நான் வேலைக்குச் சேர்ந்த புதிது. அப்போது நான் செய்த வேலைகளைக் கூட அங்கிருந்த சீனியர்ஸ் சொல்லிக் கொடுத்ததாய்ச் சொன்ன அனுபவம் பற்றி முன்பு சொல்லி இருந்தேன். இப்போது சொல்லப் போவது வேறு வகை அனுபவம். இதிலும் ஒரு சீனியரின் கைவண்ணம் இருக்கிறது!
அலுவலகத்துக்குப் புதிதாக வந்த மேல் அதிகாரி திடீரென ஒரு ஆர்டர் போட்டு விட்டார். மேல் அதிகாரியாய் இருந்தாலும் அவர் ஃபீமேல் அதிகாரி!(ஹிஹிஹி)
அலுவலகத்தில் ஒரு டயல் செய்யும் தொலைபேசி இருந்தது. அப்போதெல்லாம் ஏது மொபைல்? எல்லோருக்கும் அதில்தான் அழைப்பு வரும். அவ்வப்போது வந்து பேசுவார்கள். இந்தத் தொலைபேசி அந்த அதிகாரியின் அறையில்தான் இருக்கும். ஓசி கால்கள் செய்து விடுவார்கள் என்று அதில் டயல் செய்யுமிடத்தில் சதுரமாக ஒரு மூடியை ஒட்டி அதில் பூட்டு பூட்டி, சாவியை அந்த (ஃபீமேல்) மேல் அதிகாரி வைத்திருப்பார்!!
இதிலும் எங்களுடன் வேலை செய்த ஒருவர் ஒரு விஷயம் சொல்வார். அவர் பெயர் திருச்சிற்றம்பலம். போனை எடுத்து அந்த கட்செய்யும் இடத்தை விடாமல் அமுக்கி, அமுக்கி, நடுநடுவே தேவையான இடத்தில் சிறிய ஆனால் சரியான இடைவெளிவிட்டு முயற்சித்தால் நாம் விரும்பும் வெளி நம்பர்களுக்குப் பேசலாம், நான் பேசி இருக்கிறேன் என்பார். தான் அப்படி அவ்வப்போது செய்திருப்பதாய்ச் சொல்லியிருக்கிறார். நான் ஆச்சர்யப்பட்டுப்போய் ஒரு தரம் செய்து காட்டச் சொன்னால் நழுவிடுவார் அந்த நாரோயில்காரர். யாரும் இல்லாதபோது நான் அப்படி முயற்சித்துத் தோல்வி அடைந்திருக்கிறேன். கதை விட்டாரோ, நிஜமோ! என்னுடைய முதல் டெலிபோன் அனுபவம் படித்திருக்கிறீர்களோ? சமீபத்தில்தான் எழுதி இருந்தேன்... ஏதோ 'அந்த மாலை' யென்று தலைப்பு வைத்ததாய் நினைவு!
சரி, விஷயத்துக்கு வருகிறேன்....
அவர் அதிகாரி என்பதால்
டெலிபோன் அவர் அறையில் இருப்பது ஒரு பந்தா என்றாலும் அதிலொரு மிகப்பெரிய தொல்லை இருந்தது. அவ்வப்போது யாருக்காவது அழைப்பு வந்துகொண்டே இருக்கும். அதை அட்டென்ட் செய்து அந்தந்த ஆட்களை அழைத்து விடுவது லொள்ளு பிடித்த வேலை என்பதோடு, தன் அந்தஸ்துக்கு சரியில்லை என்றும் அதிகாரிகளை நினைக்க வைக்கும். அதுவும் சரிதானே?
யாராவது ஒரு பியூனை அல்லது ஏதாவது ஒரு அடிப்படைப் பணியாளரை டெலிபோன் கால் அட்டென்ட் செய்யும் வேலைக்கு நியமித்து விடுவார்கள். காலப்போக்கில் அந்த டெலிபோன் எடுத்து ஜன்னலுக்கு அருகே வைக்கப்பட்டு, கால் வந்தால் அதிகாரியின் அறைக்குள் செல்லாமல், வெளியிலிருந்தே ஜன்னல் வழியாக அதை எடுக்கும் வசதி செய்யப்பட்டது. ஜன்னலுக்கு வெளியே யதேச்சையாக ஒரு சிறிய சிமெண்ட் பெஞ்ச் இருக்கும். அதில் அமர்ந்து பேசலாம்!
அதில் பணியாளர்களுக்கும் வசதி. சுதந்திரமாக பேச முடியுமே... நீண்ட நேரமும் பேச முடியும். அறைக்குள் என்றால், வாயைப் பொத்தி சிறிய குரலில், சுருக்கமாகப் பேசுவது எப்படி, வெளியே என்றால் கதை அளப்பது எப்படி! எனவே எங்களுக்கெல்லாம் அது வசதியாய்ப் போயிற்று என்று விவரிக்கத் தேவையில்லை!
நாட்கள் செல்ல, இது அந்த அதிகாரிக்கு கடுப்பைத் தந்தது. வேலை பாதிக்கப்படுகிறது என்று கோபப்பட்டார். உண்மையான காரணம் அல்ல அது என்று அவருக்கும் தெரியும்!
ஒருநாள் தொலைபேசிக்கட்டணம் அதிகம் வந்து விட்டது என்று இனி யாருமே தொலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது என்று நோட்டில் சர்க்குலர் எழுதி எல்லோரிடமும் கையெழுத்து வாங்கி விட்டார்.
என்ன அநியாயம்!
