வக்கிரம்
நெல்லைத் தமிழன்
அந்தத் திருமணத்தில் அவளைப் பார்ப்போம் என்று நான் நினைக்கவில்லை. அவள் முகத்தைப் பார்த்ததும் எனக்கு கடந்தகால கசப்பு நினைவுகள்தாம் வந்தன.
“நீங்க ராமுதானே.. எப்படி இருக்கீங்க?” சுவாதீனமாக வந்து கேட்டாள் பானு. முப்பது வருடங்களுக்கு முன்பு பார்த்ததைவிட ரொம்ப குண்டாகி இருந்தாள்.
“நல்லாருக்கீங்களா பானு?”
“நீங்க அப்போ பார்த்த மாதிரியே இருக்கீங்க. நான்’தான் மும்பை போனப்பறம் வீட்டுலயே இருந்து ரொம்ப வெயிட் போட்டுடுச்சு. ஹாஹா”
“ஹஸ்பண்ட் வந்திருக்கிறாரா பானு?”
“ஆமாம். அதோ அந்த கார்னர்ல வீல் சேர்ல உட்கார்ந்திருக்கார் பாருங்க… அவங்கதான். வாங்களேன்.. அறிமுகப்படுத்தறேன்” மலர்ந்த முகத்துடன் பானு ராமுவை அழைத்துக்கொண்டு சென்றாள்.
**
எவ்வளவு ஆகாசக்கோட்டை கட்டினோம். இவளைத் திருமணம் செய்துகொள்ளலாம்னு. அவளுடைய கலகலப்பான குணம், அவ சமைச்ச ருசியான சாப்பாடு, அவங்க பெற்றோர் நடந்துகொண்ட விதம், அவ சகோதரனுக்கு என்னிடம் இருந்த அபிமானம்..… அவள் பிரதர் ரமேஷ் நினைவுக்கு வந்தான்.
“ராமு… என் அக்கா ரொம்பப் பெரிய பணக்காரி. அவ ஹஸ்பண்ட் குடிகாரனாகி நோய்ல இருக்கார். அவளுடைய பொண்ணைக் கட்டிக்க இஷ்டமா? நீ நல்லா செட்டில் ஆயிடலாம். உன் ஜாதகம் கேட்கச் சொல்லவா?” ரமேஷ் ஒரு நாள் ராமுவிடம் சொன்னான்.
“ரமேஷ்.. எனக்கு காதல் திருமணத்துலதான் இஷ்டம். ஒருநாள் என் ஆசையை உன்கிட்ட சொல்றேன். உனக்கும் சந்தோஷமா இருக்கும்னு நினைக்கறேன்”.. தான் பூடகமாக அவனிடம் சொன்னது நினைவுக்கு வந்தது.
**
“ஏண்டா.. நீதானே போய் அவள்கிட்ட உன் லவ்வைச் சொல்லணும். சொல்றதுக்கு பயந்தா?” உயிர் நண்பன் ராஜ் ராமுவைக் கேட்டான்.
“இல்லடா.. ஒருவேளை அவள் நோ என்று சொல்லிட்டா.. அவள் இதை வீட்டுல சொல்லி அங்க என்னோட நல்ல பேர் போயிட்டா?”
“உனக்குப் பிடிச்சிருக்கு. அப்போ தைரியமா கேட்கவேண்டியதுதானே.. நீயும் அவங்க வீட்டுக்கு அடிக்கடி போறவன்’தானே. அவங்க எல்லோரும் உங்கிட்ட பிரியமா பழகுவாங்கன்னு சொல்லியிருக்கயே”
“ப்ளீஸ்.. எனக்காக அவள்ட சொல்லி அவள் என்ன சொல்றான்னு கேட்டுச் சொல்லுடா. எனக்குக் கேக்க ரொம்பத் தயக்கமாவும் பயமாவும் இருக்கு”
ராஜ் என்ன பதில் கொண்டுவருவான் என்று எதிர்பார்த்ததில், இரு நாட்கள், இரண்டு மாதங்களாகத் தோன்றியது ராமுவுக்கு. ஆனால் ராஜ் வரும்போதே அவன் முகத்தில் மலர்ச்சி இல்லாதது அவனைக் கலவரப்படுத்தியது.
“ராமு… ப்ளீஸ்..என் மேல தவறே இல்லைடா. என்னை மன்னிச்சுக்க. நான் உனக்காக எவ்வளவோ அவள்ட பேசினேன். அவளானா என்னைத்தான் லவ் பண்ணுவதாகச் சொல்றா. நான் என்ன செய்ய?”
“நானும் அவளை என்னன்னவோ பேசியும் கன்வின்ஸ் பண்ண முடியாம, அப்புறம் அவள் லவ்வை ஏத்துக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன். நீ இதுல என்னைத் தவறாக நினைச்சுடக்கூடாது ராமு”
நண்பனிடம் தான் கொண்டிருந்த அதீத நட்புக்காக அவனை மன்னித்து, பிறகு அவனது காதலுக்கு உதவி செய்ய முயன்றதும், அது தோல்வியடைந்து, ரமேஷ் வீட்டுடனான உறவு தனக்கும் கெட்டதும், பானுவை அவசர அவசரமாக பம்பாயில் வேலை பார்க்கும் என்’ஜினீயர் ஒருவருக்கு பானுவின் அப்பா மணமுடித்துக்கொடுத்ததும் வேக வேகமாக நடந்துவிட்டது. ரமேஷ்கூட பானுவின் திருமணத்துக்குத் தன்னை அழைக்காதது ராமுவுக்கு உறுத்தலாகத்தான் இருந்தது. பானு தன்னை வேண்டாம் என்று சொல்லி, தனக்குப் பொருத்தமில்லாதவனை லவ் பண்ணுகிறேன் என்று சொன்னது கசப்பு மருந்துபோல் நிரந்தரமாக ராமுவின் தொண்டையில் தங்கிவிட்டது.
