வெள்ளி, 10 ஜனவரி, 2020

வெள்ளி வீடியோ : சோலை தென்னம்பாளை போலே தோகை அவள் சிரிக்கக் கண்டேன்

இன்றைய நேயர் விருப்பப்பாடல் ஒரு சிறப்பான பாடல்.  பல சிறப்புகளை உள்ளடக்கிய ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்.​ 
கமலஹாசனும்,  ஆர் சி சக்தியும் உதவி இயக்குனர்களாக வேலை பார்த்த படம்.  கமல் உதவி நடன இயக்குனராகவும் வேலை பார்த்ததோடு, ஒரு காட்சியிலும் நடித்திருக்கும் படம்.



ஜெமினியும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்திருக்கும் மிகச்சில படங்களில் ஒன்று.  1971 இல் வெளிவந்த படம்.  சிவகுமார், முத்துராமன், ஜெமினி, ஜெயலலிதா, ஸ்ரீவித்யா, ஸ்ரீகாந்த், மேஜர், பத்மினி  என்று நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கும் படம்.  இது பின்னர் தெலுங்கு, மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்ட படம்.



படத்தின் பெயர் அன்னை வேளாங்கண்ணி.   பாடல் 'வானமெனும் வீதியிலே...'  படத்தில் பாடல்களை கண்ணதாசனும் வாலியும் எழுதி இருக்க, ஜி தேவராஜன் இசை அமைத்திருக்கிறார். பாடலை கே ஜே யேசுதாஸும் மாதுரியும் பாடி இருக்கிறார்கள்.  யேசுதாஸ் கொஞ்சம் ஜலதோஷம் பிடித்தது போல பாடினாலும் இனிமையான பாடல்.



விரும்பிக்கேட்ட நேயர் பானு அக்கா!



வானமெனும் வீதியிலே குளிர் வாடையெனும் தேரினிலே 
ஓடிவரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள் 
என் உறவுக்கு யார் தலைவன் என்று கேட்டு சொல்லுங்கள் - மாதாவைக் கேட்டு  சொல்லுங்கள்.

வானமெனும் வீதியிலே குளிர் வாடையெனும் தேரினிலே 
ஓடிவரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள் 
என் உறவுக்கு யார் தலைவி என்று கேட்டு சொல்லுங்கள் - மாதாவைக் கேட்டு  சொல்லுங்கள்.

தாமரையின் இதழ் தடவ காலை வரும் கதிர் போலே
பூமகளின் கரம் தழுவ சோலை வந்த மன்னவனே 


யாருக்கு யார் என்று சேர்த்து வைக்கும் தேவன் இன்று 
நீ எந்தன் உரிமை என்று நெஞ்சோடு சொன்னதென்ன 
சொன்னதென்ன...

தட்டினால் திறப்பதன்றோ தேவன் கோவில் மணிக்கதவு 
தட்டினாள் பாவை என்று திறந்ததம்மா மனக்கதவு 

நான் படித்த வேதம் எல்லாம் வான்மறையில் கேட்டதனால் 
தாய் மனது இறங்கி வந்தாள் தக்க துணை தேடித் தந்தாள் 
தேடித் தந்தாள்...

மாதுளையின் வாய்திறந்து முத்துக்களை நான் எடுத்து 
காதலெனும் பசியாற உண்ணுகின்ற காலம் எது 
மாலை உண்டு மேடை உண்டு நாளை வரும் முடிப்பதுண்டு 
சோலை உண்டு தென்றல் உண்டு சொன்னபடி நடப்பதுண்டு 
நடப்பதுண்டு...




=========================================================================================


இன்றய என் விருப்பம் 'சிவகாமி' படத்திலிருந்து..   சிறையிலிருந்து வெளிவந்தபின் நிறைய கஷ்டப்பட்ட எம் கே டி பாகவதர் வேண்டிக் கொண்டதன் பேரில் எம் ஏ வேணு அவரை வைத்து 1959 இல் தயாரித்த படம்.  ஏ. மித்ரதாஸ் இயக்கம்.  கே வி மகாதேவன் இசை.

