4.7.25

"ஐயோ.. நான் ஏன் டாக்டர் சொல்லப்போறேன்..? அவங்கதான் என்னை வெறுத்துட்டாங்களே"

 

அனாதை இல்ல நிர்வாகி பாபா இறக்கும் தருவாயில் கண்ணனிடம் அவன் அனாதையில்லை, அப்பா அம்மா இருக்கிறார்கள் என்று கூறி, விவரம் அறிந்து கொள்ள டாக்டர் ராஜுவிடம் அனுப்புகிறார்.  கண்ணன் அனாதை இல்லத்திலேயே தன் முகத்தில் ஒரு பக்கம் இருக்கும் தழும்பு காரணமாக பல துன்பங்களையும் அவமானங்களையும் அனுபவித்தவன்.  டாக்டரிடம் கண்ணன் வந்து தான் யார் என்று விவரம் சொல்வதற்கு பதிலாக, சட்டென தன் முகத்தின் விகார பக்கத்தை கதவைத் திறந்த டாக்டரிடம் காட்டுகிறான்.  திகைத்துப் போகும் டாக்டர், அதிர்ச்சியடைந்து, பின் சுதாரித்து பின்வாங்குகிறார். முதலில் தனக்கு ஒன்றும் தெரியாது என்று மறுக்கும் டாக்டர் பின்னர் கண்ணனின் முரட்டுத்தனத்தில் ஆத்திரமடைந்தும்  பின்னர் அவன் குணம் அறிந்து இரக்கப்பட்டும் விவரம் சொல்கிறார்.  காலையும் கையையும் உதைத்து சிவாஜி மிரட்டும் நடிப்பு.. "ஐயோ அப்பா மேல சத்தியமா சொல்ல மாட்டேன்" என்பார்.  "யாரிடமும் சொல்லக் கூடாது" என்று மேஜர் கேட்டதும் வேகமாக மண்டையை ஆட்டி, "ஊஹூம்..  நான் யார்கிட்ட டாக்டர் சொல்லப்போறேன்?" என்றும், "அப்பா அம்மா கிட்ட நீ யார்னு காட்டிக்கக் கூடாது" என்றதும் "ஐயோ..  நான் ஏன் டாக்டர் சொல்லப்போறேன்..?  அவங்கதான் என்னை வெறுத்துட்டாங்களே" என்பதும்...  

பாபா - நாகையா ; கண்ணன் - சிவாஜி ; டாக்டர் - மேஜர்.

தெய்வமகன் நான் எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்காத ஒரு படம்.  கண்கலங்க வைக்கும் சிவாஜியின் நடிப்பு.  மூன்று வேடங்கள்.  மூன்றுக்கும் அவர் காட்டும் வித்தியாசம்.  மூன்றாவது சிவாஜியின் மேனரிஸங்களை அவர் இயக்குனர் ஸ்ரீதரிடமிருந்து பார்த்து செய்தாராம்.

எனக்கு இந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை பகிர விருப்பம்.  நான் பகிர நினைக்கும் காட்சி கீழுள்ள காணொளியில் 1:52 நிமிடங்களில் தொடங்குகிறது.  மேஜர் கண்ணனுக்காக பரிதாபப்படுகிறாரா, சிவாஜியின் நடிப்பைப் பார்த்து வியக்கிறாரா என்றே தெரியாது.  மேஜர் ஒரு பேட்டியில் இதே படத்தில் மேஜர் கேட்ட வாக்குறுதியை மீறி சிவாஜி தன் அம்மாவைப் பார்த்து விட்டு வந்து ஆடிப் பாடும் காட்சியில் (தெய்வமே...  தெய்வமே...) அவர் நடிப்பை பிரமித்து பார்த்துக் கொண்டிருந்தேன் என்று சொல்லி இருக்கிறார்.


