புதன், 15 ஜனவரி, 2020

புதன் 200115 : மனுஷங்க கண்டுபிடிப்பில் மிக சிறப்பானது எது ?






ஏஞ்சல்:

1, பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாதுங்கறாங்க அப்படீன்னா ஒரு பணமில்லாம அவங்க வாழ முடியுமா ?

# பணமில்லாமல் வாழ முடியும் என்று சொல்லவில்லையே. பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாது என்றுதானே சொல்கிறார்கள். 
ஆனால், பணத்தால் பிறருக்கு சந்தோஷத்தை வாங்கித் தர இயலும். இதை நினைவில் வைத்திருந்தால் பணத்தால் சந்தோஷத்தை வாங்கவும் முடியும்.

& பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாது. சரிதான். ஆனால் பணத்தால் சாப்பாடு, சமோசா எல்லாம் வாங்க முடியுமே! பணமில்லாமல் வாழ முடியாது. 

2,நல்ல நட்பின் அடையாளம் என்ன ?

# நியாயமான உதவி, முடிந்த அளவு மாரல் சப்போர்ட், தேவை வந்தால் ஆறுதல் தேறுதல், சந்தோஷத்தில் ஆத்மார்த்தமான பங்கேற்பு.

& நாம் ஆலோசனை கேட்கும்பொழுது, நமக்கு ஆறுதலுக்காக ஆலோசனை சொல்லாமல், அவர் மனதில் தோன்றும் ஆலோசனையை, காரணத்தோடு, இதமாக, நயமாக நமக்கு எடுத்துச் சொல்வது. 

3,நம்ம வாழ்க்கையை எது வரை நம்மால் அடக்கி கட்டுப்பாட்டில் வைக்க இயலும் ?

# வாழ்க்கையைக் கட்டுப்பாட்டில் எவ்வளவு வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும். அது கை நழுவிப் போவது நம் அதீத ஆசை அல்லது பொறாமை / சினத்தால்.

4, பிறரால் மதிக்கப்படுதல் அல்லது விரும்பப்படுதல் இவற்றில் எது சிறந்தது ?

# மதிக்கப்படுவது.
விரும்பப்பட்டு அனைத்தையும் இழந்த மகளிர் வரலாறு நிறைய இருக்கிறதே.

& பிறரால் மிதிக்கப்படாமல் இருத்தலே சிறப்பு. 

5,குழந்தை ,சிறுவர் சிறுமியர் ,இளையோர் ,முதியோர் இவர்களின் வயதை எண்ணில்  சொல்லவும் ?   ஈஸியா சொல்லணும்னா ஒருவரை முதியோர்ன்னு சொல்வது எந்த வயதில் ? 

# 12 வரை சிறுவர் 30 வரை இளைஞர். அதன் பின் நபர்.
உடல் திறன் மங்கியபின் முதியவர். 70க்கு மேல் என நான் கணிக்கிறேன்.

& குழந்தை = 0 to 5.
சிறுவர் / சிறுமியர் = 5 to 12
இளையோர் = 13 to 25
நடுத்தர வயதினர் = 25 to 50
வயதானவர் / பெரியவர் = 60 + 
முதியோர் = 70 +


6, கடவுள் உங்க முன்னாடி தோன்றி சில வரம் கொடுக்கிறார் அது ஒரு வாரம் இவர்களாக மாறலாம்                a , ரஜினி அங்கிள்                b ,கமல் அங்கிள்                c , நித்தி அங்கிள்                d , ட்ரம்ப் அங்கிள் 
இந்த நால்வரில் யாராக மாற விரும்புவீர்கள் ஏன் ? மற்ற மூவரை நிராகரித்ததன் காரணத்தையும் விள்ளக்கமா :)சொல்லணும் ?

# டிரம்ப். அணு ஆயுதங்களை அழிக்க ஒரு சந்தர்ப்பம்.
மற்ற மூவர் இடத்திலிருந்து கொண்டு சாதிக்க ஏதுமில்லை.

& கடவுளே! இந்த நால்வராகவும் நான்கு வாரம் (ஆளுக்கு ஒரு வாரமாக ) இருந்து பார்த்துவிட்டு, எது எனக்குப் பிடித்திருந்தது என்று சொல்ல வரம் அளியுங்கள்! 

7,நம்ம மனுஷங்க கண்டுபிடிப்பில் மிக சிறப்பானது எது ?ஏன் ?

