'எங்களி'ன் செவ்வாய்த் தொடரான "கேட்டு வாங்கிப் போடும் கதை" யில் சீனு என்னும் ஸ்ரீநிவாசன் பாலகிருஷ்ணன் கதையை வெளியிட வெகு விருப்பம் எனக்கு.
"திடங்கொண்டு போராடு" என்னும் தளத்தில் எழுதி வரும் திறமை மிகு இளைஞர். மயக்கும் சிரிப்புக்குச் சொந்தக்காரர்.
என் பெயர் சொல்லி இரண்டு பதிவுகள் எழுதி பெருமைப்படுத்தி இருந்தார். 1. எங்க(ள்) ஸ்ரீராம் சாரும் IPL மேட்சும் 2. எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார் - எனக்குக் கொடுத்த மொக்கை.
காதல் கடிதம் எழுதும் போட்டி ஒன்றில் பெரிய தலைகளுக்கு நடுவே என்னையும் ஒரு நடுவராக்கி இருந்தார். அதற்கு எனக்கு ஒரு தொகைக்கு புத்ததகப் பரிசும் தந்தார்.
==============================
சொக்கன்
ஸ்ரீநிவாசன் பாலகிருஷ்ணன்
(சீனு)
சுத்தமாகக் கூட்டம் இல்லை, சுவாமி சன்னதியே வெறிச்சோடிக் கிடந்தது என்றாலும் அய்யரும் செக்யுரிட்டியும் மேலும் சில காவல் அதிகாரிகளும் பக்தர்களை 'போறும் போறும் போங்கோ போங்கோ' என்று விரட்டிக் கொண்டிருந்தது எரிச்சலைக் கொடுதத்து.
கண்களை மூடி நமச்சிவாய உச்சரிக்கலாம் என்றால் எங்கோ மு
டு
க்கிவிடப்பட்ட மந்திரமாக 'போறும் போறும் போங்கோ போங்கோ'வே ஒலித்துக் கொண்டிருந்ததை மனம் வெறுத்தது. மந்திர உச்சாடனத்தைக் கைவிட்டு கருவறையில் திருவுருவாகி நின்ற சொக்கனை
,
அவனுடைய தியானத்தை கூர்ந்து நோக்கத் தொடங்கியிருந்தேன். இந்நேரத்தில் தான் காதருகில் யாரோ ரகசியம் பேசும் சப்தம் கேட்டது. ஒரு பெண்ணின் குரல் என்று அடையாளம் காண,
திரும்பி அவளது முகத்தைப் பார்த்தேன்.
தலையில் எண்ணெய் வைத்துப் பல நாட்கள் ஆகியிருக்க வேண்டும், தாமிர நிறத்தில் இருந்தது. ஒல்லியான தேகம். அப்போதுதான் குளித்திருக்க வேண்டும் என்பதால் முகம் மட்டும் கொஞ்சம் பிரகாசமாக இருந்தது. அருகில் அவளுடைய மகன் நின்று கொண்டிருந்தான். இரண்டு அல்லது மூன்றாம் வகுப்பு.
'போறும் போறும் போங்கோ போங்கோ' மந்திரம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க அந்தப் பெண் இறைவனிடம் மெய்மறந்து வேண்டிக் கொண்டிருந்தாள். அத்தனையும் தன் குடும்பம் தன் மகன் அவன் படிப்பு வாழ்க்கை குறித்ததாக இருந்திருக்க வேண்டும். பெரும்பாலும் அவளுடைய ஜெபம் காற்றாக மட்டுமே வெளிப்பட்டதால் வார்த்தைகள் கேட்கவில்லை. அதேநேரம் 'போறும் போறும் போங்கோ போங்கோ' மந்திரம் மட்டும் உச்சம் அடைந்து
,
கிட்டத்தட்ட எங்களை
த்
திட்டத் தொடங்கியிருந்தது.
அந்தப் பெண்ணோ பொறுமையாக அதேநேரம் மிகக் கவனமாக சொக்கனிடம்
,
தான் கூறவந்தது அத்தனையையும் கூறும் முனைப்பில் இருந்தாள். புறவொலிகள் அவளைப் பதட்டப்பட வைக்கவில்லை. கரம்கூப்பிய வேண்டுதல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
'
ஏ
ம்மா
...
இப்ப நகரப் போறியா இல்லியா, வந்தமா பார்த்தமான்னு இல்லாம அங்கையே நின்னா எப்டி?' என்ற கணீர் குரல் சந்நிதானத்தின் ஒட்டுமொத்த அமைதியையும் ஒருநிமிடம் அசைத்துப் பார்த்தது. அவளுடைய ஜெபத்தில் பாதி கூட நிறைவடைந்திருக்காத நிலையில், சந்நிதானமே வெறிச்சோடிக் கிடக்க தரிசனத்தைக் கெடுக்கும் கரடியான அந்த செக்யுரிட்டியை முறைத்தேன். 'உன்ன மாதிரி ஊருபட்ட பேர பார்த்த ஆளு நானு' என்பது போல் இருந்தது அவருடைய பதில் முறைப்பு.
இதற்குத்தான் இது போன்ற கோவில்களுக்கே நான் வருவதில்லை. நிம்மதியாக சாமி கும்பிட விடமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை சாமி ஒரு காட்சிப் பொருள். பார்த்துவிட்டு கன்னத்தில் போட்டுவிட்டு நகர்ந்து விட வேண்டும்.
காசிருப்பவன் வேண்டுமானால் கூட கொஞ்ச நேரம் நிற்கலாம். வேண்டலாம். கண்ணார கண்டுகளிக்கலாம். செய்த பாவத்தைக் கழுவ அங்கேயே தவம் கிடக்கலாம்.
எனக்கு இருபது நபர் தள்ளி முன்புறம் நின்று கொண்டிருந்த ஆளைப் பார்த்தேன். நல்ல தாட்டியான ஆள், உடன் மனைவி மக்கமார். வந்து பதினைந்து நிமிடத்திற்கும் மேல் ஆகியிருக்க வேண்டும். சொக்கனை கூடவே இழுத்துப் போவதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மீது யாரும் பாய்ந்து பிடுங்கப்போவதில்லை.
இது அவர்களுக்கான சந்நிதானம்.
பழமையான கோவில்களுக்கு என்று சில தனித்துவம் இருக்கிறது. காற்றோடு காற்றாக உறைந்து நிற்கும் அமைதி இருக்கிறது. எப்போது கடவுளை சந்தைப் படுத்தத் தொடங்கினார்களோ அப்போதே அமைதி குறையத் தொடங்கிவிட்டது. வேண்டுமென்றே நூறு கம்பிகளைச் சுற்றிவரச் செய்து, கருவறையில் இருந்து இருபதடி தூரத்தில் தள்ளி நின்று, கண்ணிமைக்கும் நேரத்தில் கடவுளைக் கண்டு, ச்
சே
என்னவிதமான ஆன்மிக தரிசனம் இது. சிலசமயம் கடவுள் கருவறையில் இருக்கிறாரா இல்லை கருஞ்சிறையில் இருக்கிறாரா என்ற ஐயம் ஏற்படுகிறது.
அன்றைய தினத்தில் மக்கள் கடவுளை எப்படி கண்டடைந்தார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் இன்றைக்கு நமக்கும் கடவுளுக்குமான இடைவெளியில் கடவுளின் மெய்த்தரகர்களாக தம்மை நினைத்துக் கொண்டிருப்பவர்களே கடவுளை அடையவிடாமல் செய்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. மனநிம்மதியை வேண்டி வந்தவனது சிந்தனையை சில சம்பவங்கள் என்ன என்னவோ தொடர்ச்சியான எண்ணங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. கடைசியில் முழுவதுமாக சொக்கனை மறந்து வேறு எங்கு எங்கோ உழன்று கொண்டிருப்பது அயர்ச்சியைக் கொடுத்த
து
. சொக்கன் என்னுள் உருவேறவேயில்லை.
இந்நேரம் செக்யுரிட்டி எங்களை நெருங்கி வந்திருந்தான். அவன் கண்களில் ஒரு ஜென்மத்துக் குரோதம்.
ஒருவேளை அவன் கைகளில் கொலை ஆயுதம் ஏதேனும் இருந்திருந்தால் சந்நிதானம் என்றும் பார்க்காமல் கடவுளின் கட்டளையே என்று பாசக்கயிறை வீசினாலும் வீசியிருப்பான்.
'ஏம்மா இப்ப நகரப்போறியா இல்லையா' என்று கூடுதல் சப்தத்துடன் அவன் கத்த, சொக்கனைப் பார்த்தபடியே மெல்ல அடியடியாக நகரத் தொடங்கினாள் அந்தப் பெண். இந்நேரம் அவளுடைய மகன் என்ன நினைத்தானோ தெரியவில்லை சொக்கனைப் பார்த்து ' சாமீ எங்க அம்மா நினைச்சது அத்தனையும் நடக்கணும், நான் நினைச்சதும் நடக்கணும், நாங்க எல்லாரும் சந்தோசமா இருக்கணும். எம்மா நடம்மா சாமிகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன், பாத்து
ப்
பாரு' என்றபடி தன் அம்மாவின் கையை இழுத்துக்கொண்டு வேகவேகமாக நடக்கத் தொடங்கினான். அவனுடைய வேகத்தில் கடவுளின் தற்செயல் ஒளிந்து கொண்டிருந்தது.
கூர்ந்து கவனித்தபின் தான் கண்டுகொண்டேன் சொக்கனும் கருவறையில் இருந்து கீழிறங்கி அந்தச் சிறுவனுடன் நடக்கத் தொடங்கியிருந்ததை. உள்ளுக்குள் நமச்சிவாய எனும் மந்திரம் பிரவாகம் எடுக்க வெறும் கல்லை மட்டுமே கும்பிட்டுக் கொண்டிருந்த அந்த ஆசாமியை எண்ணி சிரித்துக் கொண்டே வெளியில் வந்தேன். சொக்கன் தோளில் கைபோட்டபடி என்னோடு நடக்கத் தொடங்கினார்.
தமிழ்மணம்.
வாழ்க..
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குஅனைவருக்கும் நல்வரவு..
வாழ்க நலம்..
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் அண்ட் துரை செல்வராஜு அண்ணா!!!
பதிலளிநீக்குஹை சீனு கதை ரொம்ப நாளைக்கப்புறம்....வரேன்
கீதா
இன்று கமென்ட் வேகமாகப் போகுதே!!! ஹே ஹே ஹே!!!!
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். நேற்றே கொஞ்சம் வேகமாக இருந்தது. ஆம், இன்று சட்சட்டென கமெண்ட்ஸ் விழுகின்றன! நம்ம சீனு!
பதிலளிநீக்குஸ்ரீராம் சீனுவைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை அப்படியே டிட்டோ செய்கிறேன்....மயக்கும் அந்தச் சிரிப்பு எதற்கும் சிரிக்கும் அந்தச் சிரிப்பு!!!! குழந்தை போன்ற அந்த வெள்ளந்திச் சிரிப்பு!!...அவர் எழுத்துகள் மிகவும் பிடிக்கும்
பதிலளிநீக்குகீதா
அன்பின் துளசி/ கீதா..
நீக்குநமது தளத்தில் மாம்பதிவு வாசிக்கவில்லையா!..
இறைவன் அவர்களுடன் இருப்பதாலேயே அவர்கள் எல்லாமுடைய ஏழைகளாக இருக்கின்றார்கள்..
பதிலளிநீக்குகதை என்று நினைக்க முடியவில்லை..
நலம் வாழ்க..
துரை செல்வராஜூ ஸார்... இன்னும் இரண்டு மூன்று கதை செலெக்ட் செய்திருந்தேன். இது ரொம்பப் பிடித்திருந்ததால் இதை வெளியிட்டு விட்டேன்.
பதிலளிநீக்குவாவ்!!! ரசித்துப் படித்தேன் கதையை!! சீனு!!!......பொதுவாக ஒரு சிலரின் மனதிலும் இது போன்ற கூட்டம் நிறைந்த ஜர்கண்டி சொல்லும் கோயிலைப் பற்றிய எண்ணங்களை (என் மனதில் ஆழமாகப் பதிந்தவை இந்தக் கதையில் வெளிப்பட்டவை!!!) அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஆம் இறைவனுக்கும் நமக்கும் இடையே மெய்த்தரகர்கள்....ஏதோ காட்சிப் பொருளை, ம்யூசியத்தைப் பார்ப்பது போல....ம்யூசியத்தில் கூட ஜர்கண்டி இல்லை என்றே தோன்றுகிறது!!!
முடிச்சீங்க பாருங்க அந்த வரிகள் வாவ்!!
கீதா
துரைசெல்வராஜு அண்ணா நேற்று வந்து தேடினோம்....அப்போது வெளியாகிருக்கலையா அப்புறம் வர இயலாமல் போய்விட்டது...ப்ளாகர் ஓபன் செய்யவில்லை அதான்.....இதோ இதோ...
பதிலளிநீக்குகீதா
இன்றைக்கு கருத்துரை வேகமாகப் பறக்கின்றன..
பதிலளிநீக்குஅதனால் தான் எனது கருத்துரை எங்கோ போய் விட்டது..
துரை செல்வராஜூ ஸார், கீதா ரெங்கன்..
பதிலளிநீக்குவிட்டுப்போன சில வரிகளை மீண்டும் பதிவில் இணைத்துள்ளேன். டிராஃப்டில் இருந்த அந்த வரிகளை இங்கு இணைக்க விட்டுப் போயிருந்தது கீதா எழுதி இருந்த 'சீனு பற்றிய வரிகளை அப்படியே டிட்டோ செய்கிறேன் கமெண்ட் படித்ததும் மறுபடி சென்று பார்க்கத் தோன்றி, பார்த்தபோது தெரிந்தது.
வெகு அழகான கதை. இனி இப்படித்தான் இறைவனை அழைக்க வேண்டும்.
