கடந்த 2019 ஆம் ஆண்டு - எங்கள் மீள் பார்வை - அ பொ க பகுதியில் காண்க.
இதைப் படிக்கின்ற நீங்கள் ஒவ்வொருவரும் 'எங்கள் குடும்ப' உறுப்பினர். உங்களின் தொடர்ந்த ஆதரவால், நாங்கள் எங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறோம். உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் இதயங்கனிந்த நன்றி !
கர்ண பரம்பரை அதிரா :
1. நேர காலம் புரியாமல், எப்பவும் தன் பேச்சுக்கே முக்கியத்துவம் கொடுத்துப் பேசிக் கொண்டிருப்போரை என்ன பண்ணலாம்?
$ கொஞ்சம் பெரிய தொகை கடனாகக் கேட்டுப் பாருங்களேன்.
# என்னைப் போல் ஒருவன் என திருப்தி அடையலாம்.
# என்னைப் போல் ஒருவன் என திருப்தி அடையலாம்.
& ஃபோனில் என்றால் பிரச்னை இல்லை - ஃபோனைக் கொஞ்ச தூரத்தில் வைத்து ஸ்பீக்கர் ஆன் செய்து நம் வேலையை செய்தவாறே பேசலாம்.
நேரில் பேசுகிறார் என்றால். ....
* முதலில் வாயைப் பொத்தியபடி ஒரு கொட்டாவி விட்டு, 'சாரி' சொல்லவேண்டும்.
* அப்புறம் நன்கு தெரியும்படி வெளிப்படையாக ஒரு கொட்டாவி விடவேண்டும். சாரி சொல்லக்கூடாது.
* அப்புறம் கை கடிகாரத்தை ஒரு முறை நோட்டம் விடவேண்டும்.
* அப்புறம் மீண்டும் கை கடிகாரத்தை நன்கு கவனிக்க வேண்டும்.
* அப்புறம் கை கடிகாரம் நின்றுபோய்விட்டதா அல்லது ஓடுகிறதா என்று காது அருகே வைத்துப் பார்க்கவேண்டும்.
* இதற்கெல்லாம் அசையாமல் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், நம்முடைய அலைபேசியை திடீரென்று எடுத்து, எங்கிருந்தோ அழைப்பு வந்ததுபோல பாவித்து காதருகே வைத்து, " அட ! ஆமாம்டா (அல்லது ஆமாம்டி) --- மறந்தே போனேன். நல்லவேளை ஞாபகப்படுத்தினாய். இதோ அஞ்சே நிமிஷத்துல கிளம்பி அங்கே வந்துடறேன். வெயிட் பண்ணு." என்று சொல்லி அலைபேசியை பைக்குள் வைத்துக்கொண்டே ... பேசிக்கொண்டிருப்பவரைப் பார்த்து, " மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பேசலாம். " என்று சொல்லி, நேரே செருப்பு வைக்கும் இடத்தை நோக்கி நடக்கலாம்.
$ உங்களை விட்டால் வேறு யாரும் செவிமடுப்பதில்லை போலும்.
# சற்று சலிப்பாகத்தான் இருக்கும். ஆனால் மக்கள் தாம் செய்ய வேண்டிய அவசர அலுவல்கள் பற்றி நமக்குச் சொல்லத் தயங்குவதன் காரணமாக இது நேரலாம்.
3. பந்தா காட்டுவது.. என்பதன் சரியான விளக்கம் என்ன?
# இல்லாத முக்கியத்துவத்தை தோரணை மூலமாக
சிருஷ்டிக்க முயல்வதுதான்.
4. கண்ணை மூடியபின், சொர்க்கத்துக்குத்தான் போகவேண்டும் என எல்லோரும் நினைப்பது ஏன்? இறந்துவிட்டால் நமக்கென்ன தெரியப்போகிறது?
$ அந்த நினைப்புதானே நம்மை நல்லவராக்குகிறது!
# வேறு ஒரு தளத்தில் வேறுமாதிரியான அனுபவம் இருக்குமோ எனும் அச்சம்தான்.
5.நடந்து வந்த பாதையை மறப்பது சரியோ?, தவறெனில், கடந்த காலத்தை நினைக்கக்கூடாது என்கிறார்களே அது தப்புத்தானே?
# வேறு ஒரு தளத்தில் வேறுமாதிரியான அனுபவம் இருக்குமோ எனும் அச்சம்தான்.
5.நடந்து வந்த பாதையை மறப்பது சரியோ?, தவறெனில், கடந்த காலத்தை நினைக்கக்கூடாது என்கிறார்களே அது தப்புத்தானே?
$ பாதை என்றால் திரும்ப உபயோகிக்க நேரிடலாம்
கடந்த காலம் திரும்ப வராது.
# கடந்ததை நினைத்து பெருமை, கர்வம், மகிழ்ச்சி அல்லது வருத்தம் கோபம் அடைவது பயனற்றது. மற்றபடி கடந்தது உணர்த்திய பாடங்களை நினைப்பது தவறல்ல.
6. இக்காலத்தில், முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில், மனிதர்களிடையே இரக்க குணம் குறைந்துவிட்டதோ? அதிகரித்திருக்கிறதோ?
$ குறைவு / அதிகரிப்பு என்பது நம் செய்தி எங்கிருந்து என்பது பொறுத்தது.
# குறைந்திருக்கிறது . காரணம், அதை ப் பயன்படுத்தி ஏமாற்றுவது அதிகமாகி விட்டது.
7. என் நண்பியின் புத்திக் கூர்மையைச் சோதிக்க ஆசையாக இருக்கிறது:). எப்படிச் சோதிக்கலாம் என ஒரு ஐடியாத் தாங்கோவன்?
# குறைந்திருக்கிறது . காரணம், அதை ப் பயன்படுத்தி ஏமாற்றுவது அதிகமாகி விட்டது.
7. என் நண்பியின் புத்திக் கூர்மையைச் சோதிக்க ஆசையாக இருக்கிறது:). எப்படிச் சோதிக்கலாம் என ஒரு ஐடியாத் தாங்கோவன்?
$ ஒவ்வொருவரும் அவரவர் வழியில் புத்திக்கூர்மை மிக்கவராக இருக்கக்கூடும். அவரை சோதனை செய்யும் திறமை நம்மிடம் இல்லாமலிருக்க வாய்ப்பு அதிகம். சோதனை முயற்சிகளைக் கைவிட்டு நண்பராகவே இருங்கள்!
# நம் புத்திக் குறைபாடை வெளிப்படுத்திக்கொள்வது நல்லதல்ல.
8.இக்காலத்தில், நட்புக்காக உயிரையும் கொடுப்பேன், நட்புத்தான் உயர்ந்தது எனச் சொல்லிக்கொண்டு, அந்த நட்பின் தீய செயலுக்கெல்லாம் துணை நிற்பவர்கள் எப்படிப் பட்டவர்கள்?
$ தம் தீய செயல்களையும் எண்ணங்களையும் நியாயப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம்.
# நட்புக்காக உயிரைக் கொடுப்பதெல்லாம் மிகைபட மொழிதல்தான்.
உடல் உழைப்பு, ஆறுதல் சொற்கள், வட்டி இல்லாக் கடன், நியாயமான அளவு பொருள் உதவி இதெல்லாம் உண்மை நட்புக்கு அடையாளம். மதுப்புட்டி, சீட்டுக்கட்டு, ரேஸ்புக், உல்லாசப் பயணம் ஆகியன அல்ல.
9. வயதானவர் எனச் சொன்னால், பலருக்கும் கோபம் வருகிறதே? அது இயற்கையாக எல்லோருக்கும் வருமோ?
$ வயதானவர் என்றதும் கோபம் வரவேண்டும் என்றால் புதிதாகக் கற்றுக்கொள்ளும் திறமை மழுங்குவதும் மரணம் நெருங்குகிறது என்று சுட்டிக் காட்டப்படுவதும் பிடிக்கவில்லை என்பதாலிருக்கலாம்.
# நான் வயதான நிலையை விரும்பி ரசித்து ஏற்கும் ஆள்.
"வயதான" எனும் அடைச்சொல் மகளிருக்குப் பிடிக்காது என நம்பப் படுகிறது. அது பற்றி எனக்குத் தெரியாது.
# நான் வயதான நிலையை விரும்பி ரசித்து ஏற்கும் ஆள்.
"வயதான" எனும் அடைச்சொல் மகளிருக்குப் பிடிக்காது என நம்பப் படுகிறது. அது பற்றி எனக்குத் தெரியாது.
10.இஞ்சி இடுப்பு அழகி/அழகன் என்றால் சரியான அர்த்தம் என்ன? படம் போட்டு சே..சே.. விம் போட்டு விளக்கவும் பிளீஸ்ஸ்?:)
# எத்தனை இஞ்சி (") இடுப்பு என்று சொன்னால் படம் போடலாம்.
& பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பானைக்கு இஞ்சிக்கொத்து / மஞ்சக்கொத்து கட்டுவார்கள். பானை வயிறு (தொந்தி) உள்ளவர்களை இஞ்சி இடுப்பர்கள் என்று வாலி, கேலி செய்திருப்பாரோ?
(அதிராவுக்கு ஒரு ஊசிக் குறிப்பு : கர்ணம் என்றால் காது என்று பொருள். எழுதப்படாமல் ஒருவர் சொல்லி ஒருவர் என்று செவிவழியாக வந்த கதைகள்தான் கர்ண பரம்பரைக் கதைகள். கர்ண கடூரம் என்றால் காதால் கேட்க கடூரமான என்று பொருள். கர்ண பரம்பரை என்றால் கர்ணனுடைய பரம்பரை என்று நினைக்கக்கூடாது. )
பானுமதி வெங்கடேஸ்வரன்:
ஒரு பொருளை வாங்கலாம் என்று எப்படி முடிவெடுக்கிறீர்கள்? விளம்பரங்களைப் பார்த்தா? உறவினர்கள்,நண்பர்கள் சொல்வதைக் கேட்டா? சும்மா முயற்ச்சிக்கலாமே என்று நினைத்தா?
$ தேவை என்பதை வைத்து.
என்ன,எவ்வளவு,எங்கு,என்ன விலை, பராமரிப்பு செலவு, இன்னும் ஏனைய விஷயங்களை வைத்தே தீர்மானிக்கிறோம்.
# தேவைதான் வாங்குவதற்கு முதல் காரணம் எனினும் சில சமயம் அந்தப் பொருளின் தரம், அதன் பயன்பாடு சிரமத்தைக் குறைப்பதாகவோ, பொழுது போக்கின் தரத்தை மேம்படுத்துவதாகவோ, தொழில் நுட்பத்தின் அதிக பட்ச அடையாளமாகவோ இருப்பதைக் கொண்டு வாங்க முனைகிறோம்.
முள்ளுக்கத்தரிக்காய், பட்டாசு/மத்தாப்பு, நெயில் கட்டர், கைவச்ச பனியன், ஸ்மார்ட் ஃபோன் இவை வாங்குவதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்குமே !
விளம்பரங்கள் எந்த பிராண்ட் என்பதை முடிவு செய்ய உதவலாம்.
& தேவை என்றால், ஓரளவு விலை குறைவு + தரத்தில் நம்பகம் என்றால் வாங்குவேன். உதாரணம் : பதஞ்சலி பொருட்கள்.
விளம்பரங்களை மட்டும் பார்த்து எதையும் வாங்கமாட்டேன்.
சில பொருட்களை சும்மா முயற்சிக்கலாமே என்ற அடிப்படையில் வாங்குவேன். உதாரணம் : Mango powder, Dry ginger powder, Tamicon, etc.
எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றால், தேவை + முயற்சிக்கலாம் என்ற அடிப்படையில், அமேசான் ஷாப்பிங் மூலம், கஸ்டமர் ரெவியூ , கஸ்டமர் ரேடிங் எல்லாவற்றையும் தீவிரமாக ஆராய்ந்து (5 star rating + 4 star rating must be more than 80% of the total ratings ) பிறகு வாங்குவேன்.
===================================
அவல், பொரி, கடலை & புவி
சென்ற வாரத்தில் கொடுக்கப்பட்ட பகுதி, சிவசங்கரி அவர்கள் எழுதியது. கதை அல்ல, கட்டுரைத் தொகுப்பு. 'சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது?'
***
இனி நேற்றோடு விடைபெற்ற 2019 ஆண்டின் (எங்கள்) புள்ளிவிவரங்கள் பார்ப்போம்.
உங்கள் ஆதரவால், இந்த (2019) ஆண்டிலும் நாங்கள் ஒரு நாளைக்கு ஒரு பதிவு என்ற இலக்கை எட்டினோம். மொத்தம் இருந்த முன்னூற்று அறுபத்தைந்து நாட்களிலும், நாளுக்கு ஒன்றாக முன்னூற்று அறுபத்தைந்து பதிவுகள்!
அதிகம் பேர் கண்டு இரசித்த பதிவு : வெள்ளி வீடியோ
அதற்கு அடுத்தபடியாக அதிகம் பேர் படித்தது : மைதா பக்கோடா
அதிக கருத்துரைகள் பெற்ற பதிவு :
முதல் இடம் : பேய் ஏன் செடிகளில் குடியேறுவதில்லை?
அதை ஒட்டியே அதற்கு இணையாக அடுத்த இடம் : கேட்காம போட்டோ எடுக்கறது தப்பு தம்பி
'திங்க' கிழமை சமையல் பகுதியில் சுவையான பல குறிப்புகளை நமக்கு அளித்தவர், நெல்லைத்தமிழன்.
அடுத்தபடியாக அதிகபட்ச சமையல் பதிவுகளை நமக்கு அளித்தவர், திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன்.
இருவருக்கும் எங்கள் வாசகர்கள் சார்பில் நன்றி.
செவ்வாய் சிறுகதைகள் பகுதியில் புகுந்து கலக்கியவர்கள் நான்கு பேர்.
சுவாரஸ்யமான பல கதைகளை நமக்கு அளித்து, வாசகர் கருத்துரைகளுக்கும் உடனுக்குடன் பதில் அளித்து, இந்த வருடத்தின் அதிக கருத்துரைகளையும் நமக்கு வழங்கிய திரு துரை செல்வராஜூ இரண்டாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டின் எங்கள் சிறப்பு வாசகர் பட்டம் பெறுகிறார்.
கதைப் பகுதியில் அடுத்ததாக, ஜீவி, கீதா ரெங்கன், பரிவை சே குமார் ஆகியோர் ஆளுக்கு ஐந்து கதைகள் எழுதி, செவ்வாய் பதிவுகளை சிறப்பித்தார்கள்.
கேள்வி பதில் பகுதியில், வித்தியாசமான பல கேள்விகளைக் கேட்டு புதன் கேள்வி பதில் பகுதியை சுவாரஸ்யமாக ஆக்கிய இருவர், ஏஞ்சல் & அதிரா.
இருவருக்கும் எங்கள் ஆசிரியர்கள் சார்பில் நன்றி.
இந்த 2020 ஆம் ஆண்டும், நம் எல்லா வாசகர்களும், பதிவர்களும், பெருமளவில் பங்கேற்று, கதை எழுதி, சமையல் குறிப்புகள் அளித்து, கருத்துரைகள் கூறி உ(எ)ங்கள் Blog ஐ சிறக்க வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்த ஆண்டில், உங்கள் எல்லோருக்கும்
எண்ணிய எண்ணங்கள் ஈடேற,
எல்லாம் நல்லதாக நடக்க,
எல்லா நாளும் இனிமைகாண
எங்கள் வாழ்த்துகள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மீண்டும் சந்திப்போம்!
=======================================================
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துகள்
நீக்குகீசாக்காவுக்கு கர்ர்ர்ர்:)) வருடம் பிறந்திருப்பதால் உடனே கர்ர்ர்ர் ஜொள்ளப்பிடாது என:).. நைட் பேசாமல் ஓடிட்டேன்:)).. எங்கள் வருடம் பிறக்கும் நேரத்தில் கெள அண்ணன் போஸ்ட் போட்டார் கர்ர்ர்:)).. எப்பவும் வருடம் பிறக்கும்போது எல்லோரும் ஒன்றாக இருந்து ரிவியில் பார்ப்பது வழக்கம்.. அந்நேரம் கனடாக் கோல்ஸ் உம் வரும் பக்குப் பக்கென.. அதனை எல்லாம் வென்று இங்கு வர முடியாமல் விட்டிருந்தேன்:))
நீக்கு//அந்நேரம் கனடாக் கோல்ஸ் உம் வரும் பக்குப் பக்கென.. அதனை எல்லாம் வென்று இங்கு வர முடியாமல் விட்டிருந்தேன்:))//
நீக்குஅதை ஏன் கேட்கறீங்க. இன்னிக்குக் காலம்பரப் பேசிப் பேசிப் பேசிப்பேசிப் பேசிப் பொழுது கழிஞ்சு சமைச்சுச் சாப்பிடுகையில் இப்போ மணி மத்தியானம் ஒன்றே கால் ஆகிவிட்டது. இப்போத் தான் சாப்பிட்டு முடிச்சு வந்தேன்.
தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு..
பதிலளிநீக்குவாழ்க நலம்...
அனைவருக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....
பதிலளிநீக்குநன்றி, புத்தாண்டு வாழ்த்துகள்.
நீக்குஅனைவருக்கும் அதிராவின், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎங்கள் புதுவருடம் பிறக்கும் நேரமே, இன்று போஸ்டும் வருமெனத் தெரியும் அதனால எங்கட நியூ இயர் லைட்ஸ் பார்க்க ஓடிட்டேன்[டிவியிலதான்:)], எங்கள் புத்தாண்டை வரவேற்றுக் கொண்டே இங்கு திரும்ப வந்தேன்.. பின்பு வாறேன்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
நீக்குஅருமையான அலசல்கள். சிறப்பித்திருப்பவர்கள் அனைவருமே தகுதி வாய்ந்தவர்களே! பானுமதியின் மைதா பகோடா இன்னமும் உலவிக் கொண்டிருப்பதில் இருந்தே அதன் சிறப்புப் புரிகிறது. இம்முறை அதிகம் கேள்விகள் கேட்ட "கர்ண"பரம்பரைக்கு நீங்க கொடுத்திருக்கும் பதிலைப் பார்த்தால் என்ன சொல்லப் போறாங்களோ!
பதிலளிநீக்குபாராட்டுகளுக்கு நன்றி. அதிரா இன்னும் இந்தப் பதிவைப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
நீக்குஆஆ கெள அண்ணன், எனக்கான பதிலை கீசாக்காவுக்கு குடுத்திருக்கிறீங்க. அது நியூஇயர் என்றாலே இப்படித்தான், நேரம் கிடைக்குதில்லை:).. இப்போதான் ஓடி வந்தேன் போஸ்ட் படிக்க.
நீக்கு2019 ன் சிறப்பு வாசகர் என்று
பதிலளிநீக்குஎன்னைச் சிறப்பித்த தங்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி.. மகிழ்ச்சி....
இதுவும் எங்கள் பிளாக்கினால் தானே ஆயிற்று...
மகிழ்ச்சி... அனைவருக்கும் நன்றி...
சிறந்த வாசகர் மட்டுமின்றி சிறந்த கதை சொல்லி என்னும் பட்டமும் உங்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும். வாழ்த்துகள்.
நீக்குஆம்.
நீக்குஅனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குகம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் பிரச்சனையும் கை வலியும் சென்ற ஓரிரு மாதங்களில் இல்லைனா, கீதா ரங்கன் அதிக பின்னூட்டம் எழுதியவர் என்ற வரிசையில் வந்திருப்பார்.
உண்மைதான்!
நீக்குகேள்வி பதில்கள் அருமை...
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். பிறந்திருக்கும் புதிய வருடம் எல்லோருக்கும் மகிழ்ச்சியையும், நிறைவையும், ஆரோக்கியத்தையும் அளிக்க ஆண்டவனை வேண்டுகிறேன். உங்கள் நல்ல விருப்பங்கள் நிறைவேறட்டும். வலையுலக நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
நீக்குசிறப்புத் தகுதி பெற்ற உங்களுக்கும் என் வாழ்த்துகள் பானுமதி!
நீக்குஅட! ஆச்சர்யமாக இருக்கிறதே! சென்ற ஆண்டில் நான் இரண்டு விஷயங்களில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறேன். இரண்டுமே சமையல் குறிப்புகள்தான். ஒரு கல்லுல ரெண்டு மாங்கா..ஆதரவுக்கு நன்றி.
பதிலளிநீக்குவாழ்த்துகள். இந்த ஆண்டிலும் உங்கள் பங்கேற்பை எதிர்பார்க்கிறோம்.
நீக்குசென்ற ஆண்டின் சிறந்த வாசகர் திரு.துரை செல்வராஜூ அவர்களுக்கு வாழ்த்துக்கள்! நல்ல தேர்வு.
பதிலளிநீக்குஆம், அதே !
நீக்குதங்கள் அன்பினுக்கு நன்றி...
நீக்குஎங்கள் ப்ளாக் குழும ஆசிரியர்கள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும்,அவர் தம் குடும்பத்தினருக்கும் தித்திப்பான புத்தாண்டு வாழ்த்துகள். எல்லாம் இனிதே எப்போதும் அமைய இறைவன் அருள்புரிவானாக.
பதிலளிநீக்குதித்திப்பான புத்தாண்டு வாழ்த்துகள்!
நீக்குஜனவரி ஒன்றாம் தேதியை புத்தாண்டு என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதிலளிநீக்குசென்ற ஆண்டின் சிறந்த நிகழ்வு(உலக அளவில்,இந்திய அளவில்) என்று எதை கருதுகிறீர்கள்? இந்த ஆண்டின் முதல் கேள்வியை கேட்ட வாசகி நான்தானே?
என் வாயிலிருந்து வார்த்தைகளைப் பிடுங்கிட்டீங்க! :)))) அப்போ கணினியின் சார்ஜ் தீர்ந்து போய் எச்சரிக்கை வரவே உடனே அணைக்க வேண்டியதாச்சு! இல்லைனா இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பேன். :))))))
நீக்கு// இந்த ஆண்டின் முதல் கேள்வியை கேட்ட வாசகி நான்தானே! // ஆம், ஆம்!
நீக்கு//கணினியின் சார்ஜ் தீர்ந்து போய் எச்சரிக்கை வரவே உடனே அணைக்க வேண்டியதாச்சு!// ஹா ஹா !உங்கள் சுறுசுறுப்போடு என்னால் போட்டி போட முடியாது. உங்கள் கணினிக்கு என் நன்றிகள். :)))
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்த பொன்னாளாக பிரகாசிக்கவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இரவு புது வருடத்தை எதிர்பார்த்து பின் பதிவு எழுதி என வரவேற்றதில் தாமதமாகிவிட்டது.வலையுலக சகோதர சகோதரிகளுக்கு எனது மனங்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.சாதனைகள் பல படைத்த/படைக்கும் எ.பிக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நாங்க யாருமே இரவு விழித்திருந்து புது வருடத்தை வரவேற்கும் பழக்கம் வைச்சுக்கலை. அன்னிக்குனு பார்த்து தூக்கம் ஜாஸ்தியா வரும்!
நீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். க ஹ !
நீக்குஎப்பவும் புத்தாண்டில் ஹொலிடே வரும் என்பதால விழிச்சிருந்து மகிழ்வதில் ஒரு இன்பம், இங்கு வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும்.
நீக்குபாதி ஆட்டத்தில் விராட் கோஹ்லி retired hurt-ஆனதுபோலத் தெரிந்தார், போனவருடம் கீதா ரெங்கன். இந்த வருடம் fit-ஆக உள்நுழைந்து மட்டையைச் சுழற்றுவாராக ! பௌண்டரி, சிக்ஸர் என அவரிடமிருந்து பறக்கும். கிழமைகள் ஜாக்ரதை!
பதிலளிநீக்குஎதிர் பார்க்கிறோம். ஆசிரியர்கள் helmet போட்டுக்கொண்டு தயாராக இருப்போம்!
நீக்குஅன்பின் எங்கள் ஆசிரியர்களுக்கும் நட்புகளுக்கும் இனிய
பதிலளிநீக்குபுத்தாண்டு நல்வாழ்த்துகள்.
திங்க பதிவு கொடுத்து சிறப்பு பெற்ற பானுமாவுக்கும், நெல்லைத்தமிழனுக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.
கீதா ரெங்கன் சீக்கிரம் நலம் பெற்று திரும்பட்டும்.
அன்பு துரைக்கு சிறந்த கதை சொல்லி பட்டம் கொடுக்க
வேண்டும். வாழ்க நலம் துரைசெல்வராஜு.
நல்ல பதிவுகளையும் பாடல்களையும் கொடுத்து
எங்களைட் தினம் ரசிக்க வைக்கும்"எங்கள் ப்ளாக்"
குழுமத்துக்கு சிறந்த இணையக் குடும்பப் பத்திரிகை என்ற பட்டம் வழங்குகிறோம்.
தினம் இரண்டு பதிவுகள் போட உங்களிடம் விஷயம் இருக்கிறது.
எதிர்பார்ப்போம்.நன்றி.
// நல்ல பதிவுகளையும் பாடல்களையும் கொடுத்து
நீக்குஎங்களைட் தினம் ரசிக்க வைக்கும்"எங்கள் ப்ளாக்"
குழுமத்துக்கு சிறந்த இணையக் குடும்பப் பத்திரிகை என்ற பட்டம் வழங்குகிறோம்.//
நன்றி, நன்றி, நன்றி!
இணைய குடும்பப் பத்திரிக்கை...
நீக்குஆகா..
திக்கெல்லாம் தித்திக்க
தேனமுதம் தான் துளிர்க்க
எத்திக்கும் புகழ் பெருக்கி
எங்கள் பிளாக் வாழியவே!...
நன்றி, நன்றி!
நீக்குநன்றி வல்லி அக்கா!
நீக்குபதிவு நன்று இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஜி
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
நீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபுத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நீக்குமுதலில் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள் பெற்றவர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இவ்வளவு அழகான ஒரு ப்ளாக்கை உருவாக்கிய Admn க்ரூப்பிற்க்கும் எங்கள் நன்றி. இந்த ப்ளாக் மேலும் மேலும் வளர்ந்து, பரந்து, விரிந்து ஒங்கி உயர வேண்டும். அதற்கு நாம் யாவரும் பாடு படுவோம். மீண்டும் யாவருக்கும் என் “இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்”. இப்படிக்கு ரமா ஸ்ரீனிவாஸன்.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு எங்கள் நன்றி!
நீக்குஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்துகள்.சிறப்பாக எங்கள்ப்ளாக்.
பதிலளிநீக்குசிறப்பாக எங்கள்ப்ளாக். நன்றி!
நீக்குதனி ஒருவரால் நடத்தப்பட்டால் பெருமைதான் ஊர் கூடிதேர் இழுப்பது தனி ஒருவருக்குப் பெருமை அல்லவே ருந்தாலும் தேரின் அசைவு மகிழ்ச்சி தருகிறது
பதிலளிநீக்குநன்றி சார்!
நீக்குநீங்களே தேர் எனச் சொல்லி விட்டீர்கள். தேர்த்திருவிழாவுக்குத் தான் கூட்டமும் அதிகம் வரும். அதுவே ஊருக்கும் சிறப்புத் தரும். தேரைப் பலர் கூடி இழுத்தால் தான் நிலைக்கு வரும். ஆகவே இந்த "எங்கள் ப்ளாக்" என்னும் தேரை நாம் அனைவருமாகப் பிடித்து இழுத்துக் கொண்டு போகிறோம். பலர் கூடி இழுத்தாலும் தெளிவும், திறமையும், அரவணைப்பும், இடையே ஊடோடும் நகைச்சுவையும் இருப்பதால் திருவிழாவில் நெரிசல் இல்லை. அனைவரும் ஒரே மாதிரி சந்தோஷமாக இழுக்க இழுக்கத் தேரும் அசைந்து அசைந்து போகிறது.
நீக்குதனி ஒருவர் மட்டும் எல்லாப் பெருமையையும் சுமக்காமல் அனைவரும் பகிர்ந்து கொள்ள இடம் அளிக்கிறதே எங்கள் ப்ளாக். அது தான் இதன் தனிச் சிறப்பு.
நீக்குஆஹா ! சிறப்பாக சொன்னீர்கள்! நன்றி!
நீக்குஆம். எங்கள் ப்ளாக் என்பது Team work. Credit for success of the team goes to all the team members - editors, writers and readers.
நீக்குநல்ல பத்திரிகை என்பது ஓவியமல்ல, ஒருவரே வரைவதற்கு. இணையப் பத்திரிகை போன்று எல்லோரும் எங்கள் பிளாக் என்று சொல்லும் பெருமை பெற்றிருப்பது சிறப்பல்லவா?
நீக்குஅரசியலில், மோடி, தனி ஒருவர் என்றால், எங்கே போச்சு ஜனநாயகம், சர்வாதிகாரம் வந்துவிட்டது என்று கூக்குரலிடுகிறோம். ஆனால் இணையதளத்தில் பத்திரிகை போல பலரும் கலந்துகொண்டால் அங்கலாய்க்கிறோம். ஹா ஹா
தன்னால்தான் என்று எ.பி நினைத்திருந்தால், மற்றவர்களை ரெக்க்னைஸ் செய்திருக்க மாட்டார்களே.
சரியாக சொல்லியிருக்கிறீர்கள். ஒரே ஆள் எழுதி பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்த பத்திரிகை என்று பார்த்தால் - தமிழ்வாணன் = கல்கண்டு. (அவரும் பல ஆங்கிலப் பத்திரிகை செய்திகளைத்தான் திரட்டி, தமிழில் அளித்துவந்தார் என்பது வேறு விஷயம்.)
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துகள்
நீக்குகேள்விகளும், பதில்களும் அருமை.
பதிலளிநீக்குசிறப்பு பட்டங்கள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி.
நீக்கு//எண்ணிய எண்ணங்கள் ஈடேற,
பதிலளிநீக்குஎல்லாம் நல்லதாக நடக்க,
எல்லா நாளும் இனிமைகாண
எங்கள் வாழ்த்துகள். //
சிறப்பான வாழ்த்து.
நன்றி.
நன்றி!
நீக்குஇந்த மகிழ்ச்சியான நேரத்திலும் கீதாரங்கன் அவர்களைக் காணாதது குறைதான்..
பதிலளிநீக்குவரவேண்டும்.. அவர் வரவேண்டும்... விரைவில் வரவேண்டும்!..
டும், டும், டும் என்று நாங்களும் முழங்குகிறோம்.
நீக்கு//உங்களின் தொடர்ந்த ஆதரவால், நாங்கள் எங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறோம். உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் இதயங்கனிந்த நன்றி.. //
பதிலளிநீக்கு'எங்கள் பிளாக்' என்று பெயர் வைத்தாலும் வைத்தீர்கள்,
எங்கள் - உங்களில் கலந்து நெகிழ்ந்து எங்கள், நாங்களாகி
உங்கள், நாங்களில் கரைந்து நாங்களும் உங்களானோம் என்று கைகுலுக்கி... எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
அடுத்த ஆண்டில் இதை விட அதிகம் சாதிப்போம் என்று எல்லாம் சேர்ந்து சூளுரைப்போம்.
ஆஹா ! மிக்க நன்றி ஜீவி சார்!
நீக்கு//அ பொ க பகுதியில்//
பதிலளிநீக்குஇதென்ன இது கோட் வேர்ட் வச்சுப் பேசத்தொடங்கிட்டார் கெள அண்ணனும்:).
ஹா ஹா ஹா என் முதல் கேள்விக்கு நிறைய விளக்கம் மினக்கெட்டுத்தந்திருக்கிறீங்க நன்றி நன்றி.
என் கேள்வியில் இன்னொன்றும் இருக்கு அதாவது.. சூழ்நிலை தெரியாமல் பேசுவோர்.. அதாவது ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது, அப்போது ஆறுதல் சொல்லாமல், அதையும் நகைச்சுவைபோல எடுத்து, இன்னும் நகைச்சுவை சொல்லிக் கொண்டிருப்பினம், அப்போ கெட்ட கோபமாக வருமெல்லோ:))
ஹா ஹா ஹா == அப்படிச் செய்தால் பேசுபவர் நமது ஜென்மப் பகையாளி ஆகிவிடுவார்!
நீக்குதமிழறிஞர் அதிரடி, அவல், பொரி, கடலை எனக் கொறிக்கக் கொடுத்திருப்பதைத் தான் கௌதமன் சார் அபொக எனச் சொல்லி இருக்கார். இது தெரியலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குஉண்மையாவோ கீசாக்கா.. நான் நினைச்சேன்.. அன்பாக... பொறுமையாக.. கவனிக்கவும் என:))
நீக்குஇதுவும் நல்லாத்தான் இருக்கு. இதையே வைச்சுப்போம். :)
நீக்கு//
பதிலளிநீக்கு$ உங்களை விட்டால் வேறு யாரும் செவிமடுப்பதில்லை போலும்.//
ஹா ஹா ஹா, இக் கேள்வியில் நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன்:), இதில கொஞ்சம் உண்மையும் இருக்கு, என் கணவரும் சொல்லுவார், உங்களையும் கொஞ்சம் கவனிக்கோணும் அதிரா, சிலருக்கு நான் பிஸி எனச் சொல்லி கட் பண்ணலாமே என:).. நானோ முடிஞ்சவரை என்னைத்தான் வளைச்சுக் குடுப்பேன்.
//$ பாதை என்றால் திரும்ப உபயோகிக்க நேரிடலாம்
கடந்த காலம் திரும்ப வராது.//
இது பொயிண்ட்:)..
$ சார்பில் நன்றி!
நீக்கு//சோதனை முயற்சிகளைக் கைவிட்டு நண்பராகவே இருங்கள்!//
பதிலளிநீக்குஹா ஹா ஹா
///# நம் புத்திக் குறைபாடை வெளிப்படுத்திக்கொள்வது நல்லதல்ல.///
ஹா ஹா ஹா .. “வாயைத்திறந்து நான் முட்டாளேதான் என நிரூபிப்பதைக் காட்டிலும், வாயை மூடிக்கொண்டு, என்னை முட்டாள் என நினைச்சாலும் பறவாயில்லை என இருப்பது மேல்” என ஒரு பொன்மொழி இருக்கு.. அது நினைவுக்கு வருது:)) .
//பானை வயிறு (தொந்தி) உள்ளவர்களை இஞ்சி இடுப்பர்கள் என்று வாலி, கேலி செய்திருப்பாரோ? //
இப்படியும் ஒன்றிருக்கோ?...
பதில்களுக்கு நன்றி நன்றி.
பதில்கள் அளிக்க சந்தர்ப்பம் கொடுத்ததற்கு எங்கள் நன்றி.
நீக்கு//(அதிராவுக்கு ஒரு ஊசிக் குறிப்பு : கர்ணம் என்றால் காது என்று பொருள். எழுதப்படாமல் ஒருவர் சொல்லி ஒருவர் என்று செவிவழியாக வந்த கதைகள்தான் கர்ண பரம்பரைக் கதைகள். கர்ண கடூரம் என்றால் காதால் கேட்க கடூரமான என்று பொருள். கர்ண பரம்பரை என்றால் கர்ணனுடைய பரம்பரை என்று நினைக்கக்கூடாது. ) //
பதிலளிநீக்குஓ.. இதை இப்போதானே கேள்விப்படுறேன்:))..
கொட்டும் மழைக் காலம் உப்பு விற்கப் போனேன்ன்.. காத்தடிக்கும் நேரம்.. மாவு விற்கப் போனேன்ன்... அது ஒன்றுமில்லை பிபிசில சிட்டுவேசன் சோங் போகுது கர்ர்ர்:)).
ஹா ஹா ஹா நல்லவேளை இது தெரியாமலேயே மீ பசும்பொன்னாகிட்டனே:))..
ஆனா ஒன்று கர்ணன் + பரம்பரை = கர்ணபரம்பரை.. இப்படியும் வரும்தானே.. அதை நினைச்சே வச்ச்சேன் :).. விளக்கத்துக்கு நன்றி.
புரிதலுக்கு நன்றி. வாழ்க!
நீக்குஇதை ஆரம்பத்திலேயே சொல்லியிருப்பேன்...
நீக்குப. பசும் பொன்னின் தளத்துக்குப் போவது என்றாலே பிரச்சினை..
இன்று கூட அப்படித்தான்..
இட்லி. காம்... ( இண்ட்லி. காம் )
என்றொரு திரை விழுந்து வெளியேற்றி விட்டுத் தான் மறுவேலை பார்க்கும்...
ஸ்ரீமதி மனோசாமிநாதன் அவர்களது தளத்திலும் இப்படித்தான்...
என்ன செய்யலாம்?...
துரை அண்ணன், ஐபாட் எனில்தான் பிரச்சனை, மொபைலில் என் தளம் எந்தப் பிரச்சனையுமில்லையே.. எதில திறக்க கஸ்டப்படுறீங்களெனத் தெரியவில்லையே..
நீக்கு//ஒரு பொருளை வாங்கலாம் என்று எப்படி முடிவெடுக்கிறீர்கள்? விளம்பரங்களைப் பார்த்தா? உறவினர்கள்,நண்பர்கள் சொல்வதைக் கேட்டா? சும்மா முயற்ச்சிக்கலாமே என்று நினைத்தா?//
பதிலளிநீக்குபானுமதி அக்கா, ஒவ்வொரு பொருளுக்கும் உங்கள் ஒவ்வொரு கேள்விபோலத்தான் பொருட்கள் வாங்குகிறோம், அதாவது பொருளின் பெறுமதியைப் பார்த்து.
குறைஞ்ச விலைப் பொருட்கள் எனில், போனாப்போகுது அது என்னவென்றுதான் பார்த்திடலாம் என விளம்பரத்தைப் பார்த்து வாங்குவதும் உண்டு:)).
ஓ மைதா ப்க்கோடா நல்ல விலைக்கு போயிருக்குதே:)) ஆவ்வ் பானுமதி அக்கா சோட் அண்ட் சுவீட்டா அள்ளி எடுத்திட்டா வாழ்த்துக்கள்... ஹா ஹா ஹா.
//அதிக கருத்துரைகள் பெற்ற பதிவு : //
ஹா ஹா ஹா சனங்களுக்கு பேயைத்தான் அதிகம் பிடிக்கிறது என்பது தெட்டத் தெளிவாகப் புரியுது:).
நன்றி.
நீக்குநெல்லைத்தமிழனின் குறிப்புக்கள் அதிகம் வந்தது தெரியும், ஆனா பானுமதி அக்காவும் அதிகம் போட்டிருக்கிறா அது தெரியவில்லை, இப்போதான் அறிகிறேன்.. வாழ்த்துக்கள் இருவருக்கும், என்வலப்புக்களை என்னிடம் தாங்கோ கெள அண்ணன், நான் பத்திரமாக அவர்களிடம் ஒப்படைப்பேன்.. நேரில வாங்க கூச்சப்படுவினம் என்பதால சொன்னேனாக்கும்:))
பதிலளிநீக்குஅனுப்பி இருக்கிறேன் ....
நீக்குஆஆஆஆ துரை அண்ணனை அடிக்க முடியுமோ.. கிராமத்துக் கதைகளை அள்ளி வழங்கி அனைவரது மனங்களையும் தன் பக்கம் கவர்ந்திட்டார்ர்.. என்னாலதான் திங்கள் செவ்வாய்களில் பெரிதாக கலந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது, சில நாட்களில் படிக்க கூட முடியாமல் விட்டுவிடுவேன்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் துரை அண்ணன்.. தொடர்ந்து எழுதுங்கோ.. கவிதையையும் முயற்சிக்கலாமே இவ்வருடம்.
துரை சார் - கவிதைகள் எழுதி நம்ம ஏரியா வுக்கு அனுப்புங்கள்.
நீக்குஆகட்டும் பார்க்கலாம்..
நீக்குஅன்பினுக்கு நன்றி..
//புதன் கேள்வி பதில் பகுதியை சுவாரஸ்யமாக ஆக்கிய இருவர், ஏஞ்சல் & அதிரா. //
பதிலளிநீக்குஹா ஹா ஹா இது அஞ்சுவுக்குத்தான் சேரும், நான் ச்சும்மா கூட்டத்தில் கோமாளி:)) ஹா ஹா ஹா.
அனைட்த்ஹுக்கும் நன்றிகள். புதுவருடம் இரவிரவாக் கொண்டாட்டம்.. பாட்டி, இப்போ மயான அமைதி.. எல்லோரும் உறக்கத்தில் ஊரே அடங்கியிருக்குது இங்கு..
ஓகே லஞ்க்கு ரெஸ்டோரண்ட்:)).. மீண்டும் சந்திப்போம்.
கூட்டத்தில் கோமாளியா ! அதெல்லாம் இல்லீங்கோ ! உங்கள் புனை பெயர்களுக்காகவே ஒரு சிறப்புப் பட்டம் கொடுத்திருக்கவேண்டும்.
நீக்குவிடுபட்ட, நூலிலிருந்து விடுபட்ட பட்டம் !
நீக்கு😃😃😃
நீக்கு@ ஏ அண்ணன்..
