மதன் கார்க்கியின் பாடலுக்கு மரகதமணி இசை. நயனா நாயர் குரல்.
முறைதானா முகுந்தா………
குழு : சாிதானா சனந்தா
{ முறைதானா முகுந்தா
குழு : சாிதானா சனந்தா } (2)
பூவையா் மீது கண் மேய்வது முறையா பாவை
என் நெஞ்சம் தினம் தேய்கின்ற பிறையா
போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா
கண்ணா நீ தூங்கடா
குழு : என் கண்ணா நீ தூங்கடா
உன் விரலினில் மலை சுமந்தது போதுமே
கண்ணா நீ தூங்கடா
குழு : என் கண்ணா நீ தூங்கடா
உன் இதழினில் குழல் இசைத்தது போதுமே
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
குழு : என் கண்ணா நீ தூங்கடா
பெண் : ………………………………
குழு : ………………………………
குழு : கோபியா் குளிக்கையிலே உடைகள் திருடி கலைத்தாய்
ஓய்வெடு மாயவனே
பானையில் வெண்ணையினை தினமும் திருடி இழைத்தாய்
தூங்கிடு தூயவனே
குழு : சா…………………………மனா………
பெண் : மோ…………………………கனா………
போதும் கண்ணா நீ செய்யும் திருட்டு வானம்
எங்கும் சூழ்ந்தது இருட்டு
மாா்பில் சாய்ந்து கண் மூடடா
கண்ணா நீ தூங்கடா
குழு : என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
குழு : என் கண்ணா நீ தூங்கடா
குழு : சோலையின் நடுவினிலே மயங்கி கிரங்கி கிடந்தேன்
நான் உனதழகினிலே
மயங்கி கிரங்கி கிடந்தேன் தான் உனதழகினிலே
குழு : மா……………………தவா……………
யா……………………தவா…………
லீலை செய்தே என்னை நீ கவிழ்க்க காளை மோதி
உன்னையும் கவிழ்க்க
காயம் என்னால் கொண்டாயடா
கண்ணா நீ தூங்கடா
குழு : என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
குழு : என் கண்ணா நீ தூங்கடா
குழு : { முறைதானா முகுந்தா
சாிதானா சனந்தா } (2)
குழு : மாதனா மதுசூதனா மனோகரா மணிமோகனா
மாதனா மதுசூதனா
மனோகரா மணிமோகனா
குழு : முறைதானா முகுந்தா
சாிதானா சனந்தா
கண்ணா….. கண்ணா…..
கண்ணா….. கண்ணா…..
குழு : ஆனந்த அனிருதா ஆனந்த அனிருதா
கண்ணா கண்ணா கண்ணா
கிருஷ்ணா ராதா ரமணா கிருஷ்ணா
கண்ணா நீ தூங்கடா
===================================================================================================
சமீபத்தில் வெளியான ஒரு சிவகுமார் பேட்டியிலிருந்து...
"பழனிச்சாமி என்கிற உங்கள் பெயர் சிவகுமார் என்று மாறியபோது எப்படி உணர்ந்தீர்கள்?" என்கிற கேள்விக்கு சிவகுமார் சொல்கிறார் : "உண்மையில் என் பெயர் பழனிச்சாமி இல்லை. பாலதண்டபாணி. என் அப்பா ஒரு ஆஸ்ட்ராலஜர். அவர்தான் பாலதண்டபாணி என்று பெயர் வைத்தார். 'பையனோட ஒரு வயசுக்குள்ள நான் ஐறந்துட்டேன்னா அவன் பெயரை பழனிசாமின்னு மாத்திடுங்க. நான் இருந்தா இந்தப் பெயரே தொடரட்டும்' என்று சொன்னார். அவர் இறந்துட்டதால பழனிச்சாமின்னு பெயர் மாறியது. சிவகுமார்ங்கற பெயரை ஏ வி எம்..தான் வைத்தார்.
பதினாலு வயது வரை பதினாலு படங்கள். அடுத்த பதினாலு வருடத்தில்?
"நான் முதன் முதலில் ஏழு வயதில் பார்த்த படம் சந்திரலேகா. 14 வயதில் 14 படங்கள் பார்த்திருந்திருப்பேன். அடுத்த பதினாலு வருடங்களில் 100 படங்களில் நடித்து விட்டேன். சினிமா வசனங்கள் எனக்கு மனப்பாடம் ஆனாலும் எனக்கு ஓவியம் வரைவதில்தான் ஆர்வம் இருந்தது. சிறந்த ஓவியனாகி உலகத்தையே வெல்ல வேண்டும் என்ற வெறி இருந்தது. சுண்டு விரலால் இந்த உலகத்தைச் சுற்றுவேன் என்னும் வெறி எனக்கு இருந்தது. அப்படி இருந்தால்தான் கொஞ்சமாவது சாதிக்க முடியும்."
