வீட்டுத் தயாரிப்புப் பன்னீருடன் கத்தரிக்காய்ப் பிரட்டல்
என் பன்னீரில ஆரு கண் போட்டினமோ தெரியேல்லையே:)
ஒரே நித்திரை நித்திரையா வருதே கர்ர்ர்ர்ர்:))
இது தயாரிக்கும்போது போஸ்ட்டில் போடும் நினைப்பு இருக்கவில்லை, அதனால படங்கள் குறைவாக இருக்கு மன்னிக்கவும், என்னால கீசாக்காவைப்போல ஓரே இடத்தில இருந்தே ஒம்பேது படமெடுக்க முடியாமல் போச்சா:)).. இருப்பினும் கறி இறக்கும் தறுவாயில், போஸ்ட் போடலாமே என நினைச்சேன்:).. அது டப்போ?:)
வீட்டில் எப்பவும் 3.5 லீட்டர்[ஒரு கான்] பால் வாங்கி வைத்திருப்போம், சிலசமயம் அதில் 2 கான்கள்கூட வாங்கி வைப்பது வழக்கம். இப்படியான ஒரு நாளில் திகதியை செக் பண்ணினேன், ஒரு லீட்டர் வரை இருக்கும்போது, அடுத்தநாள் முடிவுதிகதி என இருந்துதா, உடனே பன்னீர் செய்து, உடனேயே கறியும் வைத்தேன்.
பாலை நன்கு காச்சி, கொதித்து வரும்போது, நெருப்பைக் குறைச்சுப்போட்டு, ஒரு தேசிக்காயைப் பிளிஞ்சு விட, இப்படித் திரண்டு வரும், நன்கு திரண்டதும் இறக்கி...
இப்படி ஒரு துணியில் போட்டு, சதுரமாக தட்டி நீர் வடிய விடோணும் ஒரு 5 நிமிடங்கள் போதும், சூட்டுடனேயே இப்படி நன்கு அமத்தி சதுரமாக்கிட்டால் பின்பு உடையாது.
உடனே சமைக்க நினைச்சதால், அப்படியே துணியுடனேயே ஃபிரீசரில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்து, இப்படி வெட்டினேன்.
வெட்டிய துண்டுகளை மெதுவாக கொஞ்சம் நல்லெண்ணெயில் வாட்டி எடுத்து வைத்துப்போட்டு, இதேபோல கொஞ்சம் பெரிய துண்டுகளாக கத்தரிக்காயை வெட்டி, வெங்காயம் மிளகாயுடன் சேர்த்து கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து வதக்கவும், கத்தரிக்காய் நன்கு வதங்கி வந்ததும், கறிப்பவுடர் சேர்த்து வதக்கவும், அதனுடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தோடு, அளவுக்குப் பழப்புளி சேர்த்து அவிய விடவும்[கத்தரிக்காய் நன்கு வதங்கிய பின்பே பழப்புளி சேர்க்கோணும், இல்லை எனில் கத்தரிக்காய் ஒருவித தறுக்கணிச்சதுபோல நறு நறு என வந்துவிடும், சொஃப்ட்டாகாது].
இப்போ இந்த பன்னீரையும் கொட்டி மெதுவாகப் பிரட்டி அவிய விடவும்.
தேவைப்பட்டால் முடிவில் கொஞ்சம் பால் சேர்த்துப் பிரட்டி இறக்கலாம், நான் கொஞ்சம் பால் சேர்த்துக் கொதிக்க விட்டேன்..
ஆவ்வ்வ்வ் இதோ அதிராவின் ஸ்பெஷல்- பன்னீர்க் கத்தரிக்காய்ப் பிரட்டல்:))
சமைக்கும்போது வெளியே பார்த்தேனா, ஃபெரியும் கொண்டெய்னர் ஷிப்பும் போச்சுது, சரி இதனையும் படமெடுத்து வைப்போமே என எடுத்திட்டேன்
ஹா ஹா ஹா இப்படி எனக்கும் அடிக்கடி நிகழும், ஃபிரிஜ்ஜைத் திறந்துபோட்டு, எதுக்குத் திறந்தேன் என யோசிப்பேன்:)))
என் ரெசிப்பி பார்த்து சமைச்சு அசத்தி:), வீட்டில் நல்லபெயர் வாங்க இருக்கும் உங்கள் அனைவருக்கும், அதிராவின் வாழ்த்துக்கள்😇
நன்றி நன்றி🙏
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நல்வரவு. இன்னிக்கு யார் சமையல்? பொங்கல் சிறப்பா?
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... நல்வரவு, நன்றி. வணக்கம்.
நீக்குபீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்..
பதிலளிநீக்குவாழ்க நலம்...
வாழ்க நலம்.
நீக்குஆஹா, தியாகத்திலகத்தின் செய்முறையா? கத்திரிக்காய்ப் பிரட்டல், எல்லோருமே பண்ணுவோம். இவங்க என்ன புதுசாச் சொல்லி இருக்காங்கனு பார்க்கணுமே! இதோ வரேன்!
பதிலளிநீக்குஎன்னத்தப் பிரட்டலோ. பிரட்டல் வார்த்தையையே வயிற்றைப் பிரட்டுது என்பதற்குத்தான் உபயோகிப்போம்
நீக்குகீதா சாம்பசிவம் மேடம்தான்இந்த வருட தி பதிவை ஆரம்பித்தது என்பதால் எல்லாத் தி பதிவையும் அவர் பாராட்டியே ஆகணும்.. சொல்லிட்டேன்
நீக்குவாங்கோ கீசாக்கா... கத்தரிக்காய்ப் பிரட்டல் எல்லோரும் பண்ணுவோமே எனச் சொல்றீங்களே தவிர, ஒரு தடவையாவது அந்த ரெசிப்பி இங்கு வெளிவந்ததாகத் தெரியல்லியே கர்ர்ர்ர்ர்ர்ர்:)... இப்பூடிப் பண்ணியிருக்க மாட்டீங்க:)..
நீக்குநான் தேம்ஸ்கரையிலதான் நிற்கிறேன்:) நெல்லைத்தமிழனை ஆராவது கொஞ்சம் கூட்டி வாங்கோ பிளீஸ்:)
நீக்குஇந்த வருடத் தி.பதிவை நன் ஆரம்பிச்சு வைக்கலை. பானுமதி! இஃகி,இஃகி,இஃகி! நான் போட்டது போன வருடத்தில்.
நீக்குகத்தரிக்காய் ஸ்டஃப் குஜராத்தை முறையில் செய்தது போட்டிருக்கேனே அதிரடி, ஆனால் என்னோட வலைப்பக்கம்! இஃகி,இஃகி,இஃகி!
நீக்கு///
நீக்குநெல்லைத்தமிழன்13 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 6:36
என்னத்தப் பிரட்டலோ. பிரட்டல் வார்த்தையையே வயிற்றைப் பிரட்டுது என்பதற்குத்தான் உபயோகிப்போம்///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒத்த கருத்துச் சொற்களே தெரியாமல் ஒரு டி எடுத்த பிள்ளையை[மீயைச் சொன்னேன்:)] திருத்த ஓடி வருகிறார் அடிக்கடி:) என்னதான் டமில்ப் புரொபிஸரோ:)) பட்டத்தைப் பறிக்கப் போறேன்ன்:))
//நெல்லைத்தமிழன்13 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 6:54
நீக்குகீதா சாம்பசிவம் மேடம்தான்இந்த வருட தி பதிவை ஆரம்பித்தது என்பதால்//
எனக்க்கு நேரம் போதாமையால காலையில் இதுக்கு பதில் போடாமல் விட்டேன்... கீதாரெங்கனையும் கீசாக்காவையும் சேர்த்துக் குழம்பிட்டார் நெ தமிழன் என.. பின்பு பார்த்தால்...
//Geetha Sambasivam13 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 6:32
இந்த வருடத் தி.பதிவை நன் ஆரம்பிச்சு வைக்கலை. பானுமதி!//
ஹையோ என்னை ஆராவது தூக்கிப்போய்த் தேம்ஸ்ல போடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))
/பானுமதி! இஃகி,இஃகி,இஃகி! // - அட.. ஆமாம்ல... நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன் கீசா மேடம்.
நீக்குஇருந்தாலும் நீங்க அடுத்தவங்களைப் பாராட்டறதுல கஞ்சத்தனம் காட்டறதில்லை. பாராட்டுகிறேன்.