# மின்சாரம். சொல்லித் தெரிவதில்லை வகை அல்ல சொல்லவும் வேண்டுமோ வகை.

& Internet. அதனால்தானே எனக்கு சுவாராஸ்யமாக பொழுது போகிறது! 
      
8,வஞ்சப்புகழ்ச்சி என்றால் புகழ்வது போலெ இகழ்வதா இல்லை உள்குத்து வைத்து பேசுவதா ?

# எதிர்த்துப் பேச இடமளிக்காதது வ.பு. 

& வஞ்சப் புகழ்ச்சி - யாரைப் புகழ்கிறோமோ அவருக்குப் புகழ்ச்சியாகத்தான் தோன்றும். மற்றவர்களுக்கு அப்படித் தோன்றாது. 
புகழ்வது போல இகழ்வது. 

9, சமீபத்தில் நீங்கள் பார்த்து ரசித்த சினிமா ட்ரெய்லர் ?    நான் ரசித்தது கடைசி விவசாயி பட ட்ரெய்லர்.

# Out of syllabus.

& அட! விவசாயி பட டிரைலரா?  ஓ ! வரும் திங்கட்கிழமை பகல் பன்னிரண்டு மணிக்கு நமது அரதப் பழசு டீ வி யில் காணத் தவறாதீர்கள் clip பற்றிச் சொல்கிறீர்களா? அப்படிப் பார்த்தால் விட்டலாச்சார்யா பட டிரைலர்கள் எல்லாம் சூப்பராக இருக்கும்! 

10, ரகசியம் சரி ..அது என்ன பரம ரகசியம் ?

# குருவுக்கு மேலே பரம குரு. எனவே பரம=ஒரு படி மேல்.

& ரகசியம் : நாமே சொல்வது. பரம ரகசியம் : நமக்கு வேறு யாரோ சொன்னதை நாம் மற்றவருக்குச் சொல்வது. 


பசும்பொன் அதிரா :

1). துரோணாச்சாரியார் ஒரு பெரிய வில்வித்தை ஆசிரியர், அப்போ ஆசிரியர் எனில் நடுநிலையாகத்தானே இருக்கோணும், ஆனா அவர் அப்படி இருக்கவில்லையே.. அர்ச்சுனன் வெல்லோணும் எனும் நோக்கத்தாலேயே, ஏகலைவனிடம் பெருவிரலைக் கட் பண்ணித்தரச் சொன்னாராமே.. அப்போ இது எவ்ளோ பெரிய தப்பு? துரோகம், வஞ்சகமான செயல்.. ஆனாலும் அவரை பெரிய அளவில் மதிப்புக் கொடுத்து கொண்டாடுகிறொமே அது சரியோ?

# துரோணரை நீங்களும் நானும் கொண்டாடவில்லையே. அவரால் மிகச்சிறந்த பயிற்சி பெற்ற அதிர்ஷ்டசாலிகள் அவரைக் கொண்டாடியதில் வியப்பு இல்லை. 

& ஏகலைவன் ஓ சி யில் வில்வித்தை கற்றுக்கொண்டது மட்டும் நியாயமா? அதுவும் தவறுதானே. fees கட்டிதானே வித்தை பயின்றிருக்கவேண்டும்! 


2.ஒரு பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது என்பது பார்த்தாலே புரியும் [நம் நாட்டைப்பற்றிக் கதைக்கிறேன்], அல்லது பெயரைக் கேட்டால் புரிஞ்சிடும்.. மிஸிஸ்/மிஸ் என்பதை வச்சு ஆனா ஆண்களிடம் நேரிடையாகக் கேட்டால் மட்டும்தானே தெரியும், இதனாலேயே சில ஆண்கள் திருமணமாகவில்லை எனச் சொல்லி ஏமாற்றுகின்றனர் ஊர்கள்.
ஒரு ஆணுக்குத் திருமணமாகிவிட்டது என்பதை எப்படிக் கண்டு கொள்வது?

# உணர்ச்சிக்கு இடம் தராமல் நிதானமாக நடந்து  கொள்ளும் பெண்கள் இப்படி ஏமாறுவதற்கு சாத்தியங்கள் மிகக் குறைவு.

& அந்தக் காலத்தில் திருமணமான ஆண்கள் காலில் மெட்டி அணிந்திருந்தார்களாம். பெண்கள் தாலி அணிந்திருந்தார்கள். ஏன் இப்படி என்றால், (அந்தக் காலத்துப்) பெண்கள் நிலத்தை நோக்கித்தான் எப்போதும் இருப்பார்களாம். ஆணின் காலில் மெட்டி அணிந்திருப்பதைப் பார்த்தவுடன் " அண்ணா ... " என்று அழைப்பார்கள். (இல்லையேல் 'கண்ணா' என்பார்களா என்று கேட்கக் கூடாது) ஆண்கள் நேர்பார்வை பார்த்து இருப்பவர்கள் என்பதால், தாலி அணிந்த பெண்ணைப் பார்த்தவுடன் " தங்கச்சீ " என்று அழைப்பார்கள் (தாலி இல்லை என்றால் 'தன் கட்சி' யில் சேர்த்துக்கொண்டுவிடுவார்களோ!) இப்போ எல்லாம் காலம் மாறிப்போச்சு. 

என்ன கேட்டீங்க ? ஒரு ஆணுக்குத் திருமணமாகிவிட்டது என்பதை எப்படிக் கண்டுகொள்வது என்றா? 

நான் ஒரு ட்ரிக் சொல்லறேன் எடுபடுதா பாருங்க : 

வீட்டில் உள்ள பழைய கல்யாண / அல்லது பிறந்தநாள் போன்ற இன்விடேஷனை எடுத்து, பெயர் எழுதப்படாத ஒரு கவரில் போட்டு, கவரின் மீது To என்கிற இடத்தில் Mrs & Mr (அவர் பெயர்) எழுதி அவரிடம் கொடுக்கவும். அதை வாங்கி வைத்துக்கொண்டார் என்றால் கல்யாணமானவர். " என்னங்க இது! எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை " என்று நேராக கண்களை நோக்கிச் சொன்னார் என்றால் திருமணம் ஆகாதவர். 

3. பவுசு, ரவுசு, சொகுசு.. இவற்றுக்கு விளக்கம் சொல்லவும் பிளீஸ்.

# அசல் மதிப்பு பவுசு.
அநாவசிய ஆட்டம் போடுவது ரவுசு.
தேவைக்கு மீறிய சௌகரியம் சொகுசு.

4. உங்களை வீட்டு வேலை செய்யச் சொன்னால், எந்த வேலை செய்யப் பிடிக்கும்?.. அதாவது சமைப்பது அல்லது உடுப்பை மடிச்சு அயன்பண்ணி அந்தந்த இடத்தில் வைபது, தூசு தட்டிக் கூட்டுவது, மொப் பண்ணுவது.. பாத்திரங்கள் கழுவி கிச்சினைக் கிளீன் பண்ணுவது இப்படியானவற்றில்.. ஏன் பிடிக்கும் எனவும் சொல்லவும்.. சரியான விளக்கம் இல்லை எனில் தேம்ஸ்ல குதிக்க வேண்டிவரும்... ஹையோ இது என்னைச் சொன்னேன்:)).. சரி சரி இவ்ளோவும்தான் இப்போதைக்கு ரெடியாக இருந்தவை:).

# பாத்திரம் கண்ணாடிப் பொருள்கள் கிளீன் செய்யவும், சிறுவர் ஆடைகளை இஸ்திரி போடவும் பிடிக்கும். பள பளப்பு மொடமொடப்பு தரும் நிறைவு.

& சமைப்பது பிடிக்கும். அதில்தான் வித்தியாசமாக எதையாவது சோதனைகள் நடத்திப் பார்க்க முடியும். தூசு தட்டிக் கூட்டுவது + மோப் பண்ணுவது பிடிக்காத என்பதைவிட என்னால் சரியாகச் செய்ய இயலாத காரியங்கள். துணிகளை அயன் பண்ணியது இல்லை; மடித்து வைக்கும் பழக்கமும் இல்லை. பாத்திரங்கள் கழுவுவது உண்டு. 



நெல்லைத்தமிழன்: 

  பிராணிகளை வளர்க்கிறோம் என்பதே அவைகளுக்கு நாம் தரும் மாடர்ன் ஜெயில் இல்லையா? மனிதர்களை இப்படி ஒருவர் வளர்த்தால் (படிக்க, சுற்ற, திருமணம் செய்ய விடாம ஆனா வேளா வேளைக்கு சாப்பாடு போட்டு தனக்கு அன்பு செலுத்த மட்டுமே செய்தால்) நாம் அவரைப் பாராட்டுவோமா?

