வியாழன், 26 மே, 2011

ஒரு மனோதத்துவ கேள்வி

                             
பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள, 'பேருந்தின் இருக்கை அமைப்பு'  படத்தைப் பாருங்கள். 

கேள்வி ரொம்ப சாதாரணமானது. 

கேள்விக்கு முன்பாக சில குறிப்புகள். 

* இந்தப் பேருந்து பத்து கிலோ மீட்டர் தாண்டி இருக்கின்ற ஓர் ஊருக்கு சென்று வருகின்ற பேருந்து. 

* நீங்கள் இந்தப் பேருந்தில் பயணம் செய்யவேண்டி உள்ளது. 

* நீங்கள் தனி ஆள். கூட நண்பர்கள் மற்றும் உறவினர் யாரும் வரவில்லை. 

* நீங்கள் இந்தப் பேருந்தில் ஏறும்பொழுது, அதில் உள்ள எல்லா இருக்கைகளும் காலியாக உள்ளன. பேருந்து கிளம்பு முன் எல்லா இருக்கைகளுக்கும் ஆட்கள் வந்து விடுவார்கள். இருக்கைகள் நிரம்பிய பிறகு வருபவர்கள் அனைவரும் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டும். 


* இந்தப் பேருந்தில், ஆண்கள், பெண்களுக்கு என்று தனி இருக்கைகள் கிடையாது. 

* இந்தப் பேருந்தில், இருக்கை எண்கள் 1, 2, 6,10,14, 18, 26, 30, 34, 38,  மற்றும் 42 ஆகியவை, இடது பக்க ஜன்னலோரத்து இருக்கைகள். 

* இருக்கை எண்கள் 5, 9, 13, 17, 21, 23, 25, 29, 33, 37, 41 மற்றும் 46 ஆகியவை வலது பக்க ஜன்னலோர இருக்கைகள். 


* மற்றவை யாவையும் பயணிகள் பாதையை ஒட்டிய இருக்கைகள். 

கேள்வி: 
   
நீங்க இந்தப் பேருந்தில் பயணம் செய்வதற்காக ஏறினால், நாற்பத்தாறு இருக்கைகளில் எதில் வேண்டுமானாலும் அமர்ந்து பயணம் செய்யலாம் என்றால், நீங்கள் எந்த இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய ஆசைப் படுவீர்கள்? 

(ஏன் என்பதையும் விருப்பப் பட்டவர்கள் சேர்த்துக் கூறலாம்!) 

நன்றி! 

பின் குறிப்பு: இந்தக் கேள்வியில் எடக்கு மடக்கு எதுவும் கிடையாது. இதற்கு நீங்கள் அளிக்கின்ற பதிலிலிருந்து முக்கியமான நான்கு விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும் என்று எங்கள் (ரொம்ப நாட்களாகக் காணாமல் போயிருந்த) மனோதத்துவ நிபுணர் கூறுகிறார். பார்ப்போம் - பதில் அளிக்கின்ற வாசகர்கள் குறித்து அவர் என்ன சொல்கிறார் என்று! 
                               

83 கருத்துகள்:

 1. பொதுவா டிரைவருக்கு இடப்பக்கம் இருக்கும் ஒற்றை இருக்கையில் பயணம் செய்யத்தான் எப்பவும் விரும்புவேன். நீண்டப் பிரயாணத்தில் தூக்கம் வராது அதனால் டிரைவருடன் பேசி கொண்டே போகலாம் . இது ஒரு காரணம். அடுத்தது டிரைவர்களின் நட்பு பின்னாடி என்னிக்காவது சீட் வேண்டும் என்ற சமயத்தில் உதவும்

  பதிலளிநீக்கு
 2. நன்றி எல் கே சார்!

  எங்கள் ம த நி கூறுகின்ற உடனடிக் கருத்து : Born leader.

  விவரமானக் கருத்துகள் பிறகு.

