வியாழன், 18 ஜனவரி, 2018

நெல்லை வியாழன் : உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்டால் கேளுங்கள் – கேட்கமாட்டோம்னு சந்தேகம் இருக்குல்ல. அப்புறம் எதுக்கு அட்வைஸ்?


அன்புள்ள ஸ்ரீராம்,

வியாழன் பதிவு ‘உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்டால் கேளுங்கள்”., நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அனுப்பியிருக்கிறேன்.. 

அன்புடன்
நெல்லைத்தமிழன்  



உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்டால் கேளுங்கள் – கேட்கமாட்டோம்னு சந்தேகம் இருக்குல்ல. அப்புறம் எதுக்கு அட்வைஸ்.

மதுரைத்தமிழன் ஆரம்பித்துவைத்தது இது. பிறகு அதிரா அவர்கள், எனக்கு பிளாக் கிடையாது என்று தெரிந்தும், என்னைத் தொடரச் சொன்னார். அதற்கேற்றவாறு எங்கள் பிளாக் ஸ்ரீராம், நான் எழுதி அனுப்பினால் வெளியிடுகிறேன் என்று சொன்னார். அதனால் எனக்குத் தோன்றியதை எழுதியிருக்கிறேன். எழுத வைத்த அனைவருக்கும் என் நன்றி.



அட்வைஸ் என்பது அதுவாக வரும்போது மிகவும் கசக்கும். .யாருக்கும் அதை கேட்கப் பிடிக்காது. ஆனா, நாமே ‘ஆலோசனை’ என்ற பெயரில் தேடும்போது, கேட்டுக்கொள்ளத் தோன்றும். அதனை நாம் கடைபிடிக்கிறோமோ இல்லையோ, நாம் ஆலோசனைக்காக பிறரை அணுகும்போது பிடிக்காத ஆலோசனையையும் நாம் பொறுமையாகக் கேட்டுக்கொள்வோம்.

எங்க ஆபீசுல எனக்குக் கீழ் வேலைபார்ப்பவர் (கல்யாணமாகாதவர்), இன்னொரு டிபார்ட்மென்ட் திருமணமான பெண்ணுடன் கொஞ்சம் ‘அப்படி இப்படி’ இருந்தார். ஆபீஸ் நேரத்துல ரெண்டுபேருக்கும் வாட்சப் லவ் ஸ்டோரி போய்க்கிட்டிருந்தது. எனக்கு இந்த மாதிரி விஷயங்களே நெர்வஸ் உண்டாக்கிடும். I wont be comfortable. என் Bossகிட்ட நான் இதைப் பற்றிப் பேசினேன். அவர் சொன்னார், ஆபீஸ் நேரம் தவிர்த்து எவன் என்ன செய்யறான் என்று தெரிஞ்சுக்கறது, நம்ம வேலை இல்லை, மத்தவங்களைத் திருத்தறதும் நம்ம வேலை கிடையாது. ஆபீஸ்ல வேலை பாதித்தால் மட்டும் நீ action எடு என்றார்.  இது, நாம ஆலோசனை கேட்டுப் போகிற விஷயம். இந்த மாதிரி ஆலோசனைனால நமக்கு உபயோகம் இருக்கும். ஆனா, யாரேனும் நம்மைக் கூப்பிட்டு அட்வைஸ் கொடுத்தால், அதுல நமக்கு இன்டெரெஸ்ட் இருக்காது. நம்ம மனசுல உடனே, ‘இவன் பெரிய ஒழுங்கோ, நமக்குச் சொல்ல வந்துட்டான்’ என்றுதான் தோன்றும்.

நம்முடைய குழந்தைகளுக்கு நாம் அட்வைஸ் என்ற பெயரில் அள்ளித்தெளிப்பதே தவறான அணுகுமுறை. நாம் கடைபிடிக்காத எதையும் அவங்களுக்கு ஆலோசனை கூறக்கூடாது. நாம் செய்வதைப் பார்த்து அவங்க கத்துப்பாங்க. இன்னைக்கு இல்லாவிட்டாலும், அவங்க அந்த மெச்சூரிட்டி லெவலை அடையும்போது தானே கடைபிடிக்க ஆரம்பித்துவிடுவாங்க.

Image result for advice related quotes picture

எங்க அப்பா எனக்கு அட்வைஸுன்னு உட்கார்த்திவைத்து எதுவும் சொன்ன மாதிரி எனக்கு ஞாபகம் இல்லை. இதுக்குக் காரணம் அவர் ஆசிரியப் பணில ரொம்ப வருஷமா இருந்ததுனால இருக்கும். அவருக்கு மற்றவர்களின் அனுபவத்தைத் தெரிந்துகொள்வதில் ரொம்ப இஷ்டம். எல்லாத்தையும் கேட்டுப்பார். அவைகள் அவருக்கு வாழ்க்கையில் உபயோகமா இருந்திருக்கும்னு நினைக்கறேன். எங்க அப்பா, சின்னச் சின்ன விஷயங்களில் எப்படி நடந்துக்கறாங்கன்னு நான் பார்த்திருந்தேன். அதில் நான் தவறா நினைக்கறதை விலக்க முயற்சிக்கிறேன். நல்லதை தொடர நினைக்கிறேன்.  

WORD கொடுத்துட்டா அதைக் கடைபிடிக்கணும் (நேரம் தவறாமையும் இதுல வரும்), யாரையும் ஏமாற்றி அல்லது பிறரின் தவறால் நமக்கு காசு சேரக்கூடாது. இது இரண்டுதான் எனக்கு எங்க அப்பா சொன்னதில்/செஞ்சதில் ஞாபகம் இருக்கும் விஷயம். என் மனைவியின் அப்பா, என் ப்ரொஃபசராக இருந்தவர், எங்கள் குடும்ப நண்பர். நான் துபாயிலிருந்து formalஆ பெண் பார்ப்பதற்கு (அதுக்கு முன்னாலேயே திருமணம் நிச்சயம் ஆயிடுத்து) போனேன். 

நாங்க கிளம்பறதுக்கு 15 நிமிஷம் தாமதமாயிடுத்து. எங்க அப்பாவுக்கு அவ்வளவு கோபம். சொன்ன நேரத்துக்கு அங்க போகவேண்டாமா, நேரமாயிடுத்துன்னா அவங்களுக்கு tensionஆகாதா என்று. நேரம் தவறக்கூடாதுன்னு எங்க அப்பா எப்போவும் சொல்லுவாங்க. 


பெங்களூரில் நான் இருந்தபோது, எங்க அப்பாகிட்ட, நான் ஒண்ணு உங்ககிட்ட கேட்கணும், தருவேன்னு சொன்னீங்கன்னாத்தான் என்ன என்று சொல்லுவேன் என்றேன். (நான் கேட்க நினைத்தது, அவர் இன்னும் இரண்டு நாட்கள் என்னோட அங்கு இருக்கணும். நான் துபாய் செல்லும் அன்று அவர் சென்னை போய்க்கலாம் என்று). அவர் சொன்னார், விஷயம் இன்னதுன்னு தெரியாமல் நான் வாக்கு கொடுக்கமாட்டேன்.  


இதுபோல, நான் 4வது படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு நாள், தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது வீட்டு முன்பு கிடந்த பாக்கெட்டை (1974) எடுத்து, எங்க அப்பாகிட்ட கொடுத்தேன். அதில் 27 ரூபாய் இருந்தது. எங்க அப்பா, வாசல்லயே என்னை உட்காரவைத்து, நிச்சயம் யாரேனும் தேடி வருவாங்க, அப்போ சொல்லு, இந்தப் பணத்தைக் கொடுக்கணும்னு சொன்னார். (எங்க அப்பா, ஐந்து பைசாவுக்கும் கணக்கு பார்ப்பார், கணக்கை எழுதிவைப்பார். அதைப் பற்றிய கதை பிறகு) எங்க அப்பா, எங்க பெரியப்பால்லாம் எப்போதும் சொல்வது, அடுத்தவங்க காசு நம்மகிட்ட இருந்தா அது, ‘தீயை மடியில் கட்டிக்கறமாதிரி’ன்னு.


எங்கப்பா, தான் கேள்விப்பட்ட கதைகளை (பிறரின் அனுபவங்கள்) அப்போ அப்போ பகிர்ந்துப்பாங்க. அதுல நமக்கு ஏதேனும் ஒரு செய்தி இருக்கும். 


‘செய் நன்றி’ கொல்லக்கூடாதுன்னு சொல்லுவாங்க.  நான், என் ப்ரொஃபஷனுக்கு காரணகர்த்தராக இருந்த ‘சார்’, என்னை அவருடைய சிறிய நிறுவனத்துக்குக் கூப்பிட்டார் என்பதற்காக, நான் வேலைபார்த்துக்கொண்டிருந்த பெரிய கம்பெனி வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டேன். எங்க அப்பாவுக்கு அதுல மனத்தளவுல சந்தோஷம் (இப்படி பெரிய வேலையை விட்டுட்டானே என்ற வருத்தம் இருந்தாலும்). எங்கிட்ட சொன்னாங்க, ‘செய் நன்றி மறக்கலைடா நீ’. எல்லோரும் இள வயதில் செய்யும் தவறையும் செய்தேன் (வேலை பார்க்க ஆரம்பித்த புதிதில் என் நண்பனிடமிருந்து எடுத்த ‘புத்தகத்தை’ வீட்டு ஷெல்ஃபில் வைத்துவிட்டேன். 

எங்க அப்பா அந்தப் புத்தகத்தைப் பார்த்துவிட்டார்). என்னிடம் எதுவும் சொல்லவில்லை, ஆனால் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘அந்த மாதிரி புத்தகங்கள் வாழ்க்கைக்கு நல்லதில்லை’ என்று. கடன் கொடுப்பதைப் பற்றியும் எங்கிட்ட அவர் சொல்லியிருக்கார். கடன் கொடுக்கற வழக்கம் வச்சுக்காதே. வேற வழியில்லைனா, திரும்பி வராதுன்னு நினைச்சுக்கிட்டு கடன் கொடு என்றார்.

