வியாழன், 2 ஜனவரி, 2020

ஊபர் ஓட்டுநரின் ரவுசு

பெரும்பாலும் ஊபர் டிரைவர்கள் ரொம்பப் பேசாமல் மௌனமாக கொண்டு சென்று விட்டு விடுவார்கள்.   
சிலர் சில விஷயங்கள் பேசுவார்கள்.  சிலர் எதற்காவது சண்டை போடுவார்கள்.

சென்ற வாரம் நான் சென்ற இந்த ஊபர் ஓட்டுநர் வித்தியாசமான ரகம்.  டெலிபோனிலேயே தொடங்கி விட்டது ரவுசு!  கேஷா?  கார்டா? என்று கேட்டுவிட்டு, கேஷ் என்றதும் வந்தார். கார்க் கதவைத் திறந்து சரியாக அமரும் முன்பே அதற்கான காரணத்தைச் சொல்லத் தொடங்கி விட்டார்.

"எல்லோரும் கார்ட் என்றால் பெட்ரோல் போடக்கூட காசு இருக்காது.   எல்லோரும் இறங்கி தாங்க்யூ என்று கும்பிட்டு விட்டுப் போய்விடுவார்கள்.  எனவே நீங்கள் கார்டென்று சொல்லியிருந்தால் நான் ட்ரிப்பை கேன்சல் செய்திருப்பேன். காலையிலிருந்து வந்த நான்கு பேர்களும் கார்ட்.    கைச் செலவுக்குக் காசு இல்லை....."

தொடர்ந்தும் பேசிக்கொண்டே வந்ததோடு, ஒவ்வொரு விஷயம் முடிந்ததும் ஒரு சிரிப்பு.   சிரிப்பென்றால் எப்படி தெரியுமா?  நிறம் மாறாத பூக்கள் படத்தில் ராதிகா சிரிப்பாரே அப்படி ஒரு சிரிப்பு.  அதில் பாதியாக, ஆரம்பித்து, சட்டென்று நின்று விடும்!  அதே சமயம் இன்னும் கொஞ்சம் இன்னும் சத்தமாக!  நாங்கள் (நான், பாஸ், மகன்) ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்!  மகன் செல்லில் எதையோ பார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு 'என்ன ஸார்...   கம்ப்ளெயிண்ட் பண்றீங்களா?  இப்படிதான் போன மாசம் ஒருத்தர் கம்ப்ளெயிண்ட் செய்து ஊபரில் என்னை மூன்று நாள் பிளாக் பண்ணி வைத்திருந்தார்கள்..." என்று சொல்லி ஒரு சிரிப்பு!

அரசாங்கம், ஏழை, பணக்காரன், காசு, காய்கறி சோஷலிசம் என்று பல விஷயங்களையும் தொட்டுப் பேசிப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்.

சிக்னலில் வண்டி நிற்க,  ஓட்டுநர் திடீரென டேஷ்போர்டைத் திறந்து ஒரு பேனாவை எடுத்து கையில் வைத்துக் கொண்டார்.  என்ன என்று பார்த்தால், ஒரு வயதான பெண் பேனாக்களைக் கையில் வைத்துக் கொண்டு வண்டிகளுக்கு அருகே வந்து விற்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.   அவர் இந்த வண்டி அருகே வந்ததும்,  ஜன்னல் வழியே அந்தப் பேனாவை அவர் முகத்துக்கெதிரே ஆட்டி சிரித்தார் பாருங்கள்..   ஒரு சிரிப்பு!

​இறங்கும்போது அவர் பெயர் கேட்டேன்.  "நித்தியானந்தம் ஸார்" என்றார்.​  அரைமணி நேரம் போனதே தெரியவில்லை என்று சொல்லி விட்டுச் சென்றார்!


================================================================================================

இந்த தேநீர் விளம்பரத்தின் ரேடியோ விளம்பரப் பாடல் நினைவிருக்கிறதோ?  எனக்கு அதன் கடைசி வரி மட்டும் டியூன் நினைவிருக்கிறது.   லிப்டன் லாவோஜி...  லிப்டன் லாவோஜி...   லிப்டன் லாவோஜி என்று முடியும்!



========================================================================================

திகில் நிழல்!  இப்படி பார்த்தால் பகீரென்றிருக்காதோ!



============================================================================================

சென்ற வாரம் சாமா ஜோக்...   இந்த வாரம் சுதர்சன் ஜோக்!




===============================================================================================


திரு ஆர் வி ராஜு பேஸ்புக்கில் பகிர்ந்திருந்த ஒரு சுவாரஸ்யமான கட்டுரை :

ஒரு அரசு நிறுவனம் எப்படிச் செயற்படுகிறது என்பது புரிந்து விட்டாலே, 

பல அரசியல் பிரச்சினைகளில் சரியான நிலைப்பாடுகளை எடுக்க முடியும். 

இது ஸ்டான்லி மருத்துவமனையின் ஈரல் மாற்றுப் பிரிவை உருவாக்கிய கதை! கட்டாயம் முழுமையாகப் படியுங்கள்!

**

1995ல்  நான் ஸ்டான்லி மருத்துவமனைக்கு  மாற்றப்பட்டேன். அங்கு,  ஈரல் மாற்று பிரிவை தொடங்க விரும்புவதை  சொன்னபோது  எனது சகாக்கள்  ஜோக் என்றே  நினைத்தார்கள்.

இதற்கு நிறைய செலவாகும் என்றார்கள். அப்போது வடசென்னை எம்.பி. குப்புசாமியின்  மனைவிக்கு உணவுக்குழாயில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு அறுவைச்சிகிச்சை செய்தேன். அவர்,  தனது தொகுதி வளர்ச்சி நிதியை ஈரல் மாற்று துறைக்குகொடுத்தார். ஆனால், அந்த நிதியும்  எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது. நானும் எனது நண்பர்களும் ஒவ்வொரு இடமாக ஓடியும்  பலனில்லை.

இதையடுத்து அதிகமாக உயிரிழப்பு ஏற்படும் இரைப்பை குடல் இயல் பிரிவைதொடங்கி, அதில்  ஈரல் மற்றும் கணையம் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதுஎன்று முடிவெடுத்தோம்.  அதிகமாக உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் ஒரு வார்டை சிரமப்பட்டு பெற்றோம். அந்தத் துறைக்கென்று  நர்சுகள் இல்லை. அதற்குப் பதிலாக ஒப்பந்த அடிப்படையில் நர்சுகளை எடுக்கும்படி கூறினார். உடனே, நர்சுகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தை தொடங்கியது. இதில் தனியார்  மருத்துவமனை ஆதரவாளர்களும் இருந்தார்கள்.

தமிழகம் முழுவதும் பரவிய இந்த ஸ்டிரைக் ஒரு வாரம் நீடித்தது. இந்த நிலையில் நர்சுகள் சங்கத்தின் தலைவருடைய மருமகன் விமான நிலையத்தில் ரத்தவாந்தி எடுத்து, அபாயகட்டத்தில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். பழைய சிகிச்சை முறைகள் அனைத்தும்  முயற்சிக்கப்பட்டு  தோற்றவுடன்,  நான்  மதியம் 2 மணிக்கு வந்தேன். அறுவைச் சிகிச்சை  செய்தேன். அவர் குணமடைந்தார். நர்சுகள் சங்கத் தலைவர் என்னிடம் வந்தார்.  நன்றி சொல்லி  அழுதார். நான், அவரிடம் சொன்னேன்… “சிஸ்டர்,  நீங்கள்  உங்கள்  மருமகனை  பற்றி  சிந்திக்கிறீர்கள். நான் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மருமகன்களை  பற்றி நினைக்கிறேன்.”

நர்சுகள் போராட்டம் முடிவுக்கு வந்தது. அரசு விருப்பப்படி ஒப்பந்த நர்சுகளை வைத்து இரைப்பை குடல் அறுவைச்சிகிச்சை பிரிவை தொடங்கினோம். அறுவைச் சிகிச்சை செய்யும்  நபர்களிடம் குறைந்தபட்ச பராமரிப்பு செலவுக்கு பணம் பெற்று அவர்களுக்கு சம்பளமாக  கொடுத்தோம். அது நல்லபடியாக செயல்பட்டது. பின்னர் சில ஆண்டுகளில் தமிழகத்தின் பிற  மருத்துவமனைகளிலும் சில மாறுதல்களுடன் இந்தப் பிரிவு தொடங்கப்பட்டது.

2000மாவது ஆண்டு இந்தப் பிரிவுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் கிடைத்தது. இந்தியாவிலேயே முதலாவது இது. அதன்பிறகு இந்த குறைபாடுகளால் இறப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது. பலர்  நன்றி சொன்னார்கள். வருமானமும் உபரியாகியது. 80 லட்சம் ரூபாய்  கிடைத்தது.  அதைக்கொண்டு நவீன உபகரணங்களை வாங்கினோம். இந்தத்  துறையில்  பயிற்சிபெற  மருத்துவர்கள் விரும்பினார்கள். கூடுதல் நேரம் தங்கிகூடுதல் பங்களிப்பு செய்யத்  தயாரானவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள் என்றுநிபந்தனை விதித்தேன். இதையடுத்து  பல திறமையான இளம் டாக்டர்கள் கிடைத்தார்கள்.

ஒரு நாள்  அப்போலோவுக்கு  வரும்படி நிதித்துறை செயலாளர்  என்னிடம் கூறினார்.  நான் அவரை  ஸ்டான்லி மருத்துவமனைக்கு வரும்படி கூறினேன். ஒரு அரசு விடுமுறைநாளில் அவர் ஸ்டான்லி  வந்தார்.  எங்கள் டிபார்ட்மெண்ட்டையும் வேலை பார்க்கும் விதத்தையும் பார்த்து அசந்துபோனார்.  அதன்பிறகு  தேவையான  நிதியை ஒதுக்கினார். நாங்கள் கேட்டதைக் காட்டிலும்  இருமடங்கு நிதி கிடைத்தது. அதுமட்டுமின்றி புதிய கட்டிடமும் கிடைத்தது. அந்தக் கட்டிடத்தை  நவீனப்படுத்தவும் நிதி கிடைத்தது.