  பதிலளிநீக்கு
 3. I mean modhalla 10, adhu illena 30. (not "seat 10 if i dont have free seat in 30.." :D)

  பதிலளிநீக்கு
 4. evlo nerama kai neeti ukkandhu iruken, sattunu sollunga!!! kai valikudhulla! :(

  பதிலளிநீக்கு
 5. நன்றி எங்கள் ப்ளாக்

  @போர்க்கொடி

  போர்கொடின்னு பேரு இருந்தா பலன் சொல்ல மாட்டாங்களாம்

  பதிலளிநீக்கு
 6. பொற்கொடி - எங்கள் ம த நி - உங்க தெரிவுகளைப் பார்த்துக் குழம்பிப் போயிட்டாரு.
  நீங்க எதிலும் சட்டென்று ஒரு முடிவிற்கு வரமாட்டீர்கள், உங்களை அறியாமலேயே உங்களைச் சுற்றி உள்ளவர்களை உங்கள் செய்கைகளால் திகைக்க வைப்பீர்கள். ஆனால் உங்கள் நோக்கங்கள் என்றுமே நல்லவைதான் என்கிறார்.

  பதிலளிநீக்கு
 7. கவின் இசை - உங்களுக்கு பாஸ் ஆக யாரு இருந்தாலும் அவருக்கு ஒரு தொந்தரவும் கொடுக்கமாட்டீர்கள். இயன்றவரை அவருக்கு வேலையில் உதவி செய்வீர்கள். அவரும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை அளிப்பார். ஆனால், உங்கள் உள் மனதில், நீங்கள் செல்லும் பாதை சரியானதுதானா என்ற சந்தேகம் அடிக்கடி உங்களுக்கு எழும்.

  பதிலளிநீக்கு
 8. முன் பகுதியில், முதல் நான்கைந்து வரிசையில், ஜன்னலோர இருக்கை. இடது வலது எந்த பகுதியாக இருந்தாலும் சரி.

  பதிலளிநீக்கு
 9. பொதுவாகவே மத்திய இருக்கைகள்தான்..

  பதிலளிநீக்கு
 10. கக்கு மாணிக்கம் அவர்கள் சிறந்த கலா ரசிகர். மற்றவர்களைப் பெரும்பாலும் அனுசரித்துச் செல்வார். யாரையும் சுலபமாக நம்ப மாட்டார். சில சமயங்களில் தான் நினைப்பதை முரட்டுப் பிடிவாதமாக வாதிட்டு நண்பர்களை இழக்க நேரிடலாம்.

  பதிலளிநீக்கு
 11. தமிழ் உதயம் சார் - வாழ்க்கையில் நிறைய ஆர்வம உள்ளவர். தானும் கற்றுக்கொள்ள வேண்டும் - கற்றதை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்று எண்ணுபவர். ஒரே நேரத்தில் பல முயல்களை துரத்தி அதில் சில முயல்களைப் பிடிக்கின்ற அசாதாரண செயலை அடிக்கடி அனாயாசமாக செய்வார். எடுத்த காரியத்தில் ஏதேனும் சிறிய தடங்கல் வந்தாலும் மூட் அவுட் ஆகிவிடுவார்.

  பதிலளிநீக்கு
 12. தங்கம் பழனி - நடமாடும் பல்கலைக் கழகம் என்று சொல்லலாம். சமுதாய உணர்வு மிக்கவர். அதே சமயம் மிகுந்த எச்சரிக்கை உணர்வு கொண்டவர். மற்றவர் பிரச்னைகளில் அதிக ஆர்வம காட்டமாட்டார். தனிமை விரும்பி.

  பதிலளிநீக்கு
 13. குரோம்பேட்டைக் குறும்பன்26 மே, 2011 அன்று PM 12:25

  பஸ்சுல ஏறும்பொழுது, எல்லா சீட்டுகளும் காலியாக இருந்தால், டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் அந்த சீட்டு எப்பிடி இருக்கு, ஸ்டீரிங் வீலை - அப்படி இப்படித் திருப்பிப் பார்க்கலாமா என்றெல்லாம் தோன்றும்.

  பதிலளிநீக்கு
 14. ///கக்கு மாணிக்கம் அவர்கள் சிறந்த கலா ரசிகர். மற்றவர்களைப் பெரும்பாலும் அனுசரித்துச் செல்வார். யாரையும் சுலபமாக நம்ப மாட்டார். சில சமயங்களில் தான் நினைப்பதை முரட்டுப் பிடிவாதமாக வாதிட்டு நண்பர்களை இழக்க நேரிடலாம்.//

  agreed! :)))))

  பதிலளிநீக்கு
 15. எங்கள் said...

