ஒரு சீனியர் பெண் அலுவலர் இருந்தார். சற்று காலை தாங்கித் தாங்கி நடப்பார். மிஸஸ் பாண்டியன் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் பாண்டியன் என்றே அழைப்பார்கள் அவரை! அவர்தான் என்னை பலிகடாவாக தேர்ந்தெடுத்தார். என்னை அவர் "சிர்றாம்" என்றுதான் அழைப்பார்.
அவர்களுக்குள் விவாதித்து, விவாதித்து, 'நம்ம சிர்றாம்தான் எல்லாம் சரியாக் கேட்பாரு... போல்டா கேட்பாரு... வாங்க அவர்கிட்ட போவோம்...' என்று இரண்டு மூன்று பேருடன் நான் இருக்குமிடம் வந்தார்கள்.
என்னைத்தேடி, நான் இருக்குமிடம் தேடி சீனியர்கள் வந்ததில் உள்ளுக்குள் குளிர்ந்து போனதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லையே நான்! நாமெல்லாம் யாரு, அடக்கத்தின் சிகரமாச்சே!
"சிர்றாம்...உங்களுக்குதான் நிறைய போன் வரும்" என்று அவர் தொடங்கியதுமே சிலிர்த்து எழுந்து விட்டேன் நான். "அதெப்படி... எல்லோருக்கும்தான் வருது..."
பாண்டியன் தப்பாகத்தொடங்கி விட்டதை உணர்ந்த திருச்சி ஸார்... (அதாங்க திருச்சிற்றம்பலம்) சுதாரித்தார்.
"அவரு கேப்பாரு... நம்மள்லயாராவது ஒருத்தர் கேக்கோணும்...மிச்ச பேர் அவர் பின்னால நிக்கோணும்... நாமளும் கூட சேர்ந்துக்கிடலாம்... ஏன்னா, சீராம்னா மேடத்துக்கு கோவம் வராதுல்லா..."
ஆம், என் மேல் நல்ல அபிப்ராயம் இருந்ததுதான் அவருக்கு.
நல்ல நேரம் எல்லாம் பார்க்காமல் உடனே செயலில் இறங்கினோம். அதிகாரி அறைக்குள்ளே உள்ளே நுழைந்து முகமன் கூறி ஆரம்பிக்கும்போது சிரித்த முகமாய் முகமன் கூறியவர், கேட்கக் கேட்க கடுப்பானார். அப்போதுதான் திரும்பிப் பார்க்கிறேன். என் பின்னால் ஒருவரையும்காணோம்! பாண்டியன் மட்டும் அறைக்கு வெளியேயிருந்து தலை நீட்டினார்.
வெளியிலிருந்து நமக்கு வரும் அழைப்பினால் எப்படி கட்டணம் அதிகமாகும் என்கிற என் கேள்வியை மதிக்கவே இல்லை அவர். முழுதாய் கேட்கவும் விடவில்லை. சிரிக்காமல் கொஞ்சம் சீரியஸாய் முகத்தை வைத்துக்கொண்டு அவர் லெக்சர் அடிக்கத் தொடங்க, , உள்ளே நுழைந்தார் பாண்டியன்.
"சிர்றாம்.. மேடம் சொன்னா கேட்டுக்கணும்... இப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. நான் அங்கேயே சொன்னேன் இல்லே... விடுங்க மேடம்... சின்னப்புள்ள... புதுசா வந்திருக்கறவரு... நான் அப்பவே சொன்னேன்ல சிர்றாம்... வாங்க..."
திருச்சியும் உள்ளே ப்ரசன்னமானார்.
"வாங்க... சீராம்... எத்தனையோ பிரச்னையிருக்க, நமக்கெதுக்குஇந்தப் பிரச்சனை இப்போ?" என்று கேட்டபடியே என் தோளை அணைத்தார்.
நான் கடுப்பாகி, "பாண்டியன் மேடம்... நீங்கள்தானே கேட்கச் சொன்னீர்கள்?" என்று கேட்டேன்.