$ நாமும் பிராணிகளாகப் பிறந்தால், வேளாவேளைக்கு உணவு கொடுத்து, மழை வெயிலிலிருந்து காப்பாற்றும் யாரையும் விரும்பி ஏற்றுக கொள்வோம் என்று எண்ணுகிறேன்.

மனிதர் அரவணைப்பில் பிராணிகள் ஆனந்தப்படுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. த்ரிஷா வீட்டு நாய்க்குட்டி - அமலா வளர்க்கும் பெருச்சாளி.

& ஆக,  நீங்க என்ன சொல்கிறீர்கள் என்றால், பிராணிகளுக்கு, படிக்கக் கற்றுக்கொடுக்கவேண்டும், பிராணிகளை ஊர் சுற்ற விடவேண்டும், பிராணிகளுக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்பதுதானே? நல்லவேளை நான் எந்தப் பிராணி வளர்ப்பும் செய்வதில்லை! 
=================================================

சென்ற வாரம் நம்ம ஏரியாவில் பல பதிவுகள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொன்றிலும் க்ளிக் செய்து, படித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் பதியுங்கள். 
நன்றி. 

80 கருத்துகள்:

  1. ம்ம்ம்ம்ம் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். நல்வரவு. வணக்கம், பிரார்த்தனைகள். இந்தப் பொங்கல் திருநாள் அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியைப் பொங்க வைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. எல்லாக் கேள்விகளுக்கும் அருமையாகப் பதில் சொல்லி இருக்கிறீர்கள். $ ஒரே ஒரு கேள்வி மட்டும் பதில் சொல்லிட்டு மற்றவற்றைச் சாய்ஸில் விட்டுட்டார் போல! துரோணன் மற்றும் ஏகலைவன் பற்றிப் போன வாரமே பார்த்தேன். அப்போதே பதில் சொல்ல நினைச்சு பின்னர் மறந்து விட்டேன். ஓர் பதிவாய்த் தான்போடணும். ஆனால் பசும்பொன், பத்தரைமாற்றுத் தங்கம் என்னோட வலைப்பக்கம் வரணும். இம்மாதிரி விஷயங்களுக்கெல்லாம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டாங்களே! :))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசாக்கா நேக்கு மார்கழி மாதம் முழுக்க காது கேய்க்கல்லயே:)).. ஹா ஹா ஹா வருவேன் கீசாக்கா.. மார்கழிப்பதிவு அதுவும் கோயில் சமயச் சொற்பொழிவுபோல இருந்தால் எனக்கு படிக்க ....... கோடிட்ட இடத்தை என்ன வார்த்தை போட்டாவது நிரப்புங்கோ[ஆனா நல்ல வார்த்தையாகப் போடுங்கோ பிளீஸ்:)].. அதனால வரேல்லை கீசாக்கா.. நீங்க கமபராமாயணம் பாரதச் சுருக்கம் எல்லாம் எனக்குப் புரியும்படியா:) எழுதுங்கோ வராமல் எங்கே போயிடப்போறேன்ன்:)))...

      //அதிரா கவனிக்கவும்.//

      ஹா ஹா ஹா நல்லாக் கவனிச்சிட்டேன் கெள அண்ணன்:))

      நீக்கு
  3. எல்லோரும் பொங்கல் பண்ணுவதிலோ அல்லது சாப்பிடுவதிலேயோ (இத்தனை சீக்கிரமாவா) மும்முரம் போல! யாரையும் காணோம். நாளைக்குக் காலம்பர நானும் வர முடியாது. மத்தியானமாப் பார்க்கலாம். அல்லது நான் பார்த்துக்கறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொம்ங்கல் பண்ணி, வடையும் சுட்டு அக்கம் பக்கமும் குடுத்தேன் எங்கள் டமில் நியூ இயர் எனச் சொல்லி ஹா ஹா ஹா:).. ஆனா சக்கரைப்புக்கை சாப்பிட்டதும் ஒரே மயக்கமாப்போச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  4. சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை...

    அனைவருக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  5. பொங்கலோ பொங்கல்...
    பொங்கலோ பொங்கல்...

    பதிலளிநீக்கு
  6. கேள்விகளும், பதில்களும் சுவாரஸ்யம் ஜி

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம். மற்றும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. கீதா அக்கா அங்கு நேற்றே பொங்கலாமே?