எல்லோரும் கையெழுத்துப் போட்டு விட்டார்கள் என்றாலும் அவர்களுக்குள் புலம்பினார்கள். "வர்ற காலைதான் அட்டென்ட் செய்யறோம்... இதில் எப்படி பில் அதிகம் ஆகும்?" என்று பேசிப்பேசி... அவரிடமே அதாவது அந்த அதிகாரியிடமே அதைக் கேட்க ஒரு அப்பாவியைத் தேர்ந்தெடுத்தார்கள்.
ஹிஹிஹி... யூகித்திருப்பீர்கள். அந்த அப்பாவி நான்தான்!
முன்னுரை நீண்டு விட்டதால் இதன் தொடர்ச்சியை அடுத்த வியாழன் சொல்கிறேனே...!
முன்னுரை நீண்டு விட்டதால் இதன் தொடர்ச்சியை அடுத்த வியாழன் சொல்கிறேனே...!
=============================================================================================
வியாபாரமோ, நிஜமோ... விற்கப்படும் எல்லாப்பொருள்கள், சாப்பிடும் பொருள்கள் பற்றி எல்லாம் இரண்டு விதமாயும் அவ்வப்போது கருத்து வந்துகொண்டே இருக்கும். சில தகவல்களில் அமெரிக்காவே சொல்லி விட்டது என்று சொல்லிச் சொல்வார்கள்.
அதுபோல, காபி அதிகமாய்ச் சாப்பிடக்கூடாது என்றுதான் சொல்வார்கள். ஆனால் காப்பியால் விளையும் நன்மை பற்றி ஒருமுறை படித்ததை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். தளத்திலும் பகிர்ந்திருந்தேனா, நினைவில்லை. எனினும் இப்போது பகிர்கிறேன்.
லண்டன் : காபியில் உள்ள காபின் என்ற வேதி மூலப் பொருள் பார்கின்சன் நோயை ( மூளை செல்களை பாதிக்கும் நோய்) அண்ட விடாது என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. காபி குடிப்பதால் உடலுக்கு கேடு ஏற்படாது. நன்மை தான் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் ஆதாரங்களுடன் கூறுகின்றனர்.
உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பதற்காக புத்தாண்டு கொள்கை பட்டியலில் பலர் காபி குடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு முக்கிய இடம் கொடுத்துள்ளனர். ஆனால் அது தவறானது என ஆராய்ச்சி ஆதாரங்கள் கூறுகின்றன. உண்மையில் காபி குடிப்பது உடல்நலத்திற்கு கேடானது இல்லையாம்.
காபி குடிப்பவர்களுக்கு கல்லீரல் புற்றுநோய், மாரடைப்பு போன்ற எதிர்பாராத மரணங்கள், டைப் 2 டயபெட்டிக்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மிக குறைவு என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உணவு கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காபியை கைவிட வேண்டும் பலர் நினைப்பது முட்டாள்தனமானது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காபியில், நமது உடலில் செல்கள் சிதைவடைவதை தடுக்கும் பயோகெமிக்கல்கள் உள்ளனவாம். மேலும் இன்சுலின், குளுக்கோஸ் தொடர்பான செல்கள் ஆற்றலுடன் செயல்பட துணை நிற்கின்றனவாம். காபியில் உள்ள காபின் என்ற மூலப் பொருள் நமது உடலில் போதிய அளவு இன்சுலினை சுரக்கச் செய்வதுடன்,
இன்சுலின் முறையாக உடலில் செயல்படாத போது அதிகமாகும் சர்க்கரையை ஆற்றலாகவும் மாற்றி விடுமாம். ஒரு கப் காபியில் உள்ள காபின் அளவு , பார்கின்சன் நோயை அண்ட விடாமல் செய்து விடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமலரிலிருந்து...
====================================================================================================
போனவாரம் தோசை கடை ஒன்றைப் பற்றிப் பார்த்தோம் இல்லையா? இந்த வாரம் இட்லிக்கடை. திருவெறும்பூர் இட்லி கடை. BHEL லிலிருந்து ஒய்வு பெற்ற ஒருவர் நடத்தும் கடை. விற்பனை நிலையம் அல்ல அது.. சர்வீஸ். சாப்பிட்டு விட்டு நீங்கள் விரும்பும் அளவு பணம் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு. ஐந்து ரூபாய் இட்லிக்கு 21 வகை ஸைட் டிஷ்...
=======================================================================================================
பொக்கிஷம் :
பழமொழிகளுக்கு எல்லாம் உண்மையான அர்த்தம் வேறாய் இருக்கும். நாம் கொள்ளும் பொருள் வேறாய் இருக்கும். நமக்கும் தெரிந்ததுதான். 1960 களில் விகடனில் வந்த கட்டச் செய்தி கீழே...
=========================================================================================
கட்டத்துக்குள் இருப்பவர்கள் சொல்வதெல்லாம் படித்தால் மட்டும் சிரிப்பு வந்து விடுகிறதா என்ன?!!
========================================================================================
இந்த வாரமும் ஒரு கவிதையை மீள் செய்து விடுவோம்! கூடவே அனுஷும்!
இதைப் படித்து விட்டு ஆண்களை கவிதை என்று சொன்ன முதல் ஆள் நீங்கள்தான் என்று என்னை கோவை ஆவி குறிப்பிட்டிருந்தார்! என் மாமா ஒருவர் அனுஷ்காவை விட்டால் வேறு ஆள் படமே கிடைக்கவில்லையா என்று கேட்டிருந்தார்!
===========================================================================
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். ஸ்ரீராம் இன்னிக்கு என்ன சொல்லி இருக்கார்?
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... வணக்கம். நல்வரவு... நன்றி.
நீக்குவாங்க வாங்க கீசா மேடம்...
நீக்குஎன்னது இது... படிக்காமலேயே பின்னூட்டம்?
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று ..
பதிலளிநீக்குநலம் வாழ்க...
நலமே விளைக...
நீக்குநீஈஈஈஈஈஈஈஈளமான பதிவு. வரேன் கொஞ்ச நேரத்திலே!
பதிலளிநீக்குநீளமான பதிவா? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!!
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குஅந்தக் கால டயல்...
பதிலளிநீக்குஅதன் மேல் இன்னும்
தீரவில்லை மையல்..
தொட்டுச் சுழற்றி அதன் சுழற்சி முடியக்காத்திருந்து அடுத்த எண்ணைத் தெரிவு செய்து சுற்றிவிட்டு...
நீக்குஹா... ஹா.. ஹா...
நல்லா இருக்கு. நானும் இப்படி மாட்டிப்பேன். பழமொழிகள் ஏற்கெனவே படிச்சவை! இந்த ஜோக் புதுசு. சந்தடி சாக்கில் அனுஷ்காவைக் கொண்டு வந்து ஜன்ம சாபல்யம் அடைஞ்சாச்சு போல. சாப்பிடப் போகணும். பின்னர் வரேன்.
பதிலளிநீக்குநன்றி. பழமொழிகள் ஏற்கெனவே படித்ததுதான். இது 1960 களிலேயே வரத்தொடங்கி விட்டது என்பதைத் தெரிவிக்கவே அந்தப் பகிர்வு!
நீக்குகாஃபியையா விடச் சொல்கிறார்கள்?...
பதிலளிநீக்குநாமெல்லாம்.. யாரு!...
(அது தெரிஞ்சிருந்தா ஏன் இவ்வளவு கஷ்டம்)
சுவையான இட்லி (சின்ன வெங்காய) சாம்பாருக்குப் பின் சுகமான காஃபி!...
சொர்க்கமே என்றாலும்!.....
ஆஹா....!
நீக்குடபிள் ஆஹா.........சின்ன வெங்காயம், பனங்கற்கண்டு அரைத்துச் சாப்பிட்டால்
நீக்குஊளை சதை குறையுமாம்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.
எத்தனையோ முறை எத்தனையோ மருத்துவர்கள் முன்பெல்லாம் எச்சரித்தும் கூட என்னால் காப்பியை விடவே முடியாது எனத்தான் தோன்றிற்று. காப்பி நல்லது என தெரிந்த விஷயம். அது இன்னமும் உறுதிப்படுவது எனத்தெரிந்த பிறகும்.. கொஞ்சம் இருங்கள்... மிகுதிக்கு காப்பி தயாரித்து குடித்த பின்பு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். இனிமையான பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குஹா...ஹா.. ஹா,,, மிச்ச காஃபியையும் குடிச்சு முடிச்சாச்சா? அதற்குதான் பதிவே போட்டிருக்கிறேன்.தைரியமா குடிங்க!
காஃபி...
பதிலளிநீக்குஅது வெளிநாட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்..
அதை நம்மிடம் விற்பனை செய்து லாபம் பார்ப்பவன் யாராகவும் இருக்கலாம்...
ஆனால் அதற்கு நட்சத்திர அந்தஸ்து கொடுத்தவர்கள் நாம் தானே!...
இப்போதெல்லாம் சில பழம் செய்திகளைப் பேசுமிடத்து தமிழர்களே என்று சொல்லிக் கொள்வதில் கூச்சமாக இருக்கிறது...
காஃபி போடுவது இப்படி!... என்று யார் பழக்கி விட்டார்களோ...
பதிலளிநீக்குஆனாலும் தொழுவத்துப் பசு கொடுத்த பாலில் தயாரிப்பதே காஃபி என்று நான் நினைக்கிறேன்...
Cappuccino நுரைத்துக் கொண்டு வருவதற்காக சேர்க்கப்படும் பொருள்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை...
உண்மை, உண்மை. முற்றிலும் உண்மை!
நீக்குகவிதையே அனுஷ்காவைக் கண்டு
பதிலளிநீக்குகதி கலங்கியிருக்கும் போது
காபியைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருப்பது
காலக் கொடுமையடா கந்தசாமி!...
அடடே... கந்தசாமி எப்பவுமே இப்படிதான்!
நீக்குகாஃ்பி பிரியர்களுக்கு ஆதரவாக ஶ்ரீராம் செய்தி போட்டிருக்கிறார்.
பதிலளிநீக்கு18ம் நூற்றாண்டு ஆரம்பம் வரை, குளிர்ச்சியான மோர் கொடுத்து உபசரிக்கும் பண்பு அந்நிய பானத்தினால் தமிழர்களிடம் மறைந்தது பற்றிக் குறிப்பிட்டிருக்கலாம்
...லாம்! ஆனாலும் காபி பற்றிதானே இப்போது படிக்கக் கிடைத்தது!
நீக்குஉலக அதிசயமாய் ஶ்ரீராமின் விரைந்த மறுமொழி.
நீக்குபொதுவா கோயில்களில் முதலில் ஒரு சிலருக்கு சுண்டல் கொடுத்து கடையை ஏறக்கட்டுவது போல்தானே நடக்கும். ஹா ஹா
அப்போ அங்கே இருந்தால் உடனே மறுமொழியலாம். அப் புறம்னா அப்புறம்தான்!
நீக்குநீங்கள் விரும்பும் அளவு பணம் - எனக்கு இது பிடிப்பதில்லை. முதன் முதலாக சிங்கப்பூர் அன்னலட்சுமி உணவகத்துல் சாப்பிட்டபோது இந்த முறை ஆச்சர்யமாகவும், குறைந்தோ அல்லது அதிகமாகவோ கொடுத்தது போன்ற எண்ணத்தையும் தந்தது.
