செவ்வாய், 18 ஜூலை, 2023

ரவாலாடு :: K G கௌதமன் ரெஸிபி(!)

 

அது ஒரு பிரபல மென்பொருள் நிறுவனம். 

இடம் சென்னை. 

அடுக்கு மாடி அலுவலகம். கட்டிடத்தின் பல தளங்களில் பல்வேறு பிரிவுகளுடன், ஆயிரக்கணக்கானவர்கள் வேலை செய்து வரும் ஒரு நிறுவனம். 

இந்தக் கதையில் இடம் பெறுவது முக்கியமாக இரண்டு தளங்களை சேர்ந்த 4 யுவதிகள் ஒரு ஜொள்ளர் மற்றும் ஒரு யுவன். அவ்வளவுதான். 

அந்த அலுவலகத்தில் வம்படிக்கும் எல்லா ஆண்களுக்கும் தெரிந்திருந்த, அடிக்கடி சொல்லப்படும்  ஒரு வார்த்தை, 'ரவாலாடு' 

" இன்றைக்கு ரவாலாடு வந்தாச்சா? " 

" வா ஏன் சோகமா இருக்கு? " 

" ஆயிரம் சொல்லு - ஆனால் லா தான் எல்லாவற்றிலும் கியூட். ஸ்மார்ட் டிரஸ், குட் ஹியூமர், ஸ்டிரைகிங் ப்யூடி .. " 

இப்போ அநேகமாக யூகித்திருப்பீர்கள் ரவாலாடு என்பது ஒரு சங்கேத பாஷை என்று. 

ஆம்! 

ர : ரம்யா. விரைவில் திருமணம் ஆகப்போகின்ற பெண். அமெரிக்க மாப்பிள்ளை கூடிய விரைவில் வந்து கல்யாணம் செய்து கொள்வதாக நிச்சயம் செய்யப்பட்டதாக *டும்மி நியூஸ். 

வா : வாஸந்தி. கொஞ்சம் முசுடு. எந்த நேரத்தில் சிரிப்பார், எந்த நேரத்தில் கடிப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது! அவருக்கே தெரிந்திருக்காது! 

லா : லாவண்யா. இவரின் பெற்றோருக்கு என்ன தீர்க்கதரிசனம்! பெயருக்கேற்ற பேரழகி. Lavanya means “grace”, “beauty”, “loveliness” and “prettiness” (from Sanskrit “lāvaṇya/लावण्य”).

* டு : டும்மி ! - அம்மா அப்பா வைத்த பெயர் மோகனா. ஆனால் எதனாலோ வீட்டிலும், நண்பிகள் நடுவிலும் அவர் 'டும்மி' ஆனார்! அறுபது கிலோ சரீரம்; அலுவலகத்தில் ஆண்கள், பெண்கள் என எல்லோருடனும் சகஜமாக பேசுவார். பழகுவார். அலுவலகத்தில் யாரைப் பற்றி விவரம் கேட்டாலும் இவர் சொல்லுவார். சில விஷயங்கள் கேட்காமலேயே சொல்லுவார். ' வாசந்தி மணக்கப்போகும் அமெரிக்கா ரிட்டர்ன் பையன்', 'அட்மின்  செக்ஷன் அபிராமி' ஸ்ரீமந்தம், 'மூன்றாவது ஃபுளோர் சந்திரன், லாவண்யாவிடம் வம்பு செய்து வகையாக வசவு வாங்கியது' எல்லாமே DNS- Dummi News Service !! 

யுவன் : பெயர் கண்ணன். 25 வயது. இவருக்கு லாவண்யா மீது ஒரு கண் என்னும் செய்தி இவருக்கு மட்டும்தான் தெரியும். டும்மி உட்பட வேறு யாருக்கும் தெரியாது. 

ஜொள்ளர் யார்? அவர் பெயர்  : J. வெங்கடராமன் - சுருக்கமாக JV. வயது 50. ஏனோ இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை / அல்லது ஆகவில்லை. கல்லூரி நாட்களில் காதலித்து அது தோல்வியில் முடிந்தது என்று டும்மி நியூஸ். யாருக்கும் உண்மை தெரியாது. JVதான் கண்ணன், லாவண்யா, டும்மி மூவரும் பணி புரியும் செக்ஷன் மேலாளர். லாவண்யாவிடம்  அடிக்கடி ஏதாவது  (- செக்ஷனில் உள்ள மற்றவர்கள் ஜாடை மாடையாக JV (ஜொள்ளு விட) ஆரம்பிச்சுட்டார்யா என்று சொல்லும் அளவுக்கு) பேசுவார். அவருக்கு கண்ணன் மீது சற்றுப் பொறாமை உண்டு. லாவண்யா கண்ணனை லவ் செய்கிறாளோ என்றும் அவருக்கு ஒரு சந்தேகம். அதனால் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கண்ணனிடம், லாவண்யா தன்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்கிறாள் என்றும், தான் சொல்லும் வார்த்தைகளுக்கு பெரும் மதிப்பு கொடுக்கிறாள் என்றும் சொல்லிக்கொண்டு இருப்பார். அதில் அவருக்கு ஒரு திருப்தி. 

சரி. இப்போ கதைக்குச் செல்வோம். 

= = = = = = = =

நிறுவனத்தின் vice president வைத்யநாதனின் பெண்ணுக்குத் திருமணம். வெகு விமரிசையாக நடத்த திட்டமிட்டார் வைத்தீஸ் ( அப்படித்தான் நிறுவனத்தில் எல்லோரும் அவரை அழைப்பார்கள்!). அலுவலகத்தில் உள்ள எல்லோருக்கும் கல்யாண இன்விடேஷன் கொடுத்து எல்லோரும் வரவேண்டும் என்று சொல்லியிருந்தார். 

கல்யாண ரிசப்ஷன், டின்னர் இரண்டுக்கும் அலுவலக ஆட்கள் எல்லோரும் வந்திருந்தனர். மணமக்களை மேடையில் சென்று வாழ்த்தி, பரிசுப் பொருட்களைக் கொடுத்து, கை குலுக்கி, போட்டோ + வீடியோவுக்கு நின்று போஸ் கொடுத்து வந்தனர். 

அங்கேயும் ரவாலாடு நால்வரும் இணைந்தே எல்லாவற்றிலும் பங்கேற்றனர். ஆண்கள் பெண்கள் எல்லோருமே இந்த நால்வரை மட்டுமே focus செய்துகொண்டு இருந்தனர். 

எல்லோரும் டின்னர் சாப்பிட புறப்பட்டனர். ரவாலாடு நால்வரும் புறப்பட்டவுடன் அலுவலக நண்பர்கள் எல்லோருமே ஒரே அணியாக அவர்கள் பின்னே கிளம்பினார்கள். எல்லோருக்குமே ரவாலாடு அருகே இடம் பிடிக்க ஒரு ஆர்வம். 

டின்னர் ஹாலில் மொத்தம் எட்டு வரிசைகள். ஒவ்வொரு வரிசையிலும் ஐம்பது பேர் அமர்ந்து சாப்பிட வசதி. ரவாலாடு உள்ளே நுழைந்ததுமே பெண்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு தோழி, " யேய் டும்மி - நாலு பேரும் இங்கே வாங்க - உங்களுக்காக நாலு சீட் இங்கே ரிசர்வ் செய்து வைத்துள்ளேன் என்று டும்மியை அழைக்க - ரவாலாடு அங்கே சென்று காலியாக இருந்த நான்கு இடங்களில் உட்கார்ந்துகொண்டனர். 

நால்வரையும் பின் தொடர்ந்து வந்த ஆண்களில் கண்ணனுக்கு மட்டுமே ரவாலாடுக்கு பின்னால் உட்கார இடம் கிடைத்தது - ஆனால் அவர்களின் பின் வரிசை என்பதால், அந்த வரிசைக்கு நேர்  எதிர் திசை பார்த்த வரிசை இவனுடைய வரிசை. அவர்கள் பேசுவது எல்லாம் இவனுக்குக் கேட்கும் வகையில், குறிப்பாக லாவண்யாவிற்குப் பின் பக்கமாக உட்கார்ந்தான் கண்ணன். 

JV  - ஆசையாக ரவாலாடு அருகே அமர்ந்து பேசலாம் என்று வந்தார். ஆனால் அவர்  கை கழுவிக்கொண்டு சாப்பிட வருவதற்குள் மூன்று நான்கு வரிசைகள் நிரம்பி நான்காவது வரிசையின் மறு கோடியில்தான் அவருக்கு இடம் கிடைத்தது. 

அந்த நான்காவது வரிசை மறுகோடியிலிருந்து அவர் கண்ணனுக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தார். " கண்ணன் - நீ ரொம்ப லக்கி. ரவாலாடுக்கு அருகிலேயே இடம் பிடித்துவிட்டாய். டின்னர் சாப்பிட்டு முடிக்கும் சமயத்தில் நான் லாவண்யாவுக்கு ஃபோன் செய்து பேசுவேன். அப்போ அவள் எப்படி என்னிடம் குழைந்து குழைந்து பேசுகிறாள் என்று பார்" என்று சொன்னார். 

