இன்றைய தனிப்பாடல் பாலமுரளி கிருஷ்ணா பாடல்.
நான் தேடிய பாடல் ஒன்று. கிடைத்தது ஒன்று.நான் தேடியது 'அழகன் முருகன் வந்தான்' என்னும் பாடல். கிடைத்தது கீழே உள்ள பாடல்.
==================================================================================================================
1999 ல் வெளியான அமர்க்களம் படம் சில சிறப்புகளைக் கொண்டது.
இதில்தான் அஜித்-ஷாலினி காதல் மலர்ந்தது. ஷாலினி வேடத்துக்கு முதலில் ஜோதிகாவை கேட்டாராம் இயக்குநர் சரண். அவருக்கு தேதிகள் இல்லாததால் ஷாலினி. ரகுவரன் வேடத்துக்கு முதலில் பேசப்பட்டவர் அமிதாப். அவரும் ஒத்துக்கொண்டாராம். ஏனோ அப்புறம் அவருக்கு பதில் ரகுவரன்.
சரண் சிறந்த இயக்குனர். அவர் படங்கள் பார்த்து ரசிக்கும்படி இருக்கும். இந்தப் படத்துக்கு முந்தைய படமான காதல் மன்னன் தோல்விப்படமாம். ஆனால் நான் இன்றும் ரசிக்கும் படங்களில் அதுவும் ஒன்று. அந்த தோல்விக்காக அஜித் இன்னொரு படம் நடித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லி நடித்துக் கொடுத்த படமாம் அமர்க்களம்.
வைரமுத்துவின் பாடல்களுக்கு பரத்வாஜ் இசை. நல்ல இசை அமைப்பாளர். இந்தப் படத்தில் மூச்சு விடாமல் பாடி இருப்பதாய் நம்பப்படும் இன்னொரு பாடலை S P பாலசுப்ரமணியம் பாடி இருக்கிறார். அதுதான் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்'
ஹீரோ கேட்டதாக சொல்லப்படும் விஷயங்கள் யாவுமே சுவாரஸ்யமானவை. காட்சியும் சுவாரஸ்யமாகவே படமாக்கப்பட்டிருக்கும். இன்னொரு விசேஷம், பல்லவி, சரணம், பல்லவி சரணம் என்கிற அமைப்பு இல்லாத பாடல். பாடல் தொடர்ந்து கொண்டே இருக்கும். பாடலின் இறுதியில் உச்சஸ்தாயியில் பாடி நிறுத்துவார் SPB.
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்…
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்…
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்…
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்…
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்…
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…
உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
பூவின் மடியில் படுக்கை கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்
நிலவில் நனையும் சோலை கேட்டேன்
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப் பறிக்க விண்மீண் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந் தலை மேல் மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவை கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்
நடுங்க விடாத செல்வம் கேட்டேன்
மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன்
ராஜராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்
சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன்
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற தூய்மை கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் தோள்கள் கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமைக் கேட்டேன்
தொலைந்து விடாத பொறுமை கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்ன சின்னத் தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன்
குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்....
பூவின் மடியில் படுக்கை கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்
நிலவில் நனையும் சோலை கேட்டேன்
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப் பறிக்க விண்மீண் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந் தலை மேல் மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவை கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்
நடுங்க விடாத செல்வம் கேட்டேன்
மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன்
ராஜராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்
சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன்
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற தூய்மை கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் தோள்கள் கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமைக் கேட்டேன்
தொலைந்து விடாத பொறுமை கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்ன சின்னத் தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன்
குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்....
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு..
பதிலளிநீக்குகுறள் வாழ்க..
வாழ்க
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க வாங்க செல்வாண்ணா வணக்கம்.
நீக்குதண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
பதிலளிநீக்குதளிர் விளைவாகித்
தமிழ் நிலம் வாழ்க..
வாங்க
நீக்குஇன்றைய முதல் பாடல் வெகு நாட்களுக்குப் பிறகு கேட்கின்றேன்..
பதிலளிநீக்குசிறப்பு..
ஆம். இதே பாடல் வேகமான நடையில் இருக்கும், அது கிடைக்கவில்லை.
நீக்குமௌனத்தில் விளையாடும் மனசாட்சியே!..
பதிலளிநீக்குமனதை உருக்குகின்ற பாடல் அது!..
கவிஞர்-மெல்லிசை மன்னர் - MBK
நீக்குகவிஞர்-மெல்லிசை மன்னர் - √√√
நீக்குMBK - ?? ??..
M. Balamurali Krishna Movie : நூல்வேலி
நீக்கு!!!
நீக்குமுருகா..
பதிலளிநீக்குமுருகா வா..
மோகன குஞ்சரி பதியே வா!..
70 களில் இந்தப் பாடல் மனப்பாடம்..
முருகா.. முருகா..
__/\__
நீக்குபாலு அவர்களது குரல் இனிமையாலும்
பதிலளிநீக்குபரத்வாஜ் அவர்களது இசைத் திறத்தாலும் கொஞ்ச நாட்கள் ஓடித் திரிந்த பாடல்!..
கொஞ்ச நாட்கள்? இன்னமும் ஹிட் தான்.
நீக்குவாழ்க நலம்..
பதிலளிநீக்குவளர்க நலம்!..
வாழ்க.. வளர்க
நீக்குமுதல் பாடல் ரொம்ப நாளைக்கு அப்புறம் கேட்கிறேன். மனதை மயக்கும், உருக்கும் பாடல். அபூர்வ பகிர்வு.
பதிலளிநீக்குநன்றி நெல்லை. உண்மையில் இந்த கமெண்ட்டை 'பரமபாவனா கிருஷ்ணா' பாடலுக்கும் எதிர்பார்த்தேன்.
நீக்கு
பதிலளிநீக்குமுருகா..
முருகா வா..
மோகன குஞ்சரி பதியே வா!..
வருவான் வருவான் வடிவேலன்..
தருவான்
தருவான் தயாபரன்!..
படித்தேன், அங்கும்!
நீக்குசரண் டைரக்ஷன் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் படங்கள் பெருவெற்றி பெறாத்து மக்களின் தவறுதான், அதாவது அத்தகைய படங்களை ரசிக்கும் அளவு மக்கள் மனம் வளரவில்லை.
பதிலளிநீக்குகேங்ஸ்டர் படம் மிக நல்லா இருக்கும் (படப் பெயர் மறந்துவிட்டது). காதல் மன்னன் மிகவும் ரசிக்கும்படி இருக்கும், சில பல முறை பார்த்தாலும் சலிக்காது.
ஆமாம். எனக்கும் பிடிக்கும். அதே போல லிங்குசாமி.
நீக்குநான் ஒரு படத்தை ஒரே சிட்டிங்கில் (தியேட்டரில் வேறு வழியில்லை) பார்த்ததே கிடையாது. விதிவிலக்கு கோகுலத்தில் சீதை.
நீக்குஎன்னைப்பொறுத்த வரை ஒரே சிட்டிங்கில் பார்த்து விட்டால் (OTT யில்) அடுத்த படத்துக்கு நகரலாம். ஆனால் நேற்று கள்வன் தொடங்கியதும் விசிட்டர்ஸ். நிறுத்தி வைத்திருக்கிறேன்!
நீக்குஇப்பதான் நான் நெட்டில் படங்கள் ஃப்ரீயாகக் கிடைத்தால் பார்க்கத் தொடங்கியிருக்கிறேன், நெல்லை அண்ட் ஸ்ரீராம். அதில் சரணின் படங்கள் இப்ப நெட்டில் பார்த்துக் குறித்து வைத்திருக்கிறேன். கீழே நான் சொன்ன படம் மாதவன் நடித்தது ஜே ஜே. ஒரு காட்சி அமைப்பு ரொம்பப் பிடித்திருந்தது.
நீக்குஏர்டெல் நம்பருக்கு அவர்களின் ஏர்டெல்ஸ்ட்ரீமில் படங்கள் ஃப்ரீன்னு இப்பதான் தெரிந்தது. அதில் போர்த்தொழில் பார்த்தேன் நல்லாருக்கு. த்ரில்லர். மிக அருமையா எடுத்திருக்காங்க. மையக்கருத்து மிக சூப்பரான கருத்து.
கீதா
நெல்லை எனக்கும் ஒரே சிட்டிங்கில் பார்க்க முடிவதில்லை. விட்டு விட்டுதான் பார்க்க முடிகிறது.
நீக்குகீதா
ஜே ஜே படமும் ரொம்ப நல்லாருக்கும், கதாநாயகி ரொம்ப குழந்தைத்தனமா தெரிவா. வட்டாரம் படம் சூப்பர் (மணிரத்னம் நாயகன், காட்ஃபாதர் இன்ஸ்ப்பிரேஷன் போல இவருக்கு இது)
நீக்குஎன்னால பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் தொலைக்காட்சி பார்க்க முடியாது. தூங்கிடுவேன். அதுபோல உட்கார்ந்து உபந்நியாசங்கள் கேட்க முடியாது. துஷ்யந்த் ஶ்ரீதரின் யாத்திரைக்குச் செல்கிறேன், என்னாகப்போகிறதோ
நீக்குஎனக்குத் தூக்க்ம் வராது, நெல்லை. ஆனால் ஏதேனும் ஒரு குறுக்கீடு வரும். நானே கூட 15 நிமிடம் ஆகிவிட்டால் எழுந்து நடக்க வேண்டும் என்று நடக்கத் தொடங்குவேன் அல்லது ஏதாச்சும் வேலை செய்துவிட்டு வருவேன். ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கக் கூடாதுன்னு.