பதிலளிநீக்குஅவனும் வருவான். அன்பு சீனு ,மனம் நிறைவான கதை மா.
வாழ்த்துகள்.
நானும் கூட்டம் உள்ளக் கோயில் என்றால் மிகவும் தயங்குவேன். வேறு வழியில்லை என்றால்தான் செல்வது வழக்கம். பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன்..அப்படிக் காசு கொடுத்து வியாபார ரீதியில் புகழ்பெற்று விளங்கும் கோயிலுக்குச் செல்ல நேர்ந்தால் (எனக்குப் பணம் கொடுத்து தரிசனம் செய்வதில் உடன்பாடு கிடையாது).....அங்கு நின்று ரசிக்க அனுமதி இல்லை என்றால்..பெரும்பாலும் அனுமதி இருப்பதில்லை..கூட்டம் உள்ள கோயில்களில்.(வேண்டுதல்கள் மட்டும் வைப்பதில்லை பெரும்பாலும் போற்றி நன்றி சொல்லி தோழமையுடன் ரசிப்பதுதான்...) .சீனு இறுதியில் முடித்திருப்பது போல்தான்...இறுதியில் இறைவன் என்னுடனும் தோழமையுடன் வருவது போல் நினைத்துக் கொண்டு வாப்பா வா/வாம்மா வா (அம்மன் என்றால்) என்று சொல்லிக் கொண்டு நடப்பது வழக்கம்...ஹா ஹா ஹா..அப்படியே மனதில் இருக்கும் எண்ணங்களைப் பிரதிபலித்ததால் கதையுடன் ஒன்றிப் படிக்க முடிந்தது....சீனு ப்ளீஸ் மீண்டும் எழுதுங்க...ரொம்ப அமைதியா இருக்காப்ல இருக்கு...ஒரு வேளை முகநூலில் எழுதிக்கிட்டுருக்கீங்க போல!!
பதிலளிநீக்குகீதா
ஸ்ரீராம் பார்த்துட்டேன் விடுபட்ட வரிகளை...அந்தப் பதிவுகளையும் வாசிக்கிறேன்....லிங்க் தான் கொடுத்திருக்கீங்களே...அப்படி என்ன மொக்கை கொடுத்தீங்கனு பார்க்கணும்...ஹா ஹா ஹா...கொஞ்சம் அப்பால வந்து வாசிச்சுட்டுக் கருத்து சொல்லறேன்......
பதிலளிநீக்குஅப்புறம் கூட வேறொரு கதைப் போட்டிக்குக் கூட நீங்கள் நடுவராக இருந்தீங்களே!! ஆவி அறிவித்தது என்று நினைவு...அதில் அப்பாதுரை சகோ கூட ஒரு போலீஸ்காரரின் கதை ட்விஸ்ட் வைத்து எழுதியிருந்த நினைவு...அதில்தான் நம் மணவை ஜேம்ஸ் கதையும் இடம் பெற்றது நாய் தற்கொலை செய்து கொள்வது போல என்ற நினைவும்....
கீதா
திடங்கொண்டு போராடு சீனுவை சென்னையில் சந்தித்து இருக்கிறேன் அவர் தளத்துப்போட்டியான காதல் கடிதம் எழுதும் போட்டிக்காக நான் எழுதியதை அனுப்பவில்லாஸ்ரீராம் நடுவராயிருந்தாரா. சீனு அவர்கள் நூல்கள் பல படித்து விமரிசனம்செய்வார் என்னும்நினைபே வருகிறது கெட்டு வாங்கிப் போடும் கதை எடுத்துப் போடும் கதையாக உரு மாறுகிறதா சீனுவின் எழுத்தும் நடையும் தேர்ந்தெடுத்த மாதிரிபோல் இருக்கும்சொக்கன் என்னும் பெயரிலும் எழுதுகிறாரா அவர் நடித்த ஒரு குறும் படம் பார்த்த நினைவு
பதிலளிநீக்குநடையை மிகவும் இரசித்தேன்.
பதிலளிநீக்கு"உண்டு என்றால் அவன் உண்டு"
-கண்ணதாசன்
சிறு கதை ஆனால் மிக சிறப்பான கதை...அருமை..
பதிலளிநீக்குஸ்ரீராம் உங்க வீட்டு வெளக்குமாத்தப் பிடிச்சு கிரிக்கெட் ஆடி பாசுக்கு ஹெல்ப் பண்ணீங்களா ஹா ஹா ஹா இல்லை வெளக்குமாரு பிஞ்சு குப்பையாகி இல்லை குப்பைய பௌண்டரிக்கு அடிச்சு பாஸ்கிட்ட வாங்கிக்கிட்டீங்களா ஹா ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குகீதா
2013 ல நித்யானந்தம் ஃபேமஸ் ஆகலையோ!!! ஹிஹிஹிஹி...இப்ப ஸ்ரீராம் என்னை வெளக்குமாத்தால் அடிக்க வரப் போறார் நான் பௌன்ட்ரிக்கு எஸ்கேப்!!!
பதிலளிநீக்குகீதா
பதிலளிநீக்குதுறுதுறு கதை.
தேவையில்லாத கடைசி வாக்கியம்.
பூஸ்ட் இஸ் த ஸீக்ரெட் ஆஃப் மை எனர்ஜினு கடை வாசல்ல போய் நின்னீங்களோ ஸ்ரீராம் பேட் வாங்க!!! ஹா ஹா ஹா ஹா ஹா கொமாருகிட்ட பப்பு வேகலை போல!! அதான் பாவம் உங்க பேட்ட தூக்கிட்டுப் போக நீங்க தீயா வேலை செய்யும் கொமாரா ஆகிட்டீங்க போல ஹா ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
கதையின் கரு மிக அருமையா இருந்தது. பாராட்டுக்கள் சீனு.
பதிலளிநீக்குகடைசி வரி, கதைக்குச் சம்பந்தமில்லை. கடவுள், சிறுவனோடு சென்றதுபோல் தோன்றியது என்று எழுதியிருந்தாலும் ஒரு அர்த்தம் வந்திருக்கும். 'கதை சொல்லுபவர்.. அதாவது கடவுளைக் கும்பிடுபவர்', கடவுளைக் கும்பிடுவதைத் தவிர மற்றவற்றைக் கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார். அவருடைய தோளில் கைபோட்டுக்கொண்டு கடவுள் எப்படிச் செல்வார்?
நாம 'ஜரிகண்டி'யைக் குறை சொல்றோம். அந்த இடத்துல நாம் இருந்து, 40,000 பக்தர்களை ஒரு நாளில் தரிசனம் செய்துவைத்து அனுப்பணும் என்றால் என்ன செய்வோம்? வி.ஐ.பி என்பவர்கள் எல்லா இடத்திலும் முன்னுரிமை பெற்றவர்கள் அல்லவா? நாம எல்லாரும் மறந்துவிடுவது என்னன்னா, கடவுளை நாம் 1 வினாடி பார்த்தாலும், அல்லது 1 மணி நேரம் பார்த்தாலும் அல்லது 1 நாள் முழுவதும் இருந்து பார்த்தாலும், அவன் நம்மை ஒரு வினாடி பார்ப்பதுபோல் ஆகுமா? அதற்குத்தானே நாம் அவன் சன்னிதிக்குச் செல்கிறோம்.
இன்னொன்று, ஏழை, பணக்காரன் என்று இரண்டுமாக ஆகவேண்டாம். உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம், அதை நோக்கிய பயணம் போதாதோ.
'விரைவு தரிசனம்' போன்றவை கொஞ்சம் சஞ்சலப்படுத்துகிறது. பதின்ம வயதில் தினமும் உள்ளூர் கோவிலுக்குச் சென்று, 'சேவாகாலம்'ல் பங்குபெற்று, பிரசாதம் வாங்கிவருவோம். இப்போ கடவுள் தரிசனம் என்பதே 'ஆத்மார்த்தத்தை'க் குறைத்துவிட்டதுபோல் தோன்றுகிறது.
" சார் சேப்பாக்ல நிக்குறேன், டிக்கெட் இல்லன்னு சொல்றாங்க, கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்க சார், நா மேட்ச் பாக்காட்ட எப்டி ஸ்டேடஸ் போடறது, நீங்க எப்டி கமேன்ன்ட் பண்றது."//
பதிலளிநீக்குயப்பா ரவி ஸாஸ்திரியே உங்ககிட்டதான் கமென்டரி கேட்டாரு போல அவர் சொல்லறதுக்கு....!!! ஹா ஹா சரி சரி அந்த சென்னை நைனா சொன்ன வாழ்த்துப்பாவ கவிதயா வடிச்சிருலாம்ல!!! கடைசீல அந்த கொமாருதான் வருவாரு ஆபத்பாந்தவனானு யூகிக்க முடிஞ்சாலும்...
ஸ்ரீராம் அப்படி கிரிக்கட் ஸ்டேட்டஸ்போட்டிருக்கீங்களா அப்போ!!?? எஃப் பில!
. சீனு சும்மா பொளந்து கட்டியிருக்காரு உங்களை வைச்சு பௌண்டரி!!!
