1) வென்றவர்களுக்கு பாராட்டுகள். கிரிக்கெட்டைத் தவிர மற்ற விளையாட்டுகளையும் ஊக்குவிக்கலாம் என்று களமிறங்கிய ஊர் மக்களுக்கு ஸ்பெஷல் பாராட்டு...
2) நான் நினைத்த மாதிரியே, மாற்றுத் திறனாளிகள் பலரின் திறமையை வெளிக் கொண்டு வந்துள்ளோம். எங்களிடம் இருக்கும் பணியாளர்களில் பலர், 50 சதவீதத்திற்கும் குறைவான பார்வைத் திறன் கொண்டவர்கள். பொறுமையாகத் தான் வேலை பார்ப்பர்; ஆனால், ரொம்ப கச்சிதமாக செய்து முடிக்கும் திறன் படைத்தவர்கள்.
இத்தகைய முயற்சிக்காக, தமிழகம் முழுக்க பயணம் செய்தேன். நெல்லை மாவட்டத்தில் செயல்படும், லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனங்கள் சில, இந்த மாற்றுத் திறனாளிகளை அடையாளம் காட்டின..... சென்னை, மயிலாப்பூரில், 'ஏகாகிரதா' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வரும் கவிதா நரசிம்மன்.
3) மருத்துவ சிகிச்சை கொடுக்க முடியாத நிலையில் 23 வயதில் கணவனை இழந்த சுபாஷிணி மிஸ்திரி இன்று இலவச மருத்துவம் கொடுக்கும் மருத்துவமனை ஒன்றை நிறுவியுள்ளார்...
4) பனிப்பொழிவு காரணமாக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த ராணுவ வீரர்கள் 100 பேர் மற்றும் பொது மக்கள் 30 பேர் உதவியுடன் ஸ்ட்ரெச்சர் மூலம் தூக்கி கொண்டு, பனிக்கட்டிகளுக்கு மத்தியில் வேகமாக நடந்து சென்றனர். சுமார் 4 மணி நேரம் நடந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.....
==========================================================================================
பரங்கிமலையின் ஐடா ஸ்கடர்கள்
ரமா ஸ்ரீனிவாசன்
பரங்கிமலையையும் பல்லாவரத்தையும் தன்னுள் கொண்டு இயங்கி வரும் கன்டோன்மென்ட் போர்ட் 1774 நிறுவப்பட்டது. இது இந்தியாவிலேயே இரண்டாவது பழமை வாய்ந்த கன்டோன்மென்டாகும். இந்த கன்டோன்மென்டானது பத்து படுக்கை உள்ள இரு மருத்துவமனைகளை பல்லாவரத்தில் பரங்கிமலையிலும் நடத்தி வருகிறது. பரங்கிமலை மருத்துவமனை 1964ல் அன்றைய முதல் அமைச்சர் திரு. காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரு மருத்துவமனைகளும் முறையே ஆங்கிலேய மருத்துவம், சித்த மருத்துவம், பிசியோதெரபி, பல் பாதுகாப்பு, சோனாலஜி மற்றும் கிரேட் 1 மருத்துவ பரிசோதகம் ஆகியவற்றை மிகக் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு அளித்து வருகின்றன.
இந்த இரு மருத்துவமனைகளின் மேலாண்மைப் பணிகளும் எவ்வளவு சிறப்பு என்றால் அவைகளின் ஒரே குறிக்கோள் அந்த கன்டோன்மென்ட் மக்களுக்கு நாள்பட நேர்த்தியான மருத்துவ உதவிகளும் தீர்வுகளும் அளிப்பதேயாகும். பல மத்திய மற்றும் மாநில மருத்துவ வசதி திட்டங்களையும் தன்னுள் வரித்துக்கொண்டு மக்களுக்கு நேர்த்தியான மருத்துவத்தை தாராளமாக வழங்கி வருகின்றன.
மொத்தமாக 1,37,860 நோயாளிகள் இவர்களுடைய மருத்துவ உதவியினால் ஜனவரி 2018 முதல் நவம்பர் 2018 வரை பயனடைந்துளார்கள். இதை தவிர, மாதம் ஒரு முறை நகரும் மருத்துவ முகாம்களை, பெயர் பெற்ற மருத்துவமனைகளுடன் கூடி நடத்தி இலவச அதி நுட்ப சிகிச்சை அளிக்கின்றனர்.
