வியாழன், 30 மே, 2019

கேட்காமல் போட்டோ எடுக்கறது தப்பு தம்பி....


சாலைச் சந்திப்புகளில் இதுபோன்ற உருவங்கள், வடிவங்களை வைத்து நகரை அழகுபடுத்தியிருக்கின்றனர்.  நான் ப்ரயாக்ராஜில் ஒரு மாநகரப் பேருந்து கூடப் பார்க்கவில்லை.  இல்லை என்றே நினைத்துக் கொண்டேன்.  ஆனால் இருக்கிறது என்று வெங்கட் தளத்தில் படித்து / பார்த்து தெரிந்துகொண்டேன்.



காலை தங்கியிருக்கும் இடத்திலிருந்து கிளம்பிய உடனேயே அலைபேசிக் கேமிராவுக்கு நிறைய வேலை வைத்துவிட்டேன்.  வெங்கட் தளத்தில் க்ளியரான படங்கள் பார்த்த கண்களுக்கு இவை ஒன்றல்ல, இரண்டு மூன்று மாற்று குறைவாகவே இருக்கும்!  இது அந்த ஊரில் கண்ணில்பட்ட ஷேர் ஆட்டோ வகை ஒன்று.  நம்மூர் ஆட்டோ வகைகளும் இருக்கின்றன.


அங்கேயும் 'அடைத்து'க் கொண்டுதான் வருகின்றனர்!


ஆனந்த பவனம் மற்றும் அலஹாபாத் மியூசியம் செல்லும் சாலையில்தான் சென்றோம்.  அங்கு வழியில் கண்ணில்பட்ட கலைநயம்மிக்க சர்ச்.  படம் எடுக்க எடுக்க, எடுத்தபின் ஏதோ ஒன்று அதை மறைத்திருக்கிறதுஎன்று பார்த்து பஸ் திரும்பும்போது சடசடவென எடுத்துத் தள்ளிய புகைப்படங்கள்!  முழுமையாகவோ, அல்லது வெளியிடும் தரத்திலோ ஒன்றாவது வந்துவிடாதா என்கிற நப்பாசைதான்!



இது மரம் தம்ஸ் அப் காட்டுகிற மாதிரி இல்லை?!!


கொஞ்சம் மறைக்காமல்....



முன்னால் ஒரு கலைப்பொருள்!  என்ன அது?  ஏதோ அலங்காரம்!



நேருக்கு நேராய் ஒரு அவசர க்ளிக்...



சாலைச் சந்திப்பில் கண்ணில் பட்ட இன்னொரு வடிவம்.




இதோ மற்றொன்று!




காலை ஏழரை மணி....  சாலை எவ்வளவு காலியாக இருக்கிறது பாருங்கள்!



என் மாமாக்களில் ஒருவர் வாங்கி வைத்திருந்த FM Mike.  இதிலேயே ஸ்பீக்கர் வசதியும், ப்ளூடூத் வசதியும், மெமரி கார்ட் போடும் வசதியும், அலைபேசியில் வரும் அழைப்பை இதிலேயே வாங்கும் வசதியும் இருக்கிறது.  என் ஆசையைத் தூண்டிய காட்ஜெட்!  (இன்னும் வாங்கவில்லை!)


பதிவில் படங்கள் ஆர்டர் மாறி சேமிப்பாகி விட்டன.  ஒழுங்கு செய்யும் பொறுமை இல்லை!  விளக்கம் கொடுத்துட்டாப் போச்சு!  இல்லையா?  இந்த கோட்டை அருகேதான் இறங்கினோம்.  தசவ்மேதி கட்டுக்கு அருகே...   இங்கேதான் சங்கர மேடம் கோவில் இருக்கிறது.  இதன் உள்ளேதான் அட்சயவடம் அடிப்பாகம் இருக்கிறது.  எங்கள் பெருமைமிகு டிராவல்ஸ் காரர் அதை எங்களுக்குக் காட்டவில்லை.  ஒருவேளை சங்கல்ப தர்ப்பண, ஸ்நானங்கள் முடித்துச் செல்லும் நேரம் அதைக் காண முடியவில்லையோ என்னவோ...   நாங்கள் இங்கிருந்து தங்கியிருக்கும் இடத்துக்கு இரண்டு பிரிவுகளாக திரும்பினோம்.  ஸ்ராத்தம் முடிந்து நாங்கள் இரண்டாவது பேட்ச்சில் திரும்பினோம்.

இங்கே கடைகள் வைத்திருப்பவரகள் தங்கள் குழந்தைகளுக்கு விதம் விதமாய் அலங்காரம் - பெரும்பாலும் ஆஞ்சனேயர் வேடம் - செய்து வைத்திருந்தார்கள்.  மக்களைக் கண்டதும் வந்து கையேந்தத் தயாராய் எப்போதும்...!


சாலையோரங்களில் நிறைய லிங்கங்கள் இருக்கின்றன என்று சொல்லி இருந்தேனே..   இதோ மாதிரிக்கு ஒன்று.  சிறிதளவு தூர இடைவெளியில் நிறைய கண்ணில் பட்டன.


அந்த லிங்க வடிவங்களிலும் ஓவியம்...   அதை எடுக்க ஜூம் செய்தேன்.  எனவே படத்தில் துல்லியம் தொலைந்திருக்கும்!  ஏற்கெனவே லட்சணம்!!


பாலங்களிலும் கடவுள் ஓவியம்...    பாலத்துக்குக் கீழே கைகூப்பி நிற்கும் முனிவரின் புகைப்படம் வெங்கட் தளத்தில் வந்தது என்று நினைக்கிறேன்!


தங்கியிருந்த ஹோட்டலின் பால்கனியிலிருந்து ஒரு காட்சி....தேச பக்தி, பக்தி இரண்டும் எங்கெங்கும் கண்ணில் பட்ட ஊர்...


நாங்கள் தங்கியிருந்த ப்ரயாக் ஹோட்டல்...  சுவர் ஓவியங்களால் அலங்கரிக்கப் பட்டுல்லதைப் பாருங்கள். இங்கு பெரும்பாலான கட்டிடங்கள் ஓவியங்களால் அழகு  படுத்தப்பட்டிருந்தன.






இன்னும் இந்த ரிக்ஷாவும் இங்கு உண்டு என்று காண்பிப்பதற்காக....  தாண்டும்போது அந்த ஆண்ட்டி முறைத்துக் கொண்டே சென்றார்...  'கேட்காமல் போட்டோ எடுக்கறது தப்பு தம்பி....   அதுவும் பெண்களை....'  சின்னப்பையன்தானே என்று விட்டிருப்பார்.


சாலைச் சந்திப்பில் நேதாஜி...  முஷ்டி மடக்கி வலிமை காட்டுகிறாரா?  ஜப்பானிய முறையில் வணக்கம் சொல்கிறாரா?


அந்தக் கோட்டைக்கு அருகே இருக்கும் கோவில்....  அடுத்த படத்துக்கு அடுத்த படம் வரிசையாக எடுக்கப்பட்டிருக்கும் போட்டோஸ்!


ஒரு சந்திப்பில் கண்ணில் சிக்கினார் சாஸ்திரி!  அவரை நேராக படம் எடுக்க முடியவில்லை... ஆனாலும் தாண்டுவதற்குள் ஒரு க்ளிக்!



சங்கரமடக் கோவில்.



பக்கத்தில் செல்லச்செல்ல...



அடுத்தடுத்து...  நாங்கள் அங்கேதான், அதன் அருகேதான்  இறங்கப்போகிறோம் என்பது தெரியாமல் தாண்டி விடுவோமோ என்று பயந்து வேகமாக க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்...



இந்த வியூ நல்லா இருக்கு இல்லே?


நேருக்கு நேராய்....!



ஆனந்தபவனம் செல்லும் சாலையில் சுவர் அலங்கார ஓவியங்கள்..  நாங்கள் ஆனந்தபாவனம் செல்ல முடியவில்லை.  நாங்கள் அங்கு இருந்த நாள் திங்கட்கிழமை.  திங்கட்கிழமை ஆனந்தபவனத்துக்கு வாராந்திர விடுமுறையாம்...   கொடுமை!


சுவர் ஓவியமாக நேதாஜி...  அது ஒரு தொகுப்புவீடு என்று நினைக்கிறேன்.  பஸ்ஸில் போய்க்கொண்டே எடுத்த படங்கள்...


பயணக்கட்டுரை மூன்று நான்கு வாரங்களுக்கு முன்னரே எழுதி வைத்து விடலாமே என்று நெல்லைத்தமிழன் சொல்லியிருந்தார்.  அப்படியும் இரண்டு வாரங்கள் செய்திருந்தேன்.  இப்போதும் தயாராய் இருந்தாலும், இந்த வாரம் கொஞ்சம் புகைப்படங்களை வைத்து விஷயம் சொல்லலாம் என்று தோன்றியது.  அடுத்த வாரம் விவரங்கள் அதிகம் இருக்கும்.  படங்கள் குறைவாய் இருக்கும். 



எப்போதும் போர்வைக்குள்ளேயே தூங்கி கொண்டிருந்த பெண்ணை எப்படிப் புகைப்படம் எடுப்பது?!!
===========================================================================================


அப்போது ஸ்விஸ் ஹேமாவே பாராட்டிய கவிதை!  பேஸ்புக்கில் வந்தது!




======================================================================================================


ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தி ஒன்பதாம் ஆண்டு குமுதத்தில் வந்த கிசுகிசு!  உடைக்க முடிகிறதா என்று பாருங்கள்!




=============================================================================================================

நேற்று பேஸ்புக் புதிய தலைமுறைப் பக்கத்தில் (அதற்குப் பக்கத்தில் அல்ல,  அந்தத் தொலைக்காட்சியின் பேஸ்புக் பக்கத்தில்)  நானும் கீதா அக்காவும் ஒரு கானொளி பார்த்து நொந்துபோனோம்.  ஹோசூரில் அருமையான இரு பிள்ளைகள் தனது தகப்பனாரை அவரது உடைமைகளுடன் (நிஜமாகவே) வெளியே தூக்கி எறியும் காணொளி.    அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தவர் உதவ வந்து அதில் ஒருவர் கைகலப்பில் வேஷ்டி இழந்தார்.   இதோ கீழே ஒரு செய்தி...  சொத்துக்காக தனது குடும்பத்தாரையே கொன்று விட்டு ஏஸி மெஷின் லீக்கேஜ் என்று கதை பரப்பிய கொலைஞனையும் படித்திருப்பீர்கள்..  உறவுக்கு மதிப்பில்லை.  உலகம்  எங்கே போய்க்கொண்டிருக்கிறது....?