    பதிலளிநீக்கு
  10. பதில்கள் வழக்கம் போல சுவாரஸ்யம். குறிப்பாக பணம் பற்றிய கேள்விக்கும், விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பது பற்றிய கேள்விக்குமான பதிலையும் மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடகிழக்கு மாநிலங்களில் திருவாதிரையிலிருந்து எல்லாப் பண்டிகைகளையும் ஒரு நாள் முன்னதாகவே கொண்டாடினார்கள் பானுமதி! ஒரு நண்பர் முகநூலிலும் போட்டிருந்தார். மேரிலான்டில் இருக்கிறாராம். அவங்க ஊர்க் கோயிலில் ஒரு நாள் முன்னதாகவே போட்டிருப்பதால் அதையே அனுசரிப்பதாகச் சொன்னார். இங்கே மீனாக்ஷி கோயில்ப் பஞ்சாங்கம் தான்! அதோட நாங்க இந்தியத் தேதிகள் படியே இருக்கட்டும்னு விட்டுட்டோம். எங்கே இருந்தாலும் இந்தியாவில் இருக்கிறாப்போல் வருமா?

      நீக்கு
  11. //துரோணரை நீங்களும் நானும் கொண்டாடவில்லையே.// இந்த பதிலைத்தான் நானும் நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  12. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  13. பொங்கல் தின நல்வாழ்த்துகள் அனைவருக்கும். பொங்கலைப்போலே மணக்கட்டும், தித்திக்கட்டும் வாழ்க்கை!

    பதிலளிநீக்கு
  14. //..& ரகசியம் : நாமே சொல்வது. பரம ரகசியம் : நமக்கு வேறு யாரோ சொன்னதை நாம் மற்றவருக்குச் சொல்வது.//

    மொத்தத்தில்.. சொல்வது ரகஸ்யம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நயமாக சொல்லிவிட்டீர்கள்! ஒருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தால் யாருக்கும் எதுவும் பயன் இல்லையே!

      நீக்கு
    2. பயன்!
      எப்போதும், எதிலும் பயனையே தேடிக்கொண்டிருக்காதீர்கள்.. பயனின்றியும் அமையும் உலகு !

      நீக்கு
    3. ஹா ஹா .. கிசு கிசு மேட்டர் எல்லாம் நாலு பேருக்காவது தெரிஞ்சால்தான் சுவாரஸ்யம்

      நீக்கு
  15. வித்தியாசமான கேள்விகள்
    சுவாரஸ்யமான பதில்கள்...
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. இனிய நற்பொங்கல் வாழ்த்துகள் அனைவருக்கும். இங்கு இப்போதுதான்
    பொங்கல் ஆகிக் கொண்டிருக்கிறது.

    அதிரா, ஏஞ்சல் கேள்விகள் மிக நேர்த்தி. த்ரோணர் கேள்வி பதில் சுவாரஸ்யம்.
    மஹா பாரதம் மற்றும் பல புராணங்களில்
    நடக்கும் விஷயங்கள் இன்னும்பதில் தர முடியாத நிலையிலியே
    இருக்கின்றன.

    பணம் பற்றிய பதில்கள் மிக உண்மை.
    காசில்லாமல் காசினியில் வாழ்வதே சிரமம்.
    செல்லங்கள் .சுவாரஸ்யம்.
    எங்கள் ப்ளாக் குழுவினருக்கும் குடும்பத்துக்கும்
    இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  19. கேள்வி பதில்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    பணம் பற்றி கேள்விக்கு பதில் அருமை.

    பவுசு, ரவுசு, சொகுசு.. இவற்றுக்கு விளக்கம் சொல்லவும் பிளீஸ்.

    அசல் மதிப்பு பவுசு.
    அநாவசிய ஆட்டம் போடுவது ரவுசு.
    தேவைக்கு மீறிய சௌகரியம் சொகுசு.

    நீங்கள் அசல் மதிப்பு பவுசு என்று சொல்கிறீர்கள். எங்கள் ஊர் பக்கம் சிலர் கண்டுக் கொள்ளாமல்,யாரிடமும் பேசாமல் இருப்பவர்களை அவளுக்கு புதுசா பவுசு வந்து இருக்கு அதுதான் கண்டு கொள்ளாமல் இருக்கிறாள் என்று பேசுவார்கள்.

