வியாழன், 3 நவம்பர், 2016

எனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்? நீங்கள் சொல்லுங்கள்
     கனவு என்பது ஆழ்மனதின் எண்ணங்களோ?  நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா?   இல்லை, மனதின் பயங்களா?  கனவு கண்டால் தூக்கம் சரியில்லை என்பார்கள்.  
 

                                    Image result for sleep images         Image result for sleep images
     

     சாதாரணமாக கனவு என்பது ஒரு சிறு துணுக்கு போல, அதாவது கீழே விழுவது போலவோ, பஸ்ஸை மிஸ் பண்ணுவது போலவோ (சமீபத்தில் ஒரு மாறுதலுக்கு நான் பஸ்ஸைப் பிடித்து விடுவது போலக் கூட கனவு கண்டேன்!) கனவு காண்போம்.  அவை நினைவில் இருக்கும்.  உயரமான இடத்திலிருந்து விழுவது போல கனவு வரும்.  பாதுகாப்பின்றி உணர்வதாகச் சொல்வார்கள்!  பஸ்ஸை மிஸ் செய்வது போலக் கனவு கண்டால் ஏதோ வாய்ப்பு தட்டிப் போவதாய் அர்த்தம் என்பார்கள்.  சாவைக் கனவில் கண்டால் சாவில் இடம்பிடித்த நபருக்கு தீக்காயுசு என்பார்கள்.  என்ன லாஜிக்கோ!  கல்யாணம் நடப்பதாகக் கனவு கண்டாலோ நேர்மாறாகச் சொல்வார்கள்.  

 Image result for sleep images
   

     ஆக பெரிய கனவு வருவது அபூர்வம், வந்தாலும் அப்புறம் நினைவில் நிற்பது அதைவிட அபூர்வம்!

 

                         Image result for chased by an elephant images      Image result for chased by an elephant images
     

     பெரிய கனவு என்றால் முன்பெல்லாம் என்னை ஒரு யானை துரத்துவது போல ஒரு கனவு வரும்.  சந்து சந்தாக, தெருத்தெருவாக, வீட்டுக்குளெல்லாம் புகுந்து, புகுந்து யானையால் வெவ்வேறு லொகேஷன்களில் துரத்தப்படும் அந்தக் கனவு பல நாட்கள், பலமுறை இடைவெளி விட்டு வந்துள்ளது.  ஆனால் கடைசி வரை நான் யானையிடம் மாட்டியதில்லை!  யாராலாவது, அல்லது எதனாலாவது துரத்தப்படும் கனவுகளுக்கு பயம் அல்லது ஏதாவது துரோகம் காரணமாயிருக்கலாம்!Image result for chased by an elephant images
     

     பின்னர் நண்பர்கள் பேச்சைக் கேட்டு பிள்ளையாருக்குத் தேங்காய் உடைத்துப் பார்த்தேன்.  கோவில் சென்றால் யானை அருகில் செல்லத் தயங்குவேன்.  "அவனா நீ?" என்று பிடித்து விடுமோ என்று என் மனதுக்குள் ஒரு பயம் இருந்திருக்கும்!  (ஹிஹிஹி)  


     "போன பிறவியில் நீ ஏதோ யானைக்கு துரோகம் செய்திருப்பே"  
      நானா!  யானைக்கா!!  துரோகமா!!!  எப்படி?


Image result for chased by an elephant images     அந்தக் கனவு வந்த காலைகளில் விழித்துக்கொண்டு வெகு நேரமாகியும் பீதி, படபடப்பு குறைய கொஞ்சம் நேரமாகும்.  என்ன பரிகாரம் நடந்ததோ, யானைக்கு என்ன ப்ரீத்தி ஆனதோ..  இல்லை, வேறு யாரையாவது கனவில் துரத்தப் போய்விட்டதோ....  இப்போது அந்தக் கனவு வருவதில்லை!

     அந்த கனவுக்குப் பிறகு வந்த நீ...ண்ட கனவு இதுதான்.  நினைவிலிருந்து மறையுமுன் எழுதி விட்டேன்!

 Image result for 2 little babies images


     தீபாவளிக்கு மறுநாள் வெளியூரிலிருந்து ஒரு உறவு வருகை.  குடும்பத்துடன் வந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் உண்டு.  ஒருவயது நிறையாத இரண்டு மழலைகளும் வீட்டை ரெண்டு படுத்தி வீட்டுக் கிளம்பிச் சென்றன.  அதே நினைவோ என்னவோ.. அதிகாலை ஒரு கனவு.     இந்தக் கனவில் என்ன விசேஷம் என்றால் நிஜங்கள் சம அளவில் கலந்திருந்ததுதான்!  


Image result for dream clip art images     ஹாலில் உட்கார்ந்திருக்கிற எனக்கு ஒரு குழந்தையின் சலங்கை ஒலியும், தத்தக்கா பித்தக்கா என்று அது நடக்கும் சத்தமும் கேட்டு ஆச்சர்யம் வருகிறது.  'ஏது நம் வீட்டில் அவ்வளவு சிறு குழந்தை?  வாய்ப்பே இல்லையே!  வந்த குழந்தைகளில் ஒன்றை விட்டு விட்டுப் போய்விட்டார்களா? (இந்த இடம் நிஜ வாழ்வுடன் ஒத்துப்போகும் சிந்தனை!  இடம் இப்போது குடியிருக்கும் வீடு.)

                           

                                               Image result for walking baby images        Image result for walking baby images
    

      பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு குழந்தை ரூமுக்குள்ளிருந்து தத்தக்கா பித்தக்கா தளர் நடையில் நடந்து செல்கிறது.  நான் 
எழுந்து அருகில் போகும்போது டைனிங் ஹாலில் உள்ள மேஜைக்கு அடியில் (சற்று பெரிய மேஜையாக்கும்) சென்று மறைந்து விடுகிறது குழந்தை.  அந்த இடத்தில் கொலு பொம்மைகள் போல சில பொம்மைகள் (நிஜத்தில் அங்கு பொம்மைகள் கிடையாது - எங்கள் வீட்டில் கொலு வைக்கும் பழக்கமும் கிடையாது).  அதில் இது மறைந்த பொம்மை லேசாக ஒளிர்ந்து நின்றது போல பிரமை!

Image result for navarathri dolls images
     

     "யார் வந்திருக்கா நம் வீட்டுக்கு?" என்று மனைவியிடம் கேட்டு, ரூமுக்குள் சென்று பார்க்கிறேன்.   உள்ளே குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும் என்னைத் தவிர வேறு ஒருவருமில்லை.


     வெளியில் வந்து ஐந்து நிமிடங்களுக்குள் மனைவியின் அத்தை கணவர் ரூமுக்குள்ளிருந்து வெளியில் வருகிறார்!!   

 Image result for old man clip art images
     நாங்களெல்லோருமே அவரை 'அத்திம்பேர்' என்றுதான் கூப்பிடுவோம்!   "அத்திம்பேர் நீங்க எப்போ வந்தீங்க?" என்கிறேன் ஆச்சர்யத்துடன்.