இப்போது, இந்த பரங்கிமலை மருத்துவமனையானது எவ்வாறு மக்களின் நலனுக்காக சுத்தத்துடனும் சுகாதாரத்துடனும் செயல் படுகிறது என்பதைப் பார்ப்போம். என்னுடைய ஒரு நெடுநாள் விருப்பம் அந்த பரங்கிமலை மேல் உள்ள பரங்கிமலை மாதா கோவிலைக் காண வேண்டும் என்பது. அந்த நெடு நாள் ஆசையைப் பூர்த்தி செய்து வைத்த என் நண்பி டாக்டர் தேவி என்னும் பரங்கிமலை மருத்துவமனையின் முதன்மை மெடிக்கல் ஆபீசர் என்னை இந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
இதை நான் ஒரு நேர்காணல் என்பதை விட ஒரு படிப்பினை என்றே நினைக்கின்றேன். எப்போதுமே, மருத்துவமனை என்றவுடன் நம் நினைவிற்கு வருவது என்னவென்றால், மிகச் சுமாரான சுத்தமுடைய அறைகள், எங்கு பார்த்தாலும் நோயாளிகள் மற்றும் மிகச் சுமாரான கன்சல்டேஷன் அறைகள். ஆனால், இங்கு எல்லாமே வேறுபட்டு இருந்தது. பச்சைப் பசுமையுடன் பரந்து இருந்த புல்வெளி மருத்துவமனைக்கு முன் நின்று “வா வா” என வரவேற்றது. அங்கு வளர்ந்து குலுங்கிய பூச்செடிகளும் பச்சை மரங்களும் எனக்கு நம் அரசின் “பசுமைத் தாயகம்” என்னும் வரிகளை நினைவூட்டின.
கண்களுக்கு விருந்தை முடித்துக் கொண்டு உள்ளே நழைந்தால், நம் பெயர் பதிவிற்கு முன் நமக்கு கிடைக்கும் பரிவும் மரியாதையும் நம்மை திக்குமுக்காட செய்யும். அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் மிகவும் பொறுமையுடனும் அமைதியுடனும் நம் கேள்விகளுக்கு பதில் கூறி நம்மை வழி நடத்துகின்றார்கள்.
முழு மருத்துவமனையும் தன் சுத்தத்தாலும் சுகாதாரத்தன்மையாலும் நம்மை பிரமிக்க வைக்கின்றது. அழுக்கில்லாத படுக்கைகள், பழுதில்லாத மருத்துவ உபகரணங்கள் மற்றும் நம்பிக்கையுடன் மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள் என்று எல்லாமே சரியாக நடைபெறுகின்றது. கன்சல்டேஷன் அறைகள் சிறியதாக இருந்தாலும் அங்குள்ள டாக்டர்களின் இதயங்கள் விரிந்து பரந்து விசாலமாக இருக்கின்றன.
ஒரு நோயாளி கூட அதிருப்தியுடனோ கோபமாகவோ வெளியேறவில்லை. அன்று மட்டும் அங்கு இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 30ல் இருந்து 40 இருக்கும். என் நண்பி டாக்டர் தேவி அவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து மருத்துவம் செய்த பின்னரே என்னிடம் பேச முற்பட்டார். நான் இந்த மருத்துவமனையின் செயல்பாட்டில் ஒரு பேர் பெற்ற “அப்போலோ மருத்துவமனையைய்” கண்டேன் என்று கூறினால் அது மிகையாகாது. அது மட்டுமல்லாமல், இங்கு ஆங்கிலேய மருத்துவம், சித்த மருத்துவம், பிசியோதெரபி, பல் பாதுகாப்பு, சொனாலஜி மற்றும் கிரேட் 1 மருத்துவ பரிசோதகம் ஆகியவை மிகவும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகின்றது.
“ரக்க்ஷா மந்திரி விருது” என்பது ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட கன்டோன்மென்ட் மருத்துவமனையின் இணையற்ற செயல்பாடுகளுக்காக வழங்கப்படும் ஒரு விருது.
2018ல் மொத்த 62 அனைத்திந்திய கன்டோன்மென்ட் மருத்துவமனைககளுடனும் போட்டி போட்டு இந்த பரங்கிமலை பல்லாவரம் கன்டோன்மென்ட் மருத்துவமனை மிகச் சிறந்த ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டு “ரக்க்ஷா மந்திரி விருதை 2018” ல் பெருமையுடன் சொந்தமாக்கி கொண்டுள்ளார்கள். அந்த விருதை திரு ஏச். ஈ. ஹர்ஷா, IDES, C.E.O., மற்றும் டாக்டர் தேவி, முதுநிலை மருத்துவ ஆபீசர் அவர்களும் புது டில்லியில் நம் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களிடமிருந்து 24.12.2018 அன்று பெருமிதத்துடன் பெற்றார்கள். மீளா சேவை நோக்கு மற்றும் அயராது உழைக்கும் தன்மை கொண்ட இந்த மருத்துவர்களுக்கும் அவர்களது ஊழியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
“மக்களின் சேவை மகேசன் சேவை”
என்பது பழமொழி. இதை நடைமுறையில் காட்டும் பரங்கிமலை பல்லாவரம் கன்டோன்மென்ட் மருத்துவமனை டாக்டர் மற்றும் ஊழியர்களின் சேவை மேலும் மேலும் தொடர நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்...
பதிலளிநீக்குவாழ்க நலம்...
வாழ்க நலம்.
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குபரங்கி மலை பல்லாவரம் கண்டோன்மெண்ட் மருத்துவ மனை மேலும் சிறப்புற்று விளங்கட்டும்...
பதிலளிநீக்குடும்!
நீக்குஉற்சாகம் அளிக்கும் ஊர் நலச் செய்திகள்...
பதிலளிநீக்குநல்லவர் வாழ்க.. நலங்கொண்டு வாழ்க...
வாழ்க...
நீக்குஅனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இரண்டாவது செய்தியைத் தவிர்த்து மற்றவை அறிந்தவையே! ரமா ஸ்ரீநிவாசன் மூலம் பறங்கிமலைப் பாசறை (cantontment) மருத்துவமனை பற்றி அறிந்து கொண்டேன். ஆங்காங்கே உள்ள எழுத்துப் பிழைகளையும் "ழ" "ள" "ர" "ற" போன்றவை போட வேண்டிய இடங்களில் சரியாகப் போட்டால் இன்னமும் மிளிரும். அவர் தமிழ் தனக்கு வராது என்று சொன்னதில் முழு உண்மை இருப்பதும் தெரிய வருகிறது. அல்லது ஸ்ரீராம் முடிந்தால் மீண்டும் தொகுத்து அளிக்கலாம். இது ஒரு ஆலோசனை!
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள்.. வழக்கமாக திருத்தியே வெளியிடுவேன். இந்தமுறை வேலைப்பளுவில் மிஸ் ஆகிவிட்டது. இப்போது (முடிந்தவரை) சரிசெய்து விட்டேன்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கங்கள். கீதா அவர்களே, நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நான் கான்வென்டில் படித்ததால், 9ஆம் வகுப்புவறைதான் தமிழ் கற்றேன். மற்றவை யாவும் நானாய் வளர்த்துக் கொண்டது. எனவேதான் தடுமாற்றம். பொருத்துக் கொள்ளுங்கள்.
நீக்குநிர்மலா சீதாராமன் 2018 இல் பாதுகாப்பு மந்திரியாக இருந்த நினைவு. இப்போத் தான் 2019 தேர்தலுக்குப் பின்னர் நிதி மந்திரி ஆகி உள்ளார்.
பதிலளிநீக்குஓ....
நீக்குநிர்மலா சீதாராமன் மத்திய மந்திரிசபையில் முதலில் ராணுவ மந்திரியாகத்தான் நியமிக்கப்பட்டார். அபிநந்தன் கதை நடந்தபோது அவர்தான் அந்தத் துறை மந்திரி. இரண்டு வருடங்களுக்குள் நிறைய செய்திருக்கிறார் பாதுகாப்புத் துறைக்கு, பாதுகாப்பு சார்ந்த தொழில் வளர்ச்சிக்கு. அதெல்லாம் நமது மீடியாக்களுக்கும் சராசரிகளுக்கும் சம்பந்தமில்லாதவை. இங்கே வேண்டாம்.
நீக்குநல்ல மருத்துவமனை ஒன்றுபற்றி விபரம் தரும் கட்டுரை. பரங்கிமலை கண்ட்டோன்மெண்ட் மருத்துவமனை இப்படி சேவைசாதித்திருக்கிறது. சாதித்துக்கொண்டிருக்கிறது. தமிழ்ப் பத்திரிகைகள், மீடியாவில் ஒரு சின்ன குறிப்பாவது இதுபற்றி, அவர்கள் தேசிய விருதுபெற்ற வருடமான 2018-லாவது நிகழ்ந்ததா? சரி விடுங்கள் !
அன்பிற்குறிய ஏகந்தன் அவர்களே,
நீக்குநான் ஆங்கிலத்தில் "இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழில் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளேன். விருது வாங்கிய அடுத்த வாரமே, ஒரு அரை பக்க பதிவு வெளியிட்டேன். கன்டோன்மென்ட் மருத்துவர்களும் ஊழியர்களும் என்னை தொடர்பு கொண்டு நன்றி கூறினார்கள். ரமா ஸ்ரீனிவாசன்.
என்னுடைய விமர்சனம், விமர்சனம்கூட இல்லை - ஒரு சின்ன அங்கலாய்ப்பு - நம் தமிழில் கோலோய்ச்சும் பத்திரிக்கைகள், நாளிதழ்கள், எலெக்ட்ரானிக் மீடியாபற்றியது. இத்தகைய நிகழ்வுகள்பற்றி இந்தியன் எக்ஸ்ப்ரெஸோ, தி ஹிந்துவோ ஏதாவது எழுதியிருக்க வாய்ப்புண்டு என்பது தெரிந்ததுதான். அரைப்பக்க கட்டுரை இதுபற்றி நீங்களே எக்ஸ்ப்ரெஸில் எழுதினீர்கள் என்பது நல்ல விஷயம். உங்கள் கட்டுரைகள் அந்தப் பத்திரிக்கையில் தொடர்ந்து வருகின்றனவா?
நீக்குThere was a time, an interesting period of time in this country's modern history, when we (myself and few select friends in Delhi) used to be obsessed with Indian Express in the morning - morning after morning. That was Ramnath Goenka's , Arun Shourie-edited Express. When Shourie happened to write an editorial article titled 'Papier Mache' Durga !'- on Mrs. Indira Gandhi. You may or, may not have heard about those times, when fiery, yet very well-balanced articles used to decorate this paper, which used to be often quoted in the international media.
I am writing from a feeling of nostalgia of the times..of the Paper. Nothing else!
பத்திரிகைகளில் எழுதியவருக்கு நெளிவு சுளிவுகள் பிரசுரிப்பதுபற்றி தெரிந்திருக்குமல்லவா நல்ல செய்திகள் நாட்பட்டதானாலும் பத்திரிக்கைகளில் எழுதலாமேமேலும் சுட்டியுடன்வலைப்பதிவிலும் பகிரலாமே
நீக்குமருத்துவமனை குறித்த தகவல்கள் அருமை பாராட்டுவோம்.
பதிலளிநீக்குவோம்.....! நன்றி ஜி.
நீக்குஅனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவியக்க வைக்கும் மருத்துவமனை... சிறப்பு...
நன்றி DD.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குசிலப்பு போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களை ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தது மகிழ்ச்சி. அந்த பாராட்டு மாணவர்களை மேலும் போட்டிகளில் கலந்து கொள்ள ஊற்சாகம் தரும்.
பதிலளிநீக்கு//எங்களிடம் வேலை பார்க்கும் பணியாளர்களில், குறைந்தது, 30 பேராவது சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்!//
கவிதா நரசிம்மனின் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்.
சுபாஷ்ணி மிஸ்திரி அவர்களுக்கு வணக்கங்கள், பாராட்டுக்கள். தனக்கு ஏற்பட்ட அவல நிலை பிறருக்கு ஏற்பட கூடாது என்று இலவச மருத்துவமனை ஏற்படுத்தியவர் நல்ல உள்ளம் வாழ்க!
ஊயிர் காத்த ராணூவ வீரர்களுக்கும், பொது மக்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.
// “மக்களின் சேவை மகேசன் சேவை”
பதிலளிநீக்குஎன்பது பழமொழி. இதை நடைமுறையில் காட்டும் பரங்கிமலை பல்லாவரம் கன்டோன்மென்ட் மருத்துவமனை டாக்டர் மற்றும் ஊழியர்களின் சேவை மேலும் மேலும் தொடர நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.//
உங்களுடன் நாங்களும்.
நல்ல ஆஸ்பத்திரி பற்றிய கட்டுரை அருமை.
பயன் உள்ள பதிவு.
அன்பு கோமதி அரசு அவர்களே,
நீக்கு// உங்களுடன் நாங்களும்.நல்ல ஆஸ்பத்திரி பற்றிய கட்டுரை அருமை.
பயன் உள்ள பதிவு.//நான் எழுதியதன் பயன் பெற்றேன். நன்றி.ரமா ஸ்ரீனிவாசன்
போற்றத்தக்கவர்களின் அரிய சேவையை பகிர்ந்த விதம் அருமை. பனிப்பொழிவில் நம் வீரர்களின் சேவை மனதில் நின்றது.
பதிலளிநீக்கு// பரங்கிமலை மருத்துவமனை 1964ல் அன்றைய முதல் அமைச்சர் திரு. காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.// From 3/10/1963 to Feb 1967, Mr M Bakthavatsalam was the chief minister of Madras state.
பதிலளிநீக்குகாலை வணக்கம். கௌதமன் ஜி சொல்வது
நீக்குவரலாற்றுப் பதிவு. நாங்கள் எல்லோரும் அரசியல் பற்றித் தெரிந்து கொண்ட kaalam.
பக்தவத்சலம் ஐயா,திமுக போராட்ட காலம்.
ரமா ஸ்ரீனிவாசன் கட்டுரைக்கு வாழ்த்துகள்.இன்னும் வளரட்டும் தமிழக மருத்துவம்.
இந்த சனிக்கிழமையின் எல்லா செய்திகளும்
பதிலளிநீக்குநமை நன்மைப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்
நன்றாக உற்சாகம் காட்டுவார்கள். ஊர்மக்களுக்கும் நன்றி. தமிழ் நாட்டுக் கலை தில்லி வரை சென்று வந்ததே மிகப் பெரிய மகிழ்ச்சி.
இந்த இளைஞர்கள் நலம் பெற வேண்டும்.
நான்கு மணி நேரம் பாடுபட்டுச் சுமந்து வெற்றி கண்ட இராணுவ வீரர்களுக்கும்,
பொது மக்களுக்கும் மனம் நிறை வாழ்த்துகள் எத்தகைய
கவனம் தேவைப்பட்டிருக்கும்!
பாராட்டுகள்.
கவிதா நரசிம்மனைப் பற்றிப் படித்திருக்கிறேன்.
வளம் பெறட்டும்.
சுபாஷிணி மிஸ்த்ரி ஒரு வரலாறு நிகழ்த்திய பெண்மணி.
இந்தப் பெண்மணி போல ரத்தினங்களே நம் தேவை.
துயரத்தில் மூழ்காமல் சாதித்து விட்டார்.
மகத்தான சேவை. மிக மிக நன்றி மா இது போல
அறிமுகங்கள் நமக்குத் தேவை.
ரமா அவர்களின் கணவர் திரு ஸ்ரீனிவாசன் நல்ல
பதிலளிநீக்குதகவல் களஞ்சியம். நல்ல பேச்சாளர், எழுத்தாளர்.
எக்ஸைஸ் துறையில் அவருக்குத் தெரியாத விஷயங்களே
கிடையாது.
அவர் எழுதிய பதிவுகளை நானும் மகளும் கண்டு வியந்திருக்கிறோம்,
திருமதி ரமா அவர்கள் ,கணவனையும் எங்கள் ப்ளாகில் எழுத வைத்தால் நமக்கு மேலும் அதிக விவரங்கள் பெறுவோம்.
வரவேற்போம்.
நீக்குஅனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குசிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் காணாது போய்விடுமோ எனும் கவலையைப் போக்குவதாக உள்ளது முதல் செய்தி. மற்றும் பாராட்டுக்குரிய செய்திகளைப் பற்றிய தொகுப்புக்கு நன்றி.
பதிலளிநீக்குஅனைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநல்லுள்ளம் படைத்த அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குமருத்துவமனை - இப்படியும் ஒரு மருத்துவமனையும் அதன் மருத்துவர்கள்/பணியாளர்களும் - மகிழ்ச்சி தந்த விஷயம்.
நல்ல விஷயங்களைத் தொடர்ந்து தந்து வரும் உங்களுக்கும் பாராட்டுகள்.