நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
3.7.26
நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா
பல் சிகிச்சை என்பது ஒரு தொடர்கதை. கைவைத்தால் போதும் ஏதாவது ஒரு வேலை பிரச்னை புதிது புதிதாகத் தோன்றி இழுத்துக் கொண்டே இருக்கும்.
2015 ல் தொடங்கினேன். அப்போதுமுன்பற்கள் இல்லாமல் போனது. ஏதோ ஆயுர்வேத மருந்து எடுத்துக் கொண்டதில் பிரச்னை என்றார்கள். அதில் Led இருந்தது என்றும் அது பற்களை அரித்து விட்டது என்றும் சொன்னார்கள். நான் கேனை. கேப்பையில் நெய் வடிகிறது என்று கேட்டுக்கொண்டேன்.
சென்ற 2025 டிஸம்பர், ஜனவரியில் மீண்டும் ஒரு ரூட் கெனால் ஒரு ஃபில்லிங் என்றெல்லாம் முடித்து ஆறுமாதம் கழித்து ஜூன் மாதத்தில் ரெவியூ என்று தேதி வாங்கியபோது உஷாராக மகன் திருமணம் தாண்டி தேதி வாங்கி இருந்தேன்.
அந்த தேதி வருவதற்கு முன்னரே பல் அவர்களை பார்க்க ஆவல் கொண்டது. படுத்திக் கொண்டே இருந்தது. அது பல் பிரச்னையா ஈறும் சம்பந்தப்பட்ட பிரச்னையா அல்லது ஈறுகெட்ட எதிர்மறையா என்று சந்தேகம் இருந்தது. ஏனெனில் ஈறுதான் அதிகம் வலித்தது. வாழைப்பழம் கூட கடிக்க முடியாமல் வலித்தது.
உடனே போயிருக்கலாம்தான். அதுதான் அவர்களும் சொல்வார்கள். எல்லோருமே அப்படிதான் சொல்வார்கள்/செய்வார்கள். நான் சோம்பேறியாச்சே... அதுதான் எப்படியும் இன்னும் பத்து நாட்களில் போகப்போகிறோம், அப்படியே இந்தப் பிரச்னையைச் சேர்த்துச் சொல்லிக் கொள்ளலாம் என்று ஒத்திப்போட்டு வலியைப் பொறுத்துக் கொண்டேன்.
அவர்கள் தினசரி செய்யச் சொன்ன சொன்ன Floss செய்யாமலேயே இருந்தேன். பயம்! தயக்கம்!! இப்போது இல்லையில்லை, எப்போதும் அவர்களை பார்க்கச் செல்லும் நாள் என்று வரும்போது அது செய்யத் தொடங்கி விடுவேன். இல்லாவிட்டால் அவர்கள் - குறிப்பாக டாக்டர் ரத்திகாவும், சாந்தினியும் - அவர்கள் வீட்டு சுவரில் வெள்ளையடிக்கச் சொல்லி நான் செய்யவில்லை என்பது போல முகம் காட்டுவார்கள். சினம் காட்டுவார்கள். அலுத்துக் கொள்வார்கள்.
Floss போடுவது என்பது இயல்பான நேரான பற்களாக இருந்தால் பரவாயில்லை. நவகிரகம் போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டிருப்பதில் Floss போடுவது கடினமாக இருந்தது. சமயங்களில் எதிர்ப்பு காட்டி சிவந்ததது! வாட்டர் floss காசு செலவு செய்து வாங்கி வைத்திருந்தேன் என்றாலும் அது போடுவதிலும் சுணக்கம் இருந்தது.
பல்வேறு குட்டி சாதனங்களுடன் அது குடுவை போல இருந்தது. ரீசார்ஜபிள். நீரை நிரப்பி வாயை ஆவென்று திறந்து பற்களுக்கிடையில் அடித்தால் அருவியில் அடிப்பது போல பற்களிடையே அடித்தது. ஈறு பிய்த்துக் கொண்டு போகும் போல இருந்தது. அதில் மினிமம் வேகத்திலேயே அப்படி! முகமெல்லாம் ஈரமானது! நிறுத்தி விட்டேன்.
என்னவோ ஆகிவிட்டுப் போகட்டும்.. இந்தத் தொல்லை வேண்டாம் என்று விட்டு விடுவேன். அப்புறக்ம் பல்லில் பிரச்னை, வலி வந்ததும் நினைத்தாலே இனிக்கும் ஜெயப்பிரதா போல இந்த க்ளீன் செய்யும் வேலைகள் வந்து ஒட்டிக்கொள்ளும் .
எல்லா பல் டாக்டர்ஜ்களுக்கும் பிடித்ததா சிபாரிசு செய்வதா, இல்லை எங்கள் பல் க்ளினிக் டாக்டர்களுக்கு மட்டும் பிடித்ததா என்று தெரியவில்லை, Vantej பற்பசைதான் உபயோகிக்கச் சொல்வார்கள். Vantej Toothpaste, Vantej மவுத்வாஷ் தான் வங்கச் சொல்வார்கள். சென்ஸோடைன் நல்ல டூத்பேஸ்ட் என்கிறார்களே என்று கேட்டால், அதெல்லாம் போடவேண்டாம் என்பார்கள்.
முன்னதாக ஒரு ஸ்பெஷலாக பொடியும், ஒரு ஜெல்லும் கொடுத்தார்கள். மவுத்வாஷ் செய்து விட்டு, அந்தப் பொடியை ஈறுகளில் உட்புறமும் வெளிப்புறமும் தடவி கொஞ்ச நேரம் வைத்திருந்து விட்டு, பின்னர் Floss போட்டு விட்டு, அந்த ஜெல் இதே போல ஈறுகளின் எல்லா பக்கமும் அப்ளை செய்ய வேண்டும். இந்த ஜெல் போட்டதும் கிராம்பு தடவியது போல இருக்கும். எச்சில் ஊறும். பின்னர் வாய் கொப்பளிக்க வேண்டும்! அதாங்க மவுத்வாஷ்!
'எல்லோரும் இப்படியா செய்கிறார்கள்' என்று நான் அவர்களைக் கேட்டால், 'இல்லைதான், எல்லாருமா இங்கே பிரச்னை என்று வந்தார்கள்?' என்று கேட்கிறார்கள். எனக்கு இதெல்லாம் தினசரி செய்வதில் சோம்பேறித்தனம் உண்டு.அதுதான் பல் ஆஸ்பத்திரி போகும் சமயம் இரண்டு மூன்று நாள் மட்டும் ஒழுங்காக செய்துகொண்டு போவேன்...
"யாரை ஏமாற்றுகிறாய்.. அவர்களையா? நீ உன்னையே ஏமாற்றிக் கொள்கிறாய்" என்று நீங்கள் மட்டுமில்லை, என் மனசாட்சியும் சொல்கிறதுதான்! என்ன செய்ய.. என் டிசைன் அப்படி!
ஆனால் பாருங்கள் விவரங்களாக சொல்லிக் கொண்டு வருகிறேன். சொல்ல வந்த விஷயம் வழக்கம்போல வேற... பசுமாடு, தென்னை மரம் போல சுத்தமாக வேற சம்பந்தமில்லாத விஷயம். இதெல்லாம் முன்னுரை! அதை அடுத்த வெள்ளி தொடர்கிறேனே...