முருகன் வேடங்களில் நடித்தது பற்றி...
.
"சிலோனிலிருந்து ஒரு பையன் போன் பண்ணினான். 'ஐயா உங்க படம் பார்த்தேன். பழைய படம். முருகன் வேஷத்துல நல்லா இருந்தீங்க' என்றான். நான் சொன்னேன், 'அப்போல்லாம் எனக்கு நடிக்கவே தெரியாது. முதல் ஐந்து வருஷம் எனக்கு நடிக்கவே வராது. அப்படியே வந்து நிற்பேன்' என்றேன். அவன் சொன்னான், "அதனால்தான் நீங்க முருகன் மாதிரியே இருந்தீங்க...நடிசீங் கன்னா முருகன் மாதிரி இருந்திருக்காது. " என்றானாம்.
===========================================================================================
இந்தப் பாட்டு கேட்டிருக்கிறீர்களோ?
கல்யாணமண்டபம் படத்திலிருந்து PB ஸ்ரீனிவாஸ் P சுசீலா குரலில் பார்த்தசாரதி இசையில் கல்யாண்குமார் நடிப்பில் வரும் பாடல்.
இந்தப் பாடலில் வரும் MS மாலதியை தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் திருமணம் செய்து கொண்டார் என்கிறது ஒரு தகவல்.
PB ஸ்ரீனிவாஸ்: வா…….ம்…..
P சுசீலா : ம்ஹூம்……
P சுசீலா : பூத்திருக்கும் விழியெடுத்து
மாலை தொடுக்கவா
பூத்திருக்கும் விழியெடுத்து
மாலை தொடுக்கவா
P சுசீலா : புன்னகையில் செண்டமைத்து
கையில் கொடுக்கவா……
புன்னகையில் செண்டமைத்து
கையில் கொடுக்கவா……
P சுசீலா : பூத்திருக்கும் விழியெடுத்து
மாலை தொடுக்கவா
P சுசீலா : மாங்கனியின் தீஞ்சுவையை
இதழிரண்டில் தரலாமா
மாங்கனியின் தீஞ்சுவையை
இதழிரண்டில் தரலாமா
P சுசீலா : மாதுளையை பிளந்தெடுத்தே
மாதுளையை பிளந்தெடுத்தே
காதலை அளந்து தரலாமா
PB ஸ்ரீனிவாஸ் : தேமதுர செவியினிலே
மணியாய் ஒலிக்கவா
தேமதுர செவியினிலே
மணியாய் ஒலிக்கவா
PB ஸ்ரீனிவாஸ் : செம்பவள நாவினிலே
தேனாய் இனிக்கவா……..
செம்பவள நாவினிலே
தேனாய் இனிக்கவா……..
PB ஸ்ரீனிவாஸ் : தேமதுர செவியினிலே
மணியாய் ஒலிக்கவா
PB ஸ்ரீனிவாஸ் : பனிக் குளிரின் மொழியினிலே
படை எடுத்தாய் தளிர்க்கொடியே
பனிக் குளிரின் மொழியினிலே
படை எடுத்தாய் தளிர்க்கொடியே
PB ஸ்ரீனிவாஸ் : அமுத இசை மயக்குதடி
அமுத இசை மயக்குதடி
அருவியின் இனிமை சுரக்குதடி
இருவர் : ஆசை முகம் அருகிலிருந்தால்
ஆவல் தணியுமா
அன்பு வெள்ளம் கரை கடந்தால்
இன்பம் குறையுமா……….
இருவர் : ஆசை முகம் அருகிலிருந்தால்
ஆவல் தணியுமா……
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம், ப்ரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவு வெளிவர தாமதமான காரணத்தை தெரிந்து கொண்டேன். மணி 6.30 ஆகியும் இன்னமும் எ. பி திறக்கப்படவில்லையே என மனதுக்குள் ஒரு கலக்கம். வேலையே ஓடவில்லை. அதனால்தான் கடந்த பதிவிலேயே ஒரு கருத்தை தந்தேன். அதற்கு உங்கள் பதிலை இப்போது அங்கு பார்த்ததும், இப்போது உங்கள் இன்றைய பதிவை பார்த்ததும் ஒரு சந்தோஷம். இறைவனுக்கு என்றும் என் நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா. உலகத்தோர் உள்ளத்திலெல்லாம் உளன் என்றிருக்கிறோமோ இல்லையோ, உங்கள் உள்ளங்களில் நாங்கள் இடம்பெற்றுள்ளோம். நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வுகள் அருமை. முதல் படம் (இரண்டு பாகமும்) தொலைக்காட்சியில்தான் பார்த்தேன். இப்போது பாடலை கேட்டவுடன் நினைவுக்கு வந்து விட்டது. எனக்கும் இந்தப்படம் மிகவும் பிடித்திருந்தது.
