செவ்வாய், 27 நவம்பர், 2012

B. ஜெயச்சந்திரன்ஜெயச்சந்திரன்... இனிமையான குரல்வளம் கொண்டவர். இனிமையான, மென்மையான பல பாடல்கள் பாடியிருக்கிறார். சிலருக்கு இவரது குரலுக்கும் கே ஜே யேசுதாஸ் குரலுக்கும் வித்தியாசம் தெரியாது! அவரது குரலில் அமைந்த, எனக்குப்  பிடித்த சில பாடல்களிலிருந்து நீங்களும் ரசிக்க ஒரு பகிர்வு.
   
1) "தென்றல் ஒரு தாளம் சொன்னது..."

"ஏரிக்காற்றே.... ஏரிக்காற்றே நில்லடி...மங்கை எண்ணம் எங்கே சொல்லடி...."2) "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி..."

வைதேகிக் காத்திருந்தாள் படத்தில் இவருக்கு 3 பாடல்கள். மூன்றுமே முத்துக்கள். மதுரை சினிப்பிரியா தியேட்டரில் படம் பார்க்கும்போது 'ராஜாத்தி உன்னை' பாடலுக்கு தினம் ஒவ்வொரு ஷோவுக்கும் ஒன்ஸ்மோர் கேட்பார்கள். பெரும்பாலும் மறுபடியும் போடவும் போடுவார்கள்.

"ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிறே என் மனசை... யாரை விட்டு தூது சொல்லி நானறிவேன் உன் மனசை..."3) "வெள்ளி நிலாவினிலே..."

"அடிக்கும்போது மிருகமடா... அணைக்கும்போது மனிதனடா... தெய்வம் நீயடா.. மனத் தேரிலேறி வா ராஜா...."4) "காதல் மயக்கம்..."

வைரமுத்து வரிகளுக்காகவே பாடலை ரசிக்கலாம். 'நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை' 'நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை...'

"பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே மார்பினில் தீண்டும் மார்கழியே"5) "பொன்னென்ன பூவென்ன கண்ணே.."6) "பாடி வா தென்றலே..."7) "மாஞ்சோலைக் கிளிதானோ..."
8) "தேவன் தந்த வீணை...."

"மேகம் பாடும் பாடல் கேட்டேன்...  நானும் பாடிப் பார்க்கிறேன்"9) "ராஜா மகள்..."

"பன்னீரையும் வெந்நீரையும் உன்னோடுதான் பார்க்கிறேன்..."


 

17 கருத்துகள்:

 1. நீங்கள் குறிப்பிட்ட பாடல்களில் ஒன்றிற்கும் மேற்பட்ட பாடல்களைக் கேள்விபட்டது இதுவே முதல் முறை.... :-)

  பதிலளிநீக்கு
 2. மாஞ்சோலைக் கிளிதானோ... என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட்களில் ஒன்று. என்ன ஒரு பாடல்.

  சிறப்பான பாடகரின் சிறப்பான பாடல்களைப் பகிர்ந்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அருமையான பாடகரின் அற்புதமான பாடல்களை தொகுத்து தந்தமைக்கு நன்றி! மாஞ்சோலை கிளிதானோவும் ராசாத்தி உன்னை காணாத நெஞ்சும் இன்னும் பலமுறை கேட்கவைக்கும் பாடல்கள்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 4. பொன்னென்ன பூவென்ன கண்டேன் - அனேகமாக ஜெயசந்திரன் பாடிய இரண்டாவது பாடலாயிருக்கலாம். ஆனால், இன்றளவிலும் எனக்குப் பிடித்தது. எல்லாப் பாடல்களுமே அருமை. ‘காற்றினிலே வரும் கீதம்’ படத்தில் வரும் ‘சித்திரச்செவ்வானம் சிரிக்கக்கண்டேன்’ டாப் 10 பாடல்களில்( எனது வரிசையில்) இரண்டாவது இடம். :-) நல்ல பகிர்வு

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. எல்லாமே அருமையான பாடல்கள் , மிகவும் ரசித்தவைகள், நேரம் இருக்கும்போது கேட்க்கிறேன், உங்களுடைய வீடியோ இணைப்புகளும் உதவி செய்யும். நன்றி.

  பதிலளிநீக்கு
 7. கடைசி பாட்டு ஏதோ மூக்கடைத்த நடிகருக்குப் பாடியதோ?

  பதிலளிநீக்கு
 8. ஓரிரண்டு பாடல்களைக் கேட்டிருந்தாலும் ஜெயச்சந்திரன் என்பவர் பாடினது என்பதை இப்போது தான் அறிந்து கொண்டேன். :))))

  பதிலளிநீக்கு
 9. காற்றினிலே வரும் கீதம் படப்பாடல்களாகிய ‘சித்திரச் செவ்வானம்.. சிரிக்கக் கண்டேன்’ ; ‘ஒரு வானவில் போலே.. என் வாழ்விலே நீ வந்தாய்..’ இரண்டுமே டாப் 10-ல் இருக்க வேண்டியவை.

  சேட்டைக்காரனும் முதலாவதைக் குறிப்பிட்டிருக்கிறார்:).

  நல்ல தொகுப்பு.

  பதிவு ரீடரில் அப்டேட் ஆகவில்லையே எனக்கு.

  பதிலளிநீக்கு
 10. சில பாடல்களைத் தவிர மற்றவை புதிது அவரின் குரலுக்காகவே கண்டிப்பாக கேட்கலாம் நன்றி

  பதிலளிநீக்கு
 11. மறந்து போன சில நல்ல பாடல்களைத் தொகுத்து வழங்கியதற்கு நன்றி! குறிப்பாக ' பொன்னென்ன, பூவென்ன கண்ணே' பாடல் மிக இனிமையான பாடல். எழுபதுகளில் திரு.ஜெயச்சந்திரன் இங்கே சில‌ நண்பர்களின் அழைப்பில் வந்திருந்தபோது, நான் இந்தப்பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டபோது சிறிதும் தயங்காமல் இனிமையாகப் பாடி அசத்தியது நினைவில் வந்தது. படம் அலைகள் என்று நினைக்கிறேன். விஷ்ணுவர்த்தன் சந்திரகலா நடித்தது.

  ஜெய‌ச்சந்திர‌னின் பாட‌ல்க‌ளில் மிக‌ மிக‌ இனிமையான, மிகவும் புகழ் பெற்ற‌ இர‌ன்டு பாட‌ல்க‌ள்:

  'இன்றைக்கு ஏன் இந்த‌‌ ஆனந்த‌‌மே'
  ' கொடியிலே ம‌ல்லிகைப்பூ'!

  பதிலளிநீக்கு
 12. நல்லதொரு பாடகர். சித்திர செவ்வானம், ஒரு வானவில் போலே, இது ஒரு காதல் மயக்கம் இவை என்னுடைய ஃபேவரிட்....

  1,3,5 இவை நான் இதுவரை கேட்காதவை. மிகவும் பழைய படமோ...:)

  பதிலளிநீக்கு
 13. ரசிக்க வைக்கும் பாடல்கள்... எதை கேட்பதில்லை என்று மட்டும் கேட்காதீர்கள்... ஏனென்றால் அனைத்து பாடல்களும் ரசிக்க வைக்கும் பாடல்கள்...

  நன்றி...

  பதிலளிநீக்கு

 14. சீனு கேட்காத பாடல்களை ஒருமுறை கேட்டுப் பார்க்கும் வழக்கம் உண்டா?! :)) நன்றி சீனு முதல் வருகைக்கு.

  நன்றி வெங்கட்... முடிந்தவரை கேட்காத இவர் பாடல்களை வெளியிடுவது நோக்கம். மிகப் புகழ் பெற்ற பாடல்களும் சேர்த்தால்தானே சிறப்பு!

  நன்றி 'தளிர்' சுரேஷ்.

  நன்றி சேட்டை சார்... முதல் பாடல் எதுவென்று தெரியவில்லை! கா.வ. கீ படத்தில் அவரின் 2 பாடல்களுமே அருமையாக இருக்கும்.

  நன்றி மோகன் குமார்.

  நன்றி செம்மலை ஆகாஷ். அவசியம் கேளுங்கள்.

  நன்றி அப்பாஜி.. நீங்கள் நினைப்பது சரிதான்!

  நன்றி கீதா மேடம்.... "ஜெயச்சந்திரன் என்பவர்"..... :))))

  நன்றி ராமலக்ஷ்மி... ஒரு வானவில் போலே எனக்கும் மிகப் பிடிக்கும். அதுவும் தொடங்கும் ஆரம்ப இசை முதல்!

  நன்றி எழில்.... நீங்கள் சொல்வது உண்மை, சில சாதாரணப் பாடல்கள் கூட அவர் குரல் காரணமாகவே இனிமையாக இருக்கும்.

  நன்றி மனோ மேடம். ஆமாம் அது அலைகள் படம்தான்.

  நன்றி கோவை2தில்லி... முதல் பாடல் கனவுகள் கற்பனைகள். அதில் நல்ல ஒரு எஸ் பி பி பாடல் கூட உண்டு. 3 வது சொன்னது நீதானா என்ற ஒரு படத்தில் வரும் அருமையான பாடல். 5 வது அலைகள்!

  நன்றி DD

  பதிலளிநீக்கு
 15. சித்திரச் செவ்வானம் தான் என் ஃபேவரிட்.இவர் குரலையும் யேசுதாசின் குரலியும் குழப்பிக் கொண்டிருக்கிறேன். ராசாத்தி...பாடல் எங்க ஊரு பூம் பூம் மாட்டுக்காரனுக்கு ரொம்பப் பிடிச்சபாடல்.
  துரை ,அது பிள்ளைநிலாப் படப்பாடல்:)

  பதிலளிநீக்கு

 16. வல்லிம்மா.... சித்திரச் செவ்வானம், ஒரு வானவில் போலே மற்றும் வை.கா பாடல்களைப் பிடிக்காதார் யார்?! :)) அதைத் தவிர சில பாடல்களைப் பகிர நினைத்துப் பகிர்ந்தவை இவை. ரசித்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு

 17. ஜெயச்சந்திரன் குரல் ரொம்ப பிடிக்கும். 'பொன்னென்ன பூவென்ன கண்ணே', 'மாஞ்சோலை கிளிதானோ' ரெண்டும் பிடிச்ச பாட்டு. எம்.எஸ்.வீ. இசைல ஜெயச்சந்திரன் பாடின பாட்டு மேல எல்லாம் ஒரு தனி craze. அதே மாதிரி இளையராஜா இசைல இவர் பாடின சில பாடல்கள் அற்புதம். விரைவில் இன்னொரு
  பாடகர் அல்லது பாடகி பதிவை எதிர்பார்க்கலாமா? :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!