யாழ்ப்பாணத் தொதல்
என்ன இன்னும் ஆரையும் காணமே:))
ஆஆஆஆஆஆ இனிப்பு இனிப்பு... இம்முறை ஒரு இனிப்பு ரெசிப்பி செய்யோணும் என்றே களம் இறங்கிச் செய்து விட்டேன்ன்.. வட்சப் கோல் பண்ணிக் கூப்பிடுங்கோ நெல்லைத்தமிழனை:)).. அவர்தான் இனிப்புச் செய்து அனுப்பச் சொல்லியும், அப்படி இனிப்பான ரெசிப்பி செய்தனுப்பினால், அதைப் பாராட்டி 50 கொமெண்ட்ஸ் ஆவது போடுவேன் என்றும், கீசாக்கா அம்பேரிக்காவுக்கு எடுத்துப்போன அந்த நீலக்கலர் லக்கேஜ் மீது அடிச்சுச் சத்தியம் பண்ணியிருக்கிறார்ர்:)) ஹா ஹா ஹா.
இந்தத் தொதல் ஊரில் இடைக்கிடை செய்வோம், எங்கட அம்மா தலைமை தாங்குவா [Boss:)], இருவரைக் கூப்பிட்டு, வெளியே அடுப்பு மூட்டி, பெரிய இரும்புச் சட்டி வைத்து, அவர்களைக் கிண்ட வைத்து தொதல் செய்வோம்.. அது 10,12 தேங்காய்களில், செய்து அயலவர்க்கெல்லாம் கொடுத்து நாமும் நன்கு சாப்பிடுவோம்.
இப்படித் தொதல் சாப்பிட்டு அலுக்காது, ஏனைய சுவீட்ஸ் போல திகட்டாது, வாயில மாப்போல கரையும். நான் இதனை ஒரு தடவை செய்யோணும் என நினைச்சிருந்தேன்[இப்போ அவசரமாகச் செய்தேன்], ஆனா கிச்சின் அடுப்பில் செய்தால், தெறிச்சுப் பறக்குமே எனும் பயத்திலேயே செய்யாமல் இருந்தேன், உண்மையில் நெல்லைத்தமிழனின் ஊக்கத்தாலேயே இனிப்பு ரெசிப்பி செய்தேன் அதுக்கு நன்றிகள் 🙏..
செய்முறைக்குள் நுழைவோமா?:))
இரு பெரிய தேங்காய்களை எடுத்து திருவி, அப்படியே கொஞ்சமாக தண்ணி விட்டுப் பிழிஞ்செடுத்த கட்டிப்பால் ஒரு லிட்டர்.
ஊறவைத்து இடிச்சு அரிச்செடுத்த அரிசிமா -125 கிராம்ஸ்
கறுப்பு சீனி[சுகர்] - 125 கிராம்ஸ்
சக்கரை[Jaggery] - 250 கிராம்ஸ்
வறுத்த பயற்றம் பருப்பு 2 மேசைக்கரண்டி[இது அதிரா செய்த பருப்பாக்கும்:)] மற்றும் உங்கள் விருப்பம்போல நட்ஸ்.
இப்பொழுது தேங்காய்ப்பால் ரெடியாகியதும், அதில் கொஞ்சம் எடுத்து சக்கரையைக் கரைத்து வடிகட்டி மிகுதிப் பாலினுள் சேருங்கோ.
முக்கியமாக ஒரு லிட்டர் பாலில் செய்யப் போகிறீங்கள் எனில், பாத்திரம் 8-10 லிட்டர் கொள்ளளவுடைய பெரிய நொன் ஸ்ரிக் அல்லது இருப்புச் சட்டியே சிறந்தது, இல்லை எனில் அடிப்பிடிக்கும், தேங்காய் கொதித்து எண்ணெய் ஆகும்போது வெளியே தெறிக்கும்..
இப்பொழுது அனைத்தையும் ஒன்றாகக் கொட்டி...
மாவில் கட்டியில்லாமல் நன்கு கரைத்து விட்டு அடுப்பில் வைக்க வேண்டும்.
ஒரு இருபது நிமிடங்களில் இப்படி கட்டியாக தொடங்கி விடும், கை எடுக்கவே கூடாது, கிண்டிக்கொண்டே இருக்கோணும்..
நெருப்பைக் கொஞ்சம் கூட்டியே வச்சிருக்கோணும்..
இப்படி பபிள் பபிளாக வந்து வெடித்து தெறிக்கும், இதற்காகத்தான் பாத்திரம் பெரியதாக இருக்கோணும் அல்லது வீட்டுக்கு வெளியே வைத்துச் செய்ய வேண்டும்.
இறுகி வரும்போது, நட்ஸ் ஐ சேருங்கோ...
இப்போ மெதுவாக தேங்காய் எண்ணெய் பிரிந்து வருகிறது.. என்ன ஆனாலும் கிண்டுவதை நிறுத்திவிடக் கூடாது!..
ஆஆஆஆஆஆஆ இப்போ வீடியோவைப் பாருங்கோ புரியும்
நன்கு எண்ணெயில் மிதந்து, பொரிஞ்சு சுருண்டு குட்டிப் பந்துபோல வந்தபின்னரே இறக்க வேண்டும்... எப்படியும் 1-1 1/2[ஒன்று தொடக்கம் ஒன்றரை]மணித்தியாலங்கள் எடுக்கும், அடுப்பு வேலை மட்டும்.
உடனேயே இப்படி ஒரு ட்ரேயில் போட்டு தட்டி விட வேண்டும், இல்லை எனில் இறுகி விடும், இதில் இருக்கும் எண்ணெய் இங்கு வடித்த எண்ணெய்.. 80-100 மில்லி லீட்டர் வரையில் எடுத்தேன்..