"ஆமாம்... நீங்க நான் சொன்னா கேக்கல... 'என்னையே ஏன் கேக்கறீங்க... மேடத்தைக் கேளுங்க' ஒரு பேச்சுக்குச் சொன்னேன்... நிஜம்மாவே வந்துட்டீங்க..."
நான் கடுப்பாகி வெளியே வந்து யாரையும் பார்க்காமல் நான் வேலை செய்யுமிடத்துக்கு வந்து விட்டேன். ஆனால் உண்மையை உணர்ந்துகொண்ட அந்த அதிகாரி, அன்று அலுவலகம் விட்டுச் செல்லும் முன் என்னிடம் வந்து தான் புரிந்து கொண்டதாய்ச் சொல்லிச் சென்றார்!
எல்லாம் ஒரு அனுபவம்!
============================================================================================
வருத்தத்தை ஏற்படுத்திய செய்தி...
=================================================================================================
வருத்தத்தை ஏற்படுத்திய செய்தி...
=================================================================================================
டாக்டர் மோகனை அனைவரும் அறிவீர்கள். அவர் தன் ஆரோக்யத்தைப் பேணும் முறை குறித்து சொன்னது தினமலர் 'சொல்கிறார்கள்' பகுதியில் ஆறாம் தேதி வந்திருந்தது. சுவாரஸ்யமாகவும் இருக்கும், உபயோகமாவும் இருக்கும் என்று இங்கு பகிர்கிறேன்.
தன் உடல் நலம், ஆரோக்கியம் குறித்து, சென்னை, கோபாலபுரம், சர்க்கரை நோய் நிபுணர்டாக்டர் மோகன்:
தினமும், ஏழு மணி நேரம் தான் துாக்கம். காலை, 5:30 மணிக்கு எழுந்து விடுவேன். 6:00 மணிக்கு நடைபயிற்சியை துவக்கி விடுவேன். சிறிய அளவிலான உடற்பயிற்சிகளுடன், 'தம் புல்ஸ் வெயிட் லிப்டிங்' பயிற்சியையும் செய்கிறேன்.
முக்கியமாக, கடந்த, 20 ஆண்டுகளாக, பிராணாயாமம் எனப்படும், மூச்சுப் பயிற்சியை செய்யத் தவறுவதில்லை. விளையாடுவது, உடற்பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றால், 1985ல் நான் என்ன உடல் எடையில் இருந்தேனோ, அதே எடையில் தான் இப்போதும் இருக்கிறேன்.
காலையில், பழங்கள் மட்டும் தான் உணவு. இப்போது, கொஞ்ச காலமாக, மஞ்சள் கரு நீக்கிய முட்டை, ஒரு டம்ளர் பால் சாப்பிடுகிறேன். மதியம், கொஞ்சம் சாதம், நிறைய காய்கறிகள், பயறு, சுண்டல், காளான், தயிர் சாப்பிடுகிறேன். இரவில், ஒன்றிரண்டு தோசை அல்லது சப்பாத்தி தான்.
எனக்கு மதுப் பழக்கம் இருந்தது. 1994ல் என் மனைவிக்கு, புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அந்த நோய் பாதிப்பிலிருந்து அவள் விடுபட்டால், பழக்கம் ஒன்றை விட்டு விடுகிறேன் என, மனைவியிடம் கூறினேன்; அதன்படி, மதுவை விலக்கினேன்.
கடந்த, 2007ல் அவருக்கு, மீண்டும் புற்றுநோய் தாக்கியது. அப்போது முதல், அசைவம் சாப்பிடுவதை விட்டு விட்டேன். இப்போது ஆரோக்கியமாக உணர்கிறேன். சர்க்கரை நோய் உட்பட எந்த நோயும் என்னை அண்டியதில்லை.
மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்கச் செல்லும் போது, 'லிப்ட்'டை பயன்படுத்த மாட்டேன்; படிகளில் தான் ஏறி, இறங்குவேன். தினமும், 10 ஆயிரம் நடை நடக்க வேண்டும் என்பதை கடைப்பிடிக்கிறேன்.