**
“இவர்தான் ராமன். நான் கம்ப்யூட்டர் இன்ஸ்டிடியூட்டில் படித்தேனே.. அப்போ எனக்கு சீனியராக இருந்தது. என் அண்ணனுக்கு ரொம்ப ஃப்ரெண்ட். நான்கூட சொல்லியிருக்கேனே எங்க வீட்டுக்கெல்லாம் வருவார். அண்ணனுக்கு கம்ப்யூட்டர் கத்துக்கொடுக்க நிறைய ஹெல்ப் பண்ணினார். இருந்தாலும் அண்ணனுக்கு அந்த ப்ரொஃபஷன் வாய்க்கலைனு’
“நீங்க மும்பைலதானே வேலை பார்த்தீங்கன்னு கேள்விப்பட்டேன். இப்போ எங்க இருக்கீங்க?” வீல் சேரில் அவள் கணவன் இருப்பதைப் பார்த்து மனதில் பொங்கிய சந்தோஷத்தைக் காட்டிக்கொள்ளாமல் ராமு கேட்டான்.
“அங்கதான் 5 வருஷம் முன்னால வரைல வேலை பார்த்தேன். கன்ஸ்ட்ரக்ஷன் சைட்ல நடந்த விபத்து. முதுகு தண்டுல அடி. என்னால நிற்கமுடியாம வீல்சேர்ல கட்டிப்போட்டுடுத்து. நல்ல ரெஸ்ட் எடுக்க வேண்டியதாச்சு”
“பசங்க வரலையா?”
“பானு சொல்லலையா? எங்களுக்கு ஒரு பையன் பொறந்து தங்கலை. இப்போ பெர்மனண்டா சென்னைலதான் இருக்கோம்.. நீங்க எங்க இருக்கீங்க?”
“நான் வண்டலூரைத் தாண்டி இருக்கேன்.”
“பானு உங்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கா. வீட்டுக்கு வாங்களேன். சாவகாசமா பேசுவோம்”
**
“ரொம்ப சந்தோஷம் ராமு.. நீங்க நல்ல நிலையில் இருக்கறது. பொண்ணு அமெரிக்கால ஹஸ்பண்டோட நல்லா இருக்கான்னு சொன்னது சந்தோஷம். உங்க மனைவிதான் பாவம்… இதெல்லாம் இருந்து அனுபவிக்கக் கொடுப்பினை இல்லாம சீக்கிரமே போயிட்டாங்க.” பானு தன் வீட்டில் அவனுக்கு காஃபி கொடுத்துக்கொண்டே சொன்னாள்.
“ராமு.. நீங்க எப்பவும் இங்க வரலாம். தனிமையா இருக்கோமோன்னு நினைக்கவே வேண்டாம். நாங்களும் உங்க நெருங்கிய உறவினர்கள் மாதிரி. பானுவுக்கும் உங்களோட பேசறது, சந்திக்கறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும். தயங்கவே தயங்காதீங்க” பானுவின் கணவர் அன்போட சொன்னார்.
தனக்குத் திருமணம் ஆகாதது, வாழ்க்கையில் நிரந்தரமான ஒரு வேலை கிடைக்காதது எல்லாமே ராமுவுக்கு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. தன்னை ரிஜெக்ட் செய்தவளுக்கு காலம் கொடுத்த தண்டனையை நினைத்து அவன் மனம் சந்தோஷத்தில் நிரம்பி வழிந்தது.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்...
பதிலளிநீக்குவாழ்க நலம்...
வாழ்க நலம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குஅந்த தமன்னாவின் படம் அழகோ அழகு...
பதிலளிநீக்குஆஹா.... ஓஹோ....
நீக்குஅந்த தமன்னா இப்போ இல்லையே.... அந்த அனுஷ்கா மாதிரி... என்ன செய்ய? ஹா ஹா
நீக்குகதைக்குத தானே கருத்துரை சொல்லோணும்?...
பதிலளிநீக்குஆமாம்... ஆமாம்... கதைக்கும் சொல்லலாம்!
நீக்குஅவ எங்கே ரிஜக்ட் செஞ்சா?..
பதிலளிநீக்குஉண்மையான ஆத்மா
இவளைக் கட்டிக்கிட்டு கஷ்டப்பட வேணாம்.. ந்னு ஒதுக்கி வெச்சிடுச்சு...
பாவம் அந்தப் பொண்ணு!...
ஆமாம் துரை செல்வராஜு சார்... யார் யாருக்கு எது பொருத்தமோ அப்படியே இயற்கை நடத்தி வைக்கிறது. அது அப்போ புரியாவிட்டாலும் பிற்பாடு நிச்சயமாகப் புரியும். குழந்தையை இழந்தபோதும் ஆறுதலான கணவனை அந்த இயற்கை அவளுக்குக் கொடுத்திருக்கிறது.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், போகி வாழ்த்துகள், போளி சாப்பிடவும் வாழ்த்துகள், நல்வரவு, பிரார்த்தனைகள். பொங்கல் இனிமையாகக் கழியப் பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... வணக்கம், நல்வரவு, நன்றி.
நீக்குபோளி பண்ணித்தர ஆட்கள் இல்லை. இதுல போளி சாப்பிட வாழ்த்துச் சொன்னால் ஆச்சா கீசா மேடம்?
