புதன், 29 ஜனவரி, 2020

புதன் 200129 :: ஶ்ரீவித்யா, சரிதா, ஜோதிகா யார் கண்ணழகி?

           
ஜனவரி 29
. . . . . விவரங்கள் ... !


1595 : ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகம் அரங்கேற்றம். 

1892 : கோக கோலா கம்பெனி பதிவு செய்யப்பட்ட நாள். 

1781 : இந்தியாவின் முதல் செய்தித்தாள் பெங்கால் கெஜட் வெளியானது. 

1939 : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் ஆனார். 

1994 : ஏர் இந்தியாவும், இந்தியன் ஏர் லைன்சும் (வர்த்தக) நிறுவனங்களாக மாற்றப்பட்டன. 





கீதா சாம்பசிவம் : 

1.பொதுவாகத் தாய்மாருக்கு முதல் பிள்ளை தான் ரொம்ப முக்கியம்னு சொல்வாங்க. அதே போல் மூத்த மருமகளைப் படாத பாடு படுத்தும் மாமியார்கள் அதையே 2 ஆம் , மூன்றாம் மருமகள்களிடம் காட்டுவதில்லை/அல்லது காட்ட முடிவதில்லை! ஏன்? (இஃகி.இஃகி, இஃகி)

# இரண்டாம் மூன்றாம் வந்ததும் மாமி மைனாரிட்டி ஆகிவிடுவதால் இருக்குமோ ?

& தன்னுடைய மாமியார் தன்னிடம் காட்டிய கெடுபிடிகளை, மூத்த மருமகளிடம் கொட்டித் தீர்த்துவிடுகிறார்களோ? அப்புறம் ஸ்டாக் தீர்ந்துபோய்விடுமோ!


2. தன் பெண், மாப்பிள்ளை ஜோடியாக வெளியே சென்றால் ரசிக்கும் பெற்றோர்கள், முக்கியமாகத் தாய் மனம் அதே மருமகள் தன் மகனோடு செல்வதை ரசிக்காமல் கரித்துக் கொட்டுவது ஏன்? பல மாமியார்கள் மருமகளும் மகனும் ஜோடியாக வெளியே சென்றால் மருமகளைக் குற்றம் சொல்லுவதைப் பார்த்திருக்கிறேன். "அவளுக்கு அவனோடு ஜோடி போட்டுக்கொண்டு சுத்தணும்!" என்பார்கள். இது ஏன்?

# இது இப்போது இல்லை என்று நினைக்கிறேன். 
எனினும் இந்த வினாவிற்கு ஒரு பெண்மணிதான் பதில் சொல்ல வேண்டும். 
     
    
3. நேற்றைய (21/1/2020) கே.வா.போ.கதையில் கருத்துச் சொன்ன ஜீவி சார் தாய்க்குத் தன் மூத்த மகனிடம் அதிக நெருக்கம் இருக்கும் என்றும் அதனாலேயே அவனை இன்னொருவரிடம் விட்டுக்கொடுக்காத உன்னதமான மனம் என்றும் சொன்னார். அங்கேயே பதில் சொல்லிட்டேன். ஆனாலும் இதை என் மனம் ஏற்க மறுக்கிறது. இதில் சுயநலமே இருப்பதாக என் கருத்து. வந்த மருமகளும் தன்னைப் போல் வாழணும், தன் பிள்ளையும் மருமகளும் சந்தோஷமாக இருக்கணும் என அந்தத் தாய் நினைத்தால் அது அதி உன்னதம்! இல்லையா? இதற்கு உங்கள் பதில் என்ன?


                                                                                                                                   "ஜீவி " 
# எனக்கு யார் யாரோடு தகராறு செய்தாலும் ரசிக்காது.

& எதிர்காலத்தில் இப்படி எல்லாம் நினைக்கமுடியாது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரே குழந்தை என்று ஒரு நிலை வந்துவிட்டால், பாச பேதங்கள் வராது. 

4. கணவன் சம்பாதித்துக் கையில் கொண்டு வந்து கொடுத்து அதில் நன்றாக ஆண்டு அனுபவித்தாலும் மகன் சம்பாதிக்கும் ஒற்றை ரூபாய் பெரிசாகப் பல தாய்மாருக்குத் தெரிவது ஏன்?

# அடுத்த தலைமுறை பொறுப்பாக இருக்கும் திருப்தி.

& மகனின் கல்யாணத்துக்கு முன்பா அல்லது பின்பா? 


5. இப்போது கணவன், மனைவி இருவரும் குழந்தை வளர்ப்பில் சமமாகப் பங்கேற்றாலும் முக்கியமாகத் தாய் வளர்ப்பதில் தான் குழந்தையின் குணாதிசயங்கள் அமைகிறது என்பது என் கருத்து! உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

# எனக்கு அப்படித் தோன்றவில்லை !!

& தந்தை வளர்ப்பின் குணாதிசயங்களும் குழந்தைகளிடம் அமையும். தாய் நிறைய புத்திமதிகள் சொல்லி வளர்ப்பார். ஆனால் குழந்தைகள் தந்தை எப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் பார்த்து நிறைய தெரிந்துகொள்வார்கள். தாய் சொல்லும், தந்தை செயலும் குழந்தைகளுக்கு வழிகாட்டிகள். 

6. இப்போதைய குழந்தைகளுக்குக் கிட்டத்தட்டப் பிறந்ததில் இருந்தே ஐபாட், செல்ஃபோன் ஆகியவற்றைப் பழக்கப்படுத்தி விடுகின்றனர். அல்லவு வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில் சிறுவர்களுக்கான கார்ட்டூனைப் பர்க்கும்படி விட்டு விடுகிறார்கள். குழந்தையும் அதைக் கண்டு கொண்டு பிடிவாதம் பிடித்துக் கொண்டு பார்க்கிறது. இது சரியா? இம்மாதிரிப் பார்க்கும் குழந்தைகளை "ரொம்ப ஸ்மார்ட்" எனப் புகழ்பவர்களைப் பார்க்கிறேன்.

# அளவான பயன்பாடு நல்லது - தவிர்க்க இயலாதது.

& சிறு வயதில் படித்த தினமணி கதிர் ஜோக் ஒன்று ஞாபகம் வருகிறது.

" என்ன சார் குழந்தைக்கு விளையாட ரேடியோவைக் கொடுத்து வெச்சுருக்கீங்க? "

" என்ன செய்வது! இன்னும் தொலைக்காட்சி புழக்கத்தில் வரவில்லையே!"
                             
7. குழந்தையோடு சேர்ந்து பெற்றோரும் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் பார்ப்பது நல்லதா? இப்போதைய குழந்தைகள் பிஞ்சிலேயே பழுத்துவிடுவதாக என் கருத்து.

# தொடர்கள் திரைப்படங்கள் பெற்றோர் மட்டுமே கூட பார்க்காமலிருப்பது நல்லது.

& கெடுதல்தான். நாம் சொன்னால் யார் கேட்கப்போகிறார்கள்! 

8.குழந்தைகளுக்கு ரசம் சாதம், இட்லி, பருப்பு சாதம் எனக் கொடுத்துக் கொண்டிருந்தது காணாமல் போய் பிட்சா, பர்கர், சமோசா, ஐஸ்க்ரீம், கேக் என மாறி வருவது ஏற்கக் கூடியதா?

 # சுற்றி வரும் வதந்திகளைக் கண்டால் வீட்டு உணவு மட்டுமே நல்லது எனத் தோன்றுகிறது.

& வாரத்தில் ஒருநாள் அப்படி ஏதேனும் வித்தியாசமாக சாப்பிடலாம். 
       
9.குழந்தைகள் தொலைக்காட்சிக் கார்ட்டூன்கள் பார்ப்பதோடு மட்டுமில்லாமல் சில இளம் தாய்மார்கள் செல்ஃபோன், ஐ பாட் போன்றவற்றைக் குழந்தைகளின் பயன்பாட்டுக்குக் கொடுத்துவிட்டு ரசிக்கிறார்கள். இது சரியா? சின்னக் குழந்தை வீசித் தூக்கி எறிவதைப் பார்த்திருக்கேன். என் மனம் பதறும்!

# சரியில்லை. மிகத் தவறும் கூட.


10.ஒரே குழந்தை போதும் என்னும் இக்காலப் பெற்றோரின் மனப்பான்மை சரியா? மறைந்து வரும் உறவுமுறைகள் மீட்டெடுக்க வாய்ப்பு உண்டா?

# இரண்டாவது விரும்பினாலும் அமைவதில்லை என்பதே பல குடும்பங்களில் நிலவரம்.

& குடும்பக்கட்டுப்பாடு சமுதாயத்தின் அத்தியாவசியமான விஷயங்களில் ஒன்று. 
 
ஏஞ்சல் : 

1, உங்களுக்கு பிடித்த பாடம் கணிதமா அல்லது  வரலாறா ? ஏன் என்ன காரணம் ?

# இரண்டுமில்லை. தமிழ் மற்றும் ஆங்கிலம்.
காரணம் ரசனைக்கு வாய்ப்பு.

& Science. எதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம்தான் காரணம். இன்னும் ஒரு முக்கிய காரணம், கற்பிக்கும் ஆசிரியரின் திறமை. 


2, தர்பார் என்பது தமிழ் வார்த்தையா ??       ஹீ ஹீ இது வம்புக்குன்னே கேட்கப்பட்ட கேள்வி :))

# இல்லை.

& ஆமாம், சுத்தமான தமிழ் வார்த்தைதான். புராண காலத்தில், ஹேமநாத பாகவதரே, 'எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ?' என்று பாடியிருக்கிறாரே! 
                
3, 2020 யிலும் இன்னமும் நம் நாட்டில்  பட்டுப்புடவை சேல்ஸ் அமோகமா இருக்கா ?

# நன்றாகவே இருக்கிறது.


4, இரசிக்கும் இசையினை வைத்து ஒருவரின் மன இயல்பை கணிக்க முடியுமா ?

# என்னால் முடியாது. 

& முடியும். 
                 
5,மனிதர் பற்றி பேசும்போது எதற்கு //குரங்கு கையில் கிடைத்த பூமாலை ,முதலைக்கண்ணீர் ,கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை //போன்ற விலங்குகளை வைத்து சொல்லும் பழமொழிகளை சொல்கிறார்கள் ?

# தெளிவாகப் புரிய வேண்டும் என்பதால்தான்.

& விலங்குகள் எல்லாம் நம்மைப் பற்றி என்னென்ன 'காய்மொழிகள்' சொல்கின்றனவோ தெரியவில்லை!  
மனுஷன் கையில கிடைத்த மசால்தோசை,  மனிதனுக்குத் தெரியுமா பேப்பர் ருசி, etc etc.

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

 தொலைகாட்சியில் ஒளி பரப்பப்படும் சமையல் நிகழ்ச்சிகளை பார்ப்பதுண்டா? ஆம் என்றால் எந்த சேனலின் நிகழ்ச்சியை ரசிப்பீர்கள்?

# ETV குஜராத்தி.

& இப்போ இல்லை. முன் காலத்தில் ஆதித்யன்'ஸ் கிட்சன் இரசித்தது உண்டு. மிகவும் நேச்சுரலாக பேசுவார். 

ஶ்ரீவித்யா, சரிதா, ஜோதிகா யார் கண்ணழகி? தி.கீதாவை கேட்டு விடாதீர்கள்.

# கண் மட்டும் என்றால் சரிதா.



& ஸ்ரீவித்யா.



கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஹாட் சீட்டில் அமர்ந்து ராதிகாவோடு விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் என் மன நிலை எப்படி இருக்க வேண்டும்?
ஒரு கோடியை வெல்ல வேண்டும் அல்லது நான் பேராசைப் படவில்லை பன்னிரெண்டு லட்சம் கிடைத்தால் போதும்.

# முற்றிலும் ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும். ஆசைப்படுவது கோடியாகவே இருக்கலாமே, தவறில்லை. என் நண்பர் ஒருவர் "பரிசு கிடைத்தால் திருப்பதி ஏழுமலையானுக்கு ஐம்பது ஆயிரம் என்று வேண்டிக் கொண்டார். பெருமாள் not interested.

& நான் பார்த்த ஒரே கோடி நிகழ்ச்சி, அரவிந்தசாமி நிகழ்ச்சி மட்டுமே. எல்லா கோடீஸ் நிகழ்ச்சிகளும் match fixing வகை நிகழ்ச்சிகள்தான் என்பது Slumdog Millionaire படம் பார்த்த பிறகு தெரிந்துகொண்டேன். அப்புறம் எந்த கேடீஸ் நிகழ்ச்சியும் பார்ப்பதில்லை. 

சுஜாதாவுக்குப் பிறகு எழுத ஆரம்பித்த ஆண் எழுத்தாளர்கள் பலரிடம் சுஜாதாவின் பாதிப்பு இருப்பது சுஜாதாவின் பெருமையா?  அல்லது காபி அடிக்க சுலபமான நடை என்பதாலா? சுஜாதா தொடாத காபி, அடை, அரிசி உப்புமா சமாசாரங்கள் அவர் பெயரில் வலம் வருகின்றனவே?
               
# நிச்சயம் சுஜாதாவின் வெற்றி தான். Imitation is the best form of flattery !
அவர் நடை காப்பி அடிக்க எளிதல்ல என்று நான் நினைக்கிறேன்.

                   
=================================

மீண்டும் சந்திப்போம். 

=================================

65 கருத்துகள்:

  1. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தலைப்புக்கு மட்டும் பதில் சொல்லிட்டு முழுசும் படிச்சுட்டு வரேன். ஸ்ரீவித்யாவைத் தவிர்த்து மற்றவர்கள் கண்கள் அழகெல்லாம் இல்லை. சரிதாவுக்கு முட்டைக் கண். ஜோதிகாவுக்கு ஒன்றரைக் கண். இதில் அழகே இல்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அர்ச்சனா போன்ற மற்ற கண்ணழகி நடிகைகளைப் பற்றிக் குறிப்பிட்டால் மட்டும் எங்க கீசா மேடத்துக்குத் தெரியவா போகிறது?

      நீக்கு
    2. ஜோதிகாவுக்கு ஒன்றக்கண்ணா...?? பேசும் கண்கள் கிடையாது.அதற்காக??

      நீக்கு
    3. ரம்பாவுக்குதான் ஒன்றரை கண் என சொல்வார்கள். அவர் கோயமுத்தூர் என்பதினால்.. பேச்சு வழக்காக சம்பந்தப்படுத்தி..

      நீக்கு
    4. ஆம். அந்த ரம்பா கண் ஜோக் படித்திருக்கிறேன்.

      நீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  4. அடை, அரிசி உப்புமா என சுஜாதாவின் பெயரில் வருவதெல்லாம் பாக்கியம் ராமசாமி எழுதி சுஜாதா அவர்களின் பெயரில் வலம் வருகின்றன. சுஜாதாவின் எழுத்து நடையே அது போல் இருக்காது என்பது சுஜாதாவைப் படித்தவர்கள் கூடப் புரிந்து கொள்ளாமல் போனது துரதிர்ஷ்டம். ஆனால் அந்தப் பதிவுகள் வலம் வருகையில் நான் சொல்லி விடுவேன். இது சுஜாதாவால் எழுதப் பட்டது அல்ல என.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். கரெக்ட். ஜ ரா சு எழுதியவைதான் பெரும்பாலும்.

      நீக்கு
    2. @கீதா அக்கா: ஜ.ரா.சு. கூட இல்லை. வேறு சிலர் சுஜாதாவின் காலத்தில் ஶ்ரீரங்கத்தில் இல்லாத முரளி காபி கடையைப் பற்றியெல்லாம் எழுதுகிறார்கள். எவ்வளவு முறை இது சுஜாதா எழுதியது இல்லை என்று சொல்ல முடியும்? இப்படிப் பட்டவர்களைப் பார்க்கும் பொழுது பரிதாபமாக இருக்கிறது. தன்னம்பிக்கை இல்லாமல் மற்றவர்களின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு... கேவலம் என்பது கடுமையான வார்த்தையாக இருக்கலாம், வேறு வார்த்தை தெரியவில்லை.

      நீக்கு
    3. முதலில் காபி, உப்புமா, அடை பதிவுகள் எழுதியவர், சுஜாதா போல என்று நினைத்து எழுதியிருக்கமாட்டார். ஆனால், அதை காபி பேஸ்ட் பண்ணியவர், கிளப்பிவிட்டதுதான் இந்த வதந்திப் பதிவுகள் சுற்றுலா வரக் காரணமாக இருந்திருக்கும்.

      நீக்கு
  5. "அந்த மருமகளும் அவள் மகனிடம் அப்படித்தான் இருப்பாள்." என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. எல்லாப் பெண்களும் இப்படி இருந்தும் பார்த்ததில்லை. என் பாட்டிக்கு நான்கு மகன்கள். எல்லா மகன்கள், மருமகள்களிடம் ஒரே மாதிரித் தான் இருந்தார். இப்போக் கூட என் மாமிகள் சொல்லுவார்கள், எங்க மாமியாரைப் போல வராது என! மாமியார், மருமகள் பிரச்னையே மாமியாரின் இந்த ஆதிக்க மனப்பான்மையால் தான் ஏற்படுகிறது என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பெண் குடும்பத்துக்குள் வந்ததும் முக்கியத்துவம் பெறுவதும் தன் ஆதிக்கம் குறைய ஆரம்பிப்பதும்தான் மாமியார் நிலையில் உள்ளவர்கள் வித்தியாசமாக நடப்பதன் காரணம்.

      திருமணத்துக்குப் பிறகு நானும் என் மனைவியும் திரைப்படம் போய்விட்டு வந்தபின் என் அம்மா மிகவும் கோப்ப்பட்டது நினைவில் இருக்கு. தனக்குக் கிடைக்காத ப்ரிவிலேஜ் அடுத்த தலைமுறைக்கு சர்வசாதாரணமாக்க் கிடைப்பதும், விளைச்சல் கொடுக்க ஆரம்பித்த மரத்தின் பயன் இன்னொருவருக்கு நேரடியாக்க் கிடைப்பதும்தீன் மாமியார்களின் (ஒரு சில அல்லது பெரும்பாலான) குணமாறுபாட்டுக்குக் காரணம். தந்தை அப்போதும் தன்னிடம் பணம் இருப்பதால் இந்தமாதிரி சில்லரை விஷயங்களில் நுழைவதில்லை

      நீக்கு
    2. நானும் இப்படி நிறையவே அனுபவிச்சிருக்கேன் நெ.த. அதற்காக இப்போ நானும் அப்படி இருக்க முடியுமா? எங்களுக்கெல்லாம் இங்கே பையர் வீடு, பெண் வீடு என வந்தால் கண், காது, வாய் எல்லாம் இயங்காது. சாப்பிட மட்டுமே வாய் திறக்கும். குழந்தைகளோடு விளையாடும்போது வாய் திறக்கும். மூச்சு விடுவோம். மற்றபடி எதுவும் காதில் விழாது. கண்களில் தெரியாது. எல்லாம் கேட்டுத் தெரிந்தாலும் வாய் பேசாது.

      நீக்கு
    3. ஹாஹா, கௌதமன் சார்! :))))))))

      நீக்கு
    4. கீசா மேடம்... இரண்டு வாக்கியங்களில் எப்படி நடந்துக்கணும்னு சொல்லிட்டீங்க. இந்த மாதிரி அனுபவ உபயோகமான மறுமொழிக்கு நன்றி (நிஜம்மா). ஆனா அப்படி இருக்கறது ரொம்பக் கஷ்டம். யாராவது என் பையனையோ பெண்ணையோ திட்டினால் நான் அப்படி கண்டுகொள்ளாமல் இருப்பேனா?

      நீக்கு
    5. நாங்க இடியே இடிச்சாலும் மௌனம் தான்! இதைக் கூடியவரை புக்ககத்தினருடனும் கடைப்பிடித்தேன் ஓரளவுக்கு. என் பிறந்த வீட்டு மனிதர்கள் என்றால் கொஞ்சம் சத்தமாகவும், கத்தியும் கூச்சலிட்டும் பேசுவேன். ஆனால் அதே இங்கே முடியாது! நம்ம ரங்க்ஸிடம் பேசுவது என்பது கூடத் தேவைக்குத் தான்! கூடிய வரை மௌனம். சிலர் "உம்"மென்று இருக்காளே என்றும் சொல்லி இருக்காங்க. ஆனால் நீண்ட நெடிய கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் சில சமயங்கள் பேசித்தான் ஆகணும்! :))))))

      இதனால் நான் தெரிவிப்பது என்னவெனில் உங்க பிள்ளையையோ, பெண்ணையோ யார் என்ன சொன்னாலும் காதில் விழாதது போல் தான் இருந்தாகணும். இல்லைனா குடும்பத்தில் நிம்மதியோ வாழ்க்கையில் வெற்றியோ காண முடியாது. "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை!" என்பதால் சொன்னவங்களை அவங்க என்ன சொன்னாங்களோ அதை மட்டும் மறந்துட்டுப் பழகணும். இப்போதிலிருந்தே பழகிக்குங்க! :)))))

      நீக்கு
  6. குடும்பக் கட்டுப்பாடு என்னும் பெயரில் நம்மை நாமே சிறுபான்மையினராக ஆக்கிக் கொள்கிறோமோ எனத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை இதற்கு ஆதரவு இல்லை. குறைந்த பட்சமாக 2,3 குழந்தைகளாவது இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவுகளுக்கென்ன.. போகிறபோக்கில் சொல்லிடுவாங்க. தொலைக்காட்சி, அலைபேசி, வீடு, கார், ஜாலியான பொறுப்பு குறைவான வாழ்க்கையை அனுபவிக்காமல் வீட்டில் நர்சரி நடத்தணுமாமே... நடக்கிற காரியமா?

      நீக்கு
    2. எனக்கும் அப்படித்தான் தோன்றும். சமீபத்தில் ஒரு நண்பர் கூறினார். பணம்,காசு பிரச்சனையே இல்லை. மனிதர்கள் இல்லை.அதுதான் பிரச்சனை என்று. இன்றைய ஒற்றைக் குழந்தைகளைப் பார்க்கும் பொழுது பரிதாபமாக இருக்கிறது.

      நீக்கு
    3. //குறைந்த பட்சமாக 2,3 குழந்தைகளாவது இருக்க வேண்டும்.// செல்போனில் பதிலளிப்பதால் கீதா அக்காவின் பதிலை மேற்கோள் காட்ட மறந்து விட்டேன். அதற்கான பதில்தான் நான் மேலே அளித்திருப்பது.

      நீக்கு
    4. அனைவருக்கும் இனிய மிட் மார்னிங்க் வணக்கம்.
      நல்ல கேள்விகள். என் மனதில் சிலசமயம் வரும் கேள்விகளை
      கீதாமா கேட்டு விட்டார்கள்.
      மகன் களுக்குத் திருமணமாகிச் சில நாட்களிலேயே
      நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று புரிந்துவிட்டது.
      இந்த 21ஆம் நூற்றாண்டில் மாமியார்
      மதிக்கப் பட்டாலும் அவளை ஒரு
      பாகமாக ஏற்றுக்கொள்ள மருமகளுக்குப் பயம் இருக்கிறது.
      பிள்ளைகளின் அவஸ்தையைப் புரிந்து கொண்டு நாம் விலகி விடுவதற்கு
      மனத்திடம் கொள்ள வேண்டும்.

      //A persecuted mother in law will take it out on her daughter in law policies //
      belong to my age as a daughter in law.
      I will not repeat it and form a chain of frustrated women.
      Harmony in the family is more important.
      ஏதோ வேதம் ஓதுவது போலப் பேசிவிட்டேன்.
      நம் மக்கள் சந்தோஷத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு
      ஒதுங்கி இருப்பதே நலம்.

      நீக்கு
    5. உண்மை வல்லி. ஒதுங்க வேண்டும் என்றால் அது முழுமையாக ஒதுங்கணும்! இல்லைனா பிரச்னை தான். அவங்க பிரச்னைகளை அவங்களே பேசித்தீர்த்துப்பாங்க. நாம் நுழையவே கூடாது. இன்னிக்கு என்ன சமையல், ராத்திரிக்கு நீ பண்ணுகிறாயா? நானே செய்துடவா? இவை தான் என் மொத்தப் பேச்சே!