இதில் எம் கே டி பாடிய அற்புதமான பாடல்கள் நான்கு இருக்கிறது.  அந்த நான்கு பாடல்களையும் எழுதி இருப்பவர் பாபநாசம் சிவன்.  இதே படத்தில் டி எம் எஸ் பாடிய இரண்டு பாடல்களும் உண்டு.   அதில் ஒன்றுதான் இந்தப் பாடல்.  இதுவும் ஒரு அற்புதமான பாடல்.  நேயர் விருப்பப் பாடலைப் போலவே இதுவும் வானம் சம்பந்தப்பட்ட பாடல்!  இந்தப் பாடலை  எழுதி இருப்பவர் கவிஞர் கா மு ஷெரிஃப்.

இந்தப் படத்தில் இருக்கும் பாகவதர் பாடல்கள் இந்தப் படத்துக்காக பாடியவை அல்ல.  தன்னால் இப்போது பாட முடியாது என்று சொல்லி விட்ட பாகவதர் முன்னர் எடுக்கத் திட்டமிட்டு எடுக்காமல் போன 'ராஜயோகி' படத்துக்காக பாடி இருந்த பாடல்களை உபயோகப்படுத்திக் கொள்ளச் சொன்னாராம்.  பாதி படம் எடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே பாகவதர் மறைந்து விட, அப்புறம் படத்தை எப்படியோ முடித்திருக்கிறார்கள்.  பாடல் காட்சியில் நடித்திருப்பவர் ஜக்கையாவும் ஜெயஸ்ரீயும் என்று சொல்கிறார்கள்.  இளம் டி எம் எஸ் குரல்.


வானில் முழு மதியைக் கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன் 
வானமுழு மதியைப் போலே மங்கை அவள் வதனம் கண்டேன்..

கோவைப்பழம் கொடியில் கண்டேன் 
குடிசை முன்னே பெண்ணைக் கண்டேன் 
கோவைப்பழ நிறத்தைப்போலே 
குமரி அவள் உதட்டைக் கண்டேன் 

சோலையிலே தென்னைக் கண்டேன் 
தோட்டத்திலே பெண்ணைக் கண்டேன் 
சோலை தென்னம்பாளை போலே 
தோகை அவள் சிரிக்கக் கண்டேன் 

மலை மேலே தேனைக் கண்டேன் 
மலையடியில் பெண்ணைக் கண்டேன் 
மலைத்தேனின் இனிப்பைப் போலே
மாது அவள் பேசக் கண்டேன் 

தூக்கம் கண்ணை சுற்றக்கண்டேன் 
தூங்கும்போது கனவு கண்டேன்  
கனவிலேயும் அந்தப் பெண்ணே 
கண்ணெதிரே நிற்கக்கண்டேன் 

77 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்றைய பாடலைக் கேட்டு ரசிங்க. இன்று திருவாதிரைக் களி சாப்பிடப் போகும்/சாப்பிட்ட அனைவருக்கும் திருவாதிரை வாழ்த்துகள். நாளைக்கு நான் திருவாதிரை வழிபாட்டை எல்லாம் முடிச்சுட்டுத் தான் மத்தியானமா வருவேன். (யாரும் தேடப் போறதில்லைனாலும் சொல்லி வைக்கணும் இல்லையோ! அதான்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...    வணக்கம், நல்வரவு, நன்றி.   இன்று 7 தான் கூட்டோட களி இருக்கும்.  கூடவே வேறொரு காரணத்துக்காக சிறிதளவு சர்க்கரைப் பொங்கலும்!

      நீக்கு
  2. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  4. இன்றைய பாடல்கள் இதண்டுமே தேன் துளிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.   இருவேறு மாறுபட்ட இளவயது ஆண்குரல்களில்!