===================================================================================================


நெல்லைத்தமிழனுக்காக ஒரு கிசுகிசு!  மேலே கொடுத்திருக்கும் குமுதம் கிசுகிசுவோடு ஒப்பிடும்போது இதெல்லாம் ஒரு கிசுகிசுவா? !!!

தமன்னா படம் நெட்டில் தேடினால் இணையம் தமன்னா பாட்டியா? என்று என்னையே சந்தேகம் கேட்கிறது!


எப்படியும் நெல்லை இந்தப் படம் சரியில்லை என்றுதான் சொல்லப் போகிறார்!




=======================================================================================================


இரண்டாயிரத்து பதிமூன்றாம் ஆண்டு மே மாதம் கவிதை எழுதுமளவாவது ஒரு சிறுமழை கண்ணில்பட்டு பூமியில் தெறித்தது.  ஆனால் இப்போது?  

வெள்ளமாய் வேண்டாம் என்று சொல்லியும் 2015 டிஸம்பரில் ஒரு காட்டு காட்டியது இயற்கை.  அதற்கு அப்புறம் ஒரு நல்ல மழையைப் பார்க்கவில்லை சென்னை!




====================================================================================================

நெல்லைத்தமிழனுக்காக ஒரு படம்...   என்ன எதுவென்று நினைவிருக்கிறதா நெல்லை?



******************************************************************************************************

233 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆஹா... மூன்றா, நான்கா? எவ்வளவு மீதான் வரப்போகுது?

      வருக அதிரா... காலை வணக்கம்.

      நீக்கு
    2. எதிர்பார்த்தேன் ஸ்ரீராம்

      இந்த பூஸார் வந்துதான் நான் உள்ளே நுழைய கஷ்டமாருக்குனு தெரிஞ்சு போச்ஹ்கு!!!

      கீதா

      நீக்கு
    3. குட் மோனிங் ஶ்ரீராம் அண்ட் பெரி பெரீஈ லேட்டா பந்த கீதாவுக்கும்:)

      நீக்கு
    4. அதாரு சவுன்ட்!!! ஷுப்!!! பெரி லேட்டா பரலை...ஹிஹிஹி நீங்க கம்பில என்னை பின்னாடி தள்ளிப் போட்டு ஹூம் இருங்க செக் கிட்ட சொல்லி உங்க வாலைப் பிடிக்கச் சொல்லறேன் ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    5. நோ....நோ... ரெண்டு பெரும் சண்டைபோடாம வாங்கோ... பாருங்க வெங்கட் எவ்வளவு அமைதியா வந்ததே தெரியாமல் வந்து போயிருக்கிறார்!

      நீக்கு
    6. அனைவருக்கும் காலை வணக்கம்.

      யாராவது இன்று என்ன கிழமை என்று எனக்கு கன்ஃபர்ம் பண்ண முடியுமா? ஞாஆஆஆஆஆயிறா இல்லை வியாழனா?

      நீக்கு
    7. காலை வணக்கம் நெல்லை...

      ஞாயிறா? வியாழனா?

      இதை... இதை... இதை..

      இதை நான் எதிர்பார்த்தேன்!

      நீக்கு
    8. //யாராவது இன்று என்ன கிழமை என்று எனக்கு கன்ஃபர்ம் பண்ண முடியுமா? ஞாஆஆஆஆஆயிறா இல்லை வியாழனா?//

      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் போன ஞாயிறு இதே குழப்பம் எனக்கும் வந்துது.. காசிப்படங்களோ அவை என ஹா ஹா ஹா .. இன்றும் டக்க்கென ஒரு செகண்ட் கொன்போம் பண்ணிட்டே கொமெண்ட் போட்டேன்:))

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஹலோ பூஸார் கருத்து கருத்து கருத்து....

      நாங்க கருத்தோட வருவோம்!!!!

      கீதா

      நீக்கு
    2. கீதா ரங்கன்... தூக்கக் கலக்கத்தோடு இருக்கறவங்களுக்கும் உங்களை மாதிரி சுறுசுறுப்பா இருக்கறவங்களுக்கும் வித்யாசம் இல்லையா?

      நீக்கு
    3. அதிரா தூங்கவில்லை என்று மேலும் இரண்டு கருத்துகள் போட்டு நிரூபித்திருக்கிறார்கள் நெல்லை!

      நீக்கு
    4. ஆமாம் நெல்லை ஸ்ரீராம் சொல்றது போல கீழ பாருங்க...கருத்து போட்டுருக்காங்க...!!!!!!

      கீதா

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்

    நேற்று நெல்லை ஒரே ஃபீலிங்குனு இன்று தமனாக்கா வாஅ!! ஹா ஹா

    ஆமாம் தம்பி கேக்காம ஃபோட்டோ எடுக்கக் கூடாது..தலைப்பு ஏதோ சொல்லுது...காசிக்குள் போயாச்சு போல!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    2. கீதா ரங்கன்.. நீங்க துரியோதன்ன், தர்மர் கதை கேள்விப்பட்டிருக்கீங்களா? துரியோதன்னுக்கு எல்லோரும் கெட்டவர்களாகவும் சந்தோஷமில்லாதவர்களாகவும் தெரியும், தர்மருக்கு எல்லாம் நல்லவர்களாகவும் சந்தோஷமாகவும் தெரியும்.

      நான் தேடினால் கிடைக்கும் லட்டு லட்டான படங்கள் ஶ்ரீராமோ கேஜிஜி சாரோ தேடினால் கிடைப்பதில்லை. என்ன காரணமாயிருக்கும்?

      படம் தமன்னாவின் மூன்றாவது டூப் என்றாலும் யாரும் நம்பமாட்டாங்க..ஹாஹா

      நீக்கு
    3. இருந்தாலும் எங்க தலைவர் வரைந்த ஓவியம் போட்டதற்காக மன்னிச்சு விட்டுடலாம். பழைய ஜெ படங்களை அடிச்சுக்க ஆள் கிடையாது(கீசா மேடம்.. இது ஓவியர் ஜெ. உடனே அவசரத்துல, ஆமாம்.. காஞ்சனாவை விட சூப்பர்னு பின்னூட்டம்போட்டுடாதீங்க)

      நீக்கு
    4. பார்த்தீர்களா? நெல்லைக்கு தமன்னாவை எப்படிப் பார்த்தாலும் திருப்தி இருக்காது என்று நான் சொல்லவில்லை?!!

      நீக்கு
    5. ஜெ வரைந்த அந்த ஓவியம் எதற்குன்னு உங்களுக்கு நினைவுக்கு வரவில்லையா நெல்லை?

      நீக்கு
    6. கொலையுதிர் காலத்திற்கான படம்தானே?

      நீக்கு
    7. என் ஞாபக சக்திலதான் ஏதோ ப்ராப்ளம். நான் கொலையுதிர் காலம் நாவலை வாங்கிப் படித்தது குங்குமமோ இல்லை ஏதோ ஒரு மாத இதழ், தனி நாவலா வெளியிடுமே அந்த மாதிரி புத்தகம்தான் நான் வாங்கினேன். முன்புள்ள கல்கி சைஸ் ஆனால் அகலம் கொஞ்சம் சிறியது. அதில் ஏகப்பட்ட படங்கள் ஜெ. போட்டிருந்தார். மாடர்ன் டிரெஸ் என்று ஞாபகம். ஹாஹா.

      இருந்தாலும் பாருங்க.. அந்த ஓவியர் சேலையை எவ்வளவு நுணுக்கமா (சில்க் சேலை) உடல் தெரியும்படி வரைந்திருக்கிறார். என் ரசிப்பைச் சொல்லும் விதமா இந்தப் படத்தை நான் கோட்டோவியமாக வரைந்து அனுப்பறேன் (அடுத்த வியாழன்லயும் மேட்டர் வராம படத்தைப் போட்டு ஒப்பேற்றினால், அந்தப் படத்தையும் போடுங்க. மன்னிச்சு விட்டுடறேன்)

      நீக்கு
    8. ஆமாம் பானு அக்கா... கொலையுதிர்காலம்தான். நெல்லை கண்டுபிடிப்பார் என்று பார்த்தேன். சென்ற வாரம் கொலையுதிர்காலத்திலிருந்து நீங்கள் ஒருவரி எடுத்துவிட, தொடர்ந்த நெல்லையின் கமெண்டுக்கான விளைவே இந்தப் படம்... அம்மா.....டி... எவ்வளவு விளக்கம் கொடுக்கவேண்டியிருக்கு!

      நீக்கு
    9. நெல்லை என்னமோ நான் ரொம்ப ரசிப்பேன்னு நினைச்சிருக்கார். உண்மையைச் சொன்னால் எனக்கு ஜெயராஜ் வரைவதே பிடிக்காது! :))))) ரசிகத்தன்மை எனக்கு இல்லை என நீங்கள் எல்லாம் நினைக்கலாம்! :)

      நீக்கு
    10. பார்த்தீர்களா? நெல்லைக்கு தமன்னாவை எப்படிப் பார்த்தாலும் திருப்தி இருக்காது என்று நான் சொல்லவில்லை?!!//

      ஆமாம் கரீயிக்டு ஸ்ரீராம்! இந்தப் படத்தையே இப்பூடி சொல்றாரே...

      ஸ்ரீராம் ஒரு வேளை நெல்லை தமனாக்கு திருஷ்டி விழுந்துடும்னு அப்படிச் சொல்லிக்கிறார்னு தோணுது!!!!!!!!!!!!!!!மூணாவது டூப்பாமே!! ஹெ ஹெ ஹெ...

      கீதா

      நீக்கு
    11. //ஸ்ரீராம்.30 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:35
      பார்த்தீர்களா? நெல்லைக்கு தமன்னாவை எப்படிப் பார்த்தாலும் திருப்தி இருக்காது என்று நான் சொல்லவில்லை?!!//

      ஸ்ரீராம் உங்களுக்கு மறதி:)).. நெல்லைத்தமிழனுக்கு தமனாக்காவும் வேணும் அவ பொட்டும் வச்சு வேணும் ஆனா உச்சியில் குங்குமம் வச்சிருக்கப் படாதாம்:)) ஹா ஹா ஹா ஹையோ ஹையோ:).. இன்று பொட்டு வைக்காத தமனாக்காவைப்பார்க்க ஏதோ முகத்துக்கு பவுடர் போட்ட சூனியக் கிழவிபோல இருக்கிறா ஹா ஹா ஹா:)) மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))

      நீக்கு
  4. எந்தாப் பெரிய பொஸ்ட் ஶ்ரீராம்:)... கை கால் படபடக்க மொபைலில் கீழே இழுக்கிறேன் இழுக்கிறேன்ன்ன் முடியவே இல்லை:).. கொமெண்ட்ஸ் பொக்ஸ் வரவே 30 செக்கண்ட் ஆச்சூஉ ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா... இந்த வாரம் பக படங்களால் ஆனது! அதைத்தவிர இருக்கும் விஷயங்களும்... எனவே சற்று நீளமாகி இட்டது. மன்னிக்கவும்!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா அதிரா உங்களுக்கே அப்பூடியா அப்ப பாருங்க நீங்க இழுக்க இழுக்க நானும் இழுக்க இழுக்க நீங்க என்னை இழுத்துப் போட்டு முன்னே ஜம்பி....லாஆஆஆஆஆஆஆஆஆஅங்க் ஜம்பி...ஓ நீங்க தேர்ட் ஆச்சே!!!!