//ஹையோ என்னை ஆராவது தூக்கிப்போய்த் தேம்ஸ்ல போடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))// - அதுக்கு அனுஷ்கா வந்தால்தான் முடியும் - என்று என்னை ஏஞ்சலின் பதில் எழுதச் சொன்னார்.
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம். வாங்க பானு அக்கா.
நீக்குஆகா..
பதிலளிநீக்குஇன்று பதிவுலகப் பத்மராகத்தின் படைப்பு..
ஹா ஹா ஹா புசுப்ப:) ராகம் தெரியும்:) அதென்ன பத்மராகம் துரை அண்ணன்:)...
நீக்குhelooo miyaw :)
நீக்கு//பத்மராகம் என்பது ஓர் இரத்தினக்கல் வகையாகும். இக்கல் கொரண்டம் (Corundum) குடும்பத்தைச் சேர்ந்த, மென்சிவப்பு- செம்மஞ்சள் சபையர் //
நன்றி ஏஞ்சல்...
நீக்குஆஹா அதுக்குள் ஆராய்ச்சி அம்புஜம் தேடித் தந்திட்டா:)
நீக்குபனீரை நானும் வீட்டில் தான் தயாரிக்கிறேன். அதுவும் ஆவின் பாலில் நன்றாக வரும். துண்டங்களாக்கிய பனீரை நெய்யில் அல்லது வெண்ணெயில் தான் பிரட்டிப் போடுவேன். கத்திரிக்காய் வதக்கவும் நல்லெண்ணெய் பயன்படுத்தாமல் கடலை எண்ணெய்(அங்கே ஆலிவ் ஆயில் அல்லது வேறே ஏதானும். நல்லெண்ணெய் கசப்புக் கொடுக்கும். சாதாரணக் கத்திரிக்காய் எண்ணெய்க்கறிக்கு நல்லெண்ணெய் ஓகே!)சேர்த்துப் பிரட்டிப் புளி விடாமல் அம்சூர்ப் பொடி, கரம் மசாலா, மி.பொடி, தனியாப் பொடி, தக்காளி ப்யூரி சேர்த்தால் எங்க வீட்டில் போணி ஆகும். அப்புறமாக் கடைசியில் பொரித்த பனீர்த்துண்டங்களைச் சேர்த்துப் பச்சைக்கொத்துமல்லி போட்டுச் சப்பாத்தி, ஜீரா சாதம் ஆகியவற்றோடு சேர்த்துச் சாப்பிடலாம்.
பதிலளிநீக்குஆவின் பால்ல தயிரும் ரொம்ப கெட்டியா அட்டகாசமா வரும்.
நீக்குஇங்க ந்ந்தினி பால்ல அப்படி வருவதில்லை. காலநிலையா என்று பார்க்கணும்
Nandini Double toned milk - yellow packet (500 ml = Rs 17) இதைத் தண்ணீர் விடாமல் காய்ச்சி, உறை குத்தி வைத்தால், கெட்டித் தயிர் கிடைக்கும்.
நீக்குNandini Double toned milk - yellow packet இந்த பாலில் பனீர் ரும் அருமையா வரும் ..
நீக்குNandini Subham(orange) , Samruddhi (purple) full cream milk -ல் செய்து பாருங்கள் பனீர். பனீர் என்றால் என்ன என்பது அப்போது புரியும்.
நீக்குநன்றி பெங்களூர் வாசிகளே. எ பி அரேஞ்ச் பண்ணினா நாமெல்லோரும் சந்திக்கும் காலம் வரும். கீ ர, ர நா மற்றும் விசிட்டிங் ப்ரொஃபசர் பா வெ உட்பட
நீக்குஹா ஹா !
நீக்கு//ellow packet (500 ml = Rs 17) // - அட அநியாயமே.. நான் 21 ரூ கொடுத்தல்லவா நந்தினி கடையிலிருந்து வாங்கி வருகிறேன். எப்படி இவருக்கு மட்டும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது? ஒருவேளை நேரே நந்தினிக்கு பால் போவதற்கு முன் நேரடியாக இவருக்கு வந்துவிடுகிறதோ?
நீக்குஹலோ மட்டன் கறியை பண்ணி அதை போட்டோ எடுத்து பன்னீர் கறி என்று சொல்லி இருக்காங்களோ என்னவோ
பதிலளிநீக்குவாங்கோ ட்றுத்... ஆஆஆவ்வ்வ் பார்க்க அப்பூடியா தெரியுதூஊ? அப்போ இந்த டிஷ் ஐ ட்றம்ப் அஙிளுக்குச் செய்து குடுக்கப் போறேன்:)
நீக்குகத்தரிக்காய்+பனீர்? பி.ஜெ.பி, கம்யூனிஸ்ட் கூட்டணி போல இருக்கே? அதிராவின் மேல் பழியைப் போட்டு முயற்ச்சிக்கலாம்.
பதிலளிநீக்குஹாஹாஹாஹா, நல்ல உதாரணம்! இஃகி,இஃகி,இஃகி!
நீக்குஎப்போதாவது தலைகாட்டுற அதிராவின் ’பெறட்டலை’ப்பத்தி ஒன்னும் சொல்லவேணாம்னு நெனச்சேன். பிஜேபி, கம்யூனிஸ்ட், ஆப் -லாம் வந்து சீண்டுதே..
நீக்குபானுமதி அக்கா பன்னீருக்கு கத்தரிக்காய் அல்லது உருளைக்கிழங்குதான் சூப்பர் கொம்பினேசன் ... எங்கள் வீட்டில்.
நீக்குஏ அண்ணன் நீங்க , நான் உங்களுக்காக சுட்ட கீரை வடையையே மறந்திட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்:)
பன்னீருக்கு எடப்பாடிதான் சூப்பர் கொம்பினேசன் !
நீக்கு//...எடப்பாடிதான் சூப்பர் கொம்பினேசன் //
நீக்குரிசல்ட்டு அப்படித்தான் சொல்லுது!
ஐயோ.. சம்பந்தமில்லாத ரெண்டை இணைச்சு கறி செய்திருக்கிறாரே...
பதிலளிநீக்குஎதை இணைத்தாலும் ஸ்காட்லாண்ட் லண்டன் கூட்டணி போல நல்லா அமையும்னு நினைப்பு
அது சரி.. எப்போதும்போல் நீங்கள் மட்டும்தான் ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிட்டீர்களா என்று குறிப்பிடவில்லையே
நெல்லைத் தமிழன் “அப்பா வெட்டிய கிணறு என்பதற்காக, எப்பவும் அந்த உப்புத் தண்ணியையே தான் குடிப்போம்” என இருக்கக்குடா:)...
நீக்குஇப்பூடி அதிரா போன்றோரின் ரெசிப்பிகளைப் பார்த்து ஸ்டைலை மாத்தப் பழகோணுமாக்கும்:)... ஹா ஹா ஹா.
சே சே இந்தக் கறி மிஞ்சாது... மிஞ்சினால் அது உலக அதிஜயம்:)
//ஸ்டைலை மாத்தப் பழகோணுமாக்கும்:)..// - இது பிறவிக் குணமோ? எனக்கு புதிதாக எதையும் டெஸ்ட் செய்யும் எண்ணமே வராது. டேஸ்டும் பண்ணமாட்டேன். என் மனைவிகூட, எப்பப்பாத்தாலும் அதே காம்பினேஷன்..எனக்கு போரடிக்குது என்பாள் (பசங்களும்தான் ஹா ஹா)
நீக்குபனீர் செய்முறை படங்கள் தவிர மற்றவை இணையத்தில் சுட்டதோ?
பதிலளிநீக்குஇந்த ஃபெர்ரி படத்தை உங்க தளத்திலேயே ஓராயிரம் தடவை பார்த்திருக்கேனே
கர்ர்ர்ர்ர்ர்:)... இதில் போகும் பெரி, அரை மணித்தியாலத்துக்கு ஒன்று குறொஸ் பண்ணும்.. ஆட்கள் கார் ஏத்திப் போவது.
நீக்குகொண்டைனர் ஸிப் அது இடையிடையே வந்து போகும்... அடிக்கடி நீர்மூழ்கி வந்து சுத்தும்,...
