திங்கள், 31 மே, 2010

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
இவை எந்த நாட்டு நோட்டுகள்?
1)


2)


3)


4)


5)


உபரியாக ஒரு கேள்வி : ஒரு யு எஸ் டாலருக்கு எவ்வளவு சீன yuan?

சனி, 29 மே, 2010

சுட்டிப் பயல்

சுரேஷுக்கு அப்பொழுது ஐந்து வயதிருக்கும்.  இன்னும் பள்ளி செல்ல ஆரம்பிக்கவில்லை. வீட்டில் பம்ப் ரிப்பேர்.  பிளம்பர் வந்து வேலை செய்து கொண்டிருந்தார். பழைய ரெசிப்ரோகேடிங் ரக பம்ப்.

பிளம்பர் செய்யும் வேலைகளை எல்லாம் ஓர் ஓரமாக நின்று நன்று கவனித்துக் கொண்டிருந்த சுரேஷ், ஓரிரண்டு முறை அவர் கழட்டிக் கழட்டி மாட்டுவதைப் பார்த்ததும், தனக்குத் தானே ஏதோ பேசிக் கொள்வது போல் தோன்றியது.  

சற்று அருகில் போய் என்னதான் சொல்கிறான் என்று கவனித்துக் கேட்டால், "மேலே இருக்கிற சதுர நட்டைக் கழட்டனும்.  பிறகு பக்கெட்டிலிருந்து ஒன்று இல்லேனா இரண்டு குவளை தண்ணீர் ஊத்தணும். பின் நூல் கயிறு எடுத்து நட்டு மேல் சுற்றி விட்டு, திரும்ப எல்லாத்தையும் மாட்டணும்.  பிறகு சுவிட்ச் போட்டால் நாம் ஊத்தினதை விட அதிகம் தண்ணீர் வருதுன்னா .... தண்ணிக்குப் பதிலா "தம்ஸ் அப்" ஊத்தினா எல்லோரும்  நிறைய தமஸ் அப் வரும். அப்போ எல்லாரும் நிறைய தமஸ் அப் குடிக்கலாம் இல்லையா?" பையனின் கற்பனை வளம் எப்படி ? 

உங்க ஊருல குடிநீர் வாரியம் எதற்காவது தலைவர் பதவி காலியாக இருந்தால் எங்களுக்குச் சொல்லுங்கள். சுரேஷை அனுப்புகின்றோம்.   

வெள்ளி, 28 மே, 2010

ரசித்தவை...ருசித்தவை...

அப்படியா?....... 

* நூறு பூஜ்யங்களை உடைய எண்ணுக்கு கூகிள் என்று பெயர்.
# அப்போ googoooooooo......................................................................ool என்று சொல்லுங்க!    
  
* Swiss இல் பிரதம மந்திரியோ, மந்திரிகளோ கிடையாது.(அப்படியா ஹேமா?)
#1 எப்பவுமே டூர் போயிடுவாங்களோ?

#2 மந்திரிகள் யாருக்குங்க வேணும்? சுவிஸ் வங்கிகள் இருந்தால் போதும்.  
   
* மீன்கள் இல்லாத ஒரே நதி ஜோர்டான்.(அப்படியா)
# அப்போ அங்கே கொக்கும் இருக்காதா?  

* உலகில் உள்ள 193 நாடுகளில் 18 நாடுகள் மட்டுமே பில் கேட்ஸ் விட பணக்கார நாடுகள்.
# பில் கேட்ஸ் அப்படீங்கற நாடு எங்கே இருக்கு?  
     
*உண்மையான அன்பிற்கு ஏமாற்றத் தெரியாது..ஏமாற மட்டும்தான் தெரியும்!
# அது உண்மையான ஏமாற்றமாக இருக்கும் என்று உண்மையாக நம்பலாமா?  
=====================================================
டிப்ஸ்...
ஏன்? ஏன்? ஏன்?

*தொலைபேசியில் பேசும்போது இடது காதில் வைத்துப் பேசுங்கள்..

*மருந்து, மாத்திரைகளைக் குளிர்ந்த தண்ணீருடன் உட்கொள்ளாதீர்கள். 
*மருந்து குடித்த உடனே படுக்கக் கூடாது.


*மாலை 5 மணிக்குப் பின் அதிக உணவு உட்கொள்ளக் கூடாது..