      கீதா

      நீக்கு
    3. இருவரும் இழுப்பதில் நான் விழுந்து விழுந்து பதில் கொடுக்கிறேன்!

      நீக்கு
    4. சே சே நான் 1 ஆ வருவதற்காகக் கஸ்டப்பட்டதாலதான் பெரிசு என்றேன் மற்றும்படி வீயழக்கிழமை போஸ்ட் பெரிசானாலும் தரத்தில் குறையிருக்காது... சுவாரஷ்யம்தான்.. நில்லுங்கோ படிச்சிட்டு வாறேன்ன்..

      நீக்கு
    5. ஸ்ரீராம் பெரிசு எல்லாம் இல்லை...பெரிசா? யார்கிட்ட சொல்றீங்க பெரிசுனு மன்னிச்சுக்க!! கீதாகிட்டயா ஹா ஹா ஹா ஆ ஹா அப்ப கீதாவுக்கே அல்வா கொடுத்துட்டேன்றீங்களா?!!!!!!!!!! நெவர்!! கீதாவுக்கு கொடுக்க முடியாதாக்கும்!! ஹிஹிஹி

      .படங்கள் நிறைத்து இருக்கின்றன....உங்கள் போஸ்ட் எப்பவுமே ஸ்வாரஸ்யமாத்தானே இருக்கும் அப்புரம் என்ன

      கீதா

      நீக்கு
    6. ஓ... கீதா....புரிகிறது... புரிகிறது!சரி, நல்லாயிருந்தால் நீளம் பாதிக்காது என்கிறீர்கள்.. ஓகேயா?

      நீக்கு
    7. யெஸ்ஸு யெஸ்ஸு அதே அதே சபாபதே!!! அதுவும் மீக்கு எல்லாம் நீளம் பிரச்சனையே இல்லைனு உங்களுக்குத் தெரியாதா என்ன!!!!!!!!! புரிஞ்சுச்சா ஸ்ரீராம் நான் என்ன சொல்றென்னு!! (மீக்கு ஒன்றை நினைத்தால் இப்பவே உதறல் எடுக்குது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!)

      கீதா

      நீக்கு
    8. நோஓஓஓஓஓ அதே.அதே.. அதிரபதே:)) ஆக்கும்:))

      நீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் சிறப்பு. சங்கர மடத்தின் கோவில் உள்ளே நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் சிறப்பு. //

      உங்கள் பெருந்தன்மை! நன்றி வெங்கட்.

      //சங்கர மடத்தின் கோவில் உள்ளே நன்றாக இருக்கும்.//

      ம்ஹூம்... உள்ளே போயிருந்தால் பார்த்திருக்கலாம்....



      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், வெங்கட்,கீதா,நெல்லை,அதிரா அனைவருக்கும்.
      படங்கள் வாராணசியின் சுறுசுறுப்பைப் படம் பிடிக்கின்றன.
      மிக அழகு.
      சங்கர மடக் கோவில் ஸ்ரீபெரியவா ஆரம்பித்து பல சிரமனகளைச் சந்தித்தாலும் ஸ்ரீ கணபதி ஸ்தபதியால் உருவானது. முழுமுதற்கடவுள்கள் அனைவருக்கும்
      தனி தளங்கள்
      பெரியவா கையாலயே வரையப்பட்டு உருவாக்கப் பட்டது.

      மிக நன்றி மா.

      நீக்கு
    3. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...

      வாங்க.. வாங்க...

      சங்கரமடம் கோவிலுக்குள் நாங்கள் செல்லவில்லை என்பது சோகம்.

      நீக்கு
    4. ஓ வாங்கோ வல்லிம்மா இனிய வியாழக்கிழமை வணக்கம்.. உங்கள் கொமெண்ட்டை இப்போதான் பார்க்கிறேன்.

      நீக்கு
  7. எஃப் எம் மைக் வாவ் சூப்பர்!! ஈர்க்கிறது..

    மற்ற கருத்துகளுக்கு அப்புறம் வரேன் ஸ்ரீராம்...கடமை..

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதின கருத்தைவிட அகற்றப்பட்ட கருத்து என்னவாயிருக்கும்னு யோசிப்பதில் நேரம் கழிகிறது

      நீக்கு
    2. அது அதிலேயே விடுபட்ட பகுதி சேர்த்து திருத்தம்!

      நீக்கு
    3. ராத்திரி நெலைத்தமிழன் இங்கின வந்ததை நான் கவனிக்கவில்லையே... மளமளவென கொமெண்ட்ஸ் போட்டுவிட்டு ஓடி விட்டேன்:).. நெல்லைத்தமிழனுக்கு “அங்கு” வெடி வச்சிருக்கிறேன்:)) ஓடிப்போய்ப் பாருங்கோ:)) ஹா ஹா ஹா.
      அதிரா இப்போ நாட்டில இல்லை:))

      நீக்கு
    4. அப்பாவி அதிரா:)30 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:19
      இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.////???????

      நீக்கு
    5. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அஞ்சுவுக்கு மட்டுமே இருந்த “நோய்” இப்போ நெல்லைத்தமிழனுக்கும் தொத்தி விட்டதே:)).. குண்டர்கள் இருவரையும்[அஞ்சு, நெ.த:)] ஹா ஹா ஹா இன்னும் காணல்லியே என எழுதி அழிச்சிட்டேன்ன் ஹா ஹா ஹா இப்போ திருப்திதானே:)

      நீக்கு
    6. //குண்டர்கள் இருவரையும்[அஞ்சு, நெ.த:)] // - எத்தனை தடவைதான் நான் இதனைச் சொல்றதோ.. இறைவா... மனசுல வஞ்சகம் இல்லாம நல்லவங்களா இருந்தால், சாப்பிடற சாப்பாடு உடம்புல ஒட்டும். அதனால பூசின மாதிரி (வேற என்ன...குண்டா) தெரிவாங்க. மனசுல வஞ்சகம், பொய், சூது, களவு இதெல்லாம் இருக்கறவங்களுக்கு சாப்பாடு ஒட்டாது. அதுனால அவங்க ஒல்லியாத் தெரிவாங்க.

      இப்போ சொல்லுங்க....இங்கன இருக்கறவங்கள்ல யார் யார் ஒல்லியா இருக்கீங்க?

      (அப்பா...தப்பிச்சேன்...இனி ஒருவரும் 'குண்டு' என்று சொல்லமாட்டாங்க)

      நீக்கு
    7. ஹா ஹா ஹா அது என்னமோ உண்மைதான் நெல்லைத்தமிழன்.. நான் குண்டாயிட்டேன்.. என ஆக்கினை கொடுப்பேன் அப்போ என் கணவர் சொல்வார்ர்.. மனைவி குண்டெனில்.. கணவன் மனைவியைக் ஹப்ப்பியாக வைத்திருக்கிறார் என அர்த்தமாம் எனச் சொல்லிச் சமாளிப்பார் ஹா ஹா ஹா:).

      நீக்கு
  9. நேதாஜியின் சிலை கம்பீரமாக இருக்கிறது.

    விளக்கங்களும் ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
  10. //இது அந்த ஊரில் கண்ணில்பட்ட ஷேர் ஆட்டோ வகை ஒன்று///
    எதிரும் புதிருமாக இருக்கினமே..

    ///பஸ் திரும்பும்போது சடசடவென எடுத்துத் தள்ளிய புகைப்படங்கள்! //

    நீங்க இப்போ சூட் பண்ணுவதுபோல படமெடுக்கப் பழகிட்டீங்க ஸ்ரீராம்:) எங்கேயோ போயிட்டீங்க:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்தில் இந்தவகை அலங்கார ஷெராட்டோக்கள் பார்த்ததில்லை நான். அதுதான் மிட்டாயைப் பார்க்கும் சிறுவன் போல படமெடுத்து விட்டேன்!

      நீக்கு
    2. வட இந்தியாவுல லாரிகளைக்கூட ரொம்ப அலங்காரமா பண்ணியிருப்பாங்க. நீங்க கூட சாம்பிளுக்கு திருப்பதில அவங்க விடற இலவச பேருந்து (மலைல) பார்த்திருப்பீங்களே.... போரடிக்கும் டிரான்ஸ்போர்ட் வாழ்க்கையை கொஞ்சம் சுவாரசியமாக்க இப்படி அலங்காரம் செய்யறாங்கன்னு நினைக்கிறேன்.

      உங்களுக்கு பிலிப்பைன்ஸில் உள்ள சில வாகனங்கள் படங்களை அனுப்பணும்னு எடுத்து வச்சிருந்தேன். அப்புறம் 'ஞாயிறு கதவை அடைத்த பிறகு' அதெல்லாம் உங்களுக்கு அனுப்பலை ஸ்ரீராம்.

      நீக்கு
    3. ஆமாம் நெல்லை... லாரிகளை அலங்காரம் பண்ணியிருந்தார்கள். படம் எடுக்க முடியவில்லை. இரண்டுமுறை முயற்சித்தேன். முடியவில்லை.

      நீக்கு
    4. நெல்லை ஆந்திராவில் கூட நிறைய வண்டிகள் அலங்காரமா இருக்கும்...எனக்கு சும்மா ரோட்டில் பார்த்து ஹை சொல்லும் ஒருவர் அவர் காரில் இரு சைட் வியூ மிரரிலும் நாம் காது மடலில் பூவைச் செருகிக் கொள்வது போல அன்றன்று செம்பருத்தி அல்லது ரோஸ் என்று ஏதோ ஒன்றை இருபுறமும் செருகி வைத்திருப்பார். அப்புறம் சில ஸ்டிக்கர்ஸ் தொங்கல்கள் என்று ஏதோ சினிமா கார் போல இருக்கும்...அவர் கார்தான் ஆனால் அதில்தான் அவருக்கு வருமானமே...காருள்ளும் நிறைய அலங்காரங்கள் செஞ்சிருப்பார்...