  எடுத்த காரியத்தில் ஏதேனும் சிறிய தடங்கல் வந்தாலும் மூட் அவுட் ஆகிவிடுவார்.////

  இதை மட்டும் நிபுணர் தவறாக சொல்லிட்டார்.

  பதிலளிநீக்கு
 16. இதுக்கு இந்தப் புதிரே தேவையில்லைன்னு தோணுது. அவங்கவங்க பதிவுகளைப் படிச்சுப் பார்த்தாலே சொல்லலாமே? (ரொம்ப நாட்களாகக் காணாமல் போயிருந்த) மனோதத்துவ நிபுணருக்கு தன் ஸ்கில்களை ரீ-கால் பண்ணறதுக்காக எங்களுக்கு வைக்கிற டெஸ்டா இது?
  எதுவாருந்தாலும், எல்லாரும் பதில் சொல்லிமுடிச்ச பிறகுதான் அவர் பதிலை சொல்லிருக்கணும். இல்லைன்னா, நீங்க யாருக்கு நல்ல ரிஸல்ட் சொலிருக்கீங்களோ அதை, அல்லது யாருமே சொல்லாததுதான் சொல்லுவாங்க.

  சரி, சரி, பதிலுக்கு வர்றேன். ஆமா, படத்துல உள்ள வர வழி இருக்கு; ஆனா, வெளியே போக வழி? ரெண்டும் ஒண்ணுதானா? அப்படின்னா, என் சாய்ஸ், 26. காரணமெல்லாம் பெரிசா ஒண்ணும் ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிக்க வேணாம். இறங்க வசதியா இருக்கும்ல, அதுக்குத்தான்!!

  (ஆண்டவா, மனோ நிபுணர் எரிச்சல்பட்டுட்டு என்னைப்பற்றி ஏடாகூடமாச் சொல்லாம இருக்கணும்!!) ;-))))))))

  பதிலளிநீக்கு
 17. எல் கே சார்! ம த நி - மேலும் கூறுகையில், சந்தர்ப்பங்களை அடிக்கடி தவற விடுபவர், 'என் வழி - தனி வழி; சீண்டாதே' என்று சில சமயங்களில் நண்பர்களிடம் சீறுவார் - என்றும் கூறினார். Scope for development : Must improve his listening capability. என்றார். பலதரப்பட்ட நண்பர்கள் உண்டு. எல்லோரிடமும் இனிமையாகப் பழகுவார். அடிக்கடி வருகின்ற தலைவலியைப் போக்கிக் கொள்ள, தலைவலி வரும்பொழுதெல்லாம், ஒரு கைப்பிடி துளசி இலைகளை நீரில் கழுவி, சுத்தம் செய்து, அதனுடன் ஐந்து மிளகுகளைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு மென்று தின்றுவிட்டு, உடனே ஒரு க்ளாஸ் சுடு நீர் குடித்தால் போதும். கண்களை ஒரு நல்ல கண் டாக்டரிடம் சென்று சோதித்துக் கொள்ளவும்' என்றும் ம த நி கூறினார்.

  பதிலளிநீக்கு
 18. என் விருப்பம் இருக்கை எண் 9 / 18 / 27 / 36

  பதிலளிநீக்கு
 19. என் விருப்பம் இருக்கை எண் 9 / 18 / 27 / 36

  பதிலளிநீக்கு
 20. என் விருப்பம் இருக்கை எண் 9 / 18 / 27 / 36

  பதிலளிநீக்கு
 21. என் விருப்பம் இருக்கை எண் 9 / 18 / 27 / 36

  பதிலளிநீக்கு
 22. என் விருப்பம் இருக்கை எண் 9 / 18 / 27 / 36

  பதிலளிநீக்கு
 23. செந்தில் வேலாயுதம் அவர்கள் எப்பொழுதும் இயற்கையான சூழ்நிலையை விரும்புபவர். எவ்வளவு உழைக்கின்றாரோ அதை விட அதிகமாக ஓய்வு எடுத்துக் கொள்வதில் விருப்பம் உடையவர். ரொம்ப எச்சரிக்கையானவர்.
  பெரும்பாலும் தான் உண்டு, தன வேலை உண்டு என்று இருப்பார். நண்பர்களும் குறைவு, எதிரிகள் என்று யாரும் இல்லை.