பதிலளிநீக்குதமிழர்களின் நேர்மை மீதுள்ள சந்தேகத்தால் சென்னை அன்னலட்சுமியில் அதுபோன்ற விபரீத யோசனை வராமல் சேரிட்டி என்று அதிக விலைக்கு விற்கிறார்கள்
சென்னை அன்னலட்சுமியில் ஆரம்பத்தில் நாம் விரும்பும் அளவு பணம் தரலாம் என்றுதான் வைத்திருந்தார்கள். அது கட்டுப்படியாகாததால் கட்டணத்திற்கு மாறி விட்டார்கள். கட்டணம் என்றால் மிக அதிக கட்டணம். ஏறத்தாழ பதினைந்து வருடங்களுக்கு முன்பே நானும் என் கணவரும் வெறும் லெமன் ரைஸ், காபி சாப்பிட்டதற்கு ஐநூறு ரூபாய் பில் வந்தது.
நீக்குஎன் அம்மாவை அங்கு ஒரு முறை அழைத்துச் சென்ற திருப்தி எனக்கு இருக்கு. 500 ரூபாய் ஒரு லஞ்ச். இப்போதெல்லாம் ஒருவர் அதிகம் சாப்பிடுகிறார் என்பதற்காக இரண்டாம் முறை செர்வ் செய்யத் தயங்குகிறார்கள்.
நீக்குஇருந்தாலும் அமெரிக்கா, வெளிநாடுகளில் வசிக்கும் வாரிசுகளைக் கொண்டவர்கள் கூட்டம் தாளவில்லைதான்
சமைப்பவர்கள், பரிமாறுபவர்கள் அனேகமா சம்பளம் பெறாத வாலன்டியர்கள் என்பதையும் குறிப்பிடணும்
ஜாய்ஃபுல் சிங்கப்பூர் சென்றிராத காரணத்தால் அன்னலட்சுமியில் சாப்பிடும் வாய்ப்புக்கிடைக்கவில்லை என்பதை...!
நீக்கு87களில் விரைந்து தட்டித் தட்டி ஒரு எமெர்ஜென்சியின்போது அவர் வீட்டுக்கு அலுவலகத்திலிருந்தே இரவு போன் அடித்துவிட்டு, வெளியே கடையிலிருந்து போன் செய்ததாகச் சொல்லியது நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குகதம்பம் மணக்கிறது
நான் எவ்வளவு தட்டியும் அது ராங் கால் கூடப் போகவில்லை!
நீக்குஅப்போ திருட்டுத்தனம் செய்யவும் ஒரு நேக், லக்- மாட்டிக்கீம இருக்க .. வேணும்னு சொல்லுங்க
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க...
நீக்குதொலைபேசி பேசிய அனுபவங்கள் அருமை.
பதிலளிநீக்குஅப்பாவி அதிகாரியிடம் பேசியதால் ஏற்பட்ட நன்மை என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆவல்.
காப்பி குடிப்பவர்களுக்கு நல்ல செய்தி.
//சாப்பிட்டு விட்டு நீங்கள் விரும்பும் அளவு பணம் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு. ஐந்து ரூபாய் இட்லிக்கு 21 வகை ஸைட் டிஷ்...//
நல்ல மனிதர் இப்படி சர்வீஸ் செய்வதற்கு வாழ்த்துக்கள். . சாப்பிடும் குழந்தைகளின் மகிழ்ச்சியும் அவர்களின் பேச்சும் குழந்தைகளை நன்கு கவனிப்பது தெரிகிறது.
பொக்கிஷம் அருமை.
கட்டத்துகுள் இழுக்கும் ஜோக் அருமை.
கவிதை அருமை. அனுஷ்கா அழகு.
ஒவ்வொன்றாகப் படித்து பதில் சொல்லி .இருப்பதற்கு நன்றி அக்கா.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். காபி பிரியர்களான நமக்கு இனிக்கும் செய்தி.ஆனால் எனக்கு கசப்பு காபிதான் பிடிக்கும். அவர்கள் சொல்வது கருப்பு காபியையோ என்று சந்தேகம் வருகிறது.
பதிலளிநீக்குநமக்கா? நான் காபி டீ பக்கம் செல்வதில்லை.
நீக்குகாபி சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் அதுக்கு அடிமை ஆகிறாங்க. அந்த அந்த நேரத்தில் காபி இல்லைனா தலைவலி, என்னமோ செய்யுது என்றெல்லாம் சொல்வதைக் கண்டிருக்கிறேன்
உண்மைதான். காபி குடித்துப் பழக்கம் ஆகிவிட்டால், அந்த நேரத்துக்கு காபி குடிக்காவிட்டால், அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்குள், தலைவலி வரும். ஆனால், வெந்நீர் சாப்பிட்டு தலைவலியை கொஞ்சம் சமாளிக்கலாம். தொடர்ந்து ஒரு வாரத்துக்கு அந்த நேரத்தில் தலைவலி எட்டிப்பார்க்கும். அதை எப்படியாவது சமாளித்து விட்டால், அப்புறம் தலைவலி வராது. நான் இதுவரை பலதடவை காபி குடிக்கும் பழக்கத்தை நிறுத்தியிருக்கிறேன். OCT 2018 க்குப் பிறகு முற்றிலும் நிறுத்தி வைத்திருந்தேன். கடந்த இரண்டு நாட்களாக கொஞ்சம் ஃபில்டர் காபி குடித்து சோதனை செய்தேன். இன்று காபி குடிக்கவில்லை. தலைவலி வரவில்லை. எனவே நான் காபியை நினைத்தால் குடிக்கலாம். நினைத்தபோது நிறுத்தவும் முடியும். நான் காபிக்கு அடிமை இல்லை.
நீக்குநானும் கசப்பு காஃபிதான் குடிப்பேன். ஆனால் காஃபி குடிக்காமலிருந்தால் தலைவலி எல்லாம் வருவதில்லை.
