புஷ்கர் ஏரியில் தர்ப்பணம் முடித்துவிட்டு, பிரம்மா கோவிலுக்குச் சென்றோம். அங்கு தரிசனம் செய்த பிறகு, ரங்க்ஜி மந்திர் என்று அழைக்கப்படும் கோவிலுக்குச் சென்றோம். இங்கு ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீதேவி, கோதை/ஆண்டாள் மற்றும் ஸ்ரீ ராமானுஜர் சந்நிதிகள் உள்ளன.
புராதான ரங்க்ஜி மந்திர்
இது 1844ல் தென்னிந்திய பாணியில்
கட்டப்பட்ட கோவில். புஷ்கர் ஏரிக்குச் செல்லும் வழியில்
உள்ளது.
புஷ்கர்
ஏரியில் இருக்கும் பல புராதான Ghatகளுக்குச் செல்லும் வழி.
(படித்துறைகள்). அருகிலேயே ரங்க்ஜி
மந்திர்.
அழகிய
வித்தியாசமான கோபுரம்.
கோவிலின்
உட்பகுதி
கோவிலைப்
பற்றிய விளக்கம் மூன்று மொழிகளில் பளிங்குக் கல்லில் எழுதப்பட்டு உள்ளது. அங்கு தமிழ் மொழியில்
கோவில் பற்றிய விளக்கத்தைக் கண்டதும் இயல்பான சந்தோஷம் ஏற்பட்டது.
கருவறையைச் சுற்றியுள்ள சுவற்றில் மிக மிக அழகாக வரையப்பட்டுள்ள
வண்ண ஓவியங்கள். பல்வேறு புராண நிகழ்வுகளைச் சித்தரிக்கின்றன.
சுவற்றின்
அழகிய ஓவியங்கள்
ரவிவர்மா அளவுக்கு நல்ல தரமான ஓவியங்கள். பார்க்கப்
பார்க்க மிக அழகாகத் தோற்றமளித்தன. புகைப்படங்கள்
எடுக்க அனுமதி இல்லை. அதனால் ஒவ்வொரு ஓவியமாக தெளிவாகப் புகைப்படம் எடுக்கவில்லை.
கண்ணன் லீலைகள், வராஹ அவதாரம்.
காளிங்க நர்த்தனம், நரசிம்ம அவதாரம் மற்றும் பல.
இந்தக் கோவிலில் தரிசனம் செய்த பிறகு, அருகே இருக்கும் ஸ்ரீராம வைகுந்தர் கோவிலுக்குச் சென்றோம்.
ஸ்ரீ ராம வைகுந்தர் கோவில்
1920-25ல் கட்டப்பட்ட தென்னிந்திய
பாணியிலான கோவில்.
பொதுவாக
புஷ்கரில் பல கோவில்கள் தனியார் மற்றும் தனியார் ட்ரஸ்டினால்
கட்டப்பட்டவைகளாகத்தான் இருக்கின்றன. பிரம்மா கோவில் 2000 வருடப் பழமையானது என்று
சொல்கின்றனர்.
அதுபோல
வராஹர் கோவிலும்.
ராமவைகுந்தர்
கோவில் முகப்பு மிக அழகாக கலைநயத்துடன் அமைந்துள்ளது. உப்பரிகையைப் போன்ற
மாடங்கள்,
கீழே
கலைநயத்துடன் கூடிய கதவுகள்.
கோவில்
கோபுரத்தில் இருந்த அழகிய சிற்பங்கள்.
(இணையம்)
இந்தக் கோவிலில் திராவிட பாணியிலான விஷ்ணுவும், லக்ஷ்மி நரசிம்ஹரும் (ஆந்திர பாணி) மூலவர்களாக உள்ளனர்.
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
பதிலளிநீக்குதான்அமிழ்தம் என்றுணரற் பாற்று..
குறள் வாழ்க..
பெங்களூரில் கோடை முடிந்து பத்து நாட்களாகின்றன. இப்கோதெல்லாம் இரவு மழை பெய்கிறது.
நீக்குநேற்று மழை பெய்து RCB Vs CSI போட்டியைக் குலைத்து, பெங்களூர் தோற்கத்தான் ஆய்ப்பு என நினைத்தேன். அதிசயமாக பெங்களூர் அணி வெற்றி பெற்று தோனி சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது.