  பதிலளிநீக்கு
 24. லதா அவர்கள், தனக்கு என்ன வேண்டும் என்பதை சரியாக அறிந்து வைத்திருப்பவர். நண்பர்கள் குழுவில், இவர் என்ன சொல்கிறார் என்பதை எல்லோரும் உன்னிப்பாக கவனிப்பார்கள். இளகிய மனம் கொண்டவர். இனிமையாகப் பழகுவார். பிடிவாத குணம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 25. குரோம்பேட்டைக் குறும்பன் பயணிகள் இருக்கை எதையாவது தெரிவு செய்தால்தான் பலன் சொல்லுவோம்.

  பதிலளிநீக்கு
 26. ஹுசைனம்மா பல விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பவர். நிரம்பப் படித்தவர். பல செயல்களை திட்டமிட்டு செவ்வனே செய்து முடிப்பவர். கண்டிப்பும் கராறும் கொஞ்சம் அதிகமாகக் காணப்படும். படிக்கட்டு அருகே இருக்கின்ற இருக்கைகளை விரும்புவோர் கொஞ்சம் ஓவர் வெயிட்டாக இருக்க வாய்ப்புகள் உண்டு. இவர் எப்படி என்று எங்கள் ம த நி யால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 27. தங்கராஜ் மற்றும் அப்பாதுரை. பல விஷயங்கள் ஆழ்ந்து கற்றவர்கள். எதையும் உன்னிப்பாக கவனித்து, நுணுக்கமான பல விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள். சில விஷயங்களை இவர்களை நம்ப வைக்க, மற்றவர்கள் ரொம்பக் கஷ்டப்படுவார்கள். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மனிதர்களை எடை போடுவதில் மிகவும் சமர்த்தர்கள். பல இடங்களில் ரிஸ்க் எடுப்பது இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல. பல நண்பர்கள். இவர்கள் இருக்குமிடத்தில் கலகலப்புக்குப் பஞ்சம் இராது.

  பதிலளிநீக்கு
 28. விஜய் - இவர் சிரிப்பது எப்போதாவதுதான். எப்பொழுதும் ஏதாவது சிந்தனை செய்தவண்ணம் இருப்பார். தன்னுடைய துறையில் பல நுணுக்கங்களைத் தெரிந்து வைத்திருப்பார். கவனமின்மை காரணமாக சில வாய்ப்புகளை இழக்கவேண்டிய சூழ்நிலையும் இவருக்கு ஏற்பட்டிருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் மிகவும் அன்பாக இருப்பார்.

  பதிலளிநீக்கு
 29. மீனாக்ஷி - யாதும் ஊரே யாவரும் கேளிர். வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்தவர். ஞான ஊற்று. சில சமயங்களில் உற்றார் உறவினரால் சில சங்கடங்களுக்கு ஆளாக நேரிடும். ஆனாலும் மன் உறுதியால் எல்லாவற்றையும் வெற்றிகரமாக கடந்து வருவார்.

  பதிலளிநீக்கு
 30. naan perundhu endha nerathil endha thisaiyai nokki selgirathenbhathai poruthathu thaan irukayil amarvatha allathu ninrukondu selvattha enru....

  பதிலளிநீக்கு
 31. 26 as I can see who ever gets in to the bus. It is fun to watch various people getting to bus in that seat

  பதிலளிநீக்கு
 32. லதாவுக்குக் கிளிப்பிள்ளை பிடிக்கும் என்று மனோ சொன்னதை மறந்துட்டீங்களே எங்கள்? :)

  'உற்றார் உறவினரால் சில சங்கடங்களுக்கு ஆளாக நேரிடும்' .. ஹிஹி.. குருப்பெயர்ச்சிக்கு சொன்னதை இங்கே போட்டுட்டீங்களே எங்கள்?

  பதிலளிநீக்கு
 33. எனக்கு இடமோ வலமோ யன்னலோரம் 4/5 ஆவது வரிசையில் இருந்தால் சந்தோஷம் !

  ஆனா எல்லாரும் சீட் பிடிச்சிட்டாங்க போல.நான் கடைசி !

  பதிலளிநீக்கு
 34. ஆஹா தலைவலி எப்படி கண்டுபிடிச்சார் ??? வாரத்தில் பாதி நாள் தொந்தரவு பண்ணுதே... மறுபடி நண்பர்கள் நெறைய உண்டு. :) நன்றி

  பதிலளிநீக்கு
 35. மணி (ஆயிரத்தில் ஒருவன்) நிறைய ஆர்வம உண்டு. யார் என்ன சொன்னாலும் தன மனதுக்கு சரி என்று நினைப்பதை சொல்வார், செய்வார். தன்னை ஒரு ஹீரோவாகக் காட்டிக் கொள்ள முயற்சிகள் செய்துகொண்டே இருப்பார். யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யமாட்டார். நல்லவர்.

  பதிலளிநீக்கு
 36. பாலாஜி வெங்கட் - ஜொள்ளு வடியுது தொடச்சிக்குங்க!

  பதிலளிநீக்கு
 37. சாய்ராம் - வாழ்க்கையில் பல ரசனைகள் கொண்டவர். முன்கோபம் கொண்டவர். ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும், ஆடிப்பாடி நடக்கணும், அன்பை நாளும் வளர்க்கணும் - இது இவருடைய கொள்கை. திடீரென்று மூட் அவுட் ஆவார். ஆனால் இயல்பு நிலைக்கு வெகு சீக்கிரம் திரும்பிவிடுவார்.

  பதிலளிநீக்கு
 38. ஹேமா - சாஸ்திர சம்பிரதாயங்கள் எதிலும் நம்பிக்கை இல்லாத புரட்சிப பெண். நண்பர்களுக்கு உதவுவது என்பது இவருக்கு எப்பவும் பிடித்த விஷயம். இனம் புரியாத சோகம் சில சமயங்களில் இவரை ஆட்கொள்ளும். அதிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்ப நாள் கணக்கில், வாரக் கணக்கில் கூட சில சமயங்களில் ஆகும்.

  பதிலளிநீக்கு
 39. seat no 26,
  பஸ்க்குள்ள வந்து போற ஒருத்தர் விடாம கவனிக்கலாம். ஜன்னலோரமா காத்து வாங்கலாம். ஒவ்வொரு பஸ்டாப்புலயும் இருக்கிற பிகர் எல்லாரையும் சைட் அடிக்கலாம். அப்புறம் அந்த வழித்தடம் பத்தின தகவல்களையும் தெரிஞ்சுக்கல்லாம்.

  கணேசமூர்த்தி,
  ஈரோடு.
  மின்மினி

  பதிலளிநீக்கு
 40. செந்தில் வேலாயுதம் அவர்கள் எப்பொழுதும் இயற்கையான சூழ்நிலையை விரும்புபவர். எவ்வளவு உழைக்கின்றாரோ அதை விட அதிகமாக ஓய்வு எடுத்துக் கொள்வதில் விருப்பம் உடையவர். ரொம்ப எச்சரிக்கையானவர்.
  பெரும்பாலும் தான் உண்டு, தன வேலை உண்டு என்று இருப்பார். நண்பர்களும் குறைவு, எதிரிகள் என்று யாரும் இல்லை.

  ரெம்பவும் சரி!!!!!.

  பதிலளிநீக்கு
 41. அனித் அவர்கள், தற்கால கலை இலக்கியம் திரை இசை போன்றவற்றில் அதிக ஆர்வம உடையவர். புத்தகப் புழு. நகைச்சுவை உணர்வு மிக்கவர். நண்பர்களுடன் தான் எப்பொழுதும் காணப்படுவார். இவருக்குத் தனிமை என்பதே பிடிக்காது. நண்பர்களுக்கு நிறைய உதவிகள் செய்வார்.

  பதிலளிநீக்கு
 42. சிவாஜி அவர்கள் தெரிவு செய்த இருக்கை எண் இருபத்து ஆறை ஏற்கெனவே ஹுசைனம்மா, சாய்ராம் மற்றும் மீனாக்ஷி ஆகியோர் சொல்லியிருந்தனர். ஆகவே அவர்களுக்கு சொன்ன பலன்களில் பெரும்பாலும் இவருக்கும் ஒத்துப் போகும். இருக்கை எண் நாற்பத்து ஆறை தெரிவுசெய்த அப்பாதுரை / தங்கராஜ் போன்றவர்கள் இவருடைய நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 43. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 44. அட்டகாசமா சொல்லி இருக்கீங்க. நன்றி.