நீக்குநான் முதல்லே நினைச்சது என்னன்னா, இந்த ராஜ் தூது போயிட்டுத் தான் காதலிப்பதாகச் சொல்லி ராமுவை ஏமாத்தறானோனு! ஆனால் ராஜ் ஏமாத்தலை போல! போகட்டும் ராமுவின் வக்கிர/கெட்ட குணத்துக்கு பானு மாட்டிக்காமத் தப்பிச்சா! பிழைச்சது அவள் வாழ்க்கை. அன்பான கணவன். குழந்தை அநியாயமாப் போயிருக்க வேண்டாம். நெல்லைத் தமிழர் அதைச் சாக அடிச்சுட்டார்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ராமுவுக்குத் தான் உண்மையில் நல்ல தண்டனை! வேலையும் சரியாகக் கிடைக்கலை. கல்யாணமும் செய்துக்க முடியலை. வாழ்க்கையை அனுபவிக்க முடியலை!
பதிலளிநீக்குநானும் ராஜ் ஒரு வில்லன் என்று நினைத்தேன். கதையில வில்லன் யாருமே இல்லை. ஒரு கதாநாயகி மூன்று துணை நடிகர்கள். அவ்வளவுதான். ஒரே ஒரு டவுட்டு வக்கிரம் என்பது சரியா அல்லது வக்ரம் சரியா? வக்ர துண்ட மகா காய .....
நீக்குவக்ர எனில் வளைவு என்பார்கள்..
நீக்குவக்ர புத்தி - நேர் படாத ..
அதற்கு மேல் புரியும் ..
ஆனால் டீபாய்ஸ்களுக்கு வக்கிர என்றால் தான் திருப்தி..
வக்ர துண்ட மஹா காயனை வணங்கி நின்றால் மனம் நேராகும்.. குணம் சீராகும்...
இந்த வக்ரதுண்ட என்பது வளைவான என்னும் அர்த்தம் கொடுக்கும். தமிழின் வக்கிரம் வேறே, இந்த வக்ர வேறே. அட! துரை சொல்லி இருக்காரே!
நீக்குவாங்க கீசா மேடம்.... எதுக்கு ராமுவுக்கு தண்டனை கிடைக்கணும்? அவன் செய்த தவறுதான் என்ன?
நீக்குபொதுவா இருக்கிற மனுஷங்க குணம்தானே அவனுக்கும் இருந்தது. ரொம்பச் சிலர்தான், பிறருடைய கஷ்டத்தைப் பார்த்து இரங்குவார்கள் என்பது என் எண்ணம்.
பெரிய பணக்காரனுக்கு ஏதேனுக் கெடுதல் நேர்ந்தால் அவனைத் தூற்றுவதுதானே அல்லது அதைக்கண்டு சந்தோஷப்படுவதுதானே பொதுவான மனித இயல்பு.
கெடுவான் கேடு நினைப்பான். இதான் ராமு செய்த தவறு. காதல் தப்பில்லை. கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டதும் தப்பில்லை. ஆனால் கிடைக்கலைனதும், "கிட்டாதாயின் வெட்டென மற!" என மறந்திருக்கணும். உண்மையிலேயே பானு தப்பித்தாள். இவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தால் பின்னால் என்ன என்ன சொல்லித் துன்புறுத்தி இருப்பானோ!
நீக்குசாப்பிடப் போறேன். சாப்பிட்டுட்டு முடிஞ்சா வருவேன்.
பதிலளிநீக்குகீசா மேடம்.. தமிழ்ல கமா, புள்ளி எல்லாம் வார்த்தையின் அர்த்தத்தை மாற்றும். உங்க வாக்கியத்தை, 'சாப்பிட்டு முடிஞ்சா' வருவேன் என்றும் எடுத்துக்கலாம். 'சாப்பிட்டு, பிறகு முடிந்தால் வருவேன்' என்றும் எடுத்துக்கலாம். எப்படி எடுத்துக்க?
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் போகி நன்னாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநாளை பிறக்க இருக்கும் தைப் பொங்கல் திரு நாள் எல்லோருக்கும் சுகம் சௌபாக்கியம்
நீண்ட ஆயுள் எல்லாம் கொடுக்க இறைவன் அருள வேண்டும்.
நெல்லைத்தமிழன் சட்டென்று எழுதி சட்டென்று முடித்து விட்டாரோ.
வக்கிரம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
திருமணம் செய்திருந்தால் மனம் இளகி இருக்கும்.
உங்க வாழ்த்துக்கு மிகவும் மகிழ்கிறேன். நீண்ட ஆயுள் யாருக்கும் வேண்டாம்னு நான் நினைக்கிறேன். ஆரோக்கியமா இருந்து சட்னு போகும் பாக்கியம் இருந்தாலே போதும்.
நீக்கு'திருமணம் செய்திருந்தால் மனம் இளகி இருக்கும்' - ரொம்ப நல்ல அவதானிப்பு என்பது என் எண்ணம்.
அந்தப் பெண்ணை பானுமதியோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு ஒப்பிட்டு! வேணாம், வேண்டாம் கல்யாணம் பண்ணிக்காததே நல்லது!
நீக்குமூனாவது படத்தப் பார்த்ததும்தான் புரிஞ்சது.. பானு ரொம்பத்தான் குண்டாயிருக்கா!
பதிலளிநீக்குநல்ல நாளும் அதுவுமா ஏன் சார் நீங்க ஸ்ரீராம்ட வம்பு வளர்க்கிறீங்க. அவரே ரொம்பவும் நொந்து போயிருப்பார். (என் பட செலக்ஷனைப் பார்த்து)
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம்.. உங்கள் வார்த்தை எல்லோருக்கும் பலிக்கட்டும்.
