சிக்கன நடவடிக்கைகளில் வழி காட்டிச் செல்லும் தலைவர்கள், முன்னுதாரணமாக இருக்க வேண்டும் - அப்பொழுதுதான், "மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி" என்று மக்களும் அந்த வகையில் சிந்திக்க ஆரம்பிப்பார்கள்; செயல்படுவார்கள். (வாழ்க மு இ இ இ அ !)
எங்களுக்கும் கூட முதலில் ஆயிரம் சிக்கன நடவடிக்கை மனதில் தோன்றின. அப்புறம் தீவிர சிக்கன நடவடிக்கை என்றதுடன் ஐநூறாகக் குறைந்து, பிறகு அதி தீவிர சிக் ந வ என்றதும் இரு நூறாகக் குறைந்து - இப்படி ஒவ்வொரு நிமிடத்திற்கும் குறைந்து குறைந்து ------ கடைசியில் மிஞ்சியவை இவை:
வலைப் பதிவர்களுக்கான சிக்கன நடவடிக்கைகள் - எங்கள் பரிந்துரைகள்.
ஒன்று : இருப்பதிலேயே சிறிய எழுத்துக்களை உபயோகியுங்கள் - உங்கள் வலைப் பதிவைப் படிப்பவர்கள் யாரேனும் இருந்தால் - அவர்கள் படிக்காமல் போய்விடுவார்கள் - இதனால் அவர்கள் நேரம் மிச்சமாகும்.
இரண்டு : முடிந்தவரை - lighter shade fonts - உபயோகியுங்கள். - அதே நேர மிச்சம்.
மூன்று : contravention இல்லாத விஷயங்களை மட்டும் பதியுங்கள் - உதாரணம் : நெல்லுக்குள்ள அரிசி இருக்கு ! - இதனால் படிப்பவர்கள் கமெண்ட் கந்தசாமியாக மாறி - வச வச வென்று - எதையாவது எழுதி - அவர்களின் நேரத்தையும் - மட்டறுக்க உங்கள் நேரத்தையும் - வீணாக்கமாட்டார்கள்!
நான்கு : படங்கள் மட்டும் இருந்தால் - அதைப் பதியுங்கள் - one picture = 1000 words. இதனால் இடம், எழுத்துப் பிழைகள் - இலக்கணப் பிழை - திருத்தங்கள் - எவ்வளவு நேரம் மிச்சம் பார்த்தீர்களா! மேலும் மௌனம் = சர்வ அர்த்த சாதகம். ஆனால் செப்டம்பர் ஆறாம் தேதி பதிவிடப் பட்ட ஞாயிறு-8 போன்ற படங்கள் வேண்டாம் - அது என்ன என்று யோசிக்கும் வாசகர்களுக்கு - நேரம் அதிக விரயம் - முடியைப் பிய்த்துக் கொள்வா ...... அட - முடி வெட்டிக் கொள்ளும் செலவு குறையுமே -- ஒ கே ஒ கே!
ஐந்து : மௌன விரதம் போன்று - எழுதா விரதம் - வாரத்தில் ஒரு நாளாவது இருங்கள் - உங்கள் வாசகர்களை வாரம் ஒரு நாள் படிக்கா விரதம் இருக்கச் சொல்லுங்கள் (படிக்கச் சொல்லி நீங்க வற்புறுத்தினா மட்டும் - அவங்க உங்க வலை புகுந்து - படிச்சிடப் போறாங்களா என்ன!:-)
ஆறு: நீங்களும் உங்கள் வாசகர்களும் ESP, Claivoyance போன்ற வித்தைகளை - தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் (How to make ESP work for you - By Herald Sherman) - ஒவ்வொரு நாளும் - ஒவ்வொரு மணி நேரத்தில் - நீங்கள் பதிய நினைப்பதை - மனதுக்குள் - நினைத்துக் கொண்டே இருங்கள் - வாசகர்கள் எல்லோரும் நீங்க எழுத நினைப்பதை, எண்ண அலைகள் மூலமாகப் பெற்றுக் கொள்வார்கள் - internet charges உட்பட - எல்லாமே மிச்சமாகும்!
எங்கள் அடுத்த எண்ண அலைகள் அலைபரப்பு - இன்று மாலை நான்கு மணி தொடங்கி ஒவ்வொரு இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை !!