புதன், 1 மே, 2024

கிராமத்தில் விடுமுறை வாழ்க்கை

 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

ஜோசியர்களின் 'சந்திராஷ்டமம், ஏழரை சனி, அஷ்டமத்து சனி போன்ற பயமுறுத்தல்கள்,

விஞ்ஞானிகள், வல்லுனர்களின் பூமி வெப்பமடைகிறது, இன்னும் ஐம்பது வருடத்தில் சென்னை இருக்காது,etc.

மருத்துவர்களின் உங்கள் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது, கிட்னி பாதிக்கப்படலாம், போன்ற பயமுறுத்தல்களில் எதற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். இப்போது வாட்ஸாப்பில் வேறு பலவித அச்சுறுத்தல்கள்.

# ஜோதிடர்கள், மருத்துவர்கள் சொல்பவை என்னை பாதிப்பதில்லை.  ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை.  மருத்துவர்கள் சொல்பவற்றுக்கு வைத்தியமும் அவர்களே சொல்வார்கள். (செயல்படுத்துவது நமது இஷ்டம்.)  மற்றபடி அறிவியல் வல்லுனர்கள் சொல்பவையும், உலக நடப்புகளும் என்னை பெரும் கவலைக்கு உள்ளாக்குவது உண்மை. இப்படி அதீதமாக கவலை கொள்ளாமல் இருக்கப் பழகி வருகிறேன்.

$ நம்மை நம் ஆயுள் தாண்டி எதுவும் செய்யப்போவது இல்லை என்பதால் 2047 க்குப்பின் வருவன பற்றி சிந்திப்பதில்லை.

மருத்துவர்கள் நாடி வந்தவர்களை ஆயுள் சnதாதார்களாக ஆக்குவது எதிர் பார்க்கக் கூடியது.

கூ டிய வரை இயற்கை வளங்கள் அழியாமல் இருக்க வேண்டும் என்ற முடிவில் roof top solar power, e vehicle enru உபயோகிக்கிறோம் 

மாடியில் செடி வளர்க்கிறோம்

Earth day தவிர மற்ற நாட்களிலும் மின்சிக்கனம் கடைப்பிடிக்கிறோம். 

& எதற்குமே அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. இவ்வளவு வருட வாழ்க்கையில் எவ்வளவோ மேடு பள்ளங்கள், வலிகள், பயம், சந்தோஷம் எல்லாம் பார்த்தாயிற்று. இனி 'எது வந்தாலும் ஏற்றுக்கொண்டால் துணிவே துணையாய் மாறும்' என்ற நம்பிக்கை. 

= = = = = = = =

எங்கள் கேள்விகள் :

1) எந்த வறுவல் உங்களுக்குப் பிடிக்கும் ? 

அ ) வாழைக்காய் 

ஆ) உருளக்கிழங்கு 

இ) சர்க்கரை வள்ளிக்கிழங்கு 

ஈ) மரவள்ளிக் கிழங்கு 

உ ) வேறு ஏதாவது ? 

2) வறுவலுக்கு உப்பு மட்டும் போட்டால் பிடிக்குமா - அல்லது காரமும் வேண்டுமா? அல்லது உப்பு / காரம் எதுவும் வேண்டாமா ? 

3) சப்பாத்திக்குச் சரியான ஸைட் டிஷ் எது? 

=  = = = = = = 

KGG பக்கம் : 

விடுமுறை கால அனுபவங்கள் தொடர்கின்றன. 

ரயிலில் திருவாரூர் சென்று இறங்கி, பிறகு பஸ் பிடித்து - அல்லது கிராமத்திலிருந்து சித்தப்பா அனுப்பிய மாட்டு வண்டி வந்திருந்தால், அதில் ஏறி, கிராமத்திற்கு வந்து சேருவோம். 

( இங்கே கொடுக்கப்பட்டுள்ளது எங்கள் கிராமத்தின் கோவிலில் - நாங்கள் அனைவரும் பெரு முயற்சி செய்து புனருத்தாரானம் செய்த கோவில் - மே நான்காம் தேதி நடைபெற உள்ள திருமஞ்சனம் பத்திரிக்கை. ) 

வாகன பிரயாணங்கள் முடிந்துவிட்டது என்றால், அதற்குப்பின் கிராமத்தில் சில சந்தோஷங்கள் உண்டு. 

தென்னந்தோப்பு , மாந்தோப்பு எல்லாவற்றுக்கும்  செல்வது. இளநீர், தேங்காய் வழுக்கை, மாங்காய் பறித்துச் சாப்பிடுதல், சித்தப்பாவின் பையன்கள் - அதாவது என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள் சொல்லும் பாம்பு (அடித்த) கதைகளைக் கேட்டு பயம் கொள்வது என்று பொழுது போகும். 

அப்பொழுது எங்கள் கிராமத்தில் இருந்தவர்கள், மூன்று சித்தப்பா, சித்திகள், அவர்களின் மகன் மகள்கள், இரண்டு அத்தைகள், அவர்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகள். 

நானும் அண்ணனும் எப்பொழுதும் அப்பாவின் இரண்டாவது தம்பி (ராமச்சந்திரன்) வீட்டில்தான் தங்குவோம். மற்ற உறவினர்கள் வீடுகள் அருகருகே இருக்கும். அவ்வப்போது அவர்கள் வீட்டிற்குச் சென்று வருவோம். ஆனால் சாப்பிடுவது தூங்குவது எல்லாம் ராமு சித்தப்பா வீட்டில்தான். 

( நாகையில், எங்கள் வீட்டில் எனக்கு என்று ஒரு தட்டு உண்டு. - ஹி ஹி - அலுமினியத் தட்டுதான்! - அதில் கொஞ்சம் சாதம் போட்டு பருப்பு கலந்து - சில சமயம் அதோடு ரசம் கலந்து - சாப்பிடுவேன். பிறகு மோர் சாதம். மற்றபடி குழம்பு பொரியல் எல்லாம் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. ) 

சிறிய வயது என்பதால் எனக்கு சித்தப்பா வீட்டில் சாப்பிடுவது மிகவும் கஷ்டமான விஷயம். அவர்கள் சாப்பிடுவதற்கு அந்தக் காலத்தில் தட்டு உபயோகிப்பது இல்லை. குச்சிகள் குத்தி சேர்க்கப்பட்ட வாழை மட்டை நீண்ட செவ்வக வடிவில் இருக்கும். 
பருப்பு சாதம் கிடையாது. சாதத்தின் மீது சாம்பார் ஊற்றினால் அது சரியாக வாழை மட்டைகளைச் சேர்த்து போடப்பட்டிருக்கும் குச்சிகளின் இணைப்பு  ஓட்டை வழியாக தரைக்கு பாய்ந்து ஓடும். அண்ணன் சாம்பார் ஊற்றிய உடனேயே சேர்த்துப் பிசைந்துவிடுவான் அதனால் அவனுக்கு அந்தப் பிரச்சனை இல்லை.  அதனால், அவனே எனக்கும் சாதம் பிசைந்து வைத்துவிடுவான். ஆனாலும் குழம்பின் காரம் எனக்குப் பிடிக்காது! அதனால் நிறைய மோர் சாதம் மட்டுமே சாப்பிட்டு கிராமத்து நாட்களைக் கடத்தி வந்தேன். சாப்பிட்டு முடித்தபின் அந்த மட்டையை நானே கொண்டுபோய் கொல்லைப்பக்கம் போட்டுவிட்டு, அந்த இடத்திற்கு சற்றுத் தள்ளியுள்ள ஒரு குட்டையில் கை கழுவிக்கொண்டு வரவேண்டும்.  

அந்தத் தண்ணீர்க் குட்டையில் ஓரங்கள் சேறும் சகதியுமாய் கொஞ்சம் வழுக்கும் வகையில் இருக்கும். பயந்துகொண்டே காலை வைத்தால் - இன்னும் அதிகமாக வழுக்கும். அதனால் அண்ணனை கெட்டியாகப் பிடித்துக்கொண்டே தண்ணீரில் இறங்கி கையைக் கழுவிக்கொண்டு அண்ணனுடனேயே திரும்பி வந்துவிடுவேன். 

எங்கு போனாலும் அண்ணனுடனேயே சேர்ந்து போய் வருவேன். அண்ணன் எல்லோருடனும் சகஜமாக நன்றாகப் பேசுவான்.  நான் பெரும்பாலும் மௌனமாக அந்தந்த வீடுகளில் உள்ள புத்தகங்கள் எதையாவது எடுத்து, படம் பார்த்து, எழுத்துக் கூட்டிப் படித்துக்கொண்டிருப்பேன். 

கிராமத்து அனுபவங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. பிறகு பார்ப்போம். 

= = = = = = = = =

48 கருத்துகள்:

  1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று..

    குறள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. கேரளத்தைப் பொறுத்த வரையில் சிப்ஸ் எனப்படும் எண்ணையில் பொறித்த சீவல் வறுவல் என்று கொண்டால் நேந்தரங்காய் சிப்ஸ் அல்லது வறுவல் தான். அதுதான் பிடிக்கும்.

    ஏ பியின் கொள்கைக்கு மாற்று பதில். மன்னிக்கவும். நான் இருப்பது கேரளம். சப்பாத்திக்கு சரியான சைடு டிஷ் சிக்கன் கிரேவி/சிக்கன் ப்ரை. அதன் பின் ஷாஹி பனீர், சன்னா மசாலா, வெள்ளை குருமா. வீட்டில் சாம்பார், தக்காளி தொக்கு, உருளைக்கறி, சம்மந்தி, போன்றவை தான்.

    நாங்கள் இரண்டு பேர் மட்டும் என்பதால் இரவு உணவு பெரும்பாலும் கோதுமை தோசை தான். சுலபம். சைடு டிஷ் இட்லி மிளகாய் பொடி போதும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஏ பியின் கொள்கைக்கு மாற்று பதில். மன்னிக்கவும். //

      இதில் மன்னிக்க என்ன இருக்கிறது JKC ஸார்?  உங்கள் உணவுப் பழக்கத்தைச் சொல்கிறீர்கள்..  அவ்வளவுதானே?

      நீக்கு
  4. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சையும் வாழ்க..  தமிழும் வாழ்க...  தாய்நாடும் வாழ்க..

      நீக்கு
  5. ஆறரை மணி ஆகியும் - வேறு எவரும் வரவில்லையே?..

    பதிலளிநீக்கு
  6. பிளாக்கர் மறுபடி கமெண்ட்ஸ் பின்தொடரும் சேவையை நேற்று முதல் கொடுக்கத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
  7. கிராமத்து வாழ்க்கை சுவாரசியமாகச் செல்கிறது. நான் உபயோகித்தது வாழைப்பூ மடல். அபூர்வமாக தையல் இலை. அப்போதெல்லாம் உடம்பு சுகத்திற்கு முக்கியத்துவமே கிடையாது. இப்போதோ படுக்கை, தலையணை, டாய்லட் எனப் பல வசதிகளை, மினிம்ம் தேவைகள் என்ற வரிசையில் வைத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  8. உருளை வறுவல் தவிர மற்றவை பிடிக்கும். சர்க்கரைவள்ளிக்கிழங்கை விட்டுவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  9. நேந்திரம் பழ வறுவல் ரொம்பப் பிடிக்கும். நேந்திரம் வறுவலில் காரம் போட்டால் பிடிக்காது. வாழைக்காய் வறுவல் ஆல்டைம் ஃபேவரைட்.

    பதிலளிநீக்கு
  10. தொழிலாளருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?..

    தெரியவில்லை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்குத் தொழில் கவிதை
      நாட்டுக்கு உழைத்தல்
      இமைப் பொழுதும் சோராதிருத்தல்.

      -- மஹாகவி

      ஹி. ஹி.. பாரதி தானே சொன்னான், நானில்லையே என்று சொந்த ஞானம் ஒதுங்கியது என்றால் ---
      கட்டுகிற வேட்டியிலிருந்து இரவு
      படுக்கப் போகும்
      பாய் வரை
      தொழிலும்
      தொழிலாளரும் சம்பந்தப்பட்டவை.
      யாரோ ஒருத்தர் உழைத்த உழைப்பு சம்பந்தப்பட்டவை.
      காசு கொடுத்துத் தானே வாங்கி அனுபவிக்கிறேன்
      என்றால் உழைத்தால் தான் அந்தக் காசும்.
      ஒவ்வொருத்தர் உழைப்பிலும் தெய்வ அருள் ஒளிந்திருக்கிறது.
      ஆயுத பூஜையின் தாத்பரியமே அது தான்.
      சிகாகோ நகரில் தூக்கிலிடப்பட்டவர்களைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டாம்.

      நீக்கு
    2. நாற்பது வருட உழைப்புக்குப் பின்
      உடல் நலம் குன்றிய நிலையில் பொருளாதாரப் பிரச்னையில் சிக்கியிருக்கின்ற நான் -

      தொழிலாளருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?..

      - என்று எழுதியதைப் பொறுக்க மாட்டாமல் ஜீவி அவர்கள் எழுதியிருக்கின்ற வியாக்கியானம்
      ஆகா!..

      அருமை.. அற்புதம்..

      நீக்கு
  11. சப்பாத்திக்கு வெங்காயம் போன்றவை சேர்க்காத Dhதால்தான் எப்போதும் நல்லா இருக்கும். பயணத்தின்போது எலுமி கார ஊறுகாய். மற்ற தொடுகைகள் ருசிக்கானவை.

    பதிலளிநீக்கு
  12. பேர்ருளாளனின்.... தபிழில் தவறு இல்லாத பத்திரிகைகளைப் பார்ப்பது மிகவும் அரிதாகி வருகிறது.

    பதிலளிநீக்கு
  13. காஞ்சீபுரம் வரத ராஜன், பேர்ருளாளன். கலாயாணமகாதேவியில் வரதராஜப் பெருமாள் கோவில்.. ஆஹா... கோவில் கும்பாபிஷேகத்துக்குச் செல்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கும்பாபிஷேகத்திற்கு சென்ற ஞாபகம் இருக்கு.

      நீக்கு
    2. காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் என்று அழைத்தாலும் மூலவர் தேவராஜ பெருமாள்.

      நீக்கு
  14. வாழையிலையில் சாப்பிட்ட நாட்கள் தான் அதிகம்..

    தாமரை இலையிலும் சாப்பிட்டு இருக்கின்றேன்...

    தையல் இலையில் அதிகம் சாப்பிட்டது இல்லை...

    இப்போதெல்லாம் பாக்கு மட்டைத் தட்டைகள் அதிகமாகப் புழங்குகின்றன..

    பதிலளிநீக்கு
  15. கௌதம் ஜி அவர்களின் நினைவலைகள் சிறப்பு..

    பதிலளிநீக்கு
  16. வறுவல் எல்லாமே பிடிக்கும் உப்பு,காரம் வேண்டும்.

    சப்பாத்திக்கு சைட்டிஸ் குருமா, கடலைகறி.

    கிராமத்து சிறுவயது வாழ்க்கைரசனை. எங்கள் சிறுவயது காலத்துக்கும் இட்டுச்செல்லும். நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். பின்புதான் தலைநகர்,கிராமம் என வாழ்கிறேன்.

    தொழிலாளர்கள் அனைவரும் நலத்துடனும் மன அமைதியுடனும் வாழ வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
  17. வறுவல் எல்லாமே பிடிக்கும் உப்பு,காரம் வேண்டும்.

    சப்பாத்திக்கு சைட்டிஸ் குருமா, கடலைகறி.

    கிராமத்து சிறுவயது வாழ்க்கைரசனை. எங்கள் சிறுவயது காலத்துக்கும் இட்டுச்செல்லும். நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். பின்புதான் தலைநகர்,கிராமம் என வாழ்கிறேன்.

    தொழிலாளர்கள் அனைவரும் நலத்துடனும் மன அமைதியுடனும் வாழ வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
  18. அன்பின் ஸ்ரீராம்..

    பதினாறு வயதில் கட்டட வேலைக்குச் சென்றதும்
    77 ல் பெருமழை நேரத்தில் கழுத்தளவு காட்டாற்று வெள்ளத்தில் நீந்திச் சென்று மழை வெள்ள பாதிப்பில் களப்பணி செய்ததும்
    81 ல் சிங்கப்பூர் கப்பல் பணிமனையில் எண்ணெய் துடைக்கச் சென்றதும்

    அதன்பிறகு அரபு நாட்டில் கடுங்குளிர் புழுதிச் சூறாவளி என்ற சூழ்நிலையில் பகை வன்மம், சூது சூழ்ச்சி எனும் நெருக்கடிக்குள் வேலை செய்து பணம் தேடி இன்று ஓய்வு என்று ஒதுங்கியிருக்கும் எனக்கு உழைப்பின் மேன்மை தெரியாது தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கையில் பல அனுபவங்கள் பெற்றிருக்கிறீர்கள்!

      நீக்கு
  19. பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்களையே நம்பியிருக்கின்ற அரபு நாடுகளில் மே 1 என்பது விடுமுறை
    நாளல்ல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலாளித்துவ நாடு என்று நாம் அழைக்கின்ற அமெரிக்காவில் கூட
      Labour Day என்று பெருமையுடன் அவர்கள் அழைக்கின்ற விடுமுறை நாள் உண்டு.

      இங்கு தான் மத்திய தர வர்க்க படிப்பாளிகள் கூட மே தினம் என்றால், தொழிலாளிகள், தொழிற்சங்கம் என்றால் அது ஏதோ கம்யூனிஸ்டுகள் சமாச்சாரம் போல
      நினைக்கிறார்கள்.

      நீக்கு
  20. விஞ்ஞான வளர்ச்சி மனித வாழ்வுக்கு வீழ்ச்சியே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி முற்றுமாக சொல்லிவிடமுடியாது. வி வ வை மனிதன் எப்படி பயன்படுத்துகிறான் என்பதைப் பொருத்தது அது. தீபத்தை வைத்து தீயையும் மூட்டலாம்; திருக்குறளும் படிக்கலாம்.

      நீக்கு
  21. கேள்விகளும், பதில்களும் அருமை.
    கிராமத்து வாழ்க்கை எளிமையானது.
    தையல் இலை, மந்தார இலை, வாழை இலை உண்டு . வாழை இலை சருகு பயன்படுத்துவார்கள்.
    குக்கி முருகன் கோவிலில் மந்தார இலையில் தைத்த இலையில் தான் சாப்பாடு போட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  22. குலதெய்வ வழிபாட்டுக்கு போகும் போது முன்பு மாட்டுவண்டியில் பயணம் செய்வோம். பழனியில் குதிரை வண்டி பயணம் செய்து இருக்கிறோம். இப்போதும் இருக்கிறது பழனியில் குதிரை வண்டி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!