நடிகர் சிவக்குமாரின் பேட்டி நன்று. அவர் தந்தையின் கணிப்பு சரியாகப் போனது வருத்தந்தான். சில சமயங்களின் ஜோதிடத்தில் இந்த கணிப்புகள் சரியாகி போகும் போது மனம் ஜோதிடத்தையே வெறுத்துப் போகிறது. எங்கள் அப்பாவும் நல்ல ஜோதிடர்தான். அவரின் கணிப்புபடி அவரும் எங்களை விட்டு பிரிந்ததை நினைக்கும் போது இன்னமும் மனம் ஆறவில்லை.
சிவக்குமார் அவர்கள் பெயருக்கேற்றபடி கந்தன் கருணை படத்தில் முருகன் வேடத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தார். பிற தெய்வீக பாத்திரங்களிலும் அவரின் பொருத்தம் மனம் கவரும். தொலைப் பேசியில் அந்த சிறுவன் அவரிடம் சொன்னது உண்மைதான்.
இரண்டாவது பாடலை இப்போதுதான் கேட்கிறேன். "போலீஸ்காரன் மகள்" என்ற படத்தில் வரும் ஒரு பாடலை இந்தப்பாடல் முதல் வரி நினைவுபடுத்துகிறது. படங்கள், பாடல்கள் குறித்த விபரமான தகவல்களுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
போலீஸ்காரன் மகள் படத்தில் எந்த பாடலை நினைவுபடுத்துகிறது? முதல் பாடலை நான் யோசிக்கும்போது எனக்கு அது தசாவதாரம் பாடலை ஞாபகத்துக்கு வரும். முகுந்தா முகுந்தா என்னும் பாடல்!!
நீக்குநீங்கள் சொல்லும் தசாவதார பாடல், இந்தப்பாடலை கேட்கும் போது நினைவுக்கு வருவது சரிதான்...! நான் சொன்னது இரண்டாவது பாடலுக்கு "இந்த மன்றத்தில் ஓடி வரும் தென்றலை கேட்கின்றேன்" என்ற பாடலும், "கூந்தலிலே நெய் தடவி" என்ற பாடலும் (இது எந்த படமோ?) நினைவுக்கு வருகிறது. எல்லாமே வெவ்வேறு ராகங்கள்தான். இருப்பினும் மனது இந்தப்பாடகளையும் முணுமுணுக்கிறது.
நீக்குபாடல்கள் பகிர்வு நன்று. கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்..
நீக்குபாகுபலி பாட்டு - மேஜர் பார்ட் பிலஹரி ராகம். அதான் இத்தனை கவர்ச்சியாக இழுக்கிறது பாடல். நன்றாகப் போட்டிருக்கிறார் மரகதமணி அவர்கள். முறைதானா முகுந்தா என்ற வரியில் ராகம் வேறு ஏதோ ஒரு பாடலி நினைவுபடுத்துகிறது.
பதிலளிநீக்குபிடிச்ச பாடல். சீனும் நல்லாருக்கும். பாகுபலி படம் துளசி குடும்பத்தாருடன் பாலக்காட்டில் பார்த்தேன். நானும் துளசியும் மட்டும் ரசித்தோம் மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை.
கீதா
அனுஷ் சூப்பர். இந்தப் பாடலில் பழைய தமிழ்நடிகை ஒருவரைப் போலத் தெரிகிறார். யார் என்று யோசிக்கிறேன்
பதிலளிநீக்குகீதா
சிவகுமாரின் பேட்டியில் - ரொம்பவே சரியாகச் சொல்லியிருக்கிறார் அந்த இலங்கைப்பையன் என்று நினைத்தேன்.
பதிலளிநீக்குகீதா
இரண்டாவது பாடலும் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். ஆனால், படம் பெயர் மற்ற விவரங்கள் இப்பதான் தெரிகிறது.
பதிலளிநீக்குவாலி வரிகள் சூப்பர்!
கீதா
முருகா சரணம்
பதிலளிநீக்கு//கூந்தலிலே நெய் தடவி" //
பதிலளிநீக்குஎன்ற பாடல சின்னஞ்சிறு உலகம் என்ற திரைப்படம்
நாகேஷ் பாடுவதாக பாடல்..
சிவகுமார் பெயர் மாற்ற செய்தி நெகிழ்ச்சி..
பதிலளிநீக்குபதிவு சிறப்பு..
பதிலளிநீக்குவாழ்க நலம்..