செவ்வாய், 7 ஜனவரி, 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை : ஆலமரத்துப் பிள்ளையார் - துரை செல்வராஜூ



ஆலமரத்துப் பிள்ளையார்..

துரை செல்வராஜூ 
========================

அன்றைக்குச் சதுர்த்தி...

ஆலமரத்தடிப் பிள்ளையாருக்கு முன்பாக நூற்றுக் கணக்கில் ஜனங்கள்..





பிள்ளையாருக்கு மகா ஆரத்தி முடிந்ததும் சூறைத் தேங்காய் போட்டு விட்டு பயணத்தைத் தொடர்வதற்காக அந்த நெடுஞ்சாலையின் அப்புறமும் இப்புறமுமாக வாகனங்கள் பலவும் காத்துக் கிடக்கின்றன...

ஓதுவார் அகவல் பாடிக் கொண்டிருக்கின்றார்...

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயகா விரைகழல் சரணே.. சரணே.. சரணே!...

அடியார் ஒருவர் சங்கெடுத்து ஊதினார்...

வாத்தியக்காரர்களின் மங்கள இசையுடன் கற்பூர ஆரத்தி ஆயிற்று...

சாமி தாத்தாவின் கையிலிருந்த பஞ்சமுக ஆரத்தியை
அடியார் ஒருவர் வாங்கிக் கொண்டு மக்களின் ஊடாக வந்தார்...

திருநீற்று மடலுடன் ஒரு அடி எடுத்து வைத்த சாமி தாத்தா நடை தடுமாறி மயங்கிச் சரிந்தார்...

அருகிருந்த சதாசிவ ஓதுவார் அப்படியே தாங்கிப் பிடித்துக் கொண்டார்...

ஓஓ!.. - என,  கூட்டத்தினிடையே பரபரப்பு பற்றிக் கொண்டது...

ஆம்புலன்ஸ்... ஆம்புலன்ஸ்...  - என்று யாரோ சப்தம் போட்டார்கள்...

மயக்கம் தீராத நிலையிலும் தாத்தாவின் கை - வேண்டாம்.. -
என்பது போல அசைந்தது...

கூடியிருந்த பெண்களில் சிலர் அழ ஆரம்பித்து விட்டார்கள்...

சதாசிவ ஓதுவார் தாத்தாவைத் தன் மடியில் போட்டுக் கொண்டு வலது கை நாடியைப் பரிசோதித்தார்...

சதாசிவ ஓதுவாருக்கு சித்த வைத்தியமும் தெரியும்...

ஜனங்கள் கலவரத்துடன் ஓதுவார் முகத்தைப் பார்த்திருக்க ஓதுவார் தன் கண்களில் திரண்ட நீரைத் துடைத்துக் கொண்டார்...

தாத்தாவின் நிலையை எடுத்துச் சொல்வதற்கு நா அசையவில்லை...
அவரது வெண்கலத் தொண்டையிலிருந்து ஒலி எழும்பவில்லை...

பொங்கல் புளியோதரை, சுண்டல் வடை - என பிரசாதங்கள்...

என்ன குறையோ தெரியவில்லையே!.. - என்று உபயதாரரின் கண்களில் நீர்...

இப்படியான விவரத்தைச் சொல்லி ஊருக்குள் செய்திகள் பறந்தன...

நல்ல மனுசன்... கோயிலை எடுத்துக் கட்டி கோயிலே கதி.. ந்னு கிடந்தார்!...  அவரால இந்த ஊருக்குத்தான் எத்தனை நல்லது நடந்திருக்கு!...

ஜனங்கள் பேசிக் கொண்டார்கள்...

தாத்தாவுக்கு இப்போது எண்பது வயதிருக்கும்...  இப்போ இந்த ஊரே அவருக்குச் சொந்தம் தான்..

ஆனாலும் இன்னிக்கு வரைக்கும் அவரோட பேர் - ஊர் என்னா..ன்னு யாருக்கும் தெரியாது...

என்ன கதை விடுறீங்களா!?..

கதையெல்லாம் இல்லீங்க... உண்மைதான்!...

