ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு எனும் பி சுசீலா பாடல்.
ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு
ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு
அன்னையவள் திருப்புகழை தினம் நீ பாடு
அன்னையவள் திருப்புகழை தினம் நீ பாடு (ஆதி)
குங்குமத்தில் கோவில்கொண்டு தெய்வமாய் குடியிருப்பாள்
மங்கையர்க்கு திலகமிட்டு அன்னையாய் துணையிருப்பாள்
குங்குமத்தில் கோவில்கொண்டு தெய்வமாய் குடியிருப்பாள்
மங்கையர்க்கு திலகமிட்டு அன்னையாய் துணையிருப்பாள்
மங்கலமே வடிவெடுத்து மாதரசி வீற்றிருப்பாள்
மங்காத நிலவாக எந்நாளும் ஒளி கொடுப்பாள்
எந்நாளும் ஒளி கொடுப்பாள்
எந்நாளும் ஒளி கொடுப்பாள் (ஆதி)
அன்னையிடம் நாகம் வந்து பக்தியுடன் குடை பிடிக்கும்
அபிஷேகம் பால் மழையில் தேவி அவள் மனம் களிக்கும்
அன்னையிடம் நாகம் வந்து பக்தியுடன் குடை பிடிக்கும்
அபிஷேகம் பால் மழையில் தேவி அவள் மனம் களிக்கம்
நம்பிவரும் எல்லோர்க்கும் நல்ல தொரு வழி பிறக்கும்
நாயகி திருவருளே பொன்னான வாழ்வளிக்கும் (ஆதி)
வேற்காடு திருத்தலமே வந்தவர்ககு புகழ் கொடுக்கும்
வெற்றிதரும் திருச்சாம்பல் கொண்டவர்க்கு பலன் கிடைக்கும்
கருமாரி திருப்பதமே வேண்டிவந்தால் வரம் கொடுக்கும்
கற்பூர ஜோதியிலே எந்நாளும் அருள் கிடைக்கும்
எந்நாளும் அருள் கிடைக்கும் (ஆதி)
=================================================================================================
இன்றைக்கு 54 வருடங்களுக்கு முன் 1970 அக்டோபர் 29 ஆம் தேதி வெளியான படம் எங்கிருந்தோ வந்தாள். பாலாஜி தயாரிப்பில் ஏ ஸி திருலோகச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி ஜெயலலிதா முத்துராமன் நாகேஷ் பாலாஜி நடித்துள்ள இத்திரைப்படத்துக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன். பாடல்கள் கவியரசர். படம் சில்வர் ஜூப்ளி படம்.
இதே வருடம், இதே நாளில் சிவாஜியின் மற்றொரு படமான சொர்க்கம் படமும் வெளியானது. ஒரே நாளில் இரண்டு படங்கள். இரண்டும் வெற்றி படங்கள். அந்த நாள் அது போல ஒரு பொற்காலம். இப்போது போல ஒரே படம் ஒன்பது தியேட்டர்களில் வெளியாவது இல்லை.
எங்கிருந்தோ வந்தாள் படத்திலிருந்து இன்று சிரிப்பில் உண்டாகும் ராகத்தில் பாடல் பகிர்கிறேன். இதே படத்தில் நான் உன்னை அழைக்கவில்லை, ஒரே பாடல் உன்னை அழைக்கும் போன்ற நல்ல பாடல்களும் உண்டு.
டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசீலா குரல்களில் ஒலிக்கும் பாடல். சிரிப்புக்கு ஸ்வரம் பாட வைத்திருப்பார் எம் எஸ் வி. கண்னதாசன் வரிகளில் விளையாடி இருக்க சுசீலாவும், டி எம் எஸ்ஸும் மிகவும் ரசிக்கும்படி பாடி இருப்பார்கள் - குறிப்பாக சரணங்களில். பல்லவியும் பழுதில்லை!
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே அது
வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே என்
கண்ணே பூவண்ணமே [சிரிப்பில்]
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
மின்னல் பாதி தென்றல் பாதி
உன்னை ஈன்றதோ
மின்னல் பாதி தென்றல் பாதி
உன்னை ஈன்றதோ - நீ
விடியும் காலை வெள்ளி
புது விபரம் சொல்லும் பள்ளி
ஓஓஓ….
கண்ணே பூ வண்ணமே
எல்லாம் உன் எண்ணமே
நிலவென வளரட்டும்
கவிதை வெள்ளம்
நினைவுடன் தெளியட்டும்
இளைய உள்ளம்
என்னை உன்னோடு கண்டேன் ஓ
உன்னைக் கண்ணாகக் கொண்டேன்
நிலவென வளரட்டும்
கவிதை வெள்ளம்
நினைவுடன் தெளியட்டும்
இளைய உள்ளம்
என்னை உன்னோடு கண்டேன் ஓ
உன்னைக் கண்ணாகக் கொண்டேன்
தங்கம் பாதி வைரம் பாதி
அங்கம் என்பதோ
நூல் இடையில் வாழும் பெண்மை
உன் இசையில் ஆடும் பொம்மை
ஓஓஓ….
எங்கும் உன் வண்ணமே
எல்லாம் உன் எண்ணமே
(சிரிப்பில்)
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். கொலு நாட்களில் சுசீலா அவர்களின் பாடல் கேசட்கள் காலை முதல் ஆரம்பித்து, இரவு வரை தொடர்ந்த அந்த காலங்களின் இனிமையை மறக்க முடியாது. பாடல்களுடன் நானும் மெய்யுருகி பாடி பரவசமடைந்திருந்த காலம். அருமையான பாடல்.
இரண்டாவது திரைப்பட பாடலும் சிலோன் வானொலியில் அடிக்கடிகேட்டிருக்கிறேன். இந்தப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். படமும் நன்றாக இருக்கும். இறுதி காட்சிகள் மறந்து விட்டது. ஆனால், அப்போதெல்லாம் கண்டிப்பாக நல்ல முடிவாகத்தான் அமையும். படமும் பாடல்களும், ரேடியோவிலும், தொலைக்காட்சியிலும் (வெள்ளி ஒலியும், ஒளியும்) கேட்டு, பார்த்துள்ளேன்.
படத்தைப்பற்றி தாங்கள் தந்த விபரங்களுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா... பி சுசீலா பாடல்களில் இதெல்லாம் ஒரு செட்டாக அமையும் பாடல்கள்.
நீக்குஆமாம். அந்தக் காலத்தில் படங்களில் பெரும்பாலும் சுக முடிவுதான் வைப்பார்கள். இந்தப் படமும் அப்படித்தான்.
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குமுதல் பாடல் அடிக்கடி கேட்ட பாடல். முன்பு இந்த பாடலை அடிக்கடி முனு முனுப்பேன். அவ்வளவு பிடிக்கும்.
பதிலளிநீக்குஅடுத்த பாடலும் அடிக்கடி வானெலியில் கேட்ட பாடல்.
படமும் பார்த்து இருக்கிறேன்.
இன்று இரண்டு பாடல்களையும் கேட்டு ரசித்தேன்.
நன்றி கோமதி அக்கா.
நீக்குஇரண்டு பாடல்களுமே மிக அருமையான பாடல்கள்.
பதிலளிநீக்குஎங்கிருந்தோ வந்தாள் படமே புராணக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. ரசிக்கும்படியான படம். அதன் மற்ற பாடல்கள் இன்னும் அருமையாக இருக்கும்.
நன்றி நெல்லை. மற்ற பாடல்கள் கொஞ்சம் சோகமானவை. இது காதல் பாடல். அதுவும் சரணம் முடிந்து பல்லவி தொடங்கும் இடம் சுகம்.
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க..
நீக்குதண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
பதிலளிநீக்குதளிர் விளைவாகித்
தமிழும் வாழ்க
வாழ்க..
நீக்குஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு...
பதிலளிநீக்குஅற்புதமான பாடல்.. என்றும் இனிமையானது..
மகிழ்ச்சி ..
நன்றி ஸ்ரீராம்..
__/\__ வாழ்க..
நீக்குசிரிப்பில் உண்டாகும் ராகத்திலே...
பதிலளிநீக்குகாலத்தை வென்ற பாடல்..
இன்று மாதிரி கலைத் துறையில் - ஆணவம் அகங்காரம் தலைவிரி கோலம் கொள்ளாதிருந்த அந்தக் காலத்தில் வெளியான அற்புதப் படைப்பு..
மகிழ்வைத் சொல்லும்போது அல்லாததை சொல்லாதிருப்போம்!
நீக்குஎங்கிருந்தோ வந்தாள் - திரைப்படத்தை எத்தனை முறை பார்த்தாய்?...
பதிலளிநீக்குநினைவுக்கு எட்டிய தூரம்...
கணக்கு இல்லை..
அப்படியா? அத்தனை தரமா? ஏன்? அப்படி என்ன அதில்?
நீக்குவிஸ்வாமித்ரர் - மேனகை, துஷ்யந்தன் - சகுந்தலை..
பதிலளிநீக்குஎன்னவொரு மென்மையும் நளினமும்...
அந்தக் காலத்தைப் போல வேறொரு காலம் வரப்போவது இல்லை..
கடந்து செல்லும் நாட்களை போல் என்றுமே இனி வராது வரும் காலங்கள்!
நீக்குதுஷ்யந்தன் சகுந்தலைக்கு அளித்த பரிசு - பரதன்..
பதிலளிநீக்கு__/\__
நீக்குமுழுக்கதையும் என்னுடையது என்று டமாரம் அடிக்காமல் எங்கிருந்தோ வந்தாள் படத்தில் துஷ்யந்தன் சகுந்தலை காதலையும் சொல்லியிருப்பார்கள்....
பதிலளிநீக்குசீர்காழியார் லீலா குரல்களில் அருமையான காவிய நாடகம் காட்டப்பட்டிருக்கும்..
அப்படியெல்லாம் இனி திரைக் காட்சிகள் அமையாது..
உண்மைதான். லாட்ஜு போலதான் மராட்டிய மன்னர் சிவாஜி கதையும், ஒதெல்லோ, சீசர், ப்ரூட்டஸ் பகுதிகளும்.
நீக்குஇரண்டும் சிறப்பான பாடல்கள் ஜி
பதிலளிநீக்குஆமாம் ஜி.
நீக்குஎங்கிருந்தோ வந்தாள் படத்தில் அருமையான நடனப்பாடலும் இருக்கிறது. அதனையும் பகிரவும்.(வந்தவர்கள் வாழ்க.. மற்றவர்கள் வருக)
பதிலளிநீக்குமுயல்கிறேன் நண்பரே..
நீக்குமுதலாவது அம்மன் பாடல் மிகவும் பிடித்தபாடல் கேட்டிருக்கிறேன். வேற்காடு அம்மன் அனைவரையும் காக்க வேண்டுவோம்.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடலும் கேட்டிருக்கிறேன்.
நன்றி மாதேவி.
நீக்குமுதலாவது அம்மன் பாடல் மிகவும் பிடித்தபாடல் கேட்டிருக்கிறேன். வேற்காடு அம்மன் அனைவரையும் காக்க வேண்டுவோம்.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடலும் கேட்டிருக்கிறேன்.
நன்றி மாதேவி.
நீக்கு