பாயா, கோலா உருண்டை, என்று அசைவத்தில் கண்ணில் படும் பெயர்கள் எல்லாம் சைவ ஹோட்டல்களில் கண்ணில் பட ஆரம்பித்திருக்கின்றன என்பதை முன்னரே பார்த்தோம். குறிப்பாக VB World ல்.
இரண்டு நாட்களுக்கு முன் அட்சயம் ஹோட்டலுக்கு சென்றோம். அங்கேயும் பாயாவும், குருமாவும், பட்டன் பரோட்டாவும் மெனுகார்டில் கண்ணில் பட்டன. அதோடு புதுசாக 'மினி இட்லி வித் வெஜ் மீன் குழம்பு' என்று ஒன்று இருந்தது!
அதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தோம். எங்கள் டிரைவர் ஸ்ரீலங்கா கொத்து பரோட்டா ஆர்டர் செய்து ஆவலுடன் காத்திருந்தார்.
என் கண்ணுக்கு அவல் உப்புமா போலவும், என் மகன் கண்ணுக்கு முட்டைகோஸ் ரைஸ் போலவும் இருந்த ஒரு வஸ்துவை அவருக்குக் கொண்டு வந்து வைத்தார்கள்.
நான் மேலே சொன்ன வெஜ் மீன் குழம்பு இட்லி சொல்லி விட்டு விரல்களைக் கோர்த்துக் காத்திருந்தேன்.
வாழைக்காய் போட்டு குழம்பு வைத்திருப்பார்கள் என்றேன். என்றான் மகன். மீனை கடல் வாழைக்காய் என்பார்களே..
நான் மகனிடம் சொன்னேன் "வீட்டில் நான் வெங்காயம் பூண்டு காரக் குழம்பு செய்வேனே.. அதுபோல ஒரு குழம்பில் இட்லி போட்டுக் கொண்டு வருவர்களாயிருக்கும். அதில் எந்த வடிவத்தில் வாழைக்காய் இருக்குமோ?" என்றேன்.
"ஸார் மீன் குழம்பு சாப்பிட்டிருக்கார் போல" என்றார் டிரைவர். இவர் வேற டிரைவர். நம் வழக்கமானவர் இல்லை.
"இல்லை மோகன்.. நான் இந்தக் குழம்பு நல்லா செய்வேன்னு எங்க வீட்ல அடிக்கடி சொன்னதால எங்க ஆபீஸ்ல என்னை செய்து கொண்டு வரச் சொல்லி சுவைத்துப் பார்த்தார்கள். அப்போது அவர்கள் சொன்னது 'மீன் குழம்பு மாதிரி இருக்கு'. நான் அப்போதுதான் மீன் குழம்பு அப்படிதான் இருக்கும் என்று தெரிந்து கொண்டேன்" என்றேன்.
ஒருவழியாய் கொண்டு வந்து வைத்தார்கள். புளிப்....ப்பான குழம்பில் சில மினி இட்லிகளை போட்டுக் கொண்டு வந்திருந்தார்கள். வாயில் வைக்க முடியாத அளவு புளிப்பு. இவ்வளவு புளிப்பாக நான் குழம்பு செய்ய மாட்டேன். அதில் வாழைக்காய் இல்லை. ஆனால் அவர்கள் போட்டிருந்தது வாழைப்பூ... என்ன காம்பினேஷனோ..
சென்னையில் கீதம் ஹோட்டலுக்கு சங்கீதா ஹோட்டலுக்கு ஒரு போட்டி நடந்து வருகிறது. யார் நிறைய கிளைகள் திறக்கிறார்கள் என்று போட்டி போல.. கிடைக்கும் சந்தில் எல்லாம் மாறி மாறி ஹோட்டல் திறக்கிறார்கள்.
கீதம் ஹோட்டல் நயினார் நாகேந்தினுடையது என்று சொன்னார்கள். அது எனக்குத் தெரியாது. ஆனால் அதன் புதிய நிறம் அப்படிதான் இருக்கிறது! ஒருவேளை நிறத்தை வைத்துதான் அப்படி கதை அடிக்கிறார்களோ என்னவோ.. கீதம் சற்று முன்னணியில் இருந்தது, சுவையிலும் ஆம்பியன்சிலும்.