      நீக்கு
  5. அன்றைய இலங்கை வானொலியில் அதிகமாக ஒலிபரப்பப்பட்ட பாடல்களுள் ஒன்று -

    வானில் முழு மதியைக் கண்டேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் வரும் எம் கே டி பாடல் என்ன என்று சென்று தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும்.   ஆனால் அந்தப் பாடல்களை  இந்தப் படத்தைச் சேர்ந்தது என்று அறியாமல் அறிந்திருப்போம்.

      நீக்கு
  6. இன்றைய பாடல்கள் இரண்டுமே
    வானம் என்று தொடங்குவது அருமை...

    வான் - ஆகாயம் எனும் தலத்தில் இன்று திருநாள் .. திரு ஆதிரை...

    பதிலளிநீக்கு
  7. கவி கா.மு.ஷெரீப் அவர்களது பாடல்கள் எல்லாமே தன்னித்துவமானவை...

    நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
    தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம்...

    அவருடையது தான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1956-ல் வெளிவந்த அந்தப் பாடலில், கடைசியில் :

      பண்பே அறியாப் பாவியர்கள்
      வாழுகின்ற பூமியிது நீ அறிவாய்..!

      நீக்கு
    2. பரவாயில்லை ஏகாந்தன் ஸார்..   நன்றாய் நினைவில் வைத்திருக்கிறீர்கள்.

      நீக்கு
    3. நானும் தான் நினைவில் வைத்திருக்கிறேன்....

      எனக்கு எதுவும் சொல்லலாமே...
      ( சும்மா லுலுலுவா...)

      என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல்...

      என் தங்கையின் திருமணத்தோடு பதிவு செய்த கேடட்டில் பாடியிருந்தார்...

      கவியின் நீதியுரைகளை
      என் தந்தை எனக்குச் சொன்னதாக நினைத்துக் கொள்வேன்...

      இந்தப் பாடல் எனக்கு மனப்பாடம்...

      நீக்கு
  8. வாழ்ந்தாலும் ஏசும்
    தாழ்ந்தாலும் ஏசும்..
    வையகம் இது தானடா....

    மற்றது

    பணம் பந்தியிலே
    குணம் குப்பையிலே...

    எத்தனை அழுத்தம் திருத்தமான ஆழமான வரிகள்..

    உலகியலைக் கண்முன்னே நிறுத்துபவை...

    பதிலளிநீக்கு
  9. முதல் பாடலில் பெண் குரல் மாதுரியா? படத்தில் ஜெயலலிதா என்பதும் இப்போதுதான் அறிகிறேன். கேட்டிருக்கிறேன்.

    இரண்டாவது பாடலை சிறுவயதில் ஆல் இண்டியா ரேடியோவின் கைங்கர்யத்தில், நிறைய ரசித்திருக்கிறேன். பாடியும் பார்த்திருக்கிறேன்! கா.மு.ஷெரீஃப் நல்ல கவிஞர். மேலும், அருமையான மனிதர். அவரைப்பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறேனா, போட விரும்பினேனா .. நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   ஆனால் இவர் பற்றி முன்னர் வேறொரு வெள்ளி பதிவில் பேசி இருக்கிறோம்.

      நீக்கு
  10. அன்னை வேளாங்கண்ணி எனத் திரைப் படம் வந்த பிறகு தான் வேளாங்கண்ணி என்ற சிற்றூர் பலராலும் அறியப் பெற்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் பெஸண்ட் நகர் வேளாங்கண்ணி கோவிலுக்கு பல வருடங்கள் முன்பு சென்று வணங்கிய ஞாபகம் வருகிறது.

      நீக்கு
    2. பெசன்ட் நகர் சென்றதில்லை. வேளாங்கண்ணி சென்றிருக்கிறேன்.  

      நீக்கு
    3. //வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன கண்ணி”. அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம் இது. இந்த ஊருக்கருகில் சுமார் 10 கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது.

      ”மாலை மதியொடுநீ ரர வம்புனை வார்சடையான்
      ‘வேலனகண்ணி’யொடும் விரும் பும்மிடம்………” (திருஞானசம்பந்தர்)

      சேல் [மீன்] போன்ற கண் அமைவதால் “சேலன கண்ணி”, வேல் போன்ற விழி இருப்பதால் “வேலன கண்ணி”. பிற்காலத்தில் வேளாங்கண்ணி எனத் திரிந்தது. வேலன கண்ணி, சேலன கண்ணி என்பன உவமையால் அமையும் பெண்பாற் பெயர்கள்.//
      நன்றி "தமிழ் இந்து" கட்டுரை, எழுதியவர் நண்பர் "தேவ்" அவர்கள்.

      நீக்கு
  11. இன்று K.J.ஜேசுதாஸ் அவர்களது பிறந்த நாள்..

    பதிலளிநீக்கு
  12. இரண்டுமே அற்புதமான பாடல்களே...
    முதல் பாடல் பாடியது வாணி ஜெயராம் இல்லையா ?

    கா.மு.ஷெரீப் அருமைமான கவிஞர் ஆபாச வார்த்தைகள் எழுத முடியாது என்று ஒதுங்கியவர்.

    இவர் எழுதிய பாடல்களில் ஒன்று திருவிளையாடல் பாடல் "பாட்டும் நானே பாவமும் நானே"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி.  ஆமாம்.   திருவிளையாடல் பாடல் கண்ணதாசன் பெயரில் வந்திருக்கும்.  முன்னரே பேசியிருக்கிறோம்.

      நீக்கு
  13. இரண்டு பாடல்களும் பலமுறை ரசித்த பாடல்கள்...

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. இரண்டு பாடல்களும் பிடித்த பாடல் கேட்டு மகிழ்ந்தேன். நன்றி.
    என் மாமா(அம்மாவின் அண்ணன்) நோட்டில் எழுதி வைத்துக் கொண்டு மனப்பாடம் செய்து பாடிய பாடல்.

    கா.மு.ஷெரீப் அவர்கள் பாடல்கள் எல்லாம் மிக அருமையான பாடல்கள். "ஏரிக்கரை மேலே போற்வளே பெண்மயிலே" பாடல் மிக பிரபலம்.

    இரண்டாவது பாடல் முன்பு இதே பாடலை பகிர்ந்து இருக்கிறீர்கள், நிறைய பேசி இருக்கிறோம்.
    யாரே இலங்கை நடிகர் பாடி வெளியிட்ட பாடல் இது. படத்தில் இடம்பெற்ற காட்சி அல்ல என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது பாடலை ஏற்கெனவே பகிர்ந்திருக்கிறேனா?   நினைவில்லை.   மறுபடி கேட்டதாய் சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்!

      நீக்கு
  16. அனைவருக்கும் திருவாதிரைத் திரு நாள் வாழ்த்துகள்.
    அதுவும் முழு நிலவோடு கூடிய திருவாதிரை.
    களியும் கூட்டும் சிறக்கட்டும்.கூடியிருந்து களிக்கலாம் ,

    எல்லோருக்கும் ரேடியோ சிலோன் எத்தனை
    நினைவுகளை வழங்கி இருக்கிறது!
    கவிஞர் கா.மு ஷெரிஃப் பாடல்கள் அத்தனையும்
    ரத்தினங்கள்.

    முதல் பாடல் மிக இனிமையானது.
    படம் திருச்சியில் பார்த்தோம். வேளாங்கண்ணி
    மிகப் பிரபலமானது இந்தப் படத்தின் வீச்சில்.
    எங்கள் வீட்டு மேரி எங்களுக்காக் வேளாங்கண்ணி
    போய் வந்தார்,
    நல்ல படம். ஜெயலலிதா தான் எத்தனை அழகு.

    வானில் முழுமதி மிகப் பிரபலமான பாடல்.
    அனேக இசையும்கதையும் நிகழ்ச்சியிலும் வரும்.
    //கனிவிலேயும் அந்தப் பெண்ணே கண்ணெதிரெ
    நிற்கக் கண்டேன்// அருமையிலும் அருமை.

