சனி, 7 மே, 2011

சொல் ஒன்று - சிந்தனைகள் பல!

                  
ஒரே ஒரு வார்த்தை. அதைப் படித்தவுடன், நம் எண்ணத்தில் எவ்வளவோ விஷயங்கள் தோன்றும்.

அந்த வகையில் ஏதாவது ஒரு வார்த்தையைக்  கொடுத்து, வாசகர்களின் மனதில் உடனே என்ன தோன்றுகிறது என்று தெரிந்து கொள்ள ஆசை.

கீழே உள்ள ஒரு வார்த்தையைப் பாருங்கள், படியுங்கள். உடனே உங்கள் மனதில் என்ன ஞாபகம் வருகிறது என்பதை பின்னூட்டமாகப் பதியுங்கள்,

நிறைய விஷயங்கள் - அல்லது பெரிய பதிவாக இருக்கும் என்றால், நீங்கள் ஒரு பதிவராக இருந்தால், உங்கள் வலைப்பூவில் பதிவிட்டு, எங்களுக்கு சுட்டி அனுப்புங்கள். இதோ அந்த வார்த்தை:

பரிசு

அப்புறம் ஒரே ஒரு கேள்வி (பரிசு சம்பந்தப் படாத கேள்வி)

வீட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டு இருக்கின்றீர்கள். ரொம்ப தூரத்திற்கு அப்பால், இரண்டு அணில்கள் உங்கள் கண்களுக்குப் படுகின்றன. அதில் ஏதோ ஒரு அணில் கத்திக்கொண்டு இருக்கிறது. இன்னொன்று அதைக் கேட்டுக்கொண்டு இருக்கின்றது. தூரத்திலிருந்து பார்ப்பதால் அவற்றின் வாய் உங்களுக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் எந்த அணில் கத்துகிறது, எது கேட்டுக்கொண்டு இருக்கின்றது என்பதை சரியாகச் சொல்லமுடியுமா?


        

24 கருத்துகள்:

 1. பரிசு என்கிற வார்த்தையை பார்த்ததும், "பரிசு பொருட்கள்" என்ற தலைப்பில், நான் எழுதிய கவிதை தான் ஞாபகத்திற்கு வந்தது.

  பதிலளிநீக்கு
 2. தமிழ் உதயம் சார் - சுட்டி தர முடியுமா? பதிவில் வெளியானதா அல்லது பத்திரிக்கை எதிலாவதா?

  பதிலளிநீக்கு
 3. நம் வாழ்க்கையே இறைவன் அளித்த பரிசு தான்

  பதிலளிநீக்கு
 4. எனக்கு காது கேக்காது , கண்ணும் தெரியாது .

  நீங்களே சொல்லிடுங்க சாமி

  பதிலளிநீக்கு
 5. பரிசு என்றாலே சந்தோஷம்..அதிலும் உழைப்பிற்கு பரிசு என்றால் மிகுந்த சந்தோஷம்.. அது எவ்வளவு சிறிது/ பெரிது எனினும்.

  அணில் கண் விரித்தது கேட்கிறது.. காது விரிய கண்ணும் விரியும் என்பது சின்ன லாஜிக்.

  பதிலளிநீக்கு
 6. அடியே - யாரு எலெக்ஷன் ஜெயித்தாலும் நானும் நீயும் நடுத்தெரு தான். பேசாம இன்னிக்கி சோத்துக்கு வழிய பாரு.

  பதிலளிநீக்கு
 7. ரெண்டு அணிலும் ஒரே மாதிரி தான் முகத்த வச்சிருக்கு. நீங்களே சொல்லிடுங்க!

  பதிலளிநீக்கு
 8. w.அணில் பேசுகிறது.
  h.அணில் கேட்டுக்கொள்கிறது.
  :-)

  பதிலளிநீக்கு
 9. கல்யாணப்பரிசு.. -- டணால் தங்கவேலு...

  பதிலளிநீக்கு
 10. நினைவுக்கு வருபவை
  நான் வாங்கியதும் ,
  என் மகன் வாங்குவதும்.

  இடப்பக்க அணில் கத்துகிறது.
  வலப்பக்க அணில் கேட்கிறது

  பதிலளிநீக்கு
 11. பரிசு... இன்ஸ்டன்ட் கவிதை(!!)...:))


  பொருளில் இல்லைமகிழ்ச்சி

  பெறுவதில் தான்உள்ளதென

  மழலைகிறுக்கிய ஓவியத்தில்

  மனதை பறிகொடுத்தேன்!!!