*தண்ணீர் காலையில் அதிகமாகவும், மாலையில் குறைவாகவும் குடிக்க வேண்டும்.

*இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை தான் நல்ல தூக்க நேரம்..

*பேட்டரி சார்ஜ் கடைசிக் கோட்டைக் காட்டுகிறது என்றால் மொபைலில் பேசுவதைத் தவிர்க்கவும். ஏனென்றால் சாதாரண சமயத்தை விட அந்த சமயம் ரேடியேஷன் ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும்
==========================================================
தீவிர சந்தேகங்கள்...  
*நீச்சல் உடம்பை ட்ரிம்மாக வைத்திருக்க உதவுமென்று சொன்னால் சுறா மீன்கள் ஏன் பருமனாக இருக்கின்றன?

*எல்லோரும் சொர்க்கத்துக்கு போக விரும்பினாலும் ஏன் யாருமே சாக விரும்புவதில்லை?

*சதுரங்க விளையாட்டில் வெள்ளை நிறம்தான் முதலில் நகர்த்தப் படும் என்றால் நிறவெறிக் கொள்கை அங்கு இருக்கிறது என்று நம்பலாமா?

*நமது ஜனநாயக நாட்டில் பேச்சுக்கு சுதந்திரம் உண்டென்றால் எதற்கு தொலைபேசிக் கட்டணங்கள்?
======================================================
நினைவில் நான்கு முத்துக்கள்...

*காசு கொடுத்து சந்தோஷத்தை வாங்க முடியாதுதான்.....ஆனாலும் ஒரு சைக்கிளில் உட்கார்ந்து அழாமல், BMW காரில் வசதியாக அழ முடியும்.

*எதிரிகளை மன்னித்து விடுங்கள்; ஆனால், அவர்கள் பெயரை நினைவு வைத்திருங்கள்..

*பிரச்னையிலிருக்கும் மனிதனுக்கு உதவி செய்யுங்கள். அவன் உங்களை மறக்காமல் நினைவு வைத்திருப்பான்..அவனுக்கு மறுபடி பிரச்னை வரும்போது!

*மது குடிப்பது பிரச்னையைத் தீர்க்காது. பால் குடிப்பதும்தான்.  

வியாழன், 27 மே, 2010

ஒரு சின்னஞ்சிறு உண்மைக் கதை

டிரைவர் நல்ல திறமைசாலி.  குறுகிய சாலையில் சாமர்த்தியமாக வண்டியை செலுத்தினார்.  கஷ்டப் பட்டு பின் தொடர்ந்தோம் நாங்கள் மூவரும்.
இதோ  வந்து சேர்ந்து விட்டோம்.  .
வேகமாக போய் இடம் பிடித்து . . அந்த க்ஷணமே அடுத்த கிராக்கி வந்து சேர்ந்தது. .
" நல்ல வேளை!  அடிச்சு பறந்து வந்தோமோ பிழைத்தோமோ! நாம் தான் முதல். இல்லாட்டா தாத்தா முந்தியிருப்பார் " என்றார் உடன் வந்த பாலு.
கூல் ஆனதும் உள்ளே புகுந்து எரியத்   தயாராக முதல் மேடையில் கிடந்தாள் அக்கா. 
அடுத்துப  புக யாரோ  கிழவரின் உடல் காத்திருக்கிறது.
மாம்பலம் மின் சுடு காடு சுற்றுப் புறத்தை ஆராய அங்கும் இங்கும் பராக்குப் பார்க்க ஆரம்பித்தேன்.
 

செவ்வாய், 25 மே, 2010

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...

சுசித்ரா, சங்கர், ராஜு, ரவி, சுஜாதா...என்றும் சுறுசுறுப்புடனே..ஆரோக்கியம் கொண்ட நல்ல குடும்பம் ..இது ஒரு பழைய விளம்பரப் பாடல்...எந்தப் பொருளுக்கு என்று தெரிகிறதா? 


இருபது, முப்பது வருடங்களுக்கு முந்தைய கோக கோலா விளம்பரம் நினைவிருக்கிறதா? "இன்பமூட்டிடும் கோக கோலா..இன்பமூட்டிடும் ஜோக். பிகினிக்கி விருந்து பார்ட்டி..யாவருக்கும் மகிழ்வூட்டி..நேசக் கரம்தனை நீட்டி...இன்பமூட்டிடும் கோக கோலா..." ஞாபகம் வருதா?