நீக்குஎனக்கு உபன்யாசம் கேட்கும் வழக்கமே இல்லை!!!! ஏனோ ஆர்வமும் இல்லை.
//துஷ்யந்த் ஶ்ரீதரின் யாத்திரைக்குச் செல்கிறேன், என்னாகப்போகிறதோ//
ஓஹோ! ஏன் நெல்லை அவரும் கூட வந்து, யாத்திரையிலும் உபன்யாசம் செய்வாரோ? எல்லாம் நல்லபடியா முடியும். ஏன் போகும் முன்னரே என்னாகப் போகிறதோன்னு எண்ணம்? கர்ர்ர்ர்ர் நல்லபடியா போய் வருவீங்க.
கீதா
ஜே ஜே படமும் ரொம்ப நல்லாருக்கும், கதாநாயகி ரொம்ப குழந்தைத்தனமா தெரிவா. வட்டாரம் படம் சூப்பர் (மணிரத்னம் நாயகன், காட்ஃபாதர் இன்ஸ்ப்பிரேஷன் போல இவருக்கு இது)//
நீக்குஓ அப்படியா...ஆனா இன்னும் ஜே ஜே கிடைக்குதான்னு பார்க்கலை. வட்டாரம் படம் போஸ்டர் என்னவோ தாதா படம் போலக் காட்டினதுனால அத நோட் பண்ணிக்கலை.
கீதா
நேற்று, (எத்தனையாவது தடவை என்பது நினைவில்லை) மரகத நாணயம் படம் பார்த்தேன். அருமையான பொழுது போக்குப் படம். அந்த டைரக்டர் வெற்றி பெற்றாரா? பல டைரக்டர்கள் வித்தியாசமான படங்களை முதலில் தந்து பிறகு சுழலில் சிக்கிக்கொள்கிறார்கள்.
பதிலளிநீக்குயார் இயக்குனர் என்று தெரியவில்லை. நானும் அந்தப் படம் பார்த்திருக்கிறேன். வெங்கட் பிரபுவின் சில படங்கள் நன்றாயிருக்கும். வெறும் "நாணயம்' படம் கூட நன்றாயிருக்கும். SPB பிரசன்னா நடித்த அந்தப் படத்தில் ஒரு பாடலும் எனக்குப் பிடிக்கும்.
நீக்குஅட! மரகத நாணயம் அப்படி ஒரு படமா?
நீக்குநெல்லை உங்கள் பாயின்ட் சரி சரணின் பல படங்கள் வெற்றி பெறாததற்கு மக்கள்தான் காரணம்.
இப்ப நெட்டில் பார்த்தப்ப, 2017, 2019 ல கூட இயக்கி இருக்கிறார் என்று தெரிகிறது. ஆயிரத்தில் இருவர், மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்று. நெட்டில் கிடைக்குதான்னு பார்க்கணும்.
கீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன் . நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம், நன்றி.
நீக்குஸ்ரீராம், இன்று இரு பாடல்களுமே அருமையான பாடல்கள். அதுவும் இரு பெரும் தலைவர்கள்! இரண்டுமே ரசித்த பாடல்கள்! இப்பவும்.
பதிலளிநீக்குமுதல் பாடல் பாலமுரளி பாடுவதைச் சொல்லணுமா என்ன!! குந்தலவராளி ராகம் வித்தியாசமாக! அதுதானே அவரது அடையாளம்!
கீதா
ஒரிஜினல் பாடல் பாலமுரளி பாடல் இன்னும் சற்று வேகமான டெம்ப்போவில் இருக்கும் கீதா. அது கிடைக்கவில்லை.
நீக்குஅது நான் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். வேகமா பாடியதும். ஆமாம் இது ஸ்லோ டெம்போ.
நீக்குகீதா
பாலமுரளி அவர்களே எழுதி கம்போஸ் செய்ததோ?!
பதிலளிநீக்குகீதா
இல்லை என்று நினைக்கிறேன். ரேடியோவில் காலை பக்தி மாலையில் கேட்ட நினைவு. இவர் கச்சேரியில் தனியாக பாடி இருக்கிறார்.
நீக்குஅவர் கச்சேரியில் பாடிய பாடல்தான் என் மாமா கேஸட்டில் வைத்திருந்தார் அப்படிக் கேட்டதுதான்.
நீக்குநெட்டில் இங்கு நீங்க பகிர்ந்திருப்பதைக் கேட்டிருக்கிறேன், ஸ்ரீராம்.
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் இதுவரை கேட்டதில்லை. இப்போதுதான் கேட்டு ரசித்தேன். பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரல் இனிமையில் நன்றாக உள்ளது.
இரண்டாவது திரைப்படப்பாடல்அடிக்கடி வானொலியில் கேட்டிருக்கிறேன். எஸ். பி. பி அவர்கள் நிறுத்தாமல் பாடும் முதல் பாடல் இதுதான் இல்லையா? இரண்டாவது தான் "மண்ணில் இந்த காதல் அன்றி" போலும்.
இந்தப் பாட்டும், அஜித் நடிப்பும் நன்றாக இருக்கும். படம் கூட தொலைக்காட்சியில் பார்த்தாக நினைவு. இந்தப் பாடல் வந்த புதிதில் நாங்களும், பல "கேட்டேன்" களில், கிடைக்காததை சொல்லி பாடியது நினைவுக்கு வருகிறது.:))
இன்றைய அருமையான பாடல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா. பாலமுரளியின் இதே ஒரிஜினல் பாடல் இன்னும் நன்றாய் இருக்கும். மண்ணில் இந்த காதல் பாடல்தான் முதலில் வந்தது.
நீக்குசரண் நல்ல இயக்குனர். பாலசந்தர் ஸ்கூல் மாணவர். சரண் என்றதுமே அவர் வளர்ந்து கால் ஊன்றும் காலம் 2000த்தின் தொடக்கம். சரணை வடபழனி சரவணபவனில் பார்த்திருக்கிறேன். மற்றொரு டேபிளில் அமர்ந்திருந்தார். அமர்க்களம் வெளிவந்த பிறகான சமயம் என்று தெரிந்தது என் கூட இருந்தவர்கள் சொல்லி அறிந்தேன்.
பதிலளிநீக்குசரணின் படங்களில் - வசூலராஜா எம்பிபிஎஸ் தவிர - ஆனா அது ஹிந்தி படத்தின் தமிழ் வெர்ஷன் அதை அவரது படம் என்று சொல்ல முடியாதுதான் - எதுவும் முழுவதும் பார்த்தது இல்லை. சில காட்சிகள் மட்டுமே. காட்சி அமைப்பு நன்றாக இருந்தது. படம் பெயர் மறந்து போச்சு மாதவன் நடித்தது.
இப்போது இயக்குகிறாரா தெரியல. அவருடைய படங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்ததுண்டு. நெட்டில் கிடைக்குதான்னு பார்க்கணும். ஆனால் நல்ல இயக்குனர். ஒரு சிலருக்குத்தான் அதிர்ஷ்ட தேவதை தட்டுகிறாள்!
கீதா
இரண்டாவது பாடல் மிகவும் பிடித்த பாடல். தலைவர் பாடிய பாடல்! செமையா இருக்கும் சமீபத்தில் கூடக் கேட்டேன். இப்பவும்.
பதிலளிநீக்குபரத்வாஜும் கூட நல்ல இசையமைப்பாளர். அவரும் இப்ப இசை அமைக்கிறாரா தெரியலை.
கீதா
/// நல்ல இசையமைப்பாளர்.
நீக்குஅவரும் இப்ப இசை அமைக்கிறாரா.?
.///
நல்ல இசைக்கும். நல்ல எழுத்துக்கும் தான் இப்போ வேலையில்லையே!..
குத்து வெட்டு
டமால் டுமீல் களின் காலம் இது..
இதற்குள் இரண்டு அர்த்தங்கள்..
அனைவருக்கும் நன்றி, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குமுதல் பாடல் கேட்டு இருக்கிறேன். இனிமையாக மனதில் அமைதியை ஏற்படுத்தும் பாடல். கேட்டு ரசித்தேன்.
பதிலளிநீக்குஅடுத்த பாடல் கேட்டு இருக்கிறேன், சினிமா பார்த்தது இல்லை.
பாடலை தொலைக்காட்சியில் பலமுறை கேட்டு இருக்கிறேன்.
முதல் பாடல் முன்பு கேட்ட ஞாபகம் இல்லை ஜி.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் நான் அதிகம் கேட்டு ரசித்த பாடல்.
பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் பாடல் மனதிற்கு இதமாக இருந்தது..
பதிலளிநீக்குஎஸ்பிபி யின் பாடல் மூச்சை அடக்கிப் பாடியிருப்பது அருமை. இந்தப் படம் பார்த்ததில்லை பாடலும் அதிகம் கேட்டதில்லை. அந்த வருடங்களில் கேரளத்தில். மொபைல் இல்லை. இப்போதேனும் மொபைல் இணையம் இருப்பதால் எல்லாப் படங்கள் பற்றியும் மொபலில் தெரிந்து கொள்ள முடிகிறது. தியேட்டரில் பிள்ளைகள் பார்க்க வேண்டும் எனும் போது பார்க்கவும் முடிகிறது.
துளசிதரன்