இப்போது சமீபத்தில் போரூரில் திறக்கப்பட்ட ஒரு சங்கீதா அழகான ஆம்பியன்சில் புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதை அந்த மனேஜரிடமே கேட்டு அறிந்தேன். நித்ய அமிர்தம் ஹோட்டலில் கொடுத்த பென்னே தோசையைவிட சங்கீதாவில் தந்த பென்னே தோசை நன்றாக இருந்தது. ஒரு ஸ்டார்ட்டர், வறுத்த மீன் உருவில் ஒன்று கொடுத்தார்கள். சோயாவில் செய்ததாம்.
கண்டா வரச்சொல்லுங்க...
ஏனோ வருவதில்லை
என் நண்பர்
இப்போதெல்லாம்
என் வீடுதேடி.
அனுதினமுக் வருவார்
கதைகள் நூறு பேசுவார்
அளவளாவுவோம்
கவிதை சில எழுதத் தொடங்கி
அவரிடமும் அதைப் பகிரத்
தொடங்கிய சில நாட்களில்
காணாமல் போனார்.
என் ஒரே ரசிகர் அவர்
பார்த்தால் வரச் சொல்லுங்கள்.
என் நண்பர்
இப்போதெல்லாம்
என் வீடுதேடி.
அனுதினமுக் வருவார்
கதைகள் நூறு பேசுவார்
அளவளாவுவோம்
கவிதை சில எழுதத் தொடங்கி
அவரிடமும் அதைப் பகிரத்
தொடங்கிய சில நாட்களில்
காணாமல் போனார்.
என் ஒரே ரசிகர் அவர்
பார்த்தால் வரச் சொல்லுங்கள்.
போனை எடுக்க மாட்டேனென்கிறார்
கவிதை இனி சொல்ல மாட்டேன்
என்பதையும் அவரிடம்
கட்டாயம் சொல்லுங்கள்
தெருவில் நடக்கும்போது
எதிரில் வந்தால் கூட
பளிச்சென்று பக்கத்து சந்தில்
மறைந்து விடுகிறார்.

கவிதை இனி சொல்ல மாட்டேன்
என்பதையும் அவரிடம்
கட்டாயம் சொல்லுங்கள்
தெருவில் நடக்கும்போது
எதிரில் வந்தால் கூட
பளிச்சென்று பக்கத்து சந்தில்
மறைந்து விடுகிறார்.
==========================================================================================
தினமலர் வாரமலர் நான் சுவாசிக்கும் சிவாஜியிலிருந்து....:
பாசமலர் மற்றும் புதியபறவை படங்களில், ஏதோ, 'ட்ரினிட்டி காலேஜ் ஆப் மியூசி'க்கில் படித்து, டிப்ளமோ வாங்கியவர் போல, நேர்த்தியாக பியானோ வாசித்திருப்பார் சிவாஜி.
தில்லானா மோகனம்மாள் படத்தில், சிக்கல் சண்முகசுந்தரம் பாத்திரத்தில், சிவாஜி நாதஸ்வரம் வாசித்த அழகை மறக்க முடியாது. ஆனால், அதற்கு பின், எத்தகைய உழைப்பு இருந்துள்ளது என்பதை, அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
'ராமா, பேட்டி எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம். முதலில், ஒரு கச்சேரி கேட்போம், வா...' என்று, தன் வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கே, சிறுமேடையில், மதுரை என்.பி.என். சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள், நாதஸ்வரம் இசைக்க தயாராக இருந்தனர். அவர்களிடம், 'என் வீட்டில் வாசிக்கிறதாலே அடக்கம், ஒடுக்கமாக வாசிக்கணும்கிற அவசியம் இல்லை, நீங்க தான், இப்போ சிக்கல் சண்முக சுந்தரம் குழுவினர். அதனால், நாதஸ்வரத்தை உறையிலேயிருந்து எடுக்கிறதிலேயிருந்து, சிவாலியை ஊதிப் பார்க்கிறது, ஒருத் தருக்கு ஒருத்தர், 'ரியாக்ட்' செய்யறது எல்லாம், ஒரு பெரிய கச்சேரியில எப்படி செய்வீங்களோ, அதை, நான் பார்க்கணும்...' என்றார் சிவாஜி.
இரண்டு மணி நேரம், அவர்கள் வாசித்ததை, கண் கொட்டாமல் கவனித்திருக்கிறார் சிவாஜி. கச்சேரி முடிந்ததும், அவர்களை சாப்பிடச் சொல்லி, சன்மானம் கொடுத்து, அனுப்பி வைத்தார். பின், இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம், 'நாதஸ்வர கச்சேரி காட்சிக்கு நான் தயார்...' என்று சொன்னாராம்.