நான் படிக்கற காலத்துல, இரவு வெகு நேரம் படிப்பேன். (சமயத்துல 2 மணி வரை படிப்பேன்) எங்க அப்பாட்ட, என்னை 4 ½ மணிக்கு எழுப்புங்கோன்னு சொன்னேன்னா, நான் எத்தனை மணி வரையில் இரவு படித்தேன் என்று எங்க அப்பா கருத்தில் வைக்கமாட்டார். 4 ½ க்கு எழுப்பிடுவார். நாம Excuse கேட்டாலும் விடமாட்டார்.  இதுவே எங்க அம்மாட்ட சொன்னேன்னா, அந்த நேரத்துக்கு எழுப்பமாட்டா. ஏன் எழுப்பலைன்னு கேட்டா, நீ ரொம்ப நேரம் இரவு படிச்சுட்டிருந்த, உடம்பைப் பார்த்துக்கவேண்டாமா என்று சொல்லிவிடுவாள். நான் இதை எப்படிப் பார்க்கிறேன்னா, Businessல No Sentiment. இதைத்தான் நானும் கடைபிடிக்கிறேன். என் பையனோ பெண்ணோ 6 மணிக்கு எழுப்பணும்னு சொன்னாங்கன்னா, தண்ணியைத் தெளித்தாவது எழுப்பிடுவேன். அவங்க 10 நிமிஷம் கேட்டாலும் கொடுக்கமாட்டேன்.

அட்வைஸ் என்பது பொதுவா நம்ம யாருக்குமே தேவையில்லை. நமக்கே எது சரி எது தவறுன்னு தெரியும். எனக்கும் என் பசங்களுக்கும் அறிவில் பெரிய வித்தியாசம் கிடையாது. சொல்லப்போனா, அவங்க என்னைவிட புத்திசாலிகளாத்தான் இருப்பாங்க (அடுத்த தலைமுறை என்பதனால்). ஆனா, என்னிடம் இருக்கும் அனுபவம் அவங்கள்ட கிடையாது. அதனால் நான் அவங்களுக்கு அப்போ அப்போ ஆலோசனை சொல்லலாம், அட்வைஸ் அல்ல. (Advise, Suggestion இரண்டும் வேறு வேறு).  நான் என் பசங்கள்ட சொல்றது, Gambling கூடாது (Shareம் என்னைப் பொறுத்தவரைல gamblingலதான் சேரும்), கடன் எந்தக் காரணத்தைக் கொண்டும் வாங்கக்கூடாது (There is no certain future. பிற்காலத்துல சம்பாதிப்போம்னு நினைச்சுக்கிட்டு, இன்னைக்கு லோன் வாங்கி செலவழிக்கக்கூடாது). Shareஐப் பற்றிச் சொல்லும்போது, அது என் அனுபவம், அதனால சொல்றேன்னு அவங்களுக்குத் தெரியும். நான் எப்போதும் லோன் வாங்கமாட்டேன் என்றும் என்னிடம் எப்போதும் கிரெடிட் கார்ட் இருந்ததில்லை என்றும் அவங்களுக்குத் தெரியும்.

Image result for advice related quotes picture

இப்போ சமீபத்துல இங்க பசங்க, ஹஸ்பண்ட் வந்திருந்தாங்க. நான் என் பெண்கிட்ட, என்ன எப்பப்பாத்தாலும் வாட்சப், வேற வேலையில்லையா என்று ‘கடுகடு’ முகத்தைக் காண்பித்தேன். அவ உடனே, நீங்க என்ன பண்ணறீங்கன்னு கேட்டா. Then I realized, I was doing the same thing.  அதே சமயம், படுக்கை அறைக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் மொபைல் போனைக் கொண்டுவரக்கூடாதுன்னு சொன்னேன். நான் இரவு 8.30 மணி ஆயிடுத்துன்னா, ஹாலில் மொபைலை வச்சுட்டு பெட் ரூம் போயிடுவேன். அதைப் பார்த்ததனால், அவளும் அதைக் கடைபிடித்தாள். நாம செய்யாத எதையும் அடுத்தவங்களுக்கு அட்வைஸா கொடுத்துப் பிரயோசனமில்லை.

ஆனா வாழ்க்கைல சில விஷயங்கள் உத்வேகமா இருக்கும். அதுக்கும் அட்வைஸுக்கும் சம்பந்தமில்லை. இரண்டுக்கும் வித்யாசம் சொல்றேன்.  கவிஞர் வாலி, பல வருடங்களாக திரையுலகில் ஒரு வாய்ப்புக்குக் கஷ்டப்பட்டு 5 வருடங்களில் ஓரிரு பாடல்களைத் தவிர வேறு வாய்ப்பே கிடைக்கவில்லை. சாப்பாட்டுக்கும் பெரும்பாலும் பிறரை நம்பியிருந்த காலம். இனி சென்னையில் இருந்தால் ஒன்றும் சரிப்படாது, ஸ்ரீரங்கத்துக்கே சென்றுவிடுவோம் என்று நினைத்தாராம்.. மறுநாள் மூட்டை முடிச்சுடன் கிளம்புவதாகத் தீர்மானம். அன்று இரவு, பி.பி.ஸ்ரீனிவாஸ் வாலியின் அறைக்கு வந்தார். 


வாலி, அவரிடம், இப்போ சமீபத்தில் பாடிய பாடல் ஒன்றைப் பாடுமையா என்றதும், ‘மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா’ என்ற பாடலைப் பாடினாராம். பாடலை முழுவதுமாக உள்வாங்கிய வாலி, அதனால் உத்வேகம் பெற்று, வெற்றிபெறாமல் திரும்பக்கூடாது என்று இன்னும் முயற்சி செய்தேன் என்று எழுதியிருக்கிறார். இந்த உத்வேகம் அவருக்கு முன்னேற்றத்தைக் கொடுத்தது. ஆனால் அவருக்கு அந்த ஐந்து வருட காலத்தில் கிடைத்த ‘அட்வைஸ்’ என்ன தெரியுமா? மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவனாதன், வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த வாலியுடைய கவிதை நோட்டைப் படித்துப் பார்த்து, ‘இதெல்லாம் சரிப்படாது, நீங்கள் வேறு வேலை பார்க்கப் போங்கள்’ என்று சொன்னதுதான்.  (இவையெல்லாம் ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்ற புத்தகத்தில் வாலி எழுதியிருப்பது)





97 கருத்துகள்:

  1. ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்

    பதிலளிநீக்கு
  3. நெல்லைத் தமிழனின் தந்தையார் போற்றுதலுக்கு உரியவர்

    பதிலளிநீக்கு
  4. எல்லாம் சரி. அந்த பர்ஸ், மற்றும் 27 ரூபாய் என்ன ஆச்சு? :-)

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் நெல்லைத்தமிழன்.
    மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம்! பின்னர் வருகிறேன்

    பதிலளிநீக்கு
  7. Advice is from father to son and father to daughter... Nice way to express

    பதிலளிநீக்கு
  8. என் தந்தையும் சித்தப்பாவும் கண் முன்னே வந்தார்கள்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  9. தேவையுள்ள புத்திமதிகள். அருமையான அனுபவங்கள். அனைவருக்கும் பாடங்கள்.

    பதிலளிநீக்கு
  10. படித்து விட்டேன் கணினியில் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. அருமையான பகிர்வுகள். நன்றி.
    CreditCard முழுமையான கடன் அல்ல .தற்கால டிஜிட்டல் உலகில் தேவையான் கருவி. பில் வந்த பின் EMIகோராமல் பணம் கட்டி விட்டால் அது ஏறத்தாழ ரொக்கத்தில் செய்யும் செலவு போலத்தான்.USA போன்ற இடங்களில் கிரெடிட் கார்ட் இல்லாமல் வாழ முடியாது
    அது போன்று share mutual fund etc gambling ஆகாது. Addiction is the essential ingredient of gambling. Equity investment need not necessarily be addictive.

    பதிலளிநீக்கு
  12. ///அட்வைஸ் என்பது பொதுவா நம்ம யாருக்குமே தேவையில்லை. நமக்கே எது சரி எது தவறுன்னு தெரியும்.///

    இப்படி சொல்லி விட்டு கொடுத்தீங்க.... பாருங்க அட்வைஸ் ஸூப்பர் இருப்பினும் இதுதான் உண்மை ஆம் எதற்கு அட்லைஸ் ? இறைவன் கொடுத்த மூளையை வைத்து பகுத்தறிய வேண்டும்.

    ///எங்க அப்பா, எங்க பெரியப்பால்லாம் எப்போதும் சொல்வது, அடுத்தவங்க காசு நம்ம கிட்ட இருந்தா அது, ‘தீயை மடியில் கட்டிக்கற மாதிரி’ன்னு.///

    அருமை எனது கொள்கையும் இதுவே... இன்றுவரை ஒரு அமைப்பின் பணம் (அமைப்பை விட்டு நான் தொலைவாகி இருந்தும்) என்னிடம் இருக்கிறது காரணம் நான் நம்பிக்கையானவனாம் அமைப்பின் தீர்மானம் ஆனால் எனக்கு உங்கள் பெரியப்பா சொன்ன நிலையில்தான் வாழ்கிறேன். ஏனெனில் திடீரென இறந்து விட்டால் பணம் என்னிடமே இருந்து எனது பிள்ளைகளுக்கு சேர்ந்து விடுமே... பிறகு நான் உண்மையாக உழைத்து பிள்ளைகளுக்கு சேர்த்த பணமும் அந்தப்பணமாகி விடுமே என்ற பயம் இருப்பினும் எழுதி வைத்து இருக்கிறேன் நம்பிக்கையான சில நண்பர்களுக்கு வாய்மொழி சொல்லி வைத்தும், ஆதாரத்துக்காக வாட்ஸ்-அப்பில் அனுப்பியும் இருக்கிறேன்..

    அட்வைஸ் சொல்பவன் மனிதன், அதை ஏற்றுக்கொள்பவன் மாமனிதன்
    இதில் இருவருக்குமே அகவை வறப்பு கிடையாது அனுபவமே அறிவு இன்றைய நிலையில் படிப்பதால் அறிவு வளர்கிறது என்பதில் எனக்கு உடன்பாடு மலிந்து வருகிறது காரணம் இன்றைய கல்லூரி மாணவ மாணவிய.ர் 90 சதவீதம் பெற்றோர் சொல் கேட்டு நடப்பதில்லை.

    அதிராவின் அங்கிள் சிவாஸ் ரீகல் சிவசம்போ போன்றவர்கள் கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காக தலைப்பை பக்குவமாக மாற்றி விட்டீர்களே.....

    பதிலளிநீக்கு
  13. எனது அப்பாவின் அட்வைஸ் கடன் கொடுத்து விரோதியாவதைவிட கடன் கொடுக்காமல் விரோதியாவது நல்லது பணமாவது மிஞ்சும்.

    எனக்கு கடன் பெறுவது பிடிக்காத விடயம் இருப்பினும் சூழலால் வாங்கி இருக்கிறேன் இன்று கடன் இல்லாமல் வாழ்கிறேன் இதுவே பெருஞ்செல்வம் கடனை திருப்பி கொடுக்கும்வரை உறங்கவே மாட்டேன் இது எனது வியாதி.

    பதிலளிநீக்கு
  14. அருமை அண்ணா...
    அழகா எழுதியிருக்கீங்க...
    அனுபவங்களே பாடம்... அறிவுரை இன்றைய தலைமுறைக்கு தேவையில்லை...

    பதிலளிநீக்கு
  15. சில அறிவுரைகள் சொல்லிப் புரிவதில்லை பிறர் ( தாய் தந்தையாகவுமிருக்கலாம்) வாழ்வதைக் கண்டு அறியப்படுகிறது தலைப்பில் இள நீல எழுத்துகள் யாருடையது

    பதிலளிநீக்கு
  16. ஆகா இன்று நெல்லைத் தமிழனின் அட்வைஸ் போஸ்ட்டோ.... அவ்வ்வ்வ் சத்து இருங்கோ கொஞ்ச நேரத்தில் வந்திடுவேன்....

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் இனிய வணக்கம்!

    இன்று சகோதரர் நெல்லைத் தமிழனின் நல்லதொரு பதிவு கண்டேன்.
    மிக்க மகிழ்ச்சி!

    அப்பாவின் ஆலோசனை நல்ல அனுபவமாய்
    எப்போதும் உள்ளத் திலேற்றியே - இப்போதும்
    இங்கே பதிந்தீர்கள்! எல்லாமே பாடங்கள்!
    எங்களின் வாழ்விற்கும் ஏற்பு!

    சுருக்கமாகச் சொன்னேன்! வாழ்வில் நானும் இன்னும் சேகரிக்க
    நல்ல பல பயன் தரும் உங்கள் அனுபவங்கள் இவை.

    மனக்குறிப்புப் பக்கத்தில் சேர்த்துக்கொண்டேன் சகோதரரே!
    இனிய பகிர்விற்கு உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    பதிவிட்ட சகோ ஶ்ரீராமிற்கும் நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. நெ.த. அந்த 27 ரூபாய்!!!!! யாரோடதாக்கும்? நல்லா ஆலோசனைகள் சொல்லி இருக்கீங்க! நாங்களும் க்ரெடிட் கார்டெல்லாம் பயன்படுத்துவது இல்லை. டெபிட் கார்ட் உண்டு, பணம் நிறையக் கையில் எடுத்துச் செல்லக் கூடாது என்பதால். அயோத்தி செல்கையில் நிறையப் பணம் எடுத்துச் சென்று பின்னர் பட்ட அவதியால் டெபிட் கார்ட் வைச்சுக்கறோம். :))))

    பதிலளிநீக்கு
  19. இங்கே எங்க புக்ககத்தில் குழந்தைகளிடம் கண்டிப்புக் காட்டினால் பிடிக்காது! அப்படியும் நான் கண்டிப்புக் காட்டியதால் அவங்களுக்கு என்னிடம் கோபம் வரும்! அவங்களைச் சொல்ல முடியாமல் குழந்தைகளிடம் காட்டுகிறாய் என்பார்கள்! அதுவே எங்க வீட்டில் என்னை ரொம்பச் செல்லம் கொடுத்துக் கெடுக்கிறே குழந்தைகளை என்பார்கள்! மத்தளத்துக்கு இருபக்கமும் அடி! :))))))))))))))) இப்போல்லாம் அவங்க எங்களுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சாச்சு! :)))))

    பதிலளிநீக்கு
  20. இன்று என்னாச்சோ.. இங்கு போட்டிருக்கும் ஒரு படம்கூடத்தெரியவில்லை.. மொபைலிலும்..
    அத்தோடு லிங் இருப்பதாலேயே வோட் போட முடியுது, மேலே தமிழ்மணம் சப்மிட் பண்ணு எனக் காட்டுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இன்னும் டமில்மணத்தில் இணைக்கப்படவில்லையாம் எனத் தெளிவாச் சொல்லுதே ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  21. இன்றைய தலைப்பே அபுதாபியில் இருந்து அந்தாட்டிக்கா வரை நீளுது..:) அப்போ அட்வைஸ் உம் அப்படித்தான் இருக்குமென நினைச்சு உள்ளே நுழைகிறேன்:)..

    //உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்டால் கேளுங்கள் – கேட்கமாட்டோம்னு சந்தேகம் இருக்குல்ல. அப்புறம் எதுக்கு அட்வைஸ்.///

    ஹா ஹா ஹா சிலருக்கு அட்வைஸ் சொல்வதை நிறுத்தவே முடியாது:).. சொல்லிக்கொண்டே இருப்பதில்தான் ஒரு திருப்தி..

    ///பிறகு அதிரா அவர்கள், எனக்கு பிளாக் கிடையாது என்று தெரிந்தும், என்னைத் தொடரச் சொன்னார். ///

    ஹா ஹா ஹா இல்ல எப்படியும் எங்கள் புளொக்கில் போட இடம் கிடைக்கும் எனும் தைரியம்தான்.. சரி ஆகவும் போனால்.. நானாவது வாங்கி வெளியிடுவேன்... அதனாலேயே துணிந்து அழைத்தேன்.

    உங்கள் ஒபிஸ் அட்வைஸ் மிகவும் அருமையானது... உண்மைதானே, நமக்கென ஒரு லிமிட் இருக்குது.. மற்றும்படி தேவையில்லாமல் எதுவும் சொல்லப்போனாஅல்.. இதைவிட இன்னும் மனதை சங்கடப்படுத்தி விடுவார்கள்.

    ஒரு சம்பவம் நினைவுக்கு வருது...

    அப்பாவின் ஒபிஸ் குவாட்டேர்ஸ் இல் இருந்தபோது.... நாம் கோல் எடுப்பதாயின் அல்லது நமக்கு கோல் குவாட்டேர்ஸ் க்கு வருவதாயின்.. முதலில் கொம்பனி எக்சேஞ் க்கு வரும் பின்பு ஒப்பரேட்டர் மூலம் நமக்கு கனெக்ட் ஆகும்... வெளிக் கோல்கள். அப்பாவுக்கு எனில் நேரே எடுக்கலாம்.

    அப்போ ஒருநாள் நான் எக்சேஞ் க்கு கோல் பண்ணினேன்.. எனக்கு ஒரு கோல் எடுத்து தரும்படி.. அப்போ அந்த அங்கிள் உடனே ஓகே என்றிட்டு ஃபோனை வச்சிட்டார்.... அவர் கொனெக்ட் பண்ணி விட்டிருக்கிறார்.. ஆனா என்னாச்சோ ஏதாச்சொ தெரியவில்லை... அது தப்பான கொனெக்‌ஷன் ஆகி... எனக்கு லைன் போகவில்லை.... அங்கே ஏதோ ஒபிச்களில் வேர்க் பண்ணும் இருவர் லவ் பண்ணுவது எனக்கு கொனெக்ட் ஆச்சு....

    அவர் சொல்கிறார் தனக்கு தலை இடிக்குது ஏழியா வீட்டுக்கு போகப்போறேன் என.. அவ சொல்றா.. எதுக்கு ஏன் என:)... இப்படி இன்னும்... எனக்கு அடியும் புரியல்ல நுனியும் புரியல்ல... கொஞ்ச நேரத்திலதான் புரிஞ்சு என் லைனை கட் பண்ணிட்டேன் ஹையோ ஹையோ... இப்போ மொபைல் என்பதால் எல்லோருக்கும் எவ்ளோ பிறைவசி:)...

    பதிலளிநீக்கு
  22. ///நாம் கடைபிடிக்காத எதையும் அவங்களுக்கு ஆலோசனை கூறக்கூடாது. நாம் செய்வதைப் பார்த்து அவங்க கத்துப்பாங்க. ///

    இதில் இரண்டாவது வசனம் 100 வீதம் உண்மை.. நாம் செய்வது நடப்பதைப் பார்த்துத்தான் பிள்ளைகள் தொடர்வார்கள்.. அதை சொல்லிக் குடுக்கவே தேவை இல்லை...

    ஆனா இங்கு முதலாவது வசனம்.... சற்று மாறி யோசிக்கிறேன்.. நம்மால் கடைப்பிடிக்க முடியாமல் போன நல்ல விசயங்களை அவர்களையாவது கடைப்பிடியுங்கோ எனச் சொல்லிக் கொடுக்கலாமெல்லோ... ஏனெனில் நாம் அனுபவப்பட்ட பின் தானே அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம்.

    கண்ணதாசன் அங்கிள் சொல்லியிருக்கிறார்... இதைச் செய்.. இதைச் செய்யாதே என அட்வைஸ் சொல்லும் தகுதி எனக்கிருக்கு, ஏனெனில், நான் தவறுகள் பல செய்திருப்பதால்.. அது தவறு அதை நீ செய்திடாதே எனச் சொல்லும் தகுதி எனக்கிருக்கு என்று.

    பதிலளிநீக்கு
  23. ///WORD கொடுத்துட்டா அதைக் கடைபிடிக்கணும் (நேரம் தவறாமையும் இதுல வரும்)///

    ஹா ஹா ஹா என் கொள்கையும் இதுதான், ஒரு வார்த்தை சொல்லிட்டால் அதை நிறைவேற்றியே தீருவேன் 99 வீதமும்.. ஒரு வேளை நிறைவேற்ற முடியாமல் போனால் காரணம் சொல்லி மன்னிப்புக் கேட்டிடுவேன்... சொன்ன வார்த்தையை மீறுவது பிடிக்காது, அதனாலேயே எடுத்தோம் கவிழ்த்தோம் என ஓம் சொல்ல்லிட மாட்டேன் பல விசயங்களுக்கு.

    இந்த நேரம் தவறாமை உண்மைதான்... எங்கள் அப்பாவுக்கும் பிடிக்காது.. அதைவிட என் கணவர் இதில் வலு கவனம்... சொன்னால் சொன்ன நேரத்துக்கு நிற்கோணும் என்பார்... அதிலிருந்து எனக்கும் பழக்கமாகி விட்டது... இப்போ பிள்ளைகளுக்கும் அதை சொல்லியே வருகிறோம்.. நேரம் தவறிடக்கூடாது அதைக் கடைப்பிடிக்கோணும் என.