கீதா
ஹா ஹா ஹா ஸ்ரீராம் நீங்க கொடுத்த மொக்கையும் படிச்சுட்டேன்...வாசிக்கும் போதே எனக்கு டவுட் வந்துச்சு ஸ்ரீராமா? ஸ்ரீராமாவது போவதாவது!! சீனு யாரையோ பார்த்துத்தான் ஏமாந்துட்டுருக்காருனு யோசிக்கும் போதே இசைத்தட்டுனு வரவும் அட நம்ம ஸ்ரீராமுக்கும் முருகன் பிடிக்குமே அப்ப அவர்தான் பாடல் எழுதிருக்காரா பாரு சொல்லவே இல்ல நம்மகிட்டனு..அப்ப ஸ்ரீராம் தான் நெசமாவே போயிருக்காரானு நினைச்சுட்டே.....சுட்டே...ட்டே...ஆ எனக்கும் மொக்கை! ஹா ஹா ஹா...சீனு உங்களுக்கு நேர்ல மொக்கை எனக்கு உங்க பதிவு வழியா மொக்கை ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
யம்மாநடம்மா சாமிகிட்டே எல்லாம் சொல்லிட்டேன் அவர் பார்த்துப்பாருன்னு சொல்லும் அந்த பாலகன்.
பதிலளிநீக்குசொக்கனும் கருவறையிலிருந்து கீழிறங்கி அந்தப்பாலகனுடன் போயிருப்பது உண்மைதான்.சாமியை தரிசிக்கும் முன்னர் இந்தக் கூப்பாடே காதில் விழும்போது தரிசித்தமாதிரி ஒரு எண்ணம் தோன்றுவதே இல்லை. காசுள்ளவர்களுக்கே தரிசனம். கதையாகத் தோன்றவில்லை. நாமும் அந்த இடத்தில் அன்று இருந்தோம் போல இருக்கிறது. நல்ல தரிசனம் கதையின்மூலம். அன்புடன்
மிகவும் நன்று பாராட்டுகள்
பதிலளிநீக்குவாவ் !!இன்னிக்கு ஜூனியர் வாண்டு மாமா சீனுவின் கதையா :)
பதிலளிநீக்குசீனுவின் கதைகள் அப்புறம் முகப்புத்தக ஸ்டேட்டஸ் எல்லாமே சூப்பரா இருக்கும் .சீனு ஒரு keen observer கதை சம்பவங்கள் எழுதும்போது ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் ஆழமாக விவரிச்சிருப்பார் இங்கே கூட அந்த பெண் சும்மா அழுக்கு தலை எண்ணெய் வாராதன்னு போடாமல் தாமிர நிறம் னு அழகா விவரிச்சிருக்கார் பாருங்க ..
கருவறை// கருஞ்சிறை செம ..
அட! சீனு! எவ்வளவு நாளாயிற்று பார்த்து. சீனு கதை ரொம்ப அழகா இருக்கிறது. உங்கள் எழுத்து பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன? அருமை.
பதிலளிநீக்குநினைவிருக்கிறதா சீனு. ஆவியின் படத்தில் நாம் நடித்த போது...வாழ்த்துகள், பாராட்டுகள் சீனு
துளசிதரன்
ஏஞ்சல் ஆமா நுணுக்கமா சொல்லுவார்...இதை நானும் நோட் செய்தேன்...சொல்ல நினைத்து அதற்குள் டைவெர்ட் ஆகிட்டேன் ஸ்ரீராம் கொடுத்த லிங்க் போய் வாசித்து அதைக் கலாய்த்து...என்று போய்விட்டது...
பதிலளிநீக்குகீதா
அழகான கதை சீனு .சீனு எப்பவும் குழந்தைகள் சிறுவர்கள் பற்றி எழுதறதினா அடிச்சி பின்னி எடுப்பார் இங்கே கதையின் இறுதியில் சிறுவனின் பேச்சில் அது வெளிப்பட்டது .
பதிலளிநீக்கு//கடவுளை சந்தைப் படுத்தத் தொடங்கினார்களோ அப்போதே அமைதி குறையத் தொடங்கிவிட்டது//
உண்மை கடவுள் ஏழையின் சிரிப்பில் இருக்கின்றார் .அந்த ஏழைக்கு பரிதாபப்பட்டதால் கருஞ்சிறையை விட்டு சொக்கன் தோளில் கைபோட்டுட்டு போனார்னு நினைக்கிறேன் .கதையில் சொன்னதுபோல உண்மையில் நடக்கக்கூடும்
@துளசி அண்ணா நீங்க பார்க்கில் காஃபி :) அப்புறம் ஹார்லிக்ஸ் கொடுத்தது சீனு alice band எடுத்து bag இல் பத்திரமா வச்சது எல்லாம் எங்களுக்கும் நினைவிருக்கே :) ஆமா எப்போ காதல் போயின்காதல் பார்ட் டூ எடுக்கப்போறீங்க ? :)
பதிலளிநீக்கு///மயக்கும் சிரிப்புக்குச் சொந்தக்காரர்.///
பதிலளிநீக்குஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈஈ:)) மயக்கும் சிரிப்பு அப்பூடின்னா என்னதூஊஊஊஊஊ?:))... பொத்துப் பொத்தென மயங்கி விழுகிறதோ? பூச்சி மருந்து அடிச்ச மாதிரி:))... ஹா ஹா ஹா எனக்கு இப்போவெல்லாம் அடிக்கடி என்னமோ ஆகுது:)
எங்கள் புளொக் திறக்கவே கஸ்டப்பட்டு ஒருமாதிரி ஒபெரா வைக் கேட்டுத் திறந்து உள்ளே வந்து கஸ்டப்பட்டுக் கொமெண்ட் ரைப் பண்ணி.. வெள்ளி வீடியோ கொமெண்ட் பொக்ஸ் ல போட்டிட்டேன்ன்ன் ஹையோ ஹையோ..:) இப்போ மீண்டும் ரைப்பிங்:))
பதிலளிநீக்கு// என் பெயர் சொல்லி இரண்டு பதிவுகள் எழுதி பெருமைப்படுத்தி இருந்தார். 1. எங்க(ள்) ஸ்ரீராம் சாரும் IPL மேட்சும் 2. எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார் - எனக்குக் கொடுத்த மொக்கை.//
ஆவ்வ்வ்வ் போய்ப் படிச்சுப் பார்க்கோணும் ஸ்ரீராம் பற்றி என்ன எழுதியிருக்கிறார் என. எனக்கு எப்பவோ தெரியுமே, ஸ்ரீராமுக்குப் பிடிச்ச எழுத்தாளர்களில் சீனுவும் ஒருவர் என்பது....
அது மியாவ் உங்க ரெசிப்பீஸ் பார்த்ததும் நான் அப்படியே ஸ்லீப் மோடுக்கு mode :) போறேனே அதான் மயக்கம் அது மாதிரி இல்லை இது மழலையின் சிரிப்பு மாதிரி
பதிலளிநீக்கு//எங்கள் புளொக் திறக்கவே கஸ்டப்பட்டு//
பதிலளிநீக்குகர்ர்ர் இதைத்தானே கீதா அக்கா அடிக்கடி சொல்வாங்க அப்போ அவங்கள கலாய்ச்சிங்க :)
அக்கா ஓடி வாங்க பூனையை பிடிங்க :)
சீனுவின் கதை முன்பும் படிச்சிருக்கிறோம்தானே இங்கு, இன்றுதான் படத்தோடு கதை படிக்கிறோம்...
பதிலளிநீக்குமிக அருமையாக நகர்த்தியிருக்கிறார் கதையை.. அப்படி நேரில் நடக்கும் சம்பவம்போலவே இருக்கிறது.. சில இடங்களில் இப்படி நடக்கிறதுதானே.. கடவுளைக் கும்பிடுவதற்குக்கூட நேரம் குறிப்பிடுகிறார்கள்.
அந்தத் தாயின் பிரார்த்தனை நிட்சயம் நிறைவேறும்.
அழகிய விறுவிறுப்பான குட்டிக் கதை.
எங்கட அண்ணி சொன்னா, ஒரு தடவை கனடா அம்மன் கோயிலில், கொஞ்சம் அமைதியான சூழலில், ஒரு இளம் பெண் வந்து நின்று விம்மி விம்மி கண்ணால நீர் வடிய கும்பிட்டுக்கொண்டிருந்ததாக, சில நேரங்களில் கோயிலில் இப்படிக் காட்சிகள் காணும்போது, நமக்கான தேவையை விட்டுப் போட்டு, கடவுளெ அப்பெண்ணுக்கு கேட்பதைக் கொடுத்து விடு எனக் கும்பிடத் தோணும்.
எனக்கு எப்பவுமே திருவிளாக் கூட்டத்தில் இடிபடும்போது கும்பிடப் பிடிக்காது, அப்போது புதினம்தான் பார்ப்பேன், தனிமையான அமைதியான நேரங்களில்தான் போய் நின்று கோட் உடன்:) ஃபைட் பண்ணி.. வாதாடி.. நீதி நியாயம் கேட்டு வரப்பிடிக்கும்:))
///Angel said...