நீக்குhttps://i.ytimg.com/vi/ImeqhgSe-Rg/maxresdefault.jpg
எபி ஆசிரியர்கள் மற்றும் எபி க்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! மேலும் மேலும் எல்லோரையும் ஊக்குவித்து, பாரா ட்டி மகி ழ்வித்து அதில் மகிழ்ச்சி அடையும் எபி மேலும் வளர்ந்திட மகிழ்ந்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅம்மா, அக்காஸ், அண்ணா ஸ், தம்பிஸ், நட்பூக்கள் அனைவருக்கும் இனிய மகிழ்வான புத்தாண்டு வாழ்த்துகள்...
அட பதிவில் கீதாவும்!!! மிக்க நன்றி எபிக்கு. அருமையான கதைகள் தந்த துரை அண்ணன், அருமை தம்பி யம் அண்ணனும் ஆன நெல்லை, குமார், பானுக்கா ஏஞ்சல் அதிரா எல்லோருக்கும் வாழ்த்துகள்...
ஏகாந்தன் அண்ணா, கௌ அண்ணா உங்கள் கருத்து பார்த்து சிரித்து முடியல...
கைவலி எதுவும் இல்லை இப்போது. நலமே. ..கணினி மாற்ற வேண்டிய நிலை. என் கணினி மருத்துவர் மாற்று கணினி கொடுத்தாலோ அல்லது பழையதை ஓரளவு சிறிய பட்ஜெட்டில் சரி செய்யmudinthaal sari seythu koduthaal மீண்டும் வந்திடலாம். புதியது என்றால்...யோசிக்கணும்..இப்போதைக்கு இல்லை.... மொபைலில் எனக்கு கடினம் என்பதால் வர இயலவில்லை...இதுதான் காரணம்...
விசாரித்த அனைவருக்கும் நன்றி....எல்லாரும் சொல்லியிருப்பதும் மிக்க மகிழ்ச்சி தருகிறது..மனம் நெகிழ்ச்சி...நல்ல நட்புகள் பெற்றமைக்கு...விரைவில் வர முயற்சி செயகிறேன்..(ஹப்பா ஒரு வழியா மொபைல்ல அடிச்சிட்டேன்)
மீண்டும் எல்லாருக்கும் வாழ்த்துகளுடன் நன்றியும்...பானுக்கா உங்களுக்கும் nantri!!!!
GgeethA
ஆஹா வாங்க, வாங்க! விரைவில் கணினி சரியாக எங்கள் வாழ்த்துகள்.
நீக்குபுத்தாண்டில் தலைகாட்டிவிட்டார். Auspicious beginning!
நீக்குஆம்! உண்மை.
நீக்குவாங்க, வாங்க, விரைவில் எல்லாம் நலமாகப் பிரார்த்தனைகள்.
நீக்குவாங்கோ கீதா வாங்கோ.. என்ன இது மொபைலில் ரைப் பண்ணுவதுக்கு இவ்ளோ கஸ்டம் என்கிறீங்க... அதெல்லாம் ஒன்றுமில்லை, செந்தமிழும் நாப்பழக்கம், கைத்தொழிலும் கைப்பழக்கம்:)) ஹா ஹா ஹா மொபைலால வாங்கோ.....
நீக்குஉங்கள் மயிலைப்:) பார்த்தேன்.. மிக்க நன்றி
'இஞ்சி இடுப்பழகா' பாடலை எழுதியிருப்பது வாலியா? நான் வைரமுத்து என்று நினைத்தேன். சென்ற வார புதிரைப் படித்த பொழுது, பெண்வாடை அடிக்கிறதே என்று தோன்றியது. ஆனால் சிவசங்கரி என்று தெரியவில்லை. ஜெயகாந்தனோ என்ற சந்தேகமும் இருந்தது. வல்லி அக்காவும் சொன்னாரா, அந்தப் பக்கம் சாய்ந்து விட்டேன்.
பதிலளிநீக்குசி நூ ந சி கட்டுரைகள் நான் விரும்பிப் படித்த சி ச கட்டுரைகள். கிட்டத்தட்ட How to stop worrying and start living பாணியில் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள்.
நீக்குவெற்றிப் பயணம் தொடரட்டும். தங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி மேடம்.
நீக்குமிக்க நன்றி கௌதமன் சார் மற்றும் எங்கள் பிளாக் நட்பூக்கள் அனைவருக்கும்
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை.
ஆனால், முதல் கேள்விக்கும், இரண்டாவது கேள்விக்கும் ஏதோ தொடர்பு இருக்கிற மாதிரி தெரிகிறது.அத்தனையையும் ரசித்தேன்.
எ. பியின் சாதனைகள் இவ்வருடம் இன்னமும் நிறைய அளவு உயர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
எ. பியின் சாதனையாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், என அனைத்தையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களுக்கும், சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கும் என்னுடைய மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.அத்தனை பகிர்வுக்கும்
நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்வாழ்த்துகளுக்கு அவர்கள் + எங்கள் சார்பில் நன்றி.
நீக்குஇருந்தாலும் 2019 இல் அதிக கொமெண்ட்ஸ் போட்டவர் எனவும் ஒரு கணக்கெடுப்பு நடத்தியிருக்கோணும் நீங்க.. நடத்தியிருந்தால் கீசாக்காவுக்கே கிரீடம் கிடைச்சிருக்கும் என நம்புகிறேன்.
பதிலளிநீக்குஎதுக்கும் அதிராவின் குழை சாதத்தையும் மீள் பரிசீலனை செய்யும்படி கனம் கோட்டார் அவர்களைக் கேட்டமர்கிறேன் ஹா ஹா ஹா:))
ஹா ஹா பரிசீலனை செய்கிறோம்.
நீக்குஇனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குசென்ற வருடம் சிறப்பாகவே கழிந்தது என்பது அறிந்து மகிழ்ச்சி. தினம் ஒரு பதிவு - வாழ்த்துகள். இந்த வருடமும் தொடரட்டும் தினம் ஒரு பதிவு.
பதிலளிநீக்குகேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நன்றி.
நீக்கு