     "காலை 5.50க்கு" என்கிறார் அவர்.  கிட்டத்தட்ட நிஜம்.  அது காலை நேரம்  (ஆனால் காலை 3.30 மணி - கனவு காணும் நேரம்) 


     "அடடே...  படுத்துக்க வேண்டியதுதானே?  ஏன் வெளில வாசலுக்கு வர்றீங்க?  வெளியில ஒரே பனி!"  என்கிறேன் (வயதானவர். 
அவரின் சதாபிஷேகம் இப்போதுதான் நடந்து,  நாங்கள் அவர் ஊர் சென்று திரும்பி இருந்தோம்.  ஸோ, இதுவும் நிஜத்தோடு ஒட்டி வருகிறது.
)     "இருக்கட்டும் மாப்பிளே... உள்ள அவங்க இருக்காங்க" என்கிறார் அவர்.  


     "யார்"


     "அவளோட சித்தி" (என் 'பாஸி'ன் சித்தியைச் சொல்கிறார்.  அவர் உள்ளூர்.  ஆனால் அவர் வந்து போனது முதல் நாள், தீபாவளி அன்று காலை பதினோரு மணி போல..!)

 
     "ஓ... சரி.. சரி..." என்று பால்கனியிலிருந்து வெளியில் எட்டிப்பாக்கிறேன்.  மாடியிலிருந்து பார்க்கும்போது டேங்க் தண்ணீர் வழிந்து வாசலைத்தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.  (இது வழக்கமான, நிஜப் பிரச்னை.  நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து 100 அடியில் இருக்கும் மெயின் பில்டிங்கில் இருந்து மோட்டார் 'ஆன்' செய்வார்கள்.  இங்கு எங்கள் பிளாக்கில் தண்ணீர் வழிந்ததும் ஒரு 'மிஸ்ட் கால்' கொடுத்தால், வால்வைத் திருப்பி அடுத்த இடத்துக்குத் தண்ணீர் போடுவார்கள்.  ஆனால் அந்த வால்வ் பழுதாகி நீண்ட நாட்களாகிறது.  இன்னும் மாற்றவில்லை.  எனவே அங்கு வால்வைத் திருப்பினாலும் இங்கும் தண்ணீர் தொடர்ந்து ஓரளவுக்கு நிரம்பி வழிந்து வீணாகும்)Image result for paper boy clip art images     இந்த நேரம் பேப்பர்க்காரர் காம்பவுண்டுக்கு வெளியிலிருந்து பேப்பர் போட முயல்கிறார்.  'நாங்கள்தான் பேப்பரை நிறுத்தி விட்டோமே (இது நிஜம்) ஏன் போடுகிறார்'  என்று பார்க்கும்போதே பின்னாலிருந்து ஒரு குரல் (அதுவும் அந்த பேப்பர் போடுபவர் குரல்தான்) அவரை "போடவேண்டாம்... அவர்கள் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்" என்று சொல்லியும்,  இவர் உள்ளே தூக்கி எறிந்து விடுகிறார்!  அது உள்ளே தேங்கி இருக்கும் மழைத் தண்ணீரில் வந்து விழுந்து (வழக்கம்போல) ஊறத் தொடங்குகிறது!  


     கீழே இறங்கி வந்தால் பக்கத்து வீட்டுக் காரர்கள் எல்லாம் தண்ணீர் வீணாகி ஓடி, அவர்கள் வாசலைப் பாழ்படுத்துவதாச் சொல்லிக் கோபப்படுகிறார்கள்.  (எங்களுக்குப் பக்கத்தில் வீடே கிடையாது)


     இரண்டு மூன்று பேர்கள் என் "பங்களா"வுக்குள் (நிஜத்தில் நான் இருப்பது பங்களா இல்லை.  சிறு வீடுதான்) வந்து கீழே இருக்கும் என் மின்சார மீட்டர் பாக்ஸை செக் செய்கிறார்கள்.  நான் மறுக்க மறுக்க அங்கிருக்கும் சுவிட்ச் ஒன்றை அவர்கள் போட, "புஷ்...." என்று ஒரு சத்தம் வருகிறது.  


     "ம்ம்ம்...  'Air'  சரி செய்து விட்டேன்.  இனி இப்படி வராது"  என்கிறார் ஒரு கைலி. 


     "நமக்கும் இனி ஒழுங்காய்த் தண்ணீர் ரொம்பும்" என்கிறார் ஒரு மடித்த வேஷ்டி!

     "என்னங்க சம்பந்தம்?  இங்கே தண்ணீர் மோட்டார் ஒன்றும் இல்லை.  அங்.... க இருக்கு... அதாவது எங்கள் மோட்டார்  இந்தத் தெரு முனையில் ஒரு சர்ச் இருக்கே... அங்க இருக்கு... அதுக்கு எதிர்த்த பில்டிங்"  என்கிறேன் நான்!  (தெருவே கிடையாது.  இந்த அடையாளங்கள் என் சகோதரியின் வீட்டு அடையாளத்துடன் ஒத்துப் போகிறது)


Image result for girl riding a bicycle clip art images
     அவர்கள் வெளியில் செல்ல, சைக்கிளில் என்னைத் தாண்டிச் செல்கிறாள் என் காதலி  (இது சுமார் முப்பது வருடங்களுக்கு முந்தைய நிஜம்.)  நான் நிமிர்ந்து புன்னகைத்து சைகை காட்டுமுன் வீட்டுக்குள்ளிருந்து என் மகன் (இது இப்போதைய நிஜம்) வருவதை பார்த்து ஒன்றும் தெரியாதது மாதிரி நின்று விடுகிறேன்.  சற்று தூரத்தில் மறையும் அவள் (இதில் ட்விஸ்ட் என்ன என்றால் இவள்தான் இப்போது என் மனைவி) முகத்தில் கோபம் தெரிவதைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே ஒரு நாய் மூன்று குட்டிகளுடன் உள்ளே ஓடிவந்து, என் காலை மூன்று முறைச் சுற்றி விட்டு விழுந்து விடுகிறது.  மூன்று குட்டிகளில் ஒன்றும் விழுந்து விடுகிறது.  "என்ன ஆச்சு?" என்று அருகில் சென்று பார்க்கிறேன்.

Image result for dream clip art images     கனவு முடிந்து விட்டது.   மணியைப் பார்க்கிறேன்.  காலை மணி மூன்றரை.  என்ன அர்த்தம் மேடம்?  என்ன அர்த்தம் ஸார்?  என்னவாக இருக்கும்?  பதில் சொல்லிவிட்டுப் போங்களேன் ப்ளீஸ்...
படங்கள்  ::  மிக்க நன்றியுடன் இணையத்திலிருந்து....


      

69 கருத்துகள்:

 1. நீண்ட கனவு.... :)

  பல கனவுகள் நினைவில் இருப்பதில்லை. சம்பந்தமே இல்லாது இப்படி சில சமயங்களில் கனவுகள் வருவதுண்டு. கனவு என்று தெரிந்து எழுந்ததுமே மறந்தும் போய்விடுகிறதே!