    இங்கு அடிக்கடி விருந்துகள் நடக்கும் நண்பர் வீடுகளில், அப்போ நேரம் சொல்லுவினம்.. 1 க்கு வாங்கோ என்றால்.. தூர இடமெனில் கொஞ்சம் ஏழியா வெளிக்கிட்டுப் போயிடுவோம், ஆனா வீட்டுக்குள் போகாமல் இடையில் நேரம் வரும்வரை காரை எங்காவது நிறுத்தி விட்டுப், பேசிக்கொண்டிருந்து விட்டு ரைம் க்குப் போவோம்ம்.. ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  24. ///நான் துபாயிலிருந்து formalஆ பெண் பார்ப்பதற்கு (அதுக்கு முன்னாலேயே திருமணம் நிச்சயம் ஆயிடுத்து) போனேன்.
    நாங்க கிளம்பறதுக்கு 15 நிமிஷம் தாமதமாயிடுத்து.///

    ஹா ஹா ஹா இது வேணுமெண்டே தாமதப்படுத்திப் பந்தாக் காட்டியிருக்கிறீங்க:) அதாவது.. எனக்கொண்டும் பொம்பிளையைப் பார்க்கும் அவசரமெல்லாம் இல்லை என்பது போல ஹா ஹா ஹா:))..

    ///அவர் சொன்னார், விஷயம் இன்னதுன்னு தெரியாமல் நான் வாக்கு கொடுக்கமாட்டேன். ///
    ஹா ஹா ஹா உண்மை மிகவும் கரெக்ட்டான அட்வைஸ்..

    ////இதுபோல, நான் 4வது படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு நாள், தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது வீட்டு முன்பு கிடந்த பாக்கெட்டை (1974)///

    ஆவ்வ்வ்வ்வ் எல்லோரும் டயறி எடுத்துக் கொண்டு ஓடிவாங்கோ:))... கரெக்ட்டாக் கண்டு பிடிச்சிட்டோம்ம்:) டபிள் புரொமோசன் ஏதும் இடையில் கிடைக்கல்லதானே.. 1இலிருந்து 3 க்கு அப்படி?:) ஹா ஹா ஹா..

    இல்ல உண்மையில் ஆரம்பம் உங்களோடு பேசத்தொடங்கியபோது, உங்கள் எழுத்தின் வடிவம்.. அனுபவம் இப்படிப் பார்த்து நான் நினைச்சேன் நீங்க வயதானவர் என்று:) ஹா ஹா ஹா முறைக்காதீங்க.. வலை உலகைப் பொறுத்தவரை.. எழுத்தை வைத்துத்தானே ஒருவரின் உருவம்... குணம் இவற்றை ஓரளவுக்கு ஊகிக்கிறொம்.. அது தப்போ...

    பதிலளிநீக்கு
  25. //எங்க அப்பா, எங்க பெரியப்பால்லாம் எப்போதும் சொல்வது, அடுத்தவங்க காசு நம்மகிட்ட இருந்தா அது, ‘தீயை மடியில் கட்டிக்கறமாதிரி’ன்னு.///

    இதுவும் பெரும்பாலும் நம்மூரில் எல்லோரும் சொல்வதுதான்... எங்கள் வீட்டில் காசை மிதிக்கக்க்கூடாது.. அவமதிக்கக்கூடாது.. அதே நேரம் ரோட்டில் அல்லது எங்காவது வெளியில் இருந்து பணம் எடுத்தால், அதை நாம் வைத்திருந்தால் அது நமக்கு கூடாது ஏதும் கெட்டது வந்திடும் என்பதுபோல சொல்வார்கள் அப்பா அம்மா... அதனால கண்ணில் காசைக் கண்டிட்டு அவமரியாதையா ஒதுங்கிப் போகவும் மனம் வராது, எடுத்து கையில் வச்சிருக்கவும் பயம்.. எங்காவது தேடி கோயில் உண்டியலில் போட்டிடுவோம்.

    தொட்டில் பழக்கம், சமீபத்தில் எங்கள் சூப்பமார்கட்டில் சனம் குறைவான நேரம்.. மடித்தபடி 10 பவுண்ட் நோட் விழுந்து கிடந்தது.. அதை டக்கென எடுத்து கையில் ஏதோ சுடுதண்ணி பட்டதுபோல பிலிங்கோடு அதை உடனேயே ஒப்படைச்சிடோணும் என கஸ்டமர் சேர்விஸ் க்கு ஓடினேன், அங்கு மனேஜர் இருந்தார் பக்கெனக் குடுத்தேன்... நான் நினைச்சது அவர் ஆரையவது விசாரிச்சுக் குடுப்பார் என... ஆனா அவர் பேசாமல் வாங்கிப்போய் உள் மேசையில் வச்சுப்போட்டு வெளியே வந்தார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒருவேளை நான் எடுக்காமலே விட்டிருந்தால், போட்டவர் தேடி எடுத்திருப்பாரோ என என்னில எனக்கு கோபம் வந்துது:(..

    பதிலளிநீக்கு
  26. இந்தக் கடன் பற்றி நிறையப்பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன் அதுவும் அதிகமாக இந்திய நண்பர்கள்.. சொல்லியிருக்கினம்... கடன் வாங்கவும் கூடாது, குடுக்கவும் கூடாது என.

    ஆனா இதில வாங்கக்கூடாது என்பது மிகச் சரி.. முடிந்தவரை வரவுக்குள் செலவு செய்யப் பழகோணும்...ஆனா கொடுப்பது என்பது “உதவி” என்பதுக்குள்தானே அடங்கும்.... நம் நெருங்கிய உறவினரோ அல்லது நெருக்கமானவர்களோ மிகக் கஸ்டப்பட்டால் கடன் கேட்டால் வச்சுக்கொண்டே எப்படி இல்லை என்பது? அது பாவமில்லையா? எனக்கு மனமே கேட்காது... என் கணவர் சிலநேரம் ஆராவது கேட்டு இப்போ தருவது கஸ்டம் என்பதுபோல பேசினால்கூட, நான் அவரின் மனதை மாற்றி இல்லை குடுப்போம் பாவமாக இருக்கு.. எனக் குடுக்க வச்சிருக்கிறேன்...

    நம் நெருக்கமானவர் ஒருவர் மிகக் கஸ்டத்தில் இருக்கிறார் எனில் அவரின் முன்னேற்றத்துக்காக கடன் கொடுத்து உதவுவது நல்ல விசயம் தானே... ஆன சிலர் அதை வாங்கிப்பொட்டு நன்றி மறப்போரும் உண்டுதான்... கேவலமாக பேசிவிட்டுக் கடனடைப்போரையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆன அப்படியானோரை தெய்வம் கேட்கும் என நினைப்பேன்...

    நான் சொல்வது சரியா தவறா தெரியவில்லை.. என்னைப்பற்றிச் சொன்னேன்.

    கிரடிட் கார்ட் விசயம்... அது கடன் கார்ட் என்றாலும் எனைப்பொறுத்து கடன்படுதல் என்பதுக்குள் அடங்காது.. அது வெளிநாட்டில் இருப்போருக்கு அத்தியாவசியம்.. ஏனெனில் பல வேலைகள் ஒன்லைனிலேயே செய்கிறோம்.. பிள்ளைகளில் ஸ்கூல் கண்டீனில் அவர்கள் லஞ்ச் வாங்குவதுக்கு கூட பேரண்ட் பே என ஓன்லைன் வசதி இருக்கு... அத்தோடு பல நேரம் ஒன்லைன் ஷொப்பிங், ரெயின், பிளேன் ரிக்கெட்.. இப்படி எதுவாயினும் கிரடிட் கார்ட் தான் சேஃப்...

    இங்கே பெற்றொல் செட்.. மற்றும் பல சுப்பமார்கட்டுகளில்கூட கிரடிட் கார்ட் பாவிப்பார்கள்.. ஏனெனில் செலவைக் கட்டுப் படுத்தவாம், மாதம் முடிய, டெபிட் டிலிருந்து கிரடிட்டுக்கு பணத்தை மாத்தினல்.. கணக்குத்தெரியும் எனவும்.. அடுத்து சேஃப்டிக்காகவும் பலர் கிரடிட் கார்ட்டையே பயன்படுத்த விரும்புகின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடன் கொடுக்கும் செயல் உதவி என்பது சரியே என்னை பொருத்த வரையில்

      நீக்கு
  27. இன்று நெல்லைத்தமிழனின் போஸ்ட்டை விட என் கொமெண்ட் நீளுது:) எனக்கு ஒரே ஷை ஷையா வருது:) இருப்பினும் முன்னே வச்ச காலைப் பின்னே வைக்க மாட்டேன்:).. எங்கட வீட்டு தாரக மந்திரம் :) “நோ வெயிக்கம்.. நோ ரோஷம்”.. ஹா ஹா ஹா:)) அதனால தொடர்கிறேன்... நெல்லைத்தமிழன் என் கொமெண்ட்ஸ் பார்த்து மயங்கி விழுந்திடாதீங்கோ எப்பூடி நான் பதில் கொடுப்பேன் என:)) படியுங்கோ போதும் பதில் போடோணும் என இன்று மட்டும் :)) மீ எதிர்பார்க்காமல்:) பெரிய மனசு பண்ணி விட்டிடுறேன்:)) ஹா ஹா ஹா:)..

    ///என் பையனோ பெண்ணோ 6 மணிக்கு எழுப்பணும்னு சொன்னாங்கன்னா, தண்ணியைத் தெளித்தாவது எழுப்பிடுவேன். அவங்க 10 நிமிஷம் கேட்டாலும் கொடுக்கமாட்டேன்.//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இனிமேலும் என்னிடம் எழுப்பி விடுங்கோ எனச் சொல்லுவீங்களோ?:) என்பதுபோல இருக்குதிது:))..

    இல்ல நான் இந்த விசயத்தில், சொன்ன நேரத்துக்கு எழுப்புவேன், ஏனெனில் எதுக்காக சொன்னார்கள் எனத் தெரியாதெல்லோ.. பின்பு சொன்னேனே எல்லாம் போச்சு ஏன் எழுப்பவில்லை எனக் கேட்டாலும் கேட்பினம் எனும் பயத்தில்.... எழுப்பிச் சொல்லுவேன் .. எழுப்பச்சொன்னீங்களே ரைம் ஆகிட்டுது எழும்புங்கோ என.. இல்லை அம்மா அவசரமில்லை கொஞ்சத்தால எழும்புறேன் என்றால் விட்டு விடுவேன்...

    வாலி அவர்களின் கதை... உண்மைதான் சில நேரங்களில் கடவுளே சில வடிவமாக, பாட்டக, கதையாக இப்படி வந்து மறைமுக அட்வைஸ் கூறி நம்மைக் காப்பாற்றி விடுவார்ர்..

    இன்று அனைத்தும் இன்றஸ்றிங்கான , ஒவ்வொன்றும் மனதில் பதியக்கூடியபடி சொல்லியிருக்கிறீங்க.. வாழ்த்துறதோ? வணங்குறதோ?:) ஹா ஹா ஹா...
    மிக அருமை. படங்கள் ஏன் ஒன்றுமே தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  28. ஹலோ.... ம்ம்ம்மிய்ய்ய்ய்ய் யாவ்!..

    பாடம் நடந்துகிட்டு இருக்க சொல்ல
    படம் எதுக்கு...படம்!???...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///
      துரை செல்வராஜூJanuary 18, 2018 at 4:13 PM///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
  29. ஸ்ரீராம் - நீங்க தாமதமாக்கக்கூடாதுன்னு சொன்னதுனால உடனே எழுதி அனுப்பினேன். சொன்ன மாதிரி வெளியிட்டுட்டீங்க. நன்னி ஹை (யாரையோ காப்பி அடிக்கற மாதிரி இருக்கா?)

    பதிலளிநீக்கு
  30. துரை செல்வராஜு சார்... தங்கள் தந்தையையும் சித்தப்பாவையும் நினைவுகூறவைத்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  31. கரந்தை ஜெயக்குமார் சார்... கருத்துக்கு நன்றி. தந்தைதானே நம் எல்லோரின் நல் வாழ்வுக்கும் அடித்தளம்.

    பதிலளிநீக்கு
  32. காலை வணக்கத்திற்கு நன்றி பானுமதி வெங்கடேசுவரன், வல்லிம்மா. உங்கள் கருத்தை எதிர்பார்த்திருப்பேன்.

    பதிலளிநீக்கு
  33. பாபு - உங்களை முதன் முதல் பார்க்கிறேனோ? உங்கள் கருத்திற்கு நன்றி. சரியா உபயோகப்படுத்தத் தெரிந்தவர்களிடம், 'கத்தி' இருந்தாலும் பயமில்லை என்பதாக உங்கள் கருத்தைப் புரிந்துகொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  34. கேஜிஜி சார்... நீங்க கேட்பது, 'கிடக்கிறது கிடக்கட்டும். கிழவியைத் தூக்கி மணையில் வை' என்பதுபோல் இருக்கிறது.

    அது, ஏழைப் பெண் ஒருத்தி தன் புடவையில் முடிந்துவைத்திருந்ததைத் தவறவிட்டுவிட்டாள், திரும்ப வந்தபோது அதை எங்க அப்பா எடுத்துக்கொடுத்த ஞாபகம் (மறுநாள், விஷயம் கேள்விப்பட்டு). பொதுவா எங்க அப்பா, இந்த மாதிரி கிடைப்பவைகளை, சேர்ப்பிக்க முடியலைனா, கோவில் உண்டியலில் சேர்ப்பார் எனச் சொல்லியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  35. நன்றி மிடில்கிளாஸ் மாதவி. Family tradition என்பதும் வழி வழி வருவதுதானே. சொல்லிக்கொடுத்தும், நாம் பார்த்தும்.

    பதிலளிநீக்கு
  36. நன்றி ஜம்புலிங்கம் சார். 'புத்திமதி'ன்னு மனசு நினைச்சா ஏத்துக்காது, இல்லையா?

    பதிலளிநீக்கு
  37. கில்லர்ஜி.. உங்கள் நெடிய பின்னூட்டத்துக்கு நன்றி. நீங்க DEVA கணக்கெல்லாம் ஒப்படைத்துவிட்டேன் என்று சொன்னீங்களே.. இன்னும் நீங்கள்தான் பொருளாளரா இருக்கீங்களா, அல்லது இது வேறையா? உங்கள் கருத்துதான் என்னுடைய கொள்கையும். அடுத்தவங்களுக்குச் சேரவேண்டிய பணம் நம் பணத்துடன் கலந்துவிடக்கூடாது.

    பெரும்பாலும், இப்போதைய இளைஞர்கள், தங்களுக்கு எல்லாம் தெரியும் (Smart Phone, Google, Net இருப்பதால்) என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கை அனுபவம் அனைத்தையும் புரியவைக்கும். நாம் சொல்லுவதால் அவர்கள் உடனே மாறப்போவதில்லை.

    பதிலளிநீக்கு
  38. வாங்க புலவர் இராமானுசம் ஐயா.

    வாங்க பரிவை குமார். எல்லாத்தையும் அனுபவித்தே அறிந்துகொள்வோம்னு விட்டுட முடியாதில்லையா?

    பதிலளிநீக்கு
  39. வாங்க ஜி.எம்.பி சார்.. இள நீல எழுத்தும் நான் எழுதியதுதான்.

    பதிலளிநீக்கு
  40. வருகைக்கும் வெண்பாவுக்கும் மிக்க நன்றி இளமதி அவர்கள். நானும் சில சமயங்களில், தமிழ்ப்பாக்களில் ஆழ்ந்துவிடுவேன். அது ஒரு தனி உலகம். நம் தினப்படி பிரச்சனைகள் தொந்தரவு தராத, நம் மன அமைதிக்கு உகந்த உலகம். கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  41. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா சாம்பசிவம் மேடம். அயோத்தியில், பணத்தினால் என்ன பிரச்சனை வந்தது? நாங்கள் சென்றிருந்தபோது பணம் மட்டும்தான் எடுத்துச்சென்றிருந்தேன் (12 நாட்கள், முக்தினாத் வரை 2008ல் சென்றபோது)

    'கண்டிப்பு' பற்றி உங்கள் கருத்தை ஏற்கனவே படித்திருக்கிறேன். சொல்றவங்க, அது குளிர் காலத்தில் மூட்டிய நெருப்பு மாதிரி, ரொம்பத் தள்ளிப் போனா, அதனால் பிரயோசனமிருக்காது (EFFECT). ரொம்பப் பக்கத்துல போனா, நம்மையே சுட்டுடும்னு. ஆனா, வாழ்க்கைல Balanced ஆக கண்டிப்பு காண்பிப்பது சுலபமல்ல. நான், பசங்க சின்ன வயசுல, ரொம்ப கண்டிப்பு காண்பித்திருக்கேன். (இந்தத் தடவை பையன் வந்தபோது, ஹாலில், சோபாவின் பின்பு இருந்த நெடிய Markஐக் காண்பித்து, அது சின்ன வயதில் அவங்க என்ன செய்ததால் வந்தது என்று சொன்னான். இப்போ கேட்கும்போது சிரிப்புதான் வந்தது. இதையே அவன், 7 வயதில் சொல்லியிருந்தான்னா, எனக்கு கோபம்தான் வந்திருக்கும். இந்தத் தடவை சொன்னாங்க, எப்படி நான்தான் ஆபீசிலிருந்து வருகிறேன் என்பதைக் கண்டுபிடிப்பாங்க, எப்படி உடனே அலெர்ட் ஆவாங்க என்பதெல்லாம்.)

    பதிலளிநீக்கு
  42. அதிரா... உங்கள் வருகைக்கும், எல்லாப் பின்னூட்டங்களுக்கும் நன்றி. நான் எல்லாவற்றையும் வாசித்தேன்.

    இன்று காலையிலிருந்து தளத்தில் பிரச்சனை என்று நினைக்கிறேன். படங்கள் தெரியவில்லை. காலையில் நான் வாக்களித்தேன். பிறகு, 'தமிழ் மணத்தில்' இன்னும் சப்மிட் பண்ணாததுபோல் காண்பிக்கிறது.

    பதிலளிநீக்கு
  43. தமிழ்மணம் என்னாச்சு பதிவு அருமை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  44. அழகான அட்வைஸ் .. சூப்பரா எழுதியிருக்கீங்க நெல்லைத்தமிழன் .உங்க அப்பா போலத்தான் எங்க அப்பாவும் 5 மணிக்கு ஒரு இடத்தில இருக்கணும்னா 4:30 கு அங்கே இருப்பார் :)
    எக்ஸாம் நேரமெல்லாம் அவர் வீட்ல இருந்தார்னா அவரே காஃபி போட்டு எழுப்பிடுவார் .அம்மா சுத்தம் :) கொஞ்சம் அசந்தாப்பல படுத்தோம்னா பாவம் குழந்தைன்னு விட்டுடுவாங்க இப்படி .p g படிக்கும்போது ஒரு எக்ஸாமுக்கு ஈவ்னிங் வந்து படிச்சிட்டு அப்படியே தூங்கிட்டேன் அடுத்த நாள் காலைல தான் நானே எழும்பி ஓடினேன் .அதனால் நான் இப்போல்லாம் மகளுக்கு ஜெசியை அவ ரூமுக்கு அனுப்பி விட்ருவேன் தண்ணிலாம் அடிக்க மாட்டேன் :) ஜெசி போதும் wake up alarm :)
    பணம் விஷயத்திலும் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ரோட்டில் கிடந்தாலோ இல்லை கடையில் அதிகமா கிடைச்சி வீட்டில் வந்து கவனிச்சாலோ அதை சர்ச் சேரிட்டி அல்லது myton pdsa இப்படி எதுக்காவது கொடுத்திடுவேன் .

    பதிலளிநீக்கு
  45. மிகவும் சுவாரஸ்யமான பதிவு நெல்லைத்தமிழன்!

    பதிலளிநீக்கு
  46. சிலருக்கு அட்வைஸ் சொல்வதை நிறுத்தவே முடியாது - இல்லை அதிரா. கொஞ்சம் வயதானால், இந்தப் பழக்கம் அதிகமாகிவிடும்னு நினைக்கிறேன். எங்க அம்மா (80+), இன்னும் அவங்களைப் பார்க்கப்போனா அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருப்பாங்க, என் பசங்களுக்கும் ஏதேனும் சொல்லிக்கிட்டிருப்பாங்க. ஆனா 'ஹஸ்பண்டோட பெற்றோர்' அப்படி அட்வைஸ் பண்ணமாட்டாங்க. நான் அம்மாட்ட, நீ ஏம்மா கவலைப் படுற... எல்லாம் நாங்க பாத்துக்கறோம்னு சொல்லிடுவேன். இன்னொரு வெகு வயதான உறவினரைப் பார்க்கப் போயிருந்தேன். அங்க போறதுக்கு முன்னாலேயே, பசங்கள்ட சொல்லிட்டேன், 'அவங்க வயசானவங்க.. கொஞ்சம் அட்வைஸ் அது இது என்று சொல்லுவாங்க. பொறுமையா கேட்டுக்கோங்க'ன்னு. ஏன்னா, முகத்தை சலிச்சமாதிரி காமிச்சிக்கக் கூடாதில்லையா?

    ஒபிஸ் அட்வைஸ் - சில சமயம் எனக்கே சிலர் செய்வது பிடிக்காது. (அவனே கஷ்டப்படுவான். இதுல அளவுக்கு மீறி செலவு செய்வது போன்று செய்வாங்க). நான் யாரிடமும் உணவு சம்பந்தமானது இலவசமா வாங்கிக்கமாட்டேன். இதை ரொம்ப கண்டிப்பா கடைபிடிக்கிறேன், எங்க ஸ்டாஃப் எல்லோருக்கும் இது தெரியும். சில சமயம், மனசுல தோணும், பணத்தை வேஸ்ட் பண்ணாதேன்னு சொல்லலாமான்னு.

    நீங்க டெலெபோன்ல, அடுத்தவங்க பேசறது உங்களுக்குக் கேட்டதைப் பற்றி எழுதியிருக்கீங்க. இது வேற ஒண்ணை எனக்கு ஞாபகப்படுத்துது. நான் 6வது படித்தபோது எங்க அப்பா அந்த ஸ்கூல்ல ஹெட்மாஸ்டரா இருந்தாங்க. அங்க 3 பெண் ஆசிரியர்களும் உண்டு. (1975ல்). எங்க அப்பா கைல ஒரு பிரம்பு உண்டு (4 அடிக்கும் மேல் நீளம்). பெண் ஆசிரியை ஒன்றை Explain செய்ய முனைந்தபோது (அவர் அறையில்), பிரம்பை நீட்டி, 'அதுக்கு அந்தப்பக்கம் இருந்துக்கிட்டே சொல்லுங்க' என்று சொன்னார். அவர் Ladiesஉடன் deal செய்வதில் அவ்வளவு careful. இதை எழுதும்போது எனக்கு அப்படியே அது காட்சியா விரியுது. நானும் இதுல ரொம்ப கேர்ஃபுல். (இதைப் பற்றி பிறகு ஒரு சமயம்)

    நாம கடைபிடிக்க முடியாம போன விஷயங்களை - நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி. நான் என் பசங்கட்ட சொல்றது, அப்பாக்குன்னு (பெற்றோருக்கு) ஏதேனும் செய்யணும்னு நினைச்சா, அதை முடிந்தவரை உடனே செஞ்சுடணும். பின்னால, இன்னும் சம்பாதித்தபிறகு செய்யலாம்னு நினைக்ககூடாது. நான் அப்படி நினைத்துத்தான் எங்க அப்பாவை வெளிநாட்டுக்குக் கூட்டிட்டு வரலை. அடுத்த வருஷம் பார்க்கலாம்னு தேவையில்லாம தள்ளிப்போட்டு, நான் 'கண்டிப்பா வரணும்'னு சொன்னபோது, டாக்டர், உங்க அப்பா, அவ்வளவு நேரம் விமானப் பயணம் செய்யமுடியாதுன்னு சொல்லிட்டார். இது எனக்கு எப்போதும் மிகுந்த வருத்தத்தைத் தரும் சம்பவம். என் அம்மாவை மட்டும் பலமுறை கூட்டிவந்தேன். இந்த மாதிரி விஷயங்களை பசங்கள்ட சொல்றதுல அர்த்தம் இருக்கும். நான் காலைல 5 மணிக்கு எழுந்துக்காம, பசங்களை மட்டும், 'அதிகாலையில் எழுந்துக்கறது நல்லது' என்று அறிவுரை சொல்லி என்ன பயன்?

    உங்கள் கணவர் சொல்வதுபோல, 'நேரம் தவறாமை' என்பது அருமையான பழக்கம்.

    பொம்பிளையைப் பார்க்கும் அவசரமெல்லாம் இல்லை என்பது போல - இப்போ யோசித்துப் பார்க்கிறேன். இருந்திருக்கலாம். 4 மணிக்குக் கிளம்பணும்னு சொன்னீங்க, நான் 3.50க்கே ரெடியாயிட்டேன் என்று இந்த விஷயத்துக்குச் சொல்ல தயக்கமா இருந்திருக்கலாமில்லையா?

    10 பவுண்ட் நோட் - இது எனக்கு வேறு ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்தியது. பாரிசில், லிண்ட் சூப்பர்மார்க்கெட்டில், 50 யூரோ நோட்டு கவுன்டரில் கொடுத்தேன். அப்போ ரொம்ப கூட்டம். கேஷியர், 20 யூரோவுக்கு மட்டும் பேலன்ஸ் கொடுத்தாள். கேட்டா, நான் 20 யூரோதான் கொடுத்தேன் என்று ஃபிரெஞ்சில் பேச ஆரம்பித்துவிட்டாள். அப்புறம் மறு நாள் சூப்பர் மார்கெட் மேனேஜரைப் பார்த்தும், எப்படி அதைக் கண்டுபிடிப்பது என்று சொல்லியும் யாரும் உதவவில்லை. கம்பிளெயின்ட் செய்தும் இழந்த பணம் இழந்ததுதான்.

    உறவினர் கடன் கேட்டால் - யாருக்குமே உதவவேண்டும் அதிரா. ஆனால், 'கடன்' என்று கொடுத்தால் அது கடைசியில் மனக் கஷ்டத்தில்தான் கொண்டுவிடும். பணத்தைக் கொடுப்போம், வந்தால் வரவு, இல்லைனா அது தானம் என்று நினைத்துகொள்வோம் என்ற மன'நிலை இருந்தால்தான் நல்லது.

    உங்கள் பல பின்னூட்டங்களையும் படித்தேன். பகிர்ந்துகொண்டதற்கு நன்றி அதிரா.

    பதிலளிநீக்கு
  47. இப்போதான் கம்ப்யூட்டர் கொஞ்சம் வொர்க் பண்ணுது.ஸோ எங்கள் கருத்து. துளசி படித்துவிட்டார். கீதா இப்போதுதான்...இருவரின் கருத்துகளும் கிட்டத்தட்ட ஸேம் ஸோ...

    //நம்முடைய குழந்தைகளுக்கு நாம் அட்வைஸ் என்ற பெயரில் அள்ளித்தெளிப்பதே தவறான அணுகுமுறை. நாம் கடைபிடிக்காத எதையும் அவங்களுக்கு ஆலோசனை கூறக்கூடாது. நாம் செய்வதைப் பார்த்து அவங்க கத்துப்பாங்க. இன்னைக்கு இல்லாவிட்டாலும், அவங்க அந்த மெச்சூரிட்டி லெவலை அடையும்போது தானே கடைபிடிக்க ஆரம்பித்துவிடுவாங்க.//

    எக்ஸாக்ட்லி!!! ஒரு சில விஷயங்களைத் தவிர அட்வைஸ் இல்லை அது கூட நீங்கள் சொல்லியிருக்கு சஜஷன் போல....என்று கொள்ளலாம்...

    பதிலளிநீக்கு
  48. வாங்க ஏஞ்சலின். 'அட்வைஸ்' என்பதைவிட அப்பாவைப் பற்றிய பதிவாகப் போய்விட்டது. பசங்களுக்கு, ரோல் மாடல் பெரும்பாலும் அவங்க அப்பாதானே.

    பதிலளிநீக்கு
  49. இப்பத்தான் புரியுது அந்த 27 ரூபாய் கதை!!! இப்பத்தானே நான் வாசிச்சேன்..ஹா ஹா ஹா ஹா....

    சரி இனி அடுத்து எங்களின் கருத்துக்குப் போகிறோம்.

    படங்கள் எதுவும் தெரியலை.....கமென்டும் வழத்தை விட நிறைய டைம் எடுக்குது போக...

    கீதா

    பதிலளிநீக்கு
  50. வருகைக்கு நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

    பதிலளிநீக்கு
  51. மற்றொன்று ஷெர் இன்வெஸ்ட்மென்ட்...எஸ் உங்கள் கருத்தே எங்கள் இருவரதும்...


    பதிலளிநீக்கு
  52. நெல்லை என் அப்பா ஹையோ டைம் பெர்ஃபெக்ட்!!! எப்போதும் வாச் பார்க்கும் வழக்கம் அல்லது டைம் பீஸ். உணவு முதற்கொண்டு...எல்லாமே! ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் உங்கள் அப்பா மாதிரியேதான். அப்புறம் ட்ரெயின் ஏறவும் அப்படியேதான். அப்பழக்கம் எனக்கும் வந்து விட்டது. ஒருவரிடம் டைம் சொல்லிவிட்டேன் என்றால் அந்த நேரத்திற்குச் சென்று விடுவேன்..கொஞ்சம் முன்னாடி போனாலும் போவேன் அல்லாமம் லேட்டாகப் போக மாட்டேன். ஒரு வேளை தாமதித்தால் அதற்கு ஏதேனும் நம்மை மீறிய காரணங்களாக இருக்கும். என் அப்பா பெயரே ரெடி ஐயங்கார் என்றுதான் என் அம்மாவின் வீட்டில் கேலி செய்வார்கள். என் அப்பாவின் செயல்களை வைத்து நேரம் கூடப் பார்க்க வேண்டாம் நேரம் அறிந்து கொண்டுவிடலாம். அந்த அளவிற்கு. ஆனால், நான் ஒரே ஒரு விஷயத்தில் அவரிடம் இப்போதும் சொல்லுவது. அந்த நேரம் தவறும் போது அவர் ரொம்ப ரெஸ்ட்லெஸ் ஆவார்.....டென்ஷன் ஆவார். அதை மட்டும் மாற்றிக் கொள்ளச் சொல்வேன். ஏனென்றால் அதனால் வீட்டில் ரொம்பப் பிரச்சனைகள் வந்ததுண்டு. நான் யார் பக்கம் சாய்வேன்? எனக்கு என் அப்பா அப்படி பிரச்சனைக்குள்ளாவது மனது கேட்காது. யாரிடம் சொல்ல முடியுமோ அவரிடம் தானே சொல்ல முடியும். ஐ ஆம் கம்ஃபர்டபில் ஒன்லி வித் மை ஃபாதர் ஸோ. அவரிடம் தான் சொல்ல முடியும்...அதனால் அவரிடம் தனியாகச் சொல்வதுண்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
  53. //வாங்க ஏஞ்சலின். 'அட்வைஸ்' என்பதைவிட அப்பாவைப் பற்றிய பதிவாகப் போய்விட்டது. பசங்களுக்கு, ரோல் மாடல் பெரும்பாலும் அவங்க அப்பாதானே.//

