வெள்ளி, 26 ஜூலை, 2019

வெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி



1984 இல் வெளியான சோகமயமான ஒரு படம் ஓசை. மதுரை ஷா தியேட்டரில் பார்த்தேன் இந்தப் படத்தை!



ஹிந்தி ஷோர் படத்தின் - தலைப்பு உட்பட -தழுவல். ஹிந்தியில் மனோஜ்குமார், நந்தா. தமிழில் மோகன், நளினி.



ஹிந்தி ஷோர் பாடலை முகேஷ் குரலில் ரசிக்க விரும்புபவர்கள் இங்கே ரசிக்கலாம்.




தமிழில் இசை சங்கர் கணேஷ் என்று போட்டாலும் இந்தப் பாடலுக்கு இசை லக்ஷ்மிகாந்த் பியாரேலால் என்றுதான் சொல்லவேண்டும். அவர் என்ன செய்வார் பாவம்? தயாரிப்பாளர் விருப்பம்! பாடல் வரிகளுமே கிட்டத்தட்ட அப்படியே... "ஜிந்தகி அவுர் குச் பீ நஹி... தேரி மேரி கஹானி ஹை...""வாழ்க்கை என்று எதுவும் இல்லை... உந்தன் எந்தன் கதை ஆகும்..." !!


கே விஜயன் இயக்கத்தில் வெளியான படம்.

ஒரு பாடல் நான் கேட்டேன்.... 
உன் பாசம் அதில் பார்த்தேன்  
வாழ்க்கை என்று எதுவும் இல்லை   
உந்தன் எந்தன் கதை ஆகும்   

நான் பார்க்கும் இடம் எல்லாம்    
கண்ணில் நீ இன்றி வேறில்லை    
என் வாழ்க்கையின் ஆதாரம்    
எந்த நாளிலும் நீயாகும்   
நீ அன்பெனும் ஜீவநதி    
என் ஆலய தீபம் நீ    
வாழ்க்கை என்று எதுவும் இல்லை   
உந்தன் எந்தன் கதையாகும்   

 நீ பாயும் நதி ஆனாய்    
உன்னை தாங்கும் கரை ஆனேன்   
என் வாழ்க்கையில் நீ பாதி   
உன் வாழ்க்கையில் நான் பாதி    
என் கண்களில் சமுத்திரங்கள்   
அதில் காண்பது நம்பிக்கைகள்   
வாழ்க்கை என்று எதுவும் இல்லை   
உந்தன் எந்தன் கதை ஆகும்..    

என் கண்கள் உறங்காது    
உன் பூமுகம் காணாது     
நான் வாழ்வதும் உன்னாலே    
நீ காட்டிடும் அன்பாலே   எ
ன் ஆயிரம் ஜென்மங்களும்     
உன் அன்பினை நான் கேட்பேன்    
வாழ்க்கை என்று எதுவும் இல்லை    
உந்தன் எந்தன் கதையாகும்




===============================================


நேர் விருப்ம்

நெல்லை சென்ற வாரம் இரண்டு பாடல்கள் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த வாரம் நேயர் விருப்பமாக வெளியிடுகிறேன்.

நான் கடவுள். 2009 இல் வெளியான திரைப்படம். பாலா இயக்கத்தில்.

ஜெமோவின் 'ஏழாம் உலகம்' திரைப்படம் ஆகி இருக்கிறது. அவரும், பாலாவும் இணைந்து வசனம் எழுதி இருக்கிறார்கள். தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ள திரைப்படம். ஆர்யா-பூஜா நடித்துள்ளனர். சூர்யாதான் நாயகனாக நடிப்பதாக இருந்தது.அவர் கால்ஷீட் கிடைக்காததால் நரேன் கேட்கப்பட்டு அவரும் இல்லாததால் ஆர்யா தேர்வானாராம்.

எல்லாப் பாடல்களையும் வாலி எழுதி இருக்க, 'பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்' பாடல் மட்டும் எழுதி இருப்பது இளையராஜா. பாடலைப் பாடி இருப்பது மது பாலகிருஷ்ணன்.

காசியில் தந்தையால் கைவிடபப்ட்டு அகோரியாகும் சிறுவனின் கதை.

இதே படத்தில் ஓம் சிவோஹம் பாடலும் மிகப் பிரபலம். விஜய் பிரகாஷ் பாடியிருக்கிறார் இந்தப் பாடலை.