என் படம் பார்த்த உங்களுக்கே சலிப்பாக இருக்கே:).. அப்போ எங்களுக்கு எப்படி இருக்கும்:) பார்ப்பதில்லை:)...
ஆனா இப்படி இரண்டைப் பார்த்தபோது, சத்தியமாக இந்த கறி சமைச்சநேரம்தான் போனது, அதனாலேயே இங்கு போடும் ஐடியாவில் எடுத்தேன் படம்.
ஒரு தொகுப்பாக என் பக்கம் போடோணும்.. அதற்கு நேரம் கிடைக்குதில்லையே...
மூணு லிட்டர் பால் செலவழிய மூணு நாள் ஆகிடுமே... அங்கு தயிர் டப்பாக்கள் வேறு கிடைக்குமே.. இதுல ரெண்டு மூணு லிட்டர் பால் எதுக்கு வாங்கினீங்க? பால் பாயசம் பண்ணவோ?
பதிலளிநீக்குஇங்கு பால் முடிவு திகதி.. 10-14 நாட்கள்வரை இருக்கும். அதனால எப்பவும் இப்படித்தான் வாங்குவோம். ரீ குடிக்கத்தான் பால் செலவாகும். விடுமுறை , சனி ஞாயிறுகளில் அதிகமாக ரீ குடிப்போம்... குளிருக்கு குடிக்கோணும் போல இருக்கும்...
நீக்குமற்றும்படி இடியப்பத்துக்கு பால்சொதி மற்றும் பால்க் கறிகளுக்கும் பாவிப்பேன்..
இன்னொன்று காலையில் சீரியல் க்கும் வேணும் பால். பால் என்றில்லை நெல்லைத்தமிழன் எந்தப் பொருளும் கொஞ்சம் கூட வாங்கி வைப்போம்.. எப்பவும் ஸ்ரொக் இருக்கும் .
நீக்குபால் இங்கு ஒரு லீட்டர், 2.5 லீட்டர்.. , 3.2 லீட்டர் இப்படித்தான் கான் களில் கிடைக்கும்...
இங்கேயும் அப்படித்தான் நெ.த. வாரா வாரம் பால்கான் 2 ஒன்று கொழுப்புச் சத்துள்ளது, இன்னொன்று 2 சதவீதம் கொழுப்பு உள்ளது. அதைத் தவிர்த்து எங்களுக்குக் காஃபிக்கு ஹாஃப் அன்ட் ஹாஃப் இதில் காஃபி குடிச்சால் தான் கொஞ்சம் நம்ம ஊர்க்காஃபி போல் இருக்கும். அப்புறமாத் தயிர் ஒரு பெரிய டப்பா, யோகர்ட் ட்ரிங்க் என்னும் பெயரில் கிடைக்கும் மோர் அல்லது இந்தியக்கடைகளில் கிடைக்கும் பட்டர்மில்க் ஒரு கான். இப்படி வாங்கி வைச்சுப்போம். அடிக்கடி கடைகளுக்குப் போக முடியாதே! மேலும் நமக்குத் தேவை மாசத்துக்கு 200 கிராம் கடுகுன்னா இங்கே ஒரு பவுண்டுக்குக் குறைஞ்சு கிடைக்காது. மிஞ்சிப் போனால் அரைப்பவுண்டு பாக்கெட் கிடைக்கும். இப்படியே எல்லா சாமான்களும் மொத்தமாகத் தான் வாங்கி வைச்சுக்கணும்.
நீக்குசும்மா கலாய்க்க எழுதினேன்... லண்டன்லயும் எல்லாமே அதீத அளவில் கிடைக்குது.
நீக்குபஹ்ரைன்ல, ரொம்ப மலிவா (ஆஃபர்) கிடைக்குதுன்னு 3 லிட்டல் பால் அல்லது லெபான் (மோர்) வாங்கி வேஸ்ட் பண்ணியிருக்கேன்.
@ நெல்லைத்தமிழரே! எனக்குத் தெரிந்து நீங்க சமைத்த உணவு வகைகள், புத்தகங்கள், பால், தயிர், பண்ணும் இனிப்பு வகைகள்னு நிறைய வீணாக்கினதாச் சொல்லி இருக்கீங்க. முதல்லே இந்தப் பழக்கத்தைக் குறைங்க! குறைக்கிறது என்ன? அடியோடு நிறுத்துங்க. அளவாச் சமைச்சு அளவாச் சாப்பிடுங்க. இன்னும் வேண்டும்னு மனசு கேட்கும்போது சாப்பிடுவதை நிறுத்திடுங்க. உங்களில் பெரிய மாற்றம் உங்களுக்கே தெரிய ஆரம்பிக்கும். புத்தகமோ எதுவோ நீண்ட காலத் தேவை இருக்கானு யோசிச்சுப் பார்த்து வாங்குங்க. எனக்குப் புத்தகங்கள் மேல் வெறியே உண்டு. ஆனால் வாங்குவதில்லை. ஏனெனில் எங்க வீட்டில் என்னை விட்டால் அதெல்லாம், அதுவும் நான் படிக்கும் ரசனை, ருசியில் படிப்பவர்கள் யாரும் இல்லை. ஆகையால் யாரேனும் கொடுத்தால் தான் புத்தகம்.
நீக்குவீட்டில் தயாரித்த பனீர் அருமையா வந்துள்ளது.
பதிலளிநீக்குபனீரை நெய்யில் பிரட்ட வேண்டாமோ?
புதுவருட ரெசிப்பி அருமை. பாராட்டுகள்
னு சொல்ற மாதிரி ஒரு இனிப்போட தி பதிவுக்கு வாங்க ஹா ஹா ஹா
டாங்ஸ்:).. எதுக்கு நெய்யிலேயேதான் பிரட்டோணும்?:) ஹா ஹா ஹா நான் நல்லெண்ணெயில் அல்லது இருக்கும் எண்ணெயிலதான் எப்பவும் ஸ்ரே பிறை பண்ணி எடுப்பேன் பன்னீரை... நெய் வீட்டில் இருக்கு ஆனா குறைவாகப் பாவித்துப் பழக்கப் பட்டுவிட்டோம்.. கொழுப்பு அதிகம் என்பதால இருக்கலாம்.
நீக்குஇனிப்பு செய்தால்தான் வீட்டில் நானே சாப்பிட்டு முடிக்கோணும்:)... பால்க் கோவாவை நானே சாப்பிடுகிறேனே என, மிகுதியை.. கண்ணை மூடிக்கொண்டு காபேஜ்ஜில் போட்டு விட்டேன் ஹா ஹா ஹா:)..
//எதுக்கு நெய்யிலேயேதான் பிரட்டோணும்?:)//
நீக்குஅதானே என் வழி தனி வழி :) எது கிடைச்சாலும் அதில் பிரட்டுவோம் .மியாவ் நீங்க கடுகு எண்ணெய் ,வேப்பெண்ணை எல்லாம் கூட ட்ரை பண்ணுங்க உடம்புக்கு நல்ல்லது :)))))
நான் இப்போ கடுகு எண்ணெயும் தான் வாங்கினேன் ஊஸ் பண்ண:).... எப்பவும் எண்ணெயை மாத்தி மாத்தித்தான் ஊஸு பண்ணோணும்:)...
நீக்குவேப்பெண்ணை டெய்சிப்பிள்ளைக்கு குடுப்பேனாக்கும்:)
கடுகு எண்ணெய் ஊறுகாயில் சேர்க்கலாம். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். வேப்பெண்ணெய் ஸ்ரீரங்கத்தில் அகலில் ஏற்றி வைப்போம் கொசுத்தொல்லை குறைய. விளக்கெண்ணெய் எப்போவும் வீட்டில் இருக்கும். நல்லெண்ணெய் தான் முழுச் சமையலிலும் பண்ணுவேன். கடலை எண்ணெய் எப்போதானும் பஜ்ஜி, வடை போன்றவற்றிற்கு. மாசம் ஒரு கிலோ செலவானால் அதிசயம். தேங்காய் எண்ணெய் முறுக்கு, தேன்குழல், தட்டை போன்றவற்றிற்கு. எண்ணெய் அதிகம் குடிக்காமல் பக்ஷணங்கள் பண்ண முடியும். நெய் கட்டாயமாய்ச் சேர்ப்போம். இந்த ஆங்கில மருத்துவர்கள் நெய் கொழுப்பு, தே.எண்ணெய் கொழுப்புனு சொல்லி நல்லவற்றைச் சாப்பிடவிடாமல் நம்மைத் தடுத்துட்டாங்க. ஆனால் நாங்க எப்போவுமே நெய்யையோ, தே எண்ணெயையோ குறைத்தது இல்லை. இரண்டும் உடலுக்கு நல்லது. ஆயுர்வேதத்தில் நெய் ஓர் மருந்து. அதுவும் நாள்பட்ட நெய் எனில் அது கட்டாயம் வயிற்றுக்கு நல்லது என்பார்கள். நெய்யைச் சுருக்கி, மோரைப் பெருக்கிச் சாப்பிடச் சொல்லுவார்கள். நெய்யை சாதத்தோடு சேர்த்துத் தினமும் சாப்பிடுவோம்.வாய்ப்புண்களுக்கு நெய் நல்ல மருந்து. புண் வந்த இடத்தில் நெய்யைத் தடவிக்கொள்ளலாம். தினம் காலை நல்லெண்ணையால் வாயைக் கொப்புளிக்கலாம்.