ஆஆஆ இது ஸ்ரீராமுக்கும் அண்ணிக்கும் பிள்ளைகளுக்குமாக்கும்... கெள அண்ணனுக்கு ஆகாது:))
இது நெல்லைத்தமிழனுக்கு மட்டும்ம்ம்ம்ம்:)), நெல்லைத்தமிழன் பிளீஸ் இங்கு வருவோருக்கு குட்டிக் குட்டிப் பீஸ் குடுப்பீங்களோ?:).. அஞ்சுவுக்கு குடுக்க வாணாம்:) அவவுக்கு ஆகாது, விரும்பினால் உங்கட அக்காவுக்கு ஒரு பீஸ் அனுப்பி விடுங்கோ பிளீஸ்ஸ்:))[கீதா ரெங்கன் அக்காவைச் சொன்னேன்:))]
ஓடர்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
அப்பாவி அதிரா
வீட்டு இலக்கம் -4
ட்றம்ப் வீதி,
குயின் எலிசபெத் ரவுண்,
ஸ்கொட்லாந்து, A41 PW4.
இந்தத் தொதல் சாப்பிட்ட பின் இப்பூடி வானத்தில் மிதப்பதைப்போல மகிழ்வாக இருக்குமாக்கும்:)).. நம்புங்கோ:))
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
“மகிழ்ச்சியை முழுமையாகப் பெற வேண்டுமானால்
அதைக் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும்”
இவ் அரிய தத்துவத்தை உங்களுக்காகத் தந்திருப்பவர்..
உங்கள் மதிப்பிற்கும், மரியாதைக்கும், பேரன்புக்கும் உரிய:-
புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:).
😸😸😸😸🙏😸😸😸😸
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஏன்ன்ன் ஏன்ன்ன். ஏன்ன்ன்ன்ன்ன்?:)
நீக்குமோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து..
பதிலளிநீக்குவாழ்க நலம்...
அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவாங்கோ துரை அண்ணன்... இன்று வரவேற்க ஶ்ரீராமும் இல்லை புதுசாக் கற்றரக் ஒபரேசன் செய்த கெள அண்ணனும் இல்லை:).. அதிராதான் இருக்கிறேனாக்கும்:)...
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்னிக்கு அதிரடியோட செய்முறையா? இதை நாங்கத் தேங்காய் அல்வானு சொல்லுவோம். ஆனால் பாசிப்பருப்பெல்லாம் போட்டதில்லை. வெறும் தேங்காய்ப்பாலோடு வெல்லம் சேர்த்துக் கிளறினால் தேங்காய்த் திரட்டுப் பால். நல்லா இருக்கும். அதிரடி சொல்றாப்போல் வாயில் போட்டால் கரையும். உள் நாக்குத் தித்திக்கும்.
பதிலளிநீக்குவாங்கோ கீசாக்கா... நீங்க பால்க் கோவாவையும் திரட்டுப்பால் என்கிறீங்க , தொதலையும் தி பால் என்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:)... இதுக்குத்தான் அம்பேரிக்காவில இருக்காதீங்கோ எனச் சொல்றனானாக்கும்:)... பாருங்கோ குழம்பிப்போயிட்டீங்க:)... இதை எல்லாம் நெ தனிழன் கவனிக்க மாட்டார்ர் கர்ர்ர்ர்ர்:)...
நீக்குஆஆஅ அது அது கீசாக்கா.. வாயில போட்டால் கரையுது... சப்பும் வேலை முச்சம்... இன்னும் மிச்ச தொதல் வீட்டில இருக்கே:)..
தொதல் சாப்பிட்டு விண்ணில் மிதக்கும் புலியூர்ப் பூசானந்தா அவர்களைப் பார்த்ததுமே நமக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது.
பதிலளிநீக்குஹா ஹா ஹா நன்றி கீசாக்கா... கையைக் குடுங்கோ:)
நீக்குஇந்தத் தொதலை எனது ஸ்ரீலங்கா நண்பர் திரு இஸ்மாயில் அவர்கள் கண்டியில் இருந்து கொண்டு வந்து கொடுத்தது நினைவுக்கு வருகிறது..
பதிலளிநீக்குஇலங்கையில் இது பேமஸ், வெளிநாட்டிலிருந்து ஊருக்குப் போவோர், வாங்கி வருவனவற்றில் இத் தொதலும் ஒன்று, இன்னொன்று மஸ்கட்... அது கோதுமை மாவில் செய்யும் ஒன்று.
நீக்குஒற்றெழுத்து விட்டுப்போனதோ என ஒரு சந்தேகம்.. தொத்தல் என இருக்கவேண்டுமோ !
பதிலளிநீக்குஇல்லையில்லை...
நீக்குதொதல் தான்...
முதல் படத்தில் பூஸாரைப் பார்த்து விட்டுமா சந்தேகம்!...
அது தொதல்தான் ஏ அண்ணன்...
நீக்குஹா ஹா ஹா நன்றி துரை அண்ணன்...
ஒரு தொத்தலான ரெஸிப்பிபோல என நினைத்தே அப்படிச் சொன்னேன்! வந்துகொண்டிருக்கிற பாராட்டுகளைப் பார்த்தால்..ஒதுங்கிக்கொள்ளவேண்டியதுதான்..
நீக்குஏகாந்தன் சார் இதை dhol dhol என்றும் சொல்வாங்க ஆங்கிலோ இந்தியன்ஸ் ..நியூ இயர் ஸ்பெஷல் அவங்களுக்கு இது .ஆனா தொதல் தான் மோஸ்ட்லீ சொல்ற பெயர்
நீக்குAnglo-Indians-களிடையேயும் இது பாப்புலரா!
