுக்குங்க. முதல் நாள் இரவே ஊறப் போட்டுடுங்க. நிறையத் தான் இருக்கும். பரவாயில்லை.

வெள்ளி, 20 மே, 2022

வெள்ளி வீடியோ : சோலை நடுவிலே தூய தமிழ் பாடும் நீல குயிலும் நீதானா 

 தேவியின் திருமணம் என்றொரு படம் வெளிவந்திருக்கிறது 1977ல்.  முத்துராமன், கே ஆர் விஜயா, பத்மப்ரியா நடித்திருக்கின்றனர்.  மாதவன் இயக்கம்.  கண்ணதாசன் பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை.

வியாழன், 19 மே, 2022

யார் இருக்கா சொல்லு..

அவருக்கு 70 வயதுக்கு மேல் இருக்கும்.  வயதானால் வரும் பருமனான உடல் அமைப்பு இல்லாதவர்.  காரணம் அவர் நிலை.  

செவ்வாய், 17 மே, 2022

வெள்ளி, 13 மே, 2022

வெள்ளி வீடியோ : அழுது விட்டேன் சும்மா... நீ அன்பு செய்வாய் அம்மா

 தமிழ்நம்பியின் பாடல்.  இசையமைத்து, தானே பாடி இருக்கிறார் டி எம் எஸ்.  யதேச்சையாக எடுத்தாலும் இதை மே 8 அன்னையர் தினம் அன்று அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். 

வியாழன், 12 மே, 2022

ஹலோ ஹலோ சுகமா?

 சிலருக்கு சில வழக்கம் உண்டு.  நீங்கள் ஃபோன் செய்தாலும், உங்களுக்கு அவர்கள் ஃபோன் செய்தாலும் அவர்களேதான் பேசுவார்கள்.  உங்களுக்கு பேச சிறு இடைவெளி கூட கொடுக்க மாட்டார்கள்.  தப்பித்தவறி மிகச் சிறிய இடைவெளி கிடைத்து நீங்கள் பேச முயற்சித்தாலும் வியர்த்தம்தான்.  

செவ்வாய், 10 மே, 2022

திங்கள், 9 மே, 2022

"திங்க"க்கிழமை : வாழைப்பழ ரொட்டி - அப்பாதுரை ரெஸிப்பி 

 

வாழைப்பழ ரொட்டியா? பெயரைக் கேட்டாலே வாடுதே ப்ரதர்? எப்படிச் சாப்பிடத் தோணும்னு நினைக்கிறிங்களா சிஸ்டர்? நானும் தான். தலைப்பை மாத்திருவோம்.

வெள்ளி, 6 மே, 2022

வெள்ளி வீடியோ : உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா..

 1977 ல் வெளியான கிருஷ்ணகானம் பற்றி முன்னரே சொல்லி, அதிலிருந்து டி எம் எஸ் பாடல் ஒன்றையும் பகிர்ந்திருந்தேன். 

வியாழன், 5 மே, 2022

தலைப்பு கொடுங்கள்!

சனிக்கிழமை சிங்கப்பெருமாள் கோவில் சென்ற அனுபவத்தில் செவ்வாய் அன்று திருவள்ளூர் வீராகவப்பெருமாளை சேவிக்க சற்று லேட்டாகவே கிளம்பினோம்!  கோவிலை நெருங்கியதும் எங்கள் வண்டியை அணுகிய ஒரு ப்ரோக்கர் "அய்யர் வேணுமா?  எதாவது வேண்டுதலா?  வெளியூரா?  ஏதாவது ஏற்பாடு செய்யணுமா?" என்று ஒரே மூச்சில் கேட்டார்.  'இல்லை உள்ளூர்தான், சாதாரண தரிசனம்தான்' என்றதும் அசுவாரஸ்யமாய் தள்ளிப்போய் அரட்டையை கன்டினியூ செய்தார் அந்த பேண்ட் அணிந்த மத்திய வயது வாலிபர்.