    சுவாரஸ்யமான, இனிமையான பாடல்கள்.
    மிக மிக நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...   களியும் கூட்டும் சாப்டாச்! ஆம், ரேடியோ சிலோன் மூலமாக எத்தனை எத்தனை பாடல்களைக் கேட்டிருக்கிறோம்.  ரசிகர்கள் அவர்கள்.

      நீக்கு
    2. //நல்ல படம். ஜெயலலிதா தான் எத்தனை அழகு.// இல்லையா பின்னே? என் மகள் கே.ஜி. ஒன் படித்துக் கொண்டிருந்த பொழுது அவள் பள்ளியில் நடத்தப்பட்ட மாறுவேடப் போட்டியில் அவளுக்கு ஜெயலலிதாவாக வேடம் போட்டு விடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால், அவளுக்கு அப்போது முடி கம்மியாக இருந்ததால் கொண்டை போட முடியவில்லை. உடனே நர்ஸ் வேடம் போட்டு என்ன பேச வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தேன். ஸ்கூலில், "என்னது இது ஜெயலலிதா வரப்போகிறார் என்று நினைத்தால் நர்ஸ் வருகிறார்?" என்றார்கள். அன்னை வேளாங்கண்ணி ஜெயலலிதா என்று சொல்லி சமாளித்தேன். 22கேரட் நெக்லெஸ் என்று 22 கேரட்டுகளால் மாலை, இடுப்பில் இலை, தழை   இவைகளால் ஆடைஅணிந்து வந்த குழந்தை, 'ஐயம் எ லிட்டில் டீ பாட்'  என்னும் நர்சரி ரைமுக்கு ஏற்றார் போல் டீ பாட் போலவே உடை அணிந்து வந்து குழந்தை இவைகளையெல்லாம் பார்த்து விட்டு, நம் குழந்தைக்கு எங்கே பரிசு கிடைக்கப் போகிறது? என்று நினைத்துக் கொண்டேன். அவள் தைரியமாக மேடையில் ஏறி பேசியதாலோ என்னவோ இரண்டாம் பரிசு கிடைத்தது.  எல்லாம் ஜெய லிலிதாவின் மகிமை!

      நீக்கு
    3. //எல்லாம் ஜெயலலிதாவின் மகிமை!//

      :))))

      நீக்கு
  17. //கமலஹாசனும், ஆர் சி சக்தியும் உதவி இயக்குனர்களாக வேலை பார்த்த படம். கமல் உதவி நடன இயக்குனராகவும் வேலை பார்த்ததோடு.. //

    வேலை பார்க்கறதா?.. இதென்ன சினிமா மொழியா?.. பத்திரிகைகளில் எழுதும் சினிமா நிருபர்கள் எப்படியெல்லாம் வரிப் பிரயோகங்களைப் புழக்கத்திற்கு கொண்டு வருகிறார்கள், பாருங்கள்!

    அதே மாதிரி தான் இதுவும்:

    அவர் அந்தப் படத்திற்கு வாங்கிய சம்பளம்.. 'சம்பளம்"-- ஏதோ ஏழை அரசுப் பணியாளர் வாங்குகிற மாதச் சம்பளம் போல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேலை பார்த்ததாய்தானே சொல்ல வேண்டும் ஜீவி ஸார்?  வேறெப்படி  சொல்வது?  சேவை செய்தார்கள் என்றா?!!

      நீக்கு
    2. அந்தப் படத்திற்கு டைரக்ஷன் அவர், திரைக்கதை வசனம் இவர், ஒளிப்பதிவாளர் இவர்.. ஒப்பனை இவர்.. என்று தான் சொல்வது வழக்கம். டைட்டில் கார்டிலும் அப்படித் தானே போடுவார்கள்?..

      அந்தப் படத்திற்கு கமலஹாசனும். ஆர்.சி.சக்தியும் உதவி இயக்குனர்கள். போதுமே!