தன் மகன் உயிரோடிருக்கிறான் என்று சூசகமாக உணர்ந்து கொள்ளும் சங்கர் டாக்டர் வீட்டுக்கு வருகிறார்.  தயக்கம்.  சிவாஜியை விகாரமாக இருக்கிறான் என்று கொல்லச் சொன்ன சங்கரை இனி நீ என் முகத்திலேயே விழிக்காதே என்று சொல்லியிருப்பார் டாக்டர்.  நாமிருவரும் சந்திப்பது இதுவே கடைசி முறை என்று சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் சொல்லி இருப்பார்.  அந்த டாக்டர் வீட்டுக்கு ஏகப்பட்ட தயக்கங்களுடனும், விவரம் அறியும் ஆர்வத்துடனும் வருகிறார் சங்கர்.  மகனைப் பற்றி அவர் கேட்க நினைக்கும் கேள்விகளும், டாக்டரின் பதில்களும்...   சிவாஜி சிவாஜிதான். 

டாக்டர் வீட்டில் மகன் சிவாஜிக்கு அவன் நலனுக்கு என்று ஒரு பிளாங்க் செக் கொடுத்து வந்திருப்பார் அப்பா சிவாஜி.  டாக்டர் கோபப்பட்டாலும் வாங்கி கண்ணனிடம் கொடுத்ததும் அதை அவன் தந்தையிடம் திருப்பித் தர வருகிறான்.  எந்த மகனை பிறந்தததுமே கொல்லச் சொன்னாரோ, அவன் அப்பாவைப் பார்க்க வருகிறான்.  இப்போது அப்பாவின் மனம் மாறி இருக்கிறது.  உணர்ச்சிப்; போராட்டம்.

"அப்பா" என்பற்று அழைக்கும் கண்ணன், சற்றே இடைவெளி விட்டு "அப்படி நான் கூப்பிடலாமா" என்பான்.  அப்புறம் அறிமுகப்படுத்திக் கொள்வான்.  "என் பேரு கண்ணன்...  நீங்க கூப்பிட்டு நான் தெரிஞ்சுக்க வேண்டிய பெயரை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ளளவேண்டிய நிலை" என்பான்.  "இவ்வளவு கஷ்டப்பட்டதுக்கு நான் பிறந்தததுமே என்னைக் கொன்னுருக்கலாமேப்பா" என்று மகன் சொன்னதும் அப்பா அவசரப்பட்டு "ஐயோ..  அதைத்தாண்டா நான் செய்யச் சொன்னேன்..  அவன் செய்யலை" என்பார்.  தம்பியைப் பற்றி சிலாகிக்கும் கண்ணனிடம் அப்பா "அவனுக்கு அவன் அம்மா..." என்று தொடங்கி, நாக்கைக் கடித்துக் கொண்டு "உங்க அம்மா, ரொம்ப செல்லம் கொடுத்துட்டா" என்று திருத்திக் கொள்வார்.  

சிவாஜி.

29 கருத்துகள்:

  1. தெய்வமகன் படத்தை அரைகுறையாக எப்போதோ பார்த்த நனைவு. முழுப் படத்தைப் பார்த்ததில்லை.

    பாடல்களுக்குப் பதிலாக இந்த வாரம் காட்சிகளா?

    நல்லா எழுதியிருக்கீங்க. வாய்சிலிருந்து டெக்ஸ்ட் என்பதால் சிவாஜியை என்பது பிலாலியை என வந்திருக்கிறதோ?

    சிவாஜிக்கு கொஞ்சம் மைல்டாக நடிக்கச் சொல்லி எந்த டைரக்டராவது தேசிய விருதினைப் பெற்றுத் தந்திருக்கலாம். சிவாஜி மாதிரி, சாதாரணமாக வீட்டில் உணர்ச்சிகரமாகவோ இல்லை சாதாரணமாகவோ பேசினால், இவனுக்கு என்ன ஆச்சு எனப் பயப்படும்படியாக இருக்கும் இயல்பற்ற தன்மையால், கஷ்டப்பட்டு நடித்தும் ஒரு விருதும் வாங்காமலிருந்துவிட்டார் சிவாஜி. (தேசிய)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.. 