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்



ஓம் பைரவ ருத்ராய மஹா ருத்ராய கால ருத்ராய கல்பாந்த ருத்ராய வீர ருத்ராய ருத்ர ருத்ராய கோர ருத்ராய அகோர ருத்ராய மார்த்தாண்ட ருத்ராய அண்ட ருத்ராய பிரமாண்ட ருத்ராய சண்ட ருத்ராய ப்ரசண்ட ருத்ராய தண்ட ருத்ராய சூர ருத்ராய வீர ருத்ராய பவ ருத்ராய பீம ருத்ராய அதல ருத்ராய விதல ருத்ராய சுதல ருத்ராய மஹாதல ருத்ராய ரஸாதல ருத்ராய தலாதல ருத்ராய பாதல ருத்ராய நமோ நமஹா


ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம்
வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சௌகாரஹா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாஷ்டாத்கரா
சம்போ சம்போ சங்கரா
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வருக்ஷே ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய தனமஷிவாய தஷிமதவாதச்சா
அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா
சூரனா ஜெகத் காரனா சத்ய தேவ தேவ ப்ரியா
வேத வேதாந்த சாரா யக்ன யக்யோமையா
நிஷ்டரா துஷ்ட நிக்ரஹா சப்த லோக சௌரச்சனா
சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரி சபவாஹனா
சூலபானி புஜக பூசனா த்ரிபுலநாஸ ரக்தனா
யோமகேச மகாசேன ஜனகா
பஞ்சவத்ற பரசுஹஸ்த்த நமஹா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

கால த்ரிகால நித்ர த்ரிவேந்தற சூல திரிசூல காத்ரம்
சத்ய பிரவாக நித்ய பிரகாஸ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
நிஷ்ட பஞ்சராதி நிஸ்கலம் கோஹ நிஜ பூர்ண போத ஹம் ஹம்
சத்ய காத்மாய நித்ய பரம்மோஹ ஸ்வப்ன ஹாஸ்மோஹ ஹம் ஹம்
சத்ஷி ப்ரவாஹம் ஓம் ஓம்
மூல பிரவேயம் ஓம் ஓம்
அயம் பிரம்ஹாஸ்மி ஓம் ஓம்
அஹம் பிரம்ஹாஸ்மி ஓம் ஓம்

தனதன தனதன தனதன தனதன தன சஹச ஹத்ரசப்த விஹரவி
டமடம டமடம டுபடுப டுபடுப சிவடப டுப நாத விஹரவி

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்
வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சௌகாரஹா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாஷ்டாத்கரா
சம்போ சம்போ சங்கரா
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்




'நான் கடவுள்' படத்தில் இளையராஜா தானே எழுதி இசை அமைத்திருக்கும் பாடல் 'பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்...' பாடி இருப்பவர் மது பாலகிருஷ்ணன்.

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு

உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


அம்மையும் அப்பனும் தந்தத

இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்தத

அம்மையும் அப்பனும் தந்தத
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்தத
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே



அத்தனை செல்வமும் உன் இடத்தில்

நான் பிச்சைக்கு செல்வது எவ்வ விடத்தில்

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்



ஒரு முறையா இரு முறையா

பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்

புது வினைய பழ வினைய,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
போருல்லுக்கு அலைந்திடும் போருள்ளட்ட்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பத்தால் தாங்குவை
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற



பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே







88 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை வணக்கம், என்னை வரவேற்க மறக்கும் கீசா மேடம் உள்பட

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் நெல்லை...

      வரும்போதே வம்பா!

      நீக்கு
    2. நான் தான் பிசினு பதிவே போட்டுட்டேன். அப்புறமும் வரவேற்கலைனா என்ன அர்த்தம் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))) என்னை வம்பிழுக்கலைனா சாப்பாடு ஜீரணம் ஆகாது போல! :)

      நீக்கு
  2. தலைப்பைப் பார்த்துவிட்டு, நீ பாதி நான் பாதி கண்ணே பாடலோ என்று நினைத்தேன். பாடல் கேட்ட மாதிரி இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அப்படித்தான் நினைத்தேன் நெல்லை..

      கீதா

      நீக்கு
    2. இந்தப் பாடல் ஹிந்தியில் செமஹிட், பேமஸ். தமிழில் அப்படியே ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார் சக. தெரியவில்லை என்றால் ஆச்சர்யம்தான்!

      நீக்கு
    3. இன்னும் கேட்கலை...கேட்பது அப்புறம் தான் ஸ்ரீராம். கேட்டுவிட்டு அப்புறமா வருகிறேன்...

      விளம்பர வீடியோ சத்தம் ம்யூட் செய்துவிட்டு கேட்டுப் பார்த்துவிட்டேன். பாடல் அப்படி முடியாதே!!!!!