முதலில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தேன். அது, மூட்டு வலி அல்லது மூட்டில் பிரச்னையை ஏற்படுத்தும் என கருதி, வேகமாக நடக்கத் துவங்கினேன். 60 வயதுக்கு பின், நடை வேகத்தை குறைத்து, மெதுவாக நடந்து வருகிறேன்.
எனக்கு இசை பிடிக்கும். பழைய சினிமா பாடல்கள், பாபா பஜன்களை விரும்பி கேட்பேன். பேரனுடன் பொழுது போக்குவேன். அவனோடு சேர்ந்து, பழைய தமிழ் படங்கள், புதிய ஆங்கிலப் படங்கள் பார்த்து, 'ரிலாக்ஸ்' செய்து கொள்வேன்.
அதுபோல, ஒவ்வொரு ஆண்டும், மே, டிசம்பரில் வெளிநாடுகளுக்கு, குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளேன். அது தான் எனக்கு, 'எனர்ஜி' தரும் நாட்கள். என் மனைவியின் மரணம், எனக்கு பேரிழப்பு. அந்த துயரிலிருந்து மீளும் பலத்தை இறைவன் கொடுத்தான். இப்போது வயது, 66 ஆகிறது. பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் நிம்மதியாக, உடல் ஆரோக்கியத்துடன் வாழ்கிறேன்!
========================================================================================
இந்தச் செய்தியைப் படித்தபோது இனி "எருமை மாடு" என்று திட்டுவதில் அர்த்தம் இல்லை என்று தோன்றியது! பின்னே? ஒரு எருமை மாடு 14 கோடிக்கு விலை போனதாமே...
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த கால்நடை கண்காட்சியில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள 1300 கிலோ எடை கொண்ட எருமை பங்கேற்றது.
ஜெய்ப்பூரில் நடந்த கால்நடை கண்காட்சியில் முர்ரா இனத்தை சேர்ந்த 1300 கிலோ கொண்ட ஆறு வயதுடைய எருமை மாடு பங்கேற்றது. இதன் உருவமே பார்ப்பவர்களை கவர்ந்திழுத்தது. பலர் மாடு முன் செல்பி எடுத்து கொண்டனர்.
மாட்டின் உரிமையாளர் ஜவகர்லால் ஜாங்கிட் கூறியதாவது: இந்த மாட்டுக்கு தினமும் ஒரு கிலோ நெய், அரைக் கிலோ வெண்ணெய், 200 கிராம் தேன், 25 லிட்டர் பால், ஒரு கிலோ முந்திரி,-பாதாம் கொடுக்கிறோம். இதன் பராமரிப்பு மற்றும் உணவுக்காக மாதத்துக்கு ரூ.1.5 லட்சம் செலவாகிறது. இந்த மாட்டிற்கு பீமா என்று பெயரிட்டு உள்ளோம்.
ஜெய்ப்பூரில் நடந்த கால்நடை கண்காட்சியில் முர்ரா இனத்தை சேர்ந்த 1300 கிலோ கொண்ட ஆறு வயதுடைய எருமை மாடு பங்கேற்றது. இதன் உருவமே பார்ப்பவர்களை கவர்ந்திழுத்தது. பலர் மாடு முன் செல்பி எடுத்து கொண்டனர்.
மாட்டின் உரிமையாளர் ஜவகர்லால் ஜாங்கிட் கூறியதாவது: இந்த மாட்டுக்கு தினமும் ஒரு கிலோ நெய், அரைக் கிலோ வெண்ணெய், 200 கிராம் தேன், 25 லிட்டர் பால், ஒரு கிலோ முந்திரி,-பாதாம் கொடுக்கிறோம். இதன் பராமரிப்பு மற்றும் உணவுக்காக மாதத்துக்கு ரூ.1.5 லட்சம் செலவாகிறது. இந்த மாட்டிற்கு பீமா என்று பெயரிட்டு உள்ளோம்.