      கீதா

      நீக்கு
  11. //இது மரம் தம்ஸ் அப் காட்டுகிற மாதிரி இல்லை?!!//
    இல்லை.. ஹா ஹா ஹா

    அது பிரிட்டிஷ்காரர் கட்டிய சேர்ஜ் தானே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் அதிரா... பஸ் தாண்டும்போது கண்ணில் பட்டது. மேல், ஃபீமேல் விவரங்கள் எல்லாம் தெரியாது!!!

      நீக்கு
    2. ஓ பஸ்ஸில் போகும்போது எடுத்த படங்களோ? ஆரம்பமே எழுதிவிட்டிருக்கலாமெல்லோ.. மீ குழம்பிட்டேன்.. காசியில் ஊர் பார்க்கிறீங்க “நடராசா”:) வாக என நினைச்சேன்:))

      நீக்கு
  12. //முன்னால் ஒரு கலைப்பொருள்! என்ன அது? ஏதோ அலங்காரம்!
    ///

    ரேபிள் லாம்ப் போல இருக்கே... ஐஸ்கிரீம் கோன் சேப்பில்:)

    //நேருக்கு நேராய் ஒரு அவசர க்ளிக்//
    வேலியால சுத்திக்கொண்டு வாறீங்க என்பது தெரியுது:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வடிவம் தெருவில் சாலையில் சர்ச் முன்னால் இருந்தது! நான் சுற்றவில்லை, நான் இருக்கும் பஸ்!!

      நீக்கு
  13. //காலை ஏழரை மணி.... சாலை எவ்வளவு காலியாக இருக்கிறது பாருங்கள்!//
    அந்த விடியல்சாமத்தில ஸ்ரீராமுக்கு அங்கு என்ன வேலை?:) ஹா ஹா ஹா.. அதுசரி இது காசிதானோ இல்லை அதற்கு முந்தின ஏதும் ஊரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லியிருக்கிறேனே... இது அலஹாபாத்.

      அதாவது இப்போது ப்ரயாக்ராஜ் என்று அழைக்கபப்டுகிறது.

      நாங்கள் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து திரிவேணி சங்கமம் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம்.

      நீக்கு
    2. அடக்கடவுளே.... படத்தின் வரிசையே சரியில்லையே..... ரோடு, யமுனைக் கரை, அக்பர் கோட்டை, சங்கரமடம், திரும்ப ரோடு, சர்ச் என்று கலந்துகட்டி போட்டிருக்கீங்களே....

      நாங்களும் திங்கள் அன்றுதான் அலஹாபாத் சென்றோம். அதனால் நேரு மாளிகையை பூட்டிய கதவின் வெளியிலிருந்து பார்த்தோம்.... ஒரு மாளிகைக்கு இந்தியாவே கிடைத்திருக்கே.... நல்ல டீல்தான்.

      நீக்கு
    3. ஆமாம் நெல்லை... போட்டோக்களை எடுத்த வரிசையிலேயே சேர்த்தாலும் இங்கு கன்னாபின்னா என்று அரேஞ் ஆகிவிட்டது. நானே சொல்லி இருக்கிறேனே... விளக்கங்கள் மூலம் சரிசெய்ய முயற்சித்திருக்கிறேன்.

      நீக்கு
    4. ஸ்ரீராமும் இப்போ கே ஜி எஸ் அங்கிள் போல படம் போடுகிறார் கர்:)).

      நீங்கள் பஸ்ஸிலிருந்து எடுத்தவை எனச் சொல்லாமையால்.. நடந்து நடந்து எடுக்கிறீங்கள் என நினைத்துவிட்டேன் ஸ்ரீராம், இங்கு சாமம் வேறா இருட்டில ஒழுங்கா கண்ணு தெரியாதெல்லோ ஹா ஹா ஹா

      நீக்கு
  14. //என் ஆசையைத் தூண்டிய காட்ஜெட்! (இன்னும் வாங்கவில்லை!)//

    சூப்பராக இருக்கு, நான் இப்படிப் பார்த்ததில்லை.. விரைவில் வாங்க வாழ்த்துக்கள். ஆனா மைக்கில் பேசினால் அருகில் உள்ளோருக்கெல்லாம் கேக்குமே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுநூறு ரூபாயிலிருந்து கிடைக்கிறது. அமேசானில் பாருங்கள். அருகிலுள்ளவர்கள் கேட்டால் என்ன? அதற்குதானேஇது?

      நீக்கு
    2. அப்போ பக்கத்து வீட்டுக்காரரைத் திட்ட வேணுமெனில் இந்த மைக்கில ரெலிபோன் பேசினால் ஓகே:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  15. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் நல்வரவு, வணக்கம். இன்னிக்கு மருத்துவரைப் பார்க்கப் போவதால் விரைவில் கிளம்பணும். வெயிலுக்கு முன்னாடி போயிட்டுத் திரும்பணும்! :( நேத்திக்குக் கால்வலி ஒரு வழி பண்ணி விட்டது. இப்போக் கொஞ்சம் பரவாயில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவும் வணக்கமும் கீதா அக்கா....உங்கள் கால்வலி தேவலாமா? என்ன, திடீரென்று படுத்துகிறது? மருத்துவர் என்ன சொன்னார்?

      நீக்கு
    2. எனக்குக் காலே ஓர் அடையாளம் தான் எனச் சொல்லி இருக்கேனே! என்னமோ நானும் அதைக் கெஞ்சிக் கொஞ்சி ஓட்டிக் கொண்டு இருக்கேன். வலியில்லாத நாள்? எது? யோசிக்கணும். மருத்துவர் என்ன சொல்லுவார்! மாத்திரை மாத்திக் கொடுத்திருக்கார்.

      நீக்கு
    3. மூன்று அக்காக்களுக்கும் கால் வலி....கோமதிக்கா பானுக்கா கீதாக்கா. பானுக்காவுக்கு கால் வலி சரியாச்சா என்று கேட்க நினைத்து விட்டுப் போனது...

      கீதா

      நீக்கு
    4. கீசாக்கா ஹொட் வோட்டர் பாக் வாங்கிப் பவியுங்கோஒவன் கொஞ்சம் லேசாக இருக்கும்.

      நீக்கு
    5. கீசா மேடம் - எனக்கு பாத வலி, கோயில்களுக்குச் செல்லும்போது (கல் பாவிய வெறும் தரையில் நடப்பதால்) ரொம்ப ரொம்ப அதிகமாயிடும். டாக்டர் கோவில் விசிட்டைக் குறைக்கணும், போகணும்னா, ரொம்ப கடினமான சாக்ஸ் அணிந்துதான் நடக்கணும் என்று சொல்லியிருக்கார். வீட்டில் நான் எப்போதும் எம்.சி.பி செப்பல்தான். நீங்களும் இதைப் பற்றிக் கேட்டுக்கோங்களேன். என் ஷூவின் உள்ளேகூட எம்.சி.பி வைத்திருக்கிறேன். சாதாரண செருப்புகளை உபயோகப்படுத்துவதில்லை.

      நீக்கு
  17. சர்ச் வாசலில் இருக்கும் அலங்காரப் பொருளைத் தான் உங்க மாமா வாங்கிட்டாரோனு நினைச்சேன். எந்த மாமானு ஒரு யூகமும் பண்ணிட்டேன். இஃகி,இஃகி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேற யாராயிருக்கும்? ஞாயிறு ஓனராக இருக்கும். அவருக்குத்தான் டெக்னிகல் சமாச்சாரங்களில் ஆர்வம் அதிகம்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    2. நானும் கேஜி என்றுதான் நினைத்தேன்...நெல்லை அதை அங்கு சொல்லும் முன் ம்ம்ம்ம் என் சோகக் கதை....நீங்க் என்ன சூடன் கொளுத்தச் சொல்லி பரிகாரம் செய்யச் சொன்னாலும் பூதம் மீண்டும் மீண்டும் உள்ளே புகுந்து....கணினி டவுன் ஆகுது. கரன்ட் வேற அப்பப்ப போகுது....மீண்டும் கணினிய இயக்குஅதற்குள் பல முறை ஷட் டவுன் செய்து ...ஹூஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்

      கீதா

      நீக்கு
    3. என்ன யூகம் என்று கே.....ட் ...க....மா....ட்....டே.....னே...! நீங்களும் நெல்லை போல கீதா போல தவறாகத்தான் யூகித்திருப்பீர்கள்!

      நீக்கு
    4. ஶ்ரீராம், அவங்க எல்லோரும் நினைக்காத மாமாவைத் தான் நான் சொல்கிறேன். உங்களோட மூன்று மாமாக்களைத் தான் அவங்க அறிவார்கள். நான் இங்கே வரவே வராத மற்ற இருவரில் ஒருவர், எல்லோருக்கும் சின்னவரைச் சொல்றேன். அவரைத் தான் யூகித்தேன். அவரும் இப்படி ஒண்ணு வாங்கி இருப்பதாகச் சொல்லி இருந்தார் முகநூலிலே! இன்னொரு மாமா அரசியலில் தானே ஈடுபாடு காட்டிட்டு இருக்கார்! ஆனாலும் அவரும் காசிக்கு வந்திருப்பாரோனு நினைச்சேன் தான்!

      நீக்கு
    5. கீதா அக்கா ..ஸ்ரீராம் கௌ அண்ணாவிடம் கேட்ட அண்ணன் கணக்குக்கு கௌ அண்ணா எழுதின அண்ணன் கணக்குப்படி கூட இருவர் இருக்காங்கனு என்பதே எனக்கு அப்போதுதான் தெரிந்தது. 4 பேர் தான் என்று நினைத்திருந்தேன்

      ஓ அப்ப எங்க யூகம் தப்பா எங்களுக்குத் தெரிஞ்சது 4பெர்தானே !!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நல்ல காலம் இதுக்குப் பரிசு எல்லாம் எதுவும் இல்லை....இல்லாட்டி பூஸாரோடு போட்டி போடணும்!!!!!!!!!!!!!!!!!!!!!ஸ்பாஆஅ

      கீதா

      நீக்கு
    6. //சொல்லி இருந்தார் முகநூலிலே!// ஸ்ஸ்ஸ் அப்பா... தாங்க முடில. மூன்று தளங்கள், இரண்டு நாளுக்கு ஒரு இடுகை, பெரும்பாலும் படித்து அப்புறம் எழுதற இடுகைகள், அப்புறம் பின்னூட்டம், இதுக்கு இடைல முகநூல் - இத்தனையும் ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்துக்குள்தான் - இதற்கிடையில் மின்வெட்டு - கீசா மேடம்.... நீங்க மின்னல் வேகம்தான்

      நீக்கு
  18. காதல் கவிதையும், மழை வரவேற்புக்கவிதையும் அருமை. அப்படியானும் மழை வரட்டும். ஆனால் என்னோட கவலை எல்லாம் இன்னமும் காற்றுத் தொடங்கவே இல்லை என்பதோடு, அக்காக்குருவி எங்கே காணாமல் போயிற்று என்பதும் தான்! நாங்க கணினி வைச்சிருக்கும் அறை ஜன்னலில் வந்து மோதிச் சப்தம் எழுப்பும் அசோகா மாரம்/நெட்டிலிங்க மரம்? இப்போ அமைதியாக நின்று கொண்டிருக்கிறது. குயில் கூவவே இல்லை! :( மழையை வேண்டி வேண்டி அழைக்கும் அக்காக்குருவி எங்கே இருக்குன்னே தெரியலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி அக்கா. அக்கக்கா குருவி பற்றி பாட்டுதான் கேட்டிருக்கிறேன். பார்த்ததில்லை.