நீக்கு@ஏகாந்தன்! நான் முதல்லே "தொதல்" என்பதைச் "சொதப்பல்"னு படிச்சேனாக்கும். :))))))
நீக்கு///அப்படிச் சொன்னேன்! வந்துகொண்டிருக்கிற பாராட்டுகளைப் பார்த்தால்..ஒதுங்கிக்கொள்ளவேண்டியதுதான்..///
நீக்குஏ அண்ணன், என்ன நினைச்சுக்கொண்டிருக்கிறீங்க அதிராவின் சசசசமையல் பற்றி?:)...
என் அடுத்த ரெசிப்பி பார்த்தால் மருந்தடிச்ச பூச்சி மாதிரி எல்லோரும் மயங்கி விழப்போறீங்க:)... எதுக்கும் செல்ப் இன்சூரன்ஸ் எடுத்திடுங்கோ:)..
///
நீக்குஏகாந்தன் !27 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 5:00
Anglo-Indians-களிடையேயும் இது பாப்புலரா///
நோஓ இலங்கையில் இருப்போருக்கு இது தெரியாது:).. இலங்கையில் இவர்களை பேகர் இனமக்கள் என்போம்.... நான் அவர்களோடு இருந்திருக்கிறேன் அவர்கள் கிண்டியதை நான் பார்க்கல்லே:).. இது அஞ்சுவின் அந்த அநார்க்கலி சுடிதார் மீது ஜத்தியம்:)... ஆனா சிங்கள மக்களிடையே பர்ர்ர்ர்ர்ர்ர்மஸ்ஸூ:)
அஞ்சுவை டக்குப்பக்கென நம்பாதீங்கோ ஏ அண்ணன்:)... உப்பூடிக் குரொஸ் கொஸ்ச்ச்ச்சன்ஸ் கேட்கோணும் முதல்ல:)...
///
நீக்குGeetha Sambasivam27 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 6:24
@ஏகாந்தன்! நான் முதல்லே "தொதல்" என்பதைச் "சொதப்பல்"னு படிச்சேனாக்கும். :))))))////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் ஜொன்னனே கீசாக்கா அம்பேரிக்கா போனதால கொயம்பிட்டாஆஆஆஆஆஆ:)...
ஆஆஅ பெல் அடிக்கப் போகுதே கர்ர்ர்ர்ர்ர்ர்:)
Bridget white kumar ..
நீக்குhttp://anglo-indianrecipes.blogspot.com/search/label/Dodol
அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குவாங்கோ கோமதி அக்கா...
நீக்குஇன்றைய நாள் இனிமையான நாள்தான்.
பதிலளிநீக்குஅதிரவின் திரட்டுப்பால்(தொதல்) அருமை.
படங்கள் எல்லாம் மிக அழகு.
காணொளி அருமை.
ஹையோ இது திரட்டுப்பால் இல்லை கோமதி அக்கா, இங்கு அர்சிமா சேர்ப்போம்...
நீக்குநன்றி... காணொளி ... அதிராதான் முதன் முதலா எங்கள் புளொக்கில் போட்டிருக்கிறேன்.... இதுக்காகவே ஶ்ரீராம் சொத்தில பாதியை எழுதித் தந்தாலும் தருவார்:).. எதுக்கும் அவரது பிஸி முடியட்டும்:)
புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள் சொன்ன அரிய தத்துவம் மிக மிக அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா...🙏
நீக்குதேங்காய் பால் எடுக்காமல், பாலில் தேங்காய் வறுத்த பாசிபருப்பு அரைத்து கலந்தும் செய்வார்கள். கிண்டும் வேலை பொறுமையாக செய்ய வேண்டும். தீயை சிறு தீயாக வைத்து பொறுமையாக கிண்டினால் தான் திரட்டுப்பால் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குமகிழ்ச்சியை தரக்கூடியது தான் இந்த தொதல்.
அதிராவிற்கு பாராட்டுக்கள்.
ஸ்ரீராம் குடும்பத்திற்கு என்று அழகான அலங்கரிப்பு அருமை.ஸ்ரீராம் இல்லத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் அதிரவின் தொதலை உண்டு.
மிக்க நன்றி கோமதி அக்கா.
நீக்குமுதல்ல நல்ல இனிப்பு செய்முறையோடு 2020ல்வ ந்த அதிராவுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅதிலும் என் பெண்ணுக்கு பிடித்த இனிப்பு
வாங்கோ நெல்லைத்தமிழன்.. எத்தனை துண்டு சாப்பிட்டீங்க இன்று?:).. பாராட்டுக்கு நன்றி.. வெறும் பாராட்டு மட்டுமோ? என்வலப்புக்குள் வச்சுப் பவுண்ட்ஸ் ஏதும் இல்லையோ?:))
நீக்குஓ மகலுக்கும் உங்கள் இனிப்புச் சாப்பிடும் பழக்கத்தைப் பழக்கிட்டீங்கபோல:))
ஹையோ ரொம்ப ரயேட்டாக இருக்குதா.. அதுதான் எழுத்துப் பிழை வருது மன்னிச்சுக்கோங்கோ.. அது மகளுக்கும்..
நீக்குகல்ஃபில் இருக்கும்போது கேரள காய்கறி கடையில் இதை மென் பத்த்துல் விற்பாங்க. அதாவது அது சாஃ்ப்ட் பத்த்தில் இருக்கும். கோந்து பத்த்தில் இருக்காது.
பதிலளிநீக்குஎன் பசங்க அவங்க புரிதலுக்காக அரிசி அல்வா என்பினம். ஓலைப் பெட்டியில் 10-15 கிலோ அளவில் வரும். கேட்கும் அளவில் வெட்டி எடைபோட்டுத் தருவார்கள்.
ரொம்ப நல்லா இருக்கும்
தொதல் என்பது எப்பவும் சொஃப்ட்டாகவும் கறுப்பாகவும்தான் இருக்கும் நெல்லைத்தமிழன், நீங்கள் சொல்லும் அல்வா என்பது அதிகமாக நம் ஊரில் மஞ்சளாக அல்லது பச்சையாக கண்ணாடிபோல இருக்கும்.. அதை மஸ்கட் என்போம்ம்.. அது பிளேன் ஃபிளவரில் செய்வது பால் எதுவும் சேர்ப்பதில்லை, அது பார்க்க சொஃப்ட்டாக இருக்கும் ஆனா கடிக்க கொஞ்சம் ரப்பர் போல இருக்கும்...
நீக்குஇவையும் அப்படித்தான் , நம் விருப்பத்துக்கு நிறுத்து வாங்கலாம்.
கேரளாவில் பயணத்தின்போது வாங்கிய அரிசி அல்வா நீங்கள் எழுதிய ரெசிப்பியை ஒத்திருந்தது. நல்ல அல்வா பதம். எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது ஆனால் பெண், மிக்க் குறைவே சீப்பிட்டாள்.
பதிலளிநீக்குஇரு அல்வாவும் கொஞ்சம் கறுப்பு நிறத்தில் இருக்கும்.
உங்கள் செய்முறை இரண்டையும் நினைக்க வைத்தது. நன்றி
மிக்க நன்றி.
நீக்குஇதன் அருமைவாம் லண்டனுக்கு எங்க புரியும்? டயட் இல்லை அலர்ஜியாகும் என்று சொல்வாங்க.
பதிலளிநீக்குநல்லதாப் போச்சுன்னு அவங்க பங்கையும் நாம சாப்பிடுவோம்
//இதன் அருமைவாம் லண்டனுக்கு எங்க புரியும்? டயட் இல்லை அலர்ஜியாகும் என்று சொல்வாங்க.//
நீக்குஹா ஹா ஹா அதே அதே.. தனக்கு ஒத்துக் கொள்ளாத அனைத்தையும் கூடாது, நல்லமில்லை எனச் சொல்லிடுவா.. அப்போதானே பயந்துபோய் நாமும் சாப்பிட மாட்டோம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
எப்போதும் போல நீங்கள் மட்டும்தான் சாப்டீங்களா?
பதிலளிநீக்குஶ்ரீராமுக்கு கொடுத்து என்ன பிரயோசனம்? அவர் இனிப்பு ஐட்டங்கள் குறைவாக பாவிப்பவர்.
எனக்குக் கொடுக்காமல் என்னை மத்தவங்களைக்கு டிஸ்டிரிபியூட் பண்ணச் சொல்லிட்டீங்களே.. கர்ர்ர்ர்ர்ர்
//நெல்லைத்தமிழன்27 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 7:55
நீக்குஎப்போதும் போல நீங்கள் மட்டும்தான் சாப்டீங்களா?//
ஹா ஹா ஹா இதற்கான பதில் ஸ்கொட்லாண்ட் யாட் படையினரால் தணிக்கை செய்யப் பட்டிருக்கிறது:))..
//எனக்குக் கொடுக்காமல் என்னை மத்தவங்களைக்கு டிஸ்டிரிபியூட் பண்ணச் சொல்லிட்டீங்களே.. கர்ர்ர்ர்ர்ர்//
நீங்க இப்போ கொஞ்சக் காலமாக இனிப்பை விட்டு ரயேட்டில சே..சே டயேட்ல இருப்பதாகவெல்லோ அறிஞ்சேன், அதுதான் என்னால 2 கிலோ ஏறிடக்கூடாதென்னும் நல்லெண்ணம் தான்:))
கீதா ரங்கன் க்காவை நீங்க நினைவுபடுத்துயதும்தான் நினைவுப்கே வருது.
பதிலளிநீக்குரொம்ப வருஷம் முன்பு அப்படி ஒருவர் இங்கு வந்து கமென்ட் பண்ணுவாங்க இல்லையா...
அவங்கதானே.. ஸ்காட்லாந்த் தவிர எந்த ஊரைக் குறிப்புட்டாலும், ஆமா.. அது எங்க சொந்த ஊர்தான், அங்க நாங்க இருக்கறச்சே...ன்னு ஆரம்பிப்பார்.. இல்லைனா வெள்ளிக்கிழமை திரைப் பாடல்களுக்கு, இது ஆபோகி, இது போகு ராகம், இது பைரவியும் பாதாள பைரவியும் இணைந்த ராகம்னுலாம் சொல்லி நம்மைக் குழப்புவாங்க?
அதெல்லாம் ஒரு காலம். We miss that அக்கா
//கீதா ரங்கன் க்காவை நீங்க நினைவுபடுத்துயதும்தான் நினைவுப்கே வருது.//
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..
//ரொம்ப வருஷம் முன்பு அப்படி ஒருவர் இங்கு வந்து கமென்ட் பண்ணுவாங்க இல்லையா...//
ஆமா.. ஆமா..... அவரேதான்:))..
//அவங்கதானே.. ஸ்காட்லாந்த் தவிர எந்த ஊரைக் குறிப்புட்டாலும், ஆமா.. அது எங்க சொந்த ஊர்தான், அங்க நாங்க இருக்கறச்சே...ன்னு ஆரம்பிப்பார்.//
கரீட்டு கரீட்டு அவரேதான்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா
//அதெல்லாம் ஒரு காலம். We miss that அக்கா//
நினைவுபடுத்திவிட்டபின் தான் மிஸ்ஸ்ஸ் ஊஊஊஊஊஉ ஆம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..
செய்முறை பிடித்திருந்தது.
பதிலளிநீக்குவடிவேலு ஜோக்ஸ், கண்ணதாசன் பொன்மொழி, திரைப்பீடல் மிஸ்ஸிங்.
பாராட்டுகள் அதிரா (லேடஸ்டா என்ன அதிரா என்பது மறந்துவிட்டது. தில்லாலங்கடி அதிராவோ?)
ஹா ஹா ஹா இதுதான் லேட்டஸ்ராக் கிடைத்திருக்கும் பட்டம் நெ தமிழன்:)...
நீக்குசாமுத்திரிகா லட்சணம் எனும் புத்தகம் ஒன்றை உங்களது அன்க்ள் எழுதியிருக்கிறாரே.. படித்ததுண்டா.. சா.ல. அதிரா அவர்களே..
நீக்கு//
நீக்குநெல்லைத்தமிழன்27 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 8:02
செய்முறை பிடித்திருந்தது.//
ஈசி எல்லோ? கிண்டி முடிப்பதுதான் கஸ்டம்...
//வடிவேலு ஜோக்ஸ், கண்ணதாசன் பொன்மொழி, திரைப்பீடல் மிஸ்ஸிங்.//
ஆஆஆ இது எங்கள்புளொக் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்ன்ன்...
[போட்டால் படிச்சு ஒழுங்காப் பதில் சொல்ல மாட்டாராம்:)).. போடாவிட்டால்.. அவை மிஸ்ஸிங் என்பாராம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்]----> ஹையோ இது அதிராவின் மைண்ட் வொயிஸ்:)).. வெளியில கேட்கவில்லைத்தானே?:))..
மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.
//ஏகாந்தன் !27 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 2:02
நீக்குசாமுத்திரிகா லட்சணம் எனும் புத்தகம் ஒன்றை உங்களது அன்க்ள் எழுதியிருக்கிறாரே.. படித்ததுண்டா.. சா.ல. அதிரா அவர்களே..//
ஆஆஆஆஆஆ இல்லயே.... இது சின்ன வயசில அம்புலிமாமாப் புத்தகத்தில் ஒரு கதை வரும், அதில் ஒரு பெண்ணைச் சொல்லுவார்ர்.. அவள் சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய பெண் என... அது மட்டும் நினைவில் இருந்ததால வச்சேன் ஹா ஹா ஹா..
கொஞ்ச மாதமாக கிண்டில் படிப்பது நிறுத்தப்பட்டுப் போயிட்டுது.. நேரம் கிடைப்பதில்லை, கிடைச்சாலும் ஏதும் புரோகிராம் பார்ப்பதில் போய் விடுது, தேடிப் படிக்கிறேன்ன் ஏ அண்ணன்...
இதுதான் இங்கு கேரளத்தில் பிளாக் அல்வா (Black Halwa) என்று விற்கப்படுவது. பருப்பு வகைகள் சேர்ப்பதில்லை. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் கருப்பட்டி எனப்படும் பனைவெல்லம் கொண்டு செய்யப்படும்.
பதிலளிநீக்குகொஞ்சம் நாட்களுக்கு அல்வா அதிரா
Jayakumar
வாங்கோ ஜே கே ஐயா...
நீக்கு//கொஞ்சம் நாட்களுக்கு அல்வா அதிரா//
ஆவ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா நான் அல்வாக் குடுக்க மாட்டேன்ன் ஆனா வாங்குவேன்..:))
அல்வா கொடுத்திருக்கும் அதிரா வாழ்க! ஒரு முறை சமையல் குறிப்பை வீடீயோவாக அனுப்ப வேண்டும் என்று நான் நினைத்தேன், நீங்கள் முடித்து விட்டீர்கள். super!
பதிலளிநீக்குவாங்கோ பானுமதி அக்கா.. சே..சே.. இது தொதலாக்கும்.. அல்வா நஹி:).
நீக்கு//ஒரு முறை சமையல் குறிப்பை வீடீயோவாக அனுப்ப வேண்டும் என்று நான் நினைத்தேன், நீங்கள் முடித்து விட்டீர்கள். super!//
ஹா ஹா ஹா கோமதி அக்காவும் நீங்களும்தான் சமையல் வீடியோவைக் கவனிச்சிருக்கிறீங்க... நன்றி.. அதிராதான் முதன் முதலில் எங்கள் புளொக்கில் சமையல் வீடியோப் போட்டேனாக்கும்[ஹையோ இல்லை என ஆரும் ஏதும் பழசைக் கிண்டி எடுத்துச் சொல்லிடாதீங்கோ கர்ர்:))].. அப்போ பரிசு எனக்கே... :)
See this also Muscoth halwa.
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=qsKBa5mec8E
ஆஆ வீடியோப் பார்த்தேன் நன்றாக இருக்கு. இதைத்தான் மஸ்கட் என்போம், ஆனா நம் மஸ்கட் க்கு வெறும் கோதுமைப்பால் தான் பாவிப்பார்கள், தேங்காய்ப்பால் சேர்ப்பதில்லை.
நீக்குhttps://www.youtube.com/watch?v=mD_Mn9cI2IM
பதிலளிநீக்குநன்றி நன்றி.
நீக்குஎனக்கு தெரிந்து ட்ரெம்ப் கேர்ள் ப்ரெண்ட் செய்த ஸ்வீட் உண்மையிலே நன்றாக வந்திருக்கிறது போலத் தோன்றுகிறது. குட் பாராட்டுக்கள்
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். அதிராவுக்கு
நீக்குஸ்பெஷல் வணக்கம். இங்கிருக்கும் மருமகளுக்கு இன்று
பிறந்த நாள். அதற்கு பரிசாகக் கொடுக்கிறேன்.
மிக இனிப்பான காலைப் பொழுதாக மலர்ந்திருக்கிறது.
அன்பின் ஸ்ரீராமைக் குறிப்பிட்டு செய்திருப்பது
மகிழ்ச்சி. என்னாளும் அவர் இல்லத்தில் இன்பம்
பொங்கட்டும்.வாழ்த்துகள்.
தேங்காய்ப்பால் அல்வா பார்ப்பதற்கே நன்றாக இருக்கிறது.
கறுப்பு வண்ணத்தில் இந்த சிற்றுண்டியைப் பார்த்திருக்கிறேன்.
செய்முறை விளக்கங்களும் அருமை.
வீடியொவும் தெளிவு,. அன்பு வாழ்த்துகள் அதிரா,.
ட்ரம்ப் கேர்ல்ப்ரண்டா :) ஹாஹா இது மெலனியாவுக்கு தெரியுமா :))))))
நீக்கு//Avargal Unmaigal27 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 8:55
நீக்குஎனக்கு தெரிந்து ட்ரெம்ப் கேர்ள் ப்ரெண்ட் செய்த ஸ்வீட் உண்மையிலே நன்றாக வந்திருக்கிறது//
வாங்கோ ட்றுத் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. என்னை அடுத்த ஹொலிடேக்கு அம்பேரிக்கா போகவிடாமல் தடுக்கும் முயற்சி நடக்குதூஊஊஊ:)).. ட்றம்ப் அங்கிளின் பேசனல் செக்கரட்டரி ஆக்க்கும் அதிரா:))..
நன்றி ட்றுத்.
வாங்கோ வல்லிம்மா.. ஓ மருமகளுக்கு என் தொதலோடு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கோ... நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
நீக்குமிக்க நன்றி வல்லிம்மா..
நீக்குAngel27 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 5:19
ட்ரம்ப் கேர்ல்ப்ரண்டா :) ஹாஹா இது மெலனியாவுக்கு தெரியுமா :))))))////
https://i.ytimg.com/vi/D3f28S2bKm4/maxresdefault.jpg
wow...சூப்பரா செய்திருக்கிறீங்க பசும்பொன். my favorit sweet. வீடியோ, செய்முறை ,பிரஷண்டேஷன் எல்லாமே அருமை.
பதிலளிநீக்குஹலோ ப்ரியா ..இப்படி அவசரப்பட்டு பாராட்டினா உங்க வீட்டுக்கு அந்த தொதல் வரும் ..பரவால்லியா :)) எதுக்கும் இன்சூரன்ஸ் எடுத்து வைங்க
நீக்குவாங்கோ அம்முலு .. ஆஆஆ மிக்க நன்றி...
நீக்குதேம்ஸ் இன் வடக்குப் பக்கம் இருந்து புகைப்புகையா வருது:)).. அதையெல்லாம் பார்த்துப் பயந்திடாதீங்கோ ஓகே:))...
மிகவும் அழகாக செய்துள்ளீர்கள் சகோதரி...
பதிலளிநீக்குவாங்கோ சகோ டிடி மிக்க நன்றி.
நீக்குஆஆஆஆஆவ்வ்வ்வ் அனைவருக்கும் நன்றி நன்றி.... பதில் தருவேன் .... எப்போதெனச் சொல்ல மாட்டேன் அதுவரை மன்னிச்சுக்கொள்ளுங்கோ....
பதிலளிநீக்குநான் எப்போ வருவேன் எப்படி வருவேன் என்று யாருக்கும் சொல்ல மாட்டேன்
நீக்குஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வரமாட்டேன்
இப்படிக்கு லேடஸ்ட் அதிரா
ஹையோ ஹைய்யோ
@நெதமிழன்
நீக்கு//
ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வரமாட்டேன்///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அஞ்சு அந்த தொதல் டிஸ் ஐ டமால் என எடுத்திட்டு ஓடிடுங்கோ:)) தெரியாமல் குடுத்திட்டேன்:)) ஹா ஹா ஹா...
பாருங்கோ.. எவ்ளோ ரயேட் ஆனாலும் கடமைதான் முகியம் என வந்திட்டேனாக்கும்:). ஆனா அஞ்சு இப்பூடி இல்லையாக்கும்:)) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்.. மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயேர்ஸ்:))
தொதலுடன் அசத்தும் அதிரா.
பதிலளிநீக்குவாங்கோ மாதேவி நன்றி நன்றி..
நீக்கு//கறுப்பு சீனி[சுகர்] - 125 கிராம்ஸ்//
பதிலளிநீக்குமக்களே யாரும் அவசரப்பட்டு வாழ்த்தாதீங்க ..இங்கே படத்தில் கருப்பு சீனியை காணோம் :)))))))))))எங்களை யாரும் பேய்க்காட்ட முடியாதாக்கும் :))))))))
நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்றுதான்,பபிள்ஸ் பபிள்ஸாக வரும் 6வது படத்தில் கரண்டிக்கு அருகில் அது தன்னைத் தானே முகம் மட்டும் காட்டியிருக்கிறது.. அப்படியும் நம்பவில்லையென்றால...என்ன செய்வது? ஹா. ஹா. ஹா.
