1) இதுவரை, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளியோர், பலனடைந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுவோர், வீட்டு வேலை செய்வோர், கூலி தொழிலாளர்கள் நிறைய பேர் வந்துள்ளனர். சென்னையை தாண்டி, செங்கல்பட்டில் இருந்தெல்லாம் வருகின்றனர்.
ஏழை மக்களின் மகிழ்ச்சியை நேரில் பார்த்த நன்கொடையாளர்களில் சிலர், இப்போது, புது துணி மற்றும் காலணிகளும் வாங்கி தருகின்றனர்.
சென்னை, அடையாறு, சர்தார் படேல் சாலையில் உள்ள, 'கோகுல் ஆர்க்கேட்' வணிக வளாகத்தினுள் இயங்கி வருகிறது, 'துளி' அமைப்பின் துணிக்கடை. ஏழை, எளியோர், தங்கள் விருப்பப்படி, என்ன வேண்டுமானாலும் இங்கு வந்து எடுத்துச் செல்லலாம். காசு கொடுக்க வேண்டியதில்லை; எல்லாமே இலவசம்.
2) சிறப்பாசிரியர் அய்யப்பன்.
================================================================================================
சமீபத்தில் நான் என் குடும்பத்துடன் மஹாபலிபுரத்தை ஒரு சுற்றுலா
வலம் வந்தேன்.
அங்கு நுழைந்தவுடன் என் நினைவிற்கு வந்த பிரபலமான பாடல்
வரிகள் இவை :
“கல்லிலே கலை வண்ணம் கண்டான்”
வெகு நாட்களாக எங்கள் வீட்டு தோட்டத்தில் பலா மரத்தடியில் ஒர்
விக்னம் தீர்க்கும் வினாயகர் சிலை ப்ரதிஷ்டை செய்ய வேண்டும் என்று
என் கணவர் விரும்பினார். இவ்வளவு தூரம் கடந்து வந்து அவரின்
ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவெடுத்து செயலில்
இறங்கினேன்.
சுற்றி விசாரித்ததில், “பி.ஸ். ஆர்ட்ஸ்” என்னும் சிற்பக்கலை
நிறுவனம் சிலைகளுக்கு மஹாபலிபுரத்தில் மிகவும் பெயர் போனது என்று அறிந்தேன். அங்கு சென்று அதன் உரிமையாளர் திரு. பூபதியை
சந்தித்தோம். நடுத்தர வயதை எட்டியிருக்கும் அவர் மிகவும்
கலகலப்பாகவும் சௌஜன்யமாகவும் எங்களை வரவேற்றார்.
இத்தொழிலில் 20 – 25 வருடங்களாக ஈடுபட்டு உழைப்பதாகவும்,
தனக்கு மிகவும் பிடித்ததும் மிகவும் நேசிக்கும் கலை என்றும் அவர்
கூறியபோது நம் மதிப்பிற்குறிய பிரதமரின் நினைவுதான் எனக்கு வந்தது.
நம் தமிழக மண்ணின் பெருமையை வெறும் இரண்டே நாட்களில்
உலகுக்கே உயர்த்தி வெளிச்சம் போட்டு காட்டியவர் அவர்.
திரு. பூபதிக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும்
வாய்த்திருக்கின்றனர். “இருவரையும் மேல் படிப்பு படிக்க வைத்து இதே
சிற்ப கலையில் புகுத்தி என் பிற்கால சந்ததிகளாக விட்டுச் செல்வேன்”
என்று அவர் கூறியபோது அவரது சிற்ப கலையின் மேன்மையையும்
அதில் அவருக்கு இருந்த ஆழமான நம்பிக்கையையும் கண்டு அசந்தோம்.
பின்னர், பெருமையில் பூரித்தோம்.
திரு. பூபதியின் நிறுவனத்தில் சுமார் 20 – 30 தொழிலாளிகள் வேலை
செய்கின்றனர். இவர்கள் எல்லோரிடத்திலும் நான் தவறாமல் பார்த்தது
அவர்களின் தொழில் தர்மத்தையும் அதற்கு அவர்கள் கொடுக்கும்
மரியாதையையும்தான்.
நான் ஊழியர்கள் திரு. நாகராஜ் மற்றும் திரு. சாரதி ஆகியோரிடம்
சிறிது நேரம் உரையாடினேன். இருவருமே சுமார் 5 – 7 வருடங்களாக
இங்கு பணி புரிகிறார்கள். எனக்கெதிரேயே, ஒரு மலேசிய நாட்டின்
முருகர் சிலையின் சிறு வேலைப்பாடு ஒன்றை திரு. நாகராஜ் வடித்து
காட்டினார். அந்த சிலையின் வாய் பகுதியை வடித்தார். ஒரு
உளியையும் ஒரு சுத்தியையும் வைத்துக் கொண்டு அவரது கைகள்
விளையாடிய விளையாட்டை காண, கண் கொள்ளாக் காட்சியாய்
இருந்தது.
இங்குள்ள தொழிலாளிகள் யாவருமே கைவேலையும் அறிந்தவர்கள்
“மெஷின் கட்டிங்”கும் செய்ய கூடியவர்கள்.
இன்னொரு தொழிலாளி வினாயகரை வடித்துக் கொண்டிருந்தார்.
அவர் கைகள் துரிதமாக வேலை செய்ய செய்ய, பிள்ளையாரின் தொந்தியும் தும்பிக்கையும் மளமளவென வளர்ந்ததை நாங்கள் எங்கள் கண் கூடாக பார்த்தோம்.
அப்போது நான் தெரிந்து கொண்டேன். கடவுளை கல் என்னும்
அறிவீனர்களின் வாதத்தை. ஆமாம் !!!! கடவுள் கல்தான். அதிலிருந்து
எவ்வாறு தோன்றுகிறார் என்று அறிய மேடைப் பேச்சு எதற்கு ? இங்கு
வந்த 10ஆவது நிமிடம் தெரியும்.
அங்கு குவிந்திருந்த நூற்று கணக்கான சிற்பங்களும் ஒவ்வொரு
கதை சொல்லியது.
இன்னொரு சுவையான தகவல் என்னவென்றால், நமது
பிரதமர் மோடி அவர்களின் வருகையின்போது மாமல்லபுரத்தில் அவர்கள் காட்சிக்காக வைக்கப்பட்ட அத்தனை சிற்பங்களும் திரு. பூபதியின் நிறுவனத்திலிருந்துதான் அனுப்ப பட்டன.
ஆயின், இவர்களுக்கும் முட்டுக்கட்டைகள் உள்ளன. சிற்பங்கள்
தயார் செய்ய வேண்டிய பிரம்மாண்டமான பாறைகளும் கற்களும்
காஞ்சிபுரத்திலிருந்து வரவழைக்கப் படுகின்றன. இதில் சோகம்
என்னவென்றால், சுமந்து வரும் லாரி ஓட்டுனர்கள் பாடு திண்டாட்டம்.
டோல்கேட்டில் லாரிகளை நிறுத்தி வீண் வாதம் செய்து அவர்களை
மிரட்டி பணம் பறிப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள் சில காக்கி
சட்டைக்காரர்கள். இந்த சுமையை ஏற்க வேண்டியதும் நிறுவன
உரிமையாளர்தான். இது தொடர்ந்து நடக்கும் அதிகாரத் தொல்லை.
இரண்டாவதாக, இந்த சிற்பக் கலைஞர்களுக்கு அரசாங்கத்தால் எந்த
உதவியும் கிடையாது. என்றாவது ஒரு நாள் ஆடிக்கொரு முறை
அமாவாசைக்கொரு முறை 10 கலைஞர்களை கூப்பிட்டு ஒரு மேடையில்
கௌரவித்து பொன்னாடை போர்த்துவார்கள். மற்றபடி எந்த அரசாங்க
சலுகையும் கிடையாது.
மூன்றாவதாக, இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் யாவரும்
ஒரு மாதத்திற்கு ரூபாய் 18,000/- முதல் ரூபாய் 25,000/- சம்பாதிக்கிறார்கள்.
இந்த கால கட்டத்தில் இது எப்படி குடும்பம் நடத்த போதுமானதாக இருக்க முடியும் ? குடும்பத்தை நடத்தி, பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து, பெரியவர்களை நன்கு கவனித்துக் கொண்டு இந்த ஊதியத்தில் பணம் மிச்சம் பிடிப்பது என்பது இரு சக்கர வாகனத்தில் 8 போடுவதற்கு சமம்.
நான்காவதாக, இந்த சிற்ப கலைஞர்கள் மெஷின் மற்றும் உளியை
கொண்டு வேலை செய்யும்போது, பல சமயங்களில் மெஷின் கத்தியானது இவர்களின் கையை பதம் பார்த்து விடுகிறது. மேலும், உளியானது கூர்மையாக இருப்பதால், அடிக்கடி கைகளில் இரத்த காயம் ஏற்பட்டு திண்டாடுகிறார்கள். எந்த பாதுகாப்புமே இல்லாத ஒரு தொழிலை விருப்பத்தினால் மட்டுமே தொடர்ந்து செய்கிறார்கள் இந்த சிற்பிகள்.
சிற்ப கலை மற்றும் சிற்பக் கலைஞர்கள் நம் தமிழகத்தின் அரிய
பொக்கிஷம். அவர்களுக்கு ஆவன செய்து அவர்களை கௌரவத்துடனும்
மரியாதையுடனும் வாழ வைப்பது நம் அரசாங்கத்தின் பொறுப்பல்லவா
நண்பர்களே ? இந்த வழியில் நம் அரசு நழுவி விட்டதோ என்று
நினைக்கும்போது மிகவும் வருத்தமாகவும் சங்கடமாகவும் இருக்கிறது.
எனினும், ஒர் நற்செய்தி ஜனவரி 13ஆம் தேதி “தினமணி”யில்
வெளியிடப் பட்டுள்ளது. இந்துசமய அற நிலையத்துறையில் புதிதாக
உருவாக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் மற்றும் பாதுகாப்புப் பிரிவில் ஸ்தபதி உள்ளிட்ட பதவிகளுக்கு சிற்பக்கலை கல்லூரிகளில் படித்த
மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என உயர்நீதி மன்றம்
உத்தரவிட்டுள்ளது என்பதுதான் அது.
கல்லிலே கடவுளை வடிக்கும் ஒவ்வொரு சிற்பியும் கடவுளுக்கே
சமம். அவர்களை சந்தோஷமாக வாழ வைப்பது அரசாங்கத்தின்
தலையாய கடமை என்பதை விரைவில் உணர்ந்து நல்ல திட்டங்களை
இவ்வரசாங்கம் வகுக்கும் என்று நம்புவோமாக.

கல்லும் கடவுளாகும் அதிசயம்
ரமா ஸ்ரீனிவாசன்

appaadaa!
பதிலளிநீக்குமன்னிக்கவும். நேற்று ஒழுங்கு படுத்திய போது செட்டிங் ஏதோ மாறி விட்டதுபோல... காலை சற்றே தாமதமாக எழுந்து விட்டேன்... கவனிக்கவில்லை.
நீக்குஅறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல...
பதிலளிநீக்குவாழ்க நலம்...
வாழ்க நலம்.
நீக்குசிற்பிகளைப் பற்றிய செய்தித் தொகுப்பு அருமை...
பதிலளிநீக்குஆம்...
நீக்குமுதல் செய்தி படிச்சிருக்கேன். இரண்டாம் செய்தி புதுசு. மாமல்லபுரம் பற்றிய ரமா ஸ்ரீநிவாசனின் அலசல் கட்டுரை பல புதிய விஷயங்களைத் தெரியப் படுத்தியது. அவருக்கு முன் கூட்டிய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஆம்...
நீக்குதுளி பெருங்கடல் ஆகட்டும்..
பதிலளிநீக்குஏழையர் துயர் இதனால் தீரட்டும்...
டும்...டும்.....
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//சிற்ப கலை மற்றும் சிற்பக் கலைஞர்கள் நம் தமிழகத்தின் அரிய பொக்கிஷம். அவர்களுக்கு ஆவன செய்து அவர்களை கௌரவத்துடனும் மரியாதையுடனும் வாழ வைப்பது நம் அரசாங்கத்தின் பொறுப்பல்லவா//
பதிலளிநீக்குஉண்மையான வார்த்தை ஒருவேளை இந்த தொழிலாளர்கள் மனம் நொந்து இர்த கலை வளர்க்கப்படாமல் போனால் நாளை கோவில்கள் புதிதாக கட்டுவது இயலாத காரியம் இதை பொதுமக்களும், அரசும் உணரவேண்டும்.
சிற்பக்கலையின் பெருமையை உணர்ந்து தம் பணியை ஆற்றிவரும் அரிய மனிதரைப் பற்றிய நல்ல பகிர்வு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்றால், உடை கொடுத்தோர் மானம் காப்பவர்கள். துளி பெரு வெள்ளமாகட்டும். பாடம் கற்பிப்பதோடு நின்று விடாமல் பல வகைகளிலும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் பல விதமான ஆசிரியர்களை எ.பி.யின் தயவால் சந்திக்கிறோம். நன்றி.
பதிலளிநீக்குரமா ஸ்ரீநிவாசனின் மாமல்லபுரம் சிற்பக்க கூடத்தைப் பற்றிய கட்டுரை அருமை. நம்முடைய பல சிறப்பான நுண் கலைகள் போதுமான ஆதரவு கிட்டாததால் அழிந்து விட்டன. அரசு தக்க நடவடிக்கை எடுத்து மிஞ்சியிருக்கும் கலைகளை ஆதரிக்க வேண்டும்.
பதிலளிநீக்குமாமல்லபுரம் சிற்பக் கூடத்தைப் பற்றிய கட்டுரை அருமை. பல தகவல்களை அறிய முடிந்தது.
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குசென்னை வந்தபோது துளி" கடைக்குப் போகும் சந்தர்ப்பம் கடவுள் கொடுத்தார்.
மேலும் பெருகட்டும் வெள்ளம்.
ஆசிரியர் அய்யப்பன் செய்யும் பணி மிக அரிதான போற்றத்தக்கது.
இளைஞர் இவர் செய்யும் தொண்டை இன்னும் பல பேர் செய்ய முன்வந்தால்
இன்னும் அருமையாக இருக்கும். அவரும் நல் ஆரோக்கியத்தோடு
இருந்து ,ஊக்கம் கிடைக்கப் பெற்று
நலம் காண வாழ்த்துகள்.
திருமதி ரமாஸ்ரீனிவாசனின் மாமல்லபுரக் கட்டுரை மிக அரிய செய்திகளைக் கொண்டுவந்து தருகிறது.
நாங்கள் அங்கே இருந்தபோது வறுமை கண்கூடாகத் தெரியும்.
இப்பொழுது எத்தனையோ மாறிவிட்டது நிலைமை.
இன்னும் வளம் பெற வாழ்த்துகள்.
துளியைப் பற்றி புதிய தலைமுறையோ, புது உகத்திலோ வைத்தார்கள்.
பதிலளிநீக்குபெற்றோர்களும், பிள்ளைகளும் மகிழ்ச்சியாக துணிகளிய தேர்ந்து எடுப்பதை பார்த்தேன். ரூபாய் கூப்பன் கொடுத்து விடுவதாலும், துணியில் விலை பட்டியலும் தீபாவளி சமயம் புது துணி வாங்கிய் இன்பம் அந்த குழந்தகள் மலர்ந்த முகத்தில் தெரிந்தது. இப்போது இன்னும் மகிழ்ச்சி புது துணிகள் கொடுக்க போவது அறிந்து.
சிறப்பாசிரியர் அய்யப்பன் அவர்கள் நல்லவழிகாட்டுதலை வழங்குவதில் தான் பணியில் நுாறு சதவீதம் நிறைவு பெற முடியும் என்று சொல்வது உண்மை. படிப்பு மட்டும் போதாது அவர்களை நல்ல வழிகாட்டி நல்வழி படுத்துவதும் அவசியம்.
இரண்டு செய்திகளுக்கும் வாழ்த்துக்கள்.
//கல்லிலே கடவுளை வடிக்கும் ஒவ்வொரு சிற்பியும் கடவுளுக்கே
பதிலளிநீக்குசமம். அவர்களை சந்தோஷமாக வாழ வைப்பது அரசாங்கத்தின்
தலையாய கடமை என்பதை விரைவில் உணர்ந்து நல்ல திட்டங்களை
இவ்வரசாங்கம் வகுக்கும் என்று நம்புவோமாக.//
நம்புவோம். நல்ல கட்டுரை.
ஆசிரியர் ஐயப்பன் அபூர்வமானவர். தமிழ்மக்களுக்குத் தொண்டு செய்வோர் உண்மையில் இவர்போன்றோர்தாம் (வெவ்வேறு துறைகளிலும்..)
பதிலளிநீக்குசிற்பக்கலை எவ்வளவு உன்னதமான தெய்வீகக்கலை. எந்த மாதிரியான மேதைகள் தமிழ்நாட்டில் அந்தக்காலத்தில் இருந்திருக்கவேண்டும் என்பதை நமது புகழ்பெற்ற கோவில்கள் கதை கதையாய்ச் சொல்லும். அவர்கள் எவ்வாறு மன்னர்களால், சிற்றசர்களால் மதிக்கப்பட்டிருக்கவேண்டும், பேணிக் காக்கப்பட்டிருக்கவேண்டும், அப்படி ஒரு கலைச்செறிவான, காலங்கடந்த படைப்புகளை தமிழ்ச் சமுதாயத்துக்கு விட்டுச்செல்லவென. நினைத்தாலே நெஞ்சு தவிக்கிறது - இவையெல்லாம் காலப்போக்கில் சமூகவிரோதிகளால், கொள்ளையர்களால் திருடு போகாமல், அழிக்கப்படாமல், சிதைக்கப்படாமல் காப்பாற்றப்படவேண்டுமே என.
சொற்பமாகக் கிடைத்தாலும் சுருட்டிவிடுவோம் முதலில் என, அரசியல்வாதிகள் எனும் பெயரில் அலையும் பேய்களுக்கு..
சிற்பக் கலைபற்றி என்ன தெரியும்? என்ன கவலை?
வாழ்த்துதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வு.
பதிலளிநீக்குதுளி அமைப்பைப் போலவே செயல்படுகிறது பெங்களூரில் “wall of kindness" அமைப்பு.
https://bangaloremirror.indiatimes.com/bangalore/others/donate-at-wall-of-kindness/articleshow/69995602.cms
இது ஜூன் மாதம் வந்த செய்தி. நேற்றும் இந்த அமைப்பின் மூலமாக பெரிய குடியிருப்புகளில் பொருட்கள், துணிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூர் தாசரஹள்ளி கோத்ரேஜ் குடியிருப்பின் முன்னர் கூடாரம் அமைக்கப்பட்டு தேவையுள்ள எளிய மனிதருக்கு பொருட்கள் சென்றடைய ஆவன செய்யப்பட்டது.
ரமா ஸ்ரீனிவாசன் அவர்களது பகிர்வின் மூலம் பல தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. சிற்பிகளின் வாழ்வு மேம்பட அரசு ஆவன செய்யுமென நம்புவோம்.
துளி அமைப்பு பற்றி முன்னரே படித்திருக்கிறேன். இரண்டாம் செய்தி புதிது. இரண்டு செய்திகளும் சிறப்பு.
பதிலளிநீக்குசிற்பக் கலை பற்றிய திருமதி ரமா ஸ்ரீனிவாசன் அவர்களின் பகிர்வு மிகவும் சிறப்பு. கடினமான வேலை தான்.