  பதிலளிநீக்கு
 2. அருமையான கதை! எனக்குக் கனவுகளே நினைவில் இருப்பதில்லை. நல்லவேளை! :)

  பதிலளிநீக்கு
 3. இது போன்ற கனவுகள் வருவது நாம் படுக்கப் போகுமுன் யார் யாரைப் பற்றி அல்லது எதெதைப்பற்றி நினைக்கிறோம் என்பதையும்,அதற்குத் தீர்வு இதுவோ என்று யோசித்தபடி வருவது.சில நேரங்களில் கனவில் பார்த்த நிகழ்ச்சிகள் அப்படியே நடப்பதும் அரிதாக நடக்கும்.

  பொதுவாக, துர்சொப்பனங்கள் வருவதைத் தவிர்க்க படுக்குமுன் மனதிலுள்ள அன்றைய நிகழ்வுகளை நீக்கி அரைமணி நேரம் இறை தியானம் செய்தல் நலம தரும்.

  என் மாமியார் என் மகனுக்கு சிறு வயதில் துர் சொப்பனங்கள் வராதிருக்க ஆஞ்சநேய ஸ்லோகம் ஒன்றைச் சொல்லித் தந்திருக்கிறார். இரண்டே வரிகள்தான்...!! எனக்கது நினைவில்லை; அவனுக்கு நினைவிருந்தால் கேட்டுப் பார்க்கலாம்...!!!

  பதிலளிநீக்கு
 4. இது போன்ற கனவுகள் வருவது நாம் படுக்கப் போகுமுன் யார் யாரைப் பற்றி அல்லது எதெதைப்பற்றி நினைக்கிறோம் என்பதையும்,அதற்குத் தீர்வு இதுவோ என்று யோசித்தபடி வருவது.சில நேரங்களில் கனவில் பார்த்த நிகழ்ச்சிகள் அப்படியே நடப்பதும் அரிதாக நடக்கும்.

  பொதுவாக, துர்சொப்பனங்கள் வருவதைத் தவிர்க்க படுக்குமுன் மனதிலுள்ள அன்றைய நிகழ்வுகளை நீக்கி அரைமணி நேரம் இறை தியானம் செய்தல் நலம தரும்.

  என் மாமியார் என் மகனுக்கு சிறு வயதில் துர் சொப்பனங்கள் வராதிருக்க ஆஞ்சநேய ஸ்லோகம் ஒன்றைச் சொல்லித் தந்திருக்கிறார். இரண்டே வரிகள்தான்...!! எனக்கது நினைவில்லை; அவனுக்கு நினைவிருந்தால் கேட்டுப் பார்க்கலாம்...!!!

  பதிலளிநீக்கு
 5. நீங்கள் பாதி தூக்கம், பாதி நினைவு, பாதி ஏக்கம், எல்லாம் கலந்து பாதி விழிப்பு நிலையில் நிகழ்ந்தவை.
  தூங்குவதற்கு முன்னால் ஒரு டம்ப்ளர் சூடாகப் பால் சாப்பிடவும்.
  என் கனவில் ஒன்பது கஜம்கட்டிய மாமிகள் வந்து குழப்பினார்கள்.
  சேன்னு போச்சு.அதுவும் 3 மணிக்கு தான்.

  பதிலளிநீக்கு
 6. பெரும்பாலும் கனவுகள் நினைவில் நிற்பதில்லை
  கனவுகள் என்றோ நடந்த நிகழ்வுகளை, நாம் முற்றாய் மறந்த
  நிக்ழ்ச்சிகளில் இருந்து கூட தோன்றலாம்,என்று படித்த நினைவு

  பதிலளிநீக்கு
 7. //பாரதி said...
  இது போன்ற கனவுகள் வருவது நாம் படுக்கப் போகுமுன் யார் யாரைப் பற்றி அல்லது எதெதைப்பற்றி நினைக்கிறோம் என்பதையும்,அதற்குத் தீர்வு இதுவோ என்று யோசித்தபடி வருவது.சில நேரங்களில் கனவில் பார்த்த நிகழ்ச்சிகள் அப்படியே நடப்பதும் அரிதாக நடக்கும். //

  அப்புடீன்னா அவருக்கு, அனுதினமும் அனுஷ்கா கனவு இல்லே வரணும்!!

  பதிலளிநீக்கு
 8. கனவுகளுக்கு காரணம் தாங்கள் சொன்ன உறக்கம் சரியில்லை என்பதுதான் சரியாகும்
  கடுமையான உழைப்பாளி நல்ல உறக்கம் கொண்டு எழுகிறான் அவர்களிடம் கேட்டுப்பாருங்கள் கனவு வரவில்லை என்றே சொல்வார்கள்.

  அவனா நீ ஹிஹிஹி இரசித்தேன் நண்பரே.

  பதிலளிநீக்கு
 9. ஒன்று மட்டும் நிஜம். கனவுகள் நிஜங்களின் நிழல் என்பது மட்டும் நிஜம். அதனால் தான் அந்த நிழல்கள் நிஜங்களின் சாயைகளிலேயே (சாயை= நிழல்) தூக்கத்தில் உலா வருகிறது. சும்மா இருக்கிற நேரத்திலேயே கற்பனை பண்ணுகிறவர்கள், தூக்கத்தில் கற்பனை பண்ண மாட்டார்களா, என்ன?.. அதனால் நிஜங்களோடு துண்டு துண்டாக கற்பனைகளும் சேர்ந்து நிஜத்தில் இல்லாத நடக்காத நடவடிக்கைகளையும் சேர்த்துக் கொள்கிறது. இதனால் தான் முந்தைய நிஜம், இப்போதைய நிஜம் எல்லாம் கலந்து கட்டி கோர்வையாக ஒரு நிகழ்வு நடப்பது போலவே கனவுகள் தூக்க அசதியில் நம்மை ஆக்கிரமிக்கின்றன. நடந்தவைகள் தான் கனவில் காணும் சாத்தியம் என்பதால் நாளைய நிஜங்கள் கனவில் வருவதில்லை.

  கனவுக்கு பலன் என்பது உடான்ஸ். கனவுகள் சுத்த சுயம்பிரகாச நம் கற்பனை வலைப்பின்னல்கள்.

  பதிலளிநீக்கு
 10. பெரும்பாலான கனவுகள் நினைவில் நிற்பதில்லை. ஆனால் விதி விலக்குகளும் உண்டு. என் சின்ன வயதில் அடிக்கடி காணும் கனவு நான் புவி ஈர்ப்பை மீறி அந்தரத்தில் பறக்கும் சக்திபெற்றவனாகத் தெரிந்தேன்(கனவில்தான் )விழித்ததும் அந்த மாதிரி இருக்க இயலாதா என்னும் ஏக்கம் அண்மையில் கண்ட கனவு நினைவில் நிற்க அதுவே ஒரு சிறுகதை ஆயிற்று.கனவில் காணும் உடலை ஸ்தூல சரீரம் என்று சொல்வார்கள் நிஜத்தில் உணர்வது சூக்கும சரீரம் கனவுகள் பற்றிய ஒரு ஆராய்ச்சித் தொகுப்பே ஜீவி எழுதி இருக்கிறார்

  பதிலளிநீக்கு
 11. # இவள்தான் இப்போது என் மனைவி#
  கனவு நனவான பிறகும் ,காதலி கனவில் வருகிறாள்(ர்) என்றால் கொடுத்து வைத்தவர்தான் நீங்கள் :)

  பதிலளிநீக்கு
 12. ஸ்ரீராம் எழுதியவைகளைப் படித்தால், இது ஒரு 'நாளில் கண்ட கனவுபோல் தெரியவில்லை. பல கதாசிரியர்கள் (வாண்டுமாமா உள்பட) எழுதிய கதைகளை ஒரு உண்டியலில் குலுக்கி, பேப்பர்களைப் பிய்த்து ஒரு சிறுகதை தயார் பண்ணியதுபோல் இருக்கிறது.