      மாச சம்பளத்திற்கு ஊதியம் பார்ப்பவர்களைத் தான் வேலை பார்ப்பவர் என்று சொல்வது அந்நாட்களில் வழக்கமாக இருந்தது. எல்லாவற்றையும் இந்த பத்திரிகை சினிமா நிருபர்கள் மாற்றி விட்டார்கள்.

      அதற்காக சொன்னேன். எல்லாம் வேலை தானே என்று எடுத்துக் கொள்வதாக இருந்தால் நீங்கள் சொல்வது சரி தான்.

      நீக்கு
  18. பாபநாசம் சிவன் அவர்களின் இயற்பெயர் இராம சர்மன். கர்நாடக இசையில் 2400-க்கு அதிகமான கிருதிகளை இயற்றிய பெருமகன்.
    பாடலாசிரியராக, இசை அமைப்பாளராக மட்டுமில்லை திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். தியாகராஜ பாகவதர் பாடிய பிரசித்தி பெற்ற பாடலான 'மன்மத லீலையை வென்றார் உண்டோ?' இவரது பாடல் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜீவி ஸார்...   பாபநாசம் சிவன் நடிப்பார் என்று படித்திருக்கிறேன்.   இயற்பெயர் இன்றுதான் அறிகிறேன்.

      நீக்கு
    2. கல்கியின் "தியாகபூமி" படமாக எடுக்கப்பட்டபோது கதாநாயகியின் அப்பாவாக நடித்தவர் பாபநாசம் சிவன் அவர்கள் தான். கதாபாத்திரம் பெயர் "சாமா ஐயர்" என நினைக்கிறேன்.

      நீக்கு
  19. சிவகாமி படத்திற்கு மிகக் கிண்டலாக குமுதம் பத்திரிகை விமரிசனம் எழுதியது நினைவிலிருக்கிறது.

    கொடிகட்டிப் பறந்த பாகவதரை மிகச் சாதாரண நிலையில் சேலத்தில் பலதடவை பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன எழுதினார்கள் என்றும் சொல்லி இருக்கலாம்.   மபொசி அவர்களுடன்  உங்களுக்கு நெருக்கமுண்டா ஜீவி ஸார்?

      நீக்கு
  20. புதுவையில் கவி. கா.மு. ஷெரிப் அவர்களை நாங்கள் நடத்திய எழுத்தாளர் விழா ஒன்றில் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் யார் தெரியுமா?

    சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கொடிகட்டிப் பறந்த பாகவதரை மிகச் சாதாரண நிலையில் சேலத்தில் பலதடவை பார்த்திருக்கிறேன்.//

      அட...    பேசி இருக்கிறீர்களா?

      நீக்கு
    2. எனது 'வசந்த கால நினைவலைகள்' தொடரில் தியாகராஜ பாகவதர், ம.பொ.சி. பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன், ஸ்ரீராம்.

      நீக்கு
  21. நேயர் விருப்பமாக நான் கேட்டிருந்த பாடலை போட்டதற்கு நன்றி. உங்கள் விருப்ப பாடலும் நல்ல பாடல்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    இந்த வார வெள்ளி படப்பாடல்கள் இரண்டும் அருமை இரண்டும் வெள்ளி தோன்றும் வானத்திலேயே ஆரம்பித்திருப்பது மிகப்பொருத்தம். இரண்டு படங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் தங்களால் அறிந்து கொண்டேன். இவ்விதம் தகவல்களை திரட்டி தருவது அந்தந்த படங்களைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள சௌகரியமாக உள்ளது. இரண்டு படங்களை பார்த்ததில்லை எனினும், இவ்விரண்டு பாடல்களையும் கேட்டுள்ளேன். இப்போதும் கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நீங்கள் குறிப்பிட்ட வாட்சப் குழுவில் நான் இல்லை என்ற தகவலையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  23. முதல் பாடல் மிகப் பிடித்த பாடல், பல தடவைகள் கேட்ட பாடல்.