கண்காட்சியில் பங்கேற்கும் முன் மாட்டை ரூ.14 கோடிக்கு கேட்டார்கள். ஆனால் விற்க எங்களுக்கு மனம் வரவில்லை. கண்காட்சிக்கு எருமைகளை பொதுவாக விற்பனைக்குக் கொண்டு வருவதில்லை. ஆனால் முர்ரா இனத்தை பாதுகாத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கண்காட்சிக்கு அழைத்து வந்துள்ளோம் என்றார்.
==========================================================================================================
பொக்கிஷம் :
இந்தப்படத்தைப் பார்த்ததுமே என் மனதில் தோன்றிய வரிகள்.... மிகப் பொருத்தமாக இருப்பது போல தோன்றியது.
"சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ..
வட்டக்காரியவிழி கண்ணம்மா வானக்கருமைகொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி...!"
==============================
எப்படிப் பேசணும்னு கத்துக்கணும்! அதுவும் அதிகாரிகளிடம்!
திருடனுக்கும் உண்டு ஆதங்கம்!
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்க்கு உள்ளத் தனையது உயர்வு..
பதிலளிநீக்குவாழ்க நலம்...
வாழ்க நலம்...
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஅன்பின் வணக்கம்
நீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எல்லாத்தையும் படிச்சுட்டேன் இன்னிக்கு. டாக்டர் மோகனின் வைத்திய முறை எங்களுக்குச் சரியா வரதில்லை. என் தம்பி அந்த முறையைக் கடைப்பிடித்துவிட்டு ரொம்பவே அவதிப்பட்டார்.
பதிலளிநீக்குவணக்கம், நல்வரவு, வாழ்த்துகள்.
நீக்குவாங்க கீதா அக்கா... நான் இவரை பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன். தொடர் நிகழ்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.
நீக்குஆமாம் நானும் பார்த்திருக்கிறேன் ஸ்ரீராம்.
நீக்குஜோக்குகள் இரண்டும் நல்லா இருக்கு. கொஞ்ச நாட்களாக இம்மாதிரி நீதிமன்ற ஜோக்குகள், திருடன் ஜோக்குகளே கண்களில் படுகின்றன.
பதிலளிநீக்குஎன்ன செய்வது! தற்கால சூழ்நிலையிலும் இவைகள்தான் நிறைந்து காணப்படுகின்றன!
நீக்குஇப்பவா? எப்பவுமேவா?
நீக்குஎருமை மாடு செய்தி கேள்விப் படலை. உங்க அலுவலகத்தில் நீங்க மாட்டிக்கொண்டு முழிச்சாற்போல் வீட்டில் நான் மாட்டிக்கொண்டு முழிப்பேன். ஆனால் நம்மவருக்குக் கடைசியில் உண்மை புரிஞ்சுடும்.
பதிலளிநீக்குசத்யமேவ ஜெயதே!
நீக்குஆமாம். வீட்டிலும் இந்த அனுபவங்கள் எல்லோருக்கும் இருக்கும்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஏன்?
நீக்குஒண்ணும் இல்லை, "பொ"க்கிஷங்கள் என்பது "ப்"க்கிஷங்கள்னு வந்திருந்தது. உடனே பார்த்துட்டேன்.
நீக்குபடப்பொக்கிஷம் அருமை. முகத்திலேயே கண்கள் மூலம் எல்லா உணர்வுகளும் வெளிப்படுகின்றன.
பதிலளிநீக்குஆம், உண்மை!
நீக்குஆமாம், பேஸ்புக்கில் நான் பகிர்ந்தபோது "சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா.." பாடலைத்தான் குறித்திருந்தேன். 'பட்டுக்கருநீல புடவை பதித்த நல்வயிரம்' வரிகூட பொருத்தம்
நீக்குபதிவர் கந்தசாமி அவர்களுடன் பழக்கம் இல்லை என்றாலும் அவர் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவர் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
பதிலளிநீக்குநீங்கள் அவர் தளம் வந்ததில்லையா கீதா அக்கா...? ரொம்ப சுவாரஸ்யமான மனிதர்.
நீக்குஇல்லை. எதுவும் படிச்சதாக நினைவில் வரலை. படிச்சால் மறக்க மாட்டேன். ஆனால்!!!!!!
நீக்குஎருமை அருமையாக இருக்கிறது ஏற்கனவே படித்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குஅனுபவங்களே வாழ்க்கை.
ஜோக்குகள் ரசித்தேன்.
நன்றி!
நீக்குநன்றி ஜி.
நீக்குதிரு. கந்தசாமி ஐயா அவர்களுக்கு எமது அஞ்சலிகள்.
பதிலளிநீக்குதிரு. கந்தசாமி ஐயா அவர்களுக்கு அஞ்சலி..
பதிலளிநீக்குஅந்த தொலைபேசி விவகாரம் புரியவே இல்லை...
பதிலளிநீக்கு( மத்த விசயம் எல்லாம் புரிஞ்ச மாதிரி தான்!...)
முந்தைய வாரப் பதிவின் தொடர்ச்சி. மற்றவர்கள் ஸ்ரீராமை முடுக்கிவிட்டு, அதிகாரியிடம் வாதாடச் சொல்கிறார்கள். அதிகாரி மசியவில்லை என்று தெரிந்ததும் எல்லோரும் ப்ளேட்டை மாற்றிப் போட்டு, ஸ்ரீராமை மாட்டிவிடுகிறார்கள். அவ்வளவுதான்.
நீக்குதுரை செல்வராஜூ ஸார்... கேஜிஜி சொல்லி இருப்பது சரி.
நீக்குஓ... இதான் விஷயமா...
நீக்குஓடும் பிள்ளை என்பார்கள் கிராமத்துப் பக்கம்....
நல்லாருக்கு அவுங்க நியாயம்....
வானக் கருமை கொல்லோ
பதிலளிநீக்குஆம்.
நீக்குமுனைவர் கந்தசாமி சாரின் இறப்பு மனவருத்தம் தருகிறது. பொதுவா இணையத்தில் பழகுபவர்கள் மிகவும் நெருங்கியவராக ஆகிவிடுகின்றனர்.
பதிலளிநீக்குஅன்னாரை இழந்து வாடும் குடும்பத்திற்கு எமது இரங்கல்கள்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்...
பதிலளிநீக்குஉங்களை அலுவலகத்தில் பலிகடா ஆக்கியது போல,என்னை பல இடங்களில் ஆக்கியிருக்கிறார்கள். நானே அவுட் ஸ்போக்கன் என்ற பெயரில் பலிகடாவாக ஆக்கி கொள்வதும் உண்டு. இன்னும் திருந்தியபாடில்லை. இதனால் கொஞ்சம் பகையையும், கொஞ்சம் நல்ல பெயரையும் சம்பாதித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஅடப் பாவமே!
நீக்குவாங்க பானு அக்கா... உண்மை. ஒன்றும் பேசாமல் இருப்பவர்களை உலகம் ஒன்றும் செய்வதில்லை!
நீக்குநான் இந்த மாதிரி outspoken ஆக இருப்பதால் புக்ககத்தில் ரொம்பவே கெட்ட பெயர். ஆனால் சுற்றுவட்டாரங்களிலும், நண்பர்கள், மற்ற உறவினர் வட்டத்திலும் நல்ல பெயர். :)))))) உண்மையிலேயே கொண்டாடுவார்கள். ஸ்ரீரங்கம் வந்த புதுசில் மாமா உடன் குடியிருந்த ஓர் பெண்மணியிடம், என்னைச் சுட்டிக் காட்டி, "மாமி எதானாலும் நேருக்கு நேரே சொல்லிடுவாங்க!" எனக் குறையாகச் சொல்ல அவரும் கூட இருந்தவர்களும் அதனால் தான் எங்களுக்கு மாமியை ரொம்பப் பிடிக்கும்னு சொல்லிட்டாங்க! :))))))
நீக்குபீமா எருமையின் உணவு மிரட்டுகிறதே!கோபுலுவின் படங்களில் பிரதானம் கண்கள்(கண்களின் பிரதாபம் இன்றும் தொடர்கிறது).