      நீக்கு
    2. அக்காக்குருவி பாடிக் கேளுங்க! மழை வரணும். அது வந்தால் தான்! இங்கே கேரளப்பகுதி மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இன்னமும் மழைமேகங்கள் வந்து முகாமிடவில்லை என்கின்றனர். என்னமோ தெரியலை இந்த வருஷம் வழக்கத்துக்கு மாறாக!

      நீக்கு
    3. இங்கு குயில் கூவுதே!! தினமும் காலை...மாலை...நானும் மரத்தில் தேடிப் பார்க்கிறேன்....இங்கு அக்கா குருவி பாடவில்லை...அக்கா குருவிக்கு கதை கூட உண்டு.

      ஆஸ்காரில் பங்கு பெற்ற ஆங்கிலப் படத்தின் தான் தமிழில் எடுத்தாங்க. சில்ட்ரன் ஆஃப் ஹெவன் அப்படினு நினைக்கிறேன்...

      கீதா

      நீக்கு
  19. என்னதான் யாரும் இதைக் கிண்டல் செய்தாலும் வட மாநிலங்களில் பக்தியும் சரி தேசபக்தியும் சரி அதிகம் தான். அதை மறுக்கவே முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்.... வடக்க பக்தி அதிகம். நம்ம கிட்ட அலங்காரம், வழிவழி வரும் முறைகளைக் கடைபிடிப்பது அதிகம். கோவில்லகூட பாருங்களேன்.. வடக்கே பெருமாளைத் தொட்டு வணங்கலாம். இங்க 20 அடிக்கு அப்புறம்தான் நிற்கவே செய்யணும். ஆனால் 'உண்மையான பக்தி' எல்லாவற்றையும்விட மேலானது.

      நீக்கு
    2. உண்மை. அதனால்தான் அதைச் சொன்னேன்.

      நீக்கு
    3. நெல்லை.. நீங்கள் சொல்வதிலும் விஷயம் இருக்கிறது.

      நீக்கு
  20. தமன்னாவின் படத்தையும் போட்டு விட்டு கிசுகிசுவாம்...கர்ர்ர்ர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ஞாயிறு வாரமலரில் படித்ததை நேற்று எழுதியிருந்தேன். ஞாபகமா ஸ்ரீராம் அதனை எடுத்துப்போட்டிருக்கிறார். ஆனால் படத்தில்தான் கோட்டைவிட்டுவிட்டார்.

      நீக்கு
    2. ஹையோ பானு அக்கா... அந்தக் கிசுகிசுவைப் படிக்கவில்லையா? அது கிசுகிசுவிலேயே சேர்த்தி இல்லை! அப்புறம் நான் படம் போடாமல் என்ன செய்ய? பாவமில்லே நெல்லை?!!

      நீக்கு
  21. அனைவருக்கும் வணக்கம்....
    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க... வாங்க...

      நீக்கு
  22. அழகான படங்களுடன் செய்திகளும் அருமை....

    பதிலளிநீக்கு
  23. இரண்டாவது கிசுகிசு சபாநாயகர் முனுஆதி. இவரைப் பற்றி ஏடாகூடமாக 'ஆட்டோ சங்கர் எழுதிய தன் வரலாறில்' படித்திருக்கிறேன். இவர்தான் திருவான்மியூரில் புறம்போக்கை காலனியாக்கி ஆட்டோ சங்கருக்கும் அங்கு வீட்டுநிலம் கொடுத்தவர். இப்போ அது மிக மிக விலைமதிப்புடையது.

    மூன்றாவது கிசு கிசு, சுலோசனா சம்பத்தின் மகன் இளங்கோவனா? பிறகு சுலோசனா சம்பத் அதிமுகவில் இருந்தார். இளங்கோவன் காங்கிரஸில் இருந்து அம்மாவை எதிர்த்துக்கொண்டிருந்தார் (இல்லை இனியனா?)

    நாவலர் நெடுஞ்செழியனா? அவர்தான் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வருவார் என கருணாநிதி மாலையுடன் காத்திருந்தாரா? (விஜயகாந்துக்கு சில வருடங்களுக்கு முன்னால் காத்திருந்தமாதிரி)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றாவது மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது.

      நீக்கு
    2. மூன்றாவதுதான் நான் யூகித்ததும். மற்றவை புரியவில்லைதான்! இந்தக் காலமாயிருந்திருந்தால் கண்டுபிடிக்க முயற்சித்திருக்கலாம். ஆட்டோ சங்கர் புத்தகம் நானும் படித்திருக்கிறேன். முனு ஆதி சம்பவம் நினைவில்லை. வி சா?

      நீக்கு
  24. //உறவுக்கு மதிப்பில்லை. உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது....// - பிறகு வருத்தப்பட்டு என்ன புண்ணியம்? செய்த பாவம் செய்ததுதானே...... கூட இருந்து வெறுப்பை நெருப்புபோல் உமிழ்வதைவிட, கண்காணாத இடத்தில் தள்ளி இருப்பது கொஞ்சம் பெட்டரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தள்ளி இருப்பது பெட்டர். கண்காணாத இடத்தில் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை!

      நீக்கு
    2. ஸ்ரீராம் உங்கள் கருத்தை டிட்டோ செய்கிறேன். இது எல்லா உறாவுகளுக்குமே பொருந்தும் என்றே தோன்றுகிறதu்.

      கீதா

      நீக்கு
  25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது காசி இல்லை. அலஹாபாத் (ப்ரக்யாராஜ்). திரிவேணி சங்கமம்..... இன்னும் நிறைய எழுதுவிட்டுத்தான் காசிக்குப் புறப்படுவார் ஸ்ரீராம்னு நினைக்கிறேன் (ஸ்ரீராம், அவசர அவசரமாக எழுத்த படங்கள் அனைத்தும், எடுத்த இடங்களை அழுக்காகக் காண்பிக்கிறதுன்னு சொல்றீங்களா இல்லை அழகாகக் காண்பிக்கிறதுன்னு சொல்றீங்களா? புரியலையே)

      நீக்கு
    2. காசிக்குப் போகும் முன் வேறொரு இடமும் இருக்கிறதே....இரு இடங்கள்!

      நீக்கு
  26. காசி என்றால் அழுக்கான, நகரம் என்றுதான் எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உங்கள் புகைப்படங்கள் அதை மறுக்கின்றனவே?
    சாஸ்திரி என்றால் நம் லால் பகதூர் சாஸ்திரியா? அடையாளமே தெரியவில்லையே? அவர் கொஞ்சம் குள்ளம் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசி இல்லை. ப்ரயாக்ராஜ். அதற்காக சிலையை குள்ளமாக வைக்கமுடியுமா? எல்லோரும் பார்க்கணுமே!!!!!

      நீக்கு
  27. @Nellai:////இது காசி இல்லை. அலஹாபாத் (ப்ரக்யாராஜ்). திரிவேணி சங்கமம்//
    ஓ அப்படியா
    //(ஸ்ரீராம், அவசர அவசரமாக எழுத்த படங்கள் அனைத்தும், எடுத்த இடங்களை அழுக்காகக் காண்பிக்கிறதுன்னு சொல்றீங்களா இல்லை அழகாகக் காண்பிக்கிறதுன்னு சொல்றீங்களா? புரியலையே)//
    அழகாகத்தான் காண்பிக்கின்றன. சரியாகத்தானே சொல்லியிருக்கிறேன்? என்னை குழப்புகிறீர்களே? யாராவது வந்து என்னை காப்பாற்றுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊஹூம்... எனக்கும் புரியவில்லை ​!!

      நீக்கு
    2. பானுக்கா நான் ஆபத்பாந்தவி, அனாத ரட்சகி வந்துவிட்டேன்..ஹிஹிஹிஹி பாநுக்கா நெல்லைக்கு இன்றைய தமனாவைப் பார்த்ததும் கொஞ்சம் குழம்பிட்டார் அதான்...ஹா ஹா ஹாஹ் ஆ...நீங்க சரியாத்தான் சொlலியிருக்கீங்க.

      கீதா

      நீக்கு
    3. பா.வெ. மேடம்... நீங்க சரியாத்தான் எழுதியிருந்தீங்க. இந்த கேஜிஜி சார் ஊர்ல நான் இப்போ இருக்கறதுனால, கொஞ்சம் 'நாரதர்' வேலை முயற்சி பண்ணினேன்...ஹா ஹா.

      நீக்கு
  28. உங்களின் இரண்டு கவிதைகளுமே அழகு. மழை வேண்டி உங்கள் கவிதையை தினமும் படிக்கலாம். யார் அந்த ஸ்விஸ் ஹேமா? அவருக்கு உயர்வு சிறப்பு ஏகார விகுதி கொடுத்திருக்கிறீர்களே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, பாராட்டுக்கு.

      ஹேமா கவிதாயினி... அவர் கவிதையை பாதி என்னால் புரிந்துகொள்ளமுடியாது. சுவிஸ்ஸில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்தவர்.முன்பு வலையில் சுறுசுறு என இருந்தார். பின்னர் கொஞ்சநாள் பேஸ்புக்கில்... இப்போ ஆளையே காணோம். அதிராவுக்கு தெரியும்!

      நீக்கு
  29. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  30. ப்ரயாக்ராஜின் சாலைக்காட்சிகளை போகிற போக்கில் ரசித்தக் காட்சிகளையும் படம் எடுத்து கொடுத்து விட்டீர்கள்.