007 பனாமா ப்ளேட் மற்றும் பினாகா (பின்னர் சிபாகா) டூத்பேஸ்ட்டும் ரேடியோவில் விளம்பதாரர் நிகழ்ச்சியாக நடத்திய கீத் மாலா ரொம்பப் பிரபலம். அதிலும் பினாகா கீத் மாலா வில் ரேட்டிங்கில் ஒலிபரப்பப்பட்ட ஹிந்திப் பாடல்கள் கேட்க இரவு காத்திருப்போம்...ஓரிரு வரிகள்தான் ஒலி பரப்புவார்கள்..ஆனாலும் கேட்போம்.
***
இந்த விளம்பதாரர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவர் "உங்கள் நண்பன் L R நாராயணன்" குரல் இன்னும் நினைவில் ஒலிக்கிறது..!

சில விளம்பரங்களும், படங்களும் கீழே...நினைவிருக்கிறதா...இன்னும் விற்பனையில் இருக்கின்றனவா?

யார் வரைந்த ஓவியமோ...!


இப்போது(ம்) இவை வருகிறதா...


சபாஷ்...சரியான போட்டி..(அப்போது..!)போட்டிக் குடும்பம்...!


வாசகர்கள், அவர்களுடைய மனம் கவர்ந்த பழைய, புதிய விளம்பரங்கள் குறித்து கருத்துகள் பதியலாம். 

திங்கள், 24 மே, 2010

வாசக நண்பர்களுக்கு வணக்கம்

எங்கள் ப்ளாக் ஆரம்பித்து அடுத்த மாத இறுதியுடன், ஓராண்டு பூர்த்தியாகப் போகிறது.

ஆரம்பித்த முன்னூற்று முப்பது நாட்களுக்குள், சக பதிவர்களும், வாசகர்களும் கொடுத்து வருகின்ற ஊக்கம் உற்சாகம் இரண்டுமே எங்களுக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. 

உங்கள் ஆதரவுதான் எங்களை தமிழ்த்தளங்களின் தர வரிசையில் உள்ள முன்னூற்றுக்கும் மேற்பட்ட வலைப்பூக்களில் முதல் இருபதுக்குள் எப்பொழுதும் வைத்திருக்கிறது.

ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, இன்றுவரை இரண்டு நாளைக்கு ஒருவர் என்ற விகிதத்தில் இந்த வலைப்பூவிற்கு இரசிக மன்ற உறுப்பினராக சேருகிறார்கள். 

சமீப காலமாக, வாசகர்கள் பெரும் அளவில் எங்கள் ப்ளாக் படைப்பாற்றல் பிரிவில் பங்கேற்றுக் கொள்கிறார்கள்.   படம் - பென்சிலால் வரைந்தவை, கம்ப்யூட்டரில் வரைந்தவை, வண்ண ஓவியங்கள், கார்ட்டூன் வகைப் படங்கள், பாடல்கள், வாத்திய இசை எல்லாமே வரத் துவங்கி உள்ளன.

 இந்த நிலையில், ஒரு நாளுக்கு  ஒரு பதிவு என்கிற எங்கள் கொள்கையை நாங்கள் கடைபிடித்தால், வாசகர்களின் ஆர்வத்திற்கு முட்டுக் கட்டையாக அது ஆகிவிடும் என்று எங்களுக்குத் தோன்றியது. எங்கள் எண்ணப் பதிவுகளையும் உங்கள் படைப்புகளையும் வலை இட எங்கள் ப்ளாக் மட்டும் போதாது என்று தோன்றியதால், புதிய வலைப்பூ ஒன்றைத் துவங்கிவிட்டோம். 

வலைப்பூவின் பெயர்:

URL : www.engalcreations.blogspot.com 

இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் போக, வர சுட்டிகள் இரண்டிலுமே சைடு பாரில் மேலே கொடுத்துவிடுகிறோம். 

ஆனால் படைப்பாற்றல் சம்பந்தப்பட்ட கேள்விகள் மற்றும் பயிற்சிகள் இந்த வலையில்தான் பதிவிடுவோம். வாசகர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பவேண்டிய ஜி மெயில் engalblog@gmail.com என்பதுதான்.

என்ன, சரிதானே?

(இதுவரை வந்த வாசகர் படைப்புகள் எல்லாமே அங்கும் வெளியிட்டிருக்கிறோம்.. இனிமேல் வருகின்ற வாசகர் படைப்புகள் அங்கே மட்டும் வெளியாகும்.)