    நீங்கள் சொல்வது போல் சரியாக கணிக்கப்பட்ட மதிப்பிட பட்ட சொல் பவுசு என்று நினைக்கிறேன். அருமை.

    பதிலளிநீக்கு
  20. நம்ம ஏரியா ப்திவுகளைப் படிக்க வைக்கும் உத்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். 'எங்கள்' வாசகர்கள் - மொபைலில் படிப்பவர்களுக்கு நம்ம ஏரியா பதிவுகள் பற்றித் தெரிவதில்லை. அவர்களுக்காக இங்கே சுட்டிகள். மடிகணினி, மேஜை கணினி ஆகியன மூலம் எங்கள் blog படிப்பவர்களுக்கு மட்டும்தான் நாங்கள் இங்கே இடது பக்கத்தில் வரிசைப்படுத்தியுள்ள உங்கள் ப்ளாக் பதிவுகள் சுட்டிகள் தெரியும். மொபைலில் ப்ளாக் படிப்பவர்களின் வசதிக்காக, இங்கேயும், facebook பக்கத்திலும் மற்றும் EB Editors & Readers WhatsApp குழுவிலும் சுட்டிகள் கொடுக்கிறேன். நன்றி.

      நீக்கு
  21. நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  22. எ .பி ஆசிரியர் குழாம் மற்றும் சக வாசக ரசிகர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  23. எங்கள் பிளாக் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  24. ஈவ்னிங் கேள்வி மூட்டையுடன் வருகின்றேன் :)

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    அத்தனை கேள்வி பதில்களும் எப்போதும் போல் அருமை. ரசித்துப் படித்தேன். கேள்விகளுக்கு தகுந்தவாறு பதிலளித்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    கொக்கியும் என்னை கொக்கிப் போட்டு ஒவ்வொரு பகுதிக்கும் தூக்கிச் சென்றது. கதை அருமையாக உள்ளது.

    கனவென்று விழிப்பவர் மறுபடியும் கல்யாணங்களில் மாறுவேடமணிந்தவரை சந்திப்பது எப்படி என்ற இடத்தில் கொக்கி என்னை கழற்றி விட்டு விடுமோ என ஒரு நொடி தடுமாறினேன். மறுபடியும் சுதாரித்து கொண்டு கொக்கியை பிடித்தபடி சுவையான முடிவை சந்திக்க வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  26. மனுஷங்க கண்டு பிடிப்பில் மிகச் சிறந்தது கடவுள்

    பதிலளிநீக்கு
  27. 9, கர்ர்ர் நான் சொன்னது கடைசி விவசாயி படம் விஜய் சேதுபதியோடது :)) நீங்க எம் ஜி ஆர் தாத்தா படத்தை சொல்லியிருக்கீங்க :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெனச்சேன். ஏதாவது புதுப்படமா இருக்குமோ என்று. கூகிளில் தேடிப் பார்த்தேன். எம்ஜியார் படம் மட்டுமே லிஸ்ட் ஆனது. முகத்தில் எந்த பாவமும் காட்டாது நடிக்கும் திறமை வி சே வுக்கு மட்டுமே உண்டு.

      நீக்கு
  28. 1, மன்னித்தல் ,மறத்தல் , இவ்விரண்டில் எது சிறந்தது ?
    2, பிறரை திருப்திப்படுத்துவதற்காக நினைத்து பெரும் சங்கடத்தில் ,பிரச்சினையில் மாட்டிக்கொண்ட  அனுபவம் உண்டா ?
    3, வாராவாரம் நாங்கள் உங்களை கேள்வி கேட்கிறோம் அப்படி நீங்கள் எங்களிடம் குறைந்தது ஆளுக்கொரு கேள்வி கேட்கணும்னா என்ன கேட்பீர்கள் ?
    4, கோபம் என்பது உள்ளிருந்து வருவது அதை எதற்கு மூக்கு மேல் கோபம் என்று சொல்றாங்க ?
    5, அண்டங்காக்கா கொண்டைக்காரி ..இந்த பாட்டின்படி பார்த்தா அண்டங்காக்காவுக்கு கொண்டை  இருக்கணும் ஆனா அதுக்கு கொண்டையில்லையே ? விளக்கம் ப்ளீஸ் ??
    6, ஆலுமா டோலுமா போன்ற அரிய தத்துவார்த்தமான பாடல்களை கேட்கும்போது என்ன தோன்றும் ???
    7,போனில் மெசேஜ் அப்பும்போது ஒருவருக்கு அனுப்பவேண்டியதை மாற்றி இன்னொருவருக்கு அனுப்பியிருக்கிறீர்களா ?
    8, குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள் பிறகு தெய்வம் நின்று கொல்லும் என்றும் சொல்கிறார்கள் ஒரே குழப்பமா இருக்கே ????
    9, நாம் நாமாயிருத்தல் நல்லதா இல்லை பிறருக்காக சற்றே வளைந்து இயல்பை மாற்றியிருப்பது நல்லதா ?
    10,பிறர் மனதில் நினைப்பது உங்களுக்கு அப்படியே தெரிகிறது என்று வரம் உங்களுக்கு கிடைச்சா அதை எந்த நல்ல விஷயத்துக்கு பயன்படுத்துவீர்கள் ?