மருத்துவத்துறை கட்டிடத்தை திறப்புவிழாவுக்கு தயார்செய்யும் மும்முரத்தில் இருந்தோம். புதிய  டீன் ஒருவர் எங்களுடன் இணைந்தார். ஆனால் நிதி விஷயத்திலேயே ஆர்வமாக  இருந்தார்.  எனினும், நிதி நிர்வாகம் முழுவதும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் பொறுப்பில் மாற்றப்பட்டதை அறிந்ததும் அவர் விரக்தி அடைந்தார். அதைத்தொடர்ந்து கட்டிடத்தை எங்களிடமிருந்து பறிக்க முயற்சித்தார். 

எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் முதல்வர் கலைஞரின் இல்லத்துக்கு இரவு 8 மணிக்கு போன் செய்தேன். அடுத்த நாள் காலை நான் ஜப்பானுக்கு போகவேண்டும் என்பதால் அவசரமாக போன் செய்தேன். முதல்வரின் மனைவி போனை எடுத்தார். அடுத்தநாள் காலை முதல்வரை சந்திக்க வரும்படி கூறினார். செல்வாக்கு மிகுந்த அந்த புதிய டீன் மாற்றப்பட்டார். பல அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

திரு.சன்வத்ரம் ஐஏஎஸ் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் வந்தபிறகு கட்டிடத்தை வேகமாக சீரமைத்தோம். இந்தக் கட்டிடத்தை முதல்வர் கலைஞர் வந்து திறந்துவைத்தால் பெரிய அளவுக்கு ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால், முதல்வரைச் சந்திக்க அனுமதி பெறமுடியவில்லை. கட்டிடத்தை விரைவாக திறக்க சுகாதாரத்துறை அமைச்சர் விரும்பினார். அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. 

அடுத்தநாள் அப்போலோவுக்கு சென்று லிப்ட் அருகே காத்திருந்தேன். லிப்ட் வந்தது. உள்ளே இருந்து முதல்வர் கலைஞரும் அமைச்சர்களும் வந்தார்கள். முதல்வருக்கு வாழ்த்துச் சொன்னேன். இரண்டு மாதங்களாக அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றேன். உடனே அடுத்த நாள் காலை 9 மணிக்கு வந்து சந்திக்கும்படி கூறினார். போனேன். மருத்துவமனைக் கட்டிட திறப்புவிழாவுக்கு வரவேண்டும் என்று கேட்டேன்.

“பொதுவாக, பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளுக்காகத்தான் டாக்டர்கள் வருவார்கள். அதெல்லாம் உங்களுக்கு வேண்டாமா?” என்று நகைச்சுவையாக கேட்டார். உடனே நான், “ஸார், நீங்கள் இந்த கட்டிடத்தை திறந்துவைத்தால், அதுவே பாரத ரத்னா விருது பெற்ற மகிழ்ச்சியை எனக்கு கொடுக்கும்” என்றேன்.

பிறகு அவர் ஆலோசனை நடத்தி திறப்புவிழாவுக்கு வந்தார். திறந்துவைத்த பிறகு ஹிண்டு போட்டோகிராபரை அழைத்து அவருக்கு அருகில் நிற்கவைத்து போட்டோ எடுக்கச் சொன்னார். நான் உயரத்தில் பறப்பதுபோல உணர்ந்தேன்.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஆனால், எப்போது ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சையை தொடங்கப்போகிறேன் என்று தெரியவில்லை. இதற்கிடையில் மாதத்துக்கு ஒரு முறை 50 சீனியர் டாக்டர்களுக்கு எங்களது டிபார்ட்மெண்ட் குறித்து விரிவுரை நிகழ்த்தும்படி பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்சும், ஷீலா பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்சும் கூறியிருந்தார்கள்.

ஒரு முறை விரிவுரை முடிந்ததும் 2009 ஜனவரி 28 ஆம் தேதி டாக்டர்களுடன் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு டாக்டர் கேட்டார்… “டிபார்ட்மெண்ட் நன்றாக வந்திருக்கிறது. ஆனால், எப்போது முதல் அறுவைச் சிகிச்சையை தொடங்குவீர்கள்?” என்று கேட்டார். அவர் வாயை மூடவில்லை. அதற்குள் எனது போன் ஒலித்தது. அரசு மருத்துவமனையிலிருந்து டாக்டர் பேசினார். தங்களிடம் மூளைச்சாவு அடைந்த ஒரு நோயாளி இருப்பதாகவும், அவரிடமிருந்து ஈரலை எடுத்துக்கொள்ள முடியுமா? என்று என்று கேட்டார்.

நானும் எனது சகாக்களும் ஆச்சரியமடைந்தோம். அன்று காலை 11 மணிக்கே அறுவைச் சிகிச்சையை தொடங்கினோம். அடுத்தநாள் மதியம் வரை இது நீடித்தது. எல்லோரும் சோர்வடைந்தோம். நோயாளி கண் விழிக்கும்வரை ஓய்வெடுத்தோம். அரசு மருத்துவமனை ஒன்றில் இந்தியாவிலேயே முதன்முதல் ஈரல் மாற்று சிகிச்சையை நடத்தியிருக்கிறோம். 

எங்கள் முதல் அறுவைச்சிகிச்சை வெற்றிபெற்றது. 10 ஆண்டுகள் முடிந்த நிலையிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29 ஆம் தேதி அந்தப் பெண் எனக்கு போன் செய்து, “நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் நன்றி” என்று கூறுகிறார்.

இனி, ஸ்டெம் செல் அல்லது குருத்தணு திட்டம் குறித்து கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். 2007 ஆம் ஆண்டு, நான் ஒரு கூட்டத்துக்கு போயிருந்தேன். அங்குதான் ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பதிலாக ஸ்டெம் செல் சிகிச்சைக்கு மாறலாம் என்ற விவாதம் இடம்பெற்றது. எங்களுடைய முயற்சிகள் வீணாக நாங்கள் விரும்பவில்லை. ஸ்டெம் செல் ஆய்வுக்கூடங்கள் பலவற்றை ஆய்வு செய்தோம். பேராசிரியர் ரோஸி வெண்ணிலா ஆஸ்திரேலியாவுக்குச் சென்று சில ஆய்வுக்கூடங்களை பார்த்து வந்தார். அந்த அடிப்படையில் 20 கோடி ரூபாயில் ஒரு திட்டத்தை உருவாக்கி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பினோம். ஒரு பதிலும் வரவில்லை.

இந்தச் சமயத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்பழகனும், கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.யும் 5 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்தார்கள். ஆனால், அந்த நிதியை ஒதுக்க லகானி ஐ.ஏ.எஸ். மறுத்துவிட்டார். ஆனாலும், கருப்பையா பாண்டியனால் அந்த நிதியை நாங்கள் பெறமுடிந்தது. ஆனாலும், லேப் கட்டும் பணி நகரவே இல்லை.

இந்த நிலையில்தான் நான் முதல்வர் கலைஞரை சந்தித்தேன். அவரிடம் விவரத்தை தெரிவித்தேன். அவர் உடனே அப்போதைய தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியை அழைத்து கவனிக்கச் சொன்னார். அவர், நான்கு மணிநேரம் ஆய்வு செய்தார். அந்தச் சமயத்தில் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. அதை ஏற்கும்படி என்னை முதல்வர் கலைஞர் கேட்டார். நான் அதில் விருப்பமில்லை என்றேன். ஸ்டான்லியிலேயே நிறைய வேலை பாக்கியிருக்கிறது என்றேன். உடனே அவர்… “வி.சி. போஸ்ட் வேண்டாம் என்கிறீர்கள். பத்மஸ்ரீ விருது வேண்டாம் என்கிறீர்கள். உங்களுக்கு என்னதான் வேண்டும்?” என்று கேட்டார்.

நான் அவரிடம், டெல்லி அரசு திட்டமிட்டுள்ள ஐஎல்பிஎஸ் திட்டம் குறித்து கூறினேன். 3 ஏக்கர் நிலத்தையும் 350 கோடி ரூபாயையும் அது ஒதுக்கியிருப்பதை குறிப்பிட்டேன். அதைக்கேட்ட முதல்வர், இடத்தை தேர்வு செய்துவிட்டு வாங்க, 450 கோடி ரூபாய் தருகிறேன் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி, அவருடைய உதவியாளர் சண்முகநாதனை அழைத்து, இரண்டு மணி நேரத்தில் நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களின் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். நான் ஸ்டான்லி மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் பொதுப்பணித்துறை இடத்தை அடையாளம் காட்டினேன். அப்படித்தான் பழைய மத்திய சிறையின் 8 ஏக்கர் நிலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கிடைத்தது. 

36 ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சையையும், ஸ்டெம் செல் லேப் கட்டுமானப் பணியையும் மனநிறைவோடு செய்திருக்கிறேன். 

எழுதியவர்  - டாக்டர் ஆர். சுரேந்திரன்

82 கருத்துகள்:

  1. என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்...

    வாழக நலம்...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிய நாளாக அமையவும் மனமாற இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.   காலை வணக்கம்.  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  4. இந்த தசாப்தத்தின் முதல் வியாழனாயிற்றே ஒரு கட்டுரை எழுதும் என்று உம்மிடம் சொன்னால், நிறம் மாறிய பூக்களில் ராதிகா சிரித்தாரே ஞாபகமிருக்கா என்றால் எப்படி! குண்டாகிவிட்ட ராதிகா முப்பத்திஐந்து வருடத்திற்குமுன் எப்படி இருந்திருப்பார், சிரித்திருப்பார் என்று யோசிப்பதா காலை வேலை? கஷ்டம்!

    அந்த ’உபர்’ உல்லாசியின் நம்பரைக் குறித்துக்கொண்டிருக்கமாட்டீர்களே? இப்படி ஒரு நித்யானந்தா தினம் தினமா கிடைப்பார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரோட சிரிப்பு அவருக்கே
      இப்போது பிடிக்காதே!..

      நாங்கள் போய் எங்கேயென்று பிடிப்பது!..

      நீக்கு
    2. ஹா...ஹா...   ஹா...முதல் வியாழன் என்றெல்லாம் யோசிக்கவில்லை ஏகாந்தன் ஸார். நான் பாட்டுக்கஎழுதி விட்டேன்!

      நீக்கு
    3. சுழலும் உலகில் அந்த நித்தியானந்தர் மறுபடி கையில் / கண்ணில் சிக்காமலா போவார்!!

      நீக்கு
    4. @ஏகாந்தன் - //குண்டாகிவிட்ட ராதிகா// - அவர் அப்போதே குண்டான ராதிகாதான். அவர் சிரிப்பு, கொஞ்சம் சில்லரைகளை மட்டுமே கொண்டுள்ள மட்பாண்ட உண்டியலைக் குலுக்கினார்ப்போல் செயற்கையாக இருக்கும்.

      நீக்கு
    5. //இந்த தசாப்தத்தின் முதல் வியாழனாயிற்றே//  தசாப்த வருடங்கள்(Decade) 2021 இல் தான் துவங்குகின்றன என்று சிலர் அபிப்ராயப்படுகிறார்களே? 

      நீக்கு
    6. //..சிரிப்பு, கொஞ்சம் சில்லரைகளை மட்டுமே கொண்டுள்ள மட்பாண்ட உண்டியலை..//

      அடடா! நடிகையின் சிரிப்புக்கு எப்படி ஒரு உபமானம்! இந்தமாதிரி ம.உ. சிரிப்பில், குடும்பப் பெண்கள் சிலரும் தேர்ந்திருப்பதை அடிக்கடி பார்க்க நேருகிறது..

      நீக்கு
    7. //..2021 இல் தான் துவங்குகின்றன என்று சிலர் அபிப்ராயப்படுகிறார்களே? //

      அபிப்ராயப்படலாமே! இதில் என்ன இப்போ! To have an opinion on anything and everything is human nature!

      உங்களுக்கு நினைவிருக்கும். வருடம் 2000 வந்திறங்கியபோது, புதிய நூற்றாண்டுக்குள் நுழைகிறோம் என 21-ஆம் நூற்றாண்டின் மகத்தான ஆரம்பத்தைப்பற்றி உலகம் முழுதும் எப்படியெல்லாம் பேசி, அகமகிழ்ந்து, புல்லரித்துப்போனார்கள்! அந்த ஆண்டு ‘Y2K’ என்று செல்லமாக அழைக்கப்பட்டதோடு அதைப்பற்றி ஜோக்குகள், கணக்குகள் என ஒரே அலட்டல். UPSC-கூட ஒரு தேர்வில் ’Y2K - குறிப்பு வரைக!’ என்று பயமுறுத்திப் பார்த்தது!

      அப்போது, கொஞ்சம் பொறுங்கள், இன்னும் 2001-ஆம் ஆண்டு வரவில்லையே, அப்புறம்தானே கொண்டாடவேண்டும் என்றா சொன்னார்கள்!?

      நீக்கு
    8. //அவர் சிரிப்பு, கொஞ்சம் சில்லரைகளை மட்டுமே கொண்டுள்ள மட்பாண்ட உண்டியலைக் குலுக்கினார்ப்போல் செயற்கையாக இருக்கும்.//

      இந்த வர்ணனை நன்றாயிருக்கிறது.  ஆனால்போருத்தமா என்று தெரியவில்லை நெல்லை!

      நீக்கு
    9. தசாப்தத்தின் முதல் வியாழன்!  என்ன போட்டிருக்கலாம் என்று யோசிக்கிறேன்!

      நீக்கு
  5. டாக்டர் சுரேந்திரனின் கட்டுரை வியக்க வைக்கிறது. கலைஞர் மருத்துவத்துறைக்கு இவ்வளவு உதவி புரிந்துள்ளார் என்பதும் புதிய செய்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.   அவரின் சில முகங்கள் வியக்க வைப்பவை.

      நீக்கு
    2. வழக்கம் போல இன்றைய பதிவு
      தஞ்சாவூர் கதம்பம் ...

      நீக்கு
    3. நன்றி துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. சிலர் சுவாராஸ்யமானவர் இந்த உபர் சுவராஸ்யமான எதார்த்தவாதி போல இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மதுரை...    யதார்த்தவாதியா?   கொஞ்சம் அரை போலத் தெரிந்தார்!   ஆனால் அட்ரஸ் கேட்டு சரியாய் இறங்க வேண்டிய இடத்தில இறக்கி விட்டார்.  ஏனென்றால் ஊபரில் நாம் போடும் முகவரி என்பது டவரைப் பொறுத்து கொஞ்சம் முன்னே பின்னே முடிந்து விடும்!

      நீக்கு
  8. ஊபர் ஓட்டுனர் பேருக்கு ஏற்றார் நித்தியம் ஆனந்தமாய் இருப்பார் போலும், இருக்கட்டும் .

    லிப்டன் டீ பாடல் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது.

    திகில் நிழல்தான்.

    சுதர்சன் ஜோக் நன்றாக இருக்கிறது.எல்லாம் தெரிந்தவர் தன் பெண்ணுக்கு அவரே கற்றுக் கொடுத்துவிடலாம்.

    டாக்டர் ஆர். சுரேந்திரன் அவர்கள் மருத்துவதுறைக்கு செய்த தொண்டுகள் திரு ஆர் வி ராஜு பேஸ்புக்பகிர்வு மூலம் தெரிகிறது.

    இன்றைய பதிவு அருமை.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் பெயர் சொன்னதும் நானும் அப்படிதான் சொல்லி விட்டு வந்தேன் கோமதி அக்கா!

      நன்றி.

      நீக்கு
  9. ஓட்டுநரின் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம்...

    பதிலளிநீக்கு
  10. கருணாநிதியின் சில செய்கைகள் வியக்க வைப்பவை. அவருடைய ஆள் அல்லது இதனால் பெயர் வரும் என்றால் நிச்சயம் அதீத முயற்சி எடுத்து உதவக்கூடியவர் என்று தெரிகிறது.

    சில தமிழக பத்மஶ்ரீ, பத்மபூஷன்கள் பல்லிளிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர் வரும் என்று பார்த்துதான் செய்வார் என்றும் சொல்ல முடியாது நெல்லை...   சமயங்களில் ஆச்சர்யப்படுத்துபவர்.   பெரும்பான்மை அரசு ஊழியர்களின் ஆப்தர் அவர் தெரியுமோ!

      நீக்கு
  11. சாதாரணமாக உபர் மட்டுமல்ல, ஓலா ஓட்டுனர்களும் கூட ஓலா மணி என்றால் கான்சல் செய்து விடுவார்கள். அந்த டிரைவர் ஒரு வேளை நித்யானந்தாதானோ? தான் இப்படி கார் ஓட்டுவதை அறியாமல் எல்லோரும் தேடுகிறார்களே என்று சிரித்திருப்பாரோ? எதற்கும் நீங்கள் ஒரு புகைப்படம் எடுத்திருக்கலாம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...   ஹா...   ஹா...    புகைப்படமா?  நான் பின்னால் அமர்ந்திருந்தேன்.  அவர் முகத்தைக் கூட சரியாய்ப் பார்க்கவில்லை.  கண்களை மட்டும் பார்த்தேன்!

      நீக்கு
  12. ஒரு முறை கோபாலன் மாலில் ஏதோ சினிமா பார்ப்பதற்கு நானும், என் கணவரும் ஒரு ஆட்டோ பிடித்தோம். அந்த டிரைவர் குடித்திருந்தார் போலிருக்கிறது. "அம்மா செல்ஃபோனில் ஏதாவது எம்.ஜி.ஆர். பாட்டு போடுங்கம்மா" என்றார். என் போனில் பாடல்கள் சேமித்து வைக்கும் பழக்கம் எனக்கு இல்லை. இதை சொன்னதும், என்னம்மா? என்று ஏதோ எம்.ஜி.ஆர். பாடலை உறக்க பாட ஆரமிப்பித்து விட்டார். மால் வந்ததும், "அம்மாக்காக, உள்ளே இறக்கி விடுகிறேன்" என்று உள்ளே வந்தார். கடவுளுக்கும் அவருக்கும் நன்றி சொல்லி இறங்கினோம்.   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...   ஹா...  ஹா...   ஆமாம் ஒவ்வொருவர் ஒவ்வொரு ரகம்!

      நீக்கு
  13. டாக்டர் சுரேந்திரனின் அனுபவங்கள் புல்லரிக்க வைக்கின்றன. ஒரு நல்ல செயலை செய்ய வேண்டும் என்று உண்மையாக நினைத்தால் கடவுள் அருள் இறங்கி வரும் வரும் என்று நிரூபணமாகிறது. 

    பதிலளிநீக்கு
  14. ஊபர் ஓட்டுநருடான அனுபவம் மிகவும் அருமை. இவ்வாறு சில பேர்தான் பழகுகின்றார்கள்.

    பதிலளிநீக்கு
  15. ஜோக் நன்றாக இருக்கிறது. இருந்தாலும் கவிதை இல்லாதது ஒரு குறைதான். தினமணிகதிருக்கு சாவி ஆசிரியராக இருந்தபொழுது அக்கரை சிரிப்பு என்று நகைச்சுவை வசனமில்லாத படங்கள் போடுவார். ஞாபகம் இருக்கிறதா? அவை கிடைத்தால் போடுங்களேன்(இதிலும் நேயர் விருப்பம்)  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை ஸ்டாக் தீர்ந்து விட்டது!  

      அக்கரைச் சிரிப்புப் பார்த்திருக்கிறேன்.     கிடைத்தால் போடலாம்!

      நீக்கு
  16. நித்யானந்தா என்று பெயர் வைத்தாலே அந்த சிரிப்பும் வந்துவிடும் போல. சனிக்கிழமை பாசிட்டிவ் செய்திகளில் வரவேண்டிய டாக்டர் சுரேந்திரன் கட்டுரை இன்றே வந்துவிட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...    இதை பாஸிட்டிவ் செய்திகளில் போட்டிருக்கலாம் என்கிறீர்களா?  சுவாரஸ்யமான தகவலாயிருந்ததே என்று இங்கே பகிர்ந்து விட்டேன்.

      நீக்கு
  17. புத்தாண்டின் இரண்டாம் நாள் பதிவு மிக அருமை.
    ஊபர் பலப்பல ஆச்சர்யங்களைக் கொடுக்கிறது.

    நித்தியானந்தத்திடமிருந்து தப்பினீர்களே அதுவே
    மகிழ்ச்சி. ராதிகா சிரிப்பா. நோ கமெண்ட்.

    சுதர்சன் ஜோக் கட்டங்கள் சூப்பர்.
    எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள்.அம்மாடி.!
    லிஃப்டன் டீ விளம்பரம் கேட்ட நினைவு இல்லை.

    ஸ்டான்லி டாக்டர் சேவை மிக உன்னதம். கலைஞரின் இந்த முகம் அதிசயிக்க வைக்கிறது.
    டாக்டருக்கு நல் வாழ்த்துகள். நம் தமிழ் நாட்டுக்கு என்றும் குறைவில்லை இது போல சேவகர்கள் கிடைத்தால்.
    தகவல்களுக்கு மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா.   நன்றி.   ஊபர் ஓலா எல்லோரிடமும் வெவ்வேறு வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும்!  லிப்டன் லாவோஜி விளம்பரம் என்னைத்தவிர யாருக்கும் நினைவில்லை போல!

      நீக்கு
  18. ஓட்டுனரின் பெயர் நித்தியானந்தா பிறகு எதற்கு இந்த வேலை ?

    பதிலளிநீக்கு
  19. பதிவில் சொல்ல மறந்த விஷயம் ஒன்று...

    நான்கு வருடங்களுக்கு முன் இதே இரண்டாம் தேதிதான் ஜீவி ஸார் படைப்புடன் கே வா போ ஆரம்பிக்கப்பட்டது.  விளையாட்டு போல நான்கு வருடங்கள் ஓடிவிட்டன!  அனைவருக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. போட்டு வாங்கிக் கேட்ட கதை என்று இந்த வருடம் ஆரம்பிக்கலாமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா....  ஹா...   ஹா...    அதுவே அப்படித்தானே?

      நீக்கு
    2. ஓ ... ஜீவி தான் பிள்ளையார் சுழி போட்டவரா!...

      நீக்கு
    3. மன்னிக்கவும்...
      ஜீவி சார் என்று திருத்திக் கொள்ளவும்...
      ஓடும் பேருந்திலிருந்து கருத்துரை..
      மிகவும் தடுமாற்றமாக இருக்கின்ற...

      நீக்கு
    4. எனக்குக் கூட மறந்து போய் விட்டது. நினைவு கொண்டதற்கு நன்றி, ஸ்ரீராம்.

      நீக்கு
  21. அதைக்கேட்ட முதல்வர், இடத்தை தேர்வு செய்துவிட்டு வாங்க, 450 கோடி ரூபாய் தருகிறேன் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி, அவருடைய உதவியாளர் சண்முகநாதனை அழைத்து, இரண்டு மணி நேரத்தில் நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களின் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். / /

    இதுதான் கலைஞருக்கும் மற்ற முதல்வர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தருகிறேன் என்று தெரிவித்தார்.//

      ஆமாம். மற்ற முதல்வர்களின் சொல்லாடலில் வித்தியாசம் உண்டு தான்.

      நீக்கு
  22. டாக்டர் சுரேந்திரன் வாழ்துகள்.
    ஊபர் சிரிப்புத்தான் வந்தது.

    பதிலளிநீக்கு
  23. அந்த ட்றைவரோடு இன்னும் தூரம் போகலாம் என நினைக்கிறேன், சிலர் வாயே திறக்க மாட்டார்கள், உம் மென இருப்பினம், ஏந்தான் இதில் ஏறினோமோ என இருக்கும்... இது அவர் நல்லவரோ கெட்டவரோ.. சிரிச்சபடி இருப்பது நமக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும்.

    சில ஷொப்ஸ்களில் கூட, பொருட்கள் விலையாகவோ தரமில்லாமலோ இருந்தால்கூட, அங்கிருப்போரின் வரவேற்புக்காகவும் புனகைக்காகவுமே வாங்கி வர வேண்டும் என மனம் சொல்லும்.

    சிரிப்பு எப்பவும் சிறந்தது தானே.. வாழ்த்துக்கள் அவருக்கு.

    லிப்டன் லாவோஜி நீங்கள் சொன்னதும் கேட்ட நினைவு... இலங்கை ரேடியோவிலும் போயிருக்கும்போல அப்பாடல்... அதுசரி இப்பவும் இந்த பிராண்ட் இருக்குதோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...

      பயணங்களில் சம்பந்தமில்லாத ஓட்டுநர் பேசுவது எந்த அளவுக்கு பொறுத்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை!  ஆனால் கடைகளில் சிரித்துப் பேசி கேட்பதை பொறுமையாக எடுத்துக் காட்டுபவர்கள் மிகக் குறைவு.

      நீக்கு
  24. உங்கள் இப்போஸ்ட்டை வச்சு ஒரு கேள்வி எழும்பியது, நல்லவேளை அதை சட்டென நிறுத்திவிட்டேன், கெள அண்ணனை மாட்ட வைப்போம் என்று:)).. அங்கு கேட்கலாமெல்லோ:).

    பதிலளிநீக்கு
  25. ஹா ஹா ஹா அது ஆருடைய நிழலாக இருக்கும்?:).. காலப்போக்கில் இப்படியும் நடக்கலாம் சொல்ல முடியாது:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரைக்காலம்மையார் போல தலைகீழாக நடக்கிறது நிழல்!

      நீக்கு
  26. //சென்ற வாரம் சாமா ஜோக்... இந்த வாரம் சுதர்சன் ஜோக்!//

    ஜோக், ஜோக்காக இல்லை:).

    கட்டுரை படித்தேன், இப்படியும் மனிதர்கள்.. இருக்கத்தான் செய்கிறார்கள்.. இவரைப்போன்றோரைத்தான் கடவுளின் இன்னொரு வடிவமாக பார்க்க முடிகிறது.. அவர் எங்கிருந்தாலும் வாழ்க, அவரின் சேவை தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் வந்த சில ஜோக்ஸை எடுத்துக் போட்டால் சிரிப்பே வராது.   அதில் கொஞ்சம் சுமாரானவற்றைதான் இங்கே பகிர்கிறேன். கட்டுரை ஒரு நல்ல விஷயத்துக்காக போராடியவர் என்பதால் பகிர்ந்தேன்.

      நீக்கு
  27. சொல்ல மறந்திட்டேன், இன்றைய தலைப்பும், சனிக்கிழமைப் போஸ்ட் போலவே இருந்துது:)

    பதிலளிநீக்கு
  28. டாக்டர் ஆர் சுரேந்திரன் கட்டுரை நிறைய தகவல்களைக் கொண்டுள்ளது

    பதிலளிநீக்கு
  29. ஸ்டான்லி மருத்துவமனை பல்வேறு துறைகளில் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கிறது என்பதை எழுபதுகளிலேயே கேள்விப் பட்டிருக்கேன். டாக்டர் சுரேந்திரனின் அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. அருமையான இப்படிப்பட்ட மருத்துவர்கள் உண்மையிலேயே மனித தெய்வங்கள் தாம்.

    உங்களுக்குக் கிடைத்த ஊபர் ஓட்டுநரைப் போல் எல்லோருக்கும் கிடைத்தால் பைட்தியம்னு சொல்லி இருப்பாங்க! நல்ல ரசிகர் போங்க! ஆனால் உங்களை ஒழுங்காக் கொண்டு விட்டாரே1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசிகரா?   நாங்கள் கொஞ்சம் பொறுமையின்றிதான் சென்றோம்.   மருத்துவத்துறையில் இப்படிப்பட்ட மாணிக்கங்கள் இருக்கதான் செய்கிறார்கள்.

      நீக்கு
  30. நித்தியானந்தம் என்ற பெயரில் என் அலுவலக நண்பர் ஒருவர் எனக்கிருந்தார். அவரை நான் 'எவர் ஜாய்' என்று தான் கூப்பிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்...    என் அலுவலகத்திலும் ஒரு நித்தியானந்தம் இருந்தார். அவர் தனிரகம்!

      நீக்கு
  31. நித்தியானந்தத்தின் ரவுசு என்று மட்டும் தலைப்பிட்டிருந்தீர்கள் என்றால் 30 நாட்களில் அதிகம் பேர் படித்த பகுதிக்கு எகிறிப் போயிருக்கும்! :))

    பதிலளிநீக்கு
  32. தன் நிழலை தான் திரும்பிப் பார்க்குங்கால்
    என்ன பயமோ எல்லோர்க்கும்?

    பதிலளிநீக்கு
  33. ஊபர் ஓட்டுனர் - இப்படியும் பலர்! சிலர் ரொம்பவே பேசுவார்கள் - நமக்கு விருப்பம் இல்லை என்றாலும்!

    மருத்துவர் சொன்ன விஷயங்கள் - சிறப்பு.

    தொடரட்டும் சிறப்பான பகிர்வுகள். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!