நீக்குநெல்லையார் இப்போதிருக்கும் இளம் திரைப்பட இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம். இப்போதெல்லாம் கனவான்கள் கதா நாயகர்கள் கிடையாது.
பதிலளிநீக்குஹா ஹா ஹா... துரை செல்வராஜு சார்..ரொம்பவுமே விக்கிரமன் டைப் கதைகளாக (அனேகமா எல்லோரும் நல்லவர்கள், சுப முடிவு) என்று எழுதினதால் சட்னு இந்த மாதிரி ஒரு கதையை நான் எழுதினேன்.
நீக்குஉடனே உங்க கற்பனையைத் தட்டிவிட்டு, தருமர், துரியோதனன் என்று மகாபாரதக் கதைக்குள் இறங்காதீர்கள்.
// “ராமு.. நீங்க எப்பவும் இங்க வரலாம். தனிமையா இருக்கோமோன்னு நினைக்கவே வேண்டாம். நாங்களும் உங்க நெருங்கிய உறவினர்கள் மாதிரி. பானுவுக்கும் உங்களோட பேசறது, சந்திக்கறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும். தயங்கவே தயங்காதீங்க” பானுவின் கணவர் அன்போட சொன்னார்.
பதிலளிநீக்குதனக்குத் திருமணம் ஆகாதது, வாழ்க்கையில் நிரந்தரமான ஒரு வேலை கிடைக்காதது எல்லாமே ராமுவுக்கு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. தன்னை ரிஜெக்ட் செய்தவளுக்கு காலம் கொடுத்த தண்டனையை நினைத்து அவன் மனம் சந்தோஷத்தில் நிரம்பி வழிந்தது.//
" அவர் சொல்வது போல, நீங்க எப்பவும் இங்கே வரலாம். வருவதற்கு முன்பு ஃபோன் பண்ணிட்டு வாங்க ராமு " என்றாள் பானு.
சந்தோஷமாக வீதியில் இறங்கி நடந்தான் ராமு.
" அப்பாடி! வக்ர புத்தி ராமு இனிமே இந்தப் பக்கம் தலைகாட்டமாட்டான். நிம்மதி. இன்னும் எதுக்கு இந்த நாடகம்? உங்க அம்மாவுடைய வீல் சேரிலிருந்து எழுந்திரிங்க தினேஷ். நம்ம பையன் வீட்டுக்கு வருவதற்குள் நம்ம தர்பார் படம் பார்த்துவிட்டு வந்துடலாம் " என்றாள் பானு.
தினேஷும் சிரித்துக்கொண்டே எழுந்து, " நான் ரெடி " என்றார்.
அடுத்த கதை உங்களோடதுதானா!
நீக்குஅதெல்லாம் இல்லீங்கோ! சும்மா இந்தக் கதைக்கு ஒரு எக்ஸ்டென்சன் எழுதிப் பார்த்தேன்!
நீக்குகௌதமன் சாரோட முடிவு நல்ல முடிவு.
நீக்குஇந்த முடிவு எப்படி வரமுடியும்? திருமணத்தின்போதே வீல் சேரில் இருக்கும் தினேஷைப் பார்த்துவிடுகிறானே ராமு. இவன் வரப்போறான் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும்?
நீக்குஇருந்தாலும் கேஜிஜி சார்... உலகத்தில், யாரிடமும், 'நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், நிறைய சம்பாதிக்கிறேன், என் மனைவி தங்கமான குணம் உடையவள்' என்றெல்லாம் பெருமை அடித்துக்கொண்டால், அவர்கள் மனதில் சந்தோஷம் வருவது மிகவும் அரிது. 'இந்தக் குள்ளனுக்கு இந்த வாழ்வா', 'பார்க்க கரிக்கட்டை போலிருக்கிறான்..இவனுக்கு வந்த வாழ்வைப் பாரேன்', 'சின்ன வயசுல சோத்துக்கே லாட்டரி அடித்த குடும்பம். இப்பப்பாரு பெருமையை' என்றெல்லாம் மனதில் நினைத்துக்கொள்வதுதானே இயல்பு.
//கௌதமன் சாரோட முடிவு நல்ல முடிவு.// - அது எப்படி கீசா மேடம்... கடைசி வரைல கணவனும் மனைவியும் அவங்க நல்லவங்க என்பதையே நமக்குக் காண்பிக்கிறாங்க. ராமு மோசவன் என்பதும் அவன் மனதில் நினைத்ததை வைத்து நாம் புரிந்துகொள்கிறோமே தவிர, அவர்களின் பார்வையில் அவன் இன்னமும் நல்லவந்தான். இல்லையா?
நீக்குகல்யாண வீட்டில் தினேஷின் அம்மா படுத்து ஓய்வு எடுக்கப் போயிருந்தார். அப்போது கல்யாண வீட்டில் பானு ராமுவைப் பார்க்கிறாள். உடனே கணவனிடம் சுருக்கமாக அவரை ஆக்ட் பண்ணச் சொல்லிவிட்டு ராமு அருகே வருகிறாள். Lights on, ready, start camera, action! அவ்வளவுதான் கதை.