கோஹ்லி, தோனி இருவரின் சகாப்தமும் முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. தோனியின் சகாப்தம் முடிவுற்றது. கோஹ்லி இன்னும் ஓரிரு வருடங்கள்தாம்.
கற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
பதிலளிநீக்குதளிர் விளைவாகித்
தமிழ் நிலம் வாழ்க..
/// அங்கு தமிழ் மொழியில் கோவில் பற்றிய விளக்கத்தைக் கண்டதும் இயல்பான சந்தோஷம் ஏற்பட்டது... ///
பதிலளிநீக்குஇதுதான்..
இதுவே தான்!..
வாழ்க தமிழ்!...
தாய்மொழி என்பது நம்மைப் பிணைக்கும் கயிறு.
நீக்குபஹ்ரைனில் நடந்துகொண்டிருக்கும்போது, யாராவது தமிழில், அதுவும் நெல்லைத் தமிழில் பேசினால் அவர்களிடம் சென்று பேசுவேன். திருநெவேலியா என்றால் பெரும்பாலும் ஆமாம், இல்லை நாரோயில் என்பார்கள். தனிச்சிறப்பாக, கண்டுபிடிக்கும்படியான மொழி, நெல்லை, கோவை, சென்னைப் பகுதிகளுக்கே உண்டு.
வழக்கம் போல படங்கள் அழகு..
பதிலளிநீக்குஇனிய தரிசனம்..
நன்றி துரை செல்வராஜு சார்
நீக்குதமிழில் வைக்கப் பட்ட விளக்கப் படத்தைக் காண்பதற்கு இயல வில்லையே..
பதிலளிநீக்குஇப்போதுதான் அந்தப் படத்தில் தமிழ் விளக்கம் தெளிவாக இல்லை என்பதைக் கவனித்தேன். என்னிடம் தெளிவான படங்கள் உண்டு. சரி செய்யப் பார்க்கிறேன். அந்தத் தமிழே வித்தியாசம்தான். (மொழி தெரியாதவர்கள் அழகாக எழுதி வைத்தது)
நீக்குசிறப்பான தரிசனம்.. அழகிய படங்கள்..
பதிலளிநீக்குஓம் ஹரி ஓம்..
ஓம் ஹரி ஓம்..
நெல்லை, முதல்ல சொல்லிடறேன் படங்கள் சூப்பர்!
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா ரங்கன்(க்கா)
நீக்குராம வைகுந்தர் கோயில் ரொம்ப நல்லாருக்கு நெல்லை. ஏதோ ராஜ மாளிகை போல! கவர்ச்சிகரமாக இருக்கு
பதிலளிநீக்குகீதா
எனக்குமே அந்தக் கோவில் வித்தியாசமாகத் தெரிந்தது.
நீக்குராமானுஜர் வடக்க போயிருக்கிறார் என்பது தெரியும். அங்கு ஆண்டாளும் என்பதைப் பார்த்ததும் நம் ஊர்க்காரர்கள் அங்கு இந்தக் கோயில்களை நிர்மாணித்திருப்பாங்களோ! முதல் கோயில் பழையது என்றுதெரிகிறது ரங்க்ஜி மந்திர் - ரங்க் - கலர்? இல்லை ரங்கன் கோயில் என்ற பொருள்?
பதிலளிநீக்குகலைவடிவங்கள் ஒவியங்கள் செம. புகைப்படம் எடுக்க அனுமதி இல்லைன்னு சொல்லியே இத்தனையும் நைஸா எடுத்திருக்கீங்க்ளே!!! சூப்பர் போங்க!
கீதா
ராமானுஜர், கோவில்களில் இப்படியாக சன்னிதிகள் அமையவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தியிருக்கக்கூடும். அதுவே ஆண்டாள் சன்னிதிகள் வைணவக் கோவில்களில் அமைந்ததன் அடிப்படை என நினைக்கிறேன் (ஆழ்வார் ஆச்சார்யர்கள் சந்நிதியும் பிற்பாடு ஏற்பட்டவைகள்தாம்)
நீக்குரங்க்ஜி மந்திர் அரங்கனின் பெயரில்தான். அங்குள்ள ஓவியங்கள் கொள்ளையழெஉ. படமெடுக்க அனுமதி இல்லை என்பது வருத்தம்தான். இல்ஙையென்றால் அந்த ஓவியங்களுக்கே ஒரு பெஉதியைத் தந்திருக்கலாம்.