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
நீக்குடெலிபோன் விஷயத்தில் அதிகாரியின் புரிதல் ஆறுதல்.
டாக்டர் மோகன் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க ஆரம்பித்து
இன்னும் மருந்துகள் எடுத்து வருகிறேன்.
அன்பு நண்பர் கந்தசாமி மறைவுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். நல்ல மனிதர்.
ஆர்டிஸ்ட் சிம்ஹாவின் கண்கள் பேசுகின்றன.
நீக்குஅருமை.
கள்ளன் போலீஸின் நகைச்சுவை புதியது ஹாஹா.
அப்பாடி அந்த முர்ரா எருமை டாப் க்ளாஸ்.
அதற்குப் பிறந்த குழந்தைகள்
எப்படி இருக்கிறார்களோ.
சொல்லலாமோனு நினைச்சேன். வல்லி சொல்லிட்டாங்க. ஓவியர் சிம்ஹா!கோபுலு இல்லை.
நீக்குவாங்க வல்லிம்மா... ஆம்... அந்த அதிகாரியுடன் வேறு சில அனுபவங்களும் உண்டு.பின்னாட்களில் என்னை நன்றாய்ப் புரிந்துகொண்டு பேசியிருக்கிறார்.
நீக்குஅனைத்தும் மிகவும் இரசிக்கும்படியாய்...வாழ்த்துகளுடன்..
பதிலளிநீக்குநன்றி ரமணி ஸார்.
நீக்குஸ்ரீராமின் இளமைக்கால அலுவலக அனுபவம் புரிகிறது. அனுபவமில்லாதவர்களை அப்பாவிகளை முன்னே தள்ளிவிட்டு தூரநின்று வேடிக்கை பார்க்கும் பழம்பெருச்சாளிகளின் விஷமங்கள் இப்பவும் ஆங்காங்கே நடக்கின்றன, இனியும் நடக்கும். நமது ரத்தத்தில் ஊறிப்போனது இப்படியெல்லாம் வெளிப்படாமல் இருக்காது.
பதிலளிநீக்குபழம்பத்திரிக்கைகளை சிம்ஹா மாதிரி ஓவியர்களுக்காகவே புரட்டலாம்.. கிடைத்தால்தானே.
பதிவர் கந்தசாமி அவர்களின் பின்னூட்டங்களை ஜிஎம்பி சாரின் பக்கத்தில் முன்பு பார்த்திருக்கிறேன். மற்றபடி ஒன்றும் தெரியாது. அன்னாருடைய ஆன்மா சாந்திபெற இறைவன் அருள் கிடைக்கட்டும்.
வாங்க ஏகாந்தன் ஸார்... ஒவ்வொரு மருமகளும் மாமியாராகும்போது மாமியார் ஆவது போல! நான் இளைய பணியாளர்களை அப்படி ஏமாற்றுவதில்லை.
நீக்குஎங்கும் ஏமாளிகள் இருப்பார்கள்அப்படிப்பட்டவர்களைபயன்படுத்துவோருமுண்டு
பதிலளிநீக்குஎருமை விற்றதில் லாபமேது மிருக்காதே முதிய பதிவர் டாக்டர் கந்தசாமி வலை உலகின் பிதாமகர் அவரைத் தெரியாத தமிழ் பதிவர்கள் ஆச்சரியம்தான்
வாங்க ஜி எம் பி ஸார்... நன்றி ஸார்.
நீக்குபாண்டியன் மேடம் போல் பலர் இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஎப்படியோ மேல் அதிகாரி மேடம் புரிந்து கொண்டார்களே அது போதும்.
திரு. கந்தசாமி ஐயா அவர்களுக்கு அஞ்சலிகள்.