நீக்குஅவ்வளவு தூரம் கூடப்போக வேண்டாம். யாரோ சக்கர நாற்காலி பயன்படுத்தறவங்க கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க. அவங்க உள்ளே படுத்திருக்கையில் நாற்காலி காலியாக இருக்கவே, சும்மானாச்சும் தினேஷ் அதில் உட்கார, ராமு தினேஷுக்குத் தான் பிரச்னை என மனதுக்குள் சந்தோஷப்பட, அந்த மகிழ்ச்சியை ராமுவின் முகமும், கண்களும் பிரதிபலிக்கப் புரிந்து கொண்ட பானு அதைத் தொடர்கிறாள். இப்போ தர்க்கரீதியாக (logical) சரியா இருக்கா நெல்லையாரே?
நீக்குஅப்போ பானு வீட்டில் சக்கர நாற்காலி வந்ததற்கு லாஜிக் சரியாக வரமாட்டேன்கிறது! அதனால்தான் பானு மாமியாருக்கு சக்கர நாற்காலி! பானுவின் குடும்பம் பற்றி ராமுவுக்குத் தெரியும்; ஆனால் பானு கணவன் குடும்பம் பற்றி ஒன்றும் தெரியாதல்லவா! லாஜிக் அதுதான்!
நீக்குஇந்தப் பின்னூட்டங்கள்லாம் படிச்ச பிறகு எனக்குத் தோன்றியது, நல்ல சுப முடிவு, நல்ல கேரக்டர்கள் இருந்தால்தான் கதை படிக்க சந்தோஷமாக இருக்கும், இல்லைனா, எப்படி இதில் சுப முடிவு கொண்டுவரலாம், எப்படி கெட்டவனைத் திருத்துவது என்று படிப்பவர்கள் மனது செல்லும் என்று தோன்றுகிறது.
நீக்குஅல்பத்தனமான சந்தோசம்...
பதிலளிநீக்குஉண்மை தி.த. சரியான புரிதல்.
நீக்குஆஆஆவ்வ்வ்வ்வ்வ் இன்று நெ தமிழனின் ஜொந்தக் கதையோ வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ் டமனாக்கா வருவதால் அப்பூடிக் கேட்டேன்ன்ன்:)
பதிலளிநீக்குகுண்டு அனுக்காவையும் கூட்டி வந்திருக்கிறாரே.... அதுவும் ஶ்ரீராம் வீட்டுக்கே:)... இப்போ ஶ்ரீராம் எப்பூடி எல்லோருக்கும் ரீ குடுப்பார்..... ஹா ஹா ஹா... நெ தமிழன் மரியாதையைக் காப்பாத்தோணுமெனில்.. நோ தாங்கியூ நான் ஏகாதசி விரதம் ரீ குடிக்க மாட்டேன் எனச் சொல்லிடுங்கோ இல்லை எனில் உப்புத்தான் ரீயில் இருக்கும்:)
ஆமாம் அதிரா... இந்த ஸ்ரீராம், பொறாமையினால், நான் வேறு ஒரு அழகியின் ரசிகன் என்பதால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நன்றாக இல்லாத தமன்னா படத்தையே போடுகிறார். எவ்வளவு நாள் நானும்தான் கண்டுகொள்ளாமல் இருப்பது. அதனால்தான் நானே செலெக்ட் செய்து படம் அனுப்பினேன் (ஆனா பாருங்க.. சமீபத்துல ஒரு படத்துல தமன்னாவைப் பார்த்து நொந்துபோயிட்டேன். பேய் மேக்கப்பா இல்லை அது மேக்கப் இல்லாத முகமா என்று ஒரே கன்ஃப்யூஷன்)
நீக்கு//இப்போ ஶ்ரீராம் எப்பூடி எல்லோருக்கும் ரீ குடுப்பார்.// - அவங்க பாஸை நம்பி என்ன வேணும்னாலும் சாப்பிடலாம். அவங்க அவ்ளோ நல்லவங்க(ன்னு எனக்கு மனதில் பட்டது. ஹா ஹா)
நீக்கு//நான் வேறு ஒரு அழகியின் ரசிகன் என்பதால்//
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..
நான் வருவேன் ஆனா எப்போதென சொல்ல முடியாதே....
பதிலளிநீக்குபிபிசில 'நானே வருவேன்' என்ற பாடல் ஓடுது.... அவ்வளவு காலம் காத்திருக்காமல் சீக்கிரம் வாங்க.
நீக்குஏன் தான் இப்படி சந்தோஷபடுகிறார் ராமு. எங்கிருந்தாலும் வாழ்க! என்று வாழ்த்தி விட்டு இருந்து இருக்கலாம்.
பதிலளிநீக்குதிருமணம் செய்யாமல் பானுவை நினைத்து கொண்டு இருந்தால் அவள் வாழ்க்கையை கண்டு வருத்தம் அல்லவா பட்டு இருக்க வேண்டும்.
இப்படியும் மனிதர் இருக்கிறார்கள் உலகத்தில் என்ன செய்வது.
நிச்சயம் இத்தகைய மனிதர்களை நீங்களும் கடந்துசென்றிருப்பீர்கள் கோமதி அரசு மேடம். ஆனா என் அனுபவத்துல வெகு சிலர்தான், 'எங்கிருந்தாலும் வாழட்டும்' என்று நினைக்கும் குணம் படைத்தவர்கள்.
நீக்குஓரிரு நாட்களுக்கு முன்பு ஒரு விசேஷத்தில் (துக்க) ஒரு உறவினரைச் சந்தித்தேன். அவரை நான் முதன் முதலாகப் பார்க்கிறேன், 65+ இருக்கலாம். காலையில் வந்தவன், மாலையில் பேருந்துமூலம் செல்கிறேன் என்று தெரிந்த உடன், என்னிடம், 'சாயந்திரத்துக்கு பயணத்துக்கு தோசை வார்த்துத் தரவா, இல்லை தயிர் சாதம் கொண்டுபோகிறீர்களா' என்றார். உண்மையில் அத்தகைய குணம், அக்கறை கண்டு அசந்துவிட்டேன். இத்தகைய அன்பை, அக்கறையைக் காட்டும் மனிதர்கள் வெகு அபூர்வம்தான்.
