லலிதா சங்கரன் அல்லது லலிதாவும் சங்கரனும் எழுதிய பாடலுக்கு
இசை T M சௌந்தர்ராஜன். குழுவினருடன் பாடி இருப்பதும் அவரே. பாடலின் இசையில் குழலோசை பிரதானம்.பரமபாவனா கிருஷ்ணா பரமாத்மனே பரிபூர்ணா
கருணாகர பரந்தாமா கருணாகர பரந்தாமா
சரணாகதி புகுந்தோமே சரணாகதி புகுந்தோமே - பரமபாவனா
சகலபுவனபரிபாலா ஹரிஹரிதேவனே சீலா
சகலபுவனபரிபாலா ஹரிஹரிதேவனே சீலா
தீனநாதனே காவாய் கானலோலனே வா வா
தீனநாதனே காவாய் கானலோலனே வா வா - பரமபாவனா
தேவகிபிரியகோபாலா தீனதயாளா நமோ நமோ
தேவகிபிரியகோபாலா தீனதயாளா நமோ நமோ
ருக்மிணிப்ரியகோவிந்தா அதிரூபசுந்தரா நமோ நமோ
ருக்மிணிப்ரியகோவிந்தா அதிரூபசுந்தரா நமோ நமோ - பரமபாவனா
ஸ்ரீஹரவரமுரளீமனோகர மாதவஸேவா நமோ நமோ
ஸ்ரீஹரவரமுரளீமனோகர மாதவஸேவா நமோ நமோ
கோகுலநந்தனமோகனரூபனே கோவர்தனனே நமோ நமோ
கோகுலநந்தனமோகனரூபனே கோவர்தனனே நமோ நமோ - பரமபாவனா
===========================================================================================
1964 ல் வெளியான படகோட்டி படத்தில் எல்லா பாடல்களுமே ஹிட் அடித்த பாடல்கள். வாலியின் வரிகளுக்கு மெல்லிசை இரட்டையர்கள் இசை. படத்துக்கான தலைப்பாக படகோட்டி என்பதே வாலி சிபாரிசு செய்ததுதானாம்.
MGR, சரோஜாதேவி, நம்பியார், நாகேஷ் நடித்துள்ள படம். ப்ரகாஷ்ராவ் இயக்கம் வேலுமணி தயாரிப்பு.
எல்லா பாடல்களுமே நல்ல பாடல்கள்தான் என்றாலும் இன்று பத்திலிருந்து ஒரு தூதுப் பாடல் மட்டும்.
தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாளாம் ஒரு தலைவி. மேகத்தையே தூதாக்கினான் இன்னொரு கவிஞன். இங்கு தாவி வரும் வெள்ளலையை, சந்திரனை, ஓசையிடும் பூங்காற்றை தூதாக்குகிறார்கள் காதலனும் காதலியும்.
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே நீ போய்த் தூது சொல்ல
மாட்டாயோ
கொத்தும் கிளி இங்கிருக்க ஓய்
கோவைப்பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே நீ
போய் தூது சொல்ல மாட்டாயோ
கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப்
பழம் அங்கிருக்க ஹோய்
தத்தி வரும் வெள்ளலையே நீ
போய் தூது சொல்ல மாட்டாயோ
ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே
ஓடம் விட்டு போனானே ஓ ஓ ஓடம்
விட்டு போனானே
ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே
ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு
மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து
பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு
மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போறேனே
மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே
ஆசைக்கு ஆசை வச்சேன் நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய்
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு
வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து ஏழை மனக்
குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு
ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன்
நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க
நான் மட்டும் இங்கிருக்க ஹோ ஹோ
ஹோ நான் மட்டும் இங்கிருக்க
தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க
ஹோ சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி
சொல்ல மாட்டாயோ
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல
மாட்டாயோ
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து..
பதிலளிநீக்குகுறள் வாழ்க..
வாழ்க..
நீக்குஅக்ஷய திருதியை நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குதண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
நீக்குதளிர் விளைவாகித்
தமிழும் வாழ்க.
வாழ்க.. வாழ்க..
நீக்குவாழ்த்துகளை நன்றியுடன் பரிமாறிக் கொள்வோம்.
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.. வாங்க செல்வாண்ணா,, வணக்கம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குபரமபாவனா கிருஷ்ணா...
பதிலளிநீக்கு1980 களில் கேட்டு மகிழ்ந்த பாடல் இது...
மகிழ்ச்சி..
சந்தோஷம்.
நீக்குபடகோட்டி படப் பாடல்கள் அனைத்துமே அருமை. இன்று பகிர்ந்துள்ளதும் அப்படியே. எம்ஜிஆருக்கு பின்பு அரசியல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு ஏற்படக் காரணமாக இருந்த பாடல்கள்.
பதிலளிநீக்குஆம்,. இதில் வரும் "கொடுத்ததெல்லாம் கொடுத்தான்" பாடல் 'பாதை தெரியுது பார்' என்கிற படத்துக்காக வாலி எழுதிக் கொடுத்த பாடல். அவர்கள் நிராகரித்திருந்தனராம். அது இங்கே சரியாய் பொருந்திப் போனதாம்.
நீக்குதூது செல்ல ஒரு தோழி...
பதிலளிநீக்குஇனிமையான பாடல் அது..
மறக்க இயலாதபாடல்!..
ஆமாம். முன்பு பகிர்ந்த நினைவு.
நீக்குபாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ...
பதிலளிநீக்குஎன்ன ஒரு அற்புதம்...
One of the அற்புதம்ஸ்...
நீக்குமின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து
பதிலளிநீக்குபின்னலாய் ஜடை போட்டு என் மனச எடைபோட்டு
மீன் பிடிக்க வந்தவள நான் பிடிக்கப் போனேனே..
மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே....
மை எழுதும் கண்ணாலே -
யார் யாருக்கோ இன்னிக்கு பிரச்னை!...
தமிழின் அழகு..
அழகின் தமிழ்!..
முதல் இரண்டு வரியும்... என்ன ஒரு கற்பனை..
நீக்கு/// மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போறேனே
பதிலளிநீக்குமை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே.. ///
மீன் பிடிக்க வந்தவள நான் பிடிக்கப் போனேனே
மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே...
அடடா!...
மண்ணின் இயல்பாகி நிற்கின்ற வர்ணனை!..
// மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே.. / //
நீக்குஎனக்கு இந்த வரி ரொம்ப இஷ்டம்!
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போதும் கேட்டு ரசித்தேன்.
இரண்டாவதாக வந்த திரைப்படபாடலும் நல்ல பாடல். இந்தப் படத்தின் பாடல்களை ரேடியோவில் அடிக்கடி கேட்டதுதான். பாடல் பற்றிய விபரங்களுக்கும் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குபடகோட்டி படத்துக்குப் பிறகு மீனவர்களின் இன்பத்தையும் துன்பத்தையும் சொல்லி வேறொரு படம் இன்னும் வரவில்லை..
பதிலளிநீக்குஇனி வருவதற்கு வாய்ப்பும் இல்லை..
அச்சச்சோ... 'சுறா'வை மறந்துட்டீங்களே!
நீக்கு/ மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே.. / //
பதிலளிநீக்குஎனக்கு இந்த வரி ரொம்ப இஷ்டம்!..
முழுப் பாடலுமே இலக்கியம்!..
நான் இல்லைன்னு சொல்லலையே!
நீக்குஅட்சய திருதியைக்கு
பதிலளிநீக்கு(எங்கக்கிட்ட) தங்கம் வாங்கினா (தான்) உருப்படலாம் ந்னு கூச்சல்...
இந்த மாதிரி தமிழைக்
கடவுள் கிட்ட கேட்டு வாங்கிக்கிட்ட உருப்படியா இருக்கும்!..
அது பிள்ளையார் கிட்ட இல்ல கேக்கணும்!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குஅருமையான பாடல்கள் இரண்டும்.
பதிலளிநீக்குமுதல் பாடல் கேட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது.
இன்று கேட்டு ரசித்தேன்.
அடுத்த பாடல் அடிக்கடி, ரேடியோவில் அப்புறம் பழைய பாடல்கள் பகிர்வில் தொலைக்காட்சியில் கேட்டு இருக்கிறேன்.
படகோட்டி பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்.
முதல் பாடலை கேட்டு கட்டாயம் ரொம்ப நாளாயிருக்கும் என்று நிச்சயம் எதிர்பார்த்தேன்! நன்றி கோமதி அக்கா.
நீக்குமுதல்பாடல் எப்பவோ கேட்டது அதன் பின் கேட்டதில்லை இப்பதான் கேட்கிறேன் ஸ்ரீராம். அதிகம் கேட்டதில்லை. கேட்டதும் நினைவுக்கு வந்தது. ரசித்தேன்....பஜனையிலும் இந்தப் பாடலைப் பாடக் கேட்டிருக்கிறேன். அதெல்லாம் முன்னொரு காலத்தில்!!!!
பதிலளிநீக்குகீதா
இரண்டாவது பாடல் பல தடவை கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம், இலங்கை வானொலியில், படம் படகோட்டி என்பது இப்பதான் தெரிந்து கொள்கிறேன்.
பதிலளிநீக்குகீதா
முதல் பாடல் கேட்டதே இல்லை இப்பொழுதுதான் கேட்டேன் அருமையான பாடல்.
பதிலளிநீக்குஇரண்டாவது கேட்டிருக்கிறேன் .மிகவும் நல்ல பாடல். பகிர்வுக்கு நன்றி.
மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே....//
பதிலளிநீக்குஎன்ன அழகான வரி இல்ல? ஸ்ரீராம்? ரசித்த வரி.
கீதா
///.அச்சச்சோ... 'சுறா'வை மறந்துட்டீங்களே!..///
பதிலளிநீக்குநான் இந்தப் பக்கம் வர்றது உங்களுக்குப் புடிக்கலையா?..
முதல் பாடல் இன்றுதான் முதன்முதலாக கேட்கிறேன் ஜி
பதிலளிநீக்கு