நீக்குகவிதை அருமை,அனுஷ்கா அழகு. எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இத்தனை அழகான அனுஷ்கா படங்களை?
பதிலளிநீக்குஆக, அழகான அனுஷ்கா படம் வேண்டும் என்றால், 'தேடித்தான்' பிடிக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள். Note this point your honor!
நீக்குஅனுஷ் என்று ஆரம்பிக்கும்போதே அழகழகான படங்கள் கிடைக்கிறதே....!
நீக்குடயல் செய்ய வேண்டிய அந்தக்கால டெலிஃபோனில் உங்களுடன் பணியாற்றியவர் சொன்ன முறையில் அழைக்க முயற்சிக்கலாம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குநானும் அந்த முறையைப் பின்பற்றி பேசியது உண்டு. ஒவ்வொரு டிஜிட்டும் சிறிய எண்ணாக இருந்தால் சுலபமாக டாப் செய்து பேசலாம். 224121 என்பது போன்ற எண்ணாக இருந்தால் ஈசி. ஆனால் நடுவில் 9, 0 போன்ற எண் வந்தால், ஒன்பது முறை, பத்து முறை டாப் செய்யவேண்டும். கணக்கு தப்பிவிட்டால் wrong number கனெக்ஷன் வந்துவிடும்.
நீக்குநான் ஏற்கெனவே சொல்லியுள்ளபடி நான் முயற்சித்தும் வெற்றிபெறவில்லை!
நீக்குஃபீமேலிடம் மாட்டிய அப்பாவி பேசியது என்ன ? அடூத்த வாரம்வரை காத்திருக்கிறேன்...
பதிலளிநீக்குஇப்பாவி மாட்டிய கதை அடுத்த வாரம் கட்டாயம் தொடக்கிறேன் ஜி... வாங்க!
நீக்குஅனைவருக்கும் என் காலை வணக்கங்கள். நான் என்னுடைய blog ஒன்றை பானுவின் உதவியுடன் தொடங்கியுள்ளேன். அது http://manakottai.blogspot.com/202/1/blog-spot என்பதாகும். அதில் நான் எனக்கு பிடித்தவற்றை பற்றியும் எழுதுகின்றேன். அனைவரும் அதை பார்த்து படித்து உங்கள் கருதுக்களை தெரிவிக்கவும். நன்றி.
பதிலளிநீக்குவெரி குட். வாழ்த்துகள்.
நீக்குஆஹா... வாழ்த்துகள்.
நீக்குஅனுஷ்காவின் 20 வருடங்களுக்கு முந்தைய படங்களை அடுக்கி அடுக்கி வைத்துக்கொண்டு அழகுபார்த்துக்கொண்டிருந்தீர்களோ.. அதான் நாலைந்து நாட்களாக ஆளையே காணோமா! விபரந்தெரியாத ஜனங்கள் கவலைப்பட்டார்கள்..
பதிலளிநீக்குஆஹா - ஏகாந்தன் கண்டுபிடித்துவிட்டாரே ரகசியத்தை!
நீக்குஇதைத்தேட இரண்டுமூன்று நாட்களா? இருபது நொடி போதுமே ஏகாந்தன் ஸார்...
நீக்குஅது http://manakottai.blogspot.com/2020/1/blog-spot என்பதாகும். தவறுக்கு மன்னிக்கவும்.
பதிலளிநீக்குmanakottai.blogspot.com என்று type செய்தாலே போதும். பார்த்தேன்.
நீக்குசட்டெனப் படிக்கும்போது மாங்கொட்டை என்று படித்து விட்டேன்! :P
நீக்குமாம்பழ சீசனுக்கு இன்னும் டைம் இருக்கு!
நீக்குதிருமதி ரமா ஸ்ரீனிவாசனுக்கு -
நீக்குவலைக்குள் வருக ! வாழ்க !
தொலைபேசி தொலைந்தது அப்பாவி அகப்பட்டார் :))
பதிலளிநீக்குகாப்பி இட்லி என செய்திகள் பலவும் .
நன்றி சகோதரி.
நீக்கு//சாப்பிட்டு விட்டு நீங்கள் விரும்பும் அளவு பணம் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு. ஐந்து ரூபாய் இட்லிக்கு 21 வகை ஸைட் டிஷ்...//
பதிலளிநீக்குசொல்ல வந்ததை விட்டு விட்டீர்கள் வல்லிம்மா.
நீக்குமிக மிக ரசித்தேன் ஸ்ரீராம் நன்றி.
நீக்குநன்றி அம்மா.
நீக்குஒரு சிறு திருத்தம்.
பதிலளிநீக்குஅவளைக் கண்டதும்
தனது வார்த்தைகளைப்
புதிப்பித்துக் கொள்ள
அகராதியில் தேடியது
கவிதை.
மற்றபடி ஹார்லிக்ஸ் மைசூர் பாக் கிடைத்தத
நல்ல திருத்தம் ஜேகே ஸார்... கவிதை நான்கு வருடங்களுக்குமுன் எழுதியது!
நீக்குகாப்பி பிரியனான எனக்கு உங்களது ஆராய்ச்சிக்கட்டுரை பிடித்திருக்கிறது எனத் தனியாகச் சொல்லத் தேவையில்லை.