பதிலளிநீக்கு//எங்கள் புளொக் திறக்கவே கஸ்டப்பட்டு//
கர்ர்ர் இதைத்தானே கீதா அக்கா அடிக்கடி சொல்வாங்க அப்போ அவங்கள கலாய்ச்சிங்க :)
அக்கா ஓடி வாங்க பூனையை பிடிங்க :)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவவால ஸ்பீட்டா எல்லாம் ஓட முடியாதூஊ:), இப்பூடிக் கூப்பிட்டாஅல் மெய் மறந்து ஓடி வந்து தடக்கிக் கிடக்கி விழுந்திட்டால்ல்ல்.. ஸ்ரீராம் இன்சூரன்ஸ் போட்டிருக்கிறாரோ தெரியல்லியே:))) கடவுளே... நான் இந்த வம்புக்கு வள்ள:) ஜாட்ஜிக்கு:) என்னைக் கூப்பிட்டுடக்கூடா கர்ர்ர்:))
அது அஞ்சு குரோமில வருவதுதான் நேக்கு பிடிக்கும்... ஆன சில சமயம் இப்படி அகிடுது அதுதான் வெயிட் பண்ணி ஒபெரால வந்தேனாக்கும்:)).. கீசாக்காட ஸ்ரோறியே வேற:))..
///Angel said...
பதிலளிநீக்குஅது மியாவ் உங்க ரெசிப்பீஸ் பார்த்ததும் நான் அப்படியே ஸ்லீப் மோடுக்கு mode :) போறேனே அதான் மயக்கம் அது மாதிரி இல்லை இது மழலையின் சிரிப்பு மாதிரி//
கர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்போ டக்குப் பக்கென இன்னொரு ரெசிப்பி போட்டிடுறேன்ன்:))
miyaav :) கோட் உடன்:) ஃபைட் okay i know its God .now how will you write coat in tamil :)))))))))))))
பதிலளிநீக்கு//கர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்போ டக்குப் பக்கென இன்னொரு ரெசிப்பி போட்டிடுறேன்ன்:))//
பதிலளிநீக்குoh God save us :)
ஹாஹாஹா அதிரா, ஏஞ்சலின், இன்னிக்குக் கொஞ்சம் தாமதமா எழுந்ததாலே கணினிக்குப் போட்டி போட வர முடியலை! தாமதம் என்பதால் வீட்டு வேலைகளும் உடனே ஆரம்பம்! ஆகவே இப்போத் தான் கொஞ்சம் சாவகாசமா எல்லாத்தையும் பார்க்கிறேன். எங்கள் ப்ளாக் இப்போ எனக்கு நல்லாவே திறக்குது! அதான் மத்தவங்களுக்குத் திறப்பதில்லை! ஹிஹிஹிஹி! எனக்குத் திறக்கலைனா உங்களுக்கெல்லாம் திறக்கும்! :)))) இதான் என்னோட ஸ்ரோரி! :))))
பதிலளிநீக்குஅட! கமென்ட் உடனே போயிடுச்சே! கதை நல்லா இருக்கு! கடைசி வரி மட்டும் நாடகத் தனமாத் தெரியுது! சொக்கன் அங்கே இல்லை என்பது உண்மை தான்! சிறுவனோடு போன சொக்கன் அப்புறமா எப்படிக் கதாசிரியரோடு போனார்? ம்ஹூம்! சரியா இல்லையே!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குயதார்த்தமான நல்ல சிறுகதை.படிக்க படிக்க சுவாரஸ்யம் குன்றாமல் சென்றது. வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
http://jeeveesblog.blogspot.in/2017/12/blog-post_29.html
பதிலளிநீக்குஇந்த சிறுகதை சொல்லும் சேதி என்னிலும் வெளிப்பட்டதால் தான் எனது சமீபத்திய தொடர் ஒன்றின் மேற்கண்ட அத்தியாயத்தில் எனது எரிச்சலை எழுத்தாய் வெளிப்படுத்தியிருந்தேன். நீங்களும் அதே விஷயத்தை உணர்ந்து தொட்டிருகிறீர்கள். வாழ்த்துக்கள்.
காலையிலேயே வாசித்தேன்.
பதிலளிநீக்குஇப்போது எல்லாக் கோவில்களிலும் இப்படி ஆகிவிட்டது....
சாமி பார்க்க காசு... காசு கொடுத்தாலும் உள்ளே ஐந்து நிமிடம் நிற்க விடுவதில்லை...
கடவுளை காட்சிப் பொருளாக்கி காசு வசூலிப்பதை என்னவென்று சொல்வது..?
சீனுவின் கதை சிறப்பு.
எங்கள் ப்ளாகில் கணையாழி ரேஞ்சுக்கு ஒரு கதையா? வாவ்!பிராபல்யம் அடைந்த கோவில்களில் நமக்கு கிடைக்கும் ஏமாற்றத்தை நன்றாக பதிவு செய்திருக்கிறார் கதாசிரியர்! பாராட்டுகள்👌👌👌
பதிலளிநீக்குமிக அருமை.
பதிலளிநீக்கு