      சிவாஜி நடிக்கும் காலங்களில் இருந்த இயல்பை நினைத்துப் பார்க்க வேண்டும்.  நாடகங்களிலிருந்து அப்படியே வந்தவர்கள்.  இன்று இப்படி நடிக்கலாம், அப்படி நடிக்கலாம் என்றெல்லாம் இம்ப்ரொவைஸ் செய்ய முடிகிறதென்றால் அதற்கெல்லாம் அடிப்படை  கல்தூண் போலவோ, மிருதங்க சக்கரவர்த்தி போலவோ சிவாஜி.  இந்தப் படத்தில் அவர் அப்படி எல்லாம் ரொம்ப ஓவராக நடிக்கவில்லை என்பது என் எண்ணம்.  நான் ரசித்த படங்களில் ஒன்று.  

      நீக்கு
    2. நடிப்பு என்பது என்ன? பார்வையாளர்களைக் கட்டிப்போடணும். செத்தவன் கையில் வெத்தலை பாக்கு கொடுத்ததைப்போல இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்திய சிவாஜிக்கு விருது கொடுக்காததற்கு தேர்வுக்குழு வெட்கப்படணும். ஒருவேளை அவங்க எல்லாருமே தேசத் துரோகிகளாக இருந்திருப்பார்களோ? நம் தேசக் கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்ளாமல், நம் தேசத்து உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், வெளிநாட்டவர் சொல்லும் அளவுகோலைப் பின்பற்றியதால் அவர்களைத் தேசத் துரோகிகள் என்று சொன்னாலும் தகும் என்றே பலர் கருதுகின்றனர்.

      சிவாஜியின் சோகப்படங்களைப் பார்த்து அழாதவர்கள் உண்டா? (சிரித்தேன் என்று சொல்பவர்களுக்கு மனித உணர்வு இல்லை, அல்லது 'எனக்கு ஆங்கிலப் படங்கள் மாத்திரமே பிடிக்கும். டமில் நோ' என்று சொல்பவர்களாக இருக்கும்). அந்த உணர்வைக் கொண்டுவரும்படி நடித்தவருக்கு விருது கொடுக்காதவர்கள் 'கபோதிகள்' என்று சொன்னால் என்ன தவறு?

      நீக்கு
    3. அதே சமயம், அவரை அதீத நடிப்புக்கு உள்ளாக்குமாறு, கிளைமாக்ஸ் காட்சியில் வாயிலிருந்து ரத்தம் தெறிப்பது, அளவுக்கு அதிகமாக நடிக்கவைப்பது போன்ற தவறுகளை இயக்குநர்கள் செய்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.

      நீக்கு
    4. நிஜமாகத்தான் சொல்லி இருக்கிறீர்களா, அல்லது எதிர்மறையில் சதிராடுகிறீர்களா என்று தெரியவில்லை.  எனினும், நீங்கள் சொல்லி இருப்பதை ஏற்றுக் கொள்கிறேன் நெல்லை!

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பகிர்வு அருமை. நடிகர் திலகத்தின் தெய்வ மகன் படத்தை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். நீங்கள் கூறுவது மூன்று கதாபாத்திரத்திலும் நன்றாக நடித்திருப்பார்.(ஏற்கனவே நவராத்திரி என்ற படத்தில் 9 வேடங்களில், நடித்துள்ளாரே.) அந்தந்த வேடங்களில் நிலையுணர்ந்து நடிப்பது சிரமம்தான். ஒரு சிறந்த நடிகர்தான் அது இயலும்.

    தாங்கள் தந்த காணொளிகளை பிறகு பார்க்கிறேன். நேற்றைய பதிவை படித்து விட்டேன். அதற்கு கருத்துரையும் பிறகு தருகிறேன். கொஞ்சம் வீட்டில் வேலைகள் வந்து விட்டன. அதனால் தாமதம் ஏற்பட்டு விட்டது. இன்றும் வெளியில் செல்ல வீட்டில் ஏற்பாடுகள். நான் உடன் போகா விடனும், போகும் மற்றவர்களுக்கு உதவ வேண்டுமே..! பிறகு வர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. *ஒரு சிறந்த நடிகர்தான் அது இயலும். என திருத்திப் படிக்கவும்.