ஐம்பது வருசங்களுக்கு முன்னால இது ஒத்தைச் சாலை தான்...

சாலைக்கு மேற்கால தாமரைக் குளம்.. குளத்தோரமா ஆலமரம்...

அதுக்குக் கீழா இருபதுக்கு முப்பதுன்னு சுண்ணாம்பு வச்சிக் கட்டுன மேடை...  அந்த மேடையில தான் இந்த வலம்புரிப் பிள்ளையார்... துணைக்கு ஒரு நாகர்...

பிள்ளையாருக்கு ஆலமரந்தான் நிழல்... வேற கட்டுமானம் ஏதும் கிடையாது..

பிள்ளையாரோட நேர் பார்வையில கிழக்கால அந்தக் கிராமம்...  இந்தச் சாலையில இருந்து அரை மைல் தூரம்..  நூறு வீடும் நாலு தெருக்களும் தான்...

ஆனாலும் அந்தக் கிராமத்துக்கு நடுவால சோழ ராஜா கட்டுன  சிவன்கோயில்..  நாகநாத சாமி - அமிர்தவல்லி அம்பாள்..ந்னு பேரு...

ஆயிர வருசத்துக்கும் முன்னால அப்பர் சாமி வந்து பாட்டுப் பாடுனதா வரலாறு இருக்கு...

அந்தக் காலத்துல - பொய்யும் புரட்டுமா யாரும் எந்தக் கதையையும்
கிளப்பி விடாததால வெளியூர் ஜனங்களோட வரத்து கிடையாது...

உள்ளூர் ஜனங்களும் சிவனையோ அம்பாளையோ எட்டிப் பார்க்கிறதும் கிடையாது...

ஆனா - வருசத் திருவிழாவை மட்டும் நடத்தி முடிச்சிடுவாங்க....

காலையில ரெண்டும் அந்தியில ரெண்டுமா ஸ்ரீ ராமவிலாஸ் பஸ்ஸூங்க போகும்.. வரும்......

ஊர்ப் பயணம் போறவங்களுக்கும் வர்றவங்களுக்கும் இந்த மேடையும் ஆலமரமும் தான் சொர்க்கம்...

ஆனாலும் அந்தப் பிள்ளையாருக்கு ஒரு குடம் தண்ணிய ஊத்தி ஒரு பூவைப் போட்டு ஒரு நல்ல விளக்கு ஏத்தி வைக்க நாதியில்லை...

இத்தனைக்கும் பக்கத்தில தான் தாமரைக் குளம் பூத்துக் கிடக்குது...

இப்படியான நேரத்தில தான் ஒருநாள் - அந்தப் பிள்ளையார் மேடையில இன்றைய சாமி தாத்தா படுத்துக் கிடக்கவும் என்னா... ஏது?.. - ன்னு மூனாம் நாளு விசாரிப்பு நடந்திருக்கு...

விசாரிச்சவங்களுக்கு எந்த சேதியும் சொல்லாம - எனக்கு ஒரு வேலை கொடுங்க... ந்னு கேட்டிருக்காரு...

ஜனங்க அப்பாவியா இருந்ததால மேற்கொண்டு விசாரிக்காம கடலைக் கொல்லையில களை எடுக்குற வேலை கொடுத்துருக்காங்க...

அங்கே கிடைச்ச கூலியில முதல் வேலையா நாலு அகல் விளக்கு, ஒரு தோண்டி, ரெண்டு பானை, ஒரு அகப்பை...  அத்தோட அரிசி பருப்பு எல்லாம் வாங்கியிருக்கார்...

ஒரு பானையில தண்ணி - போற வர்ற ஜனங்களுக்கு...  இன்னொரு பானை - சோறு ஆக்கறதுக்கு..

அந்தத் தோண்டி பிள்ளையாருக்கு தண்ணி எடுத்து ஊத்துறதுக்கு...

தினப்படி மத்தியானத்துக்கு மேல பிள்ளையாருக்கு குளத்துத் தண்ணி அபிஷேகம்..