டாக்டர் மோகன் அவர்கள் சொல்வது போல் எதிர்ப்பார்ப்பு இல்லாமலும், இறைவன் அருளாலும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.
முர்ரா எருமைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
வட்டக்காரியவிழி கண்ணம்மா எந்த கதையின் கதாநாயகி என்று கண்டு பிடித்தீர்களா? பத்மா என்ற பேரா அவருக்கு?
அவரை பார்த்தவுடன் நினைவுக்கு வந்த கவிதை வரிகள் பொருத்தம் தான்.
பேச கத்துக்க வேண்டும் தான் சிலரிடம்.
யாராக இருந்தாலும் சிக்கனமும் சேமிப்பு வேண்டும் தானே!
வாங்க கோமதி அக்கா... முதலில் ஏற்றி விட்டு, பின்னர் பல்ட்டி அடித்து என்னையே சொன்னதும் ஒருஅனுபவம்தான் எனக்கு!
நீக்கு//வட்டக்காரியவிழி கண்ணம்மா எந்த கதையின் கதாநாயகி என்று கண்டு பிடித்தீர்களா? பத்மா என்ற பேரா அவருக்கு?//
இன்னும் கண்டுபிடிக்கவில்லை... இனி எங்கே கண்டுபிடிப்பது?
நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதம்பம் அருமை. இப்படித்தான் சிலபேர் நம்மை பொதுவிடங்களில். மாட்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள். அப்போது இவர்கள் பேச்சை நம்பி இப்படி வந்து விட்டோமே என்ற எண்ணத்தில் நம் மேலேயே நமக்கு கோபமாக வரும். ஆனால் தெய்வதீனமாக உங்களுக்கு கடைசியில் நல்லதே நடந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
டாக்டரின் பேச்சுகளை ஆமோதிக்கிறேன். மனதை கலகலப்பாக வைக்கும் நாட்கள் உடம்புக்கும் பலம் தருகின்றன.
நல்ல ஊட்டமுள்ள சாப்பாடுகளை சாப்பிட்டு வளர்ச்சியான எருமையின் தகவல்கள் ஆச்சிரியமளிக்கின்றன. பீமா என்ற பெயரும் பொருத்தமாக உள்ளது.
சுட்டும் விழிகளுக்கு பொருத்தமான படமும், பாடலும் அருமை.
நகைச்சுவைகள் நன்றாக இருக்கின்றன.
போலீஸிடமும், தைரியமாக பேசி நட்பை வளர்த்துக் கொள்ளும் மனிதர்கள் என்றுமே இருக்கிறார்கள் போலும்.
திருட்டும், கொள்ளையும் அவர்களைப் பொறுத்த வரை ஒரு உழைப்புத்தானே..!
பகிர்வுக்கு மிக்க நன்றி. இன்றைய தினம் வலைத்தளம் வர தாமதமாகி விட்டது.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குபழனி கந்தசாமி அவர்கள் மறைந்துவிட்டாரா?
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்
ஆமாம். எனக்கும் ஜி எம் பி ஸார் சொல்லிதான் தெரியும்.
நீக்குபதிவர் டாக்டர் பழனியப்பன் கந்தசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வருத்தமுற்றேன். ஆழ்ந்த அஞ்சலிகள்.
பதிலளிநீக்கு--
ஏற்கனவே உங்கள் மீது நல்லெண்ணம் கொண்டிருந்த அதிகாரி உங்களைப் புரிந்தும் வைத்திருந்திருக்கிறார்.
டாக்டர் மோகன் தந்திருக்கும் ஆலோசனைகள் கவனத்தில் வைக்க வேண்டியவை.
நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குதிரு.கந்தசாமி அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள். குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
பதிலளிநீக்குநன்றி சகோதரி.