பழைய பாணியில் எழுதச் சொல்லி வாசகர்கள் கேட்டதாக மணியன் சொல்கிறார். அது மாதிரி அவர் இந்த 'இதயச் சுரங்கம்' கதையை எழுதினாராம்.
இதயச் சுரங்கம்
மணியன்
உங்களுடன் ஒரு கணம்...
'மோகம் முப்பது வருஷம்' 'ஆசை வெட்கமறியும்* ஒரு நண்பரிட ஆகிய நாவல்கள் வெளியான பிறகு. ஒரு நண்பரிடமிருந்து என்னுடைய 'புது அலை' நாவல்களைப் பற்றிய கடிதம் ஒன்று வந்திருந்தது. 'இவற்றில் என்னதான் புதுமையை நீங்கள் கையாண்டாலும், உங்களுடைய பழைய நாவல்களைப் படிப்பதுபோல எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. பழைய மணியனாக உங்களை நான் சந்திக்க முடியுமா?' என்று அவர் கேட்டிருந்தார்.
இதைப்போல கடிதங்கள் வேறு நண்பர்கள் சிலரிடமிருந்தும் வந்திருந்தன. 'அவர்கள் விருப்பப்படியே, அந்த நாளைய பாணி பில் ஒரு நாவல் எழுதினால் என்ன?' என்ற ஆவலும் உண்டாயிற்று, அந்த முயற்சிதான் 'இதயச் சுரங்க'மாகத் தொடங்கி இருக்கிறது. - சமூகத்தில் உயர்மட்ட நிலையில் இருப்பவர்களைப் பற்றியே சமீபத்தில் நான் அதிகமாக எழுதி வந்திருக்கிறேன். அதற்குக்காரணம், அவர்களிடையே நான் காண நேர்ந்த, பொதுவாக வெளியாருக்குத் தெரியாத பல குறைபாடுகள்தாம். அவற்றை அடிப்படையாக வைத்து, அந்தச் சிக்கல்களை அலசுவதற்காக. சற்று துணிச்சலான கதையம்சங்களை வகுக்கத் தொடங்கினேன்.
இப்படிச் சில நாவல்களை எழுதினாலும், என் மனதுக்கு மிக நெருங்கியவை. நான் என்னுடைய வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் கண்டு பழக நேர்ந்த எளிய குடும்பங்கள் தாம்.வசதியானவர்களின் வாழ்க்கைச் சிக்கல்களைவிட அவர்களுடையவை ஆழமானவை; நெஞ்சைத் தொடுபவை: நம்மில் பெரும்பாலோர் அன்றாட வாழ்க்கையில் கண்டு உணர்ந்து அனுபவிப்பவை. அவர்களுடைய கதை நம்முடைய கதை.
இப்படி ஒரு குடும்பத்தைத்தான் 'இதயச் சுரங்க'த் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். இந்தக் கதாபாத்திரங்கள் உங்கள் தெருவிலேயே இருக்கக்கூடும்; இவர்களைத் தினம் தினம் நீங்கள் பஸ்ஸிலும், ஆபீசிலும், கோயிலிலும், பீச்சிலும் பார்க்க கூடும். இவர்களிடையே இழையும் ஒரு வாழ்க்கை- அதில் அமைந்த ஒரு கருத்தோட்டம் - இதுதான் 'இதயச் சுரங்கம் இது நாவல் அல்ல; வாழ்க்கையைச் சுவாரசியமாகக் கதை போல எடுத்துச் சொல்லும் ஓர் அனுபவம்: அவ்வளவுதான்.
நான் இந்த முயற்சியில் ஒரு புதுமையை வாசகர்களு அறிமுகப்படுத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் உங்களுக்குத் தெரிந்த நன்றாகப் பழகிய சிலராகவே இருக்கலாம். இதே போல நிகழ்ச்சிகள் உங்கள் குடும்பத்திலேயோ, உங்களுடன் நெருங்கி பழகியவர்களின் குடும்பத்திலேயோ நேர்ந்திருக்கக் கூடும். நாவல் முடிந்த பிறகு அவற்றைப் புகைப்படம், விலாசத்துடன் எழுதி எனக்கு அனுப்பி வையுங்கள்.
கதையில் வரும் கமலா, கலா. ஜெயந்தி. மங்களம், முரளி ஆகியவர்கள் தமிழ்நாட்டில் எங்கெங்கேயோ வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முயலுகிறேன். என்னுடைய கதையில் வரும் நிகழ்ச்சிகள் எவ்வளவு தூரம் உண்மை வாழ்க்கையோடு ஒட்டியவை என்பதையும் நான் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். நாவலை நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறீர்கள். எனக்கு தெரியும். உங்கள் ஒத்துழைப்பையும் நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
எந்தையும் தாயும் நெஞ்சு நெகிழ்ந்து, ஒன்று கலந்து, தம்மை மறந்த தருணம் கருவில் தங்கியதிலிருந்து, நான் அமர்ந்த தவத்தின் பொருளாகும் பதத்திற்கு இட்ட மறுபெயர் காலம், தவத்தின் இருக்கை கலையும் சமயங்கள் இறப்பு பிறப்பு: இரண்டுக்கும் இரவும், இரவியும் வகுத்த நேற்று, இன்று, நாளை; காலம் என்பது இவ்வளவுதானே?
M R ராதாவுடன் விந்தன் கண்ட நேர்காணல் - நேற்றைய தொடர்ச்சி...
கேள்வி :'ஒவ்வோர் கலைஞர்கள்' சிறையில் றையில் இருந்தபோது, 'பெரியார் மனம் வைத்தால் சீக்கிரமாக விடுதலையாகிவிடலாம்' என்று நீங்கள் நினைத்ததுண்டா?"
பதில் : "இல்லை; நான் யாருடைய தயவிலும், சிபாரிசிலும், கருணையிலும் எப்போதுமே வாழ நினைப்பவனுமல்ல?" வாழ்ந்தவனுமல்ல;
கேள்வி : "முதல்வர் கருணாநிதியைப் பற்றி..."
பதில் : "ஒரு காலத்தில் அவர் என் கம்பெனி ஆக்டர்; இன்று இந்த நாட்டின் முதலமைச்சர். என் கம்பெனி ஆக்டர் முதலமைச்சராயிருக்கிறார் என்றால் அதிலே எனக்குப் பெருமைதானே?"
கேள்வி : "சரி, கலை உலகத்துக்கு வருவதற்கு முன்னால் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?"
பதில் : "வீட்டுக்கு அடங்காத பிள்ளையாயிருந்தேன். ஸ்கூலுக்குப் போவதில்லை. ராபர்ட் கிளைவ் மாதிரி துடுக்குத்தனமாக ஏதாவது பேசிக்கிட்டிருக்கிறதே என் பொழுது போக்காயிருந்தது."
கேள்வி :"அதை விட்டுக் கலை உலகத்துக்கு நீங்கள் வந்தது எப்படி?"
