திங்கள், 9 மே, 2011

வெயிலும் கெயிலும்


                   
சென்னையில் இரண்டு நாட்களாக 108 டிகிரி. வெயிலூர் வேலூரை விட அதிகம். மண்டை காய்ந்து போகும் அனல். உள்ளே இருந்தாலும் அனல். வெளியில் போனாலும் அனல். "கடற்கரைக் காற்றே வழியை விடு" என்று பாட முடியவில்லை. "கடற்கரைக் காற்றே வந்து விடு" என்று கெஞ்ச வேண்டிய நிலைமை. என்னதான் மின் விசிறியை சுற்ற விட்டாலும் வருவது அக்னி நட்சத்திர அனல்தான். மேலும் மின் விசிறி சுற்ற மின்சாரம் வேண்டுமே. பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை வரும், போகும்! என்ன இன்வெர்ட்டர் வைத்துக் கொண்டாலும் அந்த பாட்டரி சார்ஜ் ஆவதற்கு மின்சாரம் வேண்டாமோ. தொலைக் காட்சிச் செய்திகளில் சென்னை மக்கள் படும் அவதியைக் கேட்ட போது கொஞ்சம் கஷ்டம் குறைந்தது. "அப்பாடி...எல்லோருக்கும் அப்படிதான்..." மனித மனம்!

கங்குலி ஐ பி எல்லில் விளையாட வந்து விட்டார் என்று ஜனங்கள் சந்தோஷமாக இருந்தார்கள். ஆனால் கங்குலிக்கு விதி என்னும் நதி வேறு பக்கமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது! அவர் விளையாடும் காலங்களில் இவர், ராகுல் திராவிட் போன்றோரின் புகழ்கள் டெண்டுல்கர் என்ற புயலில் காணாமல் போயின. என்னதான் வெற்றிகரமான கேப்டன் என்று பெயர் எடுத்தாலும் அவரை ஒதுக்கி வைப்பதில் எல்லோரும் மும்முரமாய் இருந்தார்கள். இந்த ஏலத்தில் அவரையும் கெயிலையும் ஏலமே எடுக்காமல் சோதனைக்குள்ளாக்கினார்கள். இப்போது கங்குலிக்கு என்ன சோதனை என்கிறீர்களா? முதலில் ஏலத்தில் எடுக்காத கெயிலை அப்புறம் ஒரு அணியில் எடுத்தார்கள். (பெங்களுரு?) அவர் 'என்னையா எடுக்காமல் இருந்தீர்கள்' என்பது போல ஆடும் அசுர ஆட்டம் எதிரணியினரை மிரள வைத்திருக்கிறது. கில்கிறிஸ்ட் முதல் நாள் அசந்து போனேன் என்று சொல்லியே விட்டார்.
      
இன்று ஒரு ஆட்டத்தில் எதிரணியின் சொல்ப ரன்களை (125 என்று ஞாபகம்) எடுக்க கெயில் ஆடிய ஆட்டத்தில் எதிரணித் தலைவர் மஹிளா ஜெயவர்த்தனே முகத்தில் ஈயாடவில்லை. உண்மையிலேயே அசுர ஆட்டம். இதில் கங்குலி எங்கே வருகிறார் என்கிறீர்களா....விஷயத்துக்கு வருகிறேன்...! இவரை ஏண்டா எடுக்காமல் விட்டோம் என்று எல்லா டீமும் ஏங்கும் அளவு கெயில் விளையாடும் போது அதே நிலையில் களமிறங்கும் கங்குலியிடம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும்? யுவராஜ் வேறு சொல்லவே சொல்லி விட்டார். என்ன செய்யப் போகிறார் என்று பார்த்தால், கங்குலியும் இதை யோசித்திருப்பார் போலும். இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடவில்லை என்று சொல்லி விட்டாராம்! இரண்டு நாள் முன்பு சேவாக் இப்படி விளையாடிய ஒரு ஆட்டத்தை பாதித் தூக்கத்தில் பார்த்தேன். ஆனாலும் ஐ பி எல் ஆட்டங்களை முழு மனதாய் ரசிக்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன் தினமணியில் வந்த 'மலிங்காவும் டெண்டுல்கரும்' என்ற கட்டுரை ரொம்பப் பிடித்திருந்தது...நானும் அந்தக் கட்சி என்பதால்!
                           

12 கருத்துகள்:

 1. வெயில் ரொம்ப அதிகம். தாக்குப் பிடிக்க முடியலை

  பதிலளிநீக்கு
 2. வெயில் டிகிரி 100ஐ தாண்டுகிறது என்றால், கெயில் எடுக்கிற ரன்னும் 100ஐ தாண்டுகிறது.

  பதிலளிநீக்கு
 3. ராகுல் ஷர்மா பௌலிங் பார்த்தீர்களா ?

  நல்ல லெக் ஸ்பின்னராக வருவார் என்று நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 4. சென்னைக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன். பயமாயிருக்கு!

  பதிலளிநீக்கு
 5. வெயில் சுகமென்றாலும் இது கொடுமை !

  பதிலளிநீக்கு
 6. அக்னி நட்சத்திரமல்லவா?பதிவு சூடு பிடித்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 7. குளிருதேனு புலம்பிட்டிருந்தேன்.

  பதிலளிநீக்கு
 8. அடிக்கற வெயிலை ரசிக்க முடியாவிட்டாலும் தலைப்பை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 9. பாலைவனமே பரவாயில்லை போல ...

  கெய்லா அல்லது கேலா ( Gale).. அந்த வெறி சேவாக்குக்கும் இருக்கிறது..வெளிகாட்டிக்காத வேகம் தோனிக்கும் இருக்கிறது... IPL ஐ பத்தி எவ்வளவு விமரிசிச்சாலும் இந்த பசங்க ஆட்டத்தை பார்க்க தானா கை டிவி ரிமோட் பட்டனை தேடுது...

  பதிலளிநீக்கு
 10. //அப்பாதுரை said... குளிருதேனு புலம்பிட்டிருந்தேன்.//


  //பத்மநாபன் said... பாலைவனமே பரவாயில்லை போல ...//

  டிசம்பர் மாதம் இங்கே ஐயப்ப சீசன், இரண்டு / மூன்று அடி பனிப்பொழிவில் "பிஸ்" முன்பக்கம் அடித்தால் "பின்பக்கம்" போகும் அளவு குளிர் இருந்தபோது - எங்கள் சென்னை சென்ட்டர் மனஜெமென்ட் ஆட்கள் "பிரதி வாரம் புதன் அன்று கம்பெனி சி.இ.ஒ மீட்டிங்கில்" - "சென்னையில் ஒரே பனி, குளிரு தாங்கலை என்று " காமெடி அடித்தார்கள் !!

  அவர்களுக்கு 108 தான் ரொம்ப பிடிக்கும் !!

  கொடுமை என்னவென்றால் இந்த வெயிலில் கோர்ட் / டை அணிய சொல்லும் கம்பெனிகளும் உண்டு !!

  பதிலளிநீக்கு
 11. // சென்னையில் இரண்டு நாட்களாக 108 டிகிரி. //

  42னுதான படிச்சேன் பேப்பருல..

  டிஸ்கி-1 : டிகிரி மட்டும் சொன்னா போதாதே.. ஃபேரன்ஹீட்டா - செல்சியஸா ?
  டிஸ்கி-2 : பின்னூட்டத்துலேயும் டிஸ்கி போடுவோர் சங்கம்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!