நீக்குகந்தசாமி ஐயாவின் மறைவு - வருத்தம் தந்த செய்தி. சில முறை அவரை நேரில் சந்தித்து அளவளாவியிருக்கிறேன். தில்லி வழி அவர் ஹரித்வார் ரிஷிகேஷ் சென்றபோது இரயில் நிலையம் சென்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். நல்ல மனிதர். அவரது குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
பதிலளிநீக்குஅலுவலகத்தில் இப்படி மாட்டி விட்டிருக்கிறார்களே சக பணியாளர்கள்! :)
முர்ரா இன மாடுகள் ரொம்பவே விலை அதிகம். இந்த பீமா பல இடங்களில் பரிசு வென்றது. ஹரியானா, ராஜஸ்தான் பகுதிகளில் முர்ரா இன மாடுகளுக்கு கிராக்கி ரொம்பவே அதிகம். நான் கூட எனது பதிவொன்றில் இவை பற்றி முன்னர் எழுதி இருக்கிறேன்.
நகைச்சுவை துணுக்குகள் ரசித்தேன்.
கந்தசாமி ஸாரை நீங்கள் நேரிலேயே சந்தித்திருக்கிறீர்கள் என்பது எனக்குச் செய்தி. அவருடைய இயல்பான நகைச்சுவையும், லேசானகிண்டல் கலந்த எழுத்து நடையும் நான் ரசிப்பேன்.
நீக்குநன்றி வெங்கட்.
போன கதை முடிவு என்னாச்சோ எனும் நினைவு வரவே இங்கு ஓடி வந்தேன்..
பதிலளிநீக்குஓ என்ன ஸ்ரீராம் இப்படியும் மனிதர்களோ.. ஏதோ படத்தில், நாடகத்தில் பார்ப்பதைப்போல இருக்கெனக்கு.. இப்படியும் மனிதர்களோ.. உண்மையாலுமே என்னால நம்பவோ இல்லை ஜீரணிக்கவோ முடியவில்லை...
ஆனா என்னைப்பொறுத்து நம் மனம் வருந்தினால் போதும்.. அவர்களுக்கான தண்டனையைக் கடவுள் நிட்சயம் வழங்குவார்.
கந்தசாமி ஐயா என்பகமும் வந்திருக்கிறார்ர்.. இளமையாக நன்றாகத்தானே இருந்தார், எல்லாம் வயசுதான் காரணமோ... எனக்கும் இதனால வயதாவதை நினைச்சாலே பயம்...
அவரின் ஆன்மா சாந்திபெற என் பிரார்த்தனைகளும்.
ஆஆஆஆஆஆஆஆஆ எ எ எ எ எ எ எருமை ஆ அது... காண்டாமிருகம் போல இருக்கு... ஆனா வழுவழு மொழு மொழு என நல்ல அழகாகவே இருக்கிறார்ர்.. ஏறி சறுக்கி விளையாடலாம்... ஆனா இப்படி செலவு செய்து வைத்திருக்க அவர்களுக்கு என்ன வருமானமோ????...
ஓ... இதன் முந்தைய பகுதியைப் படித்திருந்தீர்களோ அதிரா... நன்றி. அவர்கள் அடித்த உட்டாலக்கடி பல்ட்டிதான் இப்பவும் எனக்கு கடுப்பேற்படுவது!
நீக்கு///பொக்கிஷம் :
பதிலளிநீக்குஇந்தப்படத்தைப் பார்த்ததுமே என் மனதில் தோன்றிய வரிகள்.... மிகப் பொருத்தமாக இருப்பது போல தோன்றியது.///
எனக்குத்தோன்றியது...
ஆரையோ அந்தக்கா பார்த்துக் கேட்கிறா.. “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?:))” என்று ஹா ஹா ஹா..
ஜோக்ஸ் இம்முறை புரிஞ்சது:)). வக்கீல் ஜோக் சிரிக்க வைக்கிறது.
//ஜோக்ஸ் இம்முறை புரிஞ்சது:)).//
நீக்குஅடடே....!
//ஆரையோ அந்தக்கா பார்த்துக் கேட்கிறா.. “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?:))” என்று ஹா ஹா ஹா.//
எனக்கு "என்ன கிண்டலா?" என்று கேட்பது போல இருக்கிறது!