நீக்குகடுகு எண்ணெய் வெப்பத்தைக் கொடுக்கும் என்பதால் குளிர்காலத்தின் உடலில் தேய்த்துக்கொள்ளலாம். குளிரின் தாக்கம் குறையும். கை, கால்கள் வெடிப்பு வராமல் பாதுகாக்கும். வட மாநிலங்களில் குழந்தைகளுக்குக் கடுகு எண்ணெய் தேய்த்துவிட்டுக் காலையில் வரும் இளவெயிலில் ஓர் பாயில் போட்டுப் படுக்கவிடுவார்கள். அரை மணி நேரத்துக்குப் பின்னர் குளிப்பாட்டுவார்கள்.
நீக்குகீசாக்கா நான் கேட்க நினைச்சேன், ஆனா என் பக்கத்தில் எப்போ கேள்வி கேட்டாலும் நீங்கள் பதில் சொல்லுவதில்லை, அதனால விட்டு விட்டேன். ஓ கடுகு எண்ணெய் சூடோ? எனக்கு அது சூடோ குளிரோ என டவுட்டாக இருந்தது.
நீக்குநாங்க கீசாக்கா நல்லெண்ணெய் மற்றும் சன் ஃபிளவர்தான் அதிகம் பாவிப்போம், ஒலிஃப் ஒயில் சூடாக்கக்கூடாது என்பதால், சில சமயம் பச்சையாக கறிக்குள் விடுவதுண்டு...இறக்கியபின்.
இங்கு தமிழ்க்கடையில் மட்டுமே நல்லெண்ணெய் கிடைக்குது என்பதனால, வருடம் பிறந்து முன்ன முன்னம் கடைக்குப் போய் நல்லெண்ணெய் வாங்கக்கூடாது என்பினம் அதனால நல்லெண்ணெயை விட்டுப்போட்டு கடுகு எண்ணெய் வாங்கி வந்தேன்... அம்மாவுக்கு கழுத்துப் பிடிப்பு வந்து மாறாமல் இருந்தது, அப்போ ஆரோ சொல்லி, கடுகு எண்ணெயினுள் கார்லிக் போட்டு கொதிக்க வச்சு, அதனை எடுத்துப் பூசி வர குணமாகிவிட்டது.
காலத்துக்குக் காலம் ஒவ்வொன்று சொல்கிறார்கள்.. நெய் தே எண்ணெய் கொழுப்பு என்றார்கள்.. இப்போ தே எண்ணெய் நல்லது என்கிறார்கள்... நமக்கு எது விருப்பமோ.. எது ஒத்துக் கொள்ளுதோ அதைப் பாவிப்பதே சிறந்தது.
அநியாயமா இல்லையோ, நீங்க ஆழ்வார்கள், நாயன்மார்களைக் குழப்பிக் கொண்டப்போ அப்புறமா இன்னமும் சில, பல சாஸ்திர சந்தேகங்களுக்கு எல்லாம் உங்க பக்கத்தில் பதில் கொடுத்திருக்கேன். எந்த எந்தப் பதிவுனு இப்போ நினைவில் வரதில்லை. சில சமயங்கள் கவனிக்காமல் ஏதேனும் விட்டுப் போயிருக்கலாம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P :P :P :P எங்க வீட்டுச் சமையலில் எண்ணெயை நான் எப்போதும் மாற்றியது கிடையாது. மாமியாருக்குப் பாம் ஆயில் மேல் ஒரே மோகம். ஸ்வாமி விளக்குக் கூட அதான் ஊற்றுவார். எங்க இரண்டு பேருக்கும் இந்த விஷயத்தில் இழுபறிதான். சில சமயம் நான் எங்கே நல்லெண்ணெயை ஊற்றிடப் போறேன்னு காலை எழுந்ததுமே விளக்கு நிறையப் பாம் ஆயிலை ஊற்றி வைத்துவிடுவார். பின்னர் அது செய்யக் கூடாது என யாரோ சொல்லித் தான் அந்த மோகத்தை நிறுத்தினார்.
நீக்குதேங்காய் எண்ணெய், நெய் எல்லாவற்றிலும் நல்ல கொழுப்புத் தான். அந்தக் கொழுப்புச் சத்து உடலுக்குத் தேவையானது. ஆகவே பயமில்லாமல் பயன்படுத்தலாம். நான் இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை வாங்குவதே இல்லை. யார் வீட்டிலாவது செய்து கொடுப்பதைச் சாப்பிடுவதில் தான்! நாங்க வாங்குவதே இல்லை.
நீக்குகீசா மேடம்.. நெய், எண்ணெய் பற்றி நீங்க சொல்லியிருக்கும் கருத்துக்கள் உண்மையானவை. எல்லோருக்கும் தெரியணும்.
நீக்குதேங்காய் எண்ணெய் தான் நான் முழுதும் யூஸ் பண்றது ஏதாச்சும் பொரிக்கமட்டும் சூரியகாந்தி எண்ணெய். பாமாயில் நான் தொட மாட்டேன் .உணவுப்பொருள் வாங்கும்போது கூட லேபிளில் பாமாயில் இருந்தா தவிர்ப்பேன் .ORANGUTAN சுக்கு நம்மாலான சேவை உதவி
நீக்குபடங்களே ஆசையை தூண்டுகிறது ஸூப்பர்
பதிலளிநீக்குவாங்கோ கில்லர்ஜி... நன்றி...
நீக்குவீட்டுத் தயாரிப்புப் பன்னீருடன் கத்தரிக்காய்ப் பிரட்டல் ...அருமையா இருக்கு அதிரா ...
பதிலளிநீக்குபன்னிர் தயாரிப்பில் நான் தயிர் ஊற்றி செய்வேன் ..இன்னும் கொஞ்சம் கூட அளவு பன்னிர் கிடைக்கும் ...
ஆனா அது கூட குடை மிளகாய் தான் துணை எனக்கு ..இப்படி கத்தரி சேர்த்தது இல்லை .
வாங்கோ அனு... ஓ பன்னீருக்கு தயிரும் செந்ர்ப்பீங்களோ.. அடுத்தமுறை முயற்சிக்கிறேன்.
நீக்குநான் குடைமிளகாய் எனில் பிரைட் ரைஸ் ... இடியப்பம் போன்றவற்றுக்கு அல்லது சைனீஸ் ஸ்டைலில் பிரட்டி எடுப்பேன்.
நன்றி அனு.
மிகப் பிரமாதமான செய்முறை. பனீர் மட்டும் வெண்ணெயில் வதக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குஅதிரா சூப்பர் ரெசிபி.
இங்கெயும் பால் நிறைய செலவாகும். வெளியில் வைத்தாலும் கெடாத
சில் செல்லர்.
மருமகளிடம் சொல்கிறேன். பேத்தியும் நானும் கத்திரிக்காய் வெறியர்கள்:)
மிக நன்றி மா. அன்பு வாழ்த்துகள்.
பேத்தியும் நானும் கத்திரிக்காய் வெறியர்கள்:).ஆஹா
நீக்குவாங்கோ வல்லிம்மா... வாசத்துக்காக வெண்ணெயில் வதக்கச் சொல்லுறீங்க போலும்..
நீக்குஆஆ எங்கள் வீட்டில் நாமிருவரும்தான் கத்தரிக்காய் சாப்பிடுவோம்.. ஆனா இப்போ மூத்தவருக்கும் விருப்பம் வந்திருக்குது.. சின்னவருக்குப் பிடிக்காது.
நன்றி வல்லிம்மா
அன்பு அதிரா. செய்து பார்தது சொல்கிறேன் மா.
நீக்குஆஆ நன்றி வல்லிம்மா.
நீக்குசமைக்கும்போது வெளியே ஃபெரியும் கொண்டெய்னர் ஷிப்பும்...ரசனையான புகைப்படம்..
பதிலளிநீக்குவாங்கோ ... கோடை காலம் எனில் ஆற்றைப்பார்க்க ஆசையாக இருக்கும்... இது இப்போ ஒரே இருட்டும் மழையுமாக இருக்கு.
நீக்குநன்றி
கத்தரிக்காயும்,பன்னீரும்...புது காம்பினேஷனா இருக்கே. 2ம் இங்கு பேவரிட். பார்க்க சூப்பரா இருக்கு. செய்துபார்க்கிறேன் பசும்பொன்.
பதிலளிநீக்குப்ரியா வேணாம் அவசரப்படாதிங்க ..நீங்க நிறைய போஸ்ட் போடணும் நிறைய நாடுகளை சுற்றிப்பார்க்கணும் சொல்லிட்டேன் :)))))))))))))
நீக்குவாங்கோ அம்முலு... இண்டைக்கே செய்து போஸ்ட்டும் போடுங்கோ அம்முலு... அதைப்பார்த்து மருந்தடிச்ச பூச்சி மாதிரி அஞ்சு மயங்கி விழோணும்.... அதை ரசிக்க மீ கச்சான் வறுத்தெடுத்து வாறேன்ன்ன்ன்ன்:)... ஹா ஹா ஹா நன்றி அம்முலு.... உங்களை இங்கும் பார்த்ததில் மகிழ்ச்சி.
நீக்குமிரட்டலான பிரட்டல்...!
பதிலளிநீக்குஆஆ எல்லோரையும் மிரட்டிப்போட்டேனோ ரெசிப்பி போட்டு... :).. அதுதானே எனக்கு தேவை:).. நன்றி டிடி.
நீக்குஆஆஆ மை பன்னீர்ப் பிரட்டல்ல்.... ஆரும் டச்சுப் பண்ணக்கூடாதூஊஊ ... பார்க்க மட்டும்தேன் அனுமதியாக்கும்.... :)..
பதிலளிநீக்குநன்றி ஶ்ரீராம்.
என் டிஷ் ஐப் பார்த்து சுவைத்து கொமெண்ட்ஸ் போடும் அனைவருக்கும் நன்றி. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பதில் போடுவேன்..... தாமதமானாலும்...🙏
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசகோதரி அதிராவின் ரெசியி நன்றாக உள்ளது. வீட்டிலேயே தயாரித்த பனீரும், கத்திரிக்காயுடன் சேர்ந்த பனீரும் பார்க்க அழகாக உள்ளது. நான் கத்திரிக்காயை இந்த முறையில் செய்ததில்லை படங்களும், செய்முறையும் அவர் பாணியில் அழகு. அந்த நதியின் படம் அழகுக்கு அழகு சேர்க்கிறது. இனி கத்திரிக்காயை இப்படி செய்து பார்க்கிறேன்.
இரண்டு நாட்களாக வலைத்தளம் வர இயலவில்லை. இன்று காலையில் கூட வர இயலவில்லை. ஆனால் அதிராவின் ரெசிபியை பார்த்ததும் இப்போதாவது வர வேண்டுமென வந்து படித்து கருதிட்டு விட்டேன்.
ஆமாம்.. அவர் இவ்வளவு பட்டங்கள் பெற்றிருக்கிறார். அதில் ஒன்று கூட காணாது தலைப்பில் வெறும் அதிரா என உள்ளதே..! சகோதரி வந்து இதைப் படித்ததும் பொங்கல் தீபாவளியாகுமோ? ஹா. ஹா. ஹா. இங்கு பொங்கலுக்கு இன்றிலிருந்து பட்டங்கள் விடும் திருவிழா நடைபெறுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்கோ கமலாக்கா.. ஓ உடம்பு நலமில்லையோ.. நானும் பெரிதாக வலையுலகில் இல்லாமையால் எதுவும் புரியவில்லை.. மிக்க நன்றி எனக்காக வெளியே வந்தமைக்கு.
நீக்கு//ஆமாம்.. அவர் இவ்வளவு பட்டங்கள் பெற்றிருக்கிறார். அதில் ஒன்று கூட காணாது தலைப்பில் வெறும் அதிரா என உள்ளதே..!//
நல்லாக் கேழுங்கோ.. ஜத்தமாக் கேழுங்கோ கமலாக்கா:)).. ஒரு பட்டம் கூடப் போடாமல் எப்பூடி வெறும் அதிரா எனப் போடலாம் அதானே:)) ஹா ஹா ஹா..
//இங்கு பொங்கலுக்கு இன்றிலிருந்து பட்டங்கள் விடும் திருவிழா நடைபெறுகிறது//
ஓ அப்படியும் ஒன்றிருக்கோ...
மிக்க நன்றி கமலாக்கா.
வணக்கம் அதிரா சகோதரி
நீக்குஇங்கு எல்லா கடைகளிலும் பட்டங்கள் விற்பனை நடக்கிறது. பொங்கலுக்கு பட்டங்கள் விடுவது ஹைதராபாத்தில் கண்டிப்பாக உண்டென அங்குள்ள உறவுகள் சொல்லி அறிந்துள்ளேன். இங்கும் அப்படித்தான் போலிருக்கிறது.
உடல்நலம் பற்றி விசாரித்தமைக்கு நன்றி. ஒரு மாதத்திற்கும் மேலாக கொஞ்சம் நலமின்மைகள்.தை பிறந்தால் சரியாகி வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.அதனால் என்னாலும் எப்போதும் போல் வலைத்தளம் வர இயலவில்லை. ஆனாலும், இப்படி வந்தால்தான் மனதுக்கு ஒரு நிம்மதி வருகிறது. தங்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஓ இப்போ குளிர்காலம்தானே கமலாக்கா உலகமெல்லாம் பொதுவா எல்லோருக்கும் இங்கும் உடல்நலமில்லைத்தான்... நீங்கள் உடம்பை நலமாக்குங்கோ.. மனதை இலகுவாக்கினாலே உடல் டக்கென நலமாகிவிடும். வாழ்த்துக்கு நன்றி, உங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். சக்கரை போட்ட பொங்கல் அதிகம் சாப்பிடாதீங்கோ.. நோய் இன்னும் கூடிவிடும். நான் பருப்பு வடையும் சூட் பண்ணப்போறேன்ன்:))..
நீக்கு“தை பிறந்தால் வழி பிறக்கும்” எனத்தான் சொல்கிறார்கள்:) ஆனா எந்தத் தை என ஆருமே ஜொள்ளவே இல்லையே:)) ஹா ஹா ஹா.
வணக்கம் அதிரா சகோதரி
நீக்குஹா.ஹா.ஹா. உண்மைதான்.. எந்த தை என எந்த ஜோசியராலேயும் சொல்ல முடியாது.
இன்று எங்களுக்கு பண்டிகை (என் கணவரின அண்ணா தவறியதால்) கிடையாது. இருப்பினும் வீட்டிலிருக்கும் சின்ன குழந்தைகளுக்காக வெல்லம் சேர்த்து ஒரு பாயாசம் வைக்கலாம் என நினைத்து கொண்டிருக்கிறோம். தங்களின் ஆறுதலான அறிவுரைவுக்கு நன்றி. தங்களின் அன்பான பொங்கல் வாழ்த்துகளுக்கும் நன்றி.உங்கள் அனைவரின் இதமான பேச்சுக்கள் என் உடல் நலத்தை சீக்கிரம் குணமாக்கி விடும். நன்றி.
@கமலா, அதனால் என்ன? குழந்தைகள் இருக்கும் வீடு என்பதோடு நாளை கணுப்பிடி வைக்கவும் சர்க்கரைப் பொங்கல் வேண்டும் அல்லவா? கொஞ்சமாய்ப் பண்ணிச் சாப்பிடலாம். இதைத் தாமதமாக இப்போத் தான் பார்ப்பதால் உங்களுக்குப் பண்டிகை முடிஞ்சிருக்கும். என் அப்பா வீட்டிலும் சரி, மாமியார் வீட்டிலும் சரி ஒரு வருடம் பண்ணலைனாத் தொடர்ந்து 3 வருஷம்தட்டும் என்று சொல்லிக் குழந்தைகள் வரை பண்டிகை கொண்டாடச் சொல்லுவார்கள்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்கோ கோமதி அக்கா..
நீக்குஅதிராவின் கத்திரிக்காய் பனீர் பிரட்டல் அருமை.
பதிலளிநீக்குபடங்கள் அழகு.
//சமைக்கும்போது வெளியே பார்த்தேனா, ஃபெரியும் கொண்டெய்னர் ஷிப்பும் போச்சுது, சரி இதனையும் படமெடுத்து வைப்போமே என எடுத்திட்டேன்//
சமையல் செய்த அலுப்பு போய் விடுமே! இவ்வளவு அழகான காட்சியை பார்த்தால்.
கொடுத்து வைத்தவர் தான் அதிரா நீங்கள், இப்படி ஜன்னல் வழியே காட்சி தெரிய.
மிக்க நன்றிகள் கோமதி அக்கா..
நீக்குகண்போட்டால் தூக்கம் வருமா? நிறைய சாப்பிட்டால்தான் தூக்கம் வரும் என்பார்கள் பூனையார் நிறைய பனீர் பிரட்டலை சாப்பிட்டு விட்டாரா?
பதிலளிநீக்குஹா ஹா ஹா கரெக்ட்டாப் பிடிச்சிட்டீங்க கோமதி அக்கா.. அது ஹொலிடேயில நல்லா சாப்பிட்டு விட்டார் போலும்:)
நீக்குசெய்து பார்க்கிறேன் அதிரா.
பதிலளிநீக்குமிக்க நன்றி கோமதி அக்கா.
நீக்குஹலோ மியாவ் தேங்காய் ஸ்வீட் நல்லா இருக்கே :)))))))
பதிலளிநீக்குஆஆஆ வாங்கோ அஞ்சு... மிக நீண்ட காலத்துக்குப் பின்பு தலை தெரியுதே திங்களில்:)..
நீக்குடேவடைக் கிச்சின் மூடிக் கிடந்தால் பன்னீர் கூட தேங்காய் சுவீட் போலத்தான் தெரியுமாக்கும் கர்ர்ர்ர்:))
///கறி இறக்கும் தறுவாயில்//
பதிலளிநீக்குஅஆவ் பூஸ் தறுவாயில் அப்டீன்லாம் எழுதறாங்களே :)
ஹா ஹா ஹா இச்சொல் அங்கும் உளதோ?:)... நாம் ஊரில் பேசுவோம்... இங்கு ரைப்பண்ணும்போது வாயில வந்துதா, புரியுதோ பார்ப்போம் என எழுதிவிட்டேன்...
நீக்குநீங்கதான் பனீரை பன்னீ ர்னு நினைச்சி கண்ல போட்டிருப்பீங்க :))))))))))))
பதிலளிநீக்குஹா ஹா ஹா அது இன் வராதோ? ஆனா பேசும்போது இன் சேர்த்தால்தான் ஒரு திருப்தியாக இருக்குது:))
நீக்குஐயோ.ஐயோ. இது கத்தரிக்காய் புளிக்குழம்பில் பனீரை வதக்கி சேர்ப்பதாக உள்ளது. பனீர் புளியுடன் சேராது.சேர்ந்தால் பனீரும் சுவைக்காது, பாலக் பனீர், ஆலு பனீர் , பனீர் மட்டர் மசாலா, என்று புளி இல்லாத பிரட்டல்கள் தான் சப்பாத்திக்கு துணை. Jayakumar
பதிலளிநீக்குஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஜேகே ஐயா.. நான் சமைச்சுக் குடுத்து சூப்பராக இருக்குதென சேர்டிபிகேட்டும் வாங்கிட்டேன்:).. இனி நீங்கள் எப்பூடி சவுண்டு விட்டாலும் வேலையில்லை:)) ஹா ஹா ஹா.. நல்லவேளை ஸ்ரீராம் சுடச்சுடப் போடாமல் இப்பூடி தாமதித்து தாமதித்துப் போடுவதால் , இந்த கொமெண்ட்ஸ்களால் வரும் எதிர்ப்பாட்டங்கள் என்னை ஒண்ணும் பண்ணாதாக்கும் ஹா ஹா ஹா.
நீக்குஅது ஜேகே ஐயா, பன்னீருக்கு.. கிழங்கு சேர்ப்பேன் அல்லது எதுவும் சேர்க்காமல் செய்வேன்.. அப்பூடி எனில் தேசிக்காப்பிளிதான் விடுவேன். இது கத்தரிக்காய் என்பதனால புடூஊஊஊஊஉ ஸ்டைலூஊஊஊ ஆனா உண்மையில் சூப்பராக இருந்தது..
மிக்க நன்றி.
ஹலோ வெறும் பனீர் டிக்கவை கடைல வாங்கி படமெடுத்துட்டு கத்திரிக்கா சேர்த்தேன்னு சொல்றீங்க எங்களை யாரும் பேய்க்காட்ட முடியாது :)))))))))கத்திரிக்கா எங்கே ங்கே ந்ங்கே ????????????????
பதிலளிநீக்கு//ஹலோ வெறும் பனீர் டிக்கவை கடைல வாங்கி படமெடுத்துட்டு//
நீக்குபார்த்தீங்களோ பார்த்தீங்களோ.. என் டிஷ்.. அவ்ளோ அழகாக இருப்பதாலதானே கடையில வாங்கினேன் எனச் சொல்றீங்க ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)
//எங்களை யாரும் பேய்க்காட்ட முடியாது//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா.. பன்னீர் அதிகமாகவும் கத்தரி குறைவாகவும் சேர்த்தேனாக்கும்..
///Bhanumathy Venkateswaran13 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 6:08
பதிலளிநீக்குகத்தரிக்காய்+பனீர்? பி.ஜெ.பி, கம்யூனிஸ்ட் கூட்டணி போல இருக்கே? அதிராவின் மேல் பழியைப் போட்டு முயற்ச்சிக்கலாம்//
@ பானுக்கா :))))))))))))
@மியாவ் நான் ஈஸியா சொல்றேன் லேபர் பார்ட்டியும் பிரெக்சிட் பார்ட்டியும் ,ஜெரமி கோர்பினும் நைஜல் ஃபராஜும் இணைந்த கூட்டணி மாதிரின்னு அக்கா சொல்றாங்க
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சு இங்கின அரசியல் பேசப்பிடாது:)) ஸ்ரீராம் எங்கே போயிட்டார்ர் இதை எல்லாம் எதிர்க்காமல் கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா... நீங்க எப்பூடிப் புரிய வச்சாலும் எனக்கென்ன புரியவோ போகுது ஹா ஹா ஹா:))
நீக்கு///தறுக்கணிச்சதுபோல நறு நறு என வந்துவிடும், சொஃப்ட்டாகாது].//
பதிலளிநீக்குதறுக்கணிச்சது /// ஆமா இது என்ன வார்த்தை ????????????? நானும் கூகிள் தேடினேன் இப்படி ஒரு வார்த்தையே இல்லைங்குதே கூகிள் ??????????????????
ஓ தறுக்கணிச்சல் என இல்லையோ.. அது அஞ்சு, முருங்கைக்காய்.. சே..சே.. முருங்கிக்காய்:)) மற்றும் கத்தரிக்காய் போன்றவை நன்கு அவியும்போது சொஃப்டாக வரும் அதன் பின்னரே புளி சேர்க்கோணும், மவிய முன்னமே புளி சேர்த்திட்டால், காய்கள் சொஃப்ட்டாகாமல் நற நற என்பது போலாயிடும்.. அதைத்தான் தறுக்கணித்தல் என்பது.. இது தமிழ் வார்த்தைதான் ஆனா இலங்கையர்களுக்குப் புரியுமென நினைக்கிறேன்.
நீக்குசில பழங்கள்கூட, பிஞ்சில் பிடுங்கி பழுக்கப் பண்ணி விற்பார்கள், கடித்தால் ஒரு மாதிரி இருக்கும்.. அதனையும் தறுகணிச்ச பழம் என்பினம்.
ferry அண்ட் கண்டெய்னர் ஷிப் அழகு
பதிலளிநீக்கு//என் ரெசிப்பி பார்த்து சமைச்சு அசத்தி:), வீட்டில் நல்லபெயர் வாங்க இருக்கும் உங்கள் அனைவருக்கும், அதிராவின் வாழ்த்துக்கள்😇//
ம்க்கும் கர்ர்ர் இருக்கிற நல்ல பெயரும் போய்டப்போகுது கவனம் மக்களே :))))))))))))))
///ம்க்கும் கர்ர்ர் இருக்கிற நல்ல பெயரும் போய்டப்போகுது கவனம் மக்களே :)//
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. உப்பூடி எல்லாம் சொன்னால், மீ ரெசிப்பி அனுப்பாமல் பயந்து கிச்சினை மூடிவிடுவேன் எனத்தானே நினைக்கிறீங்க:)).. இந்த வருடம் அதிரா ரெசிப்பி வருடமாகவே இருக்கப்போகுதாக்கும்:) வெயிட் அண்ட் சீ ஹா ஹா ஹா:)).. ஏன் எல்லோரும் காசிக்குப் போக வெளிக்கிடுகினம்:?:))
பன்னீர் கூட இதுவரைக்கும் கத்திரிக்கா யாருமே சேர்த்திருக்க மாட்டாங்க புதுமையை செய்து எங்களை மயங்க வச்ச அருமை பெருமை எல்லாம் உங்களை மட்டுமே சேரும் :)))))
பதிலளிநீக்குநீங்க யாரும் எப்போ புதுமையாச் செய்திருக்கிறீங்க?:) அரைச்ச மாவையே அரைக்காமல் இப்பூடி புரட்சிப் புயலாக புறப்படோணும் .. எங்கேயோ?..கிச்சினுக்குள்ளேதான்:)) ஹா ஹா ஹா நன்றி அஞ்சு.. தலையிடிக்குது முடியவில்லை, இருப்பினும் கொமெண்ட்ஸ் போடோணுமே என ஓடி வந்தேன்.. மிக்க நன்றிகள்.
நீக்குகத்திரிக்காய் அவ்வளவாகப் பிடிக்காது! பனீர் உடன் கத்திரிக்காய் - செய்முறை நன்றாக இருந்தாலும் நான் செய்வேன் என்று தோன்றவில்லை!
பதிலளிநீக்குசெய்முறை பகிர்ந்து கொண்ட அதிரா அவர்களுக்கு நன்றி.
வாங்கோ வெங்கட்..
நீக்கு///பனீர் உடன் கத்திரிக்காய் - செய்முறை நன்றாக இருந்தாலும்//
நன்றி..
/// நான் செய்வேன் என்று தோன்றவில்லை!//
ஹா ஹா ஹா இது ஒன்றும் புதிதல்ல:)) குறிப்புப் பார்த்து ஆரும் செய்வதாக இல்லை பார்ப்பதோடு நின்றுவிடுகிறது.. ஹா ஹா ஹா நமக்குப் பழக்கப் பட்டதையே செய்ய மனம் விரும்புது. மிக்க நன்றிகள்.
ஸ்ரீராமுடன் கொஞ்சம் பேசோணும் நான்:)., அஞ்சு குறுக்க நிக்காமல் கொஞ்சம் அரக்கி நில்லுங்கோ கர்ர்ர்ர்:)).
பதிலளிநீக்குஎனக்கு இப்போ பழசெல்லாம் நினைவுக்கு வருது:).. அதாவது ஆரம்பகாலம், குறிப்போ இல்லை கதையோ எதுவென்றாலும் அதுபற்றி 3,4 வசனம் நீல மயிலால சே..சே.. மையால ஸ்ரீராம் ஏதும் பேசியிருப்பார்.. இப்போ அதனை விட்டுவிட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. மீண்டும் அப்படிச் செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
இன்னொரு வேண்டுகோள், இப்படி நாம் அனுப்பும் ரெசிப்பி, கதைகள் வெளியிடும்போது, நம் பெயரோடு நமக்கு புளொக் இருப்பின் அந்த லிங்கையும் இங்கு பெயரில் இணைச்சு விட்டால் நல்லது ஸ்ரீராம்.... ஒரு பப்புளிக்குட்டிக்காகத்தான்:)) ஹா ஹா ஹா... இன்று இல்லாட்டிலும் ஒரு காலத்தில் அது பயன் பெறும்:)... நன்றி.
அப்படி நீல மையில் இடையே பேசுவது குழப்புகிறதோ என்று நினைத்து விட்டு விட்டேன் அதிரா... மறுபடியம் ஆரம்பிச்சுடலாம்!
நீக்குபதிவாளர்களுக்கு அவர்கள் பக்கங்களின் லிங்க் ஆரம்பத்தில் கொடுத்துக் கொண்டிருந்தேன். குறிப்பாக கே வா போ கதைகளுக்கு... அதையும் இப்பல்லாம் செய்யறதில்லை. என்ன இப்பல்லாம் நண்பர்கள் பேரைச் சொன்னாலே எல்லோருக்கும் யாரென்று தெரியுமே என்று... ஹி...ஹி....ஹி....ஹி... மெதுவா மறுபடி ஆரம்பிக்கிறேன்
நன்றி அதிரா.
இரண்டொரு நாட்களாக மும்முனை தாக்குதலாக துன்புறுத்தும் ப(ல்)ல வலிகளிகளுக்கிடையே தூக்கமும் கொஞ்சமும் இரக்கமின்றி விடைபெற்றதில் இன்றைய பதிவுக்கு சகோதரி அதிராவின் ஸ்வாரஸ்யமான பதில்களை காணலாம் என வந்தேன்.
நீக்குஅட! என்ன ஒரு ஆச்சரியம்..! இரண்டு இருபத்தைந்துக்கும் ஸ்ரீராம் சகோதரர் விழித்திருந்து பதில் தருகிறாரே..!
இப்போது சகோதரி அதிராவின் பதில்கள் எவ்வளவு ஸ்வாரஸ்யமானவை என்பதை முழுமையாக உணர்ந்து கொண்டேன். நன்றி. வாழ்த்துகள் சகோதரி.
அனைவருக்கும் போகி, வரும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... இரவுகளில் விழிப்பு வந்தாலும் சாதாரணமாக மொபைலைத் தொடமாட்டேன். நேற்று இரவு யதேச்சையாக எடுத்துக் படித்தால் என்னிடம் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதுதான்...
நீக்குஉங்கள் சங்கடங்கள் 99 சதவிகிதம் தீர்ந்திருக்கும். மிச்ச ஒரு சதவிகிதமும் இன்றோடு செல்லட்டும்.. பிரார்த்தனைகள்.
நான் விளையாட்டுக்கும் சொன்னேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். 75 சதவிகிதம் இன்னமும் முற்றிலுமாக குணமடையவில்லை.. தங்கள் பிராத்தனைகள் பலிக்கட்டும். உங்களுடைய அன்பான விசாரிப்புகளும், பிரார்த்தனைகளும், மனதுக்கு ஆறுதலை தருகிறது. ஆறுதல்கள் எந்த உபத்தரவத்தையும் குணமாக்கும் சக்தி கொண்டவளை. இப்படி ஆறுதல் அளிக்கும் உங்களுக்கு மிகவும் நன்றிகள்.
நீக்குநன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
///ஹி...ஹி....ஹி....ஹி... மெதுவா மறுபடி ஆரம்பிக்கிறேன்//
நீக்குபகலில் இப்பூடிச் சிரிக்க மாட்டார் ஸ்ரீராம்:) இது ஜாஆஆஆமத்தில சிரிக்கிறார்ர்.. பயம்ம்ம்ம்ம்ம்மாக்கிடக்கூ:) ஹா ஹா ஹா நன்றி ஸ்ரீராம்...