      நீக்கு
    2. "நடிகரால்தான்". எத்தனை முறை முயன்றாலும் என்ன ஒரு பிடிவாதம் இந்த கைப்பேசி தட்டச்சுவுக்கு

      நீக்கு
    3. ஹா..  ஹா...  ஹா...  நடிகர் உங்களை ரொம்பப் படுத்தறார் போல கமலா அக்கா... 
       
      அதானே...  நேற்றிரவு உங்களிடமிருந்து முத்தாய்ப்பாக ஒரு கருத்து வருமே என்று பார்த்தேன்.  பின்னர் 'இம்மாம்பெரிசா பதிவு போட்டா அக்கா மற்றும் படிப்பபவர்கள்தான் என்ன செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டேன்!

      நீக்கு
  4. பதில்கள்
    1. முருகா..  முருகா.. 

      வாங்க செல்வாண்ணா... வணக்கம்.

      நீக்கு
  5. சிறப்பு.... அப்போது ஆறேழு தடவை பார்த்து இருப்பேன்... இப்போது அப்படி இயலவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல இடைவெளி விட்டு அவ்வப்போது நான் ரசிக்கும் காட்சிகள்.  இன்னும் சில காட்சிகளையும் அப்படிதான்.  புதிய பறவை, குலமா குணமா கிளைமேக்ஸ் 

      நீக்கு
  6. பட்டி மன்றம் போல நெல்லை அவர்களும் ஸ்ரீராம் அவர்களும் வாதங்களை வைக்கின்றனர்...

    பல அரைவேக்காடுகள் பிறவிக் கலைஞனை ஏளனம் செய்து வயிறு வளர்க்கின்ற காலம் இது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் காட்சிகளையே எடுத்துக் கொள்ளுங்கள்.  இரண்டு சிவாஜிகளும் சந்தித்துக் கொள்ளும் காட்சியில் கண்ணன் சிவாஜி முகத்தில் உணர்ச்சி​யே இல்லாமல்  விஜய் ஆன்ட்டனி போல அந்த வசனங்களை பேசுவது போல கற்பனை செய்து பாருங்கள்...

      நீக்கு
  7. அந்தக் கால விருதுக் குழுவினர் கலைத் தாய்க்குத் துரோகம் செய்த விட்டனர்.,

    பாரத் ரிச்சாக்காரன்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது வேறு அரசியல்களும் இருந்தன.  மதியா அரசுக்கு  என்ன அழுத்தங்களோ...

      நீக்கு
  8. இயல்பாக ஏப்பம் விட்டவனுக்கு எதற்கு விருது?...

    கழைக் கூத்துக்காரர் காளை மாடாக நடித்த கதை தெரியுமா!..

    பதிலளிநீக்கு
  9. சிங்கம் மூப்புற்ற காலத்தில் சிற்றெலிக் குஞ்சுகள் வீரம் பேசிய கதைகளும் இருக்கின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது கூட கமல் தேவர் மகன் படத்தில் சிவாஜி காட்டிய டெடிகேஷன் பற்றி பேசியதைக் கேட்டேன்.  சிவாஜி உடல் நலம்மில்லாமல் இருந்த காலம். 

      மருத்துவர் கட்டாயமாக முழு ஓய்வு எடுக்கச் சொல்லி இருந்த நேரம்.

      நீக்கு
  10. புர்ச்சியின் காலத்தில் தமிழன் தானே சுவரொட்டிகளின் மீது சாணியடித்தவன்...

    பதிலளிநீக்கு
  11. முழு படமும் பார்த்த நினைவில்லை. சில காட்சிகள் தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்ததுண்டு. சினிமாவில் அத்தனை ஈடுபாடு அப்போது மட்டுமல்ல, இப்போதும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது வெங்கட்.  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. . நடிகர் திலகத்தின் தெய்வ மகன் படத்தை பார்த்திருக்கிறேன்அப்பா சிவாஜி ரசிகர்.

    . நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு முன்னேறியவர். அந்த காலகட்டத்துக்கு ஏற்ற நடிப்பு இப்பொழுது ஓவர் என்பாராகள்.நீங்கள் கூறுவது போல மூன்று கதாபாத்திரத்திலும் நன்றாக நடித்திருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் மாதேவி. நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!