    அதேதான் நெல்லைத்தமிழன் அப்பாக்கள் எப்பவும் நல்லதை தான் செய்திருக்காங்க பிள்ளைங்களுக்கு .எங்கப்பா எனக்கு செய்தது எல்லாம் கண் முன்னே காட்சியா விரியுது .அப்பாக்கள் பற்றி சொல்வதில் தவரில்லை இங்கே பகிரும்போது இன்னும் புரிதல் இல்லாத ஒரு சில அப்பாக்கள் மற்றும் இனிமே அப்பா ஆக போறவங்கன்னு பலரும் இதை வாசிக்க கூடும் அவங்களுக்கு இது ஒரு உதாரணமா அமையட்டும் .
    January 18, 2018 at 5:54 PM

    பதிலளிநீக்கு
  54. உங்க ஹஸ்பெண்ட் சரியான அட்வைஸை உங்களுக்கு தந்திருக்காங்க அந்த அலுவலக ஊழியர்களின் clandestine affair விஷயத்தில் .அது நம்மை நம் வேலையை பாதிக்காத வரை நமக்கு அனாவசியமே .அவரவர் வாழ்க்கை அவரவர் விருப்பமனு ஒதுங்கி இருப்பதே மேல் .க்ரெடிட் கார்ட் ஓவர் டிராஃப்ட் இதெல்லாம் வச்சிக்கறதில்லை நாங்களும் இந்த விஷயத்தில் கட்டுப்பாடு போட்டது நான்தான் எங்கள் வீட்டில் :) என் மகளுக்கு எதை சொல்கிறேனோ அதை நானா செய்வேன் அப்போதான் அவள் எதிர்கேள்வி கேக்க சான்ஸ் இருக்காது :) அதுவும் இந்த கால பிள்ளைகள் ரொம்ப விவரம் .ஆனால் சில நேரம் அம்மா நீங்க இதைப்பற்றி என்ன நினைக்கறீங்கனு என்று கேட்பாள் அதெல்லாம் அந்த கேள்விலாம் ரொம்ப கவனமா பதில் சொல்லணும் .

    பதிலளிநீக்கு
  55. யெஸ் அடுத்தவங்க காசு நம்மிடம் இருப்பது பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை டிட்டோ செய்கிறோம்...நாங்கள்

    துளசி: கடன் கொடுக்கும் பழக்கம் இல்லை. வாங்கியது என்றால் ஒரு சில அத்தியாய விஷயங்களுக்கு பேங்கில் ஆனால் சரியாக அடைத்துவிடும் பழக்கம். பணக்கஷ்டமும் கிடையாது.....

    பதிலளிநீக்கு
  56. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தில்லையகத்து துளசிதரன் மற்றும் கீதா ரங்கன். (துளசிதரன்-பாலக்காட்டு விசிட் பாக்கி இருக்கு. அங்க ரெண்டு நாள் ஹஸ்பண்டோட தங்கணும்னு. ஏற்கனவே ஒரு தடவை அவங்களோட வந்திருக்கேன், ஹரிஹரன்ல சாப்பிடணும், கூட ஒரு நாள் தங்கணும்னு நினைத்திருக்கோம். போனதடவை சேவை, just missed).

    கீதா ரங்கன் - நேரப்படி செய்வதில் முந்தைய தலைமுறை அப்படித்தான் ஸ்டிரிக்டா இருப்பாங்க. நானே, பயணத்துக்குப் போகணும்னா, முந்தைய நாளே எல்லாம் பெர்ஃபெக்டா எடுத்துவச்சு, பெட்டியை லாக் பண்ணிடுவேன், 3/4-1 மணி நேரம் முன்னாலயே பஸ் ஸ்டாண்டுக்கோ, இரயில் நிலையத்துக்கோ போய்ச் சேரணும்னு கட்டாயப்படுத்துவேன், விமான நிலையம்னா 2 1/2 மணிக்கு குறைவில்லாமல் முன்னமே போயிடணும்னு சொல்லுவேன். கடைசி நேரத்துல அவசர அவசரமா புறப்படறது எனக்கு சுத்தமா பிடிக்காது. (அதனால நான் இருக்கும்போது மட்டும் இதெல்லாம் என் வீட்டுல ஃபாலோ பண்ணுவாங்க)

    கடைசி நேரத்தில் அவசர அவசரமா புறப்படறவங்க, நிறைய மிஸ்டேக் பண்ணுவாங்க (கதவைப் பூட்டினேனா, கேஸ் ஸ்டாப் பண்ணினேனா என்று எல்லாம் சந்தேகம் வந்துடும்). எதிர்பாராதது வழியில் நிகழ்ந்து, ஆட்டோ/டாக்சி நேரமாச்சுன்னா அவ்வளவுதான். சில சமயம் டிரெயினைத் தவறவிடறதெல்லாம் நடக்கும். நான் மற்றவங்க கமென்டை கொஞ்சம்கூட, இதிலெல்லாம் காதுல வாங்கிக்கமாட்டேன்.

    பதிலளிநீக்கு
  57. நெல்லைத் தமிழன் சூப்பர்ப்! நல்ல பதிவு!

    கீதா: யாரையேனும் அதுவும் அட்வைஸ் பொழிபவர்களிடம் என் மகனிடம் சொல்லிக் கூட்டிச் செல்ல வேண்டுமோ என்று நினைத்து ஒரு முறை ஒருவரது வீட்டிற்குச் சொல்லாமல் கூட்டிச் சென்றுவிட்டேன். ஆனால் அவனோ...நான் அவனிடம் அடுத்த முறை சொல்லும்படி வைக்கவில்லை... என் மகனிடம் இயற்கையாகவே ஒரு குணம் என்னிடம் இருந்து தொற்றிக் கொண்டதாக இருக்கும். அது வீட்டிலுள்ள பெரியவராக இருந்தாலும் சரி, வெளியோரானாலும் சரி. நாங்கள் இருவருமே யாராவது அட்வைஸ் தேவையில்லாமல் சொன்னாலும் சரி, முகத்தை புன்சிப்புடனேயே வைத்திருப்போம். கேட்கவும் செய்வோம். போரடிப்பது போல் எங்கள் பாடி லேங்க்வேஜும் இருக்காது. ...ஓகே ..யா...ஷ்யூர்! கண்டிப்பா....என்று...இது போலித்தனத்திற்காக என்றோ எங்களைத் தவறாகச் நினைக்கக் கூடாது என்றோ இல்லை...அவர்களின் மனம் புண்படக் கூடாது என்று.அவர்களைத்..தவறாகவும் நினைப்பதில்லை. அதற்காக அவரை அடுத்த முறை பார்க்காமல் இருப்பதும் இல்லை....இது என் தம்பி (அத்தைப் பையன்) அவனிடமும் உண்டு.... எப்படியோ எங்கள் இருவருக்கும் இந்தப் பழக்கம்...எப்படி வந்தது என்று நானும் யோசித்துப் பார்க்கிறேன்....புலப்படவில்லை...

    பதிலளிநீக்கு
  58. மீள் வருகைக்கு நன்றி. நான் 'பாஸ்' என்றது என் அலுவலக பாஸ். என் ஹஸ்பண்ட் இல்லை.

    பொதுவா பெண் குழந்தைகள் ரொம்ப மெச்சூர்ட். பசங்க மாதிரி இல்லை.

    பதிலளிநீக்கு
  59. @நெல்லைத்தமிழன் :)) ஹாஹ்ஹ்ஹா :) ok ok :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா அஞ்சு நீங்க ஸ்ரீராமின் பொஸ் ஐ நினைச்சுக் கொயம்பிட்டீங்க கர்ர்ர்ர்:)... அதைப்பார்த்து .... நான் தவறா படிச்சிட்டேனோ என நான் கொயம்பினேனே :)... ஹா ஹா ஹா ... இங்கின கொமெண்ட்ஸ் போடவே படிச்சிட்டு வரோணும் போல இருக்கு:)... நானும் இனி என் வைf எனப் பேசப்போறேன்ன்ன்:).... ஹா ஹா ஹா ... இதைப்படிச்சு உலகமே குழம்பட்டும்:)...

      நீக்கு
  60. //ஹா ஹா ஹா அஞ்சு நீங்க ஸ்ரீராமின் பொஸ் ஐ நினைச்சுக் கொயம்பிட்டீங்க கர்ர்ர்ர்:).//

    என்ர பாஸ் வேற... நெல்லை சொல்ற பாஸ் வேற...!

    பதிலளிநீக்கு
  61. நண்பர் திரு. நெ.த. அவர்களுக்கு...
    DEVA கணக்கு எல்லாம் ஒப்படைக்கப்பட்டாலும் மீண்டும் பணம் எனது வசம் இருக்கட்டும் என்ற தீர்மானத்தால் இப்பொழுது என் வசமே (மனச்சுமையுடன்) இருக்கிறது.

    இதை இந்த பரந்த வெளியில் சொல்வதுகூட அனைத்து தேவகோட்டையர்களுக்கும் தெரியட்டும் என்றுதான்.

    பதிலளிநீக்கு
  62. ஹாஹ்ஹ்ஹா :) இல்லை நான் தான் ஒரு வாரமா அ ஆ அ :) எபக்ட்டில் என்று பல குழப்பங்களில் இருக்கேன் அதான் boss :)) ஸ்ரீராம் சொல்வாரே அப்படின்னு நினைச்சிட்டேன் .



    பதிலளிநீக்கு
  63. அருமையான பதிவு. மனம் திறந்த வார்த்தைகள்.
    எங்க அப்பா அட்வைஸ் சொல்வதை நிறுத்தவே மாட்டார். எல்லாம் சேர்ந்து தான் என்னைப் பக்குவப் படுத்தின. உங்கள் அப்பாவாய்ன் பிரம்படி தூரம் மிகப் பிடித்தது.
    தாத்தா அதையே முழம் போட்டுப் பேசு என்பார். அப்போதெல்லாம் கை கட்டி வாய் பொத்திதான் கேட்போம்.
    குழந்தைகள் படிப்பு விஷயத்தில் என் கணவர் தலையிட மாட்டார்.
    அவர்கள் தங்களுக்குள் வைத்து இருக்கும் Control படி நடந்து கொள்வார்கள். எனக்கு அவர்களிடம் நம்பிக்கை இருக்கிறது என்பார்.

    அம்மா தான் நடந்து காண்பித்தே என்னை வழிப் படுத்தினார். ஒரு தப்பு வார்த்தையும் அவர் வாயில் வராது.
    கடன் வாங்குவது அப்பாவுக்குப் பிடிக்காது. நாங்கள் என்றும் எளிய வாழ்வே வாழ்ந்தோம். குறை என்றுமே இருந்ததில்லை..
    மிக அருமையான எழுத்து.
    பயன் படப் போகும் அறிவுரைகள்.
    என்றும் நலமுடன் வாழ்க நெல்லைத்தமிழன்.

    பதிலளிநீக்கு
  64. பகலெல்லாம் சுற்றிச்சுற்றிப்
    படங்காண்பித்த பின்னே
    இரவில்தான் திறப்பேன்
    என்றது எங்கள் ப்ளாக் ..
    செய்வதற்கேதுமில்லை
    செவிமடுப்போர் யாருமில்லை !
    **
    இதுதான் என்னுடைய பகலனுபவம். இரவு வந்தது. எபி-யின் கதவும் திறந்தது.

    நெல்லையின் அனுபவங்களைப் படித்து, அதிராவின் சூப்பர் அனுபவங்களையும் படியோபடியென படித்து, மேலும் மேலும் அனுபவித்து.. இப்போது என்னதான் எழுதுவது எனத் தெரியாமல் விழிக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  65. ////செவிமடுப்போர் யாருமில்லை !///
    ஆர் அப்பூடிச் சொன்னது?:) யாம் இருக்கிறோம் செவி மடிப்போம்ம்ம்ம்ம்:) ஹா ஹா ஹா:)....

    முடியல்ல என்னால முடியல்ல:)

    பதிலளிநீக்கு
  66. ///ர் சொல் கேட்டு நடப்பதில்லை.

    அதிராவின் அங்கிள் சிவாஸ் ரீகல் சிவசம்போ போன்றவர்கள் கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காக தலைப்பை பக்குவமாக மாற்றி விட்டீர்களே.....///

    Haa ஹா ஹா மின்னி முழக்கியதில், இதைக் கவனிக்காம விட்டிட்டேன்:)

    பதிலளிநீக்கு
  67. நெல்லைத்தமிழன் சுருக்கமாகவும் மிகவும் தெளிவான பார்வையில் அட்வைஸ் சொல்லியிருக்கின்றார் கைபேசியை கட்டில் வரை கொண்டு போகக்கூடாது என்பது மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
  68. நேற்று நான் பார்க்கவே இல்லை. இந்தக்காலத்து அனுபவத்தை அப்படியே கரெக்டா எழுதி இருக்கிறீர்கள். நல்ல அப்பா என்றால் ஒன்றும் சொல்லாதிருப்பவர்களைத்தான் குழந்தைகள் சொல்லுவார்கள். யாவற்றையும் சேர்த்து வைத்து அம்மாமார்கள் அட்வைஸும் கொடுத்துவிட்டு பசங்களுக்கு நல்லது கெட்டது கூட சொல்லாத மனிதர். டோஸ் வாங்குவது யாரு? அப்பாக்களில்லையா? என் அபூர்வ கண்டு பிடிப்பைப் பாருங்கள்.
    அப்பாக்களும் ஏதாவது சொன்னால்தான் அழகாயிருக்கும். நீங்களெல்லாம் எழுதுவது மிக்க அழகாக இருக்கு. அன்புடன்

    பதிலளிநீக்கு
  69. நீங்கள் எழுதி இருப்பதை படிப்பதிலிருந்து உங்கள் அப்பா பெரும்பாலான அந்தக் கால மனிதர்களைப் போல,'Simple living, great thinking' ஆக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. அப்படிப்பட்டவர்களோடு வாழ்வது ஒரு கொடுப்பினை.

    //என் பையனோ பெண்ணோ 6 மணிக்கு எழுப்பணும்னு சொன்னாங்கன்னா, தண்ணியைத் தெளித்தாவது எழுப்பிடுவேன். அவங்க 10 நிமிஷம் கேட்டாலும் கொடுக்கமாட்டேன்.//
    அசந்து தூங்கி கொண்டிருக்கும் பொழுது முகத்தில் திடீரென்று தண்ணீர் தெளிப்பது நல்லதல்ல. தலைவலியை உண்டாக்கும். வேண்டுமென்றால் உங்கள் கைகளை அலம்பி விட்டு ஈர கையால் கண்களை மெதுவாக துடையுங்கள்.

    பதிலளிநீக்கு
  70. எல்லாம் சரி, நெல்லை, அந்தப் பர்ஸ், அப்புறமா அந்த 27 ரூபாய்? அது பத்திச் சொல்லவே இல்லையே! :))))

    பதிலளிநீக்கு
  71. நெல்லை, அயோத்தி பயணக்கட்டுரையில் பணத்தைக் கட்டிக் கொண்டு அலைந்தது பற்றிப் படிக்க இங்கே செல்லவும். நன்றி.ஹிஹிஹி நன்னி ஹை! :)))) http://sivamgss.blogspot.in/2013/11/blog-post_4.html

    பதிலளிநீக்கு

  72. தாமத்திற்கு மன்னிக்கவும். இப்போது இரவு நேரத்தில் இணையத்திற்கு வருவது கொஞ்சம் குறைந்துவிட்டது அதனால்தான் பல பதிவுகளை உடனடியாக படிக்க முடியவில்லை மேலும் நானும் பதிவுகள் இடுவது குறைந்துவிட்டது

    பதிலளிநீக்கு
  73. நாம் கடைபிடிக்காத எதையும் குழந்தைகளுக்கு சொல்லி கடைபிடிக்க சொல்லக்கூடாதும் மிகவும் சரிதான்


    அது போல நாம் கடைப்பிடிப்பதால் அதையும் நம் குழந்தைகளை கடைபிடிக்க சொல்லதும் தவறுதான். எது நல்லதோ அதை செய்ய சொல்வதுதான் சரி

    பதிலளிநீக்கு
  74. அந்த பணத்தை தொலைத்தது அதிராவாக இருக்குமோ

    பதிலளிநீக்கு
  75. நெல்லை தமிழன் உங்கள் அப்பா மிகவும் நல்லவர் நீங்கள் பொண்ணு பார்ப்பதற்கு லேட்டாக போனதற்கு திட்டினார் . ஆனால் இங்க பாருங்க நான் எந்த பொண்ணையாவது பார்க்க்ப் போனால் என் மனைவி என்னை திட்டுறாங்கோ

    பதிலளிநீக்கு
  76. கில்லர்ஜி.. மீள் வருகைக்கு நன்றி. நண்பர்கள் உங்கள்மீது வைத்துள்ள நல்லெண்ணத்தை அது காட்டுகிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  77. வல்லி சிம்ஹன் அம்மா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எங்க அப்பா, அந்தப் பிரம்பை பின்னால் பிடித்துக்கொண்டு கையை பின்னால் கட்டிக்கொண்டு ஸ்கூல் வாசலில் நிற்பார். லேட்டாக வருபவர்களை பிரம்பு கொண்டு மிரட்ட (அடிக்க மாட்டார், ஓங்குவார்). எனக்கு நிஜமாவே ஓரிரு முறை அடி கொடுத்திருக்கிறார் (லேட்டா உள்ள நுழைந்ததுக்காக)

    பதிலளிநீக்கு
  78. இன்னொண்ணு சொல்ல விட்டுப்போச்சு வல்லி சிம்ஹன் அம்மா. எக்சாம் எழுதற வரைல ரொம்ப கண்டிப்பா எங்க அப்பா இருப்பார். படிக்கணும், வேற எதுலயும் கவனம் போகக்கூடாது என்பதில். எக்சாம் எழுதிமுடித்ததும் அதுக்கு அப்புறம் ரொம்ப ஜாலியா இருப்பார். எழுதின எக்சாம் பற்றி எதுவும் கேட்கமாட்டார். எழுதினபிறகு அதைப்பற்றி ஏன் நினைக்கணும் என்று சொல்வார்.

    பதிலளிநீக்கு
  79. என்ன ஏகாந்தன் சார்... லேட்டா வந்தாலும் நீங்கள் உங்கள் அனுபவங்களை எழுதுவீங்கன்னு நினைத்தேன்... நன்றி

    பதிலளிநீக்கு
  80. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனிமரம்.

    பதிலளிநீக்கு
  81. காமாட்சிம்மா... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    "நல்ல அப்பா என்றால் ஒன்றும் சொல்லாதிருப்பவர்களைத்தான் " - அது எப்படி? நாம சொல்லித்தராம, கண்டிப்பு காட்டாம, பசங்க அவங்களாவே தெரிஞ்சுக்குவாங்கன்னு எப்படி விடறது? ரொம்ப கண்டித்தால், பிற்காலத்துல நம்மீது வெறுப்படைவாங்க. கண்டிக்கவே இல்லைனா, 'நீ கண்டித்திருந்தால் நான் இன்னும் நல்லவனாயிருப்பேன், நல்லாயிருந்திருப்பேன்'னு சொல்லமாட்டாங்களா?

    பதிலளிநீக்கு
  82. வருகைக்கு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன். சின்னப் பசங்களா இருந்தபோது, சும்மா தண்ணி தெளிப்பேன்னு பயமுறுத்துவேன். அப்படியே எப்படி தண்ணியை அவங்க முகத்துல தெளிக்கமுடியும்? லைட்டாத்தான் செஞ்சேன்.

    பதிலளிநீக்கு
  83. மீள் வருகைக்கு நன்றி கீசா மேடம்... அந்த பர்ஸ் விஷயம்தான் சொல்லிட்டேனே.

    உங்கள் தளத்தில் உங்களுடைய அயோத்தி பயணத்தைப் பற்றி வாசித்தேன். இடையிலேயே, 14 நவம்பர் 2013ல் எழுதியிருந்த இடுகையையும் வாசித்து மனம் வல்லி சிம்ஹன் அவர்களுக்காக வருத்தப்பட்டது.

    பதிலளிநீக்கு
  84. அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நாம் செய்யும் செயல்களில் தவறு இருந்தால் அதையும் நான் வெளிப்படையாக பசங்கள்ட சொல்லிடுவேன்.

    "நான் எந்த பொண்ணையாவது பார்க்க்ப் போனால் என் மனைவி என்னை திட்டுறாங்கோ" - அந்தப் பெண்களின்மேல்தான் உங்கள் மனைவிக்கு எவ்வளவு கருணை. தான் பெற்ற 'துன்பம்' (:-)) அவங்களும் படக்கூடாதுன்னு நினைக்கறாங்க போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  85. நெல்லை.. இதனைத் தொடர்வதற்கு நீங்கள் மூன்று பேர்களைக் கூப்பிட மறந்து விட்டீர்களே... (நானும் சொல்ல, நினைவுபடