செவ்வாய், 16 ஜனவரி, 2018

கேட்டு வாங்கிப்போடும் கதை : வண்டிக்கார ராமையா : அதிரா


     இன்றைய "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் அதிராவின் சிறுகதை ஒன்று வெளியாகிறது.





 “வண்டில்க்கார  ராமையா....”
திகாலை ஐந்து மணி இருக்கும்..

“எங்கே போகோணும் ஐயா?”... கேட்டார் ராமையா.

“அவசரமாக உரும்பிராய்க்குப் போகோணும்”... எனச் சொல்லிக்கொண்டே, அந்த அழகிய கூடார மாட்டு வண்டியில் ஏறினார் ஒருவர்.

ராமையா வண்டிலை ஓட்டத் தொடங்கினார், ஆனா ராமையாவுக்கோ நெஞ்சடைப்பதைப்போல இருந்தது, வாய் திறந்தால் ஓ வென அழுதிடுவாரோ எனப் பயந்தார்... அதிகாலையில் அழுதிடக்கூடாதே, சகுனம் சரியில்லை எனத்திட்டுவார்களே.. என மனதை அடக்கிக் கொண்டார்.

கடந்த மூன்று நாட்களாக வெறும் ரீயும் பாணுமே சாப்பிட்டு உயிரைப் பிடித்து வைத்திருக்கிறார், அதுவும் ஏதோ வண்டிலை ஓட்ட வேண்டுமே என்றுதான். மூன்று நாட்களாக வீட்டிலேயே அடைபட்டிருந்தவர், இன்று தான் வண்டிலை எடுத்தார், சவாரி போனால்தானே, தன் மகன்களைப்போல எண்ணும் காளைகள்.. ரீத்துக்கும், ராகுவிற்கும் வைக்கோலாவது வாங்கிப் போட முடியும்... ராமையா துக்கத்தால் தவிக்கிறார், ஆனா பாவம் இந்தக் காளைகளுக்கு என்ன தெரியும்... அவைக்குப் பசிக்குமே.. என எண்ணியபடி... காளைகளைப் பார்த்து யா..யா... என மெதுவாகச் சொல்லிச் சொல்லி வண்டிலை ஓட்டினார்.

வண்டிலில் ஏறியிருப்பவர், வெள்ளை வேஷ்டியும் சந்தனப்பொட்டோடும் இருந்தார், அவரை ஓரக்கண்ணால் பார்த்த ராமையா நினைத்தார்.. “வெள்ளை வேஷ்டி கட்ட வெள்ளை மனது வேண்டும்”.. என்பினம்.. இவருக்குள்ளும் வெள்ளை உள்ளம் இருக்குமோ?.. என எண்ணிக் கொண்டே, தன்னுள்ளிருக்கும் சுமையை கொஞ்சம் இறக்க எண்ணி... நடுங்கிய குரலில்
“ஐயா எனக்கொரு மகள்.....”.. என ஆரம்பித்தார்..

ஆரம்பிக்க முன்னமே.. “நான் நல்ல விசயமாகப் போகிறேன், வாயை மூடிக்கொண்டு வண்டிலை ஓட்டு” என்றார் அப் பெரியவர். ராமையா வாயை மூடிக் கொண்டார். துக்கமோ தொண்டையை அடைத்தது, நெஞ்சு வலித்தது... ஆனாலும் என்ன பண்ணுவது, பேசாமல் வண்டிலை ஓட்டினார்.

உரும்பிராயில் அவரை இறக்கியதும், ராமையாவின் கண்களால் கண்ணீர் கொட்டியது, அவரால் ஆறவே முடியவில்லை. எப்படி ஆறுவார்? சொல்லி அழக்கூட ஒரு மனிதர் இல்லையே.. மூச்சைக்கூட ஒழுங்காக விட முடியவில்லை அவருக்கு. நெஞ்சடைப்பதைப்போல இருந்தது.

அடுத்த சவாரிக்கு ஒரு தம்பதிகள் வந்தனர்.. “நாவற்குழி போக வேணும்” என்றனர்.. சரி இவர்களிடமாவது தன் சோகத்தை இறக்கிடலாம் என எண்ணி..”அம்மா .. எனக்கொரு மகள்...” என வாயைத் திறந்தார்.... “கதையை விட்டுப்போட்டு, ஸ்பீட்டா ஓட்டு.. நேரமாச்சு” எனப் பதில் கிடைத்தது... மெளனமாகிட்டார் ராமையா.

இப்படியே அன்று முழுக்க, சவாரிக்கு வரும் ஒருவரிடமாவது தன் துக்கத்தைக் கொட்டிடலாம் என  முயற்சி செய்து, யாரிடமும் மனம் திறந்து பேசவே முடியவில்லை. மாலையானதும், இவ்ளோ பரந்த உலகில், தன் துக்கத்தைப் பகிர ஒரு மனிசர் இல்லையே என எண்ணி வருந்தியபடி, தன் கொட்டில் வீட்டுக்குத் திரும்பினார்.

ராகுவையும் ரீத்தையும் அவிட்டு, முற்றத்தில் இருக்கும் வைக்கோல் போரின் பக்கம் இருக்கும் கட்டைகளில் கட்டி,  தடவிக் கொடுத்தார். அவை இரண்டும், ராமையாவின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தன... அப்பார்வை..  ”ஏன் உனக்கு நாம் இல்லையா? எம்மிடம் பகிரக்கூடாதா?” என்பதைப்போல இருந்தது.

ராமையா நினைத்தார், என் குடும்ப உறுப்பினர்களில் இப்போ இருப்பது இந்த ராகுவும் ரீத் உம் தானே.. இவர்களிடம் ஏன் சொல்லக்கூடாது என எண்ணி, அருகிலே அமர்ந்தார்.. அவையும் கீழே படுத்துக் கொண்டன.... ராமையா பேசத் தொடங்கினார்....

நான் ஒரு பெண்ணை விரும்பினேன், யாருடைய சம்மதமும் இல்லாமல், அவளைக் கைப்பிடித்து, இக் காட்டுக்கு கூட்டி வந்தேன், இங்கே ஒரு கொட்டில் போல வீடு கட்டி எங்கள் வாழ்க்கையை அழகாக ஆரம்பித்தோம், அக்கம் பக்கம் யாருமே இல்லை... அதனால எமக்கு எந்த தொந்தரவும் எப்பவும் இருந்ததில்லை, நம் இஸ்டம்போல வாழ்க்கை நடத்தினோம்...

அன்பான மனைவி, அழகாக ஒரு மகளைப் பெற்றெடுத்தோம்.. மிக அழகான குடும்பமாக, மாட்டு வண்டிச் சவாரி செய்து வாழ்க்கை நடத்தினோம். மகளும் வளர்ந்து பெரியவள் ஆனாள். நமக்கு அவள் ஒரு மகாராணியாக வீட்டில் இருந்து வந்தாள். யார் கண் பட்டதோ, திடீரென மனைவிக்கு காச்சல் வந்தது.... டொக்டரிடம் செல்ல அழைத்தேன், இதெல்லாம் சாதாரண காச்சல்தான் இதுக்கு ஏன் டொக்டர் என்றாள்.... சரியாகிடும் என நினைச்ச வேளை, நம்மை விட்டு சட்டென மறைந்திட்டாள் மனைவி.

மனைவிக்கும் எனக்கும் எப்பவும் சண்டை சச்சரவு வந்ததில்லை, சிறிதாக ஏதும் வந்தால்கூட ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சந்தோசமாகிடுவோம்... என் உலகமே மனைவிதான், அவளிடம் என்னை ஒப்படைத்திருந்தேன்.. அப்படி இருந்த எனக்கு திடீரென இப்படி ஆனதும், பித்துப் பிடித்ததுபோலானேன்..

வாழ்க்கை இருள் சூழ்ந்திருந்த வேளை, மகள் தான் எனக்கு தாய்போல நின்று என்னைத்தேற்றினாள்... மகளுக்காகவே நான் என்னை மாற்றி, மெல்ல மெல்ல கவலையை உள்ளே புதைத்து, மகிழ்ச்சியை வெளியே காட்டி வாழப் பழகிக் கொண்டேன். என் உலகமே மகள் என ஆனது... அவளுக்கு வீட்டோடு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தேன்... ஆனா மூன்று நாட்களின் முன்பு....

என்றவர் துக்கம் தாங்காமல் ஓவெனக் கூச்சலிட்டு அழுதார்.. குலுங்கிக் குலுங்கி அழுதார்.. அவரின் அழுகை பார்த்து ராகுவும் ரீத் உம் தலையை அசைத்து கழுத்து மணியை ஒலிக்கச் செய்து, அவரோடு துக்கத்தில் பங்கெடுத்தன...

இரவு நித்திரைக்குச் சென்ற மகள், காலை எழுந்து வரவில்லை.. அவளும் என்னை விட்டுப் போய் விட்டாள்.. இந்தத் தள்ளாத வயதில் என்னால் எதையும் தாங்க முடியவில்லை... என விக்கி விக்கி அழுதார்.. அக் காட்டுப் பகுதியில் எப்படி ஓலமிட்டாலும் எட்டிக் கேட்க ஆட்களில்லை. மனப் பாரம் குறையுமட்டும் அழுதார்... ராகுவினதும் ரீத் இனதும் கண்களிலும் கண்ணீர் வடிந்து காய்ந்து கொண்டிருந்தது.