" சரி சார்" என்றான் கண்ணன். மனதுக்குள் 'ஜொள்ளு கிழவன்' என்று சொல்லிக்கொண்டான். 

* * * * 

ரவாலாடு நால்வருக்குமிடையில் நடந்த உரையாடல்களை கவனித்தவாறு கண்ணன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

டின்னர் முடிகின்ற  சமயம். பைன்ஆப்பிள் ரசம் சாதம் முடிந்து, இலையில் போடப்பட்ட ஸ்வீட் ரவாலாடு! 

அந்த நேரத்தில், லாவண்யாவின் கைப்பேசி ஒலித்தது. 

கைப்பேசி திரையில் ' K K calling ' என்று காணப்பட்டதை லாவண்யா பக்கத்தில் அமர்ந்திருந்த டும்மி முதலில் பார்த்தாள். 

" யேய் லாவ்ஸ் - யாருடி கே கே ? "

" கே கே என்றால் கள்ளக் காதலன்" என்று சொன்னாள் வாஸந்தி. 

" இல்லை, இல்லை. கே கே என்றால் கவர்ச்சிக் கண்ணன் " என்றாள் ரம்யா. 

" சும்மா இரு டும்மி - அப்புறம் சொல்றேன் " என்று சொல்லியவாறு போனை எடுத்தாள் லாவண்யா. 

" ஹலோ சொல்லுங்க " 

( "லாவண்யா - இன்றைய டின்னர் பார்ட்டி ஹைலைட்டே ரவாலாடுதான் - சூப்பர் ஸ்வீட்" )

" அப்படியா! - நான் இன்னும் டேஸ்ட் பண்ணலை " 

( " மிஸ் பண்ணிடாதே. வெரி நைஸ் அண்ட் சோ ஸ்வீட் - ஜஸ்ட் லைக் யு" )

" ஓ ! இஸ் இட் ? தாங்க் யூ " 

( " டின்னர் முடிஞ்ச உடனே - உன்னுடைய வீட்டுக்கு என்னுடைய காரிலேயே கொண்டுபோய் விடுகிறேன். சரியா ?") 

" உங்களுக்கு ஏன் வீண் சிரமம் ? நாங்க நாலு பேரும் ஒரு டாக்ஸி புக் செய்துகொண்டு ஒன்றாக வந்திருக்கோம். அதிலேயே திரும்பிச் சென்றுவிடுவோம். " 

( " ஏம்மா - நீ எப்போ கல்யாண சாப்பாடு போடப்போறே ? ") 

" எதுவும்  உங்களுக்குத் தெரியாம போடமாட்டேன். நிச்சயம் நீங்க எல்லோரும் வரவேண்டும்." 

தொடர்ந்து கொஞ்ச நேரம் மறுமுனையின் அசட்டு வார்த்தைகளுக்கும் கேள்விகளுக்கும் லாவண்யா, பணிவாக, அடிக்கடி மெல்லியதாகச் சிரித்து பதில்கள் கூறினாள். 

அவள் பேசி முடிக்கும் முன்பு  ரம்யாவும் வாஸந்தியும் எழுந்து கை கழுவ சென்றிருந்தார்கள். 

டும்மி மட்டும் லாவண்யாவை விடுவதாக இல்லை. 

" கே கே யாருடி? " 

லா : " நம்ம ஆபீஸ் - நம்ம செக்ஷன் ஆள்தாண்டி " 

" நம்ம செக்ஷன்ல கே கே என்று யாருமே இல்லையே! " 

" நம்ம மானேஜர்தான்பா " 

" அவரு பேரு JV தானே - நீ ஏன் கே கே என்று பேரு போட்டு வெச்சிருக்கே ? "

லாவண்யா இதுக்கு என்ன பதில் சொல்லப்போகிறாள் என்று கண்ணன் தன் காதுகளைத் தீட்டிக்கொண்டு கவனமாகக் கேட்டான். 

" கே கே என்றால் 'கிழக் கோட்டான்' " 

டும்மி அடக்கமுடியாமல் பெரிதாகச் சிரித்தாள். 

கண்ணனும் சத்தம் இல்லாமல்  சிரித்தான். 

லாவண்யா கை கழுவச் சென்றபோது, அவளுடைய போனுக்கு கால் செய்து, 'தனக்கு  எந்த பட்டப் பெயர் வைத்து இருக்கிறாள்?' என்று டும்மியிடம்  கேட்டுத் தெரிந்துகொள்ளலாமா? என்று ஒரு நொடி யோசித்து, வேண்டாம் என்று முடிவு செய்தான் கண்ணன். 

= = = = = =


67 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  பதிவை (பதிவின் தலைப்பை) கண் விழித்தவுடன் கண்டதும் ஒரே குழப்பம். இன்று திங்களா, இல்லை அதற்கடுத்த நாளா என தெளிவாகவேயில்லை . யோசித்து மறுபடியும் கண் மூடி திறந்ததில் மனசு இன்று "செவ்வாயென" , செவ்வாய் திறந்து மலர்ந்தருளியது.

  கதைப்படித்து விட்டு வருகிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ, வாங்கோ - சும்மா ஒரு வித்தியாசமான தலைப்பு!!

   நீக்கு
 3. ஐயா கதை என்னன்னு ஒண்ணுமே புரியலை. தொடர் கதையா? அப்படியானால் ஏன் தொடரும் போடவில்லை?
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறுகதைதான். புரியவில்லை என்றால் அது என்னுடைய தோல்வி.

   நீக்கு
  2. ஜெ கே அண்ணா இது ஒரு ஜாலி கதை!!! கௌ அண்ணா பாணி!! அதாவது இளம் தலைமுறையினரின் ஒரு ஜாலி moments ! ஒரு ஜாலி கதை....கண்ணனுக்கு லாவண்யாவின் மீது கண்ணு. விருப்பம். அதிலிருந்து அவன் ஏமாற விரும்பவில்லை!!! ஒரு சின்ன பயம். தன் கற்பனை உலகம் சிதைந்துவிடுமோன்னு

   கீதா

   நீக்கு
  3. ஒருவரை ஒருவர் எப்படிப் புரிந்துகொள்கின்றனர், புரளி பேசுகின்றனர், எப்படி கிசுகிசுக்கின்றனர் என்பது தான் கதை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் அலுவலகத்தில் உண்டு என்பது தானே. இதை தொடர்கதையாக எழுதலாம்.
   Jayakumar​​

   நீக்கு
  4. ஆமாம் ஜெ கே அண்ணா..கண்டிப்பா இதைத் தொடர்கதையாக ஜாலியா எழுதலாம்!!

   கீதா

   நீக்கு
 4. ஹாஹாஹாஹாஹா...ஆ இன்று திங்களா? அப்படின்னு காலைல ஒரே குழப்பம் போங்க! ஏற்கனவே எனக்கு Day and Date குழப்பம். எபி பதிவு பார்த்துதான் ஓ இன்னிக்கு இந்தக் கிழமைன்னு கணக்குப் பண்ணிக்குவேன் ......இதுல இன்னிக்குத் தலைப்பு...குழப்பமோ குழப்பி விட்டுருச்சு!!!!!!!!!!!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி

   ஹா ஹா ஹா. அதையேன் கேட்கிறீர்கள்.. நானே இன்று காலையில் சீக்கிரம் விழித்து விட்டதால், விட்டுப் போன பதிவுகளுக்கு சென்று பதில் அளித்துக் கொண்டிருந்தேன். (உங்களுடனும் கோவில் சுற்றுலாவுக்கு வந்து கொண்டிருந்தேன்) சற்று திசை மாறி எ. பிக்கு வந்ததும் தலைப்பைப் பார்த்து ஒரே குழப்பந்தான். (இன்னமும் திங்களே முடியவில்லையா? நாம்தான் அதற்குள் முழித்து விட்டோமா என்ற நினைப்பில் மறுபடி சிறிது கண் மூடி திறந்தேன். :))) ) ஆனாலும் வித்தியாசமான இந்தத் தலைப்பை ரசித்தேன். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  2. கருத்துரைகளுக்கு நன்றி.

   நீக்கு
  3. கமலாக்கா நலமா? காணவில்லையேன்னு நினைத்தேன்

   கீதா

   நீக்கு
  4. வணக்கம் சகோதரி.

   நலந்தான் சகோதரி. உங்களுடன் காலையில் உரையாடி விட்டுதான் வருகிறேன். உடனே தாங்களும் பதில் தந்து விசாரித்தமைக்கு நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  5. கமலாக்கா என்னை கீதான்னே கூப்பிடுங்க!!!! (ஆனா எங்கண்ணன் கூப்பிடறாப்ல கீதா (க்கான்னு) மட்டும் கூப்பிட்டுடாதீங்க!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  6. ஹா ஹா ஹா. சரிதான்.. அவரை இப்போ வம்புக்கு இழுத்தாலும் , திருமலையிலிருந்து இறங்கி வர நாழியாகும். :))

   நீக்கு
  7. இப்போதைக்கு வரமாட்டார், கமலாக்கா...அதான் அந்த தைரியம்தான்!!!!!!ஹாஹாஹா

   கீதா

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  கதை நன்றாக உள்ளது. (தலைப்பும்.) கதை மாந்தர்களின் பெயர்களை, குறுக்கி ஒரு இனிப்பான ரவாலாடாக கொண்டு வந்திருப்பது சிறப்பு. ஒவ்வொருரின் மனோபாவங்களை சுருக்கி தந்திருப்பதும் கவர்கிறது. கதையைப் படித்து ரசித்தேன்.

  இறுதிப் பகுதி சுவாரஸ்யமாக இருந்தது. கண்ணன் தன் பெயர் விளக்கம் கண்டறிய இறுதியில் லாவண்யாவிற்கு கால் செய்திருந்தால், ஒரு வேளை அவன் கூட்டணி நண்பி ரம்யா சொல்வது போல் வந்திருந்தால், கண்ணனுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இருப்பினும், அதைதான் யோசித்து, அந்த கே. கே. பட்டப் பெயருடன் தானும் சேர வேண்டாமென முடிவு செய்து விட்டான் போலும்...!

  இன்னமும் கதையை தொடர்ந்து ஒரு சுப முடிவாக்கி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  தாங்கள் வரைந்த படங்களும் நன்றாக உள்ளன. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. ..வேண்டாம் என்று முடிவு செய்தான் கண்ணன். //

  தன் comfort zone -ஐ விட்டு வெளியே வந்து விழ அவன் தயாராயில்லை. கற்பனை சாம்ராஜ்யமும் கழண்டுகொண்டால் எப்படி ...!

  பதிலளிநீக்கு
 7. கௌ அண்ணா செம Young உரையாடல்கள்! இவ்வளவு நல்லா எழுதிட்டு கடைசில இப்படி முடிச்சிட்டீங்களே! அடுத்த பகுதி வந்தா நல்லாருக்கும்...அதுல கண்ணன் அசடு வழியறாப்ல! அதான் அவனுக்கு என்ன பட்டப்பெயர் னு....தெரிஞ்சு...தலைப்புக்கு ஏத்தாப்ல ஒரு முடிவும் கொண்டு வந்துடலாம்னு தோன்றுகிறது!!! ரொம்ப ஜாலியா வாசிச்சு வந்தேன் கடைசில டின்னர் இப்படி ஆகிடுச்சே!!!! ப்ளீஸ் கௌ அண்ணா give a try!!! கண்ணன் ஏமாறுவான்னு நினைச்சேன்...!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா. நீங்கள் இதைத் தொடர்ந்து ஒரு கதையாக எழுதி அனுப்பினால், நாங்கள் வெளியிடுகிறோம்!

   நீக்கு
  2. காமெடியா இருக்கணுமே கௌ அண்ணா...இப்பல்லாம் கதை எழுதவே மனம் உடன்பட மாட்டேங்குது. ஸ்ரீராமும் எங்கிட்ட கேட்டுக் கேட்டு அலுத்தே போயிருப்பார்!!!!!

   முயற்சி செய்கிறேன்னு மட்டும்தான் சொல்ல முடிகிறது அடுத்த படி எடுத்து வைக்க முடியலை!!

   கீதா

   நீக்கு
 8. இந்த முடிவும் நல்லாதான் இருக்கு கண்ணனுக்கு ஏமாற்றம் விரும்பவில்லை...ஆனாலும் அசடு வழிவது போலவாவது!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 9. நிறைய இடங்கள் lighter moments!!! ஒரு அலுவலகத்தில் நடப்பதை ஜாலியாகச் சொன்னதை ரசித்தேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  அந்த விருந்து சாப்பாடு படத்தில் இலையில் கதைக்குப் பொருத்தமாக ஒரு ரவாலாடையும் இணைத்திருக்கலாம். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டாவது படத்தில் இருக்கிறதே!