பொதுவாக இது சகஜமான ஒன்று. எல்லோரும் கேட்பார்கள்/கேட்போம். ஆனால் எங்களிடம் எல்லா உரிமைகளையும் எடுத்துக்கொண்டு எல்லாம் அவங்களே இஷ்டத்துக்குக் கட்டி எடுத்துக்கொண்டு போகும் உறவினர் ஒருத்தர் வீட்டில் நாங்க நான்கு நாட்கள் தங்க நேர்ந்தது வேறே வழியில்லாமல். அப்போ அவங்க எங்களை நடத்திய விதம்! திரும்புகையில் கையில் தண்ணீர் எடுத்துப் போங்கனு கூடச் சொல்லலை! அவங்களே பின்னர் வந்தப்போ அதே உரிமைகளைத் தானாகவே கைகளில் எடுத்துக் கொண்டார்.
நீக்குமனிதர்களில்தான் எத்தனை நிறம் கீசா மேடம்..... பலர் சுயநலவாதியாக இருப்பதைத்தான் நான் கண்டிருக்கிறேன்.
நீக்கு///முப்பது வருடங்களுக்கு முன்பு பார்த்ததைவிட ரொம்ப குண்டாகி இருந்தாள்.////
பதிலளிநீக்கு////“நீங்க அப்போ பார்த்த மாதிரியே இருக்கீங்க.////
ஹா ஹா ஹா அடுத்தவர்களைக் குண்டாக்கியும் தன்னை மெலிந்தவர்போலவும், கற்பனையில்கூட சொல்லும்போது ஒரு பயங்கர மகிழ்ச்சிதான் :)...
என்ன :))) அப்படியே உங்க மைண்ட் வாய்ஸ்தானே :)
நீக்குசின்ன வயதில் ஒருவரிடம் பழகினால், அந்த உருவமே மனதில் தங்கிவிடும். பிறகு அவரை ரொம்ப குண்டாகவோ இல்லை ரொம்பவும் ஒல்லியாகவோ பார்க்க நேர்ந்தால் மனம் அதனை இயல்பாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை அதிரா. இது எல்லோருக்கும் உள்ள இயல்பு என்று நினைக்கிறேன்.
நீக்கு///அவ சமைச்ச ருசியான சாப்பாடு, ///
பதிலளிநீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..
தான் உண்மையாக நேசித்தவள் பிற்காலத்தில் கஷ்டப்படுவது கண்டு சந்தோஷிப்பது ஏற்க இயலவில்லை.
பதிலளிநீக்குஆனாலும் இப்படி பேர்வழிகள்தான் தேவகோட்டை தவிர பிற இடங்களில் நிறைய வாழ்கிறார்கள் போலும்...
///தேவகோட்டை தவிர பிற இடங்களில் நிறைய வாழ்கிறார்கள் போலும்...////
நீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது ரொம்ப ஓவர் ஜொள்ளிட்டேன்ன்:).
கில்லர்ஜி... ஒருவேளை அதீதமாக நேசித்ததால், தன்னை அவள் மறுத்ததை மனது ஏற்க முடியாமல், தொண்டையில் கசப்பு தங்குவதுபோல அவன் மனதிலும் அதீத வெறுப்பு வந்திருக்குமோ?
நீக்குஆனா... கில்லர்ஜியின் ஊர் தேவகோட்டையே தவிர, அவர் வாழ்ந்தது, வாழ்வது எல்லாம் வெவ்வேறு இடங்களல்லவா?
அக்காவின் மகள்தானே, அப்போ ஏன் ரமேஷ் தானே கட்டியிருக்கலாமே இதுக்கு ராமுவைக் கட்டச் சொல்கிறார்.... இது எங்கயோ இடிக்குதே:)....
பதிலளிநீக்குஹா..ஹா... இந்தப் பகுதி என் அனுபவத்தில் நேர்ந்தது..... எல்லோரும் நல்லவற்றைத் தனக்கும் அல்லனவற்றைப் பிறருக்கும் கொடுக்க நினைப்பது இயல்புதானே..
நீக்குநாங்கள் பத்தாம் வகுப்பு படித்தபோது (ஹாஸ்டலில்), நடிகை ஸ்ரீதேவியின் உறவினன் (கஸினாக இருக்கலாம்) எங்களுடன் ஹாஸ்டலில் தங்கியிருந்து படித்தான். நாங்கள் நிறையப் பேர், 'அடடா..கொடுத்துவைத்தவன். ஸ்ரீதேவியை நெருக்கத்தில் பேசிப் பழகுவானே' என்றெல்லாம் நினைத்திருக்கிறோம். ஹா ஹா.
இப்போ சிக்பேட் கடை ஒன்றில் இருக்கும்போது சிறிது நேரம் கிடைத்தது. யார் கதை எனப் பார்த்தால் நான் எழுதினது. நான் 25ம் தேதி வாக்கில் வரும்னு நினைத்துக்கொண்டிருந்தேன்.
பதிலளிநீக்குவிரைவில் பதிலெழுதறேன்.