பதிலளிநீக்குகாலை 6.15-க்கு ஒரு ஃபில்ட்டர் காப்பி, வாக்கிங் போகிற சாக்கில், போகிற வழியில் (இதற்காகவே நீண்ட வழியில், ’உடுப்பி பார்க்’ வரும்படியான பாதையைத் தேர்ந்தெடுத்து) 8 மணிக்கு ஒரு காப்பி என்று வாக்கிங் செர்மனியை சுகமாக முடித்துவிட்டு, காலை உணவை சாவகாசமாகச் சந்திப்பவன். கடந்த ஞாயிறில் ITPL ஏரியாவில் ’Forum Shantiniketan Mall'-இல் சுற்றிக்கொண்டிருந்தேன். ’கஃபே காஃபி டே’ (செல்லமாக CCD)-யில் நுழைந்து ஒரு காப்பி குடித்தேன். ’ஃபில்ட்டர் வித் ஜாகரி’ (வெல்லக் காப்பி). ரூ.142 தாளித்தார்கள். ருசியாக இருந்தது. இன்னும் கொஞ்சம் வெல்லம் சேர்த்திருக்கலாம் என குடித்துமுடிக்கும் தருவாயில் தோன்றியது!
இப்போது வந்திருக்கும் ஆஸ்திரேலிய காஃபி ரிஸர்ச் ரிப்போர்ட் இருக்கட்டும். டயபெடிஸ், இதயநோய் இன்னபிற வியாதிக்கெல்லாம் காப்பிதான் காரணம் என அடுத்த ரிப்போர்ட் அமெரிக்காவிலிருந்து வந்தாலும், அசருகிறவன் நான் இல்லை!
நிறுத்திவிட்ட காபியை மீண்டும் தொடரலாமா என்று ஒரு நப்பாசை எனக்கும் வந்தது. ஆனால் ......... ஊஹூம் என்று சொல்லி அதை விரட்டியடித்தேன்.
நீக்குஇந்த அளவுக்கெல்லாம் காஃபி குடிப்பதில்லை நான். காலை எழுந்ததும் காஃபியிருந்தால் போதும். மற்ற சமயங்களில் கிடைக்காவிடினும் கவலைப்படமாட்டேன்!
நீக்குஇன்சுலின் முறையாக உடலில் செயல்படாத போது அதிகமாகும் சர்க்கரையை ஆற்றலாகவும் மாற்றி விடுமாம்.//ஆஹ்ஹா! இனிய காலை வணக்கம் காப்பியுடன்.
பதிலளிநீக்குஹேவ் அ வொண்டர்ஃபுல் காஃபி டே வல்லிம்மா...
நீக்குஎங்கள் வீட்டிலியே பாட்டி தொலைப்சியை பூட்டி வைத்துவிடுவார். சிங்கத்தின் நண்பர் அதிக எஸ்டிடி கால் செய்து 500ரூபாய்க்கி பில் வந்ததும் பாட்டிக்குக் கோபம். எங்களாலும் பேசமுடியாததுதான் சோகம்.
பதிலளிநீக்குஇதுல வேடிக்கை என்னன்னால், சிங்கம் போய் ஆஜி,
ஃபோன் பேசணும் என்றால் சாவியைக் கொடுத்து விடுத்துவிடுவார்;
total cause lost.:)
ஹா... ஹா... ஹா... பாசம் காசு அறியாது!
நீக்குகவிதையும் அனுஷ்காவும் ஜோர். பாஹுபலி ,'கண்ணா நீ தூங்கடா" தினம் கேட்பவள் நான். அலாதியான அழகு இந்தப் பெண்.
பதிலளிநீக்கு//அலாதியான அழகு இந்தப் பெண்.//
நீக்குஆமாம் அம்மா... அதில்தான் எனக்கும் வியப்பு!
இப்போது வந்திருக்கும் ஆஸ்திரேலிய காஃபி ரிஸர்ச் ரிப்போர்ட் இருக்கட்டும். டயபெடிஸ், இதயநோய் இன்னபிற வியாதிக்கெல்லாம் காப்பிதான் காரணம் என அடுத்த ரிப்போர்ட் அமெரிக்காவிலிருந்து வந்தாலும், அசருகிறவன் நான் இல்லை!:)ஏகாந்தன் சார்,
பதிலளிநீக்குயார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே
காப்பியின் கருணையை நாடு ''என்று பாடும் பரம்பரை என்னுடையது.
அதுவும் இந்த ஸ்விஸ் பாலுக்கு சர்க்கரை கூட வேண்டாம்.
//யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே
நீக்குகாப்பியின் கருணையை நாடு.. // ஊத்துக்காடு வேங்கடசுப்பா .... இவர்களை மன்னியுங்கள்!
//..இந்த ஸ்விஸ் பாலுக்கு சர்க்கரை கூட வேண்டாம்.//
நீக்குஸ்விஸ் பால்! நினைவிருக்கிறது நாக்கிற்கு. 92 லிருந்து 95 வரை ஜெனீவாவில் வாழ்ந்திருக்கிறேன். நிறைய சுற்றியுமிருக்கிறேன்.
டோக்யோவிலும் காப்பி கமகமக்கும். ஒருகாலத்தில் சுகமாக இருந்திருக்கிறோம் என இப்போது தெளிவாகிறது!
காப்பி புராணத்தை ஆரம்பித்த ஸ்ரீராமுக்கு, அவருடைய பாஸ் சூடான ஃபில்ட்டர் காப்பி போட்டு உடனே கொடுப்பாராக!
ஸ்விஸ் பால் அப்......படி இருக்குமா? ஹையோடா....
நீக்கு//காப்பி புராணத்தை ஆரம்பித்த ஸ்ரீராமுக்கு, அவருடைய பாஸ் சூடான ஃபில்ட்டர் காப்பி போட்டு உடனே கொடுப்பாராக!//
நீக்குசில சமயங்களில் நம் காஃபியை நாமே போட்டுக் கொள்ளுதல் நலம்.
குடும்பத்தில் அமைதியையே விரும்புகிறவர் தானே போட்டுக்கொள்வது நல்லதுதான்!
நீக்குஹிஹிஹி.... கரெக்ட்...டா தப்பா புரிஞ்சுக்கறதுங்கறது இதுதானா?!!!
