Thursday, November 29, 2012

உள் பெட்டியிலிருந்து 11 2012


இப்போ என்ன சொல்ல வரீங்க....?

மூளையிருப்பவர்களுக்கு நினைவில் வைத்துக் கொள்வது எளிதாயிருக்கிறது.
இதயமிருப்பவர்களுக்கு மறத்தல் கடினமாயிருக்கிறது!

*********************************

பிரிந்து போன உறவுகளின், நட்புகளின் விதியை ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் திரும்ப நம் வாழ்வில் எப்போது பிரவேசிப்பார்கள் என்ற ஏக்கம் மனதில் எப்போதும்!
 
**********************************

தமிழ்ல சரியா வரலைதான்....


கடினமானவர்கள் இல்லை, வித்தியாசமாகத்தான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் நிறைய நட்புகளை இழக்க மாட்டோம்! (Difficult - Different)
 
**********************************

நமது பிரிவு ஒருவர் வாழ்வில் எந்த இழப்பையும் / மாற்றத்தையும் ஏற்படுத்தாத பொழுதில் நமது இருப்பு அவர்கள் வாழ்வில் எந்த அர்த்தத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை!

**********************************
 
காலையில் ஆரம்பித்து மாலையில் முடிவதல்ல காதல். வேண்டாதபோது வரும். வேண்டும்போது விலகி விடும்!

**********************************


ரிப்பீட்டோ....

பெரிய விஷயங்களைப் பேசத் தொடங்குவதை விட சிறிய விஷயங்களைப் புரிந்து கொள்ளத் தொடங்குவது நல்லது!

***********************************
 
கவலையற்றவர்களாகவும் ஜோக்கடிப்பவர்களாகவும் நாம் இருப்பதன் மிகப் பெரிய மைனஸ் நாம் நிஜமாக ஒரு துன்பத்தில் இருக்கும்போது கூட யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, கவலைப் படுவதில்லை!
 
************************************

குறைந்தபட்சத் தேவைகள்; அதிகபட்ச விட்டுக் கொடுத்தல்கள். சந்தோஷ வாழ்வின் 2 படிகள்.
 
************************************

ஒருவன் லட்சம் லட்சியங்களை விரும்புவதை விட, ஒரு லட்சியத்தை லட்சம் வழிகளில் முயற்சிப்பது சிறந்ததாம்.

*************************************

தத்துபித்துவம்


டேஸ்ட் பண்ணினாலும் கரையும், வேஸ்ட் பண்ணினாலும் கரையும் ஐஸ்க்ரீம் மாதிரிதாங்க வாழ்க்கையும்! 


**************************************

ஜோக் 1

மிஸ்டர் X : மும்பை டு லண்டன்
,  விமானத்தில் பயண நேரம் எவ்வளவு மேடம்?

ரிசப்ஷன் : ஒன செகண்ட் சார்....


மிஸ்டர் X  : ஐயோடா.... டெக்னாலஜி எவ்வளவு முன்னேறி விட்டது? தேங்க்ஸ் மேடம்!****************************************

நம் வாழ்வில் சில உறவுகள் ஆசீர்வாதங்கள். சில பாடங்கள்!


*****************************************

சரிதானா?


ஒருவருக்கு அளவுக்கதிகமான மதிப்பை என் வாழ்வில் நான் தரும்போது அவர்கள் வாழ்வில் எனக்கான முக்கியத்துவத்தை இழக்கிறேன்.

 
*******************************************

மாற்றியும் சொல்லலாம்!


அன்பின் விசாலம் அறிவின் விலாசம்!


*******************************************

ஜோக் 2

சி பி ஐ இன்டர்வியூவுக்குச் சென்றார் மிஸ்டர் X .


இண்டர்வியூ நடத்துபவர் : காந்தியைக் கொன்றது யார்?


மிஸ்டர் X : வேலை கொடுத்துள்ளதற்கு நன்றி. நான் என் வேலையைத் தொடங்குகிறேன்!

 

*********************************************

என்னா தத்துவம்...?!


தன்னைத் துளையிடும் மரங்கொத்திக்கும் இடமும் நிழலும் தரும் மரம் போல மனிதனும் தனக்குத் தொல்லை தருபவர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். (ஸ்... அப்பாடா...)