    காற்று கவிதை அருமை.
    மழை அகவிதை அருமை.
    இங்கும் நேற்று காற்றுக்கும், மழைக்கு கடும் போட்டி, காற்று ஜெயித்து விட்டது. மழை எங்கோ போய் ஓளிந்து கொண்டது. பூ தூறல் போட்டு ஓடி போய் விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரையிலாவது சென்ற வாரம் மழைபெய்தது.... இங்கே இல்லவே இல்லை. அனல்!

      கவிதைப் பாராட்டுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  31. மழைக் வேண்டிக் கவிதை தினம் எழுதுங்கள் , உங்கள் கவிதைக்கு மகிழ்ந்து வரட்டும் மழை.
    தண்ணீர் பற்றாக்குறை தீர வேண்டும். உயிர்கள் இன்பமாய் வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கவிதைக்கு பயந்தாவது மழை வந்தால் சரி... தினசரி கவிதை கவிதை என்று கொல்லுகிறானே என்று...!

      நீக்கு
  32. நேதாஜி கையில் கொடியுடன் ஜெய்ஹிந்த் சொல்லி இருப்பார், கொடியை காணோம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  33. ஒவ்வொரு அடிக்கும் ( நடை ) ஒரு படம் ....ஆஹா ..


    நல்லா இருக்கு ...எல்லாத்துக்கும் விளக்கம் தான் அட்டகாசம் ...இப்படி எல்லாம் என்னால் எழுத முடியாது ...


    மைக் சூப்பர் ..

    நேதாஜி சல்யூட்..

    அந்த உறவுகள் செய்திகள் எல்லாம் வாசித்தும் ..பார்த்தும் ...என்ன கொடுமை என்னும் எண்ணமே

    பதிலளிநீக்கு
  34. ப்ரயாக்ராஜ் ஜங்க்க்ஷனில் வைத்திருக்கும் அந்த டிசைன்கள் எல்லாம் வித்தியாசமாக அழகாக இருக்கிறது...அது ஆங்காங்கே சாலையில் இருக்கும் முக்குகளில் பூங்கா போல அதன் நடுவில் இல்லையா...முதல் படம் நேதாஜியா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை கீதா... அது பௌத்த உருவம் போல இல்லை? சாலைகள் சந்திக்கும் இடங்களில் எல்லாம் இப்படி வித்தியாசமாக வைத்திருக்கிறார்கள். நல்ல கற்பனை.

      நீக்கு
  35. காலை தங்கியிருக்கும் இடத்திலிருந்து கிளம்பிய உடனேயே அலைபேசிக் கேமிராவுக்கு நிறைய வேலை வைத்துவிட்டேன்//

    ஹா ஹா ஹா ...நானும் இப்படித்தான் ஆனால் என் அலை பேசிக்கு எல்லா சமயமும் மூட் இருப்பதில்லை...சில சமயம் நல்லா எடுக்கும் சில சமயம் எடுக்காது ஹிஹிஹி..ஆனாலும் நான் அது ப்ளஸ் கேமரா இரண்டுடன் தான்...

    ஆட்டோ ரொம்பவே வித்தியாசமாக இருக்கு. சென்னையிலும் எதிர்ப்புறம் அமரும் படி டாட்டா எய்க் வண்டி இருக்கு ஸ்ரீராம் ஆனால் இந்த வண்டி வித்தியாசமாக. அழகா.இருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
  36. சர்ச் மிக அழகாக இருக்கிறது ஸ்ரீராம். நானும் இங்கு சிவாஜி நகரில் இருக்கும் ஒரு சர்ச் கோபுரம் படம் எடுத்திருக்கேன் ரொம்ப அழகான கோபுரம். (சர்ச் தமிழ் சர்ச்!!!!!!!! தமிழில் தான் ஃபாதர் பேசுவார்...)

    யாருமில்லா சாலை படம் செமையா இருக்கு ஸ்ரீராம்...எல்லாவற்றிலும் எனக்கு அந்தப் படம் மிகவும் பிடித்தது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் சந்தடிமிகுந்த சாலைகளைக் கண்டு வெறுத்துப் போயிருக்கிறோம் கீதா... அதுதான் நமக்கு அது பிடிக்கிறது. பந்த் தின சாலைகளையும் நாம் ரசிப்போம்!

      அந்த சர்ச்சின் முழு அழகைப் படமெடுக்க முடியவில்லை!​

      நீக்கு
  37. சர்ச்சுக்கு முன்னால் அது அலங்கார டோம்ப் விளக்கு போல இருக்கு. இரவு பாத்திருந்தா தெரிந்திருக்கும்..

    அந்த எஃப் எம் மைக் கொண்டு போனீங்களா ஸ்ரீராம்? யூஸ் செஞ்சு பாத்தீங்களா? நல்லாருந்துச்சுனா ஒன்னு வாங்கிப் பார்க்கலாமே நானும் நெட்டில் பார்த்தேன் வித விதமாக இருக்கு...

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரவு நேரத்தில் அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் வரவில்லை.

      FM Mike வாங்கவில்லை!

      நீக்கு
  38. அட்சயவடம்//

    அப்படினா என்ன ஸ்ரீராம்?

    அப்போ சங்கரமடத்துக்குள்ள கூட்டிட்டுப் போகலையா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கேட்டிருக்கலாமே அவங்ககிட்டயே...குழுவுல யாருமே கேட்கலையோ..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட்சயவடம்... அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதைப்பற்றிதானே இனி...

      நீக்கு
    2. சொல்லலாமோனு நினைச்சேன். ஆனால் ஶ்ரீராம் சொல்லுகிறேன் எனச் சொல்லிட்டார். இனி குறுக்கே புகுந்துக்கக் கூடாது! ப்ரயாக், காசி, கயா இந்த மூன்று இடங்களிலும் அக்ஷய வடம் தான் முக்கியம்.

      நீக்கு
    3. ஆனா கீசா மேடம்.... இதோ... அக்‌ஷயவடத்தைக் கட்டிக்கோங்க...10 ரூபாய் தட்ல போடுங்க... என்று சொல்லும்போதுதான் ஒரு மாதிரி இருந்தது... உங்களுக்கு அந்த அனுபவம் உண்டோ?

      நீக்கு
  39. சில டைப்போ எல்லாம் கரெக்ட் பண்ணிட்டீங்க போல...காலைல பார்த்தேன்...

    வேஷமிட்டு யாசிப்பது இப்படியான தலங்களில் சகஜம். இங்கும் கூட அப்படியெல்லாம் இருக்கே

    ஏனோ அவர்களைப் பார்க்க கஷ்டமாக இருக்கும்...என்ன பிழைப்பு இல்லையா? இப்படி தென்கோடியிலிருந்து வட கோடி வரை பலர் பள்ளி கூடச் சொல்லாத குழந்தைகள் இருக்கின்றனர். இதெல்லாம் எந்த ஆட்சியாளர் கண்ணிலும் படுவதில்லை. ஹைடெக் என்பது மட்டுமே...

    அது என்ன கோட்டை? பார்க்க அழகாக இருக்கிறது ஆனால் சுற்றுலா பயணிகள் வரும் கோட்டைதானோ?

    தெரியாமல் முதல் படத்தை நேதாஜி யின் உருவம் வித்தியாசமாக என்று நினைத்துவிட்டேன். கீழே வந்த பிறகுதான் நேதாஜி தெரிந்தார் ஹ்ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கோட்டையின் பெயர் தெரியவில்லை. அக்பர் கோட்டையோ?

      //ஆனால் சுற்றுலா பயணிகள் வரும் கோட்டைதானோ?//

      ஆம். உள்ளேதான் பெரிய பெரிய கடவுளர் சிலைகளும், அட்சயவடமும் இருக்காம்.

      நீக்கு
    2. //அக்ஷயவடம் - அடுத்த பகுதில சொல்றேன்//- //இருக்காம்//- என்னது இரண்டு வாக்கியங்களும் பொருந்தலையே.. குழுவில் யாரேனும் லேட் பண்ணி இந்த கோட்டை விசிட் காலியா?

      நீக்கு
  40. அந்த ஆண்டி உங்க பஸ் எண்ணைக் குறித்துக் கொண்டிருக்க மாட்டார்னு நம்பறேன்!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​அந்த ஆண்ட்டியை நான் பஸ் கிளம்பும்முன் ஹோட்டல் வாசலில் எடுத்தேன்.

      நீக்கு
  41. கோட்டைக்கு அருகில் இருக்கும் அந்தக் கோயில்தானே சங்கரமடம் ? அழகாக இருக்கிறது..

    இந்த வியூ நல்லாருக்குல்ல// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதே தான் முதல்லயும் போட்டுருகீங்கனு நினைக்கிறேன் கோட்டைக்கு அருகே உள்ள கோயில்னு.....

    சுவர் ஓவியங்கள், நீங்க தங்கியிருந்த இடத்தின் சுவர் ஓவியங்கள் எல்லாம் நல்லாருக்கு...

    தொகுப்பு வீடு// ????? சேர்ந்தார் போல் இருக்கும் வீடுகளா? அதன் அருகில் ஏதேனும் சப்வே இருக்கிறதோ..

    இன்னும் சைக்கிள் ரிக்ஷா இருக்கிறதே அங்கு...ஓட்டுபவர்கள் பாவம்...இப்படியான மக்களைப் பார்க்கும் போது மனதில் என்னென்னவோ எண்ணங்கள் வரும் வேதனையும் படும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... அந்தக்கோவிலை நிறைய எடுத்துக்கொண்டே நெருங்கியதால் அப்படிதான் தோன்றும்.

      தொகுப்பு வீடு..... அபார்ட்மென்ட்டை தமிழ் படுத்த முயன்றேன்!

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் சும்மா கலாய்த்தல் நானும் அப்படித்தான் எடுத்துக் கொண்டே போனேன் என்றால் அப்படித்தான்

      ஓ தொகுப்பு வீடு/அபார்ட்மென்ட்.....அபார்ட்மெண்டைத்தானே அடுக்குமாடிக் குடியிருப்புனு சொல்றது...!!!!

      கீதா

      நீக்கு
    3. தொகுப்பு வீடு என்பது, தொடர்ந்த தனித்தனி வீடுகள், ஆனால் ஒரு வீட்டின் ஒரு புறத்துச் சுவர், முந்தின வீட்டோடும், இன்னொரு புறத்துச் சுவர், அடுத்த வீட்டோடும் இருப்பது.