  பதிலளிநீக்கு
 12. வால் அசையும் அணில் கத்துகிறது

  பதிலளிநீக்கு
 13. வால் அசையும் அணில் பேசுது! பரிசுன்னா எனக்கு நினைவு வர்றது இங்க நடக்கற பார்டிகளுக்கு என்ன பொருத்தமான பரிசு வாங்கறதுன்னு நானும் ரங்குவும் சிண்டை பிச்சுக்கற நேரங்கள்.

  பதிலளிநீக்கு
 14. வால் அசைக்கின்ற அணில் பேசுகிறது என்பது சரியான விடை. பேசாமல் கேட்டுக் கொண்டிருக்கும் அணிலின் வால் எந்த சலனமும் இல்லாமல் இருக்கும். பரிசு பற்றி பட்டென்று தங்கள் நினைவுக்கு வந்தவைகளை பின்னூட்டமிட்ட தமிழ் உதயம், மணி (ஆயிரத்தில் ஒருவன்), இராஜராஜேஸ்வரி, பத்மநாபன், ரியா, மாதவன், சிவகுமாரன், அப்பாவி தங்கமணி, பொற்கொடி ஆகியோருக்கு எங்கள் நன்றி. மற்ற வாசகர்களின் பரிசு கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

  பதிலளிநீக்கு
 15. வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் பரிசு தான்; நினைவில் நிற்கக் கூடிய் பரிசாக மாற்ற வேண்டியது நம் கையில் தான்!

  பதிலளிநீக்கு
 16. ரியா - உங்களுடைய 'நான் நானாக ' வலையில், நீங்க எழுதி இருக்கின்ற 'பரிசு' பதிவு படித்தோம். நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. மிடில்கிளாஸ் மாதவி. ஆம், நீங்கள் சொல்வது சரிதான். ஒவ்வொரு கணமும் நமக்கு அளிக்கப்படும் பரிசுதான். அந்தக் கணங்களை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்கின்றோம் என்பதைப் பொறுத்துத்தான் பரிசை நாம் எப்படி அனுபவித்தோம் என்று சொல்லமுடியும்.

  பதிலளிநீக்கு
 18. பரிசு என்றவுடன் என் மகள் சின்ன வயதில் கிடைக்கும் பரிசுப்பொருட்களை 'கிஸ்ட்' (gift) என்று ஆர்வத்துடன் பார்ப்பது நினைவுக்கு வருகிறது.
  பொதுவாகவே குழந்தைகள் கிஃப்ட் என்ற பெயரில் கிடைக்கும் மிகச் சிறிய பொருளுக்குக்கூட மிக அதிகமாக அடையும் சந்தோஷமும் அவர்களின் புன்னகையும் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
 19. கீதா சந்தானம் அவர்கள் சொல்வது மிகவும் சரி. சிறிய வயதில் கிடைக்கின்ற பரிசுகள் - நம்மை தன்னம்பிக்கை பெற வைக்கின்றன. ஆர்வமும், சந்தோஷமும், அதனால் வரும் தன்னம்பிக்கையும் வாழ்க்கையில் முக்கியமானவை.

  பதிலளிநீக்கு
 20. எனக்கு அலுவலகத்தில் சமிபத்தில் கிடைத்த பரிசுக்கு கிடைத்த வெகுமதி "பரிகாசம்" ! அது தாங்க நினைவுக்கு வருது !

  பதிலளிநீக்கு
 21. பரிசு போட்டிக்காக எழுதிய முதல் சிறுகதைதான் நியாபகத்திற்கு வந்தது.
  திருப்பரங்குன்றம் டு திருப்பாலை வழி பெரியார்

  பதிலளிநீக்கு
 22. பரிசு
  என்றால் என்றோ கிடைத்த கைக்கடியாரம் தான் நினைவுக்கு வருகிறது. அதன் பின் பரிசுகள் கிடைத்ததைவிடக் கொடுத்தது நிறைய:)
  கொடுப்பது பிடித்த விஷயம் என்பதால்.
  வாங்குபவர்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சிக்காகவே
  இதைச் செய்வது வழக்கம்.:))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!