இதை, நேரில் பார்த்த ராமன், இன்றும், இது குறித்து பேசும் போது, ஒரு வியப்பு கலந்த மரியாதையோடு தான் பேசுவார்.
இந்தப் படத்தில், 'நலம் தானா...' பாடல் காட்சியைப் பற்றி, சிவாஜி என்னிடம் பேசிய போது, 'நடிப்புக்கு கண் ரொம்ப முக்கியம்டா... இக்காட்சியில், பத்மினி, தன்னுடைய அபிநயம், அங்க அசைவுகள் மூலம் வெளிப்படுத்திவிட முடியும். ஆனால், என் நிலைமையை பார்... கையில், நாதஸ்வரம். அதை வாசிக்கும் போது, பாதி முகம் மறைந்து விடும். அதனால தான், ரியாக்ஷன் பூராவும், கண்களிலே கொடுத்தேன்...' என்றார்.
'நலம் தானா...' என்று பத்மினி கேட்கும் போது, இவர் கண்ணை சிமிட்டுவதும், 'புண்பட்டதால் உன் மேனியில்...' என்ற வரிகளுக்கு, சிவாஜியின் கண்கள் சிவந்து, நீர் கொட்டும் காட்சியை மறக்க முடியுமா?
2013 என்னுடைய பேஸ்புக்
======================================================================================
விசு எழுதி முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் 1980 ல் வெளியான படம் 'அவன் அவள் அது' சிவசங்கரி எழுதிய ஒரு சிங்கம் முயலாகிறது கதையைத்தழுவி வாடகைத் தாய் பிரச்னையை கையாண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சிவகுமார், லட்சுமி, ஸ்ரீப்ரியா நடித்திருந்தனர். இந்தப் படத்திலிருந்து இன்று ஒரு இனிமையான பாடல். S P . பாலசுப்ரமணியம் - வாணி ஜெயராம் குரலில் கண்ணதாசன் பாடல். M S விஸ்வநாதன் இசை.
பாடலில் வரும் "ஏதோ உண்மை சொன்னேன் கோபம் வந்தததோ" என்று வாணிஜெயராம் பாட, "கொஞ்சம் மாற்றிச் சொன்னேன் சொல்லக்கூடாதோ?" என்று பாடுவது அழகு. அதாவது எல்லாம் பெண்ணாலே என்று முன்னோர் சொன்னார்கள். அந்த பெண்மை என்றும் மேன்மை அல்லவோ" என்று லட்சுமி பாடுவது போலவும், 'பேதை என்றாலும் மங்கை மேதை என்றாலும் அந்த பெண்மை என்றும் உண்மை அல்லவோ?" என்று சிவகுமார் பதில் சொல்வது போலவும் வந்த பிறகு அந்த சமாதானம்!
=====================================================================================
கொஞ்சம் பழைய கலெக்ஷனிலிருந்து...
சமீபத்தில் இண்டியாக்ளிட்ஸ்க்கு அளித்த நேர்காணலில், தனது சோகமான வாழ்க்கைக் கதையைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார். அவரது மனைவிக்கு காது கேட்காது மற்றும் பேச முடியாது. எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது, ரயில் வருவதை கேட்க முடியாமல் ரயில் மோதி இறந்து போனார். அப்போது அவர் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். பிரேதப் பரிசோதனையின்போதுதான் இந்த சோகமான உண்மை தெரிய வந்தது. இந்தக் காரணத்தாலேயே அவருக்கு பெண் குழந்தைகள் மீது அதிகப் பாசம் உருவானது. இந்தக் சோகமான நிகழ்வு அவரது மனதில் ஒரு அழியாத வடுவை ஏற்படுத்தியது.
அவர் தனது மனைவி இறந்த பிறகு, அவளது நினைவில் தினமும் இரவில் தூங்காமல் கஷ்டப்படுவதாகக் கூறினார். இருப்பினும், அவர் தனது மனைவியுடனான வாழ்க்கையை அன்புடன் நினைவு கூர்ந்தார், மேலும் சண்டைகள் இருந்தாலும் அவர்கள் அவற்றைத் தீர்க்க ஒரு வழியைக் கண்டதாக கூறினார். அவர் தனது மனைவியை அலங்கரித்ததையும், அவளுக்காக நகைகளைத் தேர்ந்தெடுத்ததையும் நினைவுகூர்ந்தார்.