வேலையைக் கட் பண்ணிப்போட்டுக் கடைக்கு ஏன் போனீங்க கர்ர்:))
நீக்குஹாஹா :) சான்ஸ் கிடைச்சதும் நெல்லைத்தமிழன் குண்டனுக்கா போட்டோசை போட்டு மனத்திருப்தி பட்டிருக்கார் :))))))))))
பதிலளிநீக்குஐயையோ... அதுதான் வாட்சப்பில் ஸ்ரீராம் 'கடு கடு' முகத்தைக் காண்பிக்கிறாரே... தெரியாமல் போய்விட்டதே......
நீக்குஎன் மனைவி எப்போதும் முக அழகை வைத்துத்தான் ஒருவர் அழகா இல்லையா என்று சொல்வார். (ஆனா நான் உடல் அழகை வைத்துத்தான் சொல்வேன்.. ஆனால் அவள் சொல்வதுதான் சரி என்பதும் தெரியும். ஹா ஹா). முகத்தில் அனுஷ்கா எப்போதும் மிளிர்கிறாரே..
@நெ.த//
நீக்கு(ஆனா நான் உடல் அழகை வைத்துத்தான் சொல்வேன்.///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு பெண்ணின் முகத்தை உத்துப் பார்ப்பதே தப்பு:) இதில உடல் அழகைப் பார்ப்பாராமே கர்ர்ர்:)) தோஓஒ புறப்பட்டுவிட்டேன்.. இப்பவே போகிறேன் சைபர் கிரைமுக்கு:)) பூஸோ கொக்கோ:))
இன்னிக்கு நெல்லைத்தமிழன் கதை எழுத்து கொஞ்சம் மாறுபட்டிருக்கே :) ஆனா ராமு அற்பதனமா சந்தோஷப்படறதை மனசு ஏற்கல்ல .அதுவும் ஒருவரை வீல் சேரில் பார்த்து இப்படி நினைப்பது கஷ்டமா இருக்கு .சரி ஆனாலும் வாசகர்களை இப்படி யோசிக்கவைப்பதுமொரு டெக்னீக் . இப்படிப்பட்ட ராம் போன்றோர் இருக்கத்தானே செய்றாங்க ..
பதிலளிநீக்குவக்கிரம் எல்லாஇடத்திலும் இருக்கு இது உண்மை .
எப்பவும் நல்ல முடிவுகளையே படிப்பதால் 'சப்பென்று' இருக்காதா? அதற்காக வித்தியாசமான கதை என நினைத்து நான் எழுதினேன்.
நீக்குசந்தடி சாக்கில் ஒல்லி தமன்னா, குண்டு அனுஷ்கா படம் இரண்டும் வந்திருக்கே! :) இந்த இடுகைல ஃபோட்டோ செலக்ட் பண்ணி சேர்க்கத் தந்தது நெல்லைத் தமிழனா இல்லை ஸ்ரீராமா? என்று கேள்வி வந்தது! நிச்சயம் அனுஷ்காவை இப்படி குண்டா சேர்க்க ஸ்ரீராம் நினைத்திருக்க மாட்டார்! ஹாஹா...
பதிலளிநீக்குகதை - இவ்வளவு வக்ரமா ஒருத்தருக்கு! சே...
வாங்க வெங்கட்... வரும்போதே திரியோட தான் வந்திருக்கீங்க போலிருக்கு. //நிச்சயம் அனுஷ்காவை இப்படி குண்டா சேர்க்க// - அப்படியே, 'அதுபோல தமன்னாவின் இவ்வளவு அழகான போட்டோவை வெளியிடவும் நினைத்திருக்க மாட்டார்' என்றும் சொல்லியிருக்கலாமே...
நீக்குஎல்லோரும் நல்லவராக இருக்க வாய்ப்பு இருக்கா? சொல்லுங்க..
//திரியுடன்...// :(
நீக்கு@ நெல்லை : உங்களின் அவதானிப்பு சரியே. பொதுவாக, இதுதான் நிகழ்கிறது. கண்ணுக்கு முன்னால் ஒரு காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர்கள், அல்லது மிகச்சாதாரணமாக வாழ்ந்தவர்கள், திடீரென செல்வம், வசதி என்றெல்லாம் பெற்று காரும், பங்களாவுமாக ஆகிவிட்டால், பார்க்கும் மற்றவர்கள் - அந்த நபரை ஏற்கனவே தெரிந்தவர்கள், உடனே சந்தோஷம் அடைவதில்லை. புல்லரித்துப்போவதில்லை. ’ கஷ்டப்பட்டவன்; அவன் நல்லா இருக்கணும்’ என வெளியே ’நல்லபிள்ளைபோல’ வாழ்த்தினாலும், பொதுவாக உள்மனதில் பொறாமைதான் ரகசியமாகத் தலைகாட்டும். அவ்வப்போது அது வாய்வழியாகவும் வெளிவரும். ‘இந்தக் காலத்துல யோக்யதை இல்லாதவனுக்குதான் மகாலக்ஷ்மியின் கருணை கிடைக்குது.. நமக்கெல்லாம் எங்க கொடுத்துவச்சிருக்கு? ஏதோ கிடைக்கிற சோத்தத் தின்னுட்டுப் போய்ச்சேரவேண்டியதுதான்’ என ஒப்பிட்டு முணுமுணுக்கவும் வைக்கும். பொறாமைத் தீ கொஞ்சம் கொஞ்சமாக அத்தகையோரை எரித்துவரும்..
பதிலளிநீக்குஆமாம் ஏகாந்தன் சார்... பொறாமை நம்மை அரிக்குமே தவிர வேறு யாரையும் அது பாதிப்பதில்லை.