பதில் : "கலை உலகத்துக்கு நானாகவும் போகவில்லை; அதுவாகவும் என்னைத் தேடி வரவில்லை. சூழ்நிலையும் சந்தர்ப்பமுமே என்னையும் கலையையும் ஒன்று சேர்த்தது."
கேள்வி : "அது என்ன சூழ்நிலை, சந்தர்ப்பம்?"
பதில் : "வீட்டிலே சோறில்லை; டிராமா கம்பெனியைத் தேடிக் கிட்டுப் போவேன். அப்போ அங்கேதான் நல்ல சோறு கிடைக்கும். சுருக்கமாகச் சொன்னா, பாய்ஸ் கம்பெனி சோறுதான் இன்னிக்குப் பலரைக் கலைஞர்களாக்கி யிருக்கிறது. 'பேக்ட்'டை யாரும் சொல்ல மாட்டேங்கி றானுங்க. வசதி வந்ததும் 'ஹிஸ்டரி'யையே மாத்திச் சொல்றானுங்க. 'ராயல் பேமிலி'ங்கிறானுங்க. கலைக்காகவே அவதாரம் எடுத்ததா வேறே அளக்கிறானுங்க. என்ன செய்யறது? உண்மை உறங்குது; பொய் பொன்னாடை போர்த்திக்கிட்டு ஊர்வலம் வருது. என்னைப் பொறுத்தவரை டிராமா கம்பெனி சோறுதான் என்னை 'ஆக்ட'ராக்கியிருக்கிறது. இதுதான் 'பேக்ட்'.
கேள்வி :"ஒரு கலைஞன் முன்னேற வேண்டுமானால் மற்ற கலைஞர்களை முன்னேற விடாமல் தடுத்தால்தான் முன்னேற முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?"
பதில் : "இல்லை; சரக்கு உள்ளவன் அப்படி நினைக்க மாட்டான்; அந்த வேலையைச் செய்யவும் மாட்டான்."
கேள்வி : "கலைஞன் என்பவனுக்கு இலக்கணம் ஏதாவது..."
பதில் : "உண்டு; பஞ்சமாபாதகத்தில் அவன் ஒரு பார்ட்னர்
கேள்வி : "கலைஞன் கலைஞனாக மட்டும் இருந்தால் அவன் தருமோபதேசியாகவும் தத்துவ போதுமா? ஞானியாகவும் கூட இருக்க வேண்டுமா?"
பதில் : "கலைஞன் கலைஞனாகத்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும். தருமோபதேசம், தத்துவ ஞானமெல்லாம் அவனுக்கு ஏது? இருந்தால் அதெல்லாம் இரவல் சரக்காகத்தான் இருக்கும்."
கேள்வி : "உண்மையான கலைஞன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்?"
பதில் : "ஆடியன்ஸுக்கு அறிவைக் யிருக்கக்கூடாது; வேண்டும்." லஞ்சம் கொடுப்பவனா கொடுப்பவனாயிருக்க கூடாது.
கேள்வி :"நடிகர்களில் சிலர் பிறந்த நாள் கேக் வெட்டுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"
பதில் : "நினைப்பதற்கு என்ன இருக்கிறது ? 'கேக்' வெட்றதை 'ஒரு 'ஜோக்'கா ஆக்கிட்டான் இந்த நாட்டிலே. மேல் நாட்டிலே அப்படி இல்லை. அதிலே ஒரு சமதர்மச் சித்தாந்தமே அடங்கியிருக்கிறது. மனைவி மக்களோடு வீட்டு வேலைக்காரர்கள், நண்பர்கள், உறவினர்களையெல்லாம் வரவழைத்துப் பிறந்த நாள் கேக்கை வெட்டி, ஒரு துண்டைத் தன் வாயில் போட்டுக்கிட்டு, மற்ற துண்டுகளை ஏற்றத்தாழ்வைப் பார்க்காம அவன் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்கிறான். ஏன்? தன்னை வந்தடைந்துள்ள புகழ், பொருள் எல்லாவற்றையுமே பிறருடன் பகிர்ந்து கொள்ளத் தான் தயாராயிருப்பதை எடுத்துக் காட்டுவதற்காக. இதுவே கேக் வெட்டுவதன் தாத்பரியம். இதை விட்டுவிட்டுப் பிரஸ் ரிப்போர்ட்டரைக் கூப்பிட்டு 'பர்த்டே' கொண்டாடறவன் வியாபாரி. உண்மையான கலைஞனல்ல; அசல் அப்படித்தான் என்னாலே சொல்ல முடியும்."
கேள்வி : "கலைஞனை விளம்பரம் தானாகவே தேடி வர வேண்டுமா? அல்லது, விளம்பரத்தைத் தேடி அவன் ஓட வேண்டுமா?"
பதில் : "விளம்பரம் கலைஞனைத் தேடி வந்தது அந்தக் காலம்; கலைஞன் விளம்பரத்தைத் தேடி ஓடறது இந்தக் கஈலம்."
கேள்வி : "மேடை நாடகங்களில் நீங்கள் யாரை யாரையெல்லாம் சந்தித்தீர்கள் ? அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த தொடர்புகள் என்னென்ன?"
பதில் : "மேடை நாடகங்களில் குரங்காட்டம் போட்டவர்களையும், கொள்கையில்லாக் கூத்தாடிகளையும் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கும் எனக்கும் இடையே இருந்த ஒரே தொடர்பு 'அரிதாரம்' பூசறது தான்."
கேள்வி : "அதைத் தவிர...?"
பதில் : "வெட்டுப் பாறையில் கோவலன் பாடிக்கொண்டே செத்துவிடுவான். 'ஆடிட்டோரிய'த்திலிருந்து 'ஒன்ஸ்மோர்' குரல் வரும்; மாண்டவன் மீண்டும் எழுந்து பாடுவான்!"
கேள்வி : "இந்த 'ஒன்ஸ்மோர் கலைஞர்க'ளைத் தவிர... "
பதில் : "பெருமைக்குரிய கலைஞர்கள் சிலரையும் நான் சந்தித்திருக்கிறேன்; அவர்களைப் பற்றிப் பின்னால் சொல்கிறேன்."
கேள்வி : "நீண்ட நாட்களாக நீங்கள் திரை உலகத்துக்கு வராமல் இருந்தது ஏன்? வந்தாலும் இடையிடையே விட்டுவிட்டுப் போய்விட்டது ஏன்?"
பதில் : "டிராமாங்கிறது எனக்கு 'பெர்மெனென்ட் ஹவுஸ்'; சினிமாங்கிறது 'டெம்பரரி கேம்ப்'. இருந்தாலும் ராஜசேகரன், சத்தியவாணி, சந்தனத் தேவன், பம்பாய் மெயில், சோகாமேளர் போன்ற அந்த நாள் படங்களிலேயே நான் நடித்திருக்கிறேன்!!!
கேள்வி : "சிறை சென்று வந்த பிறகு உங்கள் கருத்தில் ஏதாவது மாற்றம் உண்டா?
பதில் : "இல்லை; எப்போதும் ஒரே கருத்துத்தான். ஒரு காலத்தில் மக்கள் என்னைக் கல்லால் அடித்தார்கள்; அதே மக்கள் இன்னொரு காலத்தில் மலர் மாலைகளால் என்னை வரவேற்று என் நாடகக் கருத்துக்களையெல்லாம் ஏற்றார்கள். இடையில் மாறுபட்டது காலம் தான்; நானோ, என் கருத்தோ அல்ல."
கேள்வி : "சிறையில் இருந்தபோது நீங்கள் சிந்தித்தவற்றைப் பற்றி...."
பதில் : "எத்தனையோ சொல்ல வேண்டும். இந்த வாரம் தானே ஆரம்பிச்சிருக்கோம். வாராவாரம் சொல்றப்போ அதெல்லாம் தானாவே வரும்."
கேள்வி : உங்க 'ஹிஸ்டரி'யை எழுதணும்னு ஆரம்பிச்சோம்; அது கலை உலக ஹிஸ்ட்ரியாயில்லே பொதுவா போய்க்கிட்டிருக்கு?"
பதில் : "ரெண்டும் ஒண்ணுதான்; என் ஹிஸ்ட்ரி கலை உலக ஹிஸ்ட்ரி; கலை உலக ஹிஸ்ட்ரி என் ஹிஸ்ட்ரி!"
***********
- 1971-ல் 'தினமணிகதிரி'ல் நடிகவேள். எம்.ஆர். இராதாவைப் பேட்டி கண்டு அமரர். விந்தனால் தொடராக எழுதப்பட்டதிலிருந்து. விட்டு இது இன்னும் தொடரலாம்!
1960 ல் வெளிவந்த படிக்காத மேதை ஒரு வங்காள நாவல், படத்தின் தழுவல். இந்தப் படத்துக்கு வசனம் எழுத ஸ்ரீதர் மறுத்து விட்டாராம். எனினும் அவரது உதவியாளர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்களை வசனம் எழுத சிபாரிசு செய்தாராம். சிவாஜி படத்தில் நடிக்க ஆசைப்பட்டு பீம்சிங்கை சிபாரிசு செய்ய, அவர் இயக்கினார்.
கண்ணதாசன் பாடலுக்கு கே வி மஹாதேவன் இசை. டி எம் சௌந்தரராஜன், சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடும் பாடல். பாடல் வரிகளை கேட்கும்போது கண்கள் கலங்கி விடும்.
சிவாஜி இந்தப் பாடல் காட்சியிலும், உள்ளதைச் சொல்வேன் பாடல் காட்சியிலும் நடித்திருக்கும் விதத்தில் இன்ஸ்பைர் ஆகிதான் 'சிப்பிக்குள் முத்து' படத்தில் பாடல் காட்சிகளில் கமல் நடித்தார் என்று எனக்குத் தோன்றியது.
பல் பிரச்சனைகள் - அது பெரும் தொல்லை! பல சமயங்களில் தொல்லை தந்து படுத்தும். ஒவ்வொரு பல் மருத்துவரும் வேறு வேறு விதமான பற்பசைகளையும், ஜெல் போன்றவற்றையும் பரிந்துரைக்கிறார்கள். எனக்கு கொடுத்த பற்பசை - Peedesan... பெயரே வித்தியாசமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை கடையில் வாங்கும்போது பீடை என்று திட்டுவதாக மனதில் தோன்றும். இதைத் தவிர Multident என்று ஒரு Gel - ஈறுகளில் மட்டும் இரவு படுக்கும் முன்னர் தடவிக் கொள்ள வேண்டும் என்று கொடுத்தார் - அதைத் தடவிக் கொண்ட பிறகு எதுவும் சாப்பிடக் கூடாது என்று கட்டளை! அதனை தடவிய பிறகு வாயெல்லாம் இழுப்பது போன்று ஒரு உணர்வு வரும் எனக்கு! என்னடா இது சல்யம் என்று தோன்றிவிடும் பல நாள்!
@ஸ்ரீராம், உங்களுக்குக் கொடுத்திருக்கும் கம்டோன் பவுடர் எனக்கும் கொடுத்திருக்காங்க. பேஸ்ட் மட்டும் Senquel 40 என்னும் ஒரு பேஸ்ட். மற்றபடி வலப்பக்கம் முழுதும் கடைவாய்ப் பற்கள் இல்லாததால் அந்தப் பக்கம் மெல்லுவது கஷ்டம். இடப்பக்கம் ஒரே ஒரு பல் மட்டும் அவ்வப்போது தொந்திரவு கொடுக்கும். கம்டோன் பவுடரைப் பூசிக் கொண்டு ஊறிப் பின்னர் வாய் கொப்பளித்து விட்டுப் பல் தேய்த்துவிட்டுப் படுப்பேன். அநேகமாச் சரியாகும். சில சமயங்களில் பல் கூச்சம் இருக்கும். ஆனால் பையரும் சரி, மாட்டுப்பெண்ணும் சரி, பல் கூச்சம்னா புரிஞ்சுக்கறதே இல்லை. உடனே பல் மருத்துவரிடம் போகலாம், கிளம்பு என்பாங்க. இப்போக் கூட வலப்பக்கம் கடிக்க முடியலைனு வீட்டுக்கு வந்தவங்களோட பேசிண்டு இருந்தப்போப் பிள்ளை உடனே பல் மருத்துவரைப் பார்க்கலாம்னு கிளம்பிட்டார். இவங்களுக்குப் புரிய வைப்பதே கஷ்டமாக இருக்குனு நினைச்சுப்பேன்.
நெல்லை என் வாயிலிருந்து வார்த்தைகளைப் பிடுங்கிட்டார். இஃகி,இஃகி,இஃகி. அந்தக்கவிதை! படிச்சிருக்கேன். ஆனால் அந்தக் கவிஞ்சர் யாருனு தான் புரியலை. படத்தைப் பார்த்து அடையாளம் காண முடியலை. :( மன்னிக்கவுஜ்.
அப்பாவின் எழுதில் மேலே உள்ளவை படிச்ச மாதிரிக் கீழே உள்ளவை படிக்க முடியலை.
பல் மருத்துவ அனுபவங்கள் எனக்கும் 90 களில் இருந்து உண்டு.பின்னர் அம்பத்தூரில் ஒரு பெண் பல் மருத்துவர் பற்கள் எல்லாம் நல்ல நிலையில் ஸ்ட்ராங்காக இருப்பதாகவும், அவ்வப்போது சுத்தம் பண்ணிக் கொண்டு அவங்க கொடுக்கும் பேஸ்டினால் இருவேளை பல் தேய்த்துக் கொண்டு வந்தால் போதும். பற்களை எடுக்கவே வேண்டாம்னு சொன்னாங்க. அங்கே இருந்தவரை மாதம் ஒரு தரம் போயிடுவேன். பின்னர் திடீரென அவங்க துபாய் போகப்பின்னர் வேறே மருத்துவரைத் தேடினால் அவங்கல்லாம் இந்த முறை வைத்தியத்தை ஒத்துக்கலை. என்றாலும் நான் அவ்வப்போது பற்களைப் பாதுகாத்து வந்தேன். இப்போத் தான் 2, 3 வருஷங்களாகப் பிரச்னை.
பல் வலி ஒன்றாயிருந்தாலும் பல் டாக்டர்கள் பலவிதம். பேஸ்ட் பெயர் புதிது. இங்கே மிக ஸ்டிராங்கான மருந்து கொடுத்து விடுவார்கள். மூன்று நாட்களுக்கு பூலோகமா வேற லோகமான்னு சந்தேகமா இருக்கும்:) அதனால் அவர்கள் சொல்லும் டோஸில் பாதிதான் எடுப்பேன்.
மணியன் எழுதிய முதல் தொடரே காதலித்தால் போதுமா? தொடர் தான். நான் பள்ளியில் எட்டவதோ, ஒன்பதாவதோ (இல்லைனு நினைக்கிறேன்.) படிக்கையில் வந்தது. வீட்டில் அப்போ விகடன் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போ ஆர்வமாப் படிச்சது. அதில் சுந்தரராஜன் என்னும் காரக்டர் ஒண்ணு வரும். அவர் உமாவைக் கல்யாணம் பண்ணிக்க முயற்சிக்கையில் ஆனந்தன் வந்து விடுவான். எனக்கெல்லாம் உமா ஆனந்தனையே கல்யாணம் பண்ணிண்டது அவ்வளவாப் பிடிக்கலை.
/அது பல் பிரச்னையா ஈறும் சம்பந்தப்பட்ட பிரச்னையா அல்லது ஈறுகெட்ட எதிர்மறையா என்று சந்தேகம் இருந்தது. ஏனெனில் ஈறுதான் அதிகம் வலித்தது. வாழைப்பழம் கூட கடிக்க முடியாமல் வலித்தது.. /
ஹா ஹா ஹா. நல்ல நகைச்சுவையான எழுத்து. "துன்பம் வருங்கால் நகுக." என்பது போல், துன்பத்திலும் உங்களுக்கு நகைச்சுவை வருகிறது. இந்த நகைச்சுவை உணர்வு துன்பங்களை சற்று மறக்கச் செய்யும் என்பது என் அனுபவமும்.
ஈறுகெட்டதில்தான் இந்த எதிர்மறையே உருவாகிறது என மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால், ஈறு கேட்காமலேயே நாம் அதற்கு பல வேலைகளைத் தருகிறோம்.வேலைகளின் பளுவில் அது கெடாமல் என்ன செய்யும்.? இன்னமும் பாக்கியை படித்து விட்டு வருகிறேன். நன்றி.
/Floss போடுவது என்பது இயல்பான நேரான பற்களாக இருந்தால் பரவாயில்லை. நவகிரகம் போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டிருப்பதில் Floss போடுவது கடினமாக இருந்தது. / பீரியாடிக் க்ளீனிங் என்று போகும்போதெல்லாம் "ஏன் டெய்லி Floss பண்ணுவதில்லை" என்ற கம்ப்ளைண்ட் கேட்டுக் கேட்டு அலுத்துப்போய், "நீங்கள்தான் ஒரு முறை பண்ணிக் காமிங்களேன்" என்று சவால் விட்டேன். ஐந்து நிமிடங்களில் சரண்டர் ஆகிவிட்டார் அந்த ஹைஜீனிஸ்ட். நமக்குத்தான் நவக்ரஹம் மாதிரி நாலா பக்கமும் பற்கள் இளித்துக்கொண்டு இருக்கிறதே! என் அற்ப சந்தோஷம் நீடிக்கவில்லை. பெரிய டாக்டர் "ஆர்த்தோடாண்டிக் ட்ரீட்மெண்ட் பண்ணினால் நல்லது" என்று ஒரு பெரிய தொகைக்கான ப்ரொபோஸலுடன் வந்து விட்டார். பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல் தினமும் water floss செய்யுங்கள் ஸ்ரீராம். நல்ல ரிஸல்ட் கிடைக்கும்.
Floss போடுவது என்பது இயல்பான நேரான பற்களாக இருந்தால் பரவாயில்லை. நவகிரகம் போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டிருப்பதில் Floss போடுவது கடினமாக இருந்தது.//
அப்பாவின் கவிதைகள் நன்றாக உள்ளன. உங்களுடயதைக் காட்டிலும். நல்ல புலமையும் இருக்கிறது.
ஓரம் போக சொல்லும் ஜோக் ஜோக் அல்ல. தற்போது ரோடின் நடுவில் தான் பெரிய பெரிய பள்ளங்கள் மழைக்காலத்தில் உண்டாகின்றன. அந்த எட்டாவது வார்டில் உலா 10ஆம் பெட் பேசன்ட் நீங்க தானே? ரொம்ப அழகா இருக்கார்!
நெல்லை கண்ணன் - வீடியோ ஏதோ ஒரு இசையுடன் வருது....எனவே எனக்குத் தெளிவாகக் கேட்பது கொஞ்சம் கடினமாக இருந்தது ....அதாவது சில இடங்கள். ஏனென்றால் அவர் பேசும் அரங்கமே கொஞ்சம் எக்கொ ஆகுது....இதை எல்லாம் ஏன் இசையுடன் பதிவேற்றுகிறார்கள். என்னைப் போன்ற செவி கேட்கும் திறன் இல்லாதவர்களுக்குக் கடினமாக இருக்கிறது. பல பேச்சு வீடியோக்களை இசையுடன் பதிவேற்றுகிறார்கள். ம்ம்ம் என்ன சொல்ல?
லா ச ரா - ரொம்ப அர்த்தமுள்ள யோசிக்க வைக்கும் வரிகள்
மு மேத்தா அவர்களின் கவிதையை வாசித்ததும், ஆஹா இப்படி ஒரு அனுபவம் கிடைககதா கவிதை நூல்கள் மட்டுமல்ல கதைப் புத்தகங்களுடன்....அதுவும் அவர் கற்பனை ஒரு தீவு எப்படி இருக்கும்!!!?
/சென்ஸோடைன் நல்ல டூத்பேஸ்ட் என்கிறார்களே என்று கேட்டால், அதெல்லாம் போடவேண்டாம் என்பார்கள்.//
சென்ஸோடைன் பற்பசைதான் நானும் சுமார் பதினைந்து வருடங்களாக (ஒரு உறவினர் சொல்லி) மருத்துவர் யாரும் சொல்லாமலே பயன்படுத்தி வருகிறேன். நல்ல பயனாக இருந்தது. இப்போது சில வருடங்களாக பல் பிரச்சனை நிறைய..! என்ன சொல்ல..!
பற்களை வீட்டிலேயே நீரில் அலசும் கருவியினால் தொந்தரவும் வருகிறதா.? கடவுளே..! பல பிரச்சனைகளுடன் இந்தப் பல் பிரச்சனையும் சேர்ந்து விடுவதால் தினமும் நிம்மதியாக இருக்க இயலவில்லை.
இறுதியில் பகிர்ந்த பாடல் அருமையாக இருக்கும். அர்த்தமுள்ள வரிகளை கொண்டிருக்கும் இந்தப் பாடலை அடிக்கடி கேட்டு ரசிப்பேன். இதில் சிவாஜி அவர்களின் முகபாவங்களும் சிறப்பானதாக இருக்கும். இவரை டிட்டோ செய்பவர்கள் பல பேர். ஆனால், இவருக்கு நிகர் இவரே. பகிர்வுக்கு மிக்க நன்றி.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குவாங்க வெங்கட். நல்லதே நடக்கட்டும். வணக்கம்.
நீக்குதொகுப்பு - சிறப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குபல் பிரச்சனைகள் - அது பெரும் தொல்லை! பல சமயங்களில் தொல்லை தந்து படுத்தும். ஒவ்வொரு பல் மருத்துவரும் வேறு வேறு விதமான பற்பசைகளையும், ஜெல் போன்றவற்றையும் பரிந்துரைக்கிறார்கள். எனக்கு கொடுத்த பற்பசை - Peedesan... பெயரே வித்தியாசமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை கடையில் வாங்கும்போது பீடை என்று திட்டுவதாக மனதில் தோன்றும். இதைத் தவிர Multident என்று ஒரு Gel - ஈறுகளில் மட்டும் இரவு படுக்கும் முன்னர் தடவிக் கொள்ள வேண்டும் என்று கொடுத்தார் - அதைத் தடவிக் கொண்ட பிறகு எதுவும் சாப்பிடக் கூடாது என்று கட்டளை! அதனை தடவிய பிறகு வாயெல்லாம் இழுப்பது போன்று ஒரு உணர்வு வரும் எனக்கு! என்னடா இது சல்யம் என்று தோன்றிவிடும் பல நாள்!
ஆக இதிலிருந்து தெரிவது அவரவர்கள் சிறந்த பற்பசை என்று ஆளுக்கு ஒன்றை சிபாரிசு செய்கிறார்கள்
நீக்கு@ஸ்ரீராம், உங்களுக்குக் கொடுத்திருக்கும் கம்டோன் பவுடர் எனக்கும் கொடுத்திருக்காங்க. பேஸ்ட் மட்டும் Senquel 40 என்னும் ஒரு பேஸ்ட். மற்றபடி வலப்பக்கம் முழுதும் கடைவாய்ப் பற்கள் இல்லாததால் அந்தப் பக்கம் மெல்லுவது கஷ்டம். இடப்பக்கம் ஒரே ஒரு பல் மட்டும் அவ்வப்போது தொந்திரவு கொடுக்கும். கம்டோன் பவுடரைப் பூசிக் கொண்டு ஊறிப் பின்னர் வாய் கொப்பளித்து விட்டுப் பல் தேய்த்துவிட்டுப் படுப்பேன். அநேகமாச் சரியாகும். சில சமயங்களில் பல் கூச்சம் இருக்கும். ஆனால் பையரும் சரி, மாட்டுப்பெண்ணும் சரி, பல் கூச்சம்னா புரிஞ்சுக்கறதே இல்லை. உடனே பல் மருத்துவரிடம் போகலாம், கிளம்பு என்பாங்க. இப்போக் கூட வலப்பக்கம் கடிக்க முடியலைனு வீட்டுக்கு வந்தவங்களோட பேசிண்டு இருந்தப்போப் பிள்ளை உடனே பல் மருத்துவரைப் பார்க்கலாம்னு கிளம்பிட்டார். இவங்களுக்குப் புரிய வைப்பதே கஷ்டமாக இருக்குனு நினைச்சுப்பேன்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.வளமுடன் வாழப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்கவல்லிமா வணக்கம் இணைந்து பிரார்த்திப்போம்
நீக்கு//நம் தளத்தில் நிச்சயம் இவை ரிபீட்டாக இருக்க வாய்ப்பில்லை!//
பதிலளிநீக்குவாய்ப்பு - இல்லை! ரிபீட்டாகி இருக்கிறது! இதே பதிவில்!
ரெயின் கோட்டிலிருந்து தண்ணீர் கொட்டி விட்டு வரவும் நகைச்சுவை, இன்றைக்கே இரண்டு முறை வந்திருக்கிறது. :)
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
நீக்குஹையோ ஹையோ நல்ல ஜோக். கடவுள் நம்ம தலைக்கனத்துக்கு தலையில் தட்டறார்
நீக்குஒன்று நீக்கப்பட்டது .
நீக்குநெல்லை என் வாயிலிருந்து வார்த்தைகளைப் பிடுங்கிட்டார். இஃகி,இஃகி,இஃகி.
நீக்குஅந்தக்கவிதை! படிச்சிருக்கேன். ஆனால் அந்தக் கவிஞ்சர் யாருனு தான் புரியலை. படத்தைப் பார்த்து அடையாளம் காண முடியலை. :( மன்னிக்கவுஜ்.
அப்பாவின் எழுதில் மேலே உள்ளவை படிச்ச மாதிரிக் கீழே உள்ளவை படிக்க முடியலை.
பல் மருத்துவ அனுபவங்கள் எனக்கும் 90 களில் இருந்து உண்டு.பின்னர் அம்பத்தூரில் ஒரு பெண் பல் மருத்துவர் பற்கள் எல்லாம் நல்ல நிலையில் ஸ்ட்ராங்காக இருப்பதாகவும், அவ்வப்போது சுத்தம் பண்ணிக் கொண்டு அவங்க கொடுக்கும் பேஸ்டினால் இருவேளை பல் தேய்த்துக் கொண்டு வந்தால் போதும். பற்களை எடுக்கவே வேண்டாம்னு சொன்னாங்க. அங்கே இருந்தவரை மாதம் ஒரு தரம் போயிடுவேன். பின்னர் திடீரென அவங்க துபாய் போகப்பின்னர் வேறே மருத்துவரைத் தேடினால் அவங்கல்லாம் இந்த முறை வைத்தியத்தை ஒத்துக்கலை. என்றாலும் நான் அவ்வப்போது பற்களைப் பாதுகாத்து வந்தேன். இப்போத் தான் 2, 3 வருஷங்களாகப் பிரச்னை.
மிகப் பிடித்த பாடலுக்கு நன்றி. மிக நேர்மையான நடிகர் ராதாவின் பேட்டி சுவை. பிரமாதம்.
பதிலளிநீக்குநன்றி வல்லிம்மா
நீக்குபல் வலி ஒன்றாயிருந்தாலும் பல் டாக்டர்கள் பலவிதம். பேஸ்ட் பெயர் புதிது. இங்கே மிக ஸ்டிராங்கான மருந்து கொடுத்து விடுவார்கள். மூன்று நாட்களுக்கு பூலோகமா வேற லோகமான்னு சந்தேகமா இருக்கும்:) அதனால் அவர்கள் சொல்லும் டோஸில் பாதிதான் எடுப்பேன்.
பதிலளிநீக்குபோதை மருந்து மாதிரி வலி மருந்து மயக்க மருந்து கொடுத்து விடுவார்கள் போல
நீக்குகார்ட்டூன் அனைத்தும் சிரி சிரி முவ்வா:) மிக நன்றி.
பதிலளிநீக்குஆஹா நன்றி நன்றி
நீக்குஎங்கள் கால எழுத்தாளர் மணியன். மிகவும் ரசித்த எழுத்துக்குச் சொந்தக்காரர்..
பதிலளிநீக்குநான் வாசித்த அவரது முதல் நாவல் காதலித்தால் போதுமா எனக்கு மிகவும் பிடித்த நாவல் கதாநாயகி பெயர் உமா
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குமணியன் எழுதிய முதல் தொடரே காதலித்தால் போதுமா? தொடர் தான். நான் பள்ளியில் எட்டவதோ, ஒன்பதாவதோ (இல்லைனு நினைக்கிறேன்.) படிக்கையில் வந்தது. வீட்டில் அப்போ விகடன் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போ ஆர்வமாப் படிச்சது. அதில் சுந்தரராஜன் என்னும் காரக்டர் ஒண்ணு வரும். அவர் உமாவைக் கல்யாணம் பண்ணிக்க முயற்சிக்கையில் ஆனந்தன் வந்து விடுவான். எனக்கெல்லாம் உமா ஆனந்தனையே கல்யாணம் பண்ணிண்டது அவ்வளவாப் பிடிக்கலை.
நீக்குதிரு. நெல்லைக்கண்ணன் மிகப் பிடித்த பேச்சாளர். அவரின் மகன் எழுத்தும் ரசிக்கும்படி இருக்கும்.
பதிலளிநீக்குஆமாம் எனக்கும் நெல்லை கண்ணன் பேச்சும் பிடிக்கும் அவர் மகன் சுகாவின் எழுத்தும் பிடிக்கும்
நீக்குஓ, அது நெல்லை கண்ணனா?
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா வணக்கம்
நீக்குபல் பிரச்சனை பெரிய பிரச்சனைதான் முடிவே இல்லாதது.
பதிலளிநீக்குஇருந்தாலும் கஷ்டம், எடுத்தாலும் கஷ்டம்.
நெல்லை கண்ணன் கண்ணதாசன் ரசிகர்
அப்பாவின் கவிதைகள் அம்மா மேல் அவர் வைத்த அன்பின் வெளிப்பாடு.
சும்மாவே பல் பிரச்சனை தொடர்கதை அது வயது ஏற ஏற இன்னும் பிரச்சனை செய்கிறது
நீக்குபுத்ர'வில், லா. ச. ராமாமிருதம் கவிதை, மூமேத்தா கவிதை எல்லாம் நன்றாக இருக்கிறது.நகைச்சுவைகள், மற்றும் பாடல் பகிர்வு அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா
நீக்குOho! Metha?
நீக்கு//'சிப்பிக்குள் முத்து' படத்தில் பாடல் காட்சிகளில் கமல் நடித்தார் என்று எனக்குத் தோன்றியது.//
பதிலளிநீக்குஇருக்கலாம் தலை ஆட்டல் உடல் மொழி எல்லாம் நீங்கள் சொல்வது போலதான் இருக்கிறது.
ஆமாம் இதை விட அந்த மற்றொரு பாடலான உள்ளதைச் சொல்வேன் பாடலில் இன்னும் நன்றாக தெரியும்
நீக்கு"//ரெண்டும் ஒண்ணுதான்; என் ஹிஸ்ட்ரி கலை உலக ஹிஸ்ட்ரி; கலை உலக ஹிஸ்ட்ரி என் ஹிஸ்ட்ரி!"//
பதிலளிநீக்குநல்ல பதில், நன்றாக சொன்னார்.
அதுதான் எம் ஆர் ராதா
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வா அண்ணா வணக்கம்
நீக்குநலமே விளைக
பதிலளிநீக்குநாடுவதும் அதுவே
நீக்குஉள்ளதைச் சொல்வேன் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பு வித்தியாசமாக இருக்கும்..
பதிலளிநீக்குஆமாம் ஒரு அப்பாவி ஜீவனின் நடிப்பு
நீக்கு/// குறிப்பாக டாக்டர் ரத்திகாவும், சாந்தினியும் - அவர்கள் வீட்டு சுவரில் வெள்ளையடிக்கச் சொல்லி நான் செய்யவில்லை என்பது போல முகம் காட்டுவார்கள். ///
பதிலளிநீக்குஆகா!..
ஆஹா ஆஹா
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா வணக்கம் இணைந்து பிரார்த்திப்போம்
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபல் பிரச்சனை... என்னவொரு ஒற்றுமை.!
/அது பல் பிரச்னையா ஈறும் சம்பந்தப்பட்ட பிரச்னையா அல்லது ஈறுகெட்ட எதிர்மறையா என்று சந்தேகம் இருந்தது. ஏனெனில் ஈறுதான் அதிகம் வலித்தது. வாழைப்பழம் கூட கடிக்க முடியாமல் வலித்தது.. /
ஹா ஹா ஹா. நல்ல நகைச்சுவையான எழுத்து. "துன்பம் வருங்கால் நகுக." என்பது போல், துன்பத்திலும் உங்களுக்கு நகைச்சுவை வருகிறது. இந்த நகைச்சுவை உணர்வு துன்பங்களை சற்று மறக்கச் செய்யும் என்பது என் அனுபவமும்.
ஈறுகெட்டதில்தான் இந்த எதிர்மறையே உருவாகிறது என மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால், ஈறு கேட்காமலேயே நாம் அதற்கு பல வேலைகளைத் தருகிறோம்.வேலைகளின் பளுவில் அது கெடாமல் என்ன செய்யும்.? இன்னமும் பாக்கியை படித்து விட்டு வருகிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீங்களும் சரிசமமாக நன்றாகவே சொல்லி இருக்கிறீர்கள் நன்றி கமலா அக்கா
நீக்கு/Floss போடுவது என்பது இயல்பான நேரான பற்களாக இருந்தால் பரவாயில்லை. நவகிரகம் போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டிருப்பதில் Floss போடுவது கடினமாக இருந்தது. /
பதிலளிநீக்குபீரியாடிக் க்ளீனிங் என்று போகும்போதெல்லாம் "ஏன் டெய்லி Floss பண்ணுவதில்லை" என்ற கம்ப்ளைண்ட் கேட்டுக் கேட்டு அலுத்துப்போய், "நீங்கள்தான் ஒரு முறை பண்ணிக் காமிங்களேன்" என்று சவால் விட்டேன். ஐந்து நிமிடங்களில் சரண்டர் ஆகிவிட்டார் அந்த ஹைஜீனிஸ்ட். நமக்குத்தான் நவக்ரஹம் மாதிரி நாலா பக்கமும் பற்கள் இளித்துக்கொண்டு இருக்கிறதே! என் அற்ப சந்தோஷம் நீடிக்கவில்லை. பெரிய டாக்டர் "ஆர்த்தோடாண்டிக் ட்ரீட்மெண்ட் பண்ணினால் நல்லது" என்று ஒரு பெரிய தொகைக்கான ப்ரொபோஸலுடன் வந்து விட்டார். பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல் தினமும் water floss செய்யுங்கள் ஸ்ரீராம். நல்ல ரிஸல்ட் கிடைக்கும்.
அவ்வப்போது போடுகிறேன் தான் தொடர்ந்து போட வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன் பிறகு அப்படியே போய்விடும் நன்றி சூர்யா
நீக்குFloss போடுவது என்பது இயல்பான நேரான பற்களாக இருந்தால் பரவாயில்லை. நவகிரகம் போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டிருப்பதில் Floss போடுவது கடினமாக இருந்தது.//
பதிலளிநீக்குஹாஹாஹாஹா...நானும் செய்யறேன். சைட் பல்லுங்களை எப்படிச் செய்யறதுன்னு கஷ்டமா இருக்கும்ம்...
கீதா
பொதுவாகவே இரவு படுக்கும் முன் லைட் சூடு தண்ணில கொப்பளித்தல் அப்புறம் பல்லு தேய்த்துவிட்டுத்தான் படுப்பது வழக்கமாகி...
பதிலளிநீக்குகீதா
சென்ஸோடைன் நல்ல டூத்பேஸ்ட் என்கிறார்களே என்று கேட்டால், அதெல்லாம் போடவேண்டாம் என்பார்கள்.//
பதிலளிநீக்குநம்மவருக்கு மருத்துவர் இந்த பேஸ்ட் தான் பயன்படுத்தச் சொல்லி சென்னை டாக்டர் தான்...
கீதா
என்ன செய்ய.. என் டிசைன் அப்படி!//
பதிலளிநீக்குஹாஹாஹா பெரும்பான்மையோர் டிசைன்னு சொல்லலாம்!!
கீதா
பசுமாடு, தென்னை மரம்//
பதிலளிநீக்குசம்பந்தமில்லையஆ?!!!!! புரியலையே தென்னை மரத்துல பசுமாட்டைக் கட்டி வைச்சிட்டு என்று சொல்லலாமே!
கீதா
அப்பாவின் கவிதைகள் நன்றாக உள்ளன. உங்களுடயதைக் காட்டிலும். நல்ல புலமையும் இருக்கிறது.
பதிலளிநீக்குஓரம் போக சொல்லும் ஜோக் ஜோக் அல்ல. தற்போது ரோடின் நடுவில் தான் பெரிய பெரிய பள்ளங்கள் மழைக்காலத்தில் உண்டாகின்றன.
அந்த எட்டாவது வார்டில் உலா 10ஆம் பெட் பேசன்ட் நீங்க தானே?
ரொம்ப அழகா இருக்கார்!
Jayakumar
நெல்லை கண்ணன் - வீடியோ ஏதோ ஒரு இசையுடன் வருது....எனவே எனக்குத் தெளிவாகக் கேட்பது கொஞ்சம் கடினமாக இருந்தது ....அதாவது சில இடங்கள். ஏனென்றால் அவர் பேசும் அரங்கமே கொஞ்சம் எக்கொ ஆகுது....இதை எல்லாம் ஏன் இசையுடன் பதிவேற்றுகிறார்கள். என்னைப் போன்ற செவி கேட்கும் திறன் இல்லாதவர்களுக்குக் கடினமாக இருக்கிறது. பல பேச்சு வீடியோக்களை இசையுடன் பதிவேற்றுகிறார்கள். ம்ம்ம் என்ன சொல்ல?
பதிலளிநீக்குகீதா
கோகிலா என்ன செய்து விட்டாள்// ஜெயகாந்தன் எழுதிய கதை இல்லையோ? நாவல். அந்தக் கதை இப்படியான செய்தி போலதானோ?
பதிலளிநீக்குசெய்தி நல்ல செய்தி. கணவனின் செயல் பாருங்க மீண்டும் சேர்ந்திருக்க உதவியாக இருந்திருக்கு.
கீதா
மணியன் பழைய பாணி அறிய முதலில் அவருடைய கதைகளைப் படித்தால்தான் புரிந்து கொள்ள முடியும். இதயச்சுரங்கம் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குகீதா
லா ச ரா - ரொம்ப அர்த்தமுள்ள யோசிக்க வைக்கும் வரிகள்
பதிலளிநீக்குமு மேத்தா அவர்களின் கவிதையை வாசித்ததும், ஆஹா இப்படி ஒரு அனுபவம் கிடைககதா கவிதை நூல்கள் மட்டுமல்ல கதைப் புத்தகங்களுடன்....அதுவும் அவர் கற்பனை ஒரு தீவு எப்படி இருக்கும்!!!?
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்கு/சென்ஸோடைன் நல்ல டூத்பேஸ்ட் என்கிறார்களே என்று கேட்டால், அதெல்லாம் போடவேண்டாம் என்பார்கள்.//
சென்ஸோடைன் பற்பசைதான் நானும் சுமார் பதினைந்து வருடங்களாக (ஒரு உறவினர் சொல்லி) மருத்துவர் யாரும் சொல்லாமலே பயன்படுத்தி வருகிறேன். நல்ல பயனாக இருந்தது. இப்போது சில வருடங்களாக பல் பிரச்சனை நிறைய..! என்ன சொல்ல..!
பற்களை வீட்டிலேயே நீரில் அலசும் கருவியினால் தொந்தரவும் வருகிறதா.? கடவுளே..! பல பிரச்சனைகளுடன் இந்தப் பல் பிரச்சனையும் சேர்ந்து விடுவதால் தினமும் நிம்மதியாக இருக்க இயலவில்லை.
இறுதியில் பகிர்ந்த பாடல் அருமையாக இருக்கும். அர்த்தமுள்ள வரிகளை கொண்டிருக்கும் இந்தப் பாடலை அடிக்கடி கேட்டு ரசிப்பேன். இதில் சிவாஜி அவர்களின் முகபாவங்களும் சிறப்பானதாக இருக்கும். இவரை டிட்டோ செய்பவர்கள் பல பேர். ஆனால், இவருக்கு நிகர் இவரே. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹை தொடர்ச்சி இருக்கா எம் ஆர் ராதாவை விந்தன் அவர்களெ டுத்த பேட்டி..
பதிலளிநீக்குசுவாரசியமான பேட்டி. வித்தியாசமான பதில்கள் ல சிலதெல்லாம். அந்த வித்தியாசமான பதில்கள் பிடித்தது..
கீதா
நம் தளத்தில் நிச்சயம் இவை ரிபீட்டாக இருக்க வாய்ப்பில்லை!//
பதிலளிநீக்குஇதுக்கே சிரித்துவிட்டேன்!!! ரெயின் கோட் இங்கேயே ரிப்பீட்டட்!!!! மழை இன்னும் விடலை போல!! ஹாஹாஹா...
மழிய ஜோக்ஸ் ரெண்டும் புன்சிரிப்பு!
நேர்மையானவரோ?!! என்னைய ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாளே!!
குடைய போட்டாக்கி - வித்தியசமா நல்லாருக்குல்ல...ஐடியா
வீட்டையே சினிமா கொட்டகை ஆக்கிட்டாங்க!
டெலிஃபோன் மணியே பூஜை மணி...
கீதா
ரொம்ப அருமையான பாடல்...ஸ்ரீராம். இந்தப் பாட்டில் வரும் ஒரு குழந்தை அதிகமுடியுடன் இருக்கும் குழந்தை நம்ம நயன் சிவன் பிள்ளை போல இருக்கு!!!!!
பதிலளிநீக்குகீதா