    பதிலளிநீக்கு
  29. ஆண்கள் நேர் பார்வை கொண்டவர்கள் என்பதால் பெண்ணின் கழுத்தில் தாலியைப் பார்த்து - இதைவிட டுபாகூர் பதில் இருக்காது. நேர் பார்வையாம்.. கழுத்து தெரியுதாம்

    பதிலளிநீக்கு
  30. அனைத்துக் கேள்விகள் பதில்கள் சுவாரஸ்யம்.. அழகு..

    என் முதலாம் இரண்டாம் கேள்விக்கான பதில் சுற்றி வளைக்கப்பட்டு விட்டதே:)).

    ///# துரோணரை நீங்களும் நானும் கொண்டாடவில்லையே. அவரால் மிகச்சிறந்த பயிற்சி பெற்ற அதிர்ஷ்டசாலிகள் அவரைக் கொண்டாடியதில் வியப்பு இல்லை. //

    நாம் கொண்டாடாவிட்டாலும், அவரின் பெயர் உயர்வாக இருக்குது ஆனா அவர் செய்த காரியம் சரியானதா? நீங்கள் ஏற்றுக்கொள்றீங்களோ எனத்தான் கேட்டேன்...

    ////& ஏகலைவன் ஓ சி யில் வில்வித்தை கற்றுக்கொண்டது மட்டும் நியாயமா? அதுவும் தவறுதானே. fees கட்டிதானே வித்தை பயின்றிருக்கவேண்டும்! ///

    ஹா ஹா ஹா அவர் ஏன் கள்ளமாகக் கற்றுக் கொண்டார் என்பது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்தானே கெள அண்ணன்?.. அது மகா தப்புத்தானே ஏகலைவனை ஒதுக்கியது.. பணம் இல்லாதோர் படிக்கக்கூடாதோ?.. சரி சரி விட்டிடலாம்...

    அனைத்துப் பதில்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன டைட்டில் இது அதிரா? ஒருவரைக் கடுமையா திட்டணும்னா கருங்காலி, துரோகி, குடிகேடன் என்றல்லாம் சொல்வாங்க.

      அர்த்தம் தெரியாம டைட்டில் வச்சுக்கலாமா?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்... ஸ்ரீராமும் அப்பூடித்தான் சொன்னார்ர்... மாத்திட்டனே:)..

      அது கருங்காலி என்றால் நல்ல ஸ்ரோங்கான உக்காத வைரம்போன்றது என மட்டும்தான் எனக்குத் தெரிஞ்சிருந்தது... அந்த அர்த்தத்தில வச்சால் அது டப்பூ ஆகிடுச்சே ஹா ஹா ஹா:))..
      நன்றி நெ.தமிழன்.

      நீக்கு
  31. //சென்ற வாரம் நம்ம ஏரியாவில் பல பதிவுகள் வெளியாகியுள்ளன//

    ஓ இவ்ளோ விசயம் அங்கின நடக்குதோ? ஒன்றுக்கு வந்து கொமெண்ட் போடவே ஒன்பது மணி நேரமாகுதே ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா ஏஞ்சல் ஆகியோர் நம்ம ஏரியா பதிவுப் பக்கம் அதிகம் வருவதில்லை என்பதால் கொக்கிகளை புதன் பதிவுகளில் மாட்டி வைப்போம்.

      நீக்கு
  32. எங்கள் பிளாக் குடும்பத்தினர் அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

    நல்ல கேள்வி பதில்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!