பல்லி சத்தப்படுத்தினால் "பல்லியே சொல்லிடுச்சி" என்று சம்மதமாக எடுத்துக் கொள்வதை சரத்குமார் படம் உட்பட பல இடங்களில் பார்த்திருக்கிறோம்; கேட்டிருக்கிறோம்.
சிலர் அதை "கவுளி அடிக்குது" என்பார்கள்.
எப்பவாவது சத்தம் கொடுத்தால் சகுனம்! எப்பப் பார்த்தாலும் சத்தம் கொடுத்தால்?
எங்கள் வீட்டில் இரண்டு மூன்று பெரிய சைஸ் பல்லிகள் இருக்கின்றன. வாழும் பல்லி ரகத்தைச் சேர்ந்தது!!! பல வருடங்களாய் இருப்பதால்சொல்கிறேன். அவ்வப்போது அதன் குடும்பமும் குட்டி குட்டியாய் சுற்றி வரும். சமீபத்தில் பூனைக்குட்டி விளையாடியதுபோல ஒரு 'வாழும்பல்லி ' என் மடியில் குதிக்கக் கூட முயற்சித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பூச்சி பிடிக்கிறதாம்.
சாயங்காலம் ஏழு மணி சுமாருக்கு சொல்லி வைத்தது போல ஒரு பட்டாம்பூச்சி போல ஒன்று உள்ளே பறந்து வரும். "நம் பல்லி ஸ்விக்கியில் கொடுத்திருக்கும் ஆர்டர்" என்று நான் கிண்டல்செய்வேன். இங்குமங்கும் ஓடி ஓடி அதைப் பிடித்துச் சாப்பிடும் பல்லி.
இப்போது இரண்டு மூன்று நாட்களாக ஏதோ ஒரு பல்லி அடிக்கடி- மிக அடிக்கடி - சத்தப் படுத்திக் கொண்டே இருக்கிறது. எனக்கு ஒரு வழக்கம் உண்டு. சின்ன வயதில் யாரோ சொல்லிக்கொடுத்தது! அது சத்தப்படுத்திய உடனே நானும் உடனே பதில் சத்தம் ஏதாவது ஏற்படுத்தி விடுவேன். மேசையையாவது தட்டி விடுவேன். பல்லி சொல்வதில் நல்ல பலனும் உண்டாம். கெட்ட பலனும் உண்டாம். அது சொல்வதுதான் பலித்து விடுமாமே... ஆனால் பாருங்கள், நாம் பதில் சத்தம் கொடுத்து விட்டால் அது பலிக்காமல் போகுமாம். யார் கண்டுபிடித்து வைத்தார்களோ! நானும் சின்ன வயசிலிருந்து நம்பி அப்படிச் செய்வது வழக்கமாகி விட்டது. நல்ல பலனாய் இருந்து பலித்தால் சரி, கெட்ட பலனாய் இருந்து பலித்து விட்டால்... எனவே பதில் சத்தம் செய்து விடச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். தன்னிச்சையாய்ச் செய்து பழகி விட்டது!
இதைப்பற்றி கவிதை ஒன்றுகூட எழுதி, ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் இங்கு பகிர்ந்திருக்கிறேன்!
சமீப இரண்டு மூன்று நாட்களில் எந்த பல்லி கத்துகிறதோ... நானும் பதில் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். அது என்ன நினைக்கிறதோ... நான் பேசுவதாய் நினைக்கிறதோ, அல்லது பதில் சொல்கிறதோ, இல்லை விதியை மாற்ற முடியாது என்று மறுபடி மறுபடி வலியுறுத்துகிறதோ....! அதுவும் அவ்வப்போது சத்தப்படுத்திக்கொண்டே... பாருங்கள் இதோ.. இப்போது கூட சத்தப்படுத்துகிறது...
இந்த வாழும் பல்லிக் குடும்பத்தில் புது வரவோ, விசிட்டரோ... இரண்டு நாட்களாய் பதில் திரும்பத் திரும்பக் கொடுத்து அலுத்து விட்டது. சிறுகுச்சியுடன் கிளம்பி விட்டேன், அதை விரட்ட! எங்கிருக்கிறது என்று தேடிக் கொண்டிருக்கிறேன். ஏஞ்சலிடம் சொல்லி விடாதீர்கள்!
ஆமாம், பல்லியை அது எங்கிருந்து குரல் கொடுக்கிறது, எங்கே இருக்கிறது என்று எப்படிக் கண்டுபிடிப்பது?!
============================== ============================== ============================== ===
விலங்குகளின் பாசம் எப்போதுமே ஆச்சரியப்படுத்தும். இங்கு நான்கு வருடங்களுக்கு முன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட இரண்டு செய்திகள்... ஒன்றில் பசு. பசுவின் கதை மனதை உருக்கும் கதை. இப்போதாவது சரியாகி விட்டதா, தெரியவில்லை. இன்னொன்றில் யானை. ஆண்டாள். இந்த இரண்டு செய்திகளுமே முன்னர் படித்திருப்போம். மறுபடியும் படித்து உருகலாமே என்று பகிர்கிறேன்.
(1)
அதிசயம் ஆனால் உண்மை.
கர்நாடகாவில் ஒரு தாய்ப் பசு தன் கன்றுடன் ஜன சந்தடிமிக்க அந்த பஸ் நிலையத்தில் சென்று கொண்டிருந்த சமயம் KSRTC பஸ் ஒன்று சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த கன்றின் மீது மோதியதில் பசு கன்று பேருந்தின் முன் அடிப்பக்கத்தில் சிக்கி இறந்துவிட்டது
அந்த கன்றை அப்புறப்படுத்தி விட்டனர்.
ஆனால் அன்று முதல் அந்த தாய்ப்பசு அந்த இடத்திற்கு குறிப்பிட்ட பஸ் வரும்போதெல்லாம் இன்னும் தன் கன்று அந்த பஸ்ஸின் அடியில் இருப்பதாக நினைத்து சுற்றி சுற்றி வருவதும் அந்த பஸ்ஸின் முன் அடிப்பக்கத்தில் தேடுவதுமாக இருக்கிறது.
KSRTC அதிகாரிகள் பஸ்ஸின் நிறத்தை மாற்றி பார்த்தனர்', சில நாட்கள் சர்வீஸ் ரத்து செய்தனர். ஒன்றும் பலனளிக்கவில்லை.
இன்றுவரை அந்த குறிப்பிட்ட பஸ் வரும் போது அந்த தாய்ப் பசுவின் தேடல் தொடர்கிறது .தாய்மையின் மகத்துமே மெய்சிலிர்க்க வைக்கிறது.
==============================
வாட்ஸப்பில் வந்ததை அப்படியே பகிர்கிறேன். அந்தத் தாயைப் பார்க்க மனதுக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது.
(2)
இது பழைய கதை! இப்போது ஆண்டாள் புதிய பாகனோடு பழகி விட்டிருப்பாள்!
கோவை: கண்ணீரோடு பாகன் பிரியாவிடை: அவதியுறும் ஆண்டாள்!
கோயில் யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்று வந்த ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளை, 28 ஆண்டுகளாகப் பராமரித்து வந்த அதன் பாகன் ஸ்ரீதரன், திடீரென்று பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ஆண்டாளுக்கு உணவு கொடுக்க நெருங்க முடியாமல் பிற பாகன்கள் தவிக்கின்றனர்.
துணைப் பாகன்
ஆண்டாளுக்கு துணைப் பாகன் நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தரன் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டதாகவும், துணைப் பாகனுக்கு ஆண்டாள் கட்டுப்பட மறுப்பதாகவும், இந்த சூழ்நிலையில் நலவாழ்வு முகாமில் அதனை பங்கேற்க வைப்பது சிரமம் என்றும் கூறப்பட்டது. முகாம் நடக்கும் 48 நாட்களாவது ஆண்டாளுடன் இருந்துவிட்டு பணியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்ட தால், ஸ்ரீதரன் பணிக்கு வந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆண்டாள் யானையை தன் குழந்தைபோல் வளர்த்து வந்தார் ஸ்ரீதரன். அவருக்கு வயது 57 ஆகிறது. இந்த யானைக்காக திருமணமே செய்யாமல், இதனுடனேயே 24 மணி நேரமும் இருந்தவர். ஆண்டாள் யானையும் இவர் பேச்சை தவிர வேறு யார் சொல்லையும் கேட்காமலே வளர்ந்துவிட்டது. ஸ்ரீதரனின் பேச்சுக்கு மட்டுமே குழந்தை போல் கட்டுப்படும்.
துவண்டுபோன ஆண்டாள்
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென பாகன் ஸ்ரீதரன், முகாமிலிருந்த ஆண்டாளை பிரிந்து சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். இதனால் முகாமுக்கு வந்த நாளிலிருந்து தினம் 2 வேளை உற்சாகக் குளியல், நடைப்பயிற்சி, சத்தான, பசுமையான உணவுகள், உரிய சிகிச்சை பெற்றுவந்த 35 வயது ஆண்டாள், பாகனின் உத்தரவுக் குரல் கேட்காமல், அவரை காண முடியாமல் முகாமின் ஒரு மூலையில் சோகமாக துவண்டு நிற்கிறது.
கண்ணீரோடு பிரியாவிடை
ஆனால், அறநிலையத்துறை ராஜேஷ் என்னும் புதிய பாகனை ஆண்டாள் யானைக்கு நியமித்து உத்தரவிட்டது. இதனையடுத்து ஸ்ரீதரன் கடந்த ஆண்டே தனது ராஜினாமா கடிதத்தை துறை அதிகாரிக்கு அனுப்பினார். ஆனால், அவரை சமாதானப்படுத்திய அதிகாரிகள் தொடர்ந்து பணியில் ஈடுபட வலியுறுத்தினர்.
அந்த அடிப்படையிலேயே ஆண்டாளுடன் முகாமிற்கு வந்திருந்தார் பாகன் ஸ்ரீதரன். அதன்பிறகு கடந்த 1-ம் தேதி ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. எனவே முகாமை விட்டும், யானையை விட்டும் வெளியேறலாம் என்று அதிகாரிகள் கூறிவிட்டதால், கண்ணீரோடு ஆண்டாளிடமிருந்து பிரியாவிடை பெற்று வெளியேறி சொந்த ஊருக்குப் புறப்பட்டு சென்றார்.
அவர் பிரிந்துபோவதை பார்த்தவாறு இருந்த ஆண்டாள், அது முதலே மற்றவர்களை தன் அருகே நெருங்க விடவில்லை. மற்ற யானைகளைப் போல ஆண்டாளை துணைப் பாகனால் அழைத்துச் செல்ல முடியவில்லை. கால்களில் சங்கிலியால் கட்டி வைத்துள்ளனர். ஸ்ரீதரனின் திடீர் வெளியேற்றத்தால் தாங்களும் கவலையடைந்துள்ளதாக பாகன்கள் தெரிவித்தனர்.
புதிய துணைப் பாகன் ராஜேஷ், ஸ்ரீதரனின் உறவினர் என்றாலும் அவரால் ஆண்டாளை தன் வழிக்குக் கொண்டு வரமுடியவில்லை. எனவே ஆண்டாளை கட்டுப்படுத்த கேரளத்திலிருந்து புதிய பயிற்சியாளர்கள் வரவுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது வெளிப்படையாகப் பேச மறுத்ததோடு, ''அரசு நியமித்த துணைப் பாகனோடு ஸ்ரீதரன் ஒத்துழைக்க மறுத்ததாகவும், ஆண்டாள் யானையிடம் சமிக்ஞை காட்டி துணைப் பாகனை பழக்கவில்லை என்பதாலும், அவரின் ராஜினாமாவை ஏற்று வெளியேற்றவேண்டியதாயிற்று’’ என்றனர்.
'தி இந்து'
=================================================================================================
ஏற்கெனவே பதிவு நீளமாகி விட்டதால் ஒரே ஒரு ஜோக் மட்டும்!
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு...
பதிலளிநீக்குவாழ்க நலம்...
வாழ்க நலம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க..
நீக்குஅனைவருக்கும் காலை மதிய இரவு வணக்கங்கள் ப்ரார்த்தனைகள். யாரையும் காணோம், பேயார் உட்பட. தனியா இருக்க பயம்மாக்கீது.
நீக்குசரி.. இரவு உணவு சாப்பிட்டுவிட்டு காலை உணவுக்கு வருகிறேன்
கூசா மேடத்துக்குப் பதில் ப்ராக்சி பின்னூட்டம்
கீதா சாம்பசிவம் மேடம்
நீக்குபேயார் இப்போதெல்லாம் வருவதில்லை....
நீக்குவாருங்கள் நெல்லைத்தமிழன்...
https://sivamgss.blogspot.com/2020/01/24.html நெல்லைத்தமிழரே, என்னைக் கிண்டல் பண்ணியது போதும். ஒரு பதிவை ஒழுங்காக் கண்டு பிடிக்கமுடியலை. தப்பாய் வெளியாகி விட்டதுனு இன்றைய பதிவில் சொல்லி இருக்கேன். நீங்க பழைய பதிவில் போய் புது போஸ்ட் க்ளிக் செய்தால் இன்றைய பதிவுக்குக் கூட்டிச் செல்லும். அதை விட்டுட்டு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! உங்களுக்காக இங்கே சுட்டி கொடுத்திருக்கேன்.
நீக்குபதிவைப் படிச்சுட்டு வரேன்.
நீக்குகோச்சுக்காதீங்க கீதா சாம்பசிவம் மேடம். உங்களை நினைத்துக்கொண்டு இருப்பதால்தான் எழுதினேன்.
நீக்குஇன்னும் வேறு பதிவுகள் எதுவும் படிக்கலை. லேப்டாப்பைத் தொட முடியாமல் flat final works are going on. மாதம் முடிவதற்குள் பெங்களூரில் எங்கள் வாழ்க்கை தொடங்கணும்.
கலையாவதும்
பதிலளிநீக்குகலையாததும் - பெண்...
கதையாவதும்
கவியாவதும் - பெண்..
நிலையாவதும்
நினைவாவதும் - பெண்..
சிலையாவதும்
சிவமாவதும் பெண் - பெண்..
ஆக, பெண் என்றால் பெண்! நல்லாயிருக்கு...
நீக்குகலையாவதும் களையாவதும் பெண்
நீக்குகலையாத்தும் கருவாவதும் பெண்
திலையாவதும் நெருஞ்சியாவதும் பெண்
சிலையாவதும் சீலமாவதும் பெண்
என்று எழுதினால் துரை செல்வராஜு சார், காப்பிரைட்டில் கேஸ் போட்டு விடுவாரோ?
அப்படியெல்லாம் இல்லை...
நீக்குஒன்றிலிருந்து ஒன்று உருவாக வேண்டும்.
அல்லது ஒன்றை உருவாக்க வேண்டும்...
விதை.. கவிதை..
வாழ்க தமிழ்..
ஆணோ பெண்ணோ
நீக்குஎல்லாவற்றிலும் விதி விலக்குகள் உள்ளன..
ரோஜாவின் முள் கீழேயே இருக்க
மூண்டெழுந்த மொட்டு அல்லவா மலர் ஆகின்றது...
காராம் பசுவின் பால் ஆனாலும்
அதன் நுரை பசியைத் தீர்ப்பதில்லை....
நுரை எப்படி பசியைத் தீர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்?!! போட்டிப்பாடல்கள் அருமை. அவ்வளவுதானா? இன்னும் வருமா?
நீக்குபாருங்க... கிரவுண்டு..ல இன்னும் ஒருத்தரையும் காணோம்!...
பதிலளிநீக்குஆமாம்... !
நீக்குபசுவின் பாசம் மனதை வருத்துகிறது...
