ஓய்வுபெறும் சம்பவ வரிசையில் இரண்டாவது சம்பவத்துக்கு வருகிறேன். எனக்கு அடுத்த நிலை அதிகாரி அவர். ஒரு வருடத்துக்கு முன் மாற்றலாகி வந்திருந்தார். துறை சார்ந்த அறிவு அதிகம் - முன்னர். இப்போதைய நிலையை அளவிட முடியாத நிலை.
கொஞ்சம் மனம் பிறழ்ந்த நிலையில் இருந்தார். சட்டென வெளியில் தெரியாது. ஆபத்து எதுவும் கிடையாது. பேசினால் நன்றாகப் பேசுவார். மனம் பிறழ்ந்தவர் என்றால் நாம் நினைப்பது போல தானாகப் பேசுவது, கோபப்படுவது வன்முறை.... இதுமாதிரி ரகம் இல்லை. சென்று பார்த்தால் அமைதியாக ஸீட்டில் அமர்ந்திருப்பார். நன்றாக ட்ரெஸ் பண்ணிக்கொண்டு வருவார். பேசாமல் எதிரே உள்ள சுவரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பார். எதிரே மேஜைமேல் பேனா, பேட் எல்லாம் தயாராக இருக்கும்.
அவர் மனைவி சொல்லிச் சென்றதால் உடன் பணியாற்றுபவர்கள் அவரைப் புரிந்து நடந்து கொண்டார்கள். அவர் ஓய்வுபெறும் நாள் நெருங்கி கொண்டிருந்ததால் எல்லோரும் அவரிடம் அனுசரணையுடன் / அனுதாபத்துடன் நடந்து கொண்டது ஒரு ஆச்சர்யம். எழுத்து வேலை போல ஏதாவது இருந்தால் அவரிடம் கொண்டுபோய்க் கொடுத்து இதை டிராஃப்ட் செய்து கொடுங்கள் என்று கேட்டால் பேனாவைப் பிரித்துக் கொண்டு பேடை எடுத்து முன்னே வைத்து வேலை செய்ய ஆரம்பித்து அற்புதமாக முடித்துக் கொடுப்பார். அவ்வளவுதான். அவராக எதுவும் எடுத்துச் செய்ய மாட்டார். இந்த வேலை முடிந்ததும் அடுத்த வேலை வரும்வரை எதிரே உள்ள சுவர். அவராக எந்த வேலையும் செய்ய மாட்டார். சில சமயம் கையில் திறந்த நிலையில் பேனா, பார்வை எதிரே உள்ள சுவரில்!
நன்றாக வேலை செய்துகொண்டிருந்தபோது நடுவில் ஏதோ பெண் விஷயமாக அவர்மீது அவதூறு வந்தது என்று சொன்னார்கள். அவர்மேல் பொய்க்குற்றம் சொல்லி ஒரு பெண் பெரிய பிரச்னை செய்ததில் இப்படி ஆனதாக சொன்னார்கள்.
எது எப்படியோ, அலுவலகத்தில் அவர் ஒரு காட்சிப் பொருளானார். தினசரி அவர் இன்று எதுவும் வித்தியாசமாக நடந்து கொண்டாரா என்று ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்வது வழக்கம். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதும் நிஜம்.
அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று.. இல்லை... இல்லை.. அவர் உண்டு, அவர் ஸீட் உண்டு, எதிரே உள்ள சுவர் உண்டு என்றிருந்து விட்டுச் செல்வார். பேசினால் நன்றாகக் பேசுவார் என்றாலும் பெரும்பாலும் அவரிடம் யாரும் தனியாகச் சென்று பேசுவதில்லை. ஆனாலும் ஒன்றிரண்டுபேர் அப்படி பேச முயற்சித்திருக்கிறார்கள். சற்று நேரத்துக்குப் பின் அமைதியாகி விடுவாராம்.