நாலஞ்சு தாமரைப் பூக்கள் பிள்ளையாருக்கும் நாகருக்கும்..  அதான் அன்றைய சிறப்பு அலங்காரம்....

அரிசி பருப்பு எல்லாத்தையும் ஒன்னாப் போட்டு பொங்கி தாமரை எலையில எடுத்து வச்சி பிள்ளையாருக்குப் படையல்...

முதல் கவளத்தை எடுத்து வடக்கால வச்சிட்டா காக்காய்களுக்கும் நாரத்தங்குருவிகளுக்கும் அணில் பிள்ளைகளுக்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்...

ரெண்டு வாரம் போனதும் கையில இருந்த முப்பது ரூவாயோட  கும்மோணத்துக்குப் போயி விபூதி, குங்குமம், சந்தனம், ஜவ்வாது காசித்துண்டு எல்லாம் வாங்கிட்டு வந்தார்...

அதுவரைக்கும் திகம்பர சாமியா இருந்த பிள்ளையார் பீதாம்பரப் பிள்ளையாராக ஆகிட்டார்...

கோயில் விளங்குனதும் பிள்ளையார் காலடியில அஞ்சு பத்து..ன்னு சில்லறைக் காசுகளைப் போட்டுட்டுப் போனாங்க ஜனங்க..

அதையெல்லாம் எடுத்து ஒரு கலயத்துல போட்டு வேடுகட்டி பிள்ளையாருக்குப் பின்னால வைச்சிருந்தாரு...

இதத் தெரிஞ்சுகிட்ட களவாணிப் பய ஒருத்தன் ராத்திரி நேரம் பார்த்துக் கை வரிசயக் காட்ட ஆலமரத்துப் பொந்துக்குள்ள இருந்து புஸ்ஸு... ன்னு சத்தம்...

அலறிக்கிட்டு விழுந்த அவனுக்கு...  ஆறேழு நாளா அடங்காத பேதி... ன்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க....

இதையெல்லாம் பார்த்த ஊர் சனங்க ஒண்ணா வந்து -

இனிமே நீங்க எங்கேயும் வேலைக்குப் போக வேணாம்...  பிள்ளையார் கோயில் பூசாரியா இருந்து பிள்ளையாரை நல்லபடியா பார்த்துக்குங்க...
எங்களுக்கும் இப்ப தான் சொரணை வந்தது... - ந்னு சொல்லிட்டு

குளத்துக்குப் பக்கத்திலயே பூசாரியாருக்கு ஒரு குடிசை போட்டுக் கொடுத்துட்டுப் போனாங்க...

இத்தனைக்கும் அவருக்கு ஒரே ஒரு பிள்ளையார் பாட்டைத் தவிர வேறொன்னும் தெரியாது...

அதுக்கப்புறம் நாலாவது மாசம் - நாகநாதர் கோயில் திருப்பணிக்கு முகூர்த்தம் செஞ்சாங்க...

கோபுரத்து உச்சியில பளீர்..ன்னு விளக்கு எரிய ஆரம்பிச்சது...

அடுத்த ஆறேழு மாசத்துல கும்பாபிசேகமும் நல்லபடியா ஆச்சு...

இந்த பிள்ளையார் கோயில் பூசாரியாருக்கு சால்வை மாலை எல்லாம் போட்டு கௌரவம் பண்ணுனாங்க...

சாலையில போற வர்ற லாரிக்காரங்க எல்லாம் வழிகாட்டும் பிள்ளையார்..ன்னு கொண்டாடுனாங்க...

ஒருத்தர் பெரிய திருவாசி உபயம் செஞ்சார்..   இன்னொருத்தர் சர விளக்கு மாட்டிக் கொடுத்தார்...

ஆனா உண்டியல் மட்டும் வைக்கவே இல்லை...

தட்டுல கிடைக்கிற காசு பணத்துல பிள்ளையார் பூசைக்குப் போக -
ஏழைப் பிள்ளைகளுக்கு பேனா பென்சில் நோட்டுப் புத்தகம்...ன்னு
தர்ம செலவு செஞ்சி பேரேடு எழுதி வைச்சாங்க...

இதுக்கு இடையில இந்தச் சாலையை அகலமாக்கப் போறோம்.. - ந்னு சர்க்கார்....  ல இருந்து நோட்டீஸ்...

அதுல பிள்ளையார் மேடையை இடிச்சி தள்ளிட்டு ஆலமரத்தை சன்னஞ் சன்னமா அறுத்துப் போடப் போறதா இருந்துச்சு....

ஜனங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க...

சர்க்கார் உத்தியோகஸ்தருங்க காதுல எதுவும் ஏறலை...

சிட்டா, அடங்கல், ஊரோட மேப்பு...ன்னு கையில வச்சிக்கிட்டு தாசில்தார், சர்வேயர், மணியக்காரர், கர்ணம், தலையாரி..ன்னு எல்லாரும் நின்னாங்க...

அந்த நேரம் பார்த்து ஆபீசர் தலையில ஆலம் பழம் ஒண்ணு விழுந்திச்சு..

அவ்வளவு தான்...  ஏதோ அணுகுண்டு தலைல விழுந்த மாதிரி மல்லாக்கக் கிடந்தார் ஆபீசர்...  அரண்டு புரண்டு எழுந்திரிச்சதும் திரும்பிப் பார்க்காம ஓடிப் போய்ட்டார்...

அதுக்கப்புறம் இன்னொரு ஆளு...  அற்புதமாவது... ஆட்டுக் குட்டியாவது...
நான் முடிக்கிறேன் இந்த வேலைய..ன்னு சொல்லிட்டு

ஆடம்பரமா ஜீப்புல வந்து அப்படியும் இப்படியுமா சுத்திப் பார்த்துட்டு தாலுக்கா ஆபீசுக்குப் போயி பேப்பர்ல கையெழுத்து போடறப்ப விலுக்..ன்னு விழுந்தது தான் கை... எழும்பவே இல்லை..

அலறி அடிச்சுக்கிட்டு ஆலமரத்தடிக்கு வந்தாரு...  குஞ்சு குளுவான் குடும்பத்தோட வாரக் கணக்கா பிள்ளையார் காலடியே கதி..ன்னு படுத்துக் கிடந்தாரு...

அவருக்கு தினப்படி சாமி தாத்தா தான் திருநீறு பூசி விட்டாரு...

ஒரு மாசத்துக்கு அப்புறம் கை சரியாயிடுச்சு.... ன்னு பொங்கல் எல்லாம் வச்சிட்டு கிளம்பிப் போனாங்க..

ஆனாலும் ஜில்லா போர்டு சாலை போடறதை நிறுத்தலை...

ஆலமரத்துக்கு தெற்காலயும் வடக்காலயும் அரை மைலுக்கு அங்கிருந்தே சாலைய கிழக்கால ஒதுக்கி புதுசா போட்டு முடிச்சதுல ஊர் ஜனங்களுக்கு ரொம்ப சந்தோசம்...

இதெல்லாம் பிரபலமானதும் ஏதேதோ பத்திரிக்கையில இருந்து ஆளுங்க வந்து சாமி தாத்தாவையும் பிள்ளையாரையும் ஆலமரத்தையும்  தாமரைக் குளத்தையும் போட்டோ புடிச்சிப் போட்டாங்க...

நாகநாதர் கோயில் மேற்கு பார்த்த கோயில்..  ஈஸ்வரனைப் பார்த்த மாதிரி ஆலமரத்து விநாயகர்...  அதனால இங்கே தரிசனம் பண்றவங்களுக்கு தீராத வியாதி, பணக் கஷ்டம் - எல்லாம் தீரும்...ன்னு தஞ்சாவூர்க்காரர் ஒருத்தர் சும்மா இருக்க மாட்டாம எழுதிப் போட்டாரு...

அவ்வளவு தான்... ஜனங்க எங்கெங்கிருந்தெல்லாமோ வர ஆரம்பிச்சாங்க...

இந்தக் களேபரத்துல கடையும் கடைத்தெருவுமா ஆகிப் போச்சு கிராமம்...

