திங்கள், 20 மே, 2024

"திங்க"க்கிழமை   :  கலவை சாத மசாலா  - துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 கலவை சாத மசாலா..

*** *** ***

இதனை பிரியாணி மசாலா என்றும் சொல்லிக் கொள்ளலாம்..

தேவையான பொருட்கள்: 
நட்சத்திரப் பூ -  5 கிராம்
{Star Anise} 
பிரிஞ்சி இலை - 6 
வற மிளகாய் - 6 
பட்டை - 5 
கிராம்பு - 10 
ஏலக்காய் - 20 
ஜாதிக்காய் - 1
மிளகு - 1 டேபிள் ஸ்பூன் 
சோம்பு 2 டேபிள் ஸ்பூன் 
மல்லி விதை - 2 டேபிள்  ஸ்பூன்

செய்முறை:   நட்சத்திரப் பூ, (விதைகளை நீக்கி ஓடுகள் மட்டும்) பட்டை, பிரிஞ்சி இலை, ஜாதிக்காய் (மேல் ஓடு மட்டும்) ஏலக்காய், வற மிளகாய், கிராம்பு, மல்லி, மிளகு - எல்லாவற்றையும் வெயிலில் உலர்த்தி எடுத்து மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ளவும்..

இது ஆறியதும், மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்..

இறுக்கமான டப்பாவில்  இந்தப் பொடியை வைத்துக் கொள்ளவும்..

காய்களுடன் கலவை சாதம் செய்யும் போது தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்..

காய் கலவை சாதத்தில் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வதால் (மசாலாப் பொடியில்) வற மிளகாயைக்  குறைத்துக் கொள்க.. அல்லது தவிர்த்து விடுக.. 

இரசாயனங்கள் ஏதும் அற்ற இக்குறிப்பினை இயன்ற வரை எல்லாரும் பின்பற்றலாம்..  

( இருப்பினும் கட்டாயம் எதுவும் இல்லை!..)
***

36 கருத்துகள்:

  1. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இன்று திங்கட்கிழமை.. சமையலறை காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  5. இதையும்
    குறிப்பு என, ஏற்றுக் கொண்ட நிர்வாகக் குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  6. குவைத் நாட்டில் எனக்கென நான் சமைத்துக் கொண்ட போது எனது கைப் பக்குவங்கள் அவ்வப்போது இங்கு பதிவில்!..

    குற்றங் குறைகள் கண்டால் பொறுத்துக் கொள்ளவும்..

    மகிழ்ச்சி..
    நன்றி..

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் என் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    நல்ல பயனுள்ள குறிப்பு. இன்றைய திங்களில் இந்தக் குறிப்பை அழகாக படங்களுடன் விவரித்து கூறியமைக்கு மிக்க நன்றி. வழக்கமாக சாம்பார், ரச, இட்லி மிளகாய் பொடி போன்ற பொடிகளுடன் இது போலவும் வீட்டில் செய்து வைத்துக் கொண்டால், உபயோகமாக இருக்கும். நல்லதொரு குறிப்பை வழங்கியமைக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இது போலவும் வீட்டில் செய்து வைத்துக் கொண்டால், உபயோகமாக இருக்கும். நல்லதொரு குறிப்பை வழங்கியமைக்கு.. ///

      இதில் சிரமம் இருப்பதாக நான் நினைக்கவில்லை..


      நமக்கு நாமே வீட்டில் மசாலாப் பொருட்களை தயாரித்துக் கொள்வது மிகவும் நல்லது..

      மகிழ்ச்சி... நன்றி...

      வாழ்க நலம்...

      நீக்கு
    2. நான் எப்போவுமே மசாலாப்பொடிகளும் வீட்டிலே செய்வது தான். இப்போத் தான் ஒரு வருஷமாக வாங்கறேன்.. அதிலும் எவரெஸ்ட் பற்றிய வதந்திகளால் பயமாவும் இருக்கு. சப்பாத்திக் கூட்டு, கறி போன்ற எல்லாவற்றுக்கும் இந்தப் பொடி கை கொடுக்கும்.

      நீக்கு
    3. நாளிதழ்களில் வருவதை முற்றாக ஒதுக்கி விடவும் முடியாதே...

      நீக்கு
  9. நல்லதொரு செய்முறைக் குறிப்பு. நாங்கள் பிரியாணி செய்வதில்லை. ஒரு நாள் செய்துபார்க்கலாமோ என நினைக்கத் தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் பிரியாணி எல்லாம் செய்ய வேண்டியதில்லை..

      இது மசாலாப்பொடி மட்டுமே..

      இதைக் கொண்டு உங்கள் கற்பனைக்கு உருளைக்கிழங்கு பீன்ஸ் முதலான காய்களுடன் மங்களகரமான உணவுகளைத் தயாரித்துக் கொள்ளலாம்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. நான் எப்போவுமே மசாலாப்பொடிகளும் வீட்டிலே செய்வது தான். இப்போத் தான் ஒரு வருஷமாக வாங்கறேன்.. அதிலும் எவரெஸ்ட் பற்றிய வதந்திகளால் பயமாவும் இருக்கு. சப்பாத்திக் கூட்டு, கறி போன்ற எல்லாவற்றுக்கும் இந்தப் பொடி கை கொடுக்கும்.

      நீக்கு
    3. நாளிதழ்களில் வருவதை முற்றாக ஒதுக்கி விடவும் முடியாதே...

      நமக்கென்று பூமியில்
      கடமைகள் இருக்கின்றனவே..

      இதைப் பற்றி நிறையவே இருக்கின்றன..

      நீக்கு
  10. செய்முறை விளக்கம் சுலபமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஜி..

      நீக்கு
  11. அளவுடன் கொடுத்திருப்பது மிகவும் பயனுள்ள குறிப்பு, துரை அண்ணா.

    வீட்டில் பிரியாணி செய்வதுண்டு. சிறு தானியங்களிலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அளவுடன் கொடுத்திருப்பது மிகவும் பயனுள்ள குறிப்பு.. ///

      அவ்வப்பொழுது அரைத்துக் கொள்ளலாம்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
    2. நல்லதோர் மசாலாப்பொடி. குறிப்பு.

      நாங்கள் பட்டை,கராம்பு,ஏலம்,சோம்பு,சின்னசீரகம்,வறுத்து அரைத்த பொடிதான் செய்வோம்.உங்கள் குறிப்பில் மேலும் பல பொருட்கள் சேர்வதால் நன்றாக இருக்கும் செய்து பார்க்கிறேன்.மசாலா குறிப்புக்கு
      .நன்றி.

      நீக்கு
    3. இது எனது கைப்பக்குவம்..இப்படி நானே அவ்வப்போது தயாரித்துக் கொள்வேன்..

      // மேலும் பல பொருட்கள் சேர்வதால் நன்றாக இருக்கும் செய்து பார்க்கிறேன்... //

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
    4. மசாலாப் பொடி இம்முறையில் அரைப்பது தான் பாரம்பரியமான பக்குவம். சில சமயம் சும்மா மசாலா வாசனை வறுப்பதற்காக சோம்பு, ஜீரகம், ஏலக்காய், கிராம்பு மட்டும் வறுத்துப் பொடித்துச் சேர்ப்போம். பெரிய ஏலக்காய் எனில் இன்னமும் நன்றாகவே வரும். தம்பியின் கைப்பக்குவம் நன்றாகவே இருக்கு.

      நீக்கு
    5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    6. அக்கா அவர்களுக்கு நல்வரவு...

      தங்களது வருகையும்
      கருத்தும் கண்டு நெகிழ்ச்சி.. மகிழ்ச்சி..

      நன்றியக்கா

      நீக்கு
  12. வித்தியாசமான மசாலா பொடி. ஏறக்குறைய கரம் மசாலா பொடி தான். தனியா, மிளகு வற்றல் மிளகாய் சேர்ப்பதால் வித்தியாசமாக இருக்கிறது! உபயோகிக்கும்போது சுவையும் வித்தியாசமாக இருக்குமென்று நினைக்கிறேன். செய்து பார்க்கலாம்! நட்சத்திரப்பூவை மட்டும் கிராமில் எழுதியிருக்கிறீர்கள்! அதுவும் எத்தனை பூ என்று சொன்னால் வசதியாக இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்குத் தெரியாததல்ல...

      இது கரம் மசாலா பொடிதான்.. காய்களுக்கானது..

      பிரியாணி மசாலா பொடி என்று சொல்வதற்கு விரும்புவதில்லை..

      மற்ற பொருள்களின் அளவிற்கு நட்சத்திரப் பூ மூன்று போதும்.. இது அதிகமானால் (நெடி) வாசனையும் அதிகமாகும்..

      காய் வகைகளுக்கு அதிக நெடி
      மசாலா வாடை உகந்ததல்ல..

      இப்படி சிலவற்றை அதிகப்படுத்தி தான் பிரியாணிக் கடைகள் ஏவாரம் பார்ப்பது.. இதற்குள் சொல்வதானால் தொழில் ரகசியம்...

      அராபிய உணவுத் தொழிலகத்தில் (கேட்டரிங்) பதினைந்து வருடங்கள் இருந்ததனால் ஓரளவுக்குத் தெரியும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. 5 கிராம் நட்கத்திரப் பூ என்பது நிறைய வரும். நான் மகனுக்கு வீட்டில் அளந்து செய்வதால்....5 கிராம் தேவைப்படாது என்று தோன்றுகிறது துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்... இது உத்தேசமானவை தான்...

      சுவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்..

      மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  14. வீட்டில் மசாலா பொடி தயார் செய்து வைத்து கொள்வது நல்லதுதான்.
    படங்களுடன் செய்முறை குறிப்பு நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// வீட்டில் மசாலா பொடி தயார் செய்து வைத்து கொள்வது நல்லதுதான்.///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!