      நீக்கு
  7. ஆனால் யாரும் இதை இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்க்கவில்லை என்பதோடு இப்போதைய கால கட்டத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பதையே பெரிய விஷயமாக நினைக்கிறார்கள். அந்தக் குழந்தையைப் படிக்கவைத்து முன்னுக்குக் கொண்டு வருவதையும் பெரிய விஷயமாக நினைக்கிறார்கள். :( அந்தக் காலங்களில் இருப்பதைப் பங்கிட்டுக் கொண்டு சாப்பிட்டதையும், வளர்ந்ததையும் இப்போது யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் மாறினது இந்த கீசா மேடத்துக்குத் தெரியலையே. வீடுகளில் சாதாரண உணவு, வீண்டிக்காத தன்மை, எளிய உடை, தன்வயதொத்தவர்களுடன் வெளியில் சென்று விளையாடுவது அரட்டை அடிப்பது, தன் வீட்டைத் தவிர சுற்றி உள்ளவர்கள் அனைவரையும் மாமா, மாமி என்றெல்லாம் உறவுமுறை சொல்லிப் பழகுவது, கையில் சாதம் போட போட்டி போட்டுக்கொண்டே சாப்பிடிவது என உள்ள பெரிய லிஸ்டுகள் வழக்கொழிந்து பலப்பல வருடங்கள் (50+) ஆச்சுதே

      நீக்கு
    2. நைசாக கீ சா மேடத்தை வயதானவர் என்று சொல்லிவிட்டீர்கள் நெ.த! நாராயண,
      நாராயண !

      நீக்கு
    3. இரண்டு அல்லது மூன்று குழந்தைகள்
      இருந்தால் நலமே. ஒரு குழந்தைக்கு அதற்குத் தேவைக்கு
      மேலேயே பொருட்களைக் கொடுத்து
      வாழ்வின் சிக்கனத்தைச் சொல்லிக் கொடுக்க
      மறந்து விடுகிறார்கள். புத்திசாலிகளாக இருக்கும் குழந்தைக்கு
      எதையும் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை
      குறையும்.முன்பே இதைப் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    4. வல்லி சொல்லுவது சரியே! குழந்தைக்குத் "தான், தன் உடைமை" என்பது அதிகம் ஆகி விடுகிறது. இயல்பிலேயே கொடுப்பது கைவரப்பெற்ற குழந்தைன்னா ஓகே. இன்னும் சில குழந்தைகளுக்கு வேற்று மனிதர்கள் அது தாத்தா, பாட்டியாகவே இருந்தாலும் ஒத்துப் போவதில்லை. தனியாகவே இருக்க வேண்டும் என உணர்கிறார்கள்.

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  9. ஜனவரி 29 விவரங்கள் அருமை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. கேள்விகளும், பதில்களும் அருமை.
    அதற்கு வந்த பின்னூட்டங்கள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  11. இன்றைக்கு நாராயண கோஷம் அதிகமாகக் கேட்கிறதே, என்ன விஷயம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாரதர் வந்திருக்கிறார் ஏகாந்தன் ஜி:)

      நீக்கு
    2. ஆனால் இந்த நாரதர் கலகம் செய்யத்தெரிந்தவர் போல இல்லையே! வேறுயாராவது செய்தால்தான் உண்டு என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா? :-))))

      நீக்கு
  12. பாலச்சந்தர் சார் கதா நாயகிகளின் கண்கள் பெரிதாகக் காண்பிக்கப்படும். அந்தவரிசையில் தான் சரிதா,ஜயந்தி எல்லோரும். இயல்பாகவே கண்ணழகி ஸ்ரீவித்யா மட்டுமே.
    அதில் பாசம்,காதல்,கருணை எல்லாமே அபரிமிதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் அதற்கும் முந்தைய நாட்களில் E V சரோஜா என்றொருவர் இருந்ததையே மறந்துவிட்டமாதிரித் தெரிகிறது. அவர் கண்ணழகுக்கு அப்புறம் தான் மற்றவர்கள் எல்லாம்!

      நீக்கு
    2. ஹய்யோ நாங்க இந்தக் காலத்து நடிகைகள் பற்றி பேசிகிட்டு இருக்கோம். நீங்க TRR மனைவி பற்றி எல்லாம் சொல்றீங்களே சார்!