  //இருக்கை எண் நாற்பத்து ஆறை தெரிவுசெய்த அப்பாதுரை / தங்கராஜ் போன்றவர்கள் இவருடைய நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள்.//

  எப்படி இந்த உண்மையை கண்டுபிடிச்சீங்க....???

  பதிலளிநீக்கு
 45. நெடுந்தூரப் பயணமாகயிருந்தால் முன்னுரிமை 33/37.
  ஜன்னலோர இருக்கை வேண்டும்.
  ஜன்னலுக்கு கதவு வேண்டும்.
  பயணத்தில் வெயில் அதிகம் விழுகாத இடம் வேண்டும்
  கூட்டம் அதிகம் வரும் என்றால் மட்டும் படியோர இருக்கை
  கிராமப்புறமாக இருந்தால் 9/13 நகர்ப்புறமாக இருந்தால் 33/37
  அதுவரை செல்லாத பயணப் பாதை என்றால் முன்னுரிமை 1

  எல்லாம் கூட்டிக் கழித்து இந்த பஸ் பற்றி சொல்லவேண்டும் என்றால் 37

  பதிலளிநீக்கு
 46. நீச்சல்காரன் கொஞ்சம் குழப்பவாதியாகத் தெரிகிறார்! அடிக்கடி தான் சொல்லவந்தது என்ன என்று ஆரம்பித்து, புதிது புதிதாக எதையாவது சொல்லுவார் என்று தோன்றுகிறது. இவர் மேடையில் பேசினால், கேட்கின்ற மக்கள் ஆளுக்கு ஒரு அர்த்தம் கொள்வார்கள் என்றும் தோன்றுகிறது. நல்ல உழைப்பாளி. வெகுளி.

  பதிலளிநீக்கு
 47. தங்கராஜ் சார் முன்பு நீங்கள் தெரிவு செய்த சீட் நம்பர் நாற்பத்து ஆறு என்ன ஆயிற்று? எச்சில் தொட்டு அழித்துவிட்டீர்களா? ஏன் திடீரென்று கட்சி மாறிவிட்டீர்கள்?

  பதிலளிநீக்கு
 48. எனது விருப்ப தேர்வு இருக்கை எண் 11

  பதிலளிநீக்கு
 49. வெங்கட் - வாழ்க்கையில் அதிகம் ரிஸ்க் எடுத்துக் கொள்ளமாட்டீர்கள். வாழ்க்கை உங்களை எப்படி வந்து அடைகிறதோ அதை அப்படியே ஏற்று, சந்தோஷமாக வாழ்வீர்கள். அழகானவர். அன்பானவர். 'empathise' செய்து வாழ்ந்தால், இன்னும் அதிக செல்வாக்கு பெறுவீர்கள்.

  பதிலளிநீக்கு
 50. எங்கள் ப்ளாக்26 ஜூன், 2012 அன்று AM 10:33

  சத்யசீலன் - விடாமுயற்சி, தன்னம்பிக்கை. திறமை எல்லாம் கொண்டவர்.
  சோம்பேறித்தனம் சில சமயங்களில் வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிடுகின்றது.
  கவிஞரே! நீங்க அதிக ரிஸ்க் எடுத்துக் கொள்வதில்லை. வாழ்க்கையின் யதார்த்தங்களை அறிந்து, ஏற்றுக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருபவர்.

  பதிலளிநீக்கு
 51. எங்கள் ப்ளாக்27 ஜூன், 2012 அன்று AM 11:29

  திடுஸ் பிரெடெரிக் (ஹையோ - இது கூகிள் மொழிபெயர்த்ததுங்கோ!) இருக்கை எண் பதினேழு மேலே லதா அவர்கள் பலமுறை தெரிவு செய்துள்ளார். லதாவிற்குக் கூறியவை, உங்களுக்கும் பொருந்தும். நன்றி!

  பதிலளிநீக்கு
 52. நான் தேர்ந்தெடுப்பது இருகைஎண் 6...முதலாவதாக இது ஜன்னலோரத்து இருக்கை...நல்ல காற்றோட்டம், இயற்கை அழகை ரசிக்கலாம்,பேருந்தின் சுவர்களில் தலை சாய்த்து உறங்கலாம்...மற்றொன்று இது ஓட்டுனரின் எதிர் பக்க வரிசை, ஒருவேளை பேருந்து எதிலாவது மோதி விபத்துக்குள்ளாக நேர்ந்தால், அதிலிருந்து மீள வாய்ப்புள்ளது...
  சதீஷ் குமார் காளிமுத்து

  பதிலளிநீக்கு
 53. சதீஷ் குமார். நல்ல கலா ரசிகர். அழகு எங்கே இருந்தாலும் இரசித்து சந்தோஷம் கொள்வீர்கள். எதற்கும் பதட்டப்பட மாட்டீர்கள். முன்னெச்சரிக்கை முத்தண்ணா. எல்லோரையும் அனுசரித்துச் செல்பவர். நண்பர்கள் அதிகம். சில சமயங்களில் விவாதம் செய்து சில நண்பர்களை இழக்கக் கூடும்.
  இதை, எங்கள் மனோதத்துவ நிபுணர், என்னை அலைபேசியில் அழைத்து கூறினார்.

  பதிலளிநீக்கு
 54. ஸ்ரீ மாதவன் - வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற இலட்சியத்தில் அயராது பாடுபடுபவர். உற்றார் உறவினர் முன்னேற்றத்திற்கும் உதவுபவர். எதையும் தீவிர சிந்தனை செய்தே ஏற்றுக் கொள்வார். வாழ்க்கையை ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்பவர். புன்னகை செய்ய பழகிக் கொண்டால் இன்னும் அதிக உயரங்களை எட்டலாம்.

  பதிலளிநீக்கு
 55. Naanaga Irunthaal
  Naan driverin idathu pakka seatil utkaruven. kaaranam naan thaniyaaga vanthurukiren. yenaku bore adippathaaga unaraamal irukka mun seatil utkaandu vedikkai paarpathu nallathu. mattra seatil utkaanthu varukiravarkal sidumoonjiyaga irunthaal enna pannuvathu...


  Reply pls...

  பதிலளிநீக்கு
 56. Kujal Kutti! (what a name!)
  எல் கே அவர்களுக்குச் சொன்ன கருத்துகள்தான் உங்களுக்கும். நீங்கள் ஒரு படைப்பாளி.

  பதிலளிநீக்கு
 57. எனக்கு நின்று கொண்டு பயணம் செய்வது தான் பிடிக்கும்

  பதிலளிநீக்கு
 58. king mangalam said...
  எனக்கு நின்று கொண்டு பயணம் செய்வது தான் பிடிக்கும்.

  கிங் மங்களம் - வாழ்க்கையில் பல வாய்ப்புகளை, தெரிந்தோ தெரியாமலோ தவற விடுபவர். ஆனால் எதற்கும் வருத்தப்படமாட்டார்.

  பதிலளிநீக்கு
 59. 10 oorukku munnadi irunthu kelambuna bus la may be full a than irukum......seat la ukara venam top la travel pandrathu best

  பதிலளிநீக்கு
 60. 10 oorukku munnadi irunthu kelambuna bus la may be full a than irukum......seat la ukara venam top la travel pandrathu best

  பதிலளிநீக்கு
 61. கோபிநாத் குமரவேல் -- மீண்டும் முழுவதும் பதிவைப் படியுங்கள்.
  //நீங்கள் இந்தப் பேருந்தில் ஏறும்பொழுது, அதில் உள்ள எல்லா இருக்கைகளும் காலியாக உள்ளன. பேருந்து கிளம்பு முன் எல்லா இருக்கைகளுக்கும் ஆட்கள் வந்து விடுவார்கள். இருக்கைகள் நிரம்பிய பிறகு வருபவர்கள் அனைவரும் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டும். //

  பதிலளிநீக்கு
 62. 13 ம் எண் வலது பக்க இருக்கை தேர்வு செய்வேன் ஜன்னல் ஓர காற்றுடன் தூங்கிகொண்டு செல்லலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீரகுமார்! வாழ்க்கையில் நல்ல ரசனை கொண்டவர். தன்னம்பிக்கை மிக்கவர். சாப்பாட்டுப் பிரியர். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்.

   நீக்கு
 63. 30 ஆம் இருக்கையில் ஜன்னல் ஓரம்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!