பதிலளிநீக்குகன்றை இழந்த நிலையில் பசுவின் பால் சுரப்பு நின்று போகும்...
அதன் பேதைமையைப் புரிந்து கொண்ட மனிதன் இறந்த கன்றின் தோலைக் கொண்டே பொம்மை செய்து பசுவை ஏமாற்றி பால் சுரக்கச் செய்தான்..
எருமை இதற்குள் அடங்காது...
கன்றை இழந்தாலும் பால் கொடுத்துக் கொண்டிருக்கும்...
இதன் தொடர்பில் இன்னும் விளக்கலாம்...
இருப்பினும் வைக்கோல் கன்றுக்குட்டிக்காக -
சில வரிகள்..
வைக்கலாலே கன்னுக்குட்டி
மாடு எப்பப் போட்டது?..
கக்கத்தில தூக்கி வச்சும்
கத்தலையே என்னது!...
- கவியரசர்....
காணொளி காணமுடியுமோ என்று சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தேன். முடியும் என்று தெரிகிறது.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனப்பூர்வமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
பல்லி சொல்லும் பலன்களை மட்டும் படித்தேன். பதிலுக்கு நாமும் சொல்லலாம் என்று இன்றுதான் அறிந்து கொண்டேன். கொஞ்ச நேரத்தில் மற்ற பதிவை படித்து வருகிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... உங்கள் உடல்நிலை தெரிவருவது குறித்து மகிழ்ச்சி. இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குஉடம்புக்கு என்ன கமலா? விரைவில் பூரண குணம் அடையப் பிரார்த்திக்கிறேன்.
நீக்குபல்லியுடன் வீட்டில் வாழ்ந்திருக்கிறேன். பூச்சியைப் பிடிக்கும் சாக்கில் நம்ம மேல விழுந்துடுமோ, தட்டில் பாய்ந்துடுமோன்னு தோணும்.
பதிலளிநீக்குமயில் இறகுகள் வைத்தால் பல்லி வராதாமே (வாட்சப்புல கண்ணதெல்லாம் கண்டவன்க அனுப்பறாங்க. நம்ம கைங்கர்யமும் இதில் இருக்கட்டுமே)
என்னுடைய குரோம்பேட்டை வீட்டில் சிறிய முதலை சைஸ் பல்லி நான்கைந்து உண்டு. பொழுது போகாத நேரங்களில் நான் அவைகளுடன் பேசிக்கொண்டிருப்பதும் உண்டு. நான் சொல்வது எல்லாவற்றையும், குறுக்கே பேசாமல், பதில் பேசாமல் கேட்டுக்கொண்டிருக்கும் சமர்த்துகள்.
நீக்குமயிலிறகு வைத்தால் பல்லி வராது என்பது உடான்ஸ். நாங்கள் ஒட்டி வைத்திருந்தோம். அது கவலையே படுவதில்லை நெல்லை...
நீக்கு//நான் சொல்வது எல்லாவற்றையும், குறுக்கே பேசாமல், பதில் பேசாமல் கேட்டுக்கொண்டிருக்கும் சமர்த்துகள்.//
நீக்குஹிஹிஹிஹி... இதனால் தாங்கள் சொல்ல வரும் கருத்து...?
விளக்கமாக சொன்னால் முதுகு வீங்கிப்போயிடும்.
நீக்குஅனுபவஸ்தர் !
நீக்கு:))))
நீக்குஇந்த கான்ஃப்ளிக்ட் ஆஃப் இன்டெரெஷ்ட் எபி ஆசிரியர்கள் கண்காணிப்பதில்லையா? கவிதை எழுதுவதே அனுஷ்கா படம் வெளியிடத்தானா, அதிலும் 20 வருடங்களுக்கு முந்தைய அனுஷ்கா
பதிலளிநீக்குநல்லா கேளுங்க சார்!
நீக்குஅதானே... அநியாயம்! கேட்பார் இல்லை!
நீக்குவிலங்குகளின் பாசம் மனதை உருக்குகிறது.
பதிலளிநீக்குதன் குழந்தைகளிடம் குறிப்பிட்ட வயது வரை பாசம் (மனுசப் பயல்கள் மாதிரி அவன் சோறு போடுவான் என்ற சுயநலப் பாசமல்ல), தன் உயிரைக் காத்துக்கொள்ளும் தன்மை, பருவத்தின்போது மட்டும் இயற்கையால் உந்தப்பட்டு சந்ததி பெருக்கும் தன்மை இயற்கையாக அனைவருடமும் அனைத்திடமும் இருப்பது இயற்கையின் ஆச்சர்யம்தான்
உண்மையிலேயே மிகவும் மனதை வருத்தியது. அதே போல இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட தன் குட்டிகளைக் காப்பாற்றச் சொல்லி மனிதர்களிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்த ஒரு நாய் விடியோவும் பார்த்திருக்கிறேன்.
நீக்குபாகன் என்பது பணி. ஶ்ரீதரன் தனக்கு அடுத்தவரைத் தயார் செய்வதில் தன் தனிப்பட்ட விருப்பங்களைக் காண்பித்திருக்கக் கூடாது (இது ப்ப்ப்பழைய நியூஸ்)
பதிலளிநீக்குஆமாம்... மிகப் பழைய நியூஸ். இதுவும் கடந்து போகும் என்று ஆண்டாள் சரியாகி விட்டாளா என்பதே என் கேள்வி!
நீக்குஎல்லோருக்கும் பலன் சொல்லுமாம் சுவற்று
பதிலளிநீக்குபல்லி!
காலையில் வீழுமாம் கழுநீர்ப் பானையில்
தள்ளி!
அடடே... ஆச்சர்யக்குறி.
நீக்கு//ஆமாம், பல்லியை அது எங்கிருந்து குரல் கொடுக்கிறது, எங்கே இருக்கிறது என்று எப்படிக் கண்டுபிடிப்பது?!// ரொம்ப சுலபம். (ஆனால் கொஞ்சம் செலவு அதிகம்!) சுவற்றில் ஆங்காங்கே சிறிய மைக்ரோஃபோனை ஒரு சதுர அடிக்கு ஒன்றாக செல்லோ டேப் கொண்டு ஓட்டிவிடவேண்டும். ஒவ்வொரு மைக்குக்கும் M1, M2 ....... என்று நம்பர் கொடுக்கவேண்டும். ஒவ்வொரு மைக்ரோ போனுடனும் ஒவ்வொரு ஸ்பீக்கர் கனெக்ட் செய்தால் போதும். S1, S2, etc(சர்க்யூட் டிசைன் கேஜியிடம் கேட்டுக்கொள்ளவும்.) பல்லி சத்தம் எந்த ஸ்பீக்கரிலிருந்து பெரிதாக கேட்கிறது என்று தெரிந்துகொண்டு, அதற்குரிய மைக் அருகே உடனடியாக சென்று தேடினால், பல்லியை spot செய்துவிடலாம். இந்த முறைக்கு கொ த வெ வை பி முறை என்று பெயர்.
பதிலளிநீக்குAhaa. ccc pottudalaame Murali maa.:)
நீக்குமிகவும் எளிமையாக இருக்கிறது. எதிர்பார்க்கவே இல்லை... நன்றி.. நன்றி... நன்றி!
நீக்குஇன்றைக்கு நான்தான் லேட் என்று நினைத்தேன். எனிவே, தாமதமான காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் பானு அக்கா.. வாங்க...
நீக்குஅப்பாடா, நீ...ண்...ட... நாட்களுக்குப் பிறகு அனுஷ்கா!!! நன்றி! இதிலிருந்து தமன்னா ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், முகத்தில் வயது தெரிகிறது, குண்டாகி விட்டார் போன்ற காரணங்களுக்காக அனுஷ்கா ரசிகர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
பதிலளிநீக்குகொடியானதால் அன்னைக்கு அனுஷ்கா..
நீக்குகுண்டானதால் இன்னைக்கு குனுஷ்கா!..
ஹிஹிஹி... அப்படியா பானு அக்கா...?!
நீக்கு// கொடியானதால் அன்னைக்கு அனுஷ்கா.. குண்டானதால் இன்னைக்கு குனுஷ்கா!..//
நீக்குகொடியானதால் கொனுஷ்கா என்றல்லவா இருந்திருக்கவேண்டும்?!!!
:))
பா வெ மேடம் கருத்து உண்மைதான், அதிலும் அவர் சொல்வது பொருத்தம்.
நீக்குஎன்னைப் போன்ற ஆட்கள் குண்டான சிவாஜி சில பல படங்களில் பாத்திரத்திற்குப் பொருத்தமில்லாமல் இருக்கிறார் என்று உண்மையைச் சொன்னால் சீறிக்கொண்டு வருபவரல்லவா?
கொடியானதால்.. குண்டானதால்.. -அனுஷ்கா தன் யோகா திறமையின் மீது கொண்ட நம்பிக்கையால் ஆர்வத்துடன் அந்த சப்பை படத்துக்காக -இஞ்சி இடுப்பழகி - மிகவும் குண்டாக்கிக்கொண்டார். முக அழகு அவருக்கு கொஞ்சம் போய்விட்டது. மீண்டும் முன்னைப்போல் அவர் பிரகாசிக்கட்டும்
நீக்குஆமாம்... தன் யோகாவின் மீது பெரும் நம்பிக்கைக் கொண்டிருந்தார் போலும்... பாவம்...
நீக்குபெண்களை பற்றி ஸ்ரீராம், துரை செல்வராஜூ சார், நெல்லை தமிழன் போன்றவர்களின் கவிதையை வாசித்ததும் கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. கண்ணதாசனிடம் ஒருமுறை ஒரு ரசிகர்,"நீங்கள் ஏன் எப்போதும் பெண்களைப் பற்றியே பாடுகிறீர்கள்? ஆண்களை பற்றி ஏன் பாடுவதில்லை?" என்று கேட்டாராம், அதற்கு கவிஞர் கூறிய பதிலை நான் சொல்ல மாட்டேன். ஏற்கனவே என்னை பெண்ணியவாதி என்று முத்திரை குத்தி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு//அதற்கு கவிஞர் கூறிய பதிலை நான் சொல்ல மாட்டேன்.//
நீக்குமெயிலுக்கு அனுப்புகிறீர்களா? படித்துக் கொள்கிறேன்!!!
பெண்கள் பெண்ணியவாதிகளாய் இருப்பதில் விசேஷமாக சொலவதற்கு எதுவுமில்லை. ஆண்கள் பெண்ணியவாதியாக இருப்பது தான் விசேஷம். தன்னை ஒரு ஆண் போல பாவித்துக் கொண்டு ஒரு பெண் ஒரு சிறுகதையை எழுதுவது கூட ரொம்பவும் சிரமம். அதே போல தன்னை பெண்ணாக பாவித்துக் கொண்டு ஆண் ஒரு படைப்பை வெளிக் கொணர்வதும் வெகு சிரமமானது. எனக்கு இரண்டாவது சொன்னது தண்ணி பட்ட பாடு.
நீக்குஎங்கே நிரூபியுங்கள் பார்க்கலாம் என்று ஸ்ரீராம் கேட்டுக் கொண்டால் ஒரு சிறுகதையை கே.வா.க. பகுதிக்கு அனுப்பத் தயார். இந்த மாதத்திலேயே பிரசுரித்து விட வேண்டும் என்பது என் பக்க கண்டிஷன். அடுத்த ஜூனில் தான் ஸ்லாட் கிடைக்கும் என்று இழுத்தடித்தால் இப்ப நாம் சொல்லவதெல்லாமே அப்போ மறந்தே போயிருக்கும். அதற்காகத் தான்.
நீக்கு//தன்னை ஒரு ஆண் போல பாவித்துக் கொண்டு ஒரு பெண் ஒரு சிறுகதையை எழுதுவது கூட ரொம்பவும் சிரமம்.// உண்மைதான். எப்படியோ எழுதுவது ஒரு பெண் என்று தெரிந்து விடும்.
நீக்குஇன்னொரு வேடிக்கை பாருங்கள், பா.வெ! ஆண் எழுத்தாளர்கள் நிறைய பேர் பெண் பெயரைப் புனைப்பெயராகக் கொண்டிருந்தார்களே தவிர அவர்களில் யாருமே ஒரு பெண் நேரேட் பண்ணுவது போல எந்தக் கதையையும் எழுதியதாக என் நினைவுக்கு வரவில்லை.
நீக்குஇந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, கோமதி சுவாமிநாதன், புஷ்பா தங்கத்துரை, ஸ்டெல்லா புரூஸ் -- நினைவுக்கு வரும் ஆண் எழுத்தாளர்கள் யாருமே ஒரு பெண் எழுதுவது போல எந்தக் கதையும் எழுதியது இல்லை!
என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்? சுஜாதாவின் முதல் நாவலான நைலான் கயிறிலேயே அவர் பெண்ணின் பார்வையில்தான் எழுதியிருப்பார்.,அப்புறம் காயத்ரி.
நீக்குசுவாரஸ்யமான அவதானிப்புகள், உரையாடல்கள்.
நீக்குஅப்படியா, பா.வெ?.. எனக்கு இப்பொழுதும் நினைவுக்கு வரவில்லை. நீங்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்.
நீக்குஒரு பெண்ணின் மெல்லிய மன உணர்வுகளை வெளிப்படுத்துகிற மாதிரி ஆண் எழுத்தாளர்களின் சிறுகதை ஏதாவது உங்கள் நினைவுக்கு வருகிறதா?.. வரும். யோசித்துப் பாருங்கள்.
ஶ்ரீராம்.. அனுபவப்பட்ட திறமையான கதாசிரியர்கள் கதை அனுப்பினால் அவர்களுக்கு நீங்கள் மற்றவர்களின் ஸ்லாட்டை ஒதுக்கி இடம் கொடுப்பது பொருத்தமானது.
நீக்குஎன்னைப் பொருத்த வரையில் ஜீவி சார், ரிஷபன் சார் போன்றவர்களுக்கு இது பொருந்தும். தளத்திற்கும் இது கௌரவமா இருக்கும்.
கதை இம்பல்ஸ்ல வந்ததாகவும் அவங்க, விரைவில் போடுங்க என்று சொல்லக் கூடியதாகவும் இருக்கணும் (இது யார் எழுதினாலும். உதாரணமா பார்லி எலெக்ஷன் சற்று முந்தைய சமயத்தில் ஜோசியம் சம்பந்தமா ஒரு கதை எழுத முயன்றேன். அது சரியா வந்து நீங் ஒத்துக்கிட்டு ரெகுலர் ஸ்லாட்டுல எலெக்ஷன் முடிஞ்சு வெளியிட்டா அதுல அர்த்தம் இல்லாம்ப் போயிடும்)
ஜீவி சார்.. பாலகுமாரன் பெண்கள் சார்பா மிகச் சிறப்பாக அவர்களுன் உணர்வுகள், அவர்கள் ஆதரவுக் கருத்துகளை தன் நாவல்களில் வெளிப்படுத்தியிருப்பார்
நீக்கு//அனுபவப்பட்ட திறமையான கதாசிரியர்கள் கதை அனுப்பினால் அவர்களுக்கு நீங்கள் மற்றவர்களின் ஸ்லாட்டை ஒதுக்கி இடம் கொடுப்பது பொருத்தமானது.//
நீக்குகொஞ்சம் கடினமான விஷயம். அபப்டிக் செய்தால் பின்னர் அதுவே வழக்கமாகி விடும்!
பசுவின் பாசம் நெகிழ்ச்சியூட்டுகிறது. இதே போன்ற ஒரு சம்பவத்தை என் அம்மா சொல்லியிருக்கிறார். அவர்கள் வீட்டில் இருந்த ஒரு பசு மாட்டை கன்று ஈன்றவுடன் விற்று விட்டார்களாம். அந்த கன்று உடனே இறந்து விட்டதாம். பசு மாடோ தினமும் எங்கள் தாத்தா வீட்டு வாசலில் வந்து நிற்குமாம்.
பதிலளிநீக்குபாவம்தான்.
நீக்குபெண் என்றால் பேயும் இறங்கும் என்று சொல்வார்கள். ஆனால் ஸ்ரீராம் தொடங்கி வைக்க செல்வராஜு ஐயா, நெல்லைத்தமிழன் ஐயா என்று போட்டி போட்டுக்கொண்டு கவிதை பிறக்கிறது. /அந்த அவனை அழைத்து வாருங்கள்./ மைக்ரோ வெவ் அவனா? அல்லது கேக் அவனா?
பதிலளிநீக்குவாங்க ஜேகே ஸார்... அந்த அவன் கவிதையைச் சொன்னவன்!
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குபசுவும் கன்றுக்குட்டியும் முன்னால் படித்திருந்தாலும் மீண்டும் சோகம் கவ்வுகிறது.
ராஜ நாராயணன் ஐய்யா, விற்கப்பட்ட தன் குட்டிக்காக பத்து மைல் ஓடி வந்து தினம் பாலும், பிறகு தன் வாயில் வைத்து அரைத்துக் கொண்டு வந்த திட உணவையும் ஊட்டிச் சென்ற தாய் நாயைப் பற்றிச் சொல்லி இருப்பார் அவர் நூலில்.
பல்லிகள் எங்கள் வீட்டில் பெரிய பெரிய படங்களுக்குப் பின்னால் வாழும்.
பிறகு படங்களை எடுத்து விட்டோம். புது பெயிண்ட் அடித்து விட்டு
பெஸ்ட் கட்டுப்பாடு நிலையைத்தை அழைத்து
மற்ற பல்லிகளை வெளியே அனுப்பியாச்சு. இப்போது யாரும் இல்லாத நிலையில் மீண்டும் சிறு பல்லிகள் இருக்கின்றன. யுத்தம் தொடர்கிறது.:)
பெண் கவிதையும் அனுஷ்காவும் அழகு. பாஹு பலியில்
குண்டு அனுஷ்கா மிக அழகு. கண்ணா நீ தூங்கடா.அருமை.
வருமான வரி ,பரிதாபம் நகைச்சுவை.
நீக்குவாங்க வல்லிம்மா... கிரா படித்ததில்லை நான். பல்லிகளை தவிர்க்க முடிவதில்லை... போலவே கரப்பான்களையும்!!!
நீக்குபாஹுபலியில் குண்டு அனுஷ்காவா? இல்லையே அம்மா.. அந்தப் பாடல் நன்றாய் இருக்கும்.
யானை ஸ்ரீங்கம் ஆண்டாள் தானே. நிறைய
பதிலளிநீக்குசெய்திகள் வந்தன. இப்பொழுதும் கைகால்கள் மெலிந்துதான் இருக்கிறது. புதிதா வந்தவர்க்குப் பல பழக்கங்கள் இருந்ததால் அவரை அணுக விடவில்லையாம்.
ஓஹோ... இந்தப் பயணத்தில் பார்த்தீர்களா அம்மா?
நீக்குSrirangam.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குதங்கை வீட்டு குலதெய்வ கோவிலில் பூஜை ஆகும் முன் பல்லி சத்தம் கொடுத்தால் தான் பூஜை செய்வார்கள். சிவராத்திரி சமயம் அந்த கோவிலுக்கு போவார்கள். சில நேரம் சீக்கீரம் சத்தம் கொடுத்து விடுமாம், சில நேரம் சோதனை செய்யுமாம் சத்தம் கொடுக்காமல்.
பதிலளிநீக்குமாயவரம் வீட்டில் எப்போ பார்த்தாலும் சத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கும் என் பேரன் விடுமுறைக்கு வந்தால் அது போடும் சத்தம் கேட்டு கம்பை எடுத்துக் கொண்டு விரட்டுவான் போ போ என்று. இந்த மதுரை வீட்டில் சத்தமே கொடுக்க மாட்டேன் என்கிறது
.
என் சகோதரி மாதவரத்தில் (சென்னை) இருந்த் அபோது பெரிய பெரிய பல்லி வீட்டில் இருக்கும் எனக்கு பார்க்கவே பயமாய் இருக்கும்.
அது குரல் கொடுத்தால்தான் பூஜையா? அது கொடுக்காமல் போனால் என்ன ஆகும்? ஆச்சர்யம்! பெரிய பெரிய பல்லிகள் எங்கள் வீட்டில் சகஜம்!
நீக்குஅவனை அழைத்து வாருங்கள் என்னிடமா!
பதிலளிநீக்குஆண்ட்டிக்கு என்ன தான் க்ளியோபாட்ரா என நினைப்பா?
சேச்சே... கிளியோபாத்ரா கருப்பாய் இருப்பாள் ஏகாந்தன் ஸார்... !!! பெண்ணைச் சிறப்பித்துச் சொல்கிறானா, என்ன சொல்கிறான் அவன் என்று அழைத்துவரச் சொல்கிறாள் இவள்!
நீக்குக்ளியோபாட்ரா கருப்பா! அவளை என்ன நம்ம சரிதா, வடிவுக்கரசி என்று நினைத்துவிட்டீர்களாக்கும்! வெள்ளையைத் தவிர மற்ற நிறமெல்லாம் கருப்பு என நினைத்த ’அந்த’ கஷ்டராசிக்காரர்களுக்கு அவள் கருப்பாகத் தெரிந்தாள், பேரழகி என்றபோதிலும். உங்களுக்கும் எனக்கும் அவள் கருப்பல்ல.. !
நீக்கு//அவளை என்ன நம்ம சரிதா, வடிவுக்கரசி என்று நினைத்துவிட்டீர்களாக்கும்!//
நீக்கு:)))
பசு பற்றிய செய்தி படித்து மனம் கனத்து போனது முன்பு. மீண்டும் பார்க்க மனதில் பலம் இல்லை.
பதிலளிநீக்கு"பழகும் விதத்தில் பழகி பார்த்தால் மிருகம் கூட நண்பனே! பாசம் வைத்து" பாடல் நினைவுக்கு வருது. தெய்வசெயல் படத்தில் என்று நினைக்கிறேன்.
ஆண்டளை நேசிக்க வேண்டும் பாகன், பாகனை நேசிக்க ஆண்டாளும் பழக வேண்டும்.அப்புறம் எல்லாம் நலமே!
வருமானவரி ஜோக் நல்லா இருக்கிறது.
வெகு நாட்களுக்கு பின் அனுஷ்கா !
ரசித்ததற்கு நன்றி கோமதி அக்கா.. ஆமாம் அந்தப்பாடல் தெய்வச்செயல் படத்தில்தான்!
நீக்குபயணத்தில் இருந்து திரும்பினேன். திடீரென ’பொன்னியின் செல்வன்’ பற்றி வந்ததே.. அந்த எந்த நாள் எபி எனத் தேடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. கல்கியின் படைப்புகள் பற்றிய கருத்தூட்டங்கள் செறிவானவை.
பதிலளிநீக்கு*அந்தப் பதிவு எந்த நாள் எபி...
பதிலளிநீக்குசனிக்கிழமை ஏகாந்தன் ஸார்... பாசிட்டிவ் செய்தி நாளில் ரமா ஸ்ரீநிவாசன் எழுதியதற்கு கீதா அக்கா புகுந்து விளையாடி இருந்தார்கள்.
நீக்குகண்டுபிடித்து, படித்தபின் தான் மேற்கண்டதை எழுதினேன்..
நீக்குரமா ஸ்ரீநிவாசனுக்கு நம்ம வூட்டு வாசகர்களின் ஞானம் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வழக்கமாக ஒன்றும் தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துவது போலவே அவர் எழுத்து இருப்பதை மாற்றிக் கொண்டு சரிக்கு சமமாக இருப்பவர்களிடம் தன் எழுத்து போய்ச் சேருகிறது என்ற பாவனை அவர் எழுத்தில் இருந்தால் இன்னும் நிறைவாக இருக்கும் என்பது அவர் எழுத்து பற்றிய என் பார்வை.
நீக்குதிருமதி ரமா ஸ்ரீனிவாசனும் இதைப் படிப்பார் என்றே நம்புகிறேன்.
நீக்குஅவர் படிக்காவிட்டாலும், பா.வெ. தான் படிப்பாரே! இருவரில் யார் ஒருத்தர் படித்தாலும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்!
நீக்குநானே சொல்லி விட்டேன்.
நீக்குபல்லி புராணம் ரசிக்க வைத்தது ஜி
பதிலளிநீக்குமனிதர்களைவிட மிருகங்கள் பாசத்தில் உயர்ந்தவைகளாக எனது அனுபவத்தில் தோன்றுகிறது.
நன்றி ஜி.
நீக்குதாய்ப் பசு நிலைமை மிகவும் வேதனை...
பதிலளிநீக்குகவிதையும் அழகு...!
நன்றி DD.
நீக்குஹெடிங் பார்த்துட்டு கமெண்டுக்கு தாவிட்டேன் :)எனக்கு மனதிடமில்லை வாசிக்க .ஆண்டாளுக்கு எதோ ஒரு விஷயம் புதிய பாகனிடம் பிடிக்கலை .எல்லா உயிர்களுக்கும் ஒரு COMFORT உணர்வு இருக்கும் அது யாரிடம் வருதோ அவங்ககிட்டத்தான் சேருவாங்க .என்னது பல்லியை அடிக்க போறீங்களா இருங்க த்ரிஷாக்கு போன் போடறேன் .அநேகமா பல்லி அடிக்கப்போறீங்கன்னுதான் அனுஷ் அழைத்துவர சொல்றாங்களோ :)
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சல்... பல்லியை அடிப்பதற்கு த்ரிஷாவிடம் ஏன் சொல்லவேண்டும் என்று புரியவில்லை எனக்கு! பல்லியின் நல்லெண்ண தூதுவரா அவர்?!
நீக்குபல்லி சத்தமிடுவது, 'க்ஷ க்ஷ க்ஷ'என்பது போல் ஒலிக்கும். அதனால் 'த்ரிக்ஷா' என்று சொல்லியிருப்பாரோ?
நீக்குஹஆஹாஆஆ :) இப்போ புரியுது கௌதமன் சார் .பல்லி களுக்கும் உங்களுக்குமான நட்பு :) நீங்க பேசறதை அவங்க கேட்கிறாங்க அவங்க பேசறது உங்களுக்கு புரியுது .இதை ஒரு பதிவாக எழுதலாமே நீங்க .அதுவும் குட்டி முதலை அளவுங்கறீங்க நல்லா சாப்பாடு போட்டு கவனிக்கிறீங்களோ
நீக்குத்ரிஷா நிறைய வாயில்லா ஜீவன்களுக்கு நல்லெண்ணெய் தூதுவர்னு கேள்விப்பட்டேன் :))))))))))))
நீக்கு:)))))
நீக்குபல்லிபுராணம் ! பல்லிகளும் மனிதனோடு வாழுமாறு சபிக்கப்பட்டவை..
பதிலளிநீக்குபல்லிகள் வரும் தமிழ்ச் சிறுகதைகள் யாரும் படித்ததுண்டா?
பல்லிகள் வரும் தமிழ்ச் சிறுகதைகள்? யோசித்துப் பார்க்கிறேன். மனிதனோடு வாழ சபிக்கப்பட்டவை! மாற்றியும் சொல்லலாமோ!
நீக்குஎன்ன ஸ்ரீராம் பல்லி வளர்க்கிறீங்களோ?... ஊரில் பல்லி இல்லை எனில்தானே ஆச்சரியம். சுவர்களில் எதையும் கொழுவிவிடக்கூடாது, அப்படி இருப்பின் அதன் பின்பு ஒளிச்சிருப்பினம் வசதியாக.
பதிலளிநீக்குபல்லி சொற் பலன் என சாஸ்திரம் இருக்குது, எங்கட அம்மம்மாவிடம் கேட்டு ஊரில் இருந்த காலம் நானும் பாடமாக்கி வச்சிருந்தேன், என் நட்பு வட்டம் எல்லோரும் கரெக்ட்டா திசையை குறிச்சு வச்சு என்னிடம் வந்து பலன் கேட்பார்கள்.. ஓரளவு சரியாகவே இருக்கும் ஹா ஹா ஹா. ஆனா பின்னர் ஊரால் வெளிக்கிட்டதும் பல்லியும் இலை பலனும் மறந்து போச்சு.
ஒன்று மட்டும் தெரியும், பல்லி தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தாலோ அல்லது நாம் எதையாவது பேசும்போது நம்மை பேச விடாமல் குறுக்கே சொல்லிக் கொண்டிருந்தாலோ.. ஏதோ தீங்கு நடக்கப்போகிறது, துக்கம் நிகழப்பொகிறது எனப் பொருள்.
இதனாலதான் சிலருக்கு ஏசுவார்கள்.. நச்சுப்பல்லிபோல நச்சு நச்சு எனச் சொல்லாதே .. நல்லதைப்பேசு என்பார்கள்.
பல்லி முட்டை பார்த்திருக்கிறீங்களோ? குட்டியாக அழகாக இருக்கும். சில பல்லிக்கு வால் விழுந்து புதிய வால் முளைப்பதையும் பார்த்திருக்கிறேன். எனக்கு பல்லி, எலி இப்படியாவற்றை அடிக்கவோ துன்புறுத்தவோ மனம் வராது, நம் ஃபிரெண்ட்ஸ் போலவே ஃபீலிங் ஆகும். அதனால பல்லிக்குடும்பத்தை நீங்கள் ஒன்றும் பண்ண வேண்டாம், சுவரில் எந்தப் பொருளும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஊரில் எங்க வீட்டு சாலிடேர் டிவி மேல் ஒரு பல்லி வரும் தினமும் 6 மணிக்கு வந்து .வெள்ளை சாதம் அம்மா வைத்தா சாப்பிட்டு போகும் .அது இப்போ பசும்பொன்னில் கமெண்ட் பார்த்து நினைவு வந்தது
நீக்கு//என்ன ஸ்ரீராம் பல்லி வளர்க்கிறீங்களோ?...//
நீக்குஇல்லை அதிரா... அதுவே வளருது!
// பல்லி தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தாலோ அல்லது நாம் எதையாவது பேசும்போது நம்மை பேச விடாமல் குறுக்கே சொல்லிக் கொண்டிருந்தாலோ.. ஏதோ தீங்கு நடக்கப்போகிறது, துக்கம் நிகழப்பொகிறது எனப் பொருள்.//
பயமுறுத்தறீங்களே...
பல்லி முட்டையும் பார்த்திருக்கிறேன். குட்டி பல்லியும் பார்த்திருக்கிறேன்!
தாய்ப்பசுவின் கதை மனதை நெகிழச் செய்கிறது. ஐந்து அறிவு படைத்த ஜீவன்களுக்கே இப்படி எனில், ஆறறிவு மனிதர்களுக்கு இப்படி ஒரு நிகழ்வு எனில் எப்படி இருக்கும்.
பதிலளிநீக்குஇறந்த குட்டியைப் பல நாட்களாக ஒரு குரங்குப்பிள்ளை காவித்திரிந்ததையும் அறிஞ்சோம் தானே.. மிருகம் என சிம்பிளாக சொல்லி விடுகிறோம் ஆனா அவை படும் பாடும் சொல்லி முடியாது.
எங்கள் பூஸ் பிள்ளையின் கதை போஸ்ட் போட்டேன் தானே, குட்டி போட்டு அக்குட்டி இறந்துவிட்டது ஒரு பழைய சூட்கேசில். இரவிரவாக என்னை நித்திரை கொள்ள விடாமல் ஓடி ஓடி என்னை வந்து எழுப்பிக்கொண்டிருந்தா, நான் எழுந்ததும் இங்கே வா என முன்னால ஓடிப்போய் அந்த சூட்கேசில் குட்டி இறந்திருப்பதைக் காட்டினா, எனக்கோ அந்த பரிதவிப்புப் பார்க்க அழுகை அழுகையாக வந்தது. அவசரமாக குட்டியை அப்புறப்படுத்தியும், அந்த சூட்கேஸ் இருந்த இடத்தில் தேடிக்கொண்டே இருந்தா குட்டியை.
உங்கள் பூனையின் கதை அறிந்த கதையாய் இருக்கிறது. படிக்கக் கஷ்டமாய் இருக்கிறது.
நீக்குபசுவின் லிங் இணைச்சிருக்கிறீங்கள், எனக்கு இப்படியானவற்றைப் பார்க்கப் பயம், பார்த்துவிட்டால் இரவில் கனவு கனவாக வந்து துலைக்கும்.. இந்த கனவுத் தொல்லை தாங்க முடியாத பிரச்சனை எனக்கு:).
பதிலளிநீக்குமுன்பும் ஒரு தடவை இங்கு யானைக் கதை ஒன்று சொன்னனீங்கள் ஸ்ரீராம், அன்று இரவும் கனவில் யானையாகவே கனவு வந்தது...
யானைக்கதை எது என்று ஞாபகமில்லை. சமீபத்தில் எனக்கும் ஒரு பயங்கர யானைக்கனவு வந்தது.
நீக்குஆண்டாள் கதை மனதுக்கு கஸ்டமாக இருக்கிறது, மிருகங்களும் ஒரு விதத்தில் குழந்தைகள் போலத்தானே. ஸ்கூலில் ஒரு ரீச்சர் மாறி விட்டாலோ அல்லது லீவு என புது ரீச்சர் வந்தாலோ, குழந்தைகளோடு பெரிய தொல்லையாக இருக்கும், காரணம் தெரியாமல் சினப்பார்கள், படிக்க மாட்டார்கள்.. இப்படித்தானே மிருகங்களும்.
பதிலளிநீக்குஆனா அந்தப் பழைய பாகனால் எப்படி இதைப் பிரிய மனம் வந்ததோ? இதற்காக தன் வாழ்வையே தியாகம் பண்ணியவர் இப்போ ஏன் விட்டுப் பிரிஞ்சார்? ஒருவேளை ஆண்டாளுக்கு எதுவும் ஆகிவிட்டால் அவரால தாங்கவே முடியாது என்பதனால் அது நன்றாக இருக்கும்போதே தாம் விலத்துவோம் என மனதைக் கல்லாக்கி விட்டாரோ.
ஆனா இப்படி திடீரெனப் பிரிவது தப்பு, கொஞ்சம் கொஞ்சமாக பிரியலாம். எங்கள் மூத்தவரை நேசறியில் பழக்கப்பட்ட பாடு நினைவுக்கு வருது.. அவர் அம்மா செல்லம், நான் இல்லாமல் எங்கும் போகமாட்டார்.. நேசறியில்.. முழுநாளும் போயிருந்து பின்பு கொஞ்சம் கொஞ்சமாக போய்ப் போய்த்தான், ஒளிச்சு ஓடிவந்து.. இப்படி எவ்வளவோ கஸ்டப்பட்டு, அந்நேரம் கணவரும் நானும் மனதால நிறைய அழுதோம்.. பின்புதான் பழகிக்கொண்டார்.
ஒருநாள் என் கையைப் பிடிச்சபடியே நேசறியில் விளையாடினார்[2.5 வயசென நினைக்கிறேன்], அப்போ அப்படியே கொஞ்சம் 2 அடி தள்ளிப்போனார் கையை விட்டு, உடனே ரீச்சர் எனக்கு கண்ணைக் காட்டினா.. எழும்பி வெளியே ஓடினேன்.. டக்கென்று மகன் பார்த்து அம்மாஆஆஆஆஆ எனக் கூப்பிட்டபடி ஓடிவந்தது தெரிஞ்சது, ரீச்சர் தூக்கியபடி கதவைப் பூட்டி விட்டா...
பின்னர் 2 மணித்தியாலத்தால் கூப்பிடப் போனேன், சொன்னார்.. “அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு ஓடி வந்தேன் ரீச்சர் டோரைப் பூட்டி விட்டா, நாண்ட[என்னுடைய] கண்ணுக்கு அம்மா தெரியவேயில்லை” என்றார்.. எனக்கு நெஞ்செல்லாம் வலிச்சது.. இப்பவும் அந்த வசனம் எழுத கண்ணால தண்ணி வழிகிறது... இப்படி சில விசயங்கள் பழக்கி எடுப்பதென்பது, மனதைக் கல்லாக்கிக்கொண்டே செய்ய வேண்டியிருக்குது.
ஆண்டாளின் அந்த பாசத்துக்குரிய பாகனை கோவில் நிர்வாகம்தான் மாற்றியது. அதற்கும் ஏதோ காரணம் இருந்தது என்று ஞாபகம்.
நீக்குஎங்கள் பையன்கள் அப்படி எல்லாம் அழவில்லை என்பது ஒரு ஆறுதல் மட்டுமல்ல, பெரியவன் எல் கே ஜி செல்லும்போது எனக்கு ஆறுதல் வேறு கூறினான். அவன் எப்படி கவனமாக இருப்பான் என்று என்னிடம் அவன் சொன்னபோது அசந்துவிட்டேன்!
பத்தரைமாற்றுப் பசும்பொன் சொல்லி இருப்பது போலவே எங்கள் பையரும் பண்ணுவார். இத்தனைக்கும் அடுத்த தெரு தான் நர்சரி. பேச்சு வரலைனு சேர்த்தோம். ரொம்பச் சின்ன வயசு என்பதால் ஆசிரியை பனிரண்டு மணி ஒரு மணிக்கெல்லாம் கூட்டிப் போயிடுங்க என்று சொல்லுவாங்க. அதுக்கே நான் படாத பாடு பட்டிருக்கேன். வாசல்லே ஒரு வேப்பமரம். அந்த மரத்தில் ஒளிஞ்சுக்கறேன்னு சொல்லி வைத்திருந்தேன். ஒரு நாள் வெளியே வந்து அந்த மரத்திலிருந்து அம்மாவை இறங்கச் சொல்லுங்க, மழை பெய்யறது என்று சொல்லி இருக்கான். ஆசிரியை ஆளை வீட்டுக்கு அனுப்பினார். அவனுக்குத் தெரியாமல் வந்து மரத்தின் பக்கம் நின்று கொண்டிருந்து அவன்பார்க்கும்போது போய்க் கூட்டி வந்தேன்/வருவேன். பின்னால் அவனுக்கு எல்லாம் தெரிந்ததும் எனக்குத் தான் எதையோ இழந்தாற்போல் இருந்தது. அந்தக் குழந்தைத் தனம்!
நீக்குகுட்டிக் குஞ்சுலு சமர்த்தாக இரண்டு கைகளாலும் டாட்டா காட்டிக்கொண்டே போகும். அழாது. எங்க பொண்ணோட அது தனிக்கதை! எழுதி மாளாது! ரொம்பச் செல்லம் வேறே!
நீக்குசுவாரஸ்யமான அனுபவங்கள். " பின்னால் அவனுக்கு எல்லாம் தெரிந்ததும் எனக்குத் தான் எதையோ இழந்தாற்போல் இருந்தது. அந்தக் குழந்தைத் தனம்! " என்னும் வரி என்னை யோசிக்க வைத்தது. நாம் எல்லோருமே அப்படிதான் நினைக்கிறோமோ... நம் பெற்றோரும் நம்மிடம் அப்படி உணர்ந்திருப்பார்களோ...
நீக்குதெரியலை ஸ்ரீராம், ஆனால் அப்புவின் மழலையைக் கேட்டுவிட்டுப் பின்னால் அவள் நன்றாகப் பேச ஆரம்பித்ததும் கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. இப்போவும் குஞ்சுலுவின் மழலையை ரசிக்கிறோம். ரெடி சொல்ல வராது அதுக்கு. "வெயி" என்று சொல்லும்.வேடிக்கையாக இருக்கும். பின்னால் அது "ரெடி" என்று சொல்ல ஆரம்பிச்சதும் கொஞ்சம் மனசு கஷ்டமாகவே இருக்கும்.
நீக்குஅந்த ஜோக்.. பிச்சைக்காரருக்கோ வரி?
பதிலளிநீக்குஸ்ரீராம் அவசரப்பட்டு ஓடிவிடாதீங்கோ.. அனுக்கா அழைப்பது ஆராக இருக்கும் என முதலில் நன்கு விசாரியுங்கோ.. ஒருவேளை நெல்லைத்தமிழனையாகக்கூட இருக்கலாம் ஹா ஹா ஹா.. அவர்தான் கட்சி மாறி விட்டதாக எங்கோ அறிவிச்சாரே:).
இன்றைய போஸ்ட் ஒரே பீலிங்சாப் போச்சு ஸ்ரீராம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... என்னைப்போன்றோர், இப்படி பீலிங்ஸ் பார்த்து நம் பழையதை எல்லாம் நினைத்துப் பார்த்து அதனுள் மூழ்கி.. இப்படித் தத்தளிச்சுத்தான் வெளியே வருவேனாக்கும் ஹா ஹா ஹா.
//அந்த ஜோக்.. பிச்சைக்காரருக்கோ வரி?//
நீக்குமாற்றிச் சொல்றீங்க... வரி கட்டி அவர் அப்படி ஆகிவிட்டார் என்று அர்த்தம்!
// இன்றைய போஸ்ட் ஒரே பீலிங்சாப் போச்சு ஸ்ரீராம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. //
அப்படியா? எனக்கு அப்படித் தோன்றவில்லையே...
ஆண்டாள் இப்போது முன்னைப் போல் ஆகிவிட்டாள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் பல்லி இருக்கே, பல்லி அது எங்க வீட்டில் எங்களோடயே கூடக் கூட வந்து எல்லா வேலைகளையும் செய்து கொடுக்கும். எங்காவது கவனிக்காமல் மிதிச்சுடப் போறோமேனு எங்களுக்கு பயமா இருக்கும். அத்தனை நெருக்கம். அதுவும் குட்டிப் பல்லி இருக்கே அது கண்ணாமூச்சி கூட ஆடும். ஆகவே எல்லாவற்றையும் மூடியே வைச்சிருப்போம் வீட்டிலே! எங்க பேத்தி அப்புவுக்குத் தான் இவற்றைக் கண்டால் பயம். நான் இவற்றைக் க்ளோஸ் அப்பில் படம் எடுத்து அவளுக்கு வாட்சப்பில் அனுப்புவேன். அழகாய்ப் போஸ் கொடுக்குங்க!
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா... நீங்கள் சொல்வது சிரிப்பா இருக்கு கீதா அக்கா.
நீக்குபெண் கவிதையாவதை விட
பதிலளிநீக்குபெண்மனம் கவிதை யாவதில்
ஏகப்பட்ட நன்மை அவளுக்கு
ஊரார் 'கண்'பட மாட்டாள்
உபத்தரமே யின்றி வாழ்வாள்
தாயன்பு தனியாய்த் தெரியும்
தள்ளாத வயதினிலினும்
தளர்வற்ற மனம் கொள்வாள்
தனிச் சிறப்பு பெறுவாள்
எல்லாப் பெண்களுக்கும்
இவள் போல இல்லையென.
//எல்லாப் பெண்களுக்கும்
நீக்குஇவள் போல இல்லையென.//
'எல்லாப் பெண்களும்' என்று இருக்க வேண்டுமோ!
நன்றாய் இருக்கிறது. பெண் கவிதையாவதை விட, பெண்மனம் கவிதையாவது... ம்ம்ம்ம்ம்... புற அழகைவிட அக அழகா?
ஆமாம்.. ஆமாம்.. ஆமாம்..
நீக்குஉங்கள் திருத்தம் சரியே.
பஸ்ஸில் அடிபட்ட பசுவைப் பற்றி ஏற்கெனவே படித்த நினைவு இருக்கு. விலங்குகளாய் இருந்தாலும், பறவைகளாக இருந்தாலும் அவற்றுக்கும் பாசம் உண்டு. ஒரு காக்கை தன் குஞ்சைக் காப்பாற்ற எவ்வளவு போராடும் என்பதைப் பார்த்திருக்கேன். இந்த வகையில் குயில் மட்டும் விதிவிலக்கு. குயில் குஞ்சு தனியாகப் போராடும், பாவம்!
பதிலளிநீக்குஆமாம் அக்கா.. நாந்தான் சொல்லி இருக்கேனே... பழைய வீடியோதான் அது.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதம்பம் நன்றாக உள்ளது.
எங்கள் வீட்டிலும் பல்லிகள் உள்ளன பல்லி சொல்லி பலன் கிடைத்திருக்கிறதோ இல்லையோ, பல்லி செயலில் வீட்டில் எதற்கும் அடங்காத கரப்பான் பூச்சிகள் அடங்கி, ஒடுங்கி காணாமல் போயுள்ளன. பல்லிக்கும் நன்றி என்பது புரிந்தால், நன்றி சொல்லலாம் எனத் தேடும் போது அது காணாமல் போய் விடுகிறது.
பசுவின் தாய்ப்பாசம் கண்களை கலங்க வைத்தது. காணொளி கண்டதும் அது தெய்வீக பசுவோ என்ற எண்ணம் வருகிறது. உண்மையிலேயே தாய்ப்பாசத்திற்கு நிகரேது.
பாகனை காணாது முரண்டு பிடித்த ஆண்டாளின் செயலும் மனம் கலங்க வைத்தது.
வருமானவரி ஜோக்கை ரசித்தேன்.
கவிதை அருமை. அனுஷ்காவிற்காக கவிதை பிறந்த மாதிரி, அனுஷ்கா மாதிரியே கவிதையும் அத்தனை அழகு. அழகுடன் அழகு சேர்ந்த மாதிரி இருந்த கவிதையை மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... கரப்பான் பூச்சிகளை பல்லி ஒழிக்கும் ஸஹாயத்தை மறந்து விட்டேன். கொசுக்களை ஒழிக்குமோ! கவிதையைப் பாராட்டியதற்கும் நன்றி.
நீக்குபல்லி சப்தத்திற்கு எதிர் சப்தம் - ஹாஹா... சில விஷயங்களில் இப்படித்தான். சிறு வயதில் கற்றுக் கொண்ட பழக்கம்/நம்பிக்கை - சரியோ தவறோ தொடர்ந்து கொண்டே இருக்கிறது!
பதிலளிநீக்குஆண்டாள் - இப்போது ஒரு பிர்ச்சனையுமில்லை. ஆனால் ஆண்டாளுக்கு வயதாகிக் கொண்டே போகிறது என்பதால் உடல் ரீதியாக நிறைய பிரச்சனைகள் - நிறைய வேலை வாங்குவதில்லை. சமத்தாக ஊர்வலம் சென்று வருகிறது இப்பொழுதும்!
கவிதை - ஹாஹா... எப்படியோ அனுஷ் வந்து விட்டார் கவிதைக்காக! நடக்கட்டும் நடக்கட்டும்!
நன்றி வெங்கட். ஆண்டாளுக்கு வயதாகி விட்டதா? கவிதையைப் பாராட்டி இருப்பதற்கு நன்றி வெங்கட்!
நீக்கு