ஆனாலும் பிள்ளையாருக்கு மட்டும் கூரை போடலை...

வர்ற ஜனங்க எல்லாம் பிள்ளையாரைக் கும்பிட்ட கையோட சாமித் தாத்தாவையும் கும்பிட்டு விட்டு விபூதி வாங்கிக்கிட்டுப் போனாங்க...

இடையில ஒரு கும்பல் சாமித் தாத்தாவோட போட்டோவப் போட்டு கல்லாக் கட்டலாம்... ந்னு பார்த்தானுங்க...

ஒருத்தன் மோட்டார் சைக்கிள்...ல இருந்து குப்புற விழுந்ததும் பாக்கி மூணு பேரும் தலை தெறிக்க ஓடிப் போய்ட்டானுங்க...

அம்பது வருசமா இப்படியெல்லாம் பிரசித்தியாகிய பிள்ளையார் கோயில் சாமி தாத்தா தான் இப்போ மயங்கிக் கிடக்கிறார்...

நாடி எறங்கிக் கிட்டே இருக்குதாம்...  இன்னும் கொஞ்ச நேரந்தான்.. சிவலோகம் போய்டுவாராம்!...

ஜனங்கள் பேசிக் கொண்டிருக்க -

அங்கே திருக்கயிலாய மாமலையில் கற்பக விருட்சத்தின் நிழலில் வீற்றிருந்த விநாயக மூர்த்திக்கு முப்பத்து முக்கோடித் தேவர்களும் பாதபூஜை செய்து கொண்டிருந்தனர்...

ஸ்வாமியின் கடைக்கண் நம் மீது படாதா!.. - எனத் தவித்திருந்தனர்...

ஆனால் விநாயக மூர்த்தியோ யம தர்மராஜனை ஏறிட்டு நோக்கினார்...

நான் எதுவும் செய்யவில்லை ஸ்வாமி!...

யம தர்மராஜனுக்கு - நா குழறியது...

'' சாமித் தாத்தா இங்கே வந்து ஒன்றும் ஆகப் போவதில்லை!...''

விநாயகப்பெருமான் திருவாய் மலர்ந்தார்...

'' தங்கள் சித்தம் எந்தன் பாக்கியம்!... ''

- என்ற யமதர்ம ராஜனுக்கு அன்று திருக்கடையூரில் நடந்தது நினைவுக்கு வந்தது..  தீர்த்தமும் திருநீறும் பெற்றுக் கொண்டு தனது வாகனத்துடன் மெல்ல அங்கிருந்து நகர்ந்தான் யம தர்மராஜன்...


ஃஃஃ

64 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்னிக்கு யாரோட கதையா இருக்கும்? நெல்லை? தி/கீதா? துரை? கமலா? அதிரடி? ரிஷபன்? ஆரண்ய நிவாஸ்? வெங்கட்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...    நல்வரவு, வணக்கம், நன்றி. ரிஷபன் ஸார் கிட்ட இந்த வருடம் மறுபடி கோரிக்கை வச்சுப்பார்க்கணும்!   ஆரண்யநிவாஸ் ஸார் முகநூலில் பிஸி!

      நீக்கு
    2. உங்களிடமிருந்து இன்னொரு கதை எதிர்பார்க்கிறேன் அக்கா.

      நீக்கு
    3. வெங்கட்? ஹாஹா... நல்ல நகைச்சுவை இல்லையா ஸ்ரீராம்? :) நீங்களும் கேட்டுட்டு இருக்கீங்க? நான் எங்கே எழுதறேன்? ஹாஹா...

      நீக்கு
  2. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  4. ஆஹா, துரைக்குத் தான் முதலில் வாய்ப்புனு நினைச்சேன். ஆனால் கொஞ்சம் சந்தேகம். கதையைப் படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க...   வாங்க...   அவர் அலுவலகத்தில் கடந்த வருடத்தின் சிறந்த பணியாளர் விருதைப் பெற்றிருக்கும் துரை செல்வராஜூ ஸாரின் மண்மணம் வீசும் கதைதான் இன்று...

      நீக்கு
    2. Out Standing Staff - என்று தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுள் நானும் ஒருவன்...

      என்னைப் பற்றிப் புறஞ்சொல்லியவர்களுக்கு முன்பாக மேடையேறி சான்றிதழ் பெற்ற தருணம் மறக்க இயலாதது...

      சென்ற வருடத்தின் இதே சமயத்தில் மிகவும் கலங்கி நின்றேன்...

      அந்த வேளையில் எனக்கு ஆறுதலும் தேறுதலுமாக இருந்தது எங்கள் பிளாக் தான்...

      துயருற்ற வேளையில் தோள் கொடுத்திருந்த தங்களுக்கெல்லாம் நெஞ்சார்ந்த நன்றி...

      இந்தச் செய்தியினை நான் இங்கு பதிவு செய்ய நினைத்திருந்த வேளையில் வேறொரு வருத்தமான நிகழ்வு...

      எனது மூத்த தங்கையின் கணவர் சென்ற ஞாயிறு இரவு இறை நிழல் சேர்ந்து விட்டார்...

      என்ன செய்ய?...

      காலம் ஓடிக் கொண்டிருக்கிறது...

      நீக்கு
    3. மிகவும் வருத்தமான செய்தி.  ஆழ்ந்த இரங்கல்கள்.

      நீக்கு
    4. உங்கள் குடும்பத்துக்கும், முக்கியமாக அன்புத் தங்கைக்கும்
      அன்பும் அணைப்பும்.

      நீக்கு
    5. உங்கள் தங்கை குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதலையும் தேறுதலையும் தர வேண்டும்.
      ஆழ்ந்த இரங்கல்கள்

      நீக்கு
    6. ஆறுதலும் தேறுதலும் கூறிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

      நீக்கு
    7. மனமார்ந்த இரங்கல்கள் உங்கள் மூத்த தங்கைக்கும் குடும்பத்தினருக்கும். இறைவன் அருளால் அமைதி நிலவட்டும்..

      நீக்கு
    8. துவாதசி பாரணைக்குச் சமைக்கப் போனதாலே இந்தச் செய்தியைக் கவனிக்கவே இல்லை. உங்கள் தங்கைக்கு இது ஈடு செய்ய முடியா இழப்பு. இதைத் தாங்கிக்கொள்ளும் மனோபலத்தை அருளுமாறு எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். எங்கள் மனமார்ந்த அனுதாபங்கள், வருத்தங்கள். அவர்கள் குடும்ப நலனுக்குப் பிரார்த்தனைகள் செய்துக்கறோம்.

      நீக்கு
    9. சிறந்த பணியாளர் விருதைப் பெற்றதுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். மேன்மேலும் பல சிறப்புகள் கூடி வரட்டும்.

      நீக்கு
    10. தங்களது ஆறுதலான வார்த்தைகள்
      அனைத்திற்கும் நன்றியக்கா...

      நீக்கு
  5. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை ஸார்...   நம் நட்பும் உங்கள் ஆதரவும் தொடரட்டும்....

      நீக்கு
  6. நல்ல முடிவு. பிள்ளையார் நன்றாகவே காப்பாற்றி விட்டார். செல்லப் பிள்ளையார், நல்ல பிள்ளையார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துரைக்கும் ,ஸ்ரீராம், மற்றும் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

      தினம் ஒரு சுவையுடன் விருந்து எங்கள் ப்ளாகில் விருந்து காத்திருக்கிறது.
      சாமிக்கண்ணு தாத்தா ,உண்மையில் வாழ்கிறார்.
      என் தந்தையின் நினைவு வருகிறது.
      எங்கு சென்றாலும் பிள்ளையாரைத் தேடி வணங்கி பணி செய்வார்.

      காலை நேரத்தில் பக்தி ,விபூதி மணம் நிறைவு. ஒரு
      கிராமமே கண்ணில் வந்து நிற்கிறது.
      வினாயகருக்கு இல்லாத மகிமையா. அணைத்துக் காப்பார்.

