மாலை நான்கு மணி சுமாருக்கு, போ வ காவலர் பொன்னுசாமி, எ சா - கா சோ அலுவலகத்திற்கு வந்தார்.
முகத்தில் பெரிய மீசை. வெற்றிலைக் காவி பற்கள். மீசையை விடப் பெரியதாக ஒரு அசட்டுச் சிரிப்பு. வாயிலே கொஞ்சம் சாராய நெடி. சரளமாக வாயில் திருநெல்வேலித் தமிழ். இவைகள்தான் பொன்னுசாமி.
"வாங்க பொன்னு வாங்க!"
"அம்மா வணக்கம். நீங்க போலீசா?"
"இல்லைங்கோ. நாங்க போலீசுக்கு எப்போதுமே எதிரிகள். எப்பவாவது நண்பர்கள்." என்றார் சோபனா வெப் காமைப் பார்த்து சிரித்தபடி. கம்பியூட்டர் மானிட்டரில் ரங்கன் - கொன்றுவிடுவேன் என்று சைகை காட்டினார். பொன்னுசாமி மானிட்டருக்குப் பின்புறம் அமர்ந்திருந்ததால், மானிட்டரில் என்ன தெரிகின்றது என்பதை அவர் அறிய வாய்ப்பு இல்லை.
போலீசிடம் அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்த விவரங்களை கிளிப்பிள்ளை மாதிரி திரும்பவும் ஒப்புவித்தார் பொன்னு.
"பொன்னு - நீங்க தின்னவேலியா?"
"ஆமாம் அம்மா. நீங்க?"
"எங்க பாட்டி தின்னவேலி பக்கத்துல பாளையப் பேட்டை."
"அட! நம்ம ஊரு பொண்ணா நீங்க? அதுதான் இவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க!"
"பொன்னு உங்க ரிட்டையர்மெண்ட் எப்போ?"
"இன்னும் ஒரு வருஷத்துல தாயீ!"
"ரிட்டையர் ஆகறதுக்குள்ள சி பி ஐ விசாரணை எல்லாம் பார்த்துவிடலாம் என்று நெனச்சுகிட்டு இருக்கீங்களா?"
"ஐயய்யோ என்னம்மா நீங்க - ஏன் அப்பிடி சொல்லுறீங்க?"
"ஆமாம் பொன்னு - நேற்று இரவு நடந்த விபத்து சாதாரணமான விபத்து இல்லை. குண்டு வெடித்திருக்கின்றது. விரைவில் சி பி ஐ லெவல் விசாரணை வரும். அப்போ நீங்க இப்போ சொன்ன டீக்கடை பெஞ்சு கதை எல்லாம் ஒன்றும் எடுபடாது."
நிஜமாகவே பயந்து போய்விட்டார், பொன்னுசாமி. "அம்மா நீங்க கேளுங்க நான் எனக்குத் தெரிந்த எல்லா உண்மையையும் சொல்லிவிடுகிறேன்."
"இறந்தவர் பெயர் என்ன?"
"தீனதயாள்"
"அவரை இதுக்கு முன்பு உங்களுக்குத் தெரியுமா?"
"தெரியாதம்மா"
"அவர் பெயர் எப்படி உங்களுக்குத் தெரியும்?"
"அவருடைய ஐ டி கார்டுல இருந்ததுங்கோ."
"அந்தக் கார் எவ்வளவு நாட்களாக அங்கே நின்றிருந்தது?"
"புதன் கிழமை மாலைதான் முதலில் பார்த்தேன்."
"கார் என்ன நிறம்? பதிவு எண் என்ன?"
"கார் கருப்பு நிறக் கார். மாருதி எஸ்டீம் வண்டி. பதிவு எண் (தன்னுடைய டயரியைப் பார்த்து) " XX NN X NNNN"
(கம்பியூட்டர் மானிட்டரில் ரங்கன் உதட்டைப் பிதுக்கி, வலது கை கட்டை விரலை தரைப் பக்கம் காட்டுகிறார். Not traceable.)
"பொன்னுசாமி - புதன் கிழமையிலிருந்து அந்தக் காரைப் பார்த்திருக்கின்றீர்கள்; நேற்று வெள்ளிக்கிழமை. அதுவரை ஏன் அந்தக் காரைப் பற்றி உங்கள் இலாக்காவில் புகார் எதுவும் கொடுக்கவில்லை? அதனுடைய பதிவு எண்ணை எதற்காக உங்கள் டயரியில் எழுதி வைத்தீர்கள்?"
"அதை நான் சொல்லுகிறேன் அம்மா - ஆனால் அது எனக்கும் இங்கு உள்ளவர்களுக்கும் மட்டும்தான் தெரியவேண்டும். வேறு யாருக்கும் - முக்கியமாக போலீசுக்கு தெரியக் கூடாது!"
"அப்படியா? சரி" என்று கூறியவாறு, வெப் காம் லென்சை தான் மென்று கொண்டிருந்த சூயிங் கம் கொண்டு அடைத்து, தன சிஸ்டத்தை மியூட் செய்தார் சோபனா.
தன கம்பியூட்டர் மானிட்டரில் பார்த்துக் கொண்டிருந்த ரங்கன், ஆங்கிலத்தில் ஒத்தை வார்த்தை ஒன்றை பல்லிடுக்கு வழியாகக் கூறினார்.
(தொடரும்)
சூயிங்கம் வச்சு கேமராவை அடைக்குறதா? அய்யே, எச்சில்.
பதிலளிநீக்குவிறுவிறு.
சோபனாவின் எச்சில் சூயிங்கத்தை சுவைக்க அந்த வெப் காமிரா என்ன தவம செய்ததோ!
பதிலளிநீக்குVery interesting....
பதிலளிநீக்குஹ்ம்ம்ம் தொடருங்கள் தொடருகள்
பதிலளிநீக்குஎன்ன தவம செய்தனை கேமிரா என்ன தவம் செய்தனை
வெப் காம் லென்சை தான் மென்று கொண்டிருந்த சூயிங் கம் கொண்டு அடைத்து, தன சிஸ்டத்தை மியூட் செய்தார் சோபனா. //
பதிலளிநீக்குnice..?/