படைப்பாற்றல் பயிற்சி: கற்பனை வளம்.

இந்த வார படைப்பாற்றல் பயிற்சி, கொஞ்சம் வித்தியாசமானது. இது படைப்பாளியின் கற்பனை வளத்தை வளர்க்கக் கூடியது.

நாங்க ஒரு வடிவம் மட்டும் தந்திருக்கிறோம். இந்த வடிவத்தை ஒரு காகிதத்திலோ அல்லது எம் எஸ் பெயிண்ட் கோப்பாகவோ எடுத்துக் கொள்ளுங்கள்.  இதனோடு உங்கள் கற்பனைக்  கீறல்களைச் சேர்த்து (நன்றி : ஹேமா) யாவரும் வியக்கும் வண்ணம் ஓர்  ஓவியமாக்கி, வர்ணம் பூசி, பட்டை தீட்டி எங்களுக்கு அனுப்புங்கள். 

வருகின்ற எல்லா படைப்புகளையும் வெளியிடுகிறோம். பார்க்கின்ற வாசகர்கள் பாராட்டு மழை பொழிவார்கள்.  (என்று நம்புகிறோம்!)


பதிவிட நாங்கள் ரெடி, பங்கேற்க நீங்க ரெடியா?


இதுதான் அந்த வடிவம்.  (ஒரு வால்பேரி உங்களுக்காக சிரசாசனம் செய்கிறது.) 
இதோ சில உதாரணங்கள். (இது போன்று அல்லது இதை விட சிறப்பாக வரைய உங்களால் முடியும்.) (இவை இரண்டும் எங்கள் கைவண்ணம். வாசகர்கள் கற்பனைகள் தனியே வெளியாகும்.)

வியாழன், 20 மே, 2010

சூப்பர் படைப்பாற்றல் கொண்டவரா நீங்க?

ஒரு பாட்டு: 

ஒரு படம் :

இங்கே உள்ள பாட்டு + இங்கே உள்ள படம் இந்த இரண்டையும், ஒரே வார்த்தையில் இணைக்கவேண்டும். சரியான பதில் அளிப்பவருக்கு SPS (Super Padaippaatral Subban alladhu Subbi) விருது அளிக்கப்படும்.    சூப்பர் படைப்பாளி?
பாடல், படம் இரண்டையும் ஒரே வார்த்தையில் இணைக்கவேண்டும். அதுதான் சவால் கேள்வி.  
க்ளூ: இந்தப் பதிவைத் தயார் செய்துகொண்டிருக்கும் பொழுது என்னுடைய பின்னாலிருந்து தோளுக்கு மேலே இதைப் படித்த அறிவு ஜீவி, 'படைப்பாளியா?' அல்லது 'படை(ய)ப்பாளியா?' என்று கேட்டார்.

புதன், 19 மே, 2010

லைலா விஜயம்

நேற்று லைலா வரப் போவதாகக் கேள்விப் பட்டதிலிருந்து வீடு வீடாகவே இல்லை.

விடுமுறைக்காக குழந்தைகளுடன் டெல்லி சென்றிருக்கும் திருமதி கூட செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றினீர்களா என்று கேட்டதற்கு சாயந்திரம் லைலா வரப் போவதால் இன்னும் இல்லை என்று பதிலளிக்க, பிறகு தொடர்ந்த உரையாடல்கள்  பற்றி வேறொரு போஸ்டே போடலாம்.

வீடெல்லாம் ஒரே தூசியாக இருக்கிறதே என்றெண்ணிய உடனேயே லைலா நினைவு வந்து பெருக்குவதை ஒத்திப் போடுகிறது.

இன்று காலை முதல் லைலாவின் வருகையால் பாதிக்கப் படாதவற்றை ஒரு கை விரலில் எண்ணி விடலாம்;  காய் கறி, பால் பாக்கெட் இப்படி எல்லாவற்றிலும் எக்ஸ்ட்ரா - ஆனால் வீடு சுத்தம் செய்வது போன்றவைக்கு ஒத்திவைப்பு.

இதோ அதோ என்று காத்திருந்து அலுத்துப் போய் தூங்கியும் போனேன்,  சுமார் இரண்டரை மணிக்கு என்ன தான் தூக்கம் என்றாலும் மின் விசிறியின் ஓசை நின்று போனதும், "நான் அசைந்தால் அசையும்.. அகிலமெல்லாமே " என்று திருவிளையாடல் படத்தில் ஒரு காட்சி வருமே அந்த மாதிரி ஒரு நிசப்தம் - எழுந்து சுற்று முற்றும் பார்க்க, எல்லாமே ப்ளாக் & ப்ளாக்கில் தெரிய, மின்னல் ஒரு பளிச் வெளிச்சம் போட்டதும், லைலா வந்தாச்சு என்று எழுந்தால் காலில் ஈரம். எல்லாப் படங்களிலும் வரும் கிளைமாக்ஸ் காட்சி போல எல்லா ஜன்னல் கதவுகளும் அடித்துக் கொள்ள, பிறகு தான் நினைவுக்கு வந்தது கொக்கிகள் மாட்டும் தலையாய பணியை மறந்து போனது .

இந்திரன் தந்த ஃப்ளாஷ் வெளிச்சத்தில் எல்லா [55] கொக்கிகளையும் மாட்டி விட்டு எக்சாஸ்ட் ஃபான் வைத்தவர் அந்த டக்டுக்கு ஒரு புருவம் வைக்காமல் விட்டு விட்டாரே என்று நொந்து கொண்டு வந்து உட்காரவும் ஸ்ரீராம் நினைவு வந்தது. 

சரி, அவர் என்ன செய்கிறார் பார்ப்போம் என அவரைத் தொலை பேசியில் அழைத்து அவர் எடுக்கவும் அவருக்கும் மின்தடை ஏற்பட, அவரென்னவோ நான் செல் ஃபோன் மூலம் அவருக்கு ரிமோட் கண்ட்ரோலில் மின்தடை ஏற்படுத்திவிட்ட மாதிரி "போயிடுச்சு" என்றார்.  லைலா இன்னும் வரவில்லையா என்று கேட்டதும் 'லைலாவா, யார் .." என்று ஆரம்பித்தவர் "மழையும் இல்லை காற்றும் இல்லை வெளிச்சமும் இல்லை.  ஆனால் எதிர் வரிசையில் இருக்கும் குவார்ட்டர்சில் லைட்  இருக்கு" என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ப்ரௌனியின் குரல் குறுக்கிட,  கீழே போய் ஏதோ இரண்டு வார்த்தை [அடுத்த முறை ஞாபகமாக அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ன சொன்னால் நாய் அவ்வளவு சீக்கிரம் சமாதானமாகும் என்று] சொல்ல அதுவும் ஒரு சிறிய முனகலுடன் ஓர் ஓரத்தில் ஒண்டிக் கொண்டது.  திரும்பி வந்தவர் குவார்ட்டர்சிலும் இப்பொழுது லைட் இல்லை என்றவர் குரலில் சற்று நிம்மதி.  அவர்களுக்கு வரும் பொழுது நமக்கும் வரும் என்ற நம்பிக்கையா அல்லது மின்சார வாரியத்தின் ஜனநாயக சோஷலிச கைங்கர்யத்தினாலா என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.   அமைதி நிலவும் இடத்தில் நமக்கென்ன வேலை என்று நானும் ஃ போனை ஆஃப செய்தேன் .

காலையில் மீண்டும் ஒரு சர்வே.  பேப்பர் பையன் பழக்க தோஷத்தில் வீசிய தினசரி, தேங்கிய தண்ணீரில் விழுந்து அப்படியே பேப்பர் மாஷ் பொம்மை செய்யும் பதத்தில்.   கொய்யா மரத்தில் இருந்த இல்லை, பிஞ்சு, பூ எல்லாம் கொட்டி விட்டது, எலுமிச்சை பக்கத்து வீட்டு சமையலறை ஜன்னலுக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது கூட துணைக்கு ஒரு வாழை மரம்.  
தாழ்வாரம் முழுக்க ஒரு பெயர் தெரியாத பூ. படம் பார்த்து தெரிந்து கொள்பவர்கள் எங்களுக்கும் சொல்லுங்கள்.  என்ன தான் மல்லிகையாக இருந்தாலும் லைலா விஜயத்துக்குப் பின் எல்லாமே குப்பை தான். 


விசிறியின்றி எனக்கும் வியர்க்குது - ஒ லைலா நீ சீக்கிரம் போய் என் தென்றலை மீட்டுக் கொடு.  