***********************************************
வயதான விறகுதான் எரிக்க எளிது.

பழைய புத்தகங்கள்தான் படிக்க சுவாரஸ்யம்.
பழைய அரிசிதான் சாப்பிடச் சுவை. எனவே வயதாவதைக் குறித்துக் கவலைப் படத் தேவையில்லையாம்!


************************************************  
ஜோக் 3


ஹோட்டலில் மிஸ்டர் X : நோ... நான் இந்த ரூம்ல தங்க மாட்டேன். என் பணத்தைத் திருப்பிக் குடுங்க... எவ்வளவு சின்ன ரூம்? நாய் ரூம் மாதிரி இருக்கு.....!

வெயிட்டர் : யோவ்.......ரூமுக்குப் போய்யா! இது லிஃப்ட்!*************************************************
                      

16 comments:

Madhavan Srinivasagopalan said...

//மிஸ்டர் X : மும்பை டு இங்கிலாந்து விமானத்தில் பயண நேரம் எவ்வளவு மேடம்?//

City name
Country name --- seeing inconsistency..

Mr.X(Bean !) the great..

அப்பாதுரை said...

//ஒருவருக்கு அளவுக்கதிகமான மதிப்பை என் வாழ்வில் நான் தரும்போது அவர்கள் வாழ்வில் எனக்கான முக்கியத்துவத்தை இழக்கிறேன்.

நிறைய யோசிக்க வைக்கிறது.

Anonymous said...

எல்லாமே நல்லா இருக்கு.

//குறைந்தபட்சத் தேவைகள்; அதிகபட்ச விட்டுக் கொடுத்தல்கள். சந்தோஷ வாழ்வின் 2 படிகள்.//

கிளாஸ்!

பழனி.கந்தசாமி said...

ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

எல்லாமே நல்லா இருக்கு. ஸ்பெஷல்
நம் வாழ்வில் சில பாடங்கள். சில ஆசீர்வாதங்கள்.
அடுத்தது துரை சொன்னது.இந்த விஷயங்களெல்லாம் முன்பே நீங்கள் ஆரம்பித்திருக்கலாம்.:)

Madhu Mathi said...

தத்துபித்துவம் கவர்ந்தது..

சீனு said...

//(Difficult - Different)// வெகுவாய் ரசித்தேன்
//வேண்டும்போது விலகி விடும்!// ரொம்ப அனுபவம் போல ....
//ஜோக் 3 // வெகுவாய் சிரித்தேன்

மொத்தத்தில் மொத்தமும் அருமை சார்

ezhil said...

எல்லாமே நல்லா இருந்தது

ஹேமா said...

ஜோக் தவிர எல்லாத்தையுமே ஒத்தி எடுத்திட்டேன்....!

திண்டுக்கல் தனபாலன் said...

சரமாரியாக இப்படி ஒரு தாக்குதலை எதிர்ப்பார்க்கவேயில்லை... ஹிஹி... நன்றி...

ராமலக்ஷ்மி said...

அத்தனை தத்துவங்களும் மிக அருமை.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை நண்பரே... பகிர்வுக்கு நன்றி.

கோவை2தில்லி said...

எல்லாமே அருமையாக இருந்தது. தத்துபித்துவத்தை ரசித்தேன்.

Geetha Sambasivam said...

பிரிந்து போன உறவுகளின், நட்புகளின் விதியை ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் திரும்ப நம் வாழ்வில் எப்போது பிரவேசிப்பார்கள் என்ற ஏக்கம் மனதில் எப்போதும்!//

உண்மை. சொந்த அனுபவங்களே உண்டு. :(

Geetha Sambasivam said...

நமது பிரிவு ஒருவர் வாழ்வில் எந்த இழப்பையும் / மாற்றத்தையும் ஏற்படுத்தாத பொழுதில் நமது இருப்பு அவர்கள் வாழ்வில் எந்த அர்த்தத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை!

**********************************
இதுவும் உணர்ந்து வேதனைப் பட்டிருக்கேன். படுகிறேன்.

Geetha Sambasivam said...

/ஒருவருக்கு அளவுக்கதிகமான மதிப்பை என் வாழ்வில் நான் தரும்போது அவர்கள் வாழ்வில் எனக்கான முக்கியத்துவத்தை இழக்கிறேன்.//

இப்படி ஒரு கோணம் இருக்கா?


ஜோக்கெல்லாம் ஜூப்பரு!

தத்துப்பித்துவங்கள் நல்லா இருக்கு.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!