//நான் விளையாட்டுக்கும் சொன்னேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.//
நீக்குஸ்ரீராம் ஒன்றும் தவறாக எடுக்க மாட்டார்ர்:) நீங்கள் உங்கள் உடல் நலனைக் கவனியுங்கோ கமலாக்கா... ஒரு போஸ்ட் போடுங்கோ மிகுதி 25 வீதமும் காற்றில் கரைந்திடும், கற்பூரம்போல:))
இந்த மாதிரித் தான் முகநூலில் ஒரு சகோதரி இந்தியாவில் இருப்பவர் நடு இரவு ஒன்றரை மணிக்கு விழித்துக்கொண்டு பதிவு எழுதிப் பதில்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். நான் நேரத்தைப் பார்த்துட்டு அவங்களிடம் தூங்க வேண்டாமா எனக் கேட்டேன். நீங்க உட்காரலையானு கேட்கப் போறாங்களேனு நான் அம்பேரிக்காவில் இருப்பதையும் இந்தியாவில் இருந்தாலும்/அம்பேரிக்காவில் இருந்தாலும் இரவெல்லாம் முழிச்சுண்டு எஃப் பி எல்லாம் பார்க்க மாட்டேன் என்றும் சாதாரணமாகத் தான் சொல்லி இருந்தேன். அது ஆச்சு ஒரு 3 மாசம். இப்போ இவங்க இரண்டு நாட்கள் முன்னாடி நான் சொன்னதைக் கிண்டல் அடிச்சுப்பதிவு போட்டிருந்தாங்க. சிரிப்புப் பதிவாம்! சரிதான்! நிர்வாண ஊரில் கோவணம் கட்டியவனுக்குக் கிடைக்கும் மரியாதை நமக்குக் கிடைக்குது என நினைத்துக் கொண்டேன். :))))))))))
நீக்கு@கீசாக்கா:)
நீக்கு//நான் நேரத்தைப் பார்த்துட்டு அவங்களிடம் தூங்க வேண்டாமா எனக் கேட்டேன்//
ஹா ஹா ஹா ஆரிடம் கேட்கிறோம் என்பது முக்கியம் கீசாக்கா:)).
//நீங்க உட்காரலையானு கேட்கப் போறாங்களேனு நான் அம்பேரிக்காவில் இருப்பதையும் இந்தியாவில் இருந்தாலும்/அம்பேரிக்காவில் இருந்தாலும் இரவெல்லாம் முழிச்சுண்டு எஃப் பி எல்லாம் பார்க்க மாட்டேன் என்றும் சாதாரணமாகத் தான் சொல்லி இருந்தேன். //
ஹா ஹா ஹா உஷாராத்தான் இருந்திருக்கிறீங்க.. அப்போ நீங்க கேட்டது தப்போ எனவும் உள்மனதில நினைச்சு இதைச் சொல்லியிருக்கிறீங்க:) இது தேவையோ கீசாக்கா உங்களுக்கு ஹா ஹா ஹா என்னால சிரிச்சு முடியுதில்ல:))...
தூங்கவில்லையோ எனக் கேட்டது வரைக்கும் ஓகே கீசாக்கா, ஆனா அதுக்கு மேல, நானெல்லாம் இரவில முழிச்சிருக்க மாட்டேன் எனச் சொன்னது அவரைக் காயப்படுத்தியிருக்கலாம், அதாவது நான் நல்ல பழக்கம் நைட்டில முழிச்சிருக்க மாட்டேன் என்பது போல பொருள் படக்கூடும், ஆனா பாருங்கோ..
அதிரா வெரி சொறி:). “கருங்காலி அதிரா” மாதிரி ஆட்கள் எனில், கீசாக்கா நம்மில் உள்ள அக்கறையிலதானே சொல்றா எனப் பொஸிடிவ்வாக எடுத்திடுவேன்,
ஆனா அஞ்சு, நெல்லைத்தமிழன், ஸ்ரீராம் போன்றோர் எனில் தப்பாக எடுத்திடுவினம் கீசாக்கா:))...
கடவுளே தை மாதப்பிறப்பும் அதுவுமா எனக்குக் கல்லெறி வந்தாலும் வரலாம்:).. படிச்சதும் கிழிச்சுப் பேஸ் புத்தகத்தில:) எறிஞ்சிடுங்கோ கீசாக்கா:)) மீ எஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்:).
யாரோ என் பேரை சொன்ன மாதிரி இருந்துச்சு கூடவே உருட்டுக்கட்டை கட்டை உருள்ற சத்தமும் :) அதானே பார்த்தேன் கருங்காலி வேலைதானா ??
நீக்கு//தை மாதப்பிறப்பும் அதுவுமா எனக்குக் கல்லெறி வந்தாலும் வரலாம்:).. படிச்சதும் கிழிச்சுப் பேஸ் புத்தகத்தில:) எறிஞ்சிடுங்கோ கீசாக்கா:)) மீ எஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்:).//
நீக்குகோணாத கோடாலி :)))))))))//கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும்.// இதை படிச்சதில் ஒன்னு தோணுச்சு வாங்களேன் தேம்ஸில் முக்கி பார்க்கணும் :)
@ கீதாக்கா :)))) இந்த கருங்கபாலி :) காலிக்கு ஒரு அங்காயப்பொடி பார்சல் ப்ளீஸ் :)
நீக்குகருங்காலி! ஹை, இந்தப் பெயர் நல்லா இருக்கு! :))))) நான் முதல்லேயே நினைச்சேன். அவங்களை ராத்திரி வரக்கூடாதுனு சொல்லிட்டு நான் மட்டும் வந்திருக்கேனானு கேட்பாங்க என! அதே மாதிரி வேறொருத்தர் சொல்லி இருந்தாங்க. நீங்களும் தானே இருக்கீங்க என! அவங்க நெருங்கிய நட்போ என்னமோ! :) அதான் நான் அம்பேரிக்காவில் இருக்கேன் எனச் சொன்னேன். ஆனால் அதுக்காக அவங்க இப்படிக் கேலி செய்திருக்க வேண்டாம். ரொம்ப நாளாச்சுங்கறதாலே எனக்குத் தெரியாது அல்லது மறந்திருப்பேன், புரியாதுனு நினைச்சிருப்பாங்க போல! :))))))
நீக்குநம்ம கேஜிஜி சாரை நிறையத் தரம் பார்த்துட்டுச் சொல்லி இருக்கேன். முழிச்சுட்டு இருக்கீங்களேனு! இதேபோல் இன்னும் சில, பல நண்பர்களைக் கேட்டது உண்டு. யாரும் தப்பா எடுத்துக்கலை! :))))
நீக்கு//ஸ்ரீராம் ஒன்றும் தவறாக எடுக்க மாட்டார்ர்:) நீங்கள் உங்கள் உடல் நலனைக் கவனியுங்கோ கமலாக்கா... //
நீக்குஇது முதலில் நீங்கள் கொடுத்த சான்றிதழ் அதிரா..
// ஆனா அஞ்சு, நெல்லைத்தமிழன், ஸ்ரீராம் போன்றோர் எனில் தப்பாக எடுத்திடுவினம் கீசாக்கா //
இது இரண்டாவது... கிர்ர்ர்ர்.....
நீக்குAngel16 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 4:12
////கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும்.// இதை படிச்சதில் ஒன்னு தோணுச்சு வாங்களேன் தேம்ஸில் முக்கி பார்க்கணும் :)
//
ஆஆஆஆஆஆஆ என்னா கொலை வெறி ஜாமீஈஈஈஈஈ:) மீ ஒரு அப்பாஆஆஆவி .. பச்சத்தளிர்:)) ஹா ஹா ஹா
ஸ்ரீராம்.16 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 5:06
நீக்கு//இது முதலில் நீங்கள் கொடுத்த சான்றிதழ் அதிரா..//
ஆஆஆஆஆஆஆஆஆஅ ஸ்ரீராம் மறந்திருப்பார் என்றெல்லோ நினைச்சிருந்தேன்:)) சே..சே.. வரவர ஒரு விசயத்தை ஒரு ஆசை பாசை என மாத்திப்பேச முடியுதோ இங்கின:)).. எல்லோரும் வல்லாரை ஊஸ் குடிக்காமலேயே ரொம்ப உஷாராகி வருகினமே:)) ஹா ஹா ஹா மீ இண்டைக்குக் கொரியண்டர் லீஃப்ஸ் ஊஸ் குடிக்கப் போறேன்:).
//இது இரண்டாவது... கிர்ர்ர்ர்.....///
ஆஆஆஆஆஆஆஆ அஞ்சு பீச்ச் ஜெல்ப் மீ இது இரண்டாவது கிர்ர் ஆமே அப்போ மொதலாவது??:)) ஹா ஹா ஹா கருங்காலிக்கோ அது....:))