      நீக்கு
    3. கௌதமன் சார்! சரிதா, ஸ்ரீவித்யா, ஜோதிகா இவர்களெல்லாம் இந்தக்காலத்து நடிகைகளா என்ன? :-)))

      நீக்கு
    4. EVS தலைமுறைக்கு அடுத்த அல்லது இரண்டாவது தலைமுறை நடிகைகள் ஸ்ரீ, ச, & ஜோ.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. கேள்விகளும், பதில்களும் போட்டி போட்டுக் கொண்டு களமிறங்கி ரசிக்க வைத்திருக்கின்றன.

    ஜனவரி 29 விபரங்கள் சேகரிப்பு அருமை. பயனுள்ளதாக இருக்கும்.

    அழகான கண்களுக்கு இங்கு பின்னூட்டங்களிலும் வந்த கண்களை தவிர அந்த கால "அஞ்சலிதேவியையும்" குறிப்பிடலாம். மயக்கும் விழிகளுக்கு, எனக்குத் தெரிந்து நடிகைகள் பானுமதி, ராஜ சுலோச்சனா, டி. ஆர் ராஜ குமாரி இவர்களை குறிப்பிடலாம்.

    கண்கள் பொதுவாக அனைவருக்குமே பேசும் தன்மை கொண்டவை. ஒருவர் மனதில் நினைக்கும் ஒன்றை கண் வழிகள் சட்டென வெளிக் காட்டி விடும். பதிவின் பகிர்வினுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. EVS தலைமுறை நடிகைகளை கரெக்டா ஞாபகம் வெச்சிருக்கீங்க!

      நீக்கு
    2. அன்பு கமலா, பரிபூரணமாக ஒத்துக் கொள்கிறேன்.

      நீக்கு
    3. நீங்களும் ஒத்துக் கொண்டதற்கு நன்றி சகோதரி.

      நீக்கு
  14. நல்ல கேள்வி பதில்கள்.

    அவசரயுகத்தில் ஒரு குழந்தையே போதும் என பலரும் நினைக்கிறார்கள் அது அவரவர் விருப்பம்.

    பதிலளிநீக்கு
  15. அழகான கண்களில் ஶ்ரீதேவியை மறந்தது ம.மு.குற்றம். பேசும் கண்கள் என்றால் நாட்டியப் பேரொளிக்குப் பின்னர் அவர் மருமகள் ஷோபனா. ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவின் கண்கள் கூட கொஞ்சம் சொக்கினார் போல இருந்தாலும் அழகுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொக்கும் கண்கள் என்றால் அது டி.ஆர்.ராஜகுமாரிக்கும், சில்க் ஸ்மிதாவுக்கும் தான் என்பது என் தாழ்மையான கருத்து.

      நீக்கு
    2. போகின்ற போக்கைப் பார்த்தால் ..... கொல்லங்குடி கருப்பாயி, பறவை முனியம்மா தவிர மீதி எல்லா நடிகைகளுக்கும் அழகான கண்கள் என்று ஒவ்வொருவராக சொல்வார்கள் போலிருக்கு. கேள்வி கேட்டவர் மூன்று நடிகைகளின் கண்களை மட்டும்தான் ஒப்பீடு செய்யச் சொன்னார். அதற்கு மட்டும்தான் எங்கள் பதில்.

      நீக்கு
    3. ஹா. ஹா. ஹா. கண்களை வைத்தே கண்கள் பார்க்காமலே, கடுப்பேற்றி விட்டோமா? மூன்றில் ஸ்ரீ யின் கண்கள்தான் அழகு என்பது என் தாழ்மையான கருத்து. நன்றி.

      நீக்கு
    4. மற்ற பெண்களின் கண் அழகை பெண்கள் பாராட்டிப் பேசுகிறார்களே.

      இன்றைக்கு சுனாமி ஏதேனும் வரப் போகிறதா?

      பெண்களின் அழகைப் பற்றி பேச, எடைபோட ஆக்கள்தானே சரியானவர்களாக இருக்க முடியும்? (ஹா ஹா இது புதன் கேள்வி)

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!