நீக்குநல்ல கதை.வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி விமலன்
நீக்கு//தன்னை ரிஜெக்ட் செய்தவளுக்கு காலம் கொடுத்த தண்டனையை நினைத்து அவன் மனம் சந்தோஷத்தில் நிரம்பி வழிந்தது.//
பதிலளிநீக்குஎவ்வளவு குரூரம்!...
'எது நடந்ததோ ,அது நன்றாகவே நடந்தது .
எது நடக்கிறதோ ,அது நன்றாகவே நடக்கிறது .
எது நடக்க இருக்கிறதோ ,
அதுவும் நன்றாகவே நடக்கும் .
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு
எதை நீ படைத்திருந்தாய்?அது வீணாவதற்கு ,
எதை நீ எடுத்துக்கொண்டாயோ ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது .
எதை கொடுத்தாயோ
அது இங்கேயே கொடுக்கப்பட்டது .
எது இன்று உன்னுடையதோ
அது நாளை அடுத்தவருடையதுஆகிவிடும் ,
மறு நாள் அது வேறொருவருடயதாகின்றது.
இந்த மாற்றம் உலக இந்த மாற்றம் உலக நியதியாகும்.
எப்போ மனதில் மெச்சூரிட்டி வருதோ அப்போ அனைத்தையும் நல்ல கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை வரும். எப்போ அந்த மெச்சூரிட்டி இல்லையோ அப்போ அல்பத்தனம் தலைதூக்கும் என்ற எண்ணத்தில் நான் எழுதினது இந்தக் கதை ஜீவி சார்.
நீக்குஆட்டம் முடியும் நாளில் நமக்கு நிச்சயமாகத்தெரியும், ஆட்டுவிப்பவர் யாரோ.. நாமெல்லாம் பொம்மைகள்தாம் என்று
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வக்கர புத்தி வாய்த்த ராமுவுடன் தன் வாழ்க்கை அமையவில்லை என மனதளவில் அறிந்தால் கூட கணவருக்கு நடந்த விபத்தும், குழந்தை இல்லாத போன சந்தர்பங்களும் பெரும் வரமாகவே தெரிந்திருக்கும் கதாநாயகி பானுவுக்கு. ஆனால் அதை அறிந்து கொள்ளும் முன் ராமு வக்கிர புத்தியுடன் திருப்திப்பட்டு ஒதுங்குவது போல் கதை முடிந்து விட்டது. இப்படியும் நிறைய பேரின் முகத்திரைகள் கிழிபடாமலே நல்லவர்களாக சமுதாயத்தில் உலா வருகின்றனர் என்பதை சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்கள் அழகாய் சுட்டிக் காட்டியுள்ளார். அருமையான கருத்தை கொண்ட இக்கதையை வடிவமைத்தமைக்கு அவருக்கு பாராட்டுகள்.
கருத்துரைகளில் சகோதரர் கௌதமன் அவர்கள் மாறுபட்ட கோணத்தில் கதையை சிந்தித்து எழுதியிருப்பதும் நன்றாக உள்ளது. அவருக்கும் பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவாங்க கமலா ஹரிஹரன் மேடம்... நான் ரொம்ப நாள் கழித்து பதில் எழுதுகிறேன். சமுதாயத்தில் இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.
நீக்குநம்மிடம் ஒரு தவறான எண்ணம் இருக்கு. எழுதும் கதையை ஆசிரியரே அவரது எண்ணத்தை எழுதுகிறார் என்று. அதாவது நல்ல முடிவு, நல்ல மனிதர்கள் என்று எழுதினால், கதாசிரியர் மிக நல்லவர் என்றும், கதையின் எண்ணவோட்டம் நல்லா இல்லைனா, கதாசிரியருடைய குணம் போலிருக்கு என்றும் எண்ணுகிறார்கள்.
அதனால்தான் கருணாநிதியை தீயசக்தி என்றும், எம்ஜிஆர் மா மனிதர் என்றும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்பினார்கள். அதுபோலவே கதாநாயகர்களைப் போற்றும் எண்ணப்போக்கும் உள்ளது.
கருணாநிதியைத் ’தீயசக்தி’ என சிலர் சொன்னதற்கு அவர் படைத்த கதைகள் அல்ல காரணம்!
நீக்குஇப்போதான் கடசி ரெண்டு பராவும் படிச்சு முடித்தேன்.... அப்போ ராமுவுக்குக் கல்யாணம்கூட ஆகவில்லையோ.. லவ் தோல்வியும் இல்லையே.. ஒரு தலைக் காதல் போலத்தானே அது இருந்தது... .. ஆனாலும் தன்னை விரும்பாதவர் இன்னொருவரொடு நல்லா இருக்கிறாவே எனப் பார்த்துப் பொறாமைப்பட்டால்கூடப் பறவாயில்லை, இது நடக்க முடியாமல் இருக்கிறாரே எனப் பார்த்துச் சந்தோசப்படுவதை , என்னதான் சொன்னாலும் மனம் ஏற்கவில்லை.... ஆனா இப்படியும் சிலர் இருக்கிறார்கள் இல்லை எனச் சொல்ல முடியாது..
பதிலளிநீக்குஇப்போது நினைக்கத்தோணுது...
“இப்படி மனம் படைத்த ராமுவை விரும்பிக் கல்யாணம் கட்டாமல், இன்னொருவரைக் கட்டி, அவரை வீல் செயார் எனினும் நன்றாக வைத்துப் பார்த்து மகிழ்வது எவ்வளவோ மேல், பானு வாழ்க:)”.
கெடுவான் கேடு நினைப்பான்
பதிலளிநீக்கு