உணவு இடைவேளையில் தனியாகச் சாப்பிடுவார். மற்றவர்கள் இரண்டு மூன்று பேர்களாக குழுவாகச் சாப்பிட்டாலும் இவர் தனியாகத்தான் சாப்பிடுவார். அவர்களும் அழைப்பதில்லை, இணைவதில்லை, இவரும் அவர்களுடன் சென்று அமர்வதில்லை. தன் கருப்பு நிறப் பையிலிருந்து டிபன் பாக்ஸை வெளியில் எடுத்து சமர்த்தாக சாப்பிட்டு விட்டு கழுவி வைத்து விடுவார்.
“நானே அவருக்கு சாப்பாடு கொடுத்து விட்டு விடுவேன். அப்படி இல்லாத நாட்களில் வெளியே சாப்பிடச் செல்கிறேன் என்று அவர் சொன்னால் அவரை வெளியே விடாதீர்கள். நீங்களே யாராவது ஏதாவது வாங்கி கொடுத்து விடுங்கள்” என்று சொல்லி இருந்தார் அவர் மனைவி.
திடீரென நாமே எதிர்பாராமல் நம்மிடம் வந்து நன்றாகப் பேசுவார். நலம் விசாரிப்பார். இரண்டு மூன்று வார்த்தைகள்தான். சட்டென திரும்பிச் சென்று விடுவார்.
எங்களை எல்லாம் பார்க்கும்போது அறிமுகப் புன்னகை ஒன்று அவர் முகத்தில் விரியும். வேறொன்றும் பேசமாட்டார்.
அவர் அலுவலகத்துக்கு வந்து போவது ஒரு தனி வழி. அவர் மனைவி ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் வந்து பஸ் ஏற்றி விடுவார். ஸ்டாப் வந்தததும் சமர்த்தாக இறங்கி சரியாக ஆபீஸ் வந்து விடுவார். முதல் ஒரு வாரமோ பதினைந்து நாட்களோ அவர் மனைவி ஆபீஸ் வரை வந்து விட்டுச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஆபீஸ் முடியும் நேரம் வந்து அழைத்துச் செல்வார். இப்படியே தொடர்ந்து கொண்டு விட தினமும் வருவாரா என்று எங்களுக்கெல்லாம் ஆச்சர்யம்.
கேட்டோம்.
“கொஞ்ச நாள்தான் ஸார்.. பழகிடுவார். அப்புறம் அவரே வருவார். அப்புறம் அப்பப்போ செக் செய்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். அவர் அலுவலகத்துக்கு வரவில்லை என்றால் இதோ என் நம்பர். இதற்கு தயவு செய்து போன் செய்து சொல்லுங்கள்” என்றார்.
எங்களுக்கு புதுமையாகவும் வேடிக்கையாகவும் இருந்தது.
ஒருநாள் -
=======================================================================================
விஜயகாந்துக்கு ஃபிலிம்ஃபேர் அவார்ட் வாங்கித்தந்த படம் சுந்தராஜன் இயக்கத்தில் 86 ல் வெளியான அம்மன் கோவில் கிழக்காலே படம். படத்தின் வெற்றிக்கு இளையராஜாவும் முக்கிய காரணம். இனிமையான பாடல்கள்.
ரஜினியை மனதில் வைத்து இந்தக் கதையை எழுதிய சுந்தராஜன் பூவிலங்கு படத்தின் வெற்றியால் கவரப்பட்டு முரளி ரேவதியை அணுகினாராம். அப்புறம் வைதேகி காத்திருந்தாள் பட வெற்றியைத் தொடர்ந்து விஜயகாந்தை ஒப்பந்தம் செய்தாராம்.
கே ஜே யேசுதாஸ் குரலில் உன் பார்வையில் ஓராயிரம் கவிதைகள் எழுதுவேன் பாடல் ஹமீர் கல்யாணி ராக அடிப்படையில் அமைந்தது என்கிறது விக்கி. கங்கை அமரன் பாடல்.
=========================================================================================
கண்ணுக்குள் செடி தினமணி செய்தி
மக்ஸிம் ஸ்லெப்சோவ்-விடம் இது பற்றி விசாரித்த போது, கோடைக்கால விடுமுறையைக் கழிக்க வனப்பகுதிக்குள் சுற்றுலா சென்றிருந்தபோது, ஒரு செடியின் கிளை அவரது கண்களில் குத்தியிருக்கிறது. அப்போதிருந்து கண்ணில் எரிச்சல், வலி இருந்துள்ளது. கண்ணுக்குள் பட்ட செடியின் ஒரு குச்சியை வெளியே எடுத்திருந்த போதும், யாருக்கும் தெரியாமல், அந்த குச்சியைப் பயன்படுத்தி கண்ணுக்குள் நுழைந்த ஒரு விதை, நிரந்தரமாக அங்கேயே பதுங்கிக் கொண்டது.
குச்சியை அகற்றிய பிறகும் கண்களில் வலி, எரிச்சல், கடும் தலைவலி ஏற்பட்டிருக்குகிறது. இதற்கும், அந்த குச்சிதான் காரணம் என்ற நினைத்திருக்கிறார். ஆனால், குச்சி பாவம், அதுதான் வெளியே வந்துவிட்டதே. பிறகு மருத்துவமனையை நாடி முறைப்படி சோதனை செய்திருக்கிறார்.
அப்போதுதான், கண்ணின் வெள்ளை திசுக்களை ஒட்டிப் பிடித்திருந்த விதையானது, ஏன் சும்மா இருக்க வேண்டும்? அப்படியே வளர்ந்து செடியாகிவிடலாமே, இடம் பாதுகாப்பானதாகவும் இருக்கிறதே, தேவைப்பட்டால் கண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்ததோ என்னவோ, வேர்களை ஊன்றி விதை முளைத்து இரண்டு இலையும் விட்டிருக்கிறது. பூ மலர்வதற்குள் நல்ல வேலை மக்ஸிம் கண்டுபிடித்து விட்டிருந்தார். இல்லையென்றால் கண்களில் பூ விழுந்துவிட்டது என்றுதான் சொல்லியிருப்பார்கள்.
அந்த விதையின் வேரானது கிட்டத்தட்ட 3 மி.மீ. ஆழத்துக்கு வேரூன்றி இருக்கிறது. ஒருவேளை, அவர் பரிசோதனை செய்யாமல் விட்டிருந்தால், வெள்ளை திசுவே செயலிழந்து பார்வை பறிபோனதுடன் சொல்ல முடியாத துயரங்கள் நேரிட்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தற்போது செடி வேருடன் பிடுங்கப்பட்டு விட்டது, மக்ஸிம் குணமடைந்து வருகிறார். கண்ணுக்குள் வளர்ந்த தலைவலி விட்டிருக்கிறது. ஒருவேளை மக்ஸிமிடம் அந்த செடியைக் கொடுத்து தனிப்பட்ட முறையில் தன் ரத்தம் என்று வளர்த்து ஆளாக்கிக் கொள்ள சொல்லியிருக்கலாம் மருத்துவர்கள்.
=============================================================================
குளிர்கால இருமலுக்கு பக்க விளைவில்லாத பாதுகாப்பாமே ஒரு மருந்துகள். தூக்கம் வராது.
=============================================================================
ஃபேஸ்புக்கில் படித்த ஒரு திரையுலக காதல் வரலாறு. =======================================================================================
ச்சும்மா கொஞ்ச, விளம்பரங்கள்... ரசிக்க... நினைவு நதியில் பின்னோக்கி நீந்த!

பெரியாருக்கு வேலூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்த மறு நாள். தனக்கு வீட் டில் சுட்ட தோசை சாப்பிட வேண்டும் போல் இருப்பதாகத் தன் ஆசையைத் தெரிவித்தார் பெரியார்.
"அதற்கென்ள, சாப் பிடுங்கள்." சொல்லிவிட்டுச் சென்ம் டாக்டர் பட்.

பின்னாலேயே டாக்டர் பட் வந்து, "என்ன, தோசை சாப்பிட்டீர்களா? எல்கள் மைசூர் பக்கத்துத் தோசை ஒரு மாதிரியாக இருக்கும்.என்றார்! ஆம். தோசை, டாக்டரின் வீட் டிலிருந்துதான் வத்திருந்தது!
- ஏ.சுந்தரம்
======================================================================================












கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!