    இரண்டாவது கேட்டதாக இல்லை, இன்று கேட்டேன், பறவாயில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது பாடல் ப'ற'வாயில்லைதானா?!!  ரசிக்கவில்லையா?

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்:)... எனக்கு இதில மட்டும் ர போடப் பிடிக்காதூஊஊ அதேபோல கருப்பு எனச் சொல்லவும் பிடிக்குதில்லை:).. கறுப்பு என்றால்தான் திருப்தியா இருக்கு:) ஹா ஹா ஹா
      இல்ல ஶ்ரீராம் உண்மையில் இந்தரகப் பாடல்கள் பிடிக்காது எனக்கு.... ஓ ரசிக்கும் சீமானே வா... இவை எல்லாம் கிட்டத்தட்ட ஒரே காலப் பாடல்கள் என நினைக்கிறேன்...

      நீக்கு
    3. கருப்பு கறுப்பு குழப்பம் பற்றி தினமணியில் வந்து ஒரு கட்டுரையை முன்னர் இங்கு பகிர்ந்திருந்தேன்.  ஓ ரசிக்கும் சீமான் வா பாடல் நானும் அவ்வளவாக ரசிப்பதில்லை.  ஆனால் இந்தப் பாடல் பிடிக்குமே!

      நீக்கு
  24. பாட்டு நல்லா இருக்கு ஸ்ரீராம் ஆனா தாசேட்டன் குரல் ஜெமினி தாத்தாக்கு சூட் ஆகல்லை .தாத்தாக்கு பிபி ஸ்ரீனிவாஸ் ஏ எல் ராகவன்  குரல்தான் நல்லா இருக்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல்...  ஜெமினிக்கு ஏ எம் ராஜா, பி பி எஸ் குரல்கள் பொருத்தம்.  யேசுதாஸ் குரல் பரவாயில்லை!  பொறுத்துக் கொள்ளலாம்!

      நீக்கு
  25. முதல் பாட்டில் ஜெ எவ்ளோ அழகு !!!

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    இந்த வாரத்தலைப்பை பார்த்ததும் எனக்கு "தென்னம்பாளை போல சிரித்தாள்" என்ற இது சத்தியம் படப்பாடல் நினைவுக்கு வந்தது. "மனம் கனிவான அந்தக் கன்னியை கண்டால்," அந்தப் பாடல் நன்றாக இருக்கும். ஆனால் அது பழைய கருப்பு வெள்ளை படப்பாடல். அசோகன் நடித்தது. புகழ் பெற்ற நாவலாசிரியர் (பெயர் சட்டென நினைவில் வரவில்லை.) எழுதிய கதையை படமாக்கினார்கள். சௌரி என்ற கதாபாத்திரம் மட்டும் கதையில் படித்தது நினைவு இருக்கிறது. கதை படித்திருக்கிறேன். படம் இது வரை பார்த்ததில்லை. கலர் படமுமில்லை. அதை ஏற்கனவே பகிர்ந்து விட்டீர்களோ ? இது போல் பல தடவை பல பாடல்களை நான் சந்தேகமாக வெள்ளியில் கேட்டு விட்டேன். வெள்ளி பாடல்களை கேட்டதும் என் நினைவிலும், அதன் சம்பந்தபட்ட பல பாடல்கள் நினைவுக்குப் பின்னால் ஓடிக் கொண்டேயிருக்கும். பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கமலா , அது ராகி. ரங்கராஜன் எழுதிய தொடர் குமுதத்தில் வந்தது.
      படத்துக்கும் கதைக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்.

      நீக்கு
    2. கறுப்பு வெள்ளையாக இருந்தால் என்னமா. அதில்தான் முக உணர்ச்சிகள் நன்றாக வெளிப்படும்.
      எத்தனை அழகான பாட்டு.
      படம் நான் பார்த்தேன். அந்த சௌரி பாத்திரம் பெயர் கூட மாற்றி இருப்பார்கள்
      என்று நினைக்கிறேன்.எனக்கும் எந்தப் பாடலைக் கேட்டாலும் தொடர்பான நிகழ்ச்சிகள் அனுபவித்த உணர்வுகள் ,கூடவே அப்போதிருந்த தோழிகள்,
      கூட்டம் போட்டு விவரம் தெரிந்து கொண்ட பாடல்கள்,'பேசும்படம் என்று
      மனம் ஓடும்.
      என் விருப்பமாக இங்கே ஒரு பாடல் வைக்கிறேன். முடிந்த போது
      ஒளிபரப்பவும். ஸ்ரீராம்.
      பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன். மணப்பந்தல் படம்.

      நீக்கு
    3. வல்லிம்மா, இது சத்தியம் என்றவுடன் உங்களுக்கு ரா.கி. ரங்கராஜன் நினைவு 'டக்'கென்று வந்து விட்டதே! குமுதப் பிரசுர கதைக்கு 'வர்ணம்' படம் வரைந்திருந்திருந்தார். திரைப் படத்தில் அசோகன் நாவசைக்கும் 'சத்தியம், இது சத்தியம்' என்ற பாடல் பொருள் பொதிந்து இருக்கும். அந்த சமயத்தில் தான் படத்தில் ஒரு தத்துவப்பாடல் இருக்க வேண்டும் என்று வழக்கம் இருந்ததே!

      அசோகன் நடிக்கிற மாதிரி (புதுமையாக புகைப்படங்கள் போட்டு) குமுதத்தில் ஒரு தொடர் வந்ததே?.. ஞாபகம் இருக்கா?.. அசோகன் அறிமுகமானது அப்படித்தான்.

      நீக்கு
    4. வணக்கம் சகோதரி

      ஆமாம். அது ரா.கி.ரா எழுதிய கதை. எத்தனையோ நினைவுகளில் அப்போது அது சட்டென நினைவுக்கு வரவில்லை. அழகாக பதில் தந்து, கதாசிரியரையும் நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      எங்கள் அம்மா பைண்டிங் செய்து வைத்திருந்த புத்தகங்களில் இந்த கதையை படித்ததாக நினைவு.அதன் பிறகு வாழ்க்கை சழற்சிகளில் கதையின் விரிவுகள் மறந்து விட்டது. ஆனால் எங்கள் அம்மாவும் அதைதான் படமாக எடுத்துள்ளார்கள். அசோகன் நடித்தது என்று கூறியுள்ளார்கள். நானும் பாடல்களை வானொலியிலும் கேட்டும், தூர்தர்ஷன் ஒளியும், ஒலியும்.. ல் காட்சிகளாகவும் பார்த்துள்ளேன். "சரவணப் பொய்கையில் நீராடி" என்ற பாடலும் அதில் நன்றாக இருக்கும். இதில் முதலில் நான் சொன்ன பாடலை சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் எப்போதாவது வெள்ளியன்று பகிர்ந்தால் கேட்டு ரசிக்கலாம். ஆனால் அனைவருக்கும் இந்தப் பாடல் பிடித்திருக்க வேண்டும். என் கருத்துக்கு பதிலாக கருத்துக்கள் தந்த தங்களுக்கும், சகோதரர் ஜீவி அவர்களுக்கும் என மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  27. திருச்சியில் எங்கள்நாய் செல்லியின் வாயில் ஒருஎலும்புத்துண்டு மாட்டியபோதுஎன்மனைவி வேளாங்கண்ணியில் அந்த எலும்பு சரியாகவெளி வந்ததால் ஒருபிரார்த்தனைக்கடனுக்காகப் வருவதாக வேண்டி இருந்தாள் அப்போது வேளாங்கண்ணி சென்றி ருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  28. முதல் பாடலை விட இரண்டாம் பாடல் மிகவும் பிடித்த பாடல். நிறைய முறை கேட்ட பாடலும் கூட!

    தொடரட்டும் ரசித்த பாடல் வரிசை!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!