நீக்குபபிள்ஸ் பபிள்ஸா ?? எங்கே கமலாக்கா :))) ஹாஹாஆ அது ப்ரவுன் சர்க்கரையை போட்டு பிளாக்குனா எப்புடி நம்பறது ??? :)))
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குநான் கலரை சொல்லவில்லை. நான் "பேய் காட்டுவது" என்ற வார்த்தைக்கு குறிப்பிட்டேன். 6வது படத்தில் "பேய்" ஒன்று அல்வாவை கிளறும் கரண்டிக்கு அருகில் பபிள்ஸிலிருந்து வெளி வந்து தன்னை காட்டியிருக்கிறது போல் இருக்கிறது என்று சொன்னேன்:) ஒரு வேளை அது என் கண்ணுக்கு மட்டுந்தான் தெரிகிறதோ ..? எனக்குதான் பேய் காட்டுகிறதோ.. ஹா. ஹா.ஹா.
நன்றி.
பூனை மாதிரி கரண்டி கிட்டே முகம் காட்டியது எனக்கும் தெரிகிறது கமலா
நீக்குஹாஹாஆ :) கமலாக்கா நான் இன்னுமும் அதீச்சியில் இருந்து மீளலை :) தட்டில் இருக்குற தொதல் என்னை ஷாக்காகிடுச்சி :) அதான் லேட்டா புரியுது :)
நீக்கு@ அஞ்சு
நீக்கு//மக்களே யாரும் அவசரப்பட்டு வாழ்த்தாதீங்க ..இங்கே படத்தில் கருப்பு சீனியை காணோம் :)))))))))))எங்களை யாரும் பேய்க்காட்ட முடியாதாக்கும் :))))))))//
வாங்கோ அஞ்சு....
ஹா ஹா ஹா அதானே பிரவுண் சுகரை எப்பூடிக் கறுப்புச் சீனி என எழுதினேன் ஹையோ ஹையோ எனக்கே டவுட்டா வருது இப்போ.. ஏனெனில் பிரவுண் சுகர் என்றே பேசிப் பழகி விட்டமையால, இங்கு தமிழில் எழுதும்போது அது கறுப்பு என எழுதிட்டேன் போல ஹா ஹா ஹா...
என்னாது கமலாக்காவுக்கு பபிள்ஸ் க்குள் இருந்து பேய் தெரியுதோ?:).. ஹா ஹா ஹா..
நீக்குகோமதி அக்காவுக்கு பூஸ் தெரியுதாம்... ஆண்டவா இதைவிட நான் என் முகத்தைக் காட்டியிருக்கலாமோ:)). முகம் காட்டாததுக்கே அஞ்சு அதிர்ச்சியாகிட்டா:)).. அப்போ முகம் காட்டியிருந்தால் என்ன ஆகி இருக்கும்?:)) ஹா ஹா ஹா.
கர்ர்ர்ர்ர்ர் ஒரு செகரட்டரி கொஞ்சம் பிசியா இருக்குற டைமில் தடாலடியா சொல்லமா பேரை மாத்தி குண்டூ பூனை ..
பதிலளிநீக்குஏன் அஞ்சு ஏன்ன்.. இவ்ளோ அழகிய லட்சணத்தோடு இருப்பது டப்போ?:) ஹா ஹா ஹா..
நீக்கு//இரு பெரிய தேங்காய்களை எடுத்து திருவி, //
பதிலளிநீக்குதேங்காயை உடைக்காம எப்படி துருவ முடியும் ?????????????
https://mondrian.mashable.com/2018%252F02%252F09%252F24%252F33c4b26203ba4ac3973ba379d82b4a45.e9ef1.jpg%252F1200x630.jpg?signature=B1TZY0zbGTcJf-d3Rs8adBmss7M=
நீக்குஅந்த லாஸ்ட் படத்தை பார்த்து நெஞ்சு வெடிச்சிடும் போலிருக்கே :)
பதிலளிநீக்குஎனக்கு சத்தியம் பண்ணுங்க நெல்லைத்தமிழன் தலையில் கைவெச்சு :) இது நீங்க செய்ததா ?????????????????????????ஒண்ணுமில்லை இவ்ளோ சூப்பரா வந்திருக்கே :))))))))
//எனக்கு சத்தியம் பண்ணுங்க நெல்லைத்தமிழன் தலையில் கைவெச்சு :)//
நீக்குஅல்லோ ஹா ஹா ஹா அண்ணி அரிவாளோடு கலைக்கிறா அஞ்சுவை.. ஹையோ ஹையோ.. சத்தியம் பண்ண வேறு இடம் கிடைக்கேலையோ எனத்தான் ஹா ஹா ஹா:)).. நன்றி அஞ்சு.. எனக்கும் நெஞ்சு வெடிச்சதுபோலத்தான் இருந்துது ஏனெனில் முதன் முதன் நான் செய்தேன் இத்தொதல் என் கன்னி ரெசிப்பீ ஆக்கும் .. சூப்பராக வந்தது.. நானே எதிர்பார்க்காத ஒன்று. நன்றி அஞ்சு.
யாரெஆச்சும் என்னோட அலர்ஜி பத்தி பேசினீர்களா இங்கே :)))))))))) இல்லை எதோ பேச்சு சத்தம் கேட்டுது :)
பதிலளிநீக்கு//யாரெஆச்சும் என்னோட அலர்ஜி பத்தி//
நீக்குஅப்பூடி எண்டால் என்ன அஞ்சு?:)).. ஏதும் வைர அட்டியல், ஒட்டியாணம் அப்பூடியோ?:).. இல்லையே:)).. ஆட்கள் இல்லாதபோது நாங்கள் ஆரைப் பற்றியும் இங்கு பேசுவதில்லையாக்கும்:)).. இது அந்த அலர்ஜி மேலயே ஜத்தியம்:)) ஹா ஹா ஹா.