      (ஐயோ...இப்போதான் தமிழ்ல எம்.ஃபில் படிக்கலாம்னு ஆரம்பிச்ச மாணவனை இப்படி வாரலாமா நெல்லை)

      நீக்கு
  42. நெல்லை நானும் அப்படிச் சில படங்கள் சில சமயம் தெரியாமலேனும் எடுப்பதுண்டு ஆனால் போடுவதில்லை வெளியில்.

    ஸ்ரீராம்...ரிக்ஷாவில் சென்று ஸ்ரீராம் படம் எடுப்பதைப் பார்த்து முறைத்த ஆண்டியையே படம் எடுத்துவிட்டார்....ஆனால் தூங்கற குண்டு தேவதையைக் கூட கண்ணுல கூடக் காட்டவில்லை..ஹிஹிஹி.!!!!! அப்படியே எடுத்திருந்தாலும் இங்கு போடுவது சரியல்லதான்!!!! அதனால விட்டுட்டோம் உங்களை...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கோ படம் எடுப்பது போல பாவ்லா காட்டி, பகலில் ஆண்ட்டியை எடுத்தேன்...ஸ்லீப்பிங் பியூட்டியை எப்படி எடுத்திருக்க முடியும்?!!!! அது பியூட்டியும் இல்லை! ஹிஹிஹிஹி...

      நீக்கு
    2. இல்லாத பியூட்டிக்கே 'தேவதை' என்றெல்லாம் அடைமொழின்னா, ஒருவேளை அழகி மாட்டினா, அதற்கு என்ன 'அடைமொழி' போடுவீங்களோ..... பாஸ் படிப்பதில்லை என்ற தைரியம்தான் போலிருக்கு.

      நீக்கு
  43. ஸ்‌ரீராம் காற்று கவிதை செம ...ரொம்ப ரசித்தேன்..அதில் என்னென்னவோ சொல்லுது. பல யதார்த்தங்கள் அடங்கியுள்ளது இதில்...

    கீதா

    பதிலளிநீக்கு
  44. கிசு கிசு ம்ஹூம் நோ ஐடியா...ஆனா 1979 ல மொரார்ஜி அவர் பதவி விலகியதும் அப்புரம் சரண்சிங்க் கொஞ்ச நாள் ஏதோ என்று நினைவு...தமிழ்நாட்டில் தங்கத் தலைவர் நா எம்ஜிஆர் ஆட்சிதானே அவர் என்று தெரிகிறது ...(பொன்மனச் செம்மல்???) வேறு ஒன்றும்பிடிபாடவில்லை...மீக்கு அம்ம்புட்டுத்தேன் அறிவு...ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  45. ஹையோ ஸ்ரீராம் அந்த அப்பா செய்தியைப் படிக்க முடியல்வில்லை ஸ்ரீராம் முதல் வரி பார்த்ததுமே அதற்கப்புறம் வாசிக்க இயலவில்லை....மனம் ரொம்பவும் வேதனை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க அப்பா சொன்னவைகள், நான் படித்தவை...இதெல்லாம் மனதில் ஓடுது. நமக்கென்று சம்பாத்யம் சேமிப்பு இருக்கணும். நாமோ, நம் மனைவிக்குப் பின்னோதான் சொத்து (என்று ஒன்று இருந்தால்) பசங்களுக்குப் போகணும். நாம் இல்லாம மனைவி மட்டும் இருந்தால், சொத்தை மனைவி விற்கமுடியாது (அவளது சகோதரன் மற்றும் இன்னும் ஒரு நம்பிக்கைக்குரியவர் கையெழுத்தும் இருந்தால் ஒழிய) என்பதுபோல உயிலெழுதணும். நாடு அவ்வளவு மோசமாகவும் செல்ஃபிஷ் ஆகவும் இருக்கு.

      நீக்கு
  46. தமனா பாட்டியேதான்...தமனா ஒரு தெலுங்கு வெர்ஷனில் ஆடிய ஆட்டம் ஹையோ...ஒரே ஒரு காட்சிக்கு..

    அடக்கி வாசித்தும் ரசிகர்கள் மறந்துட்டாங்களாமே!!!! இது டூ மச்...நெல்லை யூ டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஒ?!!! நெல்லை இருக்கறப்ப தமனா இப்படிக் கமென்ட் சொல்லலமோ?

    அதிரா வாங்க போரட்டம் பண்ணுவோம்...தமனாக்குச்சொல்ல வேண்டாமோ இங்கன ஒரு நெல்லை இருக்கார்னு... நாம நம் கடமை இல்லையா அதிரா?!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  47. மழைக் கவிதை அருமை ஸ்ரீராம்...

    அட சென்னையில் நேற்று சிறு மழையா!! வாவ்!! வரவேற்க வேண்டிய விஷயம்...

    சென்னையில் முதல் மழை!!! பெய்யட்டும் பூமி நனையட்டும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சென்னையில் நேற்று சிறு மழையா!! // - எங்க இருக்கும்? ஸ்ரீராம் வீட்டுக்கு எதிரே உள்ள மரம்......... பெங்களூர் இந்த முறை பரவாயில்லை. சென்னையைவிட பெட்டரா இருக்கு.

      நீக்கு
  48. ஜெயராஜ் படம் சூப்பர். நெல்லை உடனே இன்று மயங்கியிருப்பார்...சந்தோஷத்தில்..தமனா படம் வேறு...ஸ்ரீராம் நேற்றைய நெல்லையை இன்று குளிர்வித்துவிட்டார் ஹா ஹா ஹாஹ் ஆ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன... இன்னும் ஜவ்வரிசிப் பாயசம் ரெடி பண்ணாமல் தளத்துல இருக்கீங்க. வந்துகொண்டே இருக்கிறேன் கீதா ரங்கன்....

      நீக்கு
    2. பாயாசம் வைக்க வேணும்
      பானையிலோ அரிசி இல்லை
      முற்ரிய நெற்கதிரே
      கதிர வளர்த்த வயலே
      வயலைச் சேர்ந்த நீரே
      நீரைச் சேர்ந்த நிலமே
      நிலத்தைச் சேர்ந்த உளவா
      கொஞ்சம் அரிசி தருவாயோ..

      ஹா ஹா ஹா சின்ன வயசில் படிச்ச பாட்டு.... கீதா இப்போதான் சவ்வரிசி வாங்கப் போயிருக்கிறா:) கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ நெல்லைத்தமிழன்:).

      நீக்கு


  49. .
    புதியதலைமுறை செய்தியை நானும் பார்த்தேன்.

    தொலைக்காட்சியிலும், ஃபேஸ்புக்கிலும் பார்த்து மனம் கனத்து தான் போனது.

    பதிலளிநீக்கு
  50. ஆஆஆஆஆஆ எங்கின விட்டேன் ஜாமீஈஈஈஈஈஈ:)) பாதியிலயே ஓடிட்டேன்ன் இப்போ கால் எங்கின வைகிறது கை எங்கின வைக்கிறது எனத் தெரியேல்லையே வைரவா:)).. ஆஆஆஅ பிடிச்சிட்டேன்ன் மைக்கில் விட்டேன்:)).

    படங்கள் பார்க்கும்போது கட்டிடங்கள், மதில்கள் எல்லாமே பிரிட்டிஸ் காரர் கட்டியதுபோலதான் தெரியுது... ஸ்ரீராம் நீங்க எங்கட ஆட்களின்[பிரிட்டிஷ்] ஊராலதான் போயிருக்கிறீங்க:))

    பதிலளிநீக்கு
  51. //சாலையோரங்களில் நிறைய லிங்கங்கள் இருக்கின்றன என்று சொல்லி இருந்தேனே.//

    எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் கும்பிடோணும் போலவும் வருது.. எனக்கு சிவனையும், சிவலிங்கத்தையும் கண்டாலும் மெய் சிலிர்க்கும்... அவ்ளோ விருப்பம்.

    பதிலளிநீக்கு
  52. //அந்த லிங்க வடிவங்களிலும் ஓவியம்... அதை எடுக்க ஜூம் செய்தேன். எனவே படத்தில் துல்லியம் தொலைந்திருக்கும்! ஏற்கெனவே லட்சணம்!!//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உங்களுக்கு இந்த “யூம்”:) பண்ணும் வேலை எல்லாம் சரிவராது ஸ்ரீராம்:)). ஓடும் வாகனத்தில் முன் சீட்டில் இருந்து படமெடுத்தால் ஓகே, ஆனா ஜன்னலூடாக சைட் பக்கம் எடுப்பது மிக கஸ்டம், எப்படியும் கமெரா ஆடும் அதனால படம் கலங்கும்...

    பதிலளிநீக்கு
  53. //பாலங்களிலும் கடவுள் ஓவியம்... //

    ஆவ்வ்வ்வ் இது தெளிவா வந்திருக்கு.. பஸ் ஸ்லோப் பண்ணியிருக்குது இவ்விடத்தில:)).

    பல நிறக் கட்டிடம் அழகு..ஜமேக்காவில் இருக்கும் கட்டிடம் போல இருக்கு:)). ஆனால் அதில் ஏன் படகுப் படங்கள் போட்டிருக்கிறார்களோ தெரியவில்லையே.. ஏதும் கதை இருக்கும்.

    பதிலளிநீக்கு
  54. //தாண்டும்போது அந்த ஆண்ட்டி முறைத்துக் கொண்டே சென்றார்... 'கேட்காமல் போட்டோ எடுக்கறது தப்பு தம்பி.... அதுவும் பெண்களை....' ///

    செய்யுறதையும் செய்துபோட்டு அதுக்கு வரைவிலக்கம் வேறு ஹா ஹா ஹா:))

    ///சின்னப்பையன்தானே என்று விட்டிருப்பார்.///
    ஆஆஆஆஆஆஆஆஆஆ வைரவா விடுங்கோ விடுங்கோ இதைப்படிக்கவோ ஜாமத்தில முழிச்சு ஓடி வந்தேன்:)).. ஹையோ இப்பவே என்னைக் காசியில கூட்டிப்போய் விடுங்கோ ஆராவது:)) ஹா ஹா ஹா:)))

    பதிலளிநீக்கு
  55. //ஜப்பானிய முறையில் வணக்கம் சொல்கிறாரா?//
    பஸ்ஸில் இருக்கும் ஸ்ரீராமுக்கு ஹாய் சொல்கிறார்போல இருக்கு:)

    சங்கரமடம் என தமிழ்நாட்ட்டிலும் இருக்கோ? நல்ல ஃபமிலியர் நேமாக இருக்கு...

    மிக அழகாக இருக்கு கோபுரம்..

    பதிலளிநீக்கு
  56. நெல்லைத்தமிழனின் விருப்பத்தை நிறைவேற்ற நினைச்சீங்க:)) ஆனா அது நிறைவேறவிலையே :)) அதனால அடுத்தவாரமும்... சரி வாணாம் மீ ஒண்ணும் ஜொள்ள மாட்டேஎன் ஜாமீஈஈஈஈஈ:))..

    /////////////எப்போதும் போர்வைக்குள்ளேயே தூங்கி கொண்டிருந்த பெண்ணை எப்படிப் புகைப்படம் எடுப்பது?!!///////////
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ இது என்ன இது புயுக்கலவை:)) சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே புதுக்கவலை:)) ஹையோ ஹையோ எப்பூடி எல்லாம் ஆசை வருது:)) ஹா ஹா ஹா.. அடிவாங்காமல் படம் எடுத்தால் சரிதான்:).

    //அப்போது ஸ்விஸ் ஹேமாவே பாராட்டிய கவிதை! பேஸ்புக்கில் வந்தது!
    //

    மிக அருமை...
    அடுத்த வருடம் இக்கவிதையை மீண்டும் போட்டு தலைப்பை மாத்தி விடுங்கோ...

    “ஸ்கொட்லாண்ட் அதிரா பாராட்டிய கவிதை” என ஹா ஹா ஹா:)).. ஹேமா பார்த்தால் அடிக்க வருவா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அந்தக் கவிதையைப் போடும்போது, கனடாவில் தீர்த்தவாரி தொட்டி அருகில் இருந்துகொண்டிருப்பீர்கள். அப்போ உங்களை 'கனடா சாமியாடும் அதிரா' என்றுதான் போடணும்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா எப்பூடி இப்பூடிக் கரீட்டாச் சொல்றீங்க.. அதே அதே அங்குதான் அதிரபதே இம்முறை:))

      நீக்கு
  57. //ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தி ஒன்பதாம் ஆண்டு குமுதத்தில் வந்த கிசுகிசு! உடைக்க முடிகிறதா என்று பாருங்கள்!///

    அதை எதுக்கு உடைக்கோணும்? ஹா ஹா ஹா..

    //ஹோசூரில் அருமையான இரு பிள்ளைகள் தனது தகப்பனாரை அவரது உடைமைகளுடன் (நிஜமாகவே) வெளியே தூக்கி எறியும் காணொளி. //

    வரவர மிருகத்தனம் அதிகரித்துவிட்டது உலகில்.

    பதிலளிநீக்கு
  58. ///தமன்னா படம் நெட்டில் தேடினால் இணையம் தமன்னா பாட்டியா? என்று என்னையே சந்தேகம் கேட்கிறது!
    //

    இவ்ளோ புகைப்புகையா விட்டுக்கொண்டு தமனாக்கா படத்தைப் போட்டதுக்குப் பதில்:)), அனுக்கா படத்தைப் போட்டிருக்கலாம்:)) ஹா ஹா ஹா ஹையோ இதை நெல்லைத்தமிழன் சொல்லச் சொன்னார்ர்ர்:))..

    ஆஆஆஆஆஆஅ இத்தோடு போஸ்ட் முடிஞ்சுதென பார்த்தேன்ன் இன்னும் கீழே போகுது கர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  59. மழைக் கவிதை ஓகே..

    //நெல்லைத்தமிழனுக்காக ஒரு படம்... என்ன எதுவென்று நினைவிருக்கிறதா நெல்லை?//

    இந்தக்காவை எப்பூடி மறப்பார் அவர்?:) இது என்ன கொஸ்ஸன்?:) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  60. ஹெலோவ் யாராச்சும் இன்னிக்கு என்ன கிழமைன்னு எனக்கு சொல்லுங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று ஞாயிற்றுக் கிழமை அஞ்சு:)) ஓடுங்கோ ஓடுங்கோ இது கே ஜி எஸ் அங்கிள் போடும் படங்கள் ஹாஅ ஹா ஹா:))

      நீக்கு
  61. /////சின்னப்பையன்தானே என்று விட்டிருப்பார்.///

    எதோ ஜாப்பனீஸ் மொழியில் எழுதின போலிருக்கு :) எனக்கு அப்பப்போ கண்ணு தெரியாமப்போகுது பளீர் ஒளியில்

    பதிலளிநீக்கு
  62. அலஹாபாத் ஆட்ட்டோக்கள் காற்றோட்டமா வெட்ட வெளீர்னு இருக்கே ஆனா தூசி படுமில்ல .
    அந்த சர்ச் ஆல் செயிண்ட்ஸ் கத்தீட்ரல் என்று கூகிள் ஆன்ட்டி சொல்றாங்க .இதே மாதிரி டிசைனில் நிறைய இங்கே இருக்கு ஆமா ஆங்கிலிகன் ஆலயங்கள் பிரிட்டிஷ் ஸ்டைலில்தானே இருக்கும் .

    பதிலளிநீக்கு
  63. அந்த ப்ரயாக் ஹோட்டலுக்கு எதுக்கு கண்ணை உறுத்தும் கலர்ஸ் அடிச்சிருக்காங்க ?
    இதை ஸ்ட்ரீட் ஆர்ட் கிராஃபிட்டிநும் சொல்வாங்க .எங்க ஊரில் banksy னு ஒருத்தர் இருக்கார் நைட்டோட நைட்டா முகத்தை மூடிட்டு வந்து லண்டன் மற்றும் பிரபல நகர தெருக்களில் மனதுக்கு தோன்றியதை நாட்டு நடப்பில் இருப்பதை இப்படி பெயின்டி போவார் ,இதுவரை யாரும் அவரை பார்த்த தில்லை .
    https://www.youtube.com/watch?v=X-6jMi4e-0Q

    பதிலளிநீக்கு
  64. கடவுளர்களை போல் உடையணிந்து கையேந்தவைப்பது :(
    அந்த முனிவர் கைகூப்பியிருக்காரே அந்த பாலத்தின் மேலேஇருக்கும் படத்தில் அது சர்ப்பமா ? அதை எதுக்கு பிடிச்சிட்டு போறாங்க ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சலின்...இதெல்லாம் ஸ்ரீராமிடம் கேட்கக்கூடாது. அவருக்குத் தெரியாது.

      இதெல்லாம் நல்லாத் தெரிஞ்சவங்க 'கம்பபாரதம்' சொல்றவங்க. அவங்கள்ட கேட்டீங்கன்னா, புட்டுப் புட்டுச் சொல்லிடுவாங்க (அப்புறம் இந்த மாதிரி கேள்விகளை கேட்பதை விடுங்க..யோசிக்கக்கூட மாட்டீங்க ஹாஹா).

      கம்பபாரதி அதிரா - இங்க வந்து ஏஞ்சலின் கேள்விக்கு விடை சொல்லுங்க (சொல்லி அவங்களைத் தலையைப் பிச்சுக்க வைங்க)

      நீக்கு
    2. ஆவ்வ்வ் :) வேணாம் அவங்க பிஸியாம் :) எனக்கு ஸ்ரீராம் சொல்லிடுவார் சாமீஈ .ஹையோ கீதாக்கா இல்லைன்னா பானுக்கா ஓடிவந்து சொல்லிடுங்க இல்லைன்னா நல்ல இருக்கிற என்னை பூஸ் குழப்பிடுவாங்க

      நீக்கு
    3. எனக்கு புரிஞ்சி போச் :) ஒரு பிள்ளை அறிவாளியா இருக்கிறது பிடிக்கலை ஹாஹா நான் என்னை சொன்னேன் .
      கேள்வி கேட்க கேட்க ஞானம் வரும் தெரியுமோ

      நீக்கு
    4. ///
      நெல்லைத்தமிழன்30 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 6:21
      ஏஞ்சலின்...இதெல்லாம் ஸ்ரீராமிடம் கேட்கக்கூடாது. அவருக்குத் தெரியாது.//

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சு வந்தமா படம் பார்த்தமா கொமெண்ட் போட்டமா எனப் போயிட்டே இருக்கோணும்.. நோ குறொஸ் கொஸ்ஸன்ஸ் பிளீஸ்ஸ் இன்று புதன்கிழமை அல்ல:))..

      அது பாம்பைக் கயிறாகக் கட்டி மோர் கடையினம் ஹா ஹா ஹா எங்கோ படிச்சது இப்போ ஜெல்ப் பண்ணுதே:).. விரைவில் வர இருக்கிறது அதிராவின் அடுத்த சரித்திரத்:)) டொடர்:))

      நீக்கு
    5. //Angel30 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 6:35
      எனக்கு புரிஞ்சி போச் :) ஒரு பிள்ளை அறிவாளியா இருக்கிறது பிடிக்கலை ஹாஹா நான் என்னை சொன்னேன் .
      கேள்வி கேட்க கேட்க ஞானம் வரும் தெரியுமோ//

      உங்களை அந்த வயசில கேள்வி கேட்க விட்டிருந்தா இந்த வயசில நாங்க கஸ்டப்பட வேண்டி வந்திருக்காது கர்ர்ர்:))..

      நான் எல்லாம் அம்மமா அப்பம்மாவைக் கேள்வியிலயே துளைச்சு எடுத்து வளர்ந்த பிள்ளை:)) ஹா ஹா ஹா

      நீக்கு
  65. முகப்புத்தக செய்தி :( வேதனை இப்படியும் மக்களா ??
    கர்ர் மற்ற கிசுகிசு புரியலை ஆனா தமனா மேட்டரை செய்தியாவெ போடலாம் :)))))
    மழையை வெல்கம் செய்த கவிதை நல்லா இருக்கு .
    ஹேமா !! .நீங்க இப்படி ஒரு கவிதை டெய்லி எழுதுங்க அவர் மீண்டும் முகப்புத்தகம் வலைப்பக்கம் வர சான்ஸ் இருக்கும்னு நினைக்கிறன்

    பதிலளிநீக்கு
  66. அந்த மரம் தம்ஸ் அப் காட்டுற மாதிரி விட டைட்டானிக் கப்பலில் கேட் /லியனார்டோ கை விரிச்ச காட்சி போலவும் இன்னொரு கோணத்தில் யாரோ bungee jumping செய்றபோலவும் இருக்கு

    பதிலளிநீக்கு
  67. ஆஆஆஆஆஆஆஆஆஆ மீதான் 200 ஊஊஊஊஊஊஊஊஊஊஊ வடையைத்தூகிக்கொண்டு ஓடுறேன்ன்ன்ன் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் யாருக்கும் பங்கு கிடையாதூஊஊஊஊ:)) ஹா ஹா ஹா சந்தோசம் பொயிங்குதே சந்தோசம் பொயிங்குதே.. சந்தோசம் காசியில் பொயிங்குதே:))..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!