நீக்குஇன்று காபி குடிக்கவில்லை. தலைவலி வரவில்லை. எனவே நான் காபியை நினைத்தால் குடிக்கலாம். நினைத்தபோது நிறுத்தவும் முடியும். நான் காபிக்கு அடிமை இல்லை.// கௌதமன் ஜி கொடுத்து வைத்தவர் நீங்கள்.!!!!!!!
பதிலளிநீக்குநன்றி. (காபி குடிப்பதை நிறுத்த சுலபமான வழி - காரம், மணம், குணம் இல்லாத விளக்கெண்ணெய் பிராண்ட் காபியை வீட்டில் வாங்கி வைக்க வேண்டும். காபி குடிக்கவேண்டும் என்கிற ஆசை வரும்பொழுது அந்த வி பி காபிப் பொடி உபயோகித்து, இரண்டாம் டிகாக்ஷனில், தண்ணீர்ப்பால் சேர்த்து அருந்தினால், காபி ஆசை காஷாயம் உடுத்தி காசிக்குப் போய்விடும்!)
நீக்குமணக்க, மணக்க ஒரு புத்தகம் போடும் அளவிற்கு உங்களுக்குள் அனுபவம் குந்திக்கொண்டிருக்கிறது..!
நீக்குஎன்ன மட்டமான காஃபி குடித்தாலும் காலையில் நாக்கு அதைத்தான் தேடுகிறது!
நீக்குமுன்னெல்லாம் 2000 ஆரம்பத்தில் அடிக்கடி அன்னலக்ஷ்மி சென்று கொண்டிருந்தோம்.
பதிலளிநீக்குஇப்பொழுது நினைத்தும் பார்ப்பதில்லை. எங்க ஊர் தளிகை கடை தி பெஸ்ட்,
வல்லிம்மா.. நானும் ஆரம்பத்தில் தளிகை யில் சாப்பிட்டு நொந்து போனவன். வீட்டிலுள்ளவர்களுக்கும் அதுவே எண்ணம்.
நீக்குஹா ஹா
உங்கள் ஊர் தளிகையில் ஒருமுறை சாப்பிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் வேளை வரவில்லை!
நீக்குசேல் அகற்றீய மாதர்.ஹ்ம்ம்.
பதிலளிநீக்குஇதே போல ஒகமாடலு ,ஒக பத்தினி ஆண்களுக்கும் வேறு பட்ட
ஆண்களுக்குனு ஏதாவது சொல் இருக்கணும்.
பழைய பைண்டிங்கில் எப்பவாச்சும் கிடைத்தால் வெளியிடுகிறேன் அம்மா....!
நீக்குwill come back. second coffee is calling me.
பதிலளிநீக்குE ... n ..... j ...... o ......y !
நீக்குகாஃபி எடுங்கள்... கொண்டாடுங்கள்!
நீக்குபுது வலைத் தளம் ஆரம்பித்திருக்கும் ரமாஸ்ரீனிவாசனுக்கு
பதிலளிநீக்குஅமோக வாழ்த்துகள்.
அஃதே அஃதே...
நீக்குதிருவெறும்பூர் இட்லிக்கடைக்கு இப்போதே
பதிலளிநீக்குபோக ஆசை.
கடை உரிமையாளரின் பண்பு மிகப் பிடித்திருக்கிறது. நம் ரிஷ்பன் சாருக்கும் தெரிந்திருக்குமோ.
தெரிந்திருக்கலாம். எனக்கும் அந்த இட்லிக்கடை போக ஆசை.
நீக்குநாம் எல்லோரும் போகலாம் ஸ்ரீராம்.
நீக்குஓகே வல்லிம்மா...
நீக்குநகைச்சுவைக்கான கருத்துப்படம் அருமை.
பதிலளிநீக்கு(குற்றால) அருவியில் குளித்து விட்டு வந்து, நடுக்கத்துடன் காபி... ஆகா...!
பதிலளிநீக்குஆஆஆ அதிரா மட்டும்தானே இங்கின அப்பாவி:) இபோ எனக்குப் போட்டியாக இன்னொரு அப்பாவியோ?:) ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குஅந்த அப்பாவி.. ஒரு ஆம்ஸ்ரோங் ஆன கதை படிக்க மீயும் வெயிட்டிங்கூஉ:))
நான் அப்போ...நீங்க இப்போ அப்பாவி..! வாங்க அதிரா...
நீக்குகோப்பி, ரீ உடலுக்கு நல்லது.. ஆனா அது அப்படியே சுடுநீரில் போட்டுக் குடிச்சால் மட்டும்:))..
பதிலளிநீக்குஆனா அதுக்குள் என்னவெல்லாம் போட்டு நல்ல திக் ஆக்கி, சீனியும் போட்டுக் குடிச்சால் கூடவே கூடாது:)..
கெள அண்ணன் மேலே சொன்னதைப்போல நானும் பிறந்ததிலிருந்து:)).. கண் முழிச்சவுடன் நல்ல ஸ்...ரோங் ரீ குடிக்கோணும் இல்லை எனில்.. நெஞ்செரிக்கும்.. தலை சுத்தும். தலை இடிக்கும்.. இப்படி:)).. ஆனா போன வருடம் ஒரு டயட் ஆரம்பித்தேன், அப்போ அதுக்காக ரீ கோப்பி எதுவும் இல்லாமல் இருந்தேன்.. அதுக்குப் பதில்.. வயிறு முட்ட சுடுநீர்..வெண்சூட்டு நீர் குடிச்சுக் கொண்டே இருந்தேன்ன்.. அத்தோடு பழகிவிட்டேன்.. இப்போ தண்ணீர் மட்டும் குடிச்சே நாள் முழுவதும் கூட இருக்க முடியுது என்னால, மனம் தான் அனைத்துக்கும் காரணம், அத்தோடு ரீ க்குப் பதிலாக வயிறுக்கு தண்ணி காட்டிப் பேய்க்காட்ட வேண்டியதுதேன்ன்ன் ஹா ஹா ஹா:)..
ஆஹா! நன்று.
நீக்குஆமாம், காலை வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்கலாம் என்று எனக்கும் யோசனை சொல்லியிருந்தீர்கள்.
நீக்கு//போனவாரம் தோசை கடை ஒன்றைப் பற்றிப் பார்த்தோம் இல்லையா? இந்த வாரம் இட்லிக்கடை. //
பதிலளிநீக்குஆவ்வ்வ் அடுத்து புட்டுக் கடை:)) ஹா ஹா ஹா.
ஜோக் புரியுதில்லையே.... என்ன பண்ணுவேன் யான்ன்:))..
இன்னமும் பழைய அனுக்காவையே தேடிப் போடுறீங்களே இது நியாயமோ?:) புது அனுக்கா குண்டாகிட்டாவாக்கும்:)) ஹா ஹா ஹா.
அப்போல்லாம் ஜோக்போடும்போது அதன் கேரக்டர்கள் கட்டத்துக்குள் இருப்பார்கள். அதைச் சொல்கிறார்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதம்பம் அருமை. அலுவலகத்தில், மேலதிகாரிக்கு விளக்கிப் புரிய வைக்க தங்களை தேர்ந்தெடுத்தது ஏனோ? (ஆனால் அப்பாவிகள்தான் மிகவும் பொறு(திற)மைசாலிகள் என்பது அசைக்க முடியாத என் கருத்து. ஹா.ஹா.ஹா. ) அப்பாவியின் கதை முடிவை அடுத்த வாரம் காணலாம் என முடித்து விட்டீர்கள். வெற்றிகரமாக அவருடன் பேசி தடையின்றி தொலைபேசியில் பேச அனுமதி வாங்கியிருப்பீர்கள் என நினைக்கிறேன். அந்த அடுத்த வெற்றி வாரத்திற்காக காத்திருக்கிறேன்.
காப்பி பற்றிய விபரங்கள் அருமை. காப்பி இல்லாமல் இருக்கவே முடியாது என்று தோன்றுகிறது. ஒரு வைராக்கியம் வந்தால் விட்டு விடலாம் என்றும் தோன்றுகிறது மனது தான் காரணம்.
பழமொழிகள் அவரவருக்கு தோன்றிய மாதிரி திருப்பி விட்டுக் கொள்ளலாம் எனத்தான் நினைக்கிறேன்.
நகைச்சுவை புரியவில்லை. கட்டத்துக்குள் வந்தால்தான் ஹாஸ்யமாக பேச முடியுமா?
கவிதை அனுஷ்கா மாதிரி அழகாக இருக்கிறது. ஒரு கவிதையே தன்னைத்தானே புதுப்பித்து கொள்ள அகராதியை புரட்டுவது அகராதிக்கும் கண்டிப்பாக பெருமை சேர்க்கும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஸ்ரீராம், இனிமேல் ஜோக் பகிரும்போது, அதன் விளக்கத்தையும் போடவும் ஹா ஹா ஹா:))..
நீக்குஇப்படிக்கு ஸ்ரீராமின் ஜோக் புரியாதோர் சங்கம்:)..
இந்த சங்கத்தின் இப்போதைய உறுப்பினர்கள் நாமிருவர் மட்டுந்தான் என நினைக்கிறேன் அதிரா சகோதரி. ஹா. ஹா. ஹா.
நீக்குகாஃபி இல்லாமல் இருக்க முடியும்தான். முயன்றால் முடியாத விஷயம் இல்லை. ஆனால் ஏன் அப்படி இருக்கணும்? அதென்ன டாஸ்மாக் கடைச்சரக்கா?!! எனவேஅளவோடு காஃபி சாப்பிடும்நான் அ...தை வி..டு..வ..தா..ய் இ..ல்..லை!
நீக்குபழமொழிகளுக்கு எப்போதுமே புதிய விளக்கங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும். ஹீரோ படத்தில் அர்ஜுன் கூட அபப்டியீடோ சொல்கிறார்... (ஹிஹிஹி... நேற்றுதான் அமேசானில்கொஞ்சம் பார்த்தேன்!)
அனுஷ் படம் போட்ட உடனேயே கவிதை அழகாகி விடுகிறது, ஒரு அந்தஸ்து கிடைத்துவிடுகிறது! என்ன சொல்றீங்க!
//அபப்டியீடோ //
நீக்கு*அப்படி ஏதோ
பதிலளிநீக்குபூனைக்கு மணிகட்டத் தேர்வானவர் போல அதிகாரியிடம் சென்ற அப்பாவியின் கோரிக்கை என்னவாயிற்று என அறியக் காத்திருக்கிறேன்:).
காபியின் நற்பலன்கள் பற்றியப் பகிர்வு பயனுள்ளவை. இட்லிக் கடை அசத்துகிறது.
சுவாரஸ்யமான தொகுப்பு.
அப்பாவியின் கதை என்னவாயிற்று என்று தெரிந்து கொள்ள வேண்டும் - அடுத்த பதிவு கூட நாளை வந்து விடும்! ஆனால் நான் இப்போது தான் இங்கே வருகிறேன்! :)
பதிலளிநீக்குநினைவூட்டும் இட்லி கடை - நல்ல விஷயம்! அந்த நல்லுள்ளம் படைத்தவருக்கு பாராட்டுகள். அடுத்த பயணத்தில் முடிந்தால் சென்று சாப்பிட வேண்டும். பார்க்கலாம்.