வணக்கம் அதிரா சகோதரி
பதிலளிநீக்குஅருமையான இனிப்பை அழகான படங்களுடன், செய்முறை விளக்கங்களுடன் செய்து காண்பித்திருக்கிறீர்கள். மிகவும் நன்றாக ருசியாக கரையும் இனிப்புடன் இருக்குமென நினைக்கிறேன். தேங்காய் பூவை போட்டு, கூடவே பா. பருப்பு இல்லை க. பருப்பு வறுத்து பொடி செய்து போட்டு, வெல்லத்துடன் பர்பி செய்திருக்கிறேன். இந்த மாதிரி பால் எடுத்து, வெறும் வறுத்த பா. பருப்பை மட்டும் பொடிக்காமல் சேர்த்து பண்ணியதில்லை. நீங்கள் விமர்சித்த அழகே இதன் சுவை என் நாவில் வந்து நிற்கிறது. இது போல் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். வீடியோவும் நன்றாக உள்ளது. அருமையான பதிவு.
அதை அழகாக வடிவமைத்து எல்லோருக்கும் பங்கு வேறு வைத்து விட்டீர்கள். ஆனால் நான் க்யூவில் ஒரு வேளை கடைசியில் வந்தால், எனக்காக சகோ நெ. தமிழர் அவர்களிடம் என் பங்கை ஞாபகமாக வைத்திருக்கச் சொன்னீர்களா? அவர் ஏற்கனவே "என்னை மறந்ததேன்" என்று கேட்டிருக்கிறார். அவரை முதலில் ஒரு பீஸ் எடுத்துக் கொள்ள சொல்லியிருக்கலாமே...! பாவம் அவர்.. இருந்தாலும் அள்ளிக் கொடுத்து கை சிவந்த கர்ணனின் புகழ் அவரையும் சேரட்டும். ஹா.ஹா.ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்கோ கமலாக்கா வாங்கோ.. ஆவ்வ்வ்வ் பாராட்டுக்கு மிக்க நன்றி.
நீக்கு//இது போல் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.//
செய்யாவிட்டால், கொஞ்சம் தேம்ஸ்கரை ஆச்சிரமம் வந்து என்னைச் சந்திக்கவும் பிளீஸ்ஸ்:)).
//ஆனால் நான் க்யூவில் ஒரு வேளை கடைசியில் வந்தால், எனக்காக சகோ நெ. தமிழர் அவர்களிடம் என் பங்கை ஞாபகமாக வைத்திருக்கச் சொன்னீர்களா?///
அப்பம் புறிச்சுக் குடுத்த கதை தெரியுமோ கமலாக்கா உங்களுக்கு?:) ஹா ஹா ஹா அக்கதைபோல ஆகிட்டுதோ என்னமோ தெரியவில்லையே இந்தக் கதையும்.... நெல்லைத்தமிழனுக்கு சுவீட் கூடாது எனும் நல்லெண்ணத்திலேயே எல்லோருக்கும் புறிச்சுக் குடுக்கச் சொன்னேன்.. அது டப்போ?:)) ஹா ஹா ஹா
மிக்க நன்றி சகோதரி கமலாக்கா.
அப்புறம் மியாவ் இது எங்க நாகர்கோவில் ஸ்பெஷல் தொதல் .இதுக்கு கருப்பு புட்டரிசி ஸ்பெஷலா வாங்கி செய்வாங்க எங்க பாட்டி.நீங்க சொன்ன மாதிரிதான் இதை பெரிய வாணலியில் கொட்டி கிளறுவாங்க .ஆனா நான் சாப்பிட்டதில்லை பிக்கோஸ் நான் குட் கேர்ள் சின்ஸ் ஒன் இயற் :)))))
பதிலளிநீக்குஅதேதான் அஞ்சு சிவப்புப் பச்சை அரிசியை இடித்துத்தான் செய்வோம். சிலர் இதனை கறுப்பாக்க, கொஞ்சம் சீனியை பாகு போல காச்சி, கறுப்பாக்கி இதனுள் ஊத்துவதுண்டு. அம்மாவும் சிலசமயம் இப்படி செய்து ஊத்துவா, நான் இம்முறை செய்யவில்லை, ஆனா கலர் கறுப்பாக வந்திருக்குது.., அப்படிக் காச்சி ஊத்தினால் இன்னும் கறுப்பாக வரும்.
நீக்கு//ஆனா நான் சாப்பிட்டதில்லை பிக்கோஸ் நான் குட் கேர்ள் சின்ஸ் ஒன் இயற் :)))))//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
/ஓடர்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி://
பதிலளிநீக்குஎதுக்கு அட்ரெஸ்லாம் :))))) பேசாம ஸ்விக்கி uber eats இதில போடுங்களேன் :))))))))))))))
ம்ஹூம்ம் என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாது.. அவர்களெல்லாம் அரைமணியில கேட்பினம்:)).. எனக்கு ஒருநாள் வேணுமாக்கும் கர்ர்ர்ர்:))
நீக்குஅஆவ் வீடியோவில் அறுசுவை அதிரா செய்முறை நல்லா இருக்கு அப்டியே நெக்ஸ்ட் ஸ்டேப் யூ டியூபில் vlog ஆரம்பிங்க மியாவ் :)))))))
பதிலளிநீக்குஹா ஹா ஹா விலொக் ஆரம்பிச்சு எல்லோரையும் மயங்கி விழ வைக்கப் போறேன்ன்:)).. நன்றி அஞ்சு.
நீக்குஸ்ஸ்ஸ் ஹப்பா சரி நான் வேலைக்கு போயிட்டு வரேன் எல்லாருக்கும் பை பை :)
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி...
நீக்குஆஹா... தொதல்! இந்தப் பெயர், பதார்த்தம் கேள்விப்பட்டது தான் சுவைத்தது தான் இல்லை.
பதிலளிநீக்குசுவையான குறிப்பு.