      கீதா

      நீக்கு
    4. வந்து கேட்டு விட்டு சொல்லுங்க...

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், நெல்லை மற்றும் தொடரும் அனைவரும்ம

    தில்லியில் அருமையான விளம்பரம் பார்த்துக் கொண்டிருந்ததில் லயித்து இங்கு வர லேட்டாகிப்போச்சு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நான் அங்கே அப்போவே முடிச்சுட்டேன்!

      நீக்கு
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம் ஓம் சிவோஹம் பாட்டைப் பாடியவர் விஜய் ப்ரகாஷ்

    மிக மிக் அருமையாகப் பாடியிருப்பார். எனக்கு அவரது குரல் பிடிக்கும். தமிழில் அவர் அறிமுகம் ஆனது இப்பாடல் மூலம் என்று நினைக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஹிஹிஹிஹி முதல் விளக்கம் பார்த்துவிட்டு இளையராஜா பாடல் என்றதும் அப்பாடல் விஜய் ப்ரகாஷ் இல்லையோ என்று நினைத்துக் கருத்து போட்டுவிட்டேன் ஹிஹிஹிஹி ஸாரி..மனதில் ஒரு சந்தேகத்துடனேயே தான் கருத்து போட்டென் ஸ்ரீராம் மாற்றி எழுதியிருக்க மாட்டார் என்று ஆனால் மீதியைப் பார்க்காமல் ஸாரி ஸாரி...

      இப்ப முழுவதும் வாசித்துவிட்டேன்...இனி முழுதும் வாசித்துவிட்டுக் கருத்து போடணும்...

      கீதா

      நீக்கு
    2. அப்படிதானே நானும் எழுதி இருக்கிறேன் கீதா? மது பாலகிருஷ்ணன் என்று நான் சொல்லி இருப்பது பிச்சைப்பாத்திரம் பாடலுக்கு. மேலே சொல்லி இருப்பதால் உங்களை குழப்பி விட்டேன் போல...

      நீக்கு
    3. இப்போது கொஞ்சம் வரிகளை மாற்றி அமைத்திருக்கிறேன்.

      நீக்கு
  5. அட... இது என்ன அதிசயம்? நேயர் விருப்பம் பகுதி..

    போட்டிருக்கும் இரு பாடல்களும் மிக மிகப் பிடித்த பாடல்கள். இரண்டாவது பாடல் இளையராஜா எழுதினதா? வாலியாக இருக்கும், அவர் கைவண்ணம் என்று நினைத்தேன்.

    உண்மையைச் சொன்னால், நேயர் விருப்பம் பொதுவாக புகழ் பெற்ற பலராலும் கேட்கப்பட்ட பாடலா இருக்கும். அப்போ உங்கள் விருப்பம் மிளிர்வதில் குறைந்துவிடுகிறது. அதாவது என் எண்ணத்தில், பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் பெண்ணைவிட அழகான சில பெண்களைத் தோழியராக வைத்துக்கொண்டு பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடத்த முயல்வது போல. The very purpose of making readers to observe பாடல் வரிகள் will be lost. ஏதேனும் ஒரு பகுதிதான் சரியாக வரும் என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ நெல்லை ஸ்ரீராம் சொல்லிக் கொண்டிருந்தாரே நேயர் விருப்பம் பகுதி துரை அண்ணா சொல்லிட கருத்தில் கூட சிலர் சொல்லியிருந்த நினைவு.... விமர்சனத்திலும் நான் சொல்லிட அதற்கும் முன்னரே ஸ்ரீராம் பகிர்ந்திருந்தாரே...

      கீதா

      நீக்கு
    2. முன்னரே பானு அக்கா விருப்பத்தில் ஊமைவிழிகள் பாடல்பகிர்ந்திருந்தேன். அதற்கும் முன்னர் துரை செல்வராஜூ சார் விருப்பதில் ஒருபாடல் பகிர்ந்த நினைவு...

      பெண்ணென்றால் பெண்... அடுத்த பெண் அழகாய் இருந்தாலும் என் பெண் எனக்கு உசத்தி. ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் நெல்லை. எனவே அப்படிப் பார்ப்பதில்லை நான்!

      நீக்கு
    3. ஆமாம் அதே அதே நீங்கள் பகிர்ந்திருந்தது நினைவு இருக்கு...

      கீதா

      நீக்கு
    4. ஸ்ரீராம் - காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? பெண் பார்க்க வரும்போது, கூட இருக்கிற தோழிகள்லாம் சுமாராத்தான் இருப்பாங்க. நீங்கதான் மதுபாலா படம் பார்த்திருப்பீங்களே (ரோஜா)..என்ன நடந்ததுன்னு...ஹா ஹா. இல்லைனா, மாப்பிள்ளைக்கு (அப்படி வரப்போக சான்ஸ் உள்ளவனுக்கு) பெண் சுமாராத் தெரியும்.

      நீக்கு
    5. யாருக்குஎது விதியோ அதுதான்! இல்லையா?!!!

      நீக்கு
    6. ஸ்ரீராம்! நெல்லைத்தமிழன்! இருவருக்கும் எண்டமூரி வீரந்திரநாத் எழுதிய (கௌரி கிருபானந்தன் மொழிபெயர்ப்பில் அல்லயன்ஸ் வெளியீடாக) காதலெனும் தீவினிலே நாவலைப் படித்துப் பார்க்கும்படி சிபாரிசு செய்கிறேன். இருவருடைய பின்னூட்டச் சங்கிலி ஞாபகப்படுத்தியது அந்த நாவலை!

      ஸ்ரீராம் no pdf புத்தகம் மட்டும் தான் என்னிடமிருக்கிறதென்று நினைக்கிறேன்!

      நீக்கு
  6. இரு பாடல்களுமே எனக்கு மிக மிகப் பிடித்த பாடல். பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடல் ராஜாவின் ரமண மாலை ஆல்பம் தொகுப்பில் உள்ள சில வரிகள் மற்றும் ராகமும்...என்று நினைவு

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  10. அன்பு நெல்லை முதலில் சொல்லிவிட்டேன்.
    அன்பு ஸ்ரீராம், அன்பு கீதா ரங்கன் அனைவருக்கும் இன்னும் வரவிருக்கும் துரை செல்வராஜு
    எல்லோருக்கும் இனிய ஆடி வெள்ளி வணக்கம்.

    இக் ப்யார் கா நகுமா ஹை. அப்பாடி . எப்பொழுதும் இனிக்கும் பாடல்.
    அப்பொழுது வானொலியில் கேட்டே மயங்கிய பாடல்.
    நெல்லை அவர்களின் சாய்ஸ் நன்றாக இருக்கிறது.
    என்னக்கென்னவோ சோகம் ஏற்பதில்லை.
    ஆனால் வரிகள் நன்றாக அமைந்திருக்கின்றன.

    சரி நானும் கேட்கிறேன். நேயர் விருப்பம்,
    ஒன்று இந்தி,
    தேவ் ஆனந்த் ,நந்தா நடித்த பாடல் ஐசே தோ நா தேகோ, படம் தீன் தேவியான் .

    எப்போது ஸ்லாட் கிடைக்கிறதோ
    பதிவிடவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...இனிய காலை வணக்கம்.

      ஹிந்திப் பாடலா? பார்க்கிறேன்.

      நீக்கு
    2. வல்லிம்மா நேயர் விருப்பம் உடனுக்குடன்! https://youtu.be/OaginwwacJI

      நீக்கு
    3. Oh I see that song almost every day Sri.S.Krishnamurthy. THIS was just for fun.Thank you so much for instant reply and approval. எனக்கு கறுப்பு வெள்ளைப் படங்கள்
      எப்பொழுதும் மிகவும் பிடிக்கும். உணர்ச்சிகள் பளிச்சென்று
      தெரியும்.மிக மிக நன்றி மா.

      நீக்கு
    4. அன்பு ஸ்ரீராம், நேயர் விருப்பம் நிறைவேறியாச்சு.
      அதனால் லிஸ்டிலிருந்து அந்தப் பாடலை எடுத்து விடுங்கள்.
      ஆடி வெள்ளி வாழ்த்துகள்.

      நீக்கு
    5. அதற்குப் பதிலாக இந்தப் பாடல் ,தமிழ்ப் பாடல் வெளியிட முடியுமா. நிறைய பேருக்குப் பிடித்திருக்கும் என்று நினைத்துக் கேட்கிறேண்.
      கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
      காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
      பாட்டு ..படம் பந்தபாசம்.
      TMS AND PB SRINIVAS.

      நீக்கு
  11. மூன்று காணொளிகளும் பார்த்து, கேட்டு ரசித்தேன்.

    கடைசி காணொளி இயங்கவில்லையே... ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி.

      கடைசிக்காணொளி? பார்க்கிறேன் ஜி.

      நீக்கு
  12. ஓசை பட பாடல், ஷோர் இந்தி பாடல் இரண்டும் கேட்டு இருக்கிறேன் பிடித்த பாடல். இப்போதும் இரண்டையும் கேட்டேன்.
    பாலாஜி தயாரித்த படம் என்று நினைக்கிறேன் "ஓசை" படம் பார்த்து இருக்கிறேன். அந்த குழந்தை ஊமை குழந்தை என்று நினைக்கிறேன்.
    அப்புறம் காது கேட்டு பேச்சு வருமோ? சோகமாய் முடிவு இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..
      ஓசை என்ற அந்தப் படம் மகா சோகமாக இருக்கும்....

      நீக்கு
    2. ஆம் நானும் சொல்ல நினைத்தேன் ஓசை பாலாஜி தயாரித்த படம்தானே...

      பிறகு ஸ்ரீராம்ஜி சரியாகத்தான் எழுதி இருப்பார் என்ற நம்பிக்கையில் ஒன்றும் எழுதவில்லை.

      நீக்கு
    3. தேவகோட்டைஜி உங்கள் நம்பிக்கை சரிதான்.

      கே விஜயன் இயக்கத்தில் வெளியான படம்.

      ஸ்ரீராம் படத்தை இயக்கியவர் கே. விஜயன் என்று போட்டு இருக்கிறார், நான் தயாரித்த்வரை குறிப்பிட்டு இருக்கிறேன்.
      பாலாஜி தயாரித்த படம்.

      நீக்கு
    4. கோமதி அக்கா சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். யாருடைய தயாரிப்பு என்று பெரும்பாலும் நான் எழுதுவதில்லை. இயக்கம் யார் என்று சொல்வேன். இப்படத்தின் இயக்குநர் கே விஜயன்.

      பாலாஜி அளிக்கும் என்றுதான் படம் தொடங்குகிறது. ஆனால் பேனர் சுஜாதா பேனர் அல்ல.

      நீக்கு
  13. ஓம்.. சிவோஹம்..
    ஓம்.. சிவோஹம்..

    முன்பு இரவு வேலை செய்து கொண்டிருந்த போது இரவு நேரத்தில் கேட்டுக் கொண்டிருப்பேன்..

    ஆனாலும்..
    எனக்கு இந்தப் பிச்சைப் பாத்திரம் பாடல் பிடிப்பதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜு சார்... இந்தப் பாடலின் உயர்வை, காட்சிப்படுத்தப்பட்ட விதம், குறைத்துவிடுகிறது. காட்சி, பிச்சைக்காரர்களைக் காண்பிக்கிறது... ஆனால் பாடல், நம் எல்லோரின் உணர்வைத் தத்துவரீதியாகச் சொல்கிறது.

      அதுனால பாடல் காட்சியகப்படுத்தப்பட்ட விதம் பிடிக்கலைனு சொல்றீங்க என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. எனக்கு இந்த இரண்டு பாடல்களிலுமே பெரிய பிடித்தமில்லை!

      நீக்கு
  14. உடம்பை வளர்த்தேன்..
    உயிர் வளர்த்தேனே.. என்பது திருமந்திரம்..

    உயிர் ஓம்புதல்.. வள்ளுவப் பெருமான்...

    அரிது.. அரிது.. மானிடராதல் அரிது...-
    ஔவையார்...

    அப்புறம் எதற்கு உடம்பை இகழ்ந்து கொள்வது?...

    அம்மையே.. அப்பா!.. என்று திருவாசகம் பாடும்போது - நாம் இறைவனின் பிள்ளைகள் என்றாகி விடுகின்றோம்..

    அபிராமிபட்டர் நேரடியாகவே
    அபிராமவல்லியிடம் -
    மகவு நான்... நீ தாய்!..
    அளிக்கொணாதோ?.. என்று கேட்கிறார்..

    உடம்பையும் உறுப்புகளையும் இயக்கத்தையும் இகழ்ந்து கொள்ளும் மனப்பான்மை சித்தர் பாடல்கள் என்று அங்குமிங்கும் காணப்பட்டிருந்தாலும்
    அவைகள் இடைச்செருகல் ஆக இருக்கலாம் என்பது எனது கருத்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான். இருக்கலாம்.

      துரை செல்வராஜூ ஸார்... நேற்றைய பதிவில் உங்கள் கருத்துகள் மிஸ்ஸிங்!

      நீக்கு
  15. நேயர் விருப்பம் கேட்டேன். பிடித்த பாடல்தான். காசிகங்கை ஆரத்தி ஆரம்பித்து அத்தனையும் நன்றாக இருக்கும் படம் தொலைக்காட்சியில் பார்த்தேன்.
    அடுத்த பாடல் வரவில்லை.
    அந்த பாடலில் காட்டபடும் காட்சிகள் சோகம் . படத்தில் அந்த பிச்சை எடுக்க வைக்க செய்யபடும் கொடுமைகளை பார்க்க மனவலிமை வேண்டும் .

    பதிலளிநீக்கு
  16. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடலில் பிச்சை எடுக்க குழந்தைகள் படும் சிரமம், பெரியவர்கள் சிறியவர்கள் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாய் இருப்பதும், அவர்களுக்கு கிடைக்கும் நேரத்தில் ஆடி பாடி, சிரித்து மகிழ்ச்சியாக இருப்பதும் மனதை நெகிழ வைக்கும்.
    இந்த மாதிரி மக்களை பார்க்கும் போது கடவுள் நம்மை நன்றாக படைத்து இருப்பதற்கும் நன்றாக வைத்து இருப்பதற்கும் அனுதினமும் இறைவனுக்கு நன்றி சொல்ல தோன்றும்.
    இறைவா ! இப்படி இனி யாரையும் படைக்காதே! அவர்களுக்கு நல்வழி காட்டு என்று வேண்ட சொல்லும்.

    பதிலளிநீக்கு
  17. ஒரு பாடல் நான் கேட்டேன்... பல முறை கேட்டிருக்கிறேன். ஆனாலும் ஒரிஜினல் ஈர்த்த அளவுக்கு ஈர்க்கவில்லை.

    நான் கடவுள் பாடல்கள் பிடிக்கும் என்றாலும் படம் ஒருவித மனச்சோர்வு தருவதாக இருப்பதால் பாடல்களை அடிக்கடி கேட்க மனம் உடன்படுவதில்லை. ஏதோ ஒரு நிகழ்வில் விஜய் பிரகாஷ் இப்பாடலை மேடையில் பாடினார். அம்மாடீ... அப்படியொரு பாடல் தாண்டவம் அது.

    பதிலளிநீக்கு
  18. முதல் பாடலுக்கு தமிழில் பாடல் வரிகளை எழுதியவரை பாராட்டத்தான் வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. திண்டுக்கல் தனபாலன் முதல் பாடல் என்பது ஓசை பட பாடலை சொல்கிறார் என்று நினைக்கிறேன்.
      இந்தி பாடலுக்கு ஏற்ப தமிழில் பாடல் வரிகளை எழுதியவரை பாராட்டுகிறார்.

      நீக்கு
    3. திண்டுக்கல் தனபாலன் முதல் பாடல் என்று சொல்வது ஓசை படப் பாடலை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  19. பிச்சை பாத்திரம் காணொளி வரவில்லை... Copyright-ஆக இருக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். இதேமாதிரி வேறு சில பாடல்களுக்கும் ஆகி இருக்கிறது.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  20. "நான் கடவுள்"ஹோம் சுவோகம் எனக்கும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  21. அவசரத்தில் தட்டச்சு பிழை ஓம் சிவோகம்.

    பதிலளிநீக்கு
  22. "ஒரு பாடல் நான் கேட்டேன்" பாடல் முதல் முறையாகக் கேட்கிறேன். அருமையா இருக்கே....

    இந்த மாதிரி காப்பிக்கு இசையமைப்பாளரைக் குறை சொல்ல முடியாது. தயாரிப்பாளரோ இயக்குநரோ அதே மாதிரி பாடல்தான் வேண்டும் என்று சொல்லும்போது வேறு வழியில்லாமல் போடவேண்டியிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //"ஒரு பாடல் நான் கேட்டேன்" பாடல் முதல் முறையாகக் கேட்கிறேன். அருமையா இருக்கே....//

      என்ன ஆச்சர்யம்! அழகான பெண்ணின் அப்பாவே ரசிக்கிறார்!!!!

      //இசையமைப்பாளரைக் குறை சொல்ல முடியாது. தயாரிப்பாளரோ இயக்குநரோ .... //

      ஆம், அதைதான் நானும் சொல்லி இருக்கிறேன்!

      நீக்கு
  23. // உடம்பையும் உறுப்புகளையும் இயக்கத்தையும் இகழ்ந்து கொள்ளும் மனப்பான்மை சித்தர் பாடல்கள் என்று அங்குமிங்கும் காணப்பட்டிருந்தாலும் அவைகள் இடைச்செருகல் ஆக இருக்கலாம் என்பது எனது கருத்து... //

    ஆரம்பத்தில் அற்புதமான கருத்து சொன்ன துரை செல்வராஜூ ஐயா அவர்களுக்கு :

    முதலில் ஸ்ரீராம் சார் அவர்களுக்கு இந்த (?) காணொளியை இங்கு இணைத்து இருந்தால்...? வெள்ளி என்றால் எதோ ஒரு பாடல் போட வேண்டும்... அப்படித்தானே...? இது என்றைக்கு எழுதிய வைத்த draft...? சரி பிறகு பேசுவோம்...!

    மேற்படி காணொளியை முழுவதுமாக பார்த்து, வாசித்து விட்ட (அன்pin eb வாசகர்கள் உட்பட) துரை செல்வராஜூ ஐயா அவர்களுக்கு : இதுவும் ஒரு பாடல் தான் ஐயா...

    அப்பனென்றும் அம்மையென்றும்...
    ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு...
    ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு...

    அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்
    - ஆவதென்ன சக்கையாகப் போகும் கரும்பு...
    ஞானப் பெண்ணே சக்கையாகப் போகும் கரும்பு...

    பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்...
    எந்தக் கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்...?
    தட்டுக் கெட்டு ஓடும் தள்ளாடும்...
    எந்நாளும் உன் உள்ளக் குரங்கு...
    நீ போடு மெய்ஞான விலங்கு...
    மனம் ஆடாமல் வாடாமல்...
    மெய்ஞானம் உண்டாக, அஞ்ஞானம் அற்று விழும்...!

    அப்புறம் நெல்லைத்தமிழன் ஐயா அவர்களின் உண்மையான கருத்தை மிகவும் வரவேற்கிறேன்... எதற்கும் முட்டு கொடுக்கும் சகோதரி கீதா அவர்களையும் பாராட்டுகிறேன்... நன்றி...

    - இது இன்றைய பதிவின் விமர்சனம்... இதற்கு மேல் ஸ்ரீராம் சார் - என்னை - புரிதலுக்கு நன்றி சார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இளையராஜா படம் ​இருக்கும் வேறொரு காணொளியை இணைக்க இருந்தபொழுதுதே சமயம் இந்தப் பின்னூட்டம் - தனபாலனிடமிருந்து,,, எனவே அந்தக் காணொளியையே இணைத்திருக்கிறேன்.

      நீக்கு
  24. பதில்கள்
    1. இந்த கருத்துரை இட்டு பார்ப்பதற்குள், இங்கே மறுமொழியாக உங்களின் கருத்துரை... அசந்து விட்டேன் ஸ்ரீராம் சார்...

      நீக்கு
    2. பின்னூட்டத்துக்கும் முன்பாகவே நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் உள்ள காணொளி இணைக்கப் பட்டிருக்கிறது. பார்க்கவில்லையா

      நீக்கு
    3. அது தவறாக இருக்குமோ என்று நினைத்து நீக்கி விட்டேன்... பிறகு அந்த எனது மறுமொழியை நீக்கிவிட்டு, பதிய கருத்துரையாக மீண்டும் பதிவு செய்தேன்... அந்த தாமதத்திற்குள் நீங்கள் பிடித்து விட்டீர்கள்...!

      // ஐயனே என் ஐயனே//

      எனக்கான ஐயன் இருக்கிறார் ஸ்ரீராம் சார்... நன்றி...

      நீக்கு
  25. இன்று வந்திருக்கும் ‘நேயர் விருப்பம்’ புதிய பகுதியா இல்லை, cricket's one-off test மாதிரி இதோடு முடிந்த கதையா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் அண்ணா புதிய பகுதி இல்லையே...ஏற்கனவே துரை அண்ணா அண்ட் பானுக்கா கேட்டு இங்கு பகிர்ந்திருந்தாரே ஸ்ரீராம். தொடரும் பகுதிதான் நேயர்கள் விருப்பம் தெரிவித்தால்....

      வல்லிம்மா விருப்பம் சொல்லியாச்சு பாருங்க...

      அண்ணா கிரிக்கெத் தான் முடிந்துவிட்டதே இன்னமும் அதுலருந்து வெளில வரலியா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  26. ஸ்ரீராம் இப்பத்தான் ஓசை படப் பாடல் கேட்டேன். இரு வெர்ஷனும் கேட்டிருக்கிறேன். ஆனால் படம் ஓசை என்பதோ மற்ற விஷயங்களோ தெரியாது. பாடல்கள் மட்டுமெ கேட்டிருக்கிறேன். அருமையான மெட்டு. ஆங்கிலப்பாடல்களை நினைவுறுத்தும் பாடல். ஏனென்றால்......

    சி மேஜர் ஸ்கேல் (அதான் சங்கராபரணம் நோட்ஸ்) பெள்ய்ன் பாடல். ஸ்ட்ரெய்ட்...பாடல். கீபோர்டில் வாசிப்பதும் எளிதுதான்..

    ஆனால் மிகவும் இனிமையான பாடல். பல வருஷங்களுக்குப் பிறகு கேட்கிறேன் ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  27. எனக்கு பிச்சை பாத்திரம் பாடலும், ஓம் சிவோஹமும் ராகத்திற்காக...சிவோஹம் பாடல் விஜய் சினிமாவில் பாடியதை விட ஏதோ ஒரு விழா ஸ்டேஜ் எது என்று நினைவில்லை யுட்யூபில் பார்த்த நினைவு....செமையா முதலில் அழகா ஆலாபனை செஞ்சு ரொம்பவே அதிரடியா பாடியிருப்பார்..

    பிச்சைப் பாத்திரமும் ராகம் பிடிக்கும். ஆனால் ஏனோ மனதை சோகம் அப்பும் என்பதால் அதிகம் கேட்க விரும்புவதில்லை. நான் கடவுள் படப் பாடல்கள் ஏனோ கேட்க விருப்பம் இருப்பதில்லை. சோகம் என்பதாலோ என்னவோ...

    கீதா

    பதிலளிநீக்கு
  28. ஹிந்தி மூலம் மிகவும் பிடிக்கும். அதை அப்படியே காபி பண்ணியிருந்ததால் தமிழ் கேட்க மாட்டேன். நான் கடவுள் பாடல்கள் இரண்டுமே மிகவும் நன்றாக இருக்கும். ரியாலிட்டி ஷோக்களில் நிறைய பேர் பாடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  29. என் நேயர் விருப்பம்:

    பாக்கியலஷ்மி படத்தில்:

    சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
    பொன்னான இந்த மாலை நேரமே...

    ஜெமினி எவ்வளவு உற்சாகமாக துள்ளிக் குதித்து காதல் காட்சியில் நடிக்கிறார் என்பதைக் காண்பதற்காகவே விடியோவுடன் போடுங்கள்.

    "வாடிக்கை மறந்ததும் ஏனோ?"
    "பாட்டு பாடவா.."
    "நிலவே என்னிடம்.."
    "பூஜைக்கு வந்த மலரே.."
    "ஆசையினாலே மனம்.."
    "வாராயோ வெண்ணிலாவே.."
    "கை விரல் கொஞ்சும் யாழாக.."

    -- இப்படி ஜெமினி நாளே கொண்டாடுங்களேன்...

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல்கள் அத்தனையும் நன்றாக உள்ளது. முதல் பாடல் ஓசை படம் என்று தெரியாது. (என்னப் பொறுத்த வரை படம் ஓசையின்றி சென்று விட்டதோ என்னவோ.! கேள்விப்பட்டதில்லை.) ஆனால் இந்த பாடலும் ஹிந்தி திரைப்பட பாடலும் ஒன்று போல் இருக்கக் கண்டு அப்போது மிகவும் ரசித்துள்ளோம். இது போல் அப்போது நிறைய பாடல்கள் ஹிந்தியோடு, தமிழும் ஒத்துப் போகும்.

    நேயர் விருப்ப பாடலும் இன்று பாடல் வரிகளோடு கேட்டு மகிழ்ந்தேன். ஆனால் இந்த படமும் பார்த்ததில்லை. அத்தனையும் நன்றாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  31. நேயர் விருப்பம் கேட்டு காத்திருப்பதை விட விரும்பிய போது தேடி கேட்டு விடல் சுலபமன்றோ

    பதிலளிநீக்கு
  32. "ஓசை"னு படம் வந்ததே தெரியலை. ஓசைப்படாமல் போயிடுச்சு போல! ஓம் ஷிவோஹம் பாட்டுக் குட்டிக் குஞ்சுலுவுக்குப் பிடிச்ச பாட்டு. ஆனால் திரைப்படத்தில் வராமல் பாடகர் தனியாப் பாடி இருப்பார் போல! அதில் தான் குஞ்சுலுவும் பார்க்கும், நானும் பார்த்திருக்கேன். பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே பாடலும் பிடிக்கும் தான்! ஒரு வகையில் நாம் அனைவருமே பிச்சைப்பாத்திரம் ஏந்தித் தானே இவ்வுலகில் வந்திருக்கோம். மற்றபடி திரைப்படத்தில் அந்தப் பாடலையோ பாடல் வரும் காட்சியையோ பார்த்ததில்லை! பொதுவாக நல்ல கருத்துள்ள பாடல் அது. பொருள் பொதிந்த பாடல்!

    பதிலளிநீக்கு
  33. ஓசை ந்னு ஒரு படம் வந்ததா என்ன.... :)))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!