தன் துக்கத்தை வெளியே கொட்டி விட்டமையால், கொஞ்சம் மனது இலேசாகியது, மூன்று நாட்களின் பின்பு இன்றுதான், கொட்டிலின் வாசலைத் திறந்து உள்ளே நுழைந்து விளக்கை ஏற்றினார் ராமையா... வழமையாக தான் படுத்துறங்கும் அந்தச் சாக்குக் கட்டிலை விரித்துப் போட்டுப் படுக்கப் போனார்:(..
===================================================================================
ஊசிக்குறிப்பு:
எனக்கொரு 5.. 6 வயசிருக்கும், அப்போ “கட்டுரைகள்” எனும் தலைப்பில் ஒரு புத்தகம் வாங்கித் தந்தார் அப்பா. அதில் குட்டிக் குட்டிக் கட்டுரைகள் இருந்தன... அவற்றில் சில மனதிலே பதிந்து விட்டன... அதில் ஒன்றுதான் இதன் கரு,  கருவை வைத்து, மிகுதியை நான் போட்டு குட்டிக் கதையாக்கி இருக்கிறேன்... இப்போ புரியுதோ? நான் ஏன் 6 வயசிலிருந்து ரொம்ப நல்ல பொண்ணு எனச் சொல்வதன் உண்மை?:).
===================================================================================
ஊசி இணைப்பு:
தமனா சகோதரியை:) உங்க முறையில:).. இங்கின மறக்காமல் டச்சூப் பண்ணவும்:))
++++++++++++++++++++++++_()_++++++++++++++++++++++++




113 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு சகோ!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீராம் மற்றும் கீதா அனைவருக்கும்
    அன்பு வணக்கம்..

    பதிலளிநீக்கு
  3. அதிராவின் கே வா போ ஆஹா வரேன்...நிறைய இருக்குமே....கும்மி அடிக்க...ஹா ஹாஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இனிய காணும்பொங்கல் நல்வாழ்த்துகள், காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம், மற்றும் காணும் பொங்கல் நல்வாழ்த்துகள் கீதா ரங்கன்.

    பதிலளிநீக்கு
  6. ஆகா...
    அதிராவின் கதையா!..
    அப்படியானால் யாரையும் தூங்க விடமாட்டார்கள்...

    கர்ர்ர்ர்ர்ர்ர்.. என்று ஒரே சத்தமாக இருக்கும்!..

    பதிலளிநீக்கு
  7. அதிராவின் கதையா!..
    அப்படியானால் யாரையும் தூங்க விட மாட்டார்கள்..

    கர்ர்ர்ர்ர்ர்ர்.... என்று ஒரே சத்தமாக இருக்கும்..!..

    பதிலளிநீக்கு
  8. அதென்ன ஒரு ல் கூடுதலா...
    இதென்ன சாமிக்கு வேண்டுதலா!...

    பதிலளிநீக்கு
  9. அதிரா கலாய்க்கலாம்னு வந்தா மனது ரொம்ப கனத்துவிட்டது...

    நல்லாருக்கு..ஆமாம் சில சமயம் மனதிற்குள்ளேயே போட்டு வைப்பதும் மனதை அழுத்திவிடும். இறக்கி வைத்தால் கொஞ்சம் ஆறுதல்...அப்ப்டியேனும் ஆற்றுப்படுத்திக் கொள்ளலாம்... (ஹப்பா ஸ்ரீராம் உங்கள் மூலம் அறிந்த வார்த்தையைச் சொல்லிட்டேன்...உங்களின் பதிவு வாசித்த பிறகு தேனம்மையின் கதை படிக்க நேர்ந்தது அதிலும் அவர் பயன்படுத்தியிருந்தார்..) ஆனால் சில சோகங்கள் என்னதான் இறக்கி வைத்தாலும் அதன் மிச்ச சொச்சம் எல்லாம் ஆழ்மனதில் இருந்து கொண்டே இருக்கும். பாவம் ராமையா...யாரும் இல்லை என்றால் இது போன்ற நம் நாலுகால் செல்லங்களிடமும் கூடப் பேசி பகிரலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. சாய்வதற்கும் ஒரு தோள் வேண்டும் தானே...

    என்ன செய்வது?..

    இனியாவது ராமையா நிம்மதியாக உறங்கட்டும்..

    பதிலளிநீக்கு
  11. காலை வணக்கம்! பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. அலம்பல் செய்யலாம் என்று பார்த்தால்
    மனதை அதிரச் செய்து விட்டார் அதிரா...

    பதிலளிநீக்கு
  13. // அதிராவின் கதையா!.. அப்படியானால் யாரையும் தூங்க விடமாட்டார்கள்... கர்ர்ர்ர்ர்ர்ர்.. என்று ஒரே சத்தமாக இருக்கும்!.. //

    ஹா.... ஹா.... ஹா....

    பதிலளிநீக்கு
  14. காலை வணக்கம் பானு அக்கா. இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. அதிரா ஊசிக் குறிப்பு நல்லாருக்கு ஆனால் என் தனிப்பட்டக் கருத்து..விதி மோசமாக இருந்தாலும் தெய்வம் கண்ணை மூடிக் கொள்ளாது. நாம் எத்தனைக்கெத்தனை பாசிட்டிவாக இருக்கிறோமோ அத்தனைக்கத்தனை அத்தெய்வம் நமக்கு நம் விதியை எதிர் கொள்ள உதவிக் கொண்டே இருக்கும். அதாவது விதி மாறாது ஆனால் தெய்வம் அதனை எதிர்கொள்ள தைரியத்தையும், பக்குவத்தையும் தரும்...வழிகளைக் காட்டும்...

    பொதுவாக பலர் மனதிலும் இருப்பது...நாம் தெய்வத்திடம் மன்றாடினால் நமக்கு நடந்துவிடும் என்று...நடந்துவிட்டால் தெய்வம் நம் வேண்டு கோளை ஏற்றுக் கொண்டது என்று நாம் நினைத்து நம்மை சமாதானப்படுத்திக் கொள்கிறோம்..இது மியர் கோ இன்ஸிடென்ஸ்....நமக்கு நடப்பது நடந்தே தீரும்...நல்லதாக இருந்தால் மகிழ்ச்சி...ஆனால்..நல்லதல்ல என்றால் நாம் மன்றாடினாலும் நடப்பது நடந்தே தீரும்...ஆனால் அதைக் கடக்க தெய்வம் பல வழிகளைக் காட்டும். அதை நாம் புரிந்து கொள்வதும் கொள்ளாததும் நமது விஸ்டம்...இதைத்தான் விதியை மதியால் வெல்லலாம், கடக்கலாம் என்று சொல்வதே அல்லாமல்...விதியையே மாற்றலாம் என்பதல்ல பொருள்..என் அனுபவம் கற்றுக் கொடுத்த ஒன்று....சரிதானே?!! ஆனால் அழுது பலனில்லை என்பது மிகவும் சரியே...அது நமக்கு ஒரு வடிகால்...அவ்வளவே...

    கீதா

    பதிலளிநீக்கு
  16. வாட் எ ஸர்ப்ரைஸ் பானுக்கா காலை வணக்கம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  17. // அதிராவின் கதையா!.. அப்படியானால் யாரையும் தூங்க விடமாட்டார்கள்... கர்ர்ர்ர்ர்ர்ர்.. என்று ஒரே சத்தமாக இருக்கும்!.. //

    ஹா ஹா ஹா ஹா...ஆனால் அது முடியாமல் போய்விட்டது சகோ...

    ஸ்ரீராம் காணும் பொங்கல் என்றால் என்ன? வருடம் முழுவதும் வயல்களில் உழைத்துவிட்டு அன்று ஒரு நாள் வண்டி கட்டி ரிலாக்ஸ்டாகச் செல்லல் எனக் கொள்ளலாமோ?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. அதிரா/என் உலகமே மகள் என ஆனது... அவளுக்கு வீட்டோடு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தேன்... ஆனா மூன்று நாட்களின் முன்பு..../இன்னும் விளக்கமாகக் கூறி இருக்கலாமோ

    பதிலளிநீக்கு
  19. சித்த ராமையாவின் கதை மனதை வருத்தியது.

    //வெள்ளை வேஷ்டி கட்ட வெள்ளை மனது வேண்டும்”.. என்பினம்.//
    அப்படீனாக்கா...... அரசியல்வாதிகளின் மனம் வெள்ளையா....... ?

    பதிலளிநீக்கு
  20. அதிராவின் அட்டகாசமாக இல்லாத அடக்கமான கதை நன்றாக இருந்தது. மனப் புலம்பலை யாரிடமாவது அல்லது எதனிடமாவது வெளிப்படுத்தி விட்டால் போதும், அதுவே மன நிம்மதிக்கு மருந்தாகிப் போகும் என்ற உண்மை அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. சட்டென்ற பார்வைக்கு மாட்டிடம் போய் பேசுவதா என்று படலாம். ஆனால் இதுவே உயர்ந்த தத்துவம் ஒன்றை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. இதே மாதிரி மாட்டிடம் முறையிடுகிற கிருஷ்ணன் நம்பி என்ற எழுத்தாளர் எழுதிய கதை ஒன்று உண்டு. வாழ்த்துக்கள், அதிரா.

    பதிலளிநீக்கு
  21. எது சரியான தலைப்பு? ஸ்ரீராம் போட்டிருக்கிற 'வண்டிக்கார ராமையா'வா அல்லது 'வண்டில்கார ராமையா'வா?

    துக்கத்தைப் பகிர்ந்துகொண்டால்தான் ஆறுதல், சந்தோஷத்தைப் பகிரிந்துகொண்டால் இரட்டிப்பாகும் என்ற வரில கதை நகருகிறது. நல்லா இருக்கு. என்ன அதிரா சோக ராகம் பாட ஆரம்பித்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
  22. அதிராட்ட கேட்ட, 'செக்'ட கேட்கச் சொல்லுவினம்.

    ஏஞ்சலின் - ராகு, ரீத் - இது காளை மாடுகளின் பெயரா? இந்த மாதிரி பெயரை கேள்விப்பட்டதில்லையே. ஒருவேளை 'TEETH' என்பதை ரீத் என்று எழுதுகிறாரா? ரீத் பொம்பளை பெயரான்னா இருக்கு (ரீத்து சிங்). ஒருவேளை வண்டிக்காரன், காளை ஒரு பக்கம், பசு ஒரு பக்கம்னு வண்டில கட்டினாரா?

    பதிலளிநீக்கு
  23. அழகான கதை அதிரா! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  24. ஹலோ திரும்பவும் வந்துட்டேன் அதுவும் அதிரா கதை இன்று சூப்பர் என்று குதித்து கொண்டு படித்தேன் என்ன சொல்ல கேட்க ஆளில்லாத போது துக்கம் பெரும் துக்கமாய் போய்விடும் வாயில ஜீவன்களின் அனுசரணையில் முன் நாம் வெட்கி தலை குனியாதான் தோன்றும்
    அதிரா வாழ்த்துக்கள் அருமை

    பதிலளிநீக்கு
  25. தோழமைகள் அனைவருக்கும் காலை வணக்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 12 மணிக்கு மேலே காலை வணக்கமா ?
      செல்லாது... செல்லாது.

      நீக்கு
  26. வாழ்வின் பெருந்துக்கம் நம்மைத் தனிமைப்படுத்தித் தண்டிக்கையில், சோகத்தைப் பகிர அன்பானவர் அருகிலிருந்தால் நல்லதுதான். ஆனால் அன்பு காட்டுவோர் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. பல்காட்டுவோர் எல்லாம் அன்பு காட்டுபவரில்லை !

    பதிலளிநீக்கு
  27. ஆஹா கெளப் பொங்கலுக்கு வண்டில் கதை வந்திட்டுதூஊஊஊஊஊ:)).. ஹா ஹா ஹா இதுதான் ஜனவரி 2ம் திகதி வர இருந்துதா.. அவசரப்பட்டு மாத்தி விட்டேன்.. அன்று வராமல்...

    ஆஅவ்வ்வ்வ்வ்வ் இன்று துரை அண்ணன் தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:)).. முதல் சவாரி துரை அண்ணனுக்கே:)... வாங்கோ வாங்கோ...

    கீதா வாங்கோ...

    ஸ்ரீராம் வாங்கோ மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  28. ///Thulasidharan V Thillaiakathu said...
    அதிராவின் கே வா போ ஆஹா வரேன்...நிறைய இருக்குமே....கும்மி அடிக்க...ஹா ஹாஹா ஹா

    கீதா///

    ஹா ஹா ஹா கும்மி அடிக்கலாமே.. கதையை படிச்சிட்டு மறந்திடோணும்.. கதைதானே என விட்டிடோணும்.. மனதுக்கு எடுத்துப் போயிடக்குடா:)..

    பதிலளிநீக்கு
  29. ///ஸ்ரீராம். said...
    இனிய காணும்பொங்கல் நல்வாழ்த்துகள், .//

    அப்போ ஆரையும் காணவில்லையாயின் பொயிங்க மாட்டினமோ?:))

    பதிலளிநீக்கு
  30. //துரை செல்வராஜூ said...
    அதிராவின் கதையா!..
    அப்படியானால் யாரையும் தூங்க விட மாட்டார்கள்..

    கர்ர்ர்ர்ர்ர்ர்.... என்று ஒரே சத்தமாக இருக்கும்..!..///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பகலில் என்ன தூக்கம்:)..

    பதிலளிநீக்கு
  31. ///துரை செல்வராஜூ said...
    அதென்ன ஒரு ல் கூடுதலா...
    இதென்ன சாமிக்கு வேண்டுதலா!..//

    ஹா ஹா ஹா நாங்கள் “வண்டி” எனச் சொல்ல மாட்டோமே:).. “வண்டில்” என்பதுதானே சரியான டமில்ல்ல்ல்?:))

    பதிலளிநீக்கு
  32. நானே ரீத் என்னவாயிருக்கும்னு குழம்பிட்டிருக்கேன் வரேன் கொஞ்சம் நேரத்தில்

    பதிலளிநீக்கு
  33. //Thulasidharan V Thillaiakathu said...
    அதிரா கலாய்க்கலாம்னு வந்தா மனது ரொம்ப கனத்துவிட்டது...//

    அதனால்தான் எனக்கு இக்கதை எழுத விருப்பமில்லாமல் இருந்தது கீதா, பின்பு நினைச்சேன், இன்பமும் துன்பமும் கலந்ததுதானே வாழ்க்கை.. எப்பவும் மகிழ்ச்சியையும் கலகலப்பையும் மட்டுமே விரும்பியிருந்தால்.. இடையில் ஏதும் துன்பம் ஏற்பட்டால் ஆகவும் சோர்ந்து துவண்டிடுவோம் எல்லோ...

    அதை நினைச்சே சரி இதனை எழுதிடலாம் என எழுதினேன்.. எல்லாப் பக்கமும் மனதைப் பழக்கப்படுத்தி பண்படுத்தி வச்சிருக்கோஉம்:))..

    ஓ இதுதான் ஸ்ரீராமின் ஆற்றுப்படுத்தலோ?:) சத்தியமா அன்று கொஞ்சம் பிசியாக இருந்தேன்.. அதனால கருத்தை ஆராயவில்லை.. புரியவுமில்லை விட்டிட்டேன்.. கெள அண்ணனின் வியக்கம்:) மட்டும் படிச்சேன்ன் கர்ர்ர்ர்ர்:))..

    இப்போ புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்:))... ஓஓஓ எல்லோரும் மனதை ஆற்றுப்படுத்துங்கோஓஓஓஓ:))

    பதிலளிநீக்கு
  34. ஆதிராவின் கதை தற்காலத்திய நடைமுறையைச் சுட்டிக்காட்டுகிறது. ஆற்றுப்படுத்த ஆள்தான்இல்லை என்பதை அழகாக எடுத்து காட்டியுள்ளார் த.ம.வுடன்

    பதிலளிநீக்கு
  35. அந்த வாயில்லா ஜீவன்களுக்கும் அந்தப்பழகிய இரண்டு மனுஷிகளும் காணோமே என்று மனதில் தோன்றி இருக்கும். வகையாக இவரின் துக்கத்தின் போது அவைகளும் துக்கத்தைப்போக்க கண்ணீர் அஞ்சலி செலுத்தி இருக்கும். உணர்ச்சி பொங்க. கொட்டகையில் கூட கட்டியிருக்கும் ஸஹ மாட்டைக் காணாவிட்டால் கூட மாடுகள் துக்கத்துடன் அம்மா என்று கத்தும். தன்னுடையகன்றுகள்தான் என்றில்லை. ஸரியான தோழமை. பாவம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  36. வெள்ளை வேஷ்டிக்கு அழுக்கு மனசு :( தன்னிலும் எளியோரிடம் அமைதியா பொறுமையா கேக்காதவங்க வெள்ளைமனசுக்காரங்களா இருக்க மாட்டாங்க என்பது ராமையாவுக்கு இப்போதாவது புரிந்திருக்கும் .ராகு வும் ரீத்தும் அவரது மனா பாரத்தை இறக்கிவைக்க உதவினார்களே பாவம் ராமையா ..
    இந்த கடவுள்தான் எவ்ளோ பொல்லாதவர் ஒரு மனுஷன் எவ்ளோதான் தாங்குவார் கஷ்டப்பட்டவங்களுக்கே திரும்பி திரும்பி துக்கத்தை தரார்

    பதிலளிநீக்கு
  37. துக்கத்தை கேட்க இளைப்பாறுதல் தர ஒருவர் கூட முன் வரலை பாவம் ராமையா .அப்படிப்பட்ட உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம் ..ராமையாவின் நிலை பாவம்தான் .சிலர் கடவுள் கிட்ட முறையிடுவாங்க இவர் அந்த வாயில்லா ஜீவன்களிடம் சென்று அழுது தீர்த்திருக்கிறார் .நல்லதுதான் மனுஷங்களைவிட இந்த ஜீவன்கள் மேல் .நான் கூட நேற்று ஒரு அத்தை ;அது ரொம்ப அழுத்திட்டேன் அப்போ மல்ட்டிதான் எனக்கென்னமோ ஆச்சுன்னு நினைச்சி ஓடி வந்தா பல நேரம் நான் மாலதியின் கிட்டே படுத்து இருக்கிறேன் தலையை தடவி விடும் நெற்றியை தடவும் ..எதோ ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி உணர்வு இந்த வாயில்லா ஜீவன்கள் கிட்ட இருக்கு அதுதான் ராமய்யாவுக்கும் ராகு ரீத் மூலம் கிடைச்சிருக்கு .நல்ல கதை அதிரா கொஞ்சம் அழற உணர்வு வருவதை தடுக்க முடியவில்லை

    பதிலளிநீக்கு
  38. ஊசிகுறிப்பு பற்றி சில வார்த்தைகள் ..தெய்வம் எப்போதும் கண்ணை மூடுவதில்லை நாம் தவறான திசை நோக்கி போனா போகாதேன்னு மட்டும் சொல்லத்தான் முடியும் கடவுளால் காலை பிடிச்சி இழுக்க மாட்டார்.அடிபட்டு அவதிப்பட்டு வந்தாலும் இறைவன் கைவிடுவதில்லை ஏதாவது வழியை காண்பித்து திசை திருப்பி விடுவார்

    பதிலளிநீக்கு
  39. ஆமாம் மியாவ் நீங்க ஆறிலிருந்து அறுபதுவரை நல்லபொண்ணுதான் :)

    பதிலளிநீக்கு
  40. /எனக்கென்னமோ ஆச்சுன்னு நினைச்சி ஓடி வந்தா பல நேரம் நான் மாலதியின் கிட்டே படுத்து இருக்கிறேன் //

    அவ்வ் மல்ட்டி எப்படி மாலதி ஆச்சு :) ஹாஹா கர்ர் for கூகிள்

    பதிலளிநீக்கு
  41. அடடே! நம்பவே முடியவில்லை! அதிரடி அதிராவா இப்படி சோகம் ததும்பும் ஒரு கதையை எழுதியிருப்பது? சோகமும் உங்களுக்கு நன்றாகவே கை வருகிறது. பாராட்டுகள்!