நீக்குநெல்லை, ராம வைகுந்தர் கோயில்னு சொல்லிருக்கீங்க அதன் படம் மாடங்கள் இருப்பதாக இருக்கு கீழே கோபுரம் அது உட்பக்கமா? மேலே உள்ள ரங்க்ஜி மந்திர் கோபுரம் போல இருக்கே, கீழேயும். இரண்டு கோயில்களும் தனி தனியாக இல்லாமால் ஒன்றிற்குள் ஒன்றாக இருக்கின்றனவா? ஏன்னா ராம வைகுந்தர் கோயில் பின்னால் கட்டப்பட்டது என்பதால்?
பதிலளிநீக்குகீதா
கீதா ரங்கன்(க்கா)... புஷ்கரில் இருக்கும் பல கோவில்களின் விவரங்கள் தெரியவில்லை. ஆனால் புஷ்கரில் முக்கியமானது அந்த ஏரி மாத்திரம்தான். அதுவும் அங்கிருக்கும் பிரம்மா கோவிலும்தான் மிகப் புராதானமானவை.
நீக்குதென்னிந்தியர்களுக்காக நம் பாணியினாலான கோவில்களைத் தரிசனம் செய்யும்போது மன நிறைவு ஏற்படும்.
தேசிய ஒருமைப்பாடு ரங்க்ஜி மந்திர் கட்டமைப்பில் வெளிப்படுகிறது. நன்று. புகைப்படங்கள் நன்றாக உள்ளன. கோயில்கள் விசாலமானவை என்பது புரிகிறது. பதிவு நன்று.
பதிலளிநீக்குதொடர் முடிந்தவுடன் மின் நிலா போன்று ஒரு மின்நூல் உண்டாக்கலாம
வாங்க ஜெயகுமார் சார். வைணவ கோவில்கள் நூற்றெட்டில் இரண்டு, இவ்வுலகில் இல்ஙை. எனக்கு நூற்று ஆறு திவ்யதாசக் கோவில்களையும் தரிசனம் செய்யும் வாய்ப்பு அமைந்தது. இது தவிர அபிமானக் கோவில்கள், இடங்கள் எனப் பல இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். அவற்றைப் புகைப்பட உலாவாகப் பதிவு செய்யும் வாய்ப்பு இங்கு எழுதும் பதிவுகள் மூலமாக்க் கிடைத்துள்ளது. பொதுவா மற்றவர்கள் எடுத்தவற்றைவிட நிறைய புகைப்படங்கள் எடுக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.
நீக்குஅந்த நோக்கில்தான் தொடரைக் காண வேண்டும். புராணச் சிறப்பு என்றெல்லாம் நான் பெரும்பாலும் நுழைவதில்லை.
இதோ... இன்னும் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பத்ரி யாத்திரை சென்றிருக்கவேண்டும். அது முடித்து அந்தத் தொடரை எழுதலாம் என நினைத்தேன். வட நாட்டில் இப்போது வெக்கை அதிகம், அதிலும் ரிஷிகேஷ், ஹரித்துவாரில். மனைவி இந்த முறை வரவில்லை என்று சொல்லிவிட்டதால் யோசனையாக இருக்கிறது. மின்நூல் என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை.
நீக்கு/வைணவ கோவில்கள் நூற்றெட்டில் இரண்டு, இவ்வுலகில் இல்ஙை. எனக்கு நூற்று ஆறு திவ்யதாசக் கோவில்களையும் தரிசனம் செய்யும் வாய்ப்பு அமைந்தது. /
நீக்குஆகா.. இந்த வாய்ப்பை தங்களுக்கு தந்த இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றியும். இக்கோவில்களையெல்லாம் தரிசனம் செய்த தங்களுக்கும் என் பணிவான நமஸ்காரங்கள்.
இன்னொரு ஶ்ரீவைஷ்ணவரைக் கண்டால் விழுந்து சேவிப்பது என்ற ஒரு மரபு உண்டு. அதன் காரணம் அவரிடம் உள்ளுள் அமர்ந்திருக்கும் இறைவன் என்பதுதான். காலமாற்றத்தால் இவ்வழக்கம் மிக அருகிவிட்டது. நம்மை வணங்குவது, நான் பெரியை என்ற காரணத்தினால்தான் என்ற எண்ணம் உள்ளவர்கள் சிறிது அதிகமாகிவிட்டதாலும் இவ்வழக்கம் அருகிவிட்டிருக்கலாம்.
நீக்குஇறைவன் அரச ரூபத்திலும், தன் அடியார்கள் ரூபத்திலும் காட்சி தருவதாக ஐதீகம் (திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன்). ஞான் அரசனுமல்லன், திருமாலுக்குகந்த அடியவனும் அல்லன்.
வணக்கம் சகோதரரே
நீக்கு/இன்னொரு ஶ்ரீவைஷ்ணவரைக் கண்டால் விழுந்து சேவிப்பது என்ற ஒரு மரபு உண்டு. அதன் காரணம் அவரிடம் உள்ளுள் அமர்ந்திருக்கும் இறைவன் என்பதுதான். காலமாற்றத்தால் இவ்வழக்கம் மிக அருகிவிட்டது./
தங்களின் தகவல்களை படித்து அறிந்து கொண்டேன். மிக்க நன்றி நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் நூற்றி ஆறு கோவில்களை காணும், அந்தந்த கோவில் வாசலைத் தொட்டு தொழுகின்ற பாக்கியத்தை உங்களுக்கு இறைவன் அளித்துள்ளதால், இந்த நமஸ்காரங்கள் உங்களுக்கு. வேறொன்றுமில்லை.
மற்றபடி நானும் வைணவமும் படித்ததில்லை. சைவமும் கற்று தேர்ந்ததில்லை. ஹரிஹரன் என் வாழ்வோடு இணைந்து விட்டது போல், ஹரிஹர பேதமின்றி, "அவனன்றி" எதுவுமில்லை என வாழ்ந்து வருகிறேன். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் என் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். தினமும் ஏழு மணி சுமாருக்கு நீங்கள் ப்ரார்த்திக்கத் தவறுவதில்லை.
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய ஞாயிறு கோவில் யாத்திரை பதிவும் மிக நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் அழகாக உள்ளன.
வித்தியாசமான கோபுரங்கள், மிக விசாலமான அரண்மனை போன்ற ஸ்ரீராம வைகுந்த கோவில் கோபுரங்கள் என அனைத்தையும் தரிசனம் செய்து கொண்டேன்.
அங்குள்ள ஓவியங்களும் மிக அழகு. இரண்டாவது கோவில் கோபுர சிற்பங்களும் கண்டு மகிழ்ந்தேன். இப் பதிவு மூலமாக இத்தகைய அற்புதமான கோவில்களின் தரிசனங்கள் எனக்கு கிடைத்து வருகிறது. மிக்க நன்றி சகோதரரே. தொடர்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா ஹரிஹரன் மேடன். எனக்குமே, அங்கு போயிருந்த நினைவுகள் எழுகின்றன.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம்
நீக்குபடங்கள் விளக்கின் ஒளியில் பிரதிபலிப்பதால் தெளிவு சற்றே குறைவாக உள்ளது.
பதிலளிநீக்குமேலும் தாங்கள் அனுமதி இல்லாத இடத்தில் எடுக்கும்போது அவசரமாக எடுத்து இருப்பீர்கள்.
விளக்கங்கள் வழக்கம் போல அருமை தமிழரே...
வாங்க கில்லர்ஜி... ரங்க்ஜி கோவிலில் அழகிய ஓவியங்கள், கேமரா செல்போன் உபயோகிக்கக் கூடாது. அதனால் பொறுமையாக படங்க்ள் எடுக்க முடியவில்லை.
நீக்குபுராதான ரங்க்ஜி மந்திர் படங்கள் எல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்குகருவறையைச் சுற்றியுள்ள சுவற்றில் மிக மிக அழகாக வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள். பல்வேறு புராண நிகழ்வுகளைச் சித்தரிக்க்கும் படங்கள் எல்லாம் மிக அருமை.
நேரில் பார்த்த உணர்வை தருகிறது.
ஸ்ரீ ராம வைகுந்தர் கோவில் படங்கள் எல்லாம் அருமை.
கோவில் கோபுரம் மற்றும் கோபுர அழகிய சிற்பங்கள் படம் எல்லாம் அருமை. நன்றாக எடுத்து இருக்கிறீர்கள்.
கடைசியில் அடுக்கு தீப காட்சி படம் மூலம் நன்றாக தரிசனம் செய்து கொண்டேன்.
நன்றி.
நன்றி கோமதி அரசு மேடம்.
நீக்குஓ அந்தக் கோயில்க்ளில் தமிழில் கோயிலைப் பற்றிய விவரங்கள் இருக்கிறது என்றால் தமிழர்களுடன் தொடர்புடைய கோயில்களாக இருக்கலாம். ஆச்சரியம்தான்.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் வழக்கம் போல் அருமையாக இருக்கின்றன. இப்பகுதிகளில் அடுத்தடுத்து நிறைய கோயில்கள் இருக்கும் போலத் தெரிகிறது. மக்கள் வீடுகளைச் சுற்றிலும் கோயில்களாகத்தான் இருக்குமோ?
துளசிதரன்
வாங்க துளசிதரன் சார்... முன்பு கோவில்களாக இருந்தவைகள், பிற்பாடு மெதுவாக ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளாக ஆகியிருக்கின்றன என்று நினைக்கிறேன்.
நீக்குபுஷ்கர் ஊரில் நடந்துசெல்லும் தூரத்திலேயே கோவில்கள் அமைந்துள்ளன. புஷ்கர் ஏரிதான் முக்கியமானது
தென்னிந்தியர்கள் (தமிழ் வைணவர்கள்) வட இந்தியாவில் செட்டில் ஆகி, நம்மூர் பாணியில் கோவில்களைச் சமைத்திருக்கின்றனர். விருந்தாவனம், அயோத்தி, புஷ்கர் என்று பல இடங்களிலும் இந்த மாதிரி தென்னிந்தியக் கோவில்களைப் பார்க்கலாம். ஏன் நான் காத்மண்டுவில்கூட தென்னிந்தியக் கோவிலைப் பார்த்திருக்கிறேன். அங்கெல்லாம் பூசை செய்பவர்கள் தமிழர் தலைமுறை... அவர்கள் பேசும் தமிழ் சிறிது சிதைந்திருக்கும்.
நீக்குமைல் கல்லில் ஹிந்தியில் உள்ளதை உச்சரித்துப் பார்த்து ஆங்கிலத்தில் உள்ளதோடு சரி பார்த்துக் கொண்டேன். 60% கூட தேறவில்லை.
பதிலளிநீக்குவாங்க ஜீவி சார்... புரியலையே... கோவிலில் உள்ள விளக்கத்தையா சொல்றீங்க?
நீக்குகோவில் பிரமாண்டமாக இருக்கிறது.
பதிலளிநீக்குஓவியம், கலை நுணுக்கமாக கட்டிய கட்டிடம் என அனைத்தும் அருமையாக இருக்கிறது. தமிழ் கலாச்சாரம் அங்கும் பரவி இருப்பது மகிழ்ச்சி.
நன்றி மாதேவி... நம்ம தமிழ் கலாச்சாரம் எங்க பார்த்தாலும் நம்ம ஊர், நம்ம இனம் என்ற மகிழ்ச்சி வருவதைத் தவிர்க்க முடியாது. ஒரு தடவை தென்னாப்பிரிக்கர் ஒருவர், எங்க கம்பெனியில் ஜாயின் பண்ணி ஒரு மீட்டிங்கின்போது அவர் கையில் ஏகப்பட்ட கயிறு கட்டியிருந்தார் (வித வித நிறத்தில்). அவர் என்னிடம், தான் தென்னாப்பிரிக்காவில், இந்து மதக் காப்பாளர்களில் ஒருவர் என்றார்.. ஆச்சர்யமாக இருந்தது. (அதாவது இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து அவரின் முன்னோர்கள் சென்று செட்டிலாயிருப்பர்)
நீக்குசமீபத்தில் யூடியூபில் முன்னாள் போராளிகளின் இன்னாள் நிலைமை என்பதைக் கண்டேன். சமரில் ஈடுபட்டவர்கள் தற்போது காயம், உடல் ஊனத்துடன் குடும்பம் நடத்தக் கஷ்டப்படுவதைப் பார்த்து மிகவும் மனம் வருத்தமடைந்தது. (நான் பார்த்தது ஒரு பெண் போராளியின் இன்றைய நிலைமை)