மோகன் வைத்யா தனது மனைவிக்கு சமையல் கற்றுக்கொடுத்தது பற்றியும், ஒரு முறை அவரது மனைவி தவறுதலாக தண்ணீர் போன்ற சட்னியை தயாரித்தபோது, அதை அவர்கள் தோசையாக மாற்றி ஒன்றாக சாப்பிட்டது பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
அவரது மகன், தாயைப் போலவே காது கேட்காத மற்றும் பேச முடியாதவர். தனது மகன், தனது தாயைப் போலவே ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்ததையும், பின்னர் காது கேட்காத மற்றும் பேச முடியாத ஒரு பெண்ணை மணந்ததையும் கூறினார்.
இந்த நேர்காணல், மோகன் வைத்தியாவின் வாழ்க்கையில் இருந்த வலிகளையும், இழப்புகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதே சமயம், தனது சோகமான வாழ்க்கையையும், மனைவியின் நினைவுகளையும் தாண்டி, அவர் ஒரு கலைஞராக தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறுகிறார்.
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்
==============================================================================
மழலைப்பட்டாளம். அதே 1980 ல் அதே விசுவின் எழுத்தில் வந்த படம். கே பாலச்சந்தர் மேற்பார்வையில் லஷ்மி முதன்முதலாக இயக்கிய படம்.
நான் முன்பு எங்கோ படித்த ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.
உன்னுடைய குழந்தைகளும்
என்னுடைய குழந்தைகளும்
நம்முடைய குழந்தைகளுடன்
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!
1968 ல் ல் வெளியான Yours, Mine and Ours என்கிற ஆங்கிலப்படத்தைத் தழுவி தமிழி எழுதிக் கொடு என்று KB விசுவைக் கேட்க, விசு தைரியமாக தான் பார்த்துக் கொண்டிருந்த டிராவல் ஏஜென்ஸி வேலையை விட்டு விட்டு வந்து எழுதிக் கொடுத்ததுடன், அப்புறம் KB யுடன் சேர்ந்து பணிபுரிய ஆரம்பித்தாராம்.
இந்தப் படத்திலிருந்து அதே S P பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடிய இனிமையான பாடல்.. "கௌரிமனோஹரியைக் கண்டேன்.."
அதே கண்ணதாசன் பாடலுக்கு அதே M S விஸ்வநாதன்.
"மலைமீது அடித்தாலும் காற்று.. அது கடல் மீது தவழ்ந்தாலும் காற்று" சரணம் எனக்குப் பிடித்த வரிகள்.
==========================================================================================
துப்பறியும் சாம்பு எப்படி இருப்பார் என்று தேவன் வர்ணனை!
"நாற்பதாவது வயதில் எவனொருவன் முட்டாளாக இருக்கிறானோ அவன் ஆயுள் முழுதும் முட்டாளாகவே இருப்பான்" என்று யாரோ-முட்டாள் தனமாக அல்ல-சொல்லி வைத்தார். சாம்புவுக்கு நாற்பது வயது சரியாக ஆகியிருந்தது. அவனை எல்லாரும் பார்த்த மாத்திரத்தில் முட்டாள் என்று சொன்னார்கள். வழக்கமாக அவன் ஆபீஸ் மானேஜர் மகர பூஷண ராவ் சாம்புவைக் கூப்பிடுவதென்றால், "அந்த முட்டாளை வரச் சொல்" என்றுதான் ஆபீஸ் பையனிடம் சொல்லுவார். ஆபீஸ் பையன் மறு பேச்சுப் பேசாமல் சாம்புவிடம் வந்து நிற்பான்.
விளாம்பழம் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நினைத்துக் கொள்ளுங்கள்; அது தான் சாம்புவின் தலை. கன்றுக் குட்டிகள் அழகாகக் காதுகளை முன்புறம் வளைத்துக் கொண்டு பார்க்கும் அல்லவா? அந்த மாதிரிக் காதுகள் - குடலைபோல் - ஜாடிக் காதுகள் போல், துருத்திக் கொண்டிருக்கும். கண்கள் ஒரு மாதிரியாக அரைத் தூக்கத்தைத் தேக்கிக் கொண்டிருக்கும். இந்த லக்ஷணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை, ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதோ சாம்பு பிரத்தியக்ஷமாகிவிட்டான்.
ஸ்ரீ திரிபுராந்தகா பாங்கியில் கணக்கு வைத்துக் கொண்டிருந்தவர்கள் சாம்புவைக் கவனிக்காமல் இருக்க முடியாது. பாங்கியின் 'கௌண்ட'ரில் அவர்கள் காத்திருக்கும்போது, உள்ளே ஒரு மூலையில் மேஜையில் பரபரப்பாக எழுதுவதும், சற்று நின்று யோசிப்பதும், மறுபடியும் எழுதுவதுமாகச் சாம்பு பதினேழு வருஷ காலம் வேலை பார்த்து விட்டான். இந்தப் பதினேழு வருஷத்தில் அவன் பாங்கியில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன. பாங்கி முதலாளி லக்ஷாதிகாரியாகிவிட்டார். எத்தனையோ குமாஸ்தாக்கள் வந்து எத்தனையோ குமாஸ்தாக்கள் போய் போய் விட்டார்கள். ஆனால் சாம்பு மட்டும்...
======================================================================================
காடுகளுக்கு சென்று திரும்பி வரும் போது நினைவுகள் தவிர எதையும் எடுத்து வரக்கூடாது. காட்டுயிர்களை ரசிக்கிறோம் என்பதைத் தாண்டி அவற்றை காக்க வேண்டிய பொறுப்பு மனிதனுக்கு அதிகம் இருக்கிறது,'' என்கிறார் காட்டுயிர் புகைப்படக்கலைஞர் சி.ஏ.ஏ.கிருஷ்ணமூர்த்தி. மதுரை திருமங்கலம் ராயபாளையம் கிராமத்தை சேர்ந்த இந்த பல்லுயிர் புகைப்படக் கலைஞர், படித்தது முதுகலைப் பொருளாதாரம்; ஆனால் காட்டில் கண்முன் பார்க்கும் காட்சிகளை புகைப்படங்களாக மாற்றுவதில் கை தேர்ந்தவர்; பனை விதை நடுதல், காடுகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்,
பசுமை ஆர்வலர் என இவருக்கு பல முகங்கள். காட்டுயிர்களை புகைப்படம் எடுக்கும் அனுபவங்கள் குறித்து இவரிடம் கேட்ட போது... கல்யாண வீட்டில் புகைப்படம் எடுப்பது எளிது; காடுகளில் படம் எடுப்பது படுகஷ்டம். காடுகளை கணிக்கவே முடியாது. நீங்கள் புகைப்படம் எடுக்கும் போது பின்பக்கமாய் பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருக்கும். நாம் தேடும் விலங்கை ஒருமுறை மிஸ் செய்து விட்டால், அடுத்த வாய்ப்பு கிடைக்க ஆண்டுக்கணக்கில் கூட ஆகும்.
பயணத்திற்கு முன் எத்தனை நாள் பயணம், உணவு, மழைக்கான வாய்ப்பு, அட்டைப்பூச்சிகள் இருக்குமா என ஆராய்ந்தே திட்டம் வகுக்க வேண்டும். காடுகளில் பயணம் செல்லும்போது தங்குவதற்கு அனுமதி, அங்குள்ள பறவை, விலங்கினங்கள் பற்றிய தகவல்கள் என முன்கூட்டியே தயாராக செல்ல வேண்டும். மதுரையில் புள்ளி மான்கள் புள்ளிமான்களை தேடி திருமங்கலம் கரிசல் காட்டிற்கு ஒருநாள் சென்றபோது, தனியாக புள்ளிமானை காண நேரிட்டது. உடனே கேமராவில் படம் பிடித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, எடுத்த 3 படமும் தெளிவில்லாமல் இருந்தது; அந்த வருத்தத்தில் அன்று சாப்பிடவே இல்லை. ஆனாலும் புள்ளிமான்களைத் தேடும் முயற்சியை தொடர்ந்தேன். கண்மாய்க்கரையில் மூச்சு கூட விடாமல் பதுங்கி புள்ளிமான் கூட்டத்தை படம் பிடித்தேன்.
அதை மதுரை இயற்கை பேரவையில் பகிர்ந்த போது, 'மதுரையில் புள்ளிமான்கள்' என நாளிதழ்களில் செய்தி வெளியாகின.
சலீம் அலியின் புத்தகத்தில் இந்தியா முழுக்க வெள்ளை வல்லுாறு உள்ளது என எழுதி இருக்கிறார்; ஆனாலும் தென் இந்தியாவில் 40 ஆண்டுகளாக வெள்ளை வல்லுாறு பதிவில் இல்லை. எங்கள் தன்னார்வலர்கள் குழுதான் முதன்முதலில் அரிட்டாபட்டி மலையில் வெள்ளை வல்லுாறு உள்ளதை வெளி உலகிற்கு படம்பிடித்து காட்டியது. பின்னர் பல்வேறு ஆய்வுக்குழுக்கள் அரிட்டாபட்டியில் நுாற்றுக்கணக்கான அரிய பறவை இனங்கள் உள்ளதை கண்டறிந்தன. ஸ்ரீவில்லிபுத்துா ர் காடுகளில் யானை சாணத்தின் அருகிலேயே உடைந்த பீர் பாட்டில் கிடந்தது; அதன் மீது மிதித்திருந்தால் யானைக்கு என்ன ஆகியிருக்கும் என மக்கள் உணருவதில்லை. ஸ்ரீவில்லிபுத்துாரில் பறவைகள் கணக்கெடுப்பிற்கு செல்லும் போது ௫0க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் ஆற்று ஓரங்களில் இறந்து கிடந்தன; எல்லைப்பகுதிகளில் நாட்டு மாடுகளில் இருந்து ஆந்த்ராக்ஸ் பரவியது தான் காரணம் என அறியும்போது அதிர்ச்சியாக இருந்தது. புலிக்கறி சாப்பிட்டால்... புலிக்கறி சாப்பிட்டால் ஆண்மை விருத்தி அடையும் என்ற தவறான கருத்து சீனாவில் நிலவுகிறது.
சலீம் அலியின் புத்தகத்தில் இந்தியா முழுக்க வெள்ளை வல்லுாறு உள்ளது என எழுதி இருக்கிறார்; ஆனாலும் தென் இந்தியாவில் 40 ஆண்டுகளாக வெள்ளை வல்லுாறு பதிவில் இல்லை. எங்கள் தன்னார்வலர்கள் குழுதான் முதன்முதலில் அரிட்டாபட்டி மலையில் வெள்ளை வல்லுாறு உள்ளதை வெளி உலகிற்கு படம்பிடித்து காட்டியது. பின்னர் பல்வேறு ஆய்வுக்குழுக்கள் அரிட்டாபட்டியில் நுாற்றுக்கணக்கான அரிய பறவை இனங்கள் உள்ளதை கண்டறிந்தன. ஸ்ரீவில்லிபுத்துா
உலகில் வேட்டையாடப்படும் அரிய வகை உயிரினங்களும் சீனாவிற்கு தான் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன. சீன மருத்துவத்தை தடை செய்தாலே உலகின் 50 சதவீத உயிர்கள் காப்பாற்றப்படும். மசினக்குடி காட்டில் வன விலங்கு கணக்கெடுப்பிற்காக சென்றபோது, ஐநுாற்றுக்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் எங்களை நோக்கி வந்தன; 'செந்நாய் கூட்டம் தான் துரத்தி வந்திருக்கும்' என அந்த பகுதியை சேர்ந்தவர் கூறினார். திரும்பி வரும்போது நாங்கள் வந்த பாதையில் புலித்தடம் உள்ளதை கண்டு அதிர்ந்தோம். புலி தான் துரத்தியிருக்கிறது. பின்னர் புகைப்படம் எடுத்து ஜி.பி.எஸ்., உதவியுடன் புலியின் இடத்தை குறித்து வைத்துக் கொண்டோம். சேலம் பகுதியில் காடுகள், 10 ஏக்கர் காடு பின்னர் எஸ்டேட்டுகள் என மாறி மாறி வரும்; பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் அங்கு விலங்குகள் கணக்கெடுப்பிற்கு சென்றோம். அங்கு சிறிய வகை பாம்பு இறந்து கிடந்தது. அதன் இடத்தை ஜி.பி.எஸ்., வைத்து குறித்துக் கொண்டு வழக்கம் போல புகைப்படம் எடுத்து வந்து விட்டோம். பின்னர் கிடைத்த தகவல் குழுவை திக்குமுக்காட வைத்துவிட்டது; உலகில் சேர்வராயன் மலையில் மட்டுமே வாழும் கவசவால் பாம்பு, கல்வராயன் மலையிலும் இருந்துள்ளது. இதை முதலில் வெளியுலகிற்கு சொன்ன குழுவில் நானும் ஒருவன் என்று நினைக்கும்போது பிரமிப்பாக உள்ளது என்றார்.
இவருடன் பேச 75986 74611
இவருடன் பேச 75986 74611
==========================================================================================
பொக்கிஷம் : ஓவியர்கள்
தந்தையும் மகனும் 5 ; 3














கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!