    மனபாரத்தை விலங்குகளிடமும் ஆற்றிக்கொள்ளலாம் என்பதை மட்டும்தான் சொல்ல வந்தீர்களா? "எனக்கு ஒரு மகள் இருந்தாள், எனக்கு ஒரு மகள் இருந்தாள்" என்று எதிர்பார்ப்பை எகிறவைத்து விட்டு, அவள் மறைந்ததை மட்டும் சொல்லியிருப்பது ஏதோ குறைவது போல இருக்கிறது. அதற்கு காரணமும் சொல்லியிருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
  42. ///துரை செல்வராஜூ said...
    சாய்வதற்கும் ஒரு தோள் வேண்டும் தானே...

    என்ன செய்வது?..///
    உண்மைதான் துரை அண்ணன், இளமைக் காலம் எப்படியாவது கடந்துவிடும்... ஆனா இந்த முதுமைக்காலத்தை நினைக்கும்போது எப்பவும் பயம்தான்.. பிள்ளைகளையும் வருத்திடக்கூடாது.. எதுவும் நம் கையில் இல்லையே...


    ///இனியாவது ராமையா நிம்மதியாக உறங்கட்டும்..///
    ஆஹா இதைப் பார்த்ததும் கதையை இப்படி முடிச்சிருக்கலாமோ எனத் தோணுது எனக்கு.. அதாவது ராமையாவும் எழுந்திருக்கவில்லை என:(.. ஆனா மாடுகள் பாவமே:(.. எந்தப் பக்கம் போனாலும் இடிக்குது ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  43. ///Bhanumathy Venkateswaran said...
    காலை வணக்கம்! பின்னர் வருகிறேன்.//

    வாங்கோ பானுமதி அக்கா...

    பதிலளிநீக்கு
  44. ///துரை செல்வராஜூ said...
    அலம்பல் செய்யலாம் என்று பார்த்தால்
    மனதை அதிரச் செய்து விட்டார் அதிரா...//

    ஹா ஹா ஹா துரை அண்ணன் இதுக்கெல்லாம் அதிர்ந்திட்டால் எப்படி?..,
    ஸ்ரெடியா இருங்கோ:)..

    பதிலளிநீக்கு
  45. //Thulasidharan V Thillaiakathu said...
    அதிரா ஊசிக் குறிப்பு நல்லாருக்கு ஆனால் என் தனிப்பட்டக் கருத்து..விதி மோசமாக இருந்தாலும் தெய்வம் கண்ணை மூடிக் கொள்ளாது. நாம் எத்தனைக்கெத்தனை பாசிட்டிவாக இருக்கிறோமோ அத்தனைக்கத்தனை அத்தெய்வம் நமக்கு நம் விதியை எதிர் கொள்ள உதவிக் கொண்டே இருக்கும். அதாவது விதி மாறாது ஆனால் தெய்வம் அதனை எதிர்கொள்ள தைரியத்தையும், பக்குவத்தையும் தரும்...வழிகளைக் காட்டும்...//

    100 வீதம் உண்மையைச் சொல்றீங்க கீதா.. அது எங்கட கண்ணதாசன் அங்கிளின் வசனம்:))..

    விதி என்றிருப்பது என்னமோ உண்மைதான்[மெதுவா வாசியுங்கோ.. இங்கின விதியை நம்பாதோரும் சுத்திக்கொண்டிருக்கினம்:))]... எனக்குத்தெரிஞ்சு..

    விதியை மாற்ற முடியாது.. அதாவது நமக்கு ஒரு நோய் வரப்போகுது.. அந்நோயால் நாம் இறக்கப்போவது உறுதி என இருப்பின்... அதை அந்த ஆண்டவனாலும் மாற்ற முடியாது... ஆனா கடவுளை நம்பிக் கும்பிடும்போது, நம்மை அந்த நோயின் பிடியிலிருந்து ஆறுதல் படுத்தி அமைதியாக கண் மூட வைப்பார்.. அதாவது நோயால் வரும் துன்பத்தைக் குறைத்து விடுவார்...

    ஆனா கடவுளை நம்பாமல் கும்பிடாமல் இருப்போருக்கு.. இதே விதி எனில்.. அவர்கள் அந் நோய்க்கு மருந்து கிடைக்காமல் அல்லது மருந்து எடுத்தும் வேதனை குறையாமல் மிக துன்பப்பட்டு கஸ்டப்பட்டு கண் மூடுவர்:)).. இப்பூடித்தான் விதிக்கு விளக்கம் அளிக்கப்படுது:))

    பதிலளிநீக்கு
  46. //Thulasidharan V Thillaiakathu said...
    // காணும் பொங்கல் என்றால் என்ன? வருடம் முழுவதும் வயல்களில் உழைத்துவிட்டு அன்று ஒரு நாள் வண்டி கட்டி ரிலாக்ஸ்டாகச் செல்லல் எனக் கொள்ளலாமோ?!!!

    கீதா//

    ஆஹா அப்போ காணும் பொங்கலோடு கதை ஒத்துப்போகுதோ?:)).. ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  47. ///G.M Balasubramaniam said...
    அதிரா/என் உலகமே மகள் என ஆனது... அவளுக்கு வீட்டோடு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தேன்... ஆனா மூன்று நாட்களின் முன்பு..../இன்னும் விளக்கமாகக் கூறி இருக்கலாமோ///

    வாங்கோ ஜி எம் பி ஐயா.. பாதியில நிறுத்திக் கிளவி ஹையோ டங்கு ஸ்லிப் ஆகத் தொடங்குதே:).. கேள்வி கேய்க்கப்பிடாது:))கர்ர்ர்ர்:)).. முழுக்கப் படிங்கோ புரியும்:)).. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  48. ///KILLERGEE Devakottai said...
    சித்த ராமையாவின் கதை மனதை வருத்தியது.///

    வாங்கோ கில்லர்ஜி.. சித்த??? இதில் சித்தர் எங்கிருந்து வந்தார்ர் ஹா ஹா ஹா:)..

    //வெள்ளை வேஷ்டி கட்ட வெள்ளை மனது வேண்டும்”.. என்பினம்.//
    அப்படீனாக்கா...... அரசியல்வாதிகளின் மனம் வெள்ளையா....... ?//

    அது ஒரு பாட்டில வருது கில்லர்ஜி.... வெள்ளை வேஷ்டி கட்ட... வெள்ளை மனது வேண்டும்.. என:))

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  49. ///கரந்தை ஜெயக்குமார் said...
    மனம் கனத்தது நண்பரே
    தம+1///

    வாங்கோ கரந்தை அண்ணன்.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  50. ///ஜீவி said...
    அதிராவின் அட்டகாசமாக இல்லாத அடக்கமான கதை நன்றாக இருந்தது.//

    வாங்கோ வாங்கோ,,.. போன தடவை நீங்க லேட்டாக வந்துவிட்டமையால் கருத்துச் சொல்ல முடியாமல் போச்சு எனச் சொன்னீங்க.. இம்முறை ஏழியாவே வந்திட்டீங்கள் மிக்க நன்றி.

    /// சட்டென்ற பார்வைக்கு மாட்டிடம் போய் பேசுவதா என்று படலாம். ஆனால் இதுவே உயர்ந்த தத்துவம் ஒன்றை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. ///

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ் எல்லோரும் ஓடியாங்கோ இதைச் சத்தமாப் படிங்கோ:).. இப்பூடியான விசயமெல்லாம் ஆர் கண்ணிலயும் படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ..

    மிக்க நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  51. //Nagendra Bharathi said...
    அருமை//

    வாங்கோ மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  52. அதிரா, ஊசிக்குறிப்பு சொல்லுவது சரியல்லவே! விதி தவறாக இருக்காது. நம்முடைய விதி தான் நமக்கு வரும். அதை மாற்ற முடியாது என்பதால் தான் கடவுள் அதில் தலையிடுவதில்லை! விதியின் பலனை அனுபவித்தே தீர வேண்டும்!

    பதிலளிநீக்கு
  53. //பரிவை சே.குமார் said...//

    வாங்கோ மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  54. எல்லோருக்கும் இனிய வணக்கம்!

    அதிராவிடமிருந்து இப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவேயில்லை.
    மனதைக் கனக்க வைத்த கதை. எதையும் சமாளிக்கலாம் என இருப்பது இளமைப் பருவம். ஆனால் முதுமைக் காலம் நெருங்க நெருங்க வாழ்க்கைத் துணையுமின்றித் தனித்துவிடும் சமயம் மனத்துயரைத் துக்கத்தைப் பகிர்ந்து ஆற ஒரு ஜீவன் இல்லையாயின் கொடுமையே!... 100 வீதம் உண்மை!!
    இதற்குமேல் அதிகம் நான் சொல்ல எதுவும் இல்லை.

    ராமையாவின் நிலை மனதை வருத்தியது.
    வாயில்லா ஜீவன்கள் என்றாலும் அவற்றிற்கும் உணர்வுண்டு. என் வீட்டுத் துக்கத்தில் எமது மீரா 3 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் தூங்காமல் ஒரு இடத்திலேயே இருந்தது. வீட்டில் துக்கம் கேட்க நிறைய உறவுகள் வருவதும் போவதுமாக இருந்ததால் என்னிடமும் அவளால் வர முடியாமல் அமைதிகுன்றி இருந்தாள். யாரும் இல்லாத சமயம் மட்டும் என்னிடம் வந்து என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். இரவில் மேசையில் வைத்திருந்த இவர் படத்திற்குமுன் போய்ப் படுத்திடுவாள்! மீராவுக்கும் இவர்மீது கொள்ளைப் பிரியம் என்பதை நடைமுறையில் ஏற்கனவே நான் உணர்ந்திருந்தேன். வாயில்லா ஜீவன்களும் பாசம் நிறைய உள்ளவையே! எங்களின் அத்தனை உணர்வுகளையும் உணரக்கூடியவையே!
    இக்கதையில் அதனை அழகாகச் சொல்லிய விதம் சிறப்பு!

    மிகவும் அருமையாகக் கதையைக் கொண்டு சென்றிருக்கிறீர்கள் அதிரா!
    அந்த மகள் ஏனிறந்தாள் என்பதை ஓரிரு வரியில் சேர்த்திருக்கலாம். சின்ன வயதில் மனதில் பதிந்த கதைக்கருவிற்கு மிகச் சிறப்பாக உயிர் கொடுத்துச் சிறுகதையாக்கியமைக்குப் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  55. //நெல்லைத் தமிழன் said...
    எது சரியான தலைப்பு? ஸ்ரீராம் போட்டிருக்கிற 'வண்டிக்கார ராமையா'வா அல்லது 'வண்டில்கார ராமையா'வா? //

    ஆங்ங்ங்ங் பொயிண்ட்டுக்கு வந்தாச்சூஊஊஊஊ வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

    உங்களுக்கு ஒரு புறு:)ணம் சொல்லோணும்:)).. நாங்க.. வாகனங்களை பற்றிப் பேசும்போது.. வண்டி எனப் பாச மாட்டோம்ம்.. ஏனெனில் வண்டி என்றால்.. வயிற்ரைத்தான் வண்டி என்போம்ம்.. இதுக்கு டிக்‌ஷனறி எடுக்க வேண்டாம் கர்ர்ர்ர்ர்ர்:) இது பேச்சு வழக்கு:)).. ஸ்கூலில் எழுதும்போது வயிறு என்போம்... ஆனா நோர்மலா எல்லோருமே வண்டியைப் பாருங்கோ.. நல்லா வண்டி முட்டச் சாப்பிட்டிட்டார் போல..:) இப்பூடிச் சொல்லுவோம்ம்:))

    ... சரி அது போகட்டும்... மாட்டு வண்டில் எனத்தான் சொல்லுவோம்.. அது சரியா தப்பா எனத் தெரிய வில்லை... ஏனெனில் வண்டிக்கார:) எனச் சொன்னால் வயிற்ருக்கார:) என அர்த்தமாகிடும் நம் பாஷையில்:))..

    ///நல்லா இருக்கு. என்ன அதிரா சோக ராகம் பாட ஆரம்பித்துவிட்டார்.//
    ஹா ஹா ஹா... நான் உஸ்ஸ் எண்டால் அழுவேன்:)) உர்ர்ர்ர்ர்ர்ர் எண்டால் சிரிப்பேன்:))... அப்படித்தான் இதுவும்:))...

    பதிலளிநீக்கு
  56. ///நெல்லைத் தமிழன் said...
    அதிராட்ட கேட்ட, 'செக்'ட கேட்கச் சொல்லுவினம்.///

    ஹா ஹா ஹா என் செக்:) .. அவ ஓடுற மீனில நழுவுற மீன்:)) கூட்டத்தில கோவிந்தாப் போடத்தான் அவ ஓகே:) தனியே வச்சுக் க்கிளவி:) ஹையோ கேள்வி கேழுங்கோ மயங்கியே விழுந்திடுவா:)) ... ஹையோ அவ இனி இங்கின வரமாட்டா எனும் ஒரு தெகிரியத்தில ஜொள்ளிட்டேன்ன்ன்.. வள்ளிமலை முருகா என்னைக் காப்பாத்த்ங்ங்ங்ஞ்ஞ்ஞ்ங்:))..

    ///ராகு, ரீத் - இது காளை மாடுகளின் பெயரா?//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) த் ல முடிஞ்சால் அது ஆம்பிளைப்பிள்ளைகளின் பெயராக்கும்:))

    பதிலளிநீக்கு
  57. //மனோ சாமிநாதன் said...
    அழகான கதை அதிரா! பாராட்டுக்கள்!//

    வாங்கோ மனோ அக்கா.. மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  58. வாங்கோ பூவிழி வாங்கோ..

    //பூ விழி said...
    ஹலோ திரும்பவும் வந்துட்டேன் ///
    ஹா ஹா ஹா மகிழ்ச்சி!!!

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  59. //KILLERGEE Devakottai said...
    12 மணிக்கு மேலே காலை வணக்கமா ?
    செல்லாது... செல்லாது.//

    பூவிழிக்குச் செல்லுமாம்:).. காரில போனால் செல்லாதுதான் ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  60. ///ஏகாந்தன் Aekaanthan ! said...

    வாங்கோ ஏகாந்தன் அண்ணன்...
    //வாழ்வின் பெருந்துக்கம் நம்மைத் தனிமைப்படுத்தித் தண்டிக்கையில், சோகத்தைப் பகிர அன்பானவர் அருகிலிருந்தால் நல்லதுதான்.//

    உண்மைதான்.. எல்லோருக்கும் இக் குடுப்பனவு அமைவதுமில்லை...

    // ஆனால் அன்பு காட்டுவோர் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. பல்காட்டுவோர் எல்லாம் அன்பு காட்டுபவரில்லை !//

    இதுவும் உண்மையே... காரணத்துக்காகச் சிரிப்போரும் உண்டு... மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  61. //Angel said...
    நானே ரீத் என்னவாயிருக்கும்னு குழம்பிட்டிருக்கேன் வரேன் கொஞ்சம் நேரத்தில்//

    வாங்கோ அஞ்சு வாங்கோ.. கூகிள் டிக்‌ஷனறியில பாருங்கோ.. அது பற்களாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  62. //Asokan Kuppusamy said...
    ஆதிராவின் கதை தற்காலத்திய நடைமுறையைச் சுட்டிக்காட்டுகிறது. ஆற்றுப்படுத்த ஆள்தான்இல்லை என்பதை அழகாக எடுத்து காட்டியுள்ளார் த.ம.வுடன்//

    வாங்கோ வாங்கோ.. அவ்வ்வ்வ்வ் இண்டைக்கு என் கதை படிச்சு வழமையை விட நிறைய எழுதிட்டீங்க மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  63. //காமாட்சி said...
    அந்த வாயில்லா ஜீவன்களுக்கும் அந்தப்பழகிய இரண்டு மனுஷிகளும் காணோமே என்று மனதில் தோன்றி இருக்கும்.//

    வாங்கோ காமாட்ஷி அம்மா... உண்மைதான், வீட்டு உறுப்பினர்களில் ஒருவர் குறைந்தாலே அவற்றுக்கு தெரிந்துவிடும்.. அத்தோடு நம் குரலை வைத்தே நாம் எப்படியான மனநிலையில் இருக்கிறோம் என்பதனையும் அறிந்து கொள்வார்கள்.. என்ன அவர்களால் பேச முடியாமையால்.. நம் எல்லோருக்கும் அவற்ரின் உணர்வுகள் புரிந்துகொள்ள முடிவதில்லை.

    மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  64. ///Angel said...
    இந்த கடவுள்தான் எவ்ளோ பொல்லாதவர் ஒரு மனுஷன் எவ்ளோதான் தாங்குவார் கஷ்டப்பட்டவங்களுக்கே திரும்பி திரும்பி துக்கத்தை தரார்///

    அது உண்மையேதான் அஞ்சு... பட்ட காலிலேயே படும் என்பினம்... சிலருக்கு அப்படி ஆகி விடுகிறது..

    ஒருவருக்கு கிடைக்கும் துன்பம் என்பது.. அவர்களால் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்திக்கு உட்பட்டே கிடைக்குமாம் எனச் சொல்கிறார்கள்.. ஆனா அதை மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை...

    பதிலளிநீக்கு
  65. அதிரா! உங்கள் வாசிப்புக்காக நான் குறிப்பிட்டிருந்த கிருஷ்ணன் நம்பியின் 'மருமகள் வாக்கு' என்ற கதையின் லிங்க் கொடுத்திருக்கிறேன். தவறாமல் வாசித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.

    http://azhiyasudargal.blogspot.in/2008/10/blog-post_3258.html

    பதிலளிநீக்கு
  66. ஹா ஹா அதிரா எனக்க பதில் அளித்துவிட்டீர்கள் நன்றி
    லன்ச் டைம் 12 .30 க்குத்தான் தொடங்குகிறது அப்புறம் தான் பள்ளியில் good afternoon மிஸ் என்று சொல்லுவோமில்லையா நானும் சின்ன பிள்ளை நியாபகத்தில் சொல்லிட்டேன்.

    பதிலளிநீக்கு
  67. //Angel said...
    துக்கத்தை கேட்க இளைப்பாறுதல் தர ஒருவர் கூட முன் வரலை பாவம் ராமையா .அப்படிப்பட்ட உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம் ///

    உண்மைதான் இதை நான் 6,7 வயதிலேயே படித்த போது எவ்ளோ கவலைப்பட்டேன் தெரியுமோ? அதனால்தானோ என்னமோ நான் எப்பவும் வயதானோரோடு அதிகம் ஒட்டுவேன்.. அவர்கள் சொல்லும் கதை எல்லாம் கேட்பேன்ன்.. என்னால் முடிந்த ஆறுதல் சொல்லுவேன்.

    அம்மம்மா எனக்கு தன் குழந்தைப் பருவக் கதைகள் எல்லாம் சொல்லுவா... மத்தியானம் சாப்பிட்ட பின்பு, அம்மம்மா படுத்திருப்பா, நான் அருகில் போனால் தன் சாறித்தலைப்பை விரித்து தருவா.. நான் அதில் படுத்திருப்பேன்... அவ கதை சொல்லிக்கொண்டே போவா.. பலது டெய்லி ரிப்பீட்டிலயே போகும்.. இருப்பினும் பொறுமையாக் கேட்பேன்ன்:).. பார்த்தீங்களோ மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊ:))

    பதிலளிநீக்கு
  68. அதிரா அழகான கதை. ராமையா பாவம் இல்லையா. கதை மனதைத் தொட்டது. நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  69. ஜீவி அண்ணா நீங்கள் சொல்லியிருக்கும் கதையை வாசித்திருக்கிறேன். காலையிலேயே அதிராவின் கதைக்கு உங்கள் கருத்தைப் பார்த்துவிட்டுப் பதில் போட இயலவில்லை. ஏகாந்தன் சகோ தனது தளத்தில் ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றி சொல்லி கதையின் லிங்க்கும் தருவார். அப்போது வாசித்தது.
    ருக்மணி மாட்டுடன் பேசுவது மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கும். ருக்மணி பேசுவதே அந்த மாட்டுடன் தான். எல்லாமே ருக்மணியின் மனதை இயற்கையோடு இணைந்த மனதைச் சொல்லுவதாக இருக்கும்.கிளியுடன் பேசுவதும் அழகாய் இருக்கும்..மாமியாரிடம் சொல்லிவிடாதே என்றும்...அக்கிளியைத் தன் வீட்டிற்கு அழைப்பது எல்லாம் அட....நானும் கூட காகத்துடன், என் வீட்டு வளர்ப்புச் செல்லம் கண்ணழகி, அணில், குரங்கு என்று வீட்டிற்கு வருவனவற்றுடன் எல்லாம் பேசுவதுண்டு!! ருக்மணி மிகவும் ஈர்த்தாள்...

    கீதா

    பதிலளிநீக்கு
  70. இப்போ புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்:))... ஓஓஓ எல்லோரும் மனதை ஆற்றுப்படுத்துங்கோஓஓஓஓ:))//

    ஹை அதிரா கற்றுக் கொண்டுவிட்டார்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  71. Angel said...
    //அடிபட்டு அவதிப்பட்டு வந்தாலும் இறைவன் கைவிடுவதில்லை ஏதாவது வழியை காண்பித்து திசை திருப்பி விடுவார்//

    நீங்க சொல்றது சரிதான் அஞ்சு, ஆனா இங்கே விதி என வரும்போது.. இப்போ நமக்கு டேட் முடிஞ்சுது மேலே போகோணும்.. நம் ஸ்டேசன் வந்து விட்டது என்றால் இறங்கித்தானே ஆகோணும்.. அதை இறைவனாலும் தடுக்க முடியாது என்கிறார்கள்..

    பதிலளிநீக்கு
  72. //Angel said...
    ஆமாம் மியாவ் நீங்க ஆறிலிருந்து அறுபதுவரை நல்லபொண்ணுதான் :)//

    ஹலோ மிஸ்டர்:).. உங்களுக்கு ட்றுத்தைப்போல வர வர மறதி அதிகமாயிட்டே வருது...:) கர்ர்ர்ர்ர்ர்:) பாருங்கோ என் சுவீட் 16 வயசைக்கூட அப்பப்ப மறந்திடுறீங்க:))..

    ///அவ்வ் மல்ட்டி எப்படி மாலதி ஆச்சு :) ஹாஹா கர்ர் for கூகிள்//

    ஹா ஹா ஹா என் கண்ணிலும் பக்கெனப் பட்டுது:) நல்லவேளை பெண்பால் நேம்ம்ம்ம்:)) அந்த ஆண்டவர் உங்களைக் காப்பாற்றிட்டார்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி அஞ்சு...

    பதிலளிநீக்கு
  73. //Geetha Sambasivam said...///
    வாங்கோ கீசாக்கா வாண்டோ:).. நீங்க இன்று வரவில்லை எனில்.. நோட்டிஸ் அடிச்சுத் தேட இருந்தேன்.. அதுக்குள் வந்திட்டீங்க... விருந்தினர் எல்லாம் திரும்பியிருப்பினம் தானே...

    ///அதிரா, ஊசிக்குறிப்பு சொல்லுவது சரியல்லவே! விதி தவறாக இருக்காது. நம்முடைய விதி தான் நமக்கு வரும்.////
    இல்ல கீசாக்கா...உங்களுக்கு எங்கட கண்ணதாசன் அங்கிளின் டத்துவம்:) பிரியல்ல:)).. அதிராவுக்குத்தான் அது புரியுமாக்கும்:)... அதாவது வந்து என்னடாண்டா.... நமக்கு எழுதப்பட்டிருக்கும் விதி தவறாக எழுதப்பட்டிருக்குமேயானால்ல்ல்ல்.. என படிங்கோ.. இப்போ புரியுதோ?.. ஒவ்வொருவருக்கென ஒவ்வொரு தலை எழுத்து இருக்குதுதானே.. அந்தத் தலை எழுத்து தவறாக எழுதப்பட்டிருக்குமேயானால்.. அதை மாற்ற முடியாது அப்பூடிங்கிறார்:))... இப்போ சிலரைப் பாருங்கோ... நல்ல மகிழ்ச்சியா இருந்து.. நல்லபடி வாழ்ந்து.. வயதாகி.. அப்பவும் கஸ்டப்படாமல் நல்லபடி கண்ணை மூடுவோரும் அருமையா உண்டு தானே... அவர்களின் விதி தவறானதல்ல:) நல்ல விதி எல்லோ:)) இப்போ பிரிஞ்சிருக்குமே ஹையோ ஹையோ:)).. வியக்கம் கொடுத்தே மீ 2 கிலோ மெலிஞ்சிட்டேன்ன் கர்ர்ர்ர்ர்:))..

    ///அதை மாற்ற முடியாது என்பதால் தான் கடவுள் அதில் தலையிடுவதில்லை! விதியின் பலனை அனுபவித்தே தீர வேண்டும்!//

    இது கரீட்டூஊஊஊஊஊஊஊ.. மிக்க நன்றி கீதாக்கா.

    பதிலளிநீக்கு
  74. வாழ்வின் பெருந்துக்கம் நம்மைத் தனிமைப்படுத்தித் தண்டிக்கையில், சோகத்தைப் பகிர அன்பானவர் அருகிலிருந்தால் நல்லதுதான். ஆனால் அன்பு காட்டுவோர் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. பல்காட்டுவோர் எல்லாம் அன்பு காட்டுபவரில்லை !நன்றி ஏகாந்தன்.
    அதிரா அழகாகக் கையாண்டு இருக்கிறார்.
    சோகம் பகிர்ந்தால் பாதி குறையும்.
    இந்தக் கதையின் சோகமும் குறையட்டும்.
    வாழ்த்துகள் அதிரா.

    பதிலளிநீக்கு
  75. வாங்கோ இளமதி வாங்கோ..

    //இளமதி said...
    அதிராவிடமிருந்து இப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவேயில்லை.//
    ஹா ஹா ஹா எல்லோருக்கும் நான் சிரிச்சா மட்டும்தான் பிடிக்குது:))

    //மனதைக் கனக்க வைத்த கதை. எதையும் சமாளிக்கலாம் என இருப்பது இளமைப் பருவம். ஆனால் முதுமைக் காலம் நெருங்க நெருங்க வாழ்க்கைத் துணையுமின்றித் தனித்துவிடும் சமயம் மனத்துயரைத் துக்கத்தைப் பகிர்ந்து ஆற ஒரு ஜீவன் இல்லையாயின் கொடுமையே!... 100 வீதம் உண்மை!!//

    மிக்க நன்றி.. உண்மைதானே.. இதை அதிகம் உணர்வது வெளிநாட்டில்தான்.. இங்கே பிள்ளைகளும் பெற்ரொருடன் சேர்ந்து இருக்க மாட்டினம்... ஜோடியாக இருக்கும்வரை ஓகே.. பின்னர் இருவர் ஒருவராகி விடும்போது இந்த வெள்ளைகள் பேச ஆளில்லாமல் டிப்பிரெஸ்ட் ஆகி விடுகின்றனர்... ஆரையாவது கண்ணில கண்டால்.. விடாமல் பேசிக்கொண்டே இருப்பினம் கஸ்டமாக இருக்கும் பார்க்கவே...

    மீராவின் செயல் நெகிழ வைக்கிறது... அவைக்கு கதைக்கவும் தெரிஞ்சால்ல் பின்பு நமக்கு மனிதரே தேவைப்படாது:)) ஹா ஹா ஹா..

    //சின்ன வயதில் மனதில் பதிந்த கதைக்கருவிற்கு மிகச் சிறப்பாக உயிர் கொடுத்துச் சிறுகதையாக்கியமைக்குப் பாராட்டுக்கள்! ///

    உண்மை.. பசுமரத்தாணிபோல சின்ன வயதில் மனதில் ஆழ/ளமாக சில நினைவுகள் பதிந்தால் அது எனக்கு மறக்கவே மறக்காது...

    அந்தக் கட்டுரையில்.. இது ஒன்று...

    இன்னொன்று... “தன் தவறுகளை உணர்ந்து திருந்திய சிறைக் கைதி ஒருவனின் சிந்தனை”..

    மூன்றாவது “களவெடுத்தாலும் பொய் சொல்லாதே”... இவை மூன்றும் என் மனதில் ஆளமாக பதிந்து விட்டவை... அன்றிலிருந்து நான் மனதில் எடுத்த உறுதிமொழி.. பொய் சொல்லக்கூடாது... இதுபற்றி ஒரு போஸ்ட் போட நினைக்கிறேன்.. போடுவேன்:))

    ///அந்த மகள் ஏனிறந்தாள் என்பதை ஓரிரு வரியில் சேர்த்திருக்கலாம்.//

    உண்மையில் எனக்கு அப்படி ஒரு கட்டம் எழுத மனமே வரவில்லை... ஆனா நான் படிச்ச கட்டுரை அப்படித்தான் இருந்தது, அதனால அதுக்குள் டீப்பாகப் போய்.. விளக்கம் கொடுத்து கதையை மெருகூட்ட எனக்கு மனம் வரவில்லை... அதனாலதான் பட்டும்படாததுபோல சொல்லி முடிச்சேன்.

    மிக்க நன்றி இளமதி..

    பதிலளிநீக்கு
  76. ///ஜீவி said...
    அதிரா! உங்கள் வாசிப்புக்காக நான் குறிப்பிட்டிருந்த கிருஷ்ணன் நம்பியின் 'மருமகள் வாக்கு' என்ற கதையின் லிங்க் கொடுத்திருக்கிறேன். தவறாமல் வாசித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.

    http://azhiyasudargal.blogspot.in/2008/10/blog-post_3258.html///

    அச்சச்சச்சோ நீங்க திரும்ப வந்து லிங்கும் தந்திருக்கிறீங்க.. அதுக்கு முதலில் நன்றிகள்.

    சத்தியமா உங்களுக்குப் பதிலைக் கொடுத்து விட்டுப் போனபின்புதான் நினைத்தேன்.. இக்கதைபற்றி ..கிருஸ்னன் நம்பி அவர்கள் எழுதியது பற்றி நான் கேட்காமல் விட்டு விட்டேனே என... ஏனெனில் கிடைக்கும் நேரத்தில் எட்டு எட்டிக் கொமெண்ட் போடுவதால்:))..

    மிக்க நன்றி நிட்சயம் படித்து விட்டுச் சொல்லுவேன்.

    பதிலளிநீக்கு
  77. ///பூ விழி said...
    ஹா ஹா அதிரா எனக்க பதில் அளித்துவிட்டீர்கள் நன்றி
    லன்ச் டைம் 12 .30 க்குத்தான் தொடங்குகிறது அப்புறம் தான் பள்ளியில் good afternoon மிஸ் என்று சொல்லுவோமில்லையா நானும் சின்ன பிள்ளை நியாபகத்தில் சொல்லிட்டேன்.///

    ஹா ஹா ஹா அதைத்தட்டிக் கேட்டவர்.. உகண்டா புகழ் .. உகண்டாவில் சொந்தக் காசில சூனியம் வச்சிருக்கும்:).. ஹையோ ஆண்டவா ஒரு ஃபுளோல வந்திட்டுது அழிச்சுப்போட்டு திரும்பப் படிங்கோ:) சொந்தக் காசில ரெயின் வாங்கி ஓட விட்டிருக்கும் கில்லர்ஜி அவர்கள்:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  78. //Thulasidharan V Thillaiakathu said...
    அதிரா அழகான கதை. ராமையா பாவம் இல்லையா. கதை மனதைத் தொட்டது. நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்!//

    ஓ இது துளசி அண்ணனோ வாங்கோ.. என்ன செய்வது ராமையா போன்றோர் பாவம்தான்.. ஆனா இப்படி ஒரு நிலைமையில் நம்மவர்கள் எங்கும் இருக்க மாட்டினம் என்றே நம்புகிறேன்.. இது கதைதானே... மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  79. ///Thulasidharan V Thillaiakathu said...
    ஜீவி அண்ணா நீங்கள் சொல்லியிருக்கும் கதையை வாசித்திருக்கிறேன். //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மீதான் 1ஸ்ட்டாப் படிப்பேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  80. இன்றைய உலகில் இது இன்னும் மோசம். சொல்லி அழக்கூட ஆளில்லை. பகிரமுடியாத சோகங்கள் பாரமாகின்றன. அந்த ஆறுதல் கூட இல்லை என்றால்? அதுசரி, என்னதான் காட்டுக்குள் குடி இருந்தாலும் ஜனநடமாட்டமே இல்லாமல் போகுமா? பாவம்தான் ராமையா.

    பதிலளிநீக்கு
  81. ///Thulasidharan V Thillaiakathu said...
    இப்போ புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்:))... ஓஓஓ எல்லோரும் மனதை ஆற்றுப்படுத்துங்கோஓஓஓஓ:))//

    ஹை அதிரா கற்றுக் கொண்டுவிட்டார்!!!

    கீதா///ஓஓஓஓஓஒ எல்லோரும் ஆற்றைப் படுத்துங்கோஓஓஓஓஒ ஹா ஹா ஹா :)..

    பதிலளிநீக்கு
  82. //வல்லிசிம்ஹன் said...//

    வாங்கோ வல்லிம்மா உண்மைதான் மிக்க நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  83. //ஸ்ரீராம். said...
    இன்றைய உலகில் இது இன்னும் மோசம். சொல்லி அழக்கூட ஆளில்லை. பகிரமுடியாத சோகங்கள் பாரமாகின்றன. அந்த ஆறுதல் கூட இல்லை என்றால்?///

    அடடா இவர் எங்கேயிருந்து இப்போ வந்தார் ஹா ஹா ஹா:))

    /// அதுசரி, என்னதான் காட்டுக்குள் குடி இருந்தாலும் ஜனநடமாட்டமே இல்லாமல் போகுமா? //

    நோ குரொஸ் குவெஷன்ஸ் பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா மனதை ஆற்றைப்படுத்துங்கோ ஸ்ரீராம்:))) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  84. தானாகவே வந்து படிச்சு, கதை நன்கு பிடித்துக் கொண்டது அதனால நானாகவே வோட்டு போட்டேன் எனவும் கூறி, தானாகவே தகவலும் அனுப்பியிருக்கும் கோபு அண்ணனுக்கு மிக்க நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  85. @ athiraமியாவ் :

    //..வண்டி என்றால்.. வயிற்ரைத்தான் வண்டி என்போம்ம்.. இதுக்கு டிக்‌ஷனறி எடுக்க வேண்டாம்..//
    //..எப்பவும் மகிழ்ச்சியையும் கலகலப்பையும் மட்டுமே விரும்பியிருந்தால்.. இடையில் ஏதும் துன்பம் ஏற்பட்டால் ஆகவும் சோர்ந்து துவண்டிடுவோம் எல்லோ..//
    //..ஒவ்வொருவருக்கென ஒவ்வொரு தலை எழுத்து இருக்குதுதானே.. அந்தத் தலை எழுத்து தவறாக எழுதப்பட்டிருக்குமேயானால்... //
    //..காரணத்துக்காகச் சிரிப்போரும் உண்டு..//
    //..நம் குரலை வைத்தே நாம் எப்படியான மனநிலையில் இருக்கிறோம் என்பதனையும் அறிந்து கொள்வார்கள்.. என்ன அவர்களால் பேச முடியாமையால்..//
    //..கதைதானே என விட்டிடோணும்.. மனதுக்கு எடுத்துப் போயிடக்குடா:)..//
    //..வள்ளிமலை முருகா என்னைக் காப்பாத்த்ங்ங்ங்ஞ்ஞ்ஞ்ங்:))..//

    அதிராவின் கதை ஒரு சிறு ஓவியம். ஆனால், பின்னூட்டங்களுக்கு அதிரா எழுதும் பதில்களோ பெருங்காவியம் .. !

    பதிலளிநீக்கு
  86. அதிரா, நான் பின்னர் வந்து அளித்த பின்னூட்டம் உங்கள் கண்களில் படாமல் தப்பியது எப்படி?

    பதிலளிநீக்கு
  87. கதை எழுதிய கதாசிரியை அதிராமியாவ் க்கு வாழ்த்துக்கள். அருமையான கதை கரு. கொஞ்சம் சோகமாயிட்டுது. நல்லகாலம் ராமையாவின் மனதை லேசானது என முடித்தது, வேறு முடிவாயின் இன்னும் சோகமாயிருக்கும். நாங்களும் எங்க வீட்டுசெல்லங்களுக்கு எல்லாம் பெயர்தான் வைத்து கூப்பிடுவது.ஊரில அனேகம்பேர் பெயர் வைத்துதானே கூப்பிடுவினம்.
    சின்ன வயது நினைவுகள் மறக்காது. இப்ப நடப்பது ஞாபகம் வராது உடனே.

    பதிலளிநீக்கு
  88. //ஏகாந்தன் Aekaanthan ! said...
    அதிராவின் கதை ஒரு சிறு ஓவியம். ஆனால், பின்னூட்டங்களுக்கு அதிரா எழுதும் பதில்களோ பெருங்காவியம் .. !///

    ஹா ஹா ஹா இதைப் படிச்சு உருண்டு பிரண்டு சிரிக்கிறேன்ன்ன்:)).. எவ்ளோ பொறுமையா என் கொமெண்ட்ஸ் ஐக் கொப்பி பண்ணி ஒன்றாக்கி பெருங்காவியமாப் போட்டிருக்கிறீங்க அதுக்கு நன்றிகள் ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  89. ///Bhanumathy Venkateswaran said...
    அதிரா, நான் பின்னர் வந்து அளித்த பின்னூட்டம் உங்கள் கண்களில் படாமல் தப்பியது எப்படி? //

    அச்சச்சோஒ பானுமதி அக்கா.. அது எப்பூடி மிஸ் ஆச்சு என்றே தெரியவில்லை.. இன்று கொமெண்ட் போடவே ரைம் கிடைக்கவில்லை.. அதனால நிறைய இடைவேளை எடுத்தெ போட்டு முடிச்சேன்.. அப்போ உங்கள் பெயரைப் பார்த்து ஏற்கனவே பார்த்த கொமெண்ட் என நினைச்சிட்டேன் போலும் மன்னிச்சுக்கோங்கோ:))).. நல்லவேளை சுட்டிக் காட்டினீங்க.. இல்லை எனில் கவனிச்சிருக்க மாட்டேனே கர்ர்ர்ர்ர்ர்ர் 4 மீ:)..

    பதிலளிநீக்கு
  90. Bhanumathy Venkateswaran said...
    அடடே! நம்பவே முடியவில்லை! அதிரடி அதிராவா இப்படி சோகம் ததும்பும் ஒரு கதையை எழுதியிருப்பது? சோகமும் உங்களுக்கு நன்றாகவே கை வருகிறது. பாராட்டுகள்!///

    ஹா ஹா ஹா இப்பூடித்தான் எல்லோரும் வியக்கினம்:))....
    8ம் வகுப்பில் ஒரு கதைப்புத்தகம் தயாரிக்கும் போட்டி நடந்தது.. அதாவது கதையையும் நாங்களே எழுதி.. அதை புத்தகம் போல அழகாக அலங்கரிச்சு பார்வைக்கு வச்சு.. அதில் எனக்கு 2ம் இடம் கிடைச்சது.... இரு நண்பர்களின் ஒரு சோகக் கதைபோல ஒன்று எழுதினேன்... ஆனா எங்கட ரீச்சர் கேட்டா.. அதிரா இது நீங்கள் எழுதியதோ அல்லது ஆராவது எழுதித்தந்தவையோ என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ////மனபாரத்தை விலங்குகளிடமும் ஆற்றிக்கொள்ளலாம் என்பதை மட்டும்தான் சொல்ல வந்தீர்களா?///
    இல்ல பானுமதி அக்கா... வயதான காலத்தில் தனிமைப்படுத்தப் பட்டு விட்டால் எவ்வளவு கொடுமை... அவரின் மனக் கவலையைச் சொல்லி அழக்கூடவாவது ஒருவர் தேவை எல்லோ... அதைத்தான் சொல்ல வந்தேன்...

    /// "எனக்கு ஒரு மகள் இருந்தாள், எனக்கு ஒரு மகள் இருந்தாள்" என்று எதிர்பார்ப்பை எகிறவைத்து விட்டு, அவள் மறைந்ததை மட்டும் சொல்லியிருப்பது ஏதோ குறைவது போல இருக்கிறது. அதற்கு காரணமும் சொல்லியிருக்கலாமோ?///

    இதைத்தான் மேலே இளமதியும் கேட்டிருக்கிறா.. அவவுக்கு பதில் குடுத்திருக்கிறேன்... எனக்கு இக்கதையை எழுதத் தொடங்கிட்டேனே தவிர... பிள்ளைகளுக்கு ஒரு பிரச்சனை என்பதை என்னால கதையில கூட எழுத முடியவில்லை பானுமதி அக்கா.. அதனால தான் பட்டும்படாமல் சொல்லி முடிச்சிட்டேன்ன்... எனக்கு இத்தனை வருடமாக மனதில் இருந்த அக்கட்டுரையை எழுதோணும் என ஒரு ஆசை நெடுங்காலமாக இருந்தது... பல தடவைகள் என் புளொக்கில் எழுத நினைச்சு மிஸ் ஆகிக்கொண்டே வந்துது, இம்முறை சரி இங்கு எழுதி அனுப்புவோமே என எழுதினேன்...

    மிக்க நன்றி பானுமதி அக்கா.. மிஸ் பண்ணிட்டமைக்கு மன்னிச்சுக்கொள்ளுங்கோ..

    பதிலளிநீக்கு
  91. ஆவ்வ்வ்வ்வ்வ் வாங்கோ அம்முலு வாங்கோ.. தேடிப் பிடிச்சு வந்து சேர்ந்திருக்கிறீங்க மிக்க நன்றி.

    //priyasaki said...
    கதை எழுதிய கதாசிரியை அதிராமியாவ் க்கு வாழ்த்துக்கள். ///

    ஆவ்வ்வ்வ்வ்வ் உங்களுக்குத்தெரியுது:)) நான் எழுத்தாளர் எனப் பெயர் மாற்றினால் அடிக்க வருவினம்:))

    ///அருமையான கதை கரு. கொஞ்சம் சோகமாயிட்டுது. நல்லகாலம் ராமையாவின் மனதை லேசானது என முடித்தது, வேறு முடிவாயின் இன்னும் சோகமாயிருக்கும்.//

    ஓ அப்படிச் சொல்றீங்களோ நீங்க? நான் நினைச்சேன் ராமையாவும் அப்படியே நிரந்தர உறக்கமாயிட்டார் என முடிச்சிருந்தால் அது ஒருவித மனநிம்மதி எல்லோ.. அப்படி நினைச்சேன்..

    ///ஊரில அனேகம்பேர் பெயர் வைத்துதானே கூப்பிடுவினம்.///
    ஹா ஹா ஹா எங்களிடம் ஒரு கெள இருந்தது.. அதுக்கு நாங்க வச்ச பெயர் “சீனிமாடு”... ஏனெனில் சீனிபோல சுவீட் அவ.... ஒரு குழந்தைப்பிள்ளைகூட மடியில் தொட்டால் போதும் அப்படியே நிற்பா.. பால் கறக்கச் சொல்லி.. கோபமே வராது அவவுக்கு... ஹா ஹா ஹா மிக்க நன்றி அம்முலு.

    பதிலளிநீக்கு
  92. //அவரின் மனக் கவலையைச் சொல்லி அழக்கூடவாவது ஒருவர் தேவை எல்லோ... அதைத்தான் சொல்ல வந்தேன்...//

    அதிரா... எனக்கு நினைவுக்கு வரும் வரிகள்

    "நானுறங்கும் நாள் வேண்டும்...
    சாய்ந்துகொள்ள தோள் வேண்டும்...
    என் கண்ணில் நீர் வேண்டும்..
    சுகமாக அழவேண்டும்..."

    கவிஞர் பெயரைச் சொல்லமாட்டேனே....!!!!!

    பதிலளிநீக்கு
  93. //grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr ...//


    ​//me going! //

    கீதாக்கா... இன்று புதன் கிழமை!

    பதிலளிநீக்கு
  94. காலை வணக்கம்பு! புதன் கிழமை எங்கள் ப்ளாகிற்கு விடுமுறை நாளா? இன்னும் திறக்கவில்லையே..!?

    பதிலளிநீக்கு
  95. நன்று அதிரா...
    ஆன கொஞ்சம் கனமா கதை...(கதை களில் கூட சோகங்கள் பிடிப்பது இல்லை...)

    பதிலளிநீக்கு
  96. @sriram
    ///கவிஞர் பெயரைச் சொல்லமாட்டேனே....!!!///
    ஹா ஹா ஹா எங்கட கண்ணதாசன் அங்கிளாத்தான் இருக்கும்:).

    பதிலளிநீக்கு
  97. கீசாஆஆஆஆக்காஆஆ 4 நாளாக எங்களை மதிலுக்கு மேலாலகூட எட்டி ச் சுகம் கேக்கேல்லை ... இப்போ வந்து கர்ர்ர்ர்ர் குர்ர்ர்ர்ர்ர் எண்டு கொண்டு நிக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...

    பதிலளிநீக்கு
  98. அதிரா மியாவ்! என்னை நானே சுகம் கேட்டுக்க நேரமில்லையாக்கும்! :)

    பதிலளிநீக்கு
  99. பானுமதி அக்கா,,, புதன் கிழமை போஸ்ட் உரிமையாளர் கெள அண்ணன்... அவர் நித்திரையால எழும்பவே பத்து மணியாகிடுமாம்ம்ம்ம்ம்ம்:).. ஹையோ படிச்சதும் கிழிச்சுக் கங்கையில வீசிடுங்கோ:)

    பதிலளிநீக்கு
  100. //ஹா ஹா ஹா எங்கட கண்ணதாசன் அங்கிளாத்தான் இருக்கும்:). //

    தப்பு!

    பதிலளிநீக்கு
  101. ////Geetha SambasivamJanuary 17, 2018 at 6:52 PM
    அதிரா மியாவ்! என்னை நானே சுகம் கேட்டுக்க நேரமில்லையாக்கும்! :)///

    ம்ஹூஉம்ம்ம்ம்ம்ம் புது சாறி கட்டிப் பொங்க மட்டும் நேரமிருந்ததாக்கும்:) ஹா ஹா ஹாஅ

    பதிலளிநீக்கு
  102. ////ஸ்ரீராம்.January 17, 2018 at 7:50 PM
    //ஹா ஹா ஹா எங்கட கண்ணதாசன் அங்கிளாத்தான் இருக்கும்:). //

    தப்பு!////
    ஓஓஓ அபடியெண்டால் கூகிள் அங்கிளிடம்தான் கேட்டுப் பார்க்கோணும்:)

    பதிலளிநீக்கு
  103. வாங்கோ அனு... உண்மைதான் சோகத்தை ஆரும் விரும்புவதில்லைத்தான் ஆனா நாம் விரும்புவது தான் நமக்குக் கிடைக்குதோ:)... அதனால எது வந்தாலும் ... இதுவும் கடந்துபோகும் என எண்ணிட வேண்டியதுதான்... மிக்க நன்றி அனு...

    பதிலளிநீக்கு
  104. @sriram
    ஆஆஆவ்வ்வ்வ்வ்வ் கண்டுபிடிச்சாச்சூஊஊ... இதனைக் கண்டு பிடிச்சுத் தந்தவர் ஆரென:) , என்னைத் தேம்ஸில் தள்ளினாலும் ஜொல்ல மாட்டனெ!...

    அது வை அங்கிளாக்கும்:).. கவிஞர்:)...

    https://youtu.be/XH3XqHaeln8

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!