ஞாயிறு, 5 மே, 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 18 : நெல்லைத்தமிழன்

 

கங்க்ரோலி துவாரகை

கங்ரோலி ஊரை அடைந்ததும், கோவிலுக்குச் செல்லும் நுழைவாயிலைக் காண்கிறோம். அதைத் தாண்டியதும், சட் என்று 150-200 வருடங்களுக்குப் பழமையான இட த்திற்கு வந்துவிட்டோமோ என்று மனம் எண்ணும்படியாக, வீடுகள் பழமையான பாணியில் அமைக்கப்பட்டிருந்தனஉப்பரிகையுடன் கூடிய வீடுகளைப் போன்றவைகளைக் கண்டவுடன், அரண்மனை அருகில் இருக்கும் வீடுகள் என்று எண்ண வைத்தது


துவாரகாதீஷுக்கான இந்தக் கோவில், ராஜஸமண்ட் என்ற மிகப் பெரும் ஏரியின் கரையில் அமைக்கப்பட்டுள்ளது. முன்னம் இருந்த கோவில் நீரில் மூழ்கிவிட்டபடியால், ஏரியின் கரையில் மிகப்பெரும் மேடான பகுதியில் கோவில் அமைக்கப்பட்ட தாம். இந்தக் கோவிலின் மூலவரான துவாரகாதீஷ், மதுராவிலிருந்து கொண்டுவரப்பட்டவராம். வல்லபாச்சார்யா என்ற ஆச்சார்யரின் பரம்பரையில் வந்தவர்கள் கோவிலை நிர்வகிக்கின்றனர்.

முகலாயர்கள் காலத்தில் இந்துக் கோவில்களுக்குப் பெரும் ஆபத்து வந்தன. அப்போது இந்த மதுரா கோவிலில் இருந்த துவாரகாதீஷை கோஸ்வாமி கிரிதர் என்ற ஸ்வாமி, தன்னுடன் அஹமதாபாத்துக்கு எடுத்துச் செல்கிறார். அங்கும் பிரச்சனைகள் வரவே, அவரை மேவாருக்கு வரவழைத்து மஹாராணா ராஜ் சிங், 17ம் நூற்றாண்டில், அசோதயா என்ற கிராமத்தைக் கொடுத்து அதில் கோவில் கட்டிக்கொள்ளச் சொன்னார். பிறகு ராஜஸமண்ட் ஏரி உருவாக்கியபோது அந்தக் கோவில் முழுகும் நிலை வந்த தால், மிகவும் மேடான பகுதியில் தற்போது உள்ள கோவில் கட்டப்பட்ட து. கோட்டையில் உள்ள அரண்மனை போன்று கோவில் இருக்கிறது.

இந்தக் கோவிலின் பூசாரிகள் மற்றும் பணியாளர்கள் கோஸைன் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களின் மூதாதையர்கள் பிரிஜ்வாஸிகள் என்று அழைக்கப்படும், விருந்தாவனத்தைச் சேர்ந்தவர்கள்.


கங்க்ரோலி துவாரகா கோவிலின் வெளியே கோட்டை போன்ற நுழைவு வாயில்

கங்க்ரோலி துவாரகை கோவில் அமைந்துள்ள கட்டிடம். இது அரண்மனை/பங்களா போன்ற அமைப்பில் இருந்தது. அதில் ஒரு பகுதியில் கோவில் அமைந்துள்ளது (கோபுரம்லாம் பார்க்கவில்லை)



கோவிலுக்குச் செல்வதற்கான படிக்கட்டுகள். கோவில் நுழைவாயிலைத் தாண்டியதும், இது புறம் இன்னும் பல படிக்கட்டுகள் மாடிப்பகுதிக்குச் செல்வது போல இருக்கும். பிறகு சன்னிதி வரும். நாங்கள் சென்றிருந்தபோது கோவில் இன்னும் திறந்திருக்கவில்லை. நாங்கள் பக்கத்தில் இருந்த ஏரிக்குச் சென்று பார்த்து புகைப்படங்கள் எடுத்துவிட்டு, கோவிலுக்கு வந்து காத்திருந்தோம்.

அழகிய திரை. தரையில் அழகிய பூக்கோலம்

நான் இரண்டாம் முறையாக கங்க்ரோலி துவாரகை சென்றிருந்தபோது, அன்று என்ன விசேஷம் என்று தெரியவில்லை. ஒருவேளை அரச வம்சத்தினர் யாரேனும் வந்திருக்கலாம். அன்று Band வாத்தியங்களோடு வரவேற்பு கொடுத்தனர். நாங்கள் படியேறி துவாரகாதீஷ் தரிசனத்திற்காகக் காத்திருந்தோம். கதவு மூடியிருந்தாலும் ஓட்டை வழியாக நான் பார்க்க முடிந்தது. உள்ளே துவாரகாதீஷுக்கு வெள்ளிச் செங்கோல்கள், வெள்ளிப் பாத்திரங்கள் என்று விமர்சையாக பூஜை நடந்தது. பிறகு வெள்ளிச் சாமான்களையெல்லாம் எடுத்துச் சென்ற பிறகு கதவு திறக்கப்பட்ட து. அதைப் பார்த்திலிருந்து, அந்தக் கோவிலுக்கு அரசர்களின் காணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கும், அவற்றின் பாதுகாப்பிற்காக கதவைப் பொதுமக்களுக்குத் திறக்காமல், விலையுயர்ந்த பாத்திரங்கள், செங்கோல்கள் புடைசூழ துவாரகாதீஷுக்கு பூசைகள் நடத்தினார்கள் என்று புரிந்துகொண்டேன்

அவர்கள் பாணி ஓவியங்கள்

கோட்டை போன்ற அழகிய வாயில்

கோவில் நுழைவாயில் சுவற்றில் இருக்கும் ஓவியங்கள், தனித்துவமானவை

சுவரில் இருக்கும் வித்தியாசமான பாணி ஓவியங்கள்

கங்க்ரோலி துவாரகாதீஷ்

கோவில் மதிளில் பார்த்த ஓவியம். இது ரஜபுதன அரசர்களின் வரலாற்றின் ஒரு சம்பவத்தைச் சொல்கிறது

16ம் நூற்றாண்டில் (1530), ரஜபுதன அரசர் ராணா சங்காவின் மனைவி கர்ணாவதியிடம், (நர்ஸ்), குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக வந்த பன்னாதயா என்ற தாதியின் விசுவாசத்தைச் சொல்கிறது. ராணா சங்காவிற்குப் பிறகு, மூத்த மகன் சில வருடங்கள் அரசாண்டு இறந்த பிறகு இரண்டாவது மகன் விக்ரமாதித்யன் அரசனாக ஆகிறான். மிகுந்த மூர்க்க குணமும் முரட்டு சுபாவ மும் உடையவனாக அவன் இருக்கிறான். அவனது சித்தூர் கோட்டையை, பஹதுர்ஷா தாக்கி வெற்றி பெறுகிறான். சித்தூர் அழிந்துபட்ட பிறகு, கோட்டையை விட்டு பஹதுர்ஷா படை கிளம்பிய பின், மீண்டும் ரஜபுதன படைவீர ர்கள் கோட்டையைக் கைப்பற்றுகின்றனர்

தோல்விக்குப் பிறகு விக்ரமாதித்தனின் புகழ் மங்கியது. ஏற்கனவே அவனது முரட்டு சுபாவத்தினாலும், மற்றவர்களைக் கடுஞ்சொல் கூறி அவமதிக்கும் குணத்தாலும் அரசவையில் சிலர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தச் சமயத்தில், அரசன் பிரிதிவிராஜின் ஆசை நாயகிக்குப் பிறந்த பன்வீர் (ரானா சங்காவின் மருமகன், ஆனால் ரஜபுதன ரத்தம் உடையவனல்லன்), விக்ரமாதித்யாவைக் கொன்று தானே அரசனாகிறான். அரசுக் கட்டிலுக்குப் போட்டியாக இருக்கும் ரானா சங்காவின் வாரிசுகளையெல்லாம் தீர்த்துக்கட்டும் நோக்கில், கர்ணாவதியின் குழந்தையான உதய் சிங்கைக் கொல்ல வரும்போது, பன்னாதயாவிற்கு விஷயம் தெரிந்து விசுவாசிகளுடன் உதய் சிங்கை சித்தூரிலிருந்து அனுப்பிவிடுகிறாள். பன்வீர், கர்ணாபாயின் இட த்திற்கு வந்து உதய் சிங் எங்கே என்று கேட்க, தன்னுடைய மகனான சந்தனையே இவன் உதய் சிங்என்று சொல்ல, பன்வீருடன் வந்தவர்கள் சந்தனைக் கொன்றுவிடுகிறார்கள்

பன்வீர் பிறகு அரசவைக்குச் சென்று ராணா சிங்கின் வாரிசுகள் யாரும் இல்லாத தால், தானே அரசன் என்று முடிசூட்டிக்கொள்கிறான். பிறகு உதய் சிங் 15 வயது ஆன பிறகு வந்து தன் அரசு உரிமையை மீட்டுக்கொள்வதாக வரலாறு சொல்கிறது. இந்த ரஜபுதன வீரச் சரித்திரத்தை இந்த ஓவியம் சொல்கிறது.

ராஜஸ்மண்ட் ஏரி பார்க்கவே பிரமிக்கவைக்கிறதல்லவா?

ஏரிக்குச் செல்லும் அழகிய படிக்கட்டுகள்.


கோட்டையைப் போன்று பிரம்மாண்டமாக, ஏரிக் கரையின் மிக மேடான பகுதியில் கோவில்.

மிகப் பெரும் ஏரி…. நடுவில் தரை தட்டிய படகா?

ஏரியின் நடுவே படகு கவிழ்ந்திருக்கிறதா?

புறாக்கள் கூட்டமாக சட் என்று பறக்கும்போது எடுத்த புகைப்படம்

கோவில் அமைந்துள்ள மிக மேடான பகுதி தெரிகிறதா?

எல்லோரும் பொரி போன்றவற்றை வாங்கி ஏரியில் இருக்கும் மீன்களுக்குப் போடுகிறார்கள்.

உப்பரிகையுடன் கூடிய கோட்டை போன்ற அமைப்பு. யாரேனும் இளவரசி எட்டிப்பார்க்கிறார்களா என்ன?

இந்த இடங்களையெல்லாம் பார்க்கவேண்டும் என்றால், நிறைய நடக்க வேண்டியிருக்கும், படிகளில் இறங்கி ஏறவேண்டியிருக்கும். ஓரளவு ஃபிட் ஆக இருக்கும்போதே நாம் தரிசிக்க வேண்டிய இடங்களையெல்லாம் தரிசித்துவிட வேண்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ஒத்திப் போட்டால் யாத்திரை செய்வது கடினமாகிவிடும். 

ராஜஸமண்ட் ஏரி மற்றும் கங்க்ரோலி துவாரகை கோவில் தரிசனம் நிறைவாக முடிந்தது. இனி இங்கிருந்து நெடிய பயணம் காத்திருக்கிறது. 200 கிமீ தூரத்திற்கும் அதிகமான பயணம், புஷ்கரை நோக்கி. அதனைப் பற்றி வரும் வாரத்தில் காண்போம்.

(தொடரும்) 

28 கருத்துகள்:

  1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று..

    குறள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் துரை செல்வராஜு சார்... நல்ல தமிழ் பேசப்படுவது யாழ்ப்பாணம், இரண்டாவது நெல்லை என்றுதானே எல்லோரும் சொல்கிறார்கள்.

      நீக்கு
  4. வரலாற்றுச் செய்திகளுடன் கனமான பதிவு..

    படங்கள் கண் கவர்கின்றன..

    க்ருஷ்ணா..
    க்ருஷ்ணா..

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய ஞாயிறு பதிவும் அழகான படங்களுடன் நன்றாக உள்ளது.

    கங்க்ரோலி துவாரகாதீஷை மனம் குளிர தரிசித்து கொண்டேன். படங்கள் விபரங்கள் அருமை. பிறகு நன்றாக, மனம் ஊன்றி படித்து விட்டு வருகிறேன்.

    நேற்று காலையில் வரும் தண்ணீர் பிரச்சினையுடன் வேறு வேலைகளும் வந்து விட்டபடியால், நேற்றே அனேக பதிவுகளுக்கு வர இயலவில்லை. இன்றும் இந்த நேரத்தை விட்டால் தண்ணீர் வருவது சிரமம். ஆகையால் மதியம் வாக்கில் அனைவரின் பதிவிற்கும் வருகிறேன். அனைவரும் மன்னித்துக் கொள்ள வேண்டும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.

      எங்களுக்கும் ஆரம்பத்தில் தண்ணீர் பிரச்சனை இருந்தது. அதாவது மதியம் 12-6 வரை தண்ணீர் வராது என்பது போல. இப்போதெல்லாம் அந்தப் பிரச்சனை இல்லை. இருந்தாலும் இரண்டு பாத்ரூம்களில் (மற்ற பாத்ரூம்களில் இல்லை) ஒரு ஒரு வாளி நீரைச் சேர்த்து வைத்திருக்கிறோம்.

      நம்ம ஊர்ல் போல, தண்ணீர் ரொம்பப் பிடித்து வைக்கும் நிலை இல்லை.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. கங்க்ரோலி துவாரகை மிக அருமை.
    அருமையான தரிசனம் .
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    போகன்வில்லா செடியால் வழைவு வாயில் மிக அழகு.
    படியில் ஏற கைபிடி இருப்பது வசதி.
    ஏரிக்கரை படங்கள் எல்லாம் அழகு.
    பறவைகள் பறப்பது, அமர்ந்து இருப்பது எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.

    //உப்பரிகையுடன் கூடிய கோட்டை போன்ற அமைப்பு. யாரேனும் இளவரசி எட்டிப்பார்க்கிறார்களா என்ன?//

    இளவரசி எட்டிப்பார்த்தாலும் முகம் மறைத்து இருப்பார்களே!


    //இந்த இடங்களையெல்லாம் பார்க்கவேண்டும் என்றால், நிறைய நடக்க வேண்டியிருக்கும், படிகளில் இறங்கி ஏறவேண்டியிருக்கும். ஓரளவு ஃபிட் ஆக இருக்கும்போதே நாம் தரிசிக்க வேண்டிய இடங்களையெல்லாம் தரிசித்துவிட வேண்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ஒத்திப் போட்டால் யாத்திரை செய்வது கடினமாகிவிடும். //

    ஆமாம், உண்மை. கால், மற்றும் முட்டிகளில் பலம் இருக்கும் போதே பார்த்து விட வேண்டும்.
    தேகபலம், பாதபலம் வேண்டும் .

    இப்போது உங்கள் பதிவின் மூலம் பார்த்து தரிசனம் செய்து கொண்டேன் , நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முகம் மறைத்து இருப்பார்களே// அடடா.. இதை யோசிக்கவில்லையே.... அப்புறம் அது இளவரசியா இல்லை கிழவரசியா இல்லை காவலரா என்பது தெரியாமல் போய்விடாது?

      திரும்பவும் பத்ரியாத்திரை இந்த மாதம் செல்லலாமா என்று ஒரு யோசனை... அதன் பிறகு பத்ரி யாத்திரை பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். அலைவதற்கு கொஞ்சம் யோசனையாக இருக்கிறது (ஒருவேளை வயதாகிவிட்டது என்ற எண்ணம் வருகிறதா என்பது தெரியவில்லை ஹா ஹா ஹா)

      நீக்கு
  9. தல வரலாறு நிறைய தகவல்கள் சிறப்பாக இருக்கிறது.

    படங்கள் வழக்கத்தைவிட பிரமாண்டமான தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய யாத்திரை பகிர்வில், கங்க்ரோலி துவாரகாதீஷ் கோவில் பற்றிய செய்திகளை தெரிந்து கொண்டேன். பிரம்மாண்டமான கோட்டை போலுள்ள கோவிலின் அமைப்பும், சுவரில் வரைந்துள்ள ஓவியங்களின் அழகும் நன்றாக உள்ளது. பக்த மீரா இறைவனை அடைந்ததும் இந்தக் கோவில் என்று தெரிந்து கொண்டேன்.

    ராஜமண்ட் ஏரியின் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கிறது. அங்கு எடுத்த படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. பறக்கும் புறாக்களின் படங்களும் மிக அழகாக எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ஓவியத்தை ஒட்டிய ரஜபுத்ர கதையும், படித்து தெரிந்து கொண்டேன். அந்த காலத்திலும் சரி, இந்தகாலத்திலும் சரி, போட்டி பொறாமை மனிதர்களிடையே தொடர்ந்து வந்து கொண்டேதான் உள்ளது.

    இந்த இடத்தை சுற்றிப் பார்க்க காலில் நல்ல பலம் வேண்டும்தான்..! ஆனால் நாங்கள் இருக்கும் இடத்திலேயே அமர்ந்தபடி உங்கள் பதிவின் மூலமாக எல்லா கோவில்களின் வரலாற்றையும் தெரிந்து கொண்டு அங்கு குடி கொண்டுள்ள இறைவனையும் தரிசித்துக் கொள்கிறோம். அதனால் உங்கள் பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டி பொறாமை இல்லாமல் இருக்க வாய்ப்பில்லையே. சுவர்க்கத்திலேயே போட்டி பொறாமை இருக்கிறது என்று படித்துள்ளதால் இந்த உலகத்தில் இருக்காதா?

      கோவிலிலிருந்து ஏரிக்கு இறங்கிச் சென்று பிறகு ஏறி வருவது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்.

      தொடர்ந்து பதிவுக்கு வருவது மகிழ்ச்சி.

      நீக்கு
  11. கங்க்ரோலி துவாரகாதீஷை பற்றி விரிவாக அறிந்து கொண்டோம்.
    அரண்மனை உப்பரிகை எல்லாம் அழகாக இருக்கிறது.

    தாதி பர்னாலாவின் இளவரசரைக் காப்பதற்காக தன் மகனை துறக்கும் செயல் மனதை பிழிந்தது.

    பதிலளிநீக்கு
  12. /// ஓரளவு ஃபிட் ஆக இருக்கும் போதே நாம் தரிசிக்க வேண்டிய இடங்களையெல்லாம் தரிசித்துவிட வேண்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ஒத்திப் போட்டால் யாத்திரை செய்வது கடினமாகி விடும்.. ///

    முற்றிலும் உண்மை..

    தேகபலம் தா ..
    பாத பலம் தா ..
    ஈஸ்வரா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக்திநாத் யாத்திரையில் 2008ல் ஆரம்பித்தது. திரும்பவும் அடுத்த வருடம் முக்திநாத் யாத்திரையோடு நிறுத்திக்கொள்ளலாமா என்று நினைக்கிறேன் துரை செல்வராஜு சார்.