செவ்வாய், 18 மே, 2010

ஆர்வத்துடன் கொஞ்சம் ஆர்ட்டும் ஃப்ளூட் நோட்டும்

விஜய்: என்னவளை நான் வரைந்த படம் 


எங்கள் கமெண்ட்: வந்தாச்சா அல்லது வரப்போறாங்களா?


வல்லி சிம்ஹன் வரைகிறார்:


:: rose for the lovely blog ::


என்னால் முடிந்த வாழ்த்துகள் ஒரு நல்ல வலைப்பூவுக்கு.
அன்புடன்,
வல்லிசிம்ஹன்
http://naachiyaar.blogspot.com
எங்கள் கமெண்ட்: எங்களுக்கும் ஐஸ் வரும், ஐஸ் வந்தால் ஜல்பு வரும், ஜல்பு வந்தால் அனைவருக்கும் தொத்திவிடுவோமே!

ஸ்ரீதர் வரைகிறார்:
MS Paint ல் நான் வரைந்த ஓவியம் இது: 
எங்கள் கமெண்ட்: எங்களுக்குத் தெரியும் - விஜயகாந்தும், சௌந்தரியாவும்தானே?  
அத்துடன் புல்லாங்குழலில் வாசித்த NOTES ம் அனுப்பியுள்ளேன் !!!  
கொஞ்சம் இசை...கொஞ்சம் DRAWING.. கொஞ்சம் இலக்கியம்....
எல்லாமே கொஞ்சம்..கொஞ்சம் ..தெரிந்த அமெச்சூர் நான் !!!! 
எங்கள் கமெண்ட்: கொஞ்சம் நல்லாவே இருக்கு சார்!

வாசமுள்ள ரோஜாக்கள்

பாசமுள்ள வாசகர்கள் அனுப்பிய வாசமுள்ள வண்ண ரோஜாக்கள். 

(இந்தப் பதிவுகளில் நாங்கள் வெளியிடும் படவரிசை, எங்களுக்கு படங்கள் வந்து சேருகின்ற வரிசையில்தான். எனவே - வாசகர்கள் யாரும் தவறாக நினைக்கவேண்டாம். ) 

முதல் படம் : வரைந்தவர் ஸ்ரீமாதவன்:


அடுத்த படத்தை வரைந்தவர் மீனாக்ஷி:


அடுத்த படத்தை வரைந்தவர் வேதாந்த் சாய்ராம் :

பார்த்து இரசிக்கின்ற இரசிகப் பெருமக்களுக்கு ரோஜா (நடிகை அல்ல) சம்பந்தப்பட்ட, உங்கள் நினைவில் நிற்கின்ற  பாடல்கள் என்னென்ன என்று பின்னூட்டங்கள் அளியுங்கள்.

(கேள்விக்கும் பதில் சொல்லுங்க, படங்கள் வரைந்தவர்களையும் பாராட்டுங்க. நன்றி.)  

திங்கள், 17 மே, 2010

வாசகர்கள் படம், நித்யா பாட்டு.

பெயர்சொல்லவிருப்பமில்லை (நல்லவேளை, படம் அனுப்பவாவது விருப்பப்பட்டீர்களே! அதற்கு எங்கள் நன்றி!) அனுப்பிய ரோஜா இது:

அடுத்த படத்தை அனுப்பியவர் அநன்யா மஹாதேவன்.  (அநன்யா அன்றைக்குப் பாட்டு, அப்பப்போ படம் பார்த்து சரியான கதை! இன்றைக்கு படம். கலக்கறீங்க.) அவர் அனுப்பிய படம் இதோ :
அடுத்தது பாட்டு. பாட்டு என்றால் சாதாரணப் பாட்டு இல்லை. நல்ல குரல் வளத்துடன் இந்தோள இராகமும் இனிமையாகச் சேர்ந்து இதோ இருக்கு கேளுங்கள். பாடியிருப்பவர் பெயர் நித்யா. 

ஞாயிறு, 16 மே, 2010

ஞாயிறு -44A

ஆம் படத்தை நேராக்கினால் சற்றுப் புரியும் தான்.   நேராக்கி விட்டதுடன் நடுவில் ஒரு பாலிஷ் செய்த உருளையை வைத்துப் பார்த்தால் நடுவில் ஒரு பிரபலத்தின் முகம் வேறு தெரிகிறது! படத்தின் பெயரில் ஒரு சுட்டி ஒளிந்திருக்கிறது.

ஞாயிறு-44