  கௌதமன் சாருக்கு ஸ்ரீராம் மேல் என்ன காண்டோ... அனுஷ்கா பெயரை இழுத்துவிட்டு, வார இறுதி சமையலை ஸ்ரீராமே செய்யும்படிப் பண்ணுகிறார். (பாஸ் கோபப்பட்டா சாப்பாட்டுக்கு என்ன செய்யறது)

  "நாளைய நிஜங்கள் கனவில் வருவதில்லை" - ஜிவி சார்... இது சரியான அனுமானம் கிடையாது. எனக்கு இருமுறை பின்னால் நடப்பது, (ஒன்றில் மாதம் தேதி முதற்கொண்டு சரியாக) கனவில் வந்துள்ளது. இதைச் சரிபார்த்துள்ளேன். ஆனால், இதனைக் கனவு என்று என் ஆபீஸ் பாஸ் நம்பவில்லை (கனவு நடந்த மறு'நாள் அவரிடம் மட்டும் சொன்னேன். அவர் நிஜமாகவே ச்த்ய சாய்பெ என்னிடம் வந்து சொல்லியிருக்கிறார். அது நடக்கும் என்றார்) அதேபோல் சில மாதங்களில் நடந்தது. கனவு நம்மிடம் சில சமயம் ஏதோ சொல்லுகிறது என்பது உண்மை.

  பதிலளிநீக்கு
 13. "நாளைய நிஜங்கள் கனவில் வருவதில்லை" - ஜிவி சார்... இது சரியான அனுமானம் கிடையாது.

  -- நெல்லைத் தமிழன்.
  அன்பு நெல்லைத் தமிழன்,

  ஒரு விஷயம் உங்கள் சிந்தனையில் இருந்து அது கனவாக வந்து அதுவே பின்னால் நடந்தால் அது நான் சொன்ன நாளைய நிஜம் கணக்கில் வராது.

  உதாரணமாக ஒரு பத்திரிக்கைக்கு நீங்கள் கதை அனுப்பியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது அரஸ் படங்களுடன் பிரசுரமாகி அந்த இதழை நீங்கள் புரட்டிப் பார்ப்பதாக கனவு வந்து, பின்னால் அந்தக் கதை நிஜமாகவே பிரசுரமானால் (ஓவியர் வேண்டுமானால் மாறியிருக்கலாம்) அது நாளைய நிஜம் முன்னாலேயே கனவாக வந்து விட்டதாகக் கணக்கில் கொள்ளக் கூடாது.

  நான் சொன்னது, உங்கள் சிந்தனையிலேயே புரளாத விஷயம் கனவாக வந்து அது அடுத்து நாளைய நிஜமாக இருந்தால் தான்.

  பதிலளிநீக்கு
 14. கனவுகள் பற்றிய ஒரு ஆராய்ச்சித் தொகுப்பே ஜீவி எழுதி இருக்கிறார்
  -- ஜிஎம்பீ

  நல்ல நினைவாற்றல் ஐயா உங்களுக்கு. நன்றி.

  உங்கள் பதிவுகளைப் படிக்கும் பொழுதே எந்தக் காரணத்திற்காக இந்த வரி வந்திருக்கிறது என்று சட்டென்று நிகழ்ந்தது என் நினைவுக்கு வரும். உங்கள் சமீபத்திய பதிவில் கூட இரண்டு இடங்களில் அப்படி நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
 15. மிக நீண்......ட கனவாயிருக்கிறதே. டிவி சீரியல் மாதிரியே துண்டு துண்டாக வந்திருக்கிறதே. கனவை ரசித்து விடுங்கள்.

  பதிலளிநீக்கு
 16. 'நன்றி ஜீவி சார். உங்கள் மெயில் ஐடி தெரியவில்லை. ஜி.எம்.பி சார் சொன்னதைப் பார்த்தேன். உங்கள் தளத்தில் கனவுகளைப் பற்றிய உங்கள் இடுகைகளைத் தேடிப் படிக்கிறேன்.

  "ஒரு விஷயம் உங்கள் சிந்தனையில் இருந்து அது கனவாக வந்து அதுவே பின்னால் நடந்தால் அது நான் சொன்ன நாளைய நிஜம் கணக்கில் வராது." - நீங்கள் ஆக்ரா போய் தாஜ்மஹாலைப் பார்க்கணும் என்பது உங்கள் சிந்தனை. ஒரு நாள் கனவில் உங்களுக்கு ஒருவர் வந்து ஆகஸ்டு 6ம்தேதி தாஜ்மஹாலைப் பார்ப்பாய் என்று சொல்லி, அது உங்களுக்குத் தெரியாமலேயே நடந்தால் அதுவும் நீங்கள் சொன்ன கணக்கில் வராதா?

  ஸ்ரீராம் சொன்ன 'யானை துரத்துவதுபோல் கனவு' மாதிரி, எனக்கும் நிறையதடவை, பறவையாகப் பறப்பது கனவில் வந்துள்ளது. சில சமயம் கீழே விழுவதுபோலும் கனவு வந்துள்ளது. இது ஒருவேளை, விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களுக்கு முன் காட்டியதுபோல் முந்தைய பிறவிகளின் தொடர்ச்சியாக இருக்கலாம். யார் கண்டது.

  பதிலளிநீக்கு
 17. நன்றி வெங்கட். காலை கனவு மறக்குமுன்பு எழுதி வைத்து விட்டேன்!! மேலே சொல்லி இருப்பதெல்லாம் பழைய கனவு!

  பதிலளிநீக்கு
 18. நன்றி கீதாக்கா.. 'சுருக்கப் பின்னூட்ட விரதம்' இருக்கிறீர்கள் போல!

  பதிலளிநீக்கு
 19. நன்றி பாரதி... துர் சொப்பனங்கள் இல்லாமல் இருக்க கால் கழுவிக் கொண்டு படுக்கச் சொல்லி சிலர் சொன்னதுண்டு. ஏதோ ஸ்லோகம் சொன்ன பிறகுதான் யானை துரத்தும் கனவுகள் வந்தன. எனவே அது போன்ற கனவுகள் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை!! ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 20. வாங்க வல்லிம்மா.. நான் தூங்கப்போகும் முன் ஒரு டம்ளர் சூடாக விவா சாப்பிடுகிறேன். பால்தான் சாப்பிடணுமா, விவா போன்ற பானங்கள் ஆகாதா என்று சொல்லவும்! ஹிஹிஹி...

  பதிலளிநீக்கு
 21. கனவா...? அப்படி என்றால்...?

  பரவாயில்லை...

  படுத்தவுடன் தூக்கம் வருபவர் தான் "உலகிலேயே மிகச் சிறந்த செல்வந்தர்"....!