      நீக்கு
    2. கீதா அக்கா அவர்களது கருத்துரைக்கும்
      வல்லியம்மா அவர்களது கருத்துரைக்கும் அன்பின் நன்றி...

      நீக்கு
  7. கதை யா ..நிஜமா என்னும் அளவில் மிக அருமையான படைப்பு ...


    ஒவ்வொரு ஊரிலும் இது போல ஒரு பிள்ளையார் இருப்பார் ...இந்த முறை ஊருக்கு செல்லும் போது எங்கள் பிள்ளையாரை காணும் போது நிச்சியம் இவர் என் மனதில் வருவார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபிரேம்..
      தங்களது கருத்துரைக்கு அன்பின் நன்றியுடன்...

      நீக்கு
  8. அலுவலகத்தில் கடந்த வருடத்தின் சிறந்த பணியாளர் விருதைப் பெற்றிருக்கும் துரை அண்ணா விற்கு எனது வாழ்த்துக்களும் ...

    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துரைக்கு
      நெஞ்சார்ந்த நன்றி...

      நீக்கு
    2. இன்னல்கள் பலவற்றைக் கடந்து, இனிய சான்றிதழைப் பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள்!

      நீக்கு
    3. அன்பின் ஏகாந்தன்..
      தங்களது வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. கதையல்ல உண்மை என்பது போன்ற உணர்வு. அருமை ஜி

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. //சிறந்த பணியாளர் விருதைப் பெற்றிருக்கும் துரை செல்வராஜூ ஸாரின் மண்மணம் வீசும் கதைதான் இன்று..//

    முதலில் விருது பெற்ற சகோ துரைசெல்வராஜூ அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் அன்பின் நன்றியுடன்...

      நீக்கு
  12. கதையைப் பற்றி சொல்ல வேண்டுமா! மிக அருமை.

    சாமி தாத்தா செய்ய வேண்டிய நல்ல பணிகள் இன்னும் இருக்கும் போது இறைவன் அழைப்பாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே...

      கடனும் கடமையும் கழியாமல்
      இறைவன் அழைத்துக் கொள்வானா..

      நீக்கு
  13. இப்படி நல்லவர்களை வாழ வைக்கவும், தீயவர்களை தட்டிக்கேட்கவும் பிள்ளையார் எல்லா இடங்களிலும் இருந்தால் நலமாக இருக்கும்.
    எத்தனை அற்புதங்களை நடத்துகிறார் ஆலமரத்து பிள்ளையார் !
    அனைத்தையும் அருமையாக சொல்லி சென்ற விதம் மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா இடங்களிலும் தெய்வ சாந்நித்யம் இப்படித்தான் இருக்கிற்து...

      பெரியவர்களைத் துணை கொள் என்பது நீதி...

      நாம் கொள்வதில்லையே..

      இவர் பெரியவர்.. அவர் பெரியவர்...
      இப்படிப் பெரியவர்களுக்கெல்லாம் பெரியவர் - இறைவன் தானே!..

      நீக்கு
  14. பிள்ளையார் மீது எனக்குத் தனி பாசம் உண்டு. மிரள வைப்பதிலும், அருளுவதிலும் அவர் பாணி தனி.  பிள்ளையாருக்கு உகந்த சேவாக் கிழமையில் அவர் மகிமையை போற்றி  அருமையான ஒரு கதை. சாமி தாத்தாவின் சேவை தொடரட்டும். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாமி தாத்தாவின் சேவை தன்னலமற்றது..
      என்றென்றும் தொடரும்...

      அன்பின் நன்றியுடன்...

      நீக்கு
  15. செவ்வாய்க்கிழமை சேவாக்கிழமையாகிவிட்டது. மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேவா என்றால் வயதானவர் என்று அர்த்தம் (அரபு மொழியில்) சாமி தாத்தா சேவாதான்.

      நீக்கு
  16. உங்கள் குடும்பத்தில் நேர்ந்த துயர சம்பவத்திற்கு வருந்துகிறேன். உங்கள் சகோதரிக்கு மனதிட்பத்தை அளிக்க விநாயகரை வேண்டுகிறேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் எல்லாரும் வேறு பெயர் சொல்லி அழைக்க

      என் தந்தை மட்டும் தன் மகளை இப்படி அழைப்பார்..

      பானு... பானும்மா!...

      என் தங்கையின் பெயர் சித்ரா...

      தங்கள் அன்பினுக்கு நன்றி...

      நீக்கு
  17. சென்ற ஆண்டு எ.பி.யிலும் விருது, அலுவலகத்திலும் விருதா? சபாஷ்! பாராட்டுகள். தொழில், பொழுது போக்கு இரண்டையும் சிறப்பாக செய்திருக்கிறீர்கள். வாழ்க!

    பதிலளிநீக்கு
  18. இன்று இல்லையேல் என்றாவது ஒரு நாள் சாமித் தாத்தா மேலே போய்த்த்தானே ஆகணும். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..
      அதில் மறுப்பு ஒன்றுமில்லை...

      தங்களது அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  19. பொய்யும் புரட்டுமா யாரும் எந்தக் கதையையும்
    கிளப்பி விடாததால

    ரசித்த, தற்காலத்தில் நடக்கும் கதை.... எல்லோருக்கும் பரிகாரம்னு சொல்ற கோவிலுக்குப் போனோமா, கடவுளைப் பார்த்துட்டு வந்தோமா என்ற வேகம்தான் வாழ்க்கையை ஓட்டுகிறது. எல்லா இடங்களிலும் வியாபாரம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களது கருத்துரைக்கு அன்பின் நன்றி..

      வெகு விரைவில்
      ஒரு மணி நேரத்தில் ஒன்பது கோயில்களின் தரிசனம் என்று கூட நடைமுறைப் படுத்துவார்கள்...

      நீக்கு
  20. தலைப்பு என்னை மயங்க வைக்குது:)... படிச்சிட்டு கொமெண்ட் போடுறேன்ன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றுதான் கதை படிக்க நேரம் கிடைத்தது, தாத்தாவுக்கு நீண்ட ஆயுள்போலும்.. அழகிய கதை.

      கதையின் ஆரம்பம் படிக்கும்போது படையப்பாவில் அப்பா- ரஜனி அங்கிள்தான் கண்முன்னே வந்தார்.

      நீக்கு
    2. படையப்பா ரஜினி அங்கிளா!...

      அவரையும் விட்டு வைக்கலையா?..

      நீக்கு
  21. கிராமக் கோயில் காட்சிகள் செம யதார்த்தம்.

    'ஆலமரத்துக்கு தெற்காலயும் வடக்காலயும் அரை மைலுக்கு அங்கிருந்தே சாலைய கிழக்கால ஒதுக்கி' --- ஏதோ கண்ணுக்கு முன்னாலே நடந்ததைச் சொல்றது போலவே ஒரு வர்ணிப்பு..
    துரை சார் இந்த மாதிரி எல்லா இடங்களிலும் ஜொலிக்கிறார்.

    கதையின் முடிவு காதாசிரியர் விருப்பப்படி என்று தெரிகிறது.
    பாஸிட்டிவ் செய்திகள் புகழ் ஸ்ரீராமிற்கும் நிச்சயம் பிடித்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜீவி ஐயா அவர்களது கருத்துரைக்கு நன்றி...

      சாமி தாத்தாவின் சேவை இன்னும் சில காலத்துக்கு அந்தப் பகுதி மக்களுக்குத் தேவைப்படுவதாகக் கொள்ளலாம்....

      நீக்கு
  22. ஆஹா... இன்றைக்கு துரை செல்வராஜூ ஜி அவர்களின் கைவண்ணத்தில் ஒரு கதை. மிகச் சிறப்பாக இருந்தது கதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...

      நீக்கு
  23. துரைஆரின் கதைகளில் இருக்கும் நேட்டிவிடி எனக்குபிடிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா
      தங்கள் அன்பின் கருத்துரைக்கு நன்றி...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!