      கீதா சாம்பசிவம் மேடத்தின் கயிலாய யாத்திரையை (கோமதி அரசு மேடத்தினோடதும்) படித்து கயிலாய யாத்திரை செல்லலாமா என்றும் ஒரு காலத்தில் யோசித்தேன்.

      தேகபலத்தை விட, Restroom qualityதான் (பல இடங்களில்) யாத்திரையை யோசிக்க வைக்கிறது.

      நீக்கு
  13. இந்த கோயில் கோயில் மாதிரி இல்லை. ஒரு வீடு மாதிரி தான் இருக்கிறது.

    உப்பரிகை என்பது மாடி வெராண்டா எனலாம். பால்கனி அல்ல. வீடுகளுக்கு உப்பரிகை ஒரு தனி அழகு தான். மூக்கு வைத்தாற்போல்.
    உங்களுடைய சுற்றுலாவில் வாத்நகரும் இருந்ததா?
    Jayakuma​r

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார்... இந்தக் கோவில், கோவில் என்பதைவிட அரண்மனையின் ஒரு பகுதியில் இருந்த சன்னிதி போன்றே (கோவிலின் பகுதி போன்று) எனக்குத் தோன்றியது. நிச்சயம் பெரிய அரண்மனையின் தோற்றம், பக்கத்தில் ஏரிப்பக்கத்திலிருந்து பார்த்தால் தெரியும் (படங்களிலும் தெரியும்)

      நீக்கு
    2. நீங்கள் எழுதியதைப் படித்த பிறகுதான் வாத் நகர் என்பது என்ன இடம் என்று படித்தேன். நாங்கள் செல்லவில்லை.

      நீக்கு
  14. படங்கள் எல்லாம் சூப்பர் நெல்லை.

    புறாக்கூட்டம் பறக்குது பாருங்க கும்பலா....செம ஷாட்!

    ஏரிக்கரையும், இப்படி உயரமான கோட்டை அரண்மனை? கட்டிடங்களும் செமையா இருக்கு.

    அந்தக்காலத்துல எல்லாம் இப்படி பங்களா, அரண்மனை போன்றவற்றில் பெண்கள் வெளியில் செல்ல மாட்டாங்க இல்லையா அதுக்காகக் கோயில் எல்லாம் உள்ளேயே வைச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். அல்லதுகோட்டைக்குள். திருவனந்தப்புரத்தில் கூட கோட்டைக்குள்ளேதானே இருக்கு கோயில். அரச ஆட்ச்சியில் அரசகுடும்பத்துப் பெண்கள் வரப்ப கோட்டைக்குள்ளே வேறு யாரும் போக முடியாது என்று சொல்லிக் கேட்டதுண்டு.

    இதுல பால்கனிலருந்து இளவரசி எட்டிப்பார்ப்பாங்களாம்!!!!!! ஹாஹாஹாஹா நெல்லை உங்க கற்பனை!!! அப்படி எட்டிப் பார்த்து யாரேனும் அவங்க முகத்தைப் பார்த்துட்டா அம்புட்டுத்தான் அவனை உள்ள தள்ளி லாடம் கட்டிட மாட்டாங்க??!!!!

    பால்கனிலருந்து இளவரசி எல்லாம் ஏரிக்காற்றையும் ஏரியையும் பார்த்து ரசிச்சிட்டிருந்திருப்பாங்க...அப்ப இந்த ஏரி இன்னும் அழகா இருந்திருக்கும்.

    கோயில் படங்கள் எல்லாமே மிக அழகு.

    நல்லகாலம் பால்கனிலருந்து தமனா எட்டிப் பார்த்திருந்தான்னு சொல்லாம விட்டீங்களே!!! இல்லை ஒரு வேளை ஏதாவசு வரலாற்று படத்தில் அவங்க இளவரசியா நடிச்சு!!!!

    லேட்டா கமென்ட் போடறதுனால தப்பிச்சேன்!

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!