  பதிலளிநீக்கு
 22. வாங்க நண்பர் கரந்தை ஜெயகுமார். உண்மை நீங்கள் சொல்வது. மறந்து விட்டசம்பவங்கள் கூட கனவில் வரும்தான். நம்மிடமிருந்து மறைந்துபோன உறவுகள் கனவுகளில் வருகிறார்களே...

  பதிலளிநீக்கு
 23. வாங்க வாங்க Kg gouthaman உங்கள் சந்தேகம்தான் எனக்கும். அனுஷ் ஒரு வாட்டி கூட கனவில் வந்தது இல்லை. ஏன் அப்படி?

  பதிலளிநீக்கு
 24. வாங்க கில்லர்ஜி. சந்தடி சாக்கில் நான் கடுமையாக உழைக்கவில்லை என்று சொல்லி விட்டீர்கள்! உங்கள் கனவில் வந்து அதற்கு நான் பதில் சொல்கிறேன்! :)))

  பதிலளிநீக்கு
 25. வாங்க ஜீவி ஸார்.. கனவுகள் கற்பனைகள் என்பதை ஒத்துக்க கொள்ள முடியவில்லை. என் அம்மா மறைந்த சமயம். என் கனவில் அம்மா வந்தார். ஆங்கிலம் தெரியாத என் அம்மா கனவில் ஆங்கிலத்தில் பேசினார். "நான் ஹேமா (என் அம்மா) இல்லை, என் பெயர் துர்கா.. வருத்தப்படாதே.. உனக்கு வேண்டிய சமயங்களில் நான் உன் பக்கத்தில் இருப்பேன்" என்றார்.

  இதை மறுநாள் தொலைபேசியில் என் அப்பாவிடம் சொன்னபோது அவர் ஆச்சயப்பட்டுப் போனார். முதல்நாள் இரவு அவரைப் பார்க்க வந்திருந்த நண்பர் ஒருவர் இவர் சொகத்தைப் பார்த்து விட்டு துர்கா ஸ்தோத்ரம் ஒன்றைச் சொல்லி அதை அடிக்கடி சொல்லுமாறு சொல்லி விட்டுப் போனாராம். அப்பாவுக்கு அப்போது என்ன குறை என்றால் "உன் கனவில் வந்தாளே, என் கனவில் ஹேமா ஏன் வரவில்லை?" நான் சொன்னேன், "அப்பா.. அவங்கதான் தான் ஹேமா இல்லை.. துர்கா என்றார்களே..." அப்பா "போடா" என்று ஃபோனை வைத்து விட்டார்.

  நான் பார்த்தே இராத என் அப்பாவின் அப்பா ஒருமுறை என்னுடைய சிவவயதில் கனவில் வந்து என் இடது முழங்காலை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொன்னார். அதுத ஓரிரு நாட்களில் என் இடது முழங்காலில் தையல் போடும் அளவு காயம் விழுந்தது!

  பதிலளிநீக்கு
 26. வாங்க ஜி எம் பி ஸார்...பறக்கும் ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் ஆசை. பறக்கும்போது விழுந்துடுவோமோ என்று பயம் வருவது என்னைப்போன்ற சந்தேகப் பிராணிகளின் சந்தேகம்!

  பதிலளிநீக்கு
 27. வாங்க நெல்லைத் தமிழன்.. மேலே யானைகள் பற்றி நான் சொல்லி இருப்பது பழைய கனவுகள். கீழே இருப்பதைத்தான் லேட்டஸ்ட்!!

  எழுத்தால் எழுதும்போதும், படிக்கும்போதும் நீளமாகத் தெரியலாம். மேலும் எனக்குப் புரிந்து கொள்ளக் கூடிய சுய உணர்வுள்ள காட்சிகளை வாசகர்களுக்குப் புரியும்படி விளக்கிச் சொல்லவேண்டி, விளக்கம் சொல்லி எழுதும்போது நீளமாகி விடுகிறது!

  அதேபோல கேஜிஜி அனுஷ்கா பற்றி சொல்லியிருப்பதற்கு ஒரு காரணம் உண்டு! அதற்கு நீங்கள் ஃபேஸ்புக்கில் இருந்திருந்தால் தெரிந்திருக்கும்!

  பதிலளிநீக்கு
 28. மீள் வருகைக்கு நன்றி ஜீவி ஸார்.. நீங்கள் நெல்லைத் தமிழனுக்கு சொல்லியிருக்கும் பத்திரிக்கை உதாரணத்துக்கு ஏற்கெனவே மேலே நான் சொல்லியிருக்கும் அம்மா அப்பா விஷயம் பொருந்தும் என்று தோன்றுகிறது!

  பதிலளிநீக்கு
 29. நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்

  பதிலளிநீக்கு
 30. மறுபடியும் வாங்க நெல்லைத் தமிழன்!! மீள்வருகைக்கு நன்றி! ஜீவி ஸார் சொல்லியிருப்பதை நான் வேறு கோணத்தில் பார்க்கிறேன். அவருடைய பதில் வேறாக இருக்கலாம்.

  நாடி ஜோதிடர் முதல், ஜாதகம் பார்ப்பவர்கள் வரை, தங்கள் பிரச்னைகளுக்கு அவர்களைச் சென்று பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். "அப்படியே சொல்றார் ஸார்..." என்பார்கள். அதாவது சிலர் நம்மை, நாம் அவர்களிடம் சொல்லாமலேயே நம் பெயர் சொல்லியே அழைப்பார்கள். இதுவரை நம் வாழ்வில் நடந்ததை அப்படியே புட்டுப்புட்டு வைப்பார்கள். எப்படித்தான் இதெல்லாம் சொல்கிறார்களோ என்று தோன்றும். (எனக்கு சென்னையில் அப்படிச் சொல்பவர்கள் இரண்டு பேரைத் தெரியும்) அதே சமயம் எதிர்காலம் பற்றி அவர்கள் சொல்வது 20 சதவிகிதம் கூட நடக்காது (இதிலும் ஒருவருக்கு அவர் சொன்னது தேதிப்படி அப்படியே நடந்தது. அவர் ஒரு மலையாள ஜோதிடர்). அப்படியே நடந்தாலும் கா.உ. பப. வி கதைதான்! அது போல நாம் அறியாத, அறிய முடியாத எதிர்காலச் சிந்தனைகள், கவலைகள் கனவில் வராதோ என்னவோ.. எனக்கும் அந்தச் சந்தேகங்கள் உண்டு! ரீ இன்கார்னேஷன், ஈ எஸ் பி போன்றவை தனி டிபார்ட்மெண்ட்டோ என்னவோ..

  பதிலளிநீக்கு
 31. நன்றி DD. எனக்குத் தூக்கத்துக்குக் குறையில்லை!

  பதிலளிநீக்கு
 32. பஸ்ஸை பிடித்த கனவுக்கு உங்கள் லட்சியத்தை அடைவீர்கள்.

  யானை கனவு வந்தால் எங்கள் குடும்பத்தில் குலதெய்வ பிராத்தனை செய்ய நினைவூட்டுகிறார் சாஸ்தா என்பார்கள். யானை வாகனம் சாஸ்தாவிற்கு.

  இப்போது குலதெய்வம் கோவில் போய் விட்டு வந்தீர்கள் தானே! அது தான் இப்போது யானை வருவது இல்லை.

  உங்கள் அம்மா கனவில் வருவது போல் எனக்கும் அப்பா வருவார்கள், அம்மா, அக்கா, அண்ணன் எல்லாம் வருவார்கள் அடிக்கடி அவர்களிடம் பேசுவேன்.

  அப்பா இரவு இறந்து இருக்கிறார்கள், எனக்கு அன்று இரவு கனவில் வந்தார்கள். செய்தி கேட்டு தான் ஊருக்கு போனேன். ராத்திரி என்னிடம் அம்மாவை பார்த்துக்கோ என்று சொல்லி போனார்கள்.

  திடுக்கிட்டு விழிப்பேன் கனவில் கீழே விழுவது போல் இருக்கும்.

  பாஸின் கோபத்திற்கு காரணம் கண்டு பிடித்து சரி செய்து விடுங்கள்.
  சந்தோஷ கனவு காணுங்கள்.  பதிலளிநீக்கு
 33. கனவு கண்ட பின் விளித்திடுவோம் - தங்கள்
  பதிவைக் கண்டதும் சற்றுச் சிந்தித்தோம்!

  பதிலளிநீக்கு
 34. பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு குழந்தை ரூமுக்குள்ளிருந்து தத்தக்கா பித்தக்கா தளர் நடையில் நடந்து செல்கிறது. நான்
  எழுந்து அருகில் போகும்போது டைனிங் ஹாலில் உள்ள மேஜைக்கு அடியில் (சற்று பெரிய மேஜையாக்கும்) சென்று மறைந்து விடுகிறது குழந்தை. அந்த இடத்தில் கொலு பொம்மைகள் போல சில பொம்மைகள் (நிஜத்தில் அங்கு பொம்மைகள் கிடையாது - எங்கள் வீட்டில் கொலு வைக்கும் பழக்கமும் கிடையாது). அதில் இது மறைந்த பொம்மை லேசாக ஒளிர்ந்து நின்றது போல பிரமை!//

  இந்திராசெளந்திரராஜன் கதை ஏதாவது இரவு தூங்கும் முன் படித்தீர்களா?

  பதிலளிநீக்கு
 35. My experience is also like Smt Gomathi Arasu. I haven't had a single night's sleep without dream. Felt dejavu when what I dreamt happens in real life!! Had some problems solved thro dreams also!!

  பதிலளிநீக்கு
 36. என்ன ஸ்ரீராம் கனவுகள் என்று தலைப்பிட்டதும் ஆஹா ஸ்ரீராம் வண்ண வண்ண கனவுகளைபற்றி சொல்லி நம்மை கிளுகிளூ குளூகுளு என்று ஆக்கிவிடுவார் என நினைத்து வந்தேன் ஹும்ம்ம்ம்ம் இன்னும் சின்னபுள்ளை கனவுகாண்பது மாதிரியல்லவா கனவு காண்கிறார். கடவுளை இவருக்கும் வண்ணக் கனவுகளை இனிமேல் தாருமய்யா

  பதிலளிநீக்கு
 37. கனவுகள் என்பது நாம் பார்த்த அனுபவித்த கேட்ட உணர்ந்த நிகழ்வுகளை மட்டும் மீண்டும் நம் நினைவிற்குள் கொண்டு வரும் உதாரணமாக 20 வருடங்களுக்கு முன்பு யார் கனவிலும் செல்போனே வந்து இருக்காது ஆனால் இப்போது பலரின் கனவுகளில் செல்போன் பற்றிய பல நிகழ்வுகள் கனவில் வந்து கொண்டிருக்கும்

  பதிலளிநீக்கு
 38. வித்தியாசமான கனவாக இருக்கிறது! கனவுகள் கற்பனை இல்லை என்பது மட்டும் நிஜம்! இந்த கனவுகளுக்கும் உங்கள் வாழ்க்கைக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 39. வாங்க கோமதி அரசு மேடம்...

  //இந்திராசெளந்திரராஜன் கதை ஏதாவது இரவு தூங்கும் முன் படித்தீர்களா?//

  ஹா.... ஹா.... ஹா... இந்த வரிகளை படித்ததும் சிரிப்பு வந்து விட்டது!

  குலதெய்வம் கோயிலுக்கு 98 ஆம் வருடம் போனது.. அப்புறம் போகவில்லை! எப்படியோ தட்டிக் கொண்டே போகிறது. எங்களுக்கும் சாஸ்தா வழிதான் குலதெய்வம்.

  //பாஸின் கோபத்திற்கு காரணம் கண்டு பிடித்து சரி செய்து விடுங்கள்.//

  ஹிஹிஹி... அது பாஸ் ஆவதற்கு முன்னாடி இல்லே கோபம்! அதுவும் கனவிலே...!

  சந்தோஷக் கனவு மட்டும் வருவதற்கு வழி ஏதும் உண்டா? :))

  பதிலளிநீக்கு
 40. நன்றி மிடில்க்ளாஸ்மாதவி...கனவில்லாத இரவே இல்லையா? அட! கனவை விடுங்கள். சில சமயங்களில் ஏதாவது திரைப்படத்தில் அந்த இடத்தைப் பார்த்திருப்போம். அது நினைவில் இருக்காது. ஆனால் அந்த இடத்தை நேரில் பார்க்கும்போது ஏற்கெனவே அந்த இடத்துக்கு வந்திருப்பது போலத் தோன்றும்!

  பதிலளிநீக்கு
 41. வாங்க மதுரைத்தமிழன்... நீங்க எதிர்பார்க்கற மாதிரி கனவெல்லாம் வந்தாலும் இங்கே சொல்ல முடியுமா? என் முதுகு என்னாவது! உங்களுக்காவது பூரிக்கட்டைதான். எனக்கு செஃப் மாஸ்டர் இருக்கிறது. ரொம்ப கனம் தெரியுமில்லே... நாங்க ரொம்ப நல்லவங்களாக்கும்! இரண்டாவதாக நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். தெரிந்த, அறிந்த சமாச்சாரங்களில் மட்டுமே கனவுகள் வரும்!

  பதிலளிநீக்கு
 42. எனக்கு கனவு வராத நாளே இல்லை ..என் கணவர் சொல்வார் என்னை தூங்கவே வேணாம்னு :) அவ்ளோ night mares

  ஆனா எல்லாமே நடந்திருக்கு ..ஒருமுறை மாடு அதுவும் கருப்பு ஸ்பானிஷ் bull துரத்தர கனவு வந்தது ..இந்த மாதிரி கனவு வந்தா உயி1ருக்கு . aabathaam.அதே போல கஷ்டப்பட்டு உயிர் பிழைச்சேன் ..
  ட்ரெயின் போகும் eஎன்னால் பிடிக்க முடியாது மிஸ் பண்ணுவேன் ..அது படிக்கிற காலத்தில் வரும் ..அதுவும் சரியா வரும் ..முதல் ரேங்க் தவர் விடும்போது 2 மார்க்கில் தவறவிட்டுப்போவும்

  யாருக்கோ எதுக்கோ ஆபத்துன்னாலும் எனக்கு கனவு வருது ...ஒரு நாள் கருப்பு யானை தரையில் சைட் பொசிஷன்ல படுத்தமாதிரி கனவு அடுத்த நாள் நான் பார்த்தது எங்க காரை அது கருப்பு Volkswagen கார் கராஜ்ல திருப்பி போட்டு பார்க்கிறாங்க மெக்கானிக்ஸ் ..

  ஒரு பெண்மணி அவர் கணவர் ஆக்சிடண்டில் இறந்தார் நான் இந்த இருவரை பற்றி ஒரு இடத்தில படித்தேன் புகைப்படம் மட்டுமே பார்த்திருக்கேன் மற்றபடி எந்த தொடர்புமில்லாத அவர்கள் பற்றிய விஷயம் அவர் கணவர் இறந்த அந்த நாள் காலை எனக்கு கனவா வந்தது இரண்டு நாள் கழித்தே அறிந்தேன் அவர் இறந்த விஷயம் .பயத்தில் நடுங்கிட்டேன் ..

  உங்களுக்கு காதலி குழந்தைகள்லாம் வராங்கன்னு சந்தோஷப்படுங்க :) நாய்க்குட்டி கனவு அநேகமா போன வருஷம் புயல் மழை இப்ப இந்த வருஷமும் வருமான்னு தூங்குமுன்ன யோசிச்சிருப்பீங்க ..


  நான் ஆலயத்தில் சண்டே சர்விசுக்கு திருவிருந்து ஆயத்தம் altar அரேஞ்சமண்ட் செய்வேன் ஒரு நாள் இரவு அந்த தட்டுக்கள் அதில் உள்ள அப்பங்கள் விழுந்து சிதறுவது போல கனவு அடுத்தநாள் ஒரு பாதிரியார் அப்பங்களை கொடுக்கும்போது அவர் ஷூ தடுக்கி விழுந்தார் !!! இப்போல்லாம் தூங்கவே பயமா இருக்கு

  இப்போ சொல்லுங்க நான் காணும் கனவுகள் விடவா உங்க கனவுகள் மோசம்

  கல்யாண கனவு கண்டு பயந்தேன் அடுத்த நாள் எங்க வீட்டு மெலனி 9 வயது தங்க மீன் சாமிகிட்ட போயிட்டா :(

  அப்புறம் முக்கியமான விஷயம் சில நேரம் gluten உள்ள பொருட்கள் அதிகம் உணவில் இரவில் சேர்த்தால் அது இப்படி குழப்பமான கனவுகளை வர வைக்குமாம் .நீங்க சாப்பிடும் hot viva வில் நிச்சயம் அது அதிகமுண்டு அதனால் கொஞ்சம் நாளைக்கு வல்லிம்மா சொன்ன மாதிரி சூடான பால் சர்க்கரை இல்லாமல் குடிக்கவும் ..

  பிரபல பதிவர் ஒருவரிடமிருந்து சமையல் குறிப்பு கேட்டு மடல் வர மாதிரி கனவு கண்டேன் :) மடல் வந்தது வேறு குறிப்பு கேட்டு

  அதேபோல அவர் கொடுத்த நாளுக்குள் அதை முடிக்க நேரம் இருந்தது ஆனால் அன்றே முடிக்க உள்ளுணர்வு சொன்னது ,,அதை முடித்து அனுப்பினதும் என் கணினியில் உள்ள தமிழ் fonts எல்லாம் போச்சு ..இப்போ கூட மகள் கிட்ட லாப்டாப் கடன் வாங்கி டைப்பறேன் ..

  பதிலளிநீக்கு
 43. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 44. வாங்க ஏஞ்சல்..

  //பிரபல பதிவர் ஒருவரிடமிருந்து சமையல் குறிப்பு கேட்டு மடல் வர மாதிரி கனவு கண்டேன் :) மடல் வந்தது வேறு குறிப்பு கேட்டு //

  என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன்! முன்னுரை ஏதாவது கேட்டாரா?!!

  உங்கள் கனவுகள் எல்லாம் ஏதாவது ஒரு விதத்தில் நிஜமாவது ஆச்சர்யமாய் இருக்கிறது.

  விவா சாப்பிடுவதில் இப்படி ஒரு ஆபத்தா! கனவு வந்தாலும் வரட்டும்.. விவாவை விடுவதாயில்லை!!

  //இப்போ சொல்லுங்க நான் காணும் கனவுகள் விடவா உங்க கனவுகள் மோசம் //

  நான் மோசம் என்பது போலவா எழுதியிருக்கேன்? ஓ... ஜீஸஸ்! இல்லைன்னே நினைக்கறேன்! சும்மா ஜாலியாத்தானே எழுதி இருக்கேன்னு நினைச்சுக்கிட்டிருக்கேன்! :))))

  பதிலளிநீக்கு
 45. வாங்க ஏஞ்சல்...

  //chacho oru 10 posts ku poda vendiya comments motthamaa pasted //

  உங்க பாணில பார்த்தா ஒரு வருஷ கமெண்ட்டை மொத்தமா கொடுத்துட்டீங்க போல!! :))))  //Apart from dreams I have this something tells me intuition too //

  அப்போ பின்னூட்டம் தொடருமா? ஐ ஆம் வெயிட்டிங்!

  பதிலளிநீக்கு
 46. சில கனவுகள் வாழ்க்கையின் பின் நடப்பதை முன் கூட்டி உணர்த்தும் என்பதாக சொல்லி கேள்விப்பட்டிருக்கின்றேன்! நான் பிசினஸிலொ, சொந்த விடயத்திலோ மனம் சோர்ந்து கவலையாய் இருக்கும் நேரம் எங்கல் அப்பாவின் இறந்து போன தங்கை கனவில் வந்து நான் இருக்கின்றேன் கவலைப்படாதே! எல்லாம் நல்லதா நடக்கும் என சொன்னது போல் கனவு கண்டிருக்கின்றேன். எப்போவாவது பல் விழுவது போல் கனவு வரும், இறந்த ஆத்மா கான்வில் வருவது நல்லது என்பார்கள். பல் விழுந்தால் நோயால் பாதிக்கப்படுவோம் என சொல்வார்கள்.உங்கள் கனவு நீண்டதாயிருந்தாலும் நினைவில் இருப்பது ஆச்சரியம் தான்.

  பதிலளிநீக்கு
 47. ji the great psychologist SIGMUND FRAUDIE had written a wonderful book on dreams...
  also one should consult a PSYCHIATRIST and PSYCHOLOGIST if you feel you are constantly disturbed/troubled by your dreams....

  பதிலளிநீக்கு
 48. பரவாயில்லை.ஒரு நீண்ட பதிவு எழுதும் அளவுக்கு நினைவில் வருகிறது கனவு உங்களுக்கு.
  இந்த வாழ்க்கையே ஒரு கனவு தானோ என்று சில சமயம் தோன்றுவதுண்டு

  பதிலளிநீக்கு
 49. ஹா ஹா உங்க கனவுகள் ..ஒண்ணுமில்லைன்னு சொல்ல வந்தேன் ..இரவு படுத்தவுடன் கனவு வந்து அதை மறந்து போறவங்க ரொம்பவே கொடுத்து வச்சவங்க ...

  btw ..யானை துரத்தர கனவு ஜாலியா awwww

  பதிலளிநீக்கு
 50. வாங்க நிஷா.. உங்கள் அத்தை மேல உங்களுக்குரொம்பப் பிடிப்பு, பாசம் இருக்கு என்று தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 51. வாங்க Nat Chander கனவுகளால் நான் பாதிக்கப்படவில்லை! எனக்கு ஒரு பதிவு தெரியாது. நிறைய பேர் படித்திருக்கிறார்கள்! லாபம்தான்!

  பதிலளிநீக்கு
 52. ஏஞ்சலின்... அட, விவா குடித்தால் கட்டப்பா வருவாரா? அப்போ இந்நேரம் வந்திருக்கணுமே.. பாஹுபலியை ஏன் கொன்றார்னு கேட்டிருப்பேனே...!!!

  பதிலளிநீக்கு
 53. வாங்க சிவகுமாரன்.. உங்கள் பின்னூட்டம் கண்டதும்தான் பதிவில் இதே கனவு பற்றி எழுத மறந்த விஷயம் ஒன்று ஞாபகம் வந்தது. சில சமயங்களில் எனக்குத் தோன்றும்.. திடீரென கனவு முடிந்து விழித்து எழப் போகிறோம்.. எழுந்ததும் பள்ளி செல்லும் பிள்ளையாக இருப்போம் என்று..

  பதிலளிநீக்கு
 54. வாங்க ஏஞ்சலின்.. யானை துரத்தினால் ஜாலியா... பீதியோட இரைக்க இரைக்க கனவுல எப்படி ஓடுவேன் தெரியுமா?!!!

  பதிலளிநீக்கு
 55. சுவாரஸ்யமான கனவு,அதை விட ஸ்வாரஸ்யமான பின்னூட்டங்கள்! கலக்கி விட்டீர்கள் போங்கள்!

  என்னை கனவு கன்னி என்று எங்கள் வீட்டில் உள்ளோர் கேலி செய்யும் அளவிற்கு எனக்கும் நிறைய கனவுகள் பலித்து இருக்கின்றன! clairvoyant ஆக இருப்பவர்களுக்கு கனவுகள் பலிக்கும் என்பார்கள்.

  இருக்கட்டும்.. கொலுசு அணிந்த சிறு பெண் குழந்தை என்பது அம்பாளின் பாலா வடிவத்தை குறிக்கும். அம்பாள் பாலா வடிவத்தில் உங்கள் இல்லத்திற்கு வந்திருப்பதாக பொருள். நல்ல விஷயம்தானே! நீங்கள் அம்பாள் உபாசகரா? உபாசகன் என்றால் பெரிய அளவில் நினைத்து பயப்பட வேண்டாம் தினமும் அம்பாள் சுலோகம் ஏதாவது சொல்வது கூட போதும். தவிர நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு தெய்வ ரூபம் அருள காத்திருக்கும், உங்களுக்கு அம்மன் போலும். "நான் ஹேமா இல்லை, துர்கா என்று" முன்பே ஒரு முறை உங்கள் கனவில் அம்பாள் வந்திருக்கிறாள். அம்பாளை வழிபடுங்கள்.

  நிறைய யோசிப்பவர்களுக்கு நிறைய கனவு வரும். யோசிப்பதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்!

  பதிலளிநீக்கு
 56. நன்றி பானுமதி மேடம். புதிய ஆங்கில வார்த்தை ஒன்று தெரிந்து கொண்டேன்.

  நான் அம்பாள் உபாசகன் எல்லாம் இல்லை. இஷ்ட தெய்வம் முருகன். அதுவும் அளவுடன்! நான் நிறைய யோசிக்கிறேனா... இருக்குமோ! நன்றி. இப்போ நிறைய யோசிக்கிறேனோ என்கிற யோசனையும் சேர்ந்து கொண்டு விடுகிறது! சுவாரஸ்யமானபின்னூட்டத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 57. எனக்கெல்லாம் தினமும் கனவு வருகிறது... உங்களுக்கு வந்த கனவு அருமை.

  பதிலளிநீக்கு
 58. இப்போது தான் பதிவைப் படித்தேன். கடந்த ஜென்ம நிகழ்வுகள் ஆழ் மனதில் பதிந்து கனவுகளாய் வரக்கூடும் என்ற நம்பிக்கை உண்டு. இன்றைய ஆழ்மன பாதிப்புகளும் கனவாய் வரக்கூடுமாம். என் பெண்ணுணுடைய பொதுத் தேர்வு ரிஸல்ட் வரும் நாள் விடியற்காலை, அவள் 263 எடுப்பதாய் (நான் இந்தியாவில்) கனாக் கண்டேன். 4 மணி நேரம் கழித்து (சிங்கையில் வெளிவந்த மதிப்பெண் பட்டியலில்)அவள் 262 பெற்றிருந்தாள். (1 மதிப்பெண் அதிகமாய் கனவில் வர ஜெட் லாக் காரணமாயிருக்ககக் கூடும்)

  பதிலளிநீக்கு
 59. வாங்க ஹேமா...

  //ஒரு மார்க் குறைந்ததற்கு ஜெட்லாக் தான் காரணம்//

  ஹா... ஹா,,, ஹா... பானுமதி மேடம் தளமான 'தம்பட்டம்' பிளாக்கில் அவர் அனுபவத்தை படியுங்கள். அவர் நிறைய நிகழ்வுகளை முன்னோட்டமாக கனவில் கண்டு விடுகிறார்!

  பதிலளிநீக்கு
 60. BOSS VANGUNA KADANA KUDUNGA BOSS KANAVU VARATHU athavittuttu ..........paper karamn ,pal karan, thanni bill ,family la vanguna kaimathu

  பதிலளிநீக்கு
 61. Enaku en husband na rombaaa ishtam avar kaga ena venalum seiven yara venalum pagachipen avar sonatha meeri Na ithuvarai ethume panathilla, but 10days munnadi Mrg 5.50 irukum en kannu munnadiye avarku Vera ponna nitchayam pandra Mari kanavu vanthathu, husband ta solli romba aluthen avar ena samathanam pananga, but today vum avar Vera Ponnu kuda relationship la iruka Mari kanavu vanthathu, Mrg la irunthu romba upset ah iruken ethavathu solution solunga pls

  பதிலளிநீக்கு
 62. யானை உங்களை துரத்துவது போல கனவு வந்தால் நிஜத்தில் நீங்கள் யானையை ஓட ஓட துரத்துவீர்கள் என்று அர்த்தம் ... அதாவது சங்க காலத்தில் தமிழ் மறப்பெண் ஒருவர் புலியை முறத்தால் அடித்து துரத்தியது போல ... வாய்ப்புக்காக காத்திருக்காமல் இப்பவே முதுமலை காட்டிற்கு சென்று முறத்தால் அல்லது உங்கள் திறத்தால் யானையை அடித்து துரத்தவும் ... பிராபளம் சால்வ் ... அப்புறம் கனவே வராது ... சாரி .. கனவில் யானையே வராது ... முயற்சி செய்து பார்க்கவும்.>> இப்படிக்கு உங்கள் உடல்நலத்தில் அக்கரை செலுத்தும் உங்கள் அன்பு நண்பர் >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!