   நீக்கு
  2. ஹாஹாஹாஹா கௌ அண்ணா, முதல் படத்துல உருண்டையா இருக்கற மஞ்ச வஸ்துவை ரவாலாடுன்னு சொல்லித் தப்பிச்சிருக்கலாமே!!! கரெக்ட்டா KK ஃபோன் செஞ்சு ர்வாலாடு டேஸ்ட்னு வேற சொல்கிறார்....அதை கமலாக்கா போண்டோன்னு நினைச்சிட்டாங்க போல!!!!!

   என்னாது ரெண்டாவது படமா!!! லட்டா? அது ரசகுல்லா போலல்லா இருக்கு!! மஞ்ச பெயின்ட் அடிச்சுவிட்டுருங்க!!! ஹாஹாஹாஹா

   கீதா

   நீக்கு
  3. ஓ... ஆமாம்.. இப்போதுதான் பார்த்தேன். அதில் கைப்பேசியில் அந்த"கிழக் கோட்டானை" கவனித்ததில், இலையில் வந்து லாடு விழுந்ததை கவனிக்கவில்லை. ஹா ஹா ஹா.

   நீக்கு
 11. உங்க படங்களும் நல்லாருக்கு கௌ அண்ணா...அந்தப் பொண்ணு லாவண்யாதான் யாருன்னு படத்துல கண்டுபிடிக்க முடியலை!!!! கீர்த்தி, பாவனா இல்லை....புதுசு எனக்கு நோ ஐடியா! ஹிஹிஹிஹி!

  கீதா

  பதிலளிநீக்கு
 12. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  பார்க்க பார்க்க
  பாவம் பொடிபட..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 13. இன்றைய தலைமுறைகளின் அலுவலக அனுபவங்கள்.

  பதிலளிநீக்கு
 14. நான் ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்த நாட்களில் இப்படித்தான் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தோம் அது இப்பொழுது மலரும் நினைவாக வந்தது

  பதிலளிநீக்கு
 15. மறுபடியும் திங்கக் கிழமையா?.. எபிக்கு ஏதோ ஆயிற்று .. என்று திகைத்தேன்..
  அட.. கதையெனத் தெரிந்து உற்சாகத்தில் திளைத்தேன்..

  இப்படியொரு கதை..

  எபி இளையோருக்கானது என்பதை நிலை நாட்டி விட்டார் கௌதம்..

  பதிலளிநீக்கு
 16. ரவாலாடு..

  ஆகா..
  இப்படியும் அர்த்தம் ஆவது தெரியாமல் போயிற்று...

  பதிலளிநீக்கு
 17. டும்மி டம்மி அல்ல..

  நல்லதொரு கும்மி!..

  பதிலளிநீக்கு
 18. சித்திரச் செல்வருக்குள்

  இப்படியொரு
  சிரிப்பழகன்!!..

  பதிலளிநீக்கு
 19. கௌ அண்ணா என் இரு கருத்துகள் ....காணவில்லையே எபியில்....அதை இழுத்து வாருங்கள் பொதுவெளியில்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 20. Sorry.. பிறகுதான் படிக்கணும். திருமலையிலிருந்து

  பதிலளிநீக்கு
 21. கதை செம காமெடி k . K சிரித்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
 22. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 23. கதை நல்ல நகைச்சுவையாக இருக்கிறது.

  கே கே என்றால் விளக்கம் நல்ல சிரிப்பு.
  இனி கே. கே என்று பெயர் சுருக்கத்தை கேட்டால் இந்த கதை நினைவுக்கு வரும்.

  பதிலளிநீக்கு
 24. ரவாலாடு முன்னால் எல்லாம் அடிக்கடி பண்ணுவேன். இப்போத் தித்திப்புப் பக்ஷணங்களே எப்போவாவது என்பதால் ரவாலாடு செய்தும்/பார்த்தும்/சாப்பிட்டும் சில/பல வருடங்கள் ஆகின்றன. இங்கேயாவது பார்க்கக் கிடைச்சதே! ரவாலாடு செய்முறையைத் தான் கௌதமன் தன்னோட பாணியில் சொல்லப் போறார்னு நினைச்சால் நான்கு நபர்களின் பெயர்களின் முதல் எழுத்து! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஆனால் இதுவும் நன்றாகவே இருக்கு. முடிவு தான் சொதப்பால். நன்றாக ஆரம்பித்துவிட்டு எப்படி முடிக்கணும்னு தெரியாமல் ஆ"சிரி"யர் முடிச்சுட்டார் போல! படம் நல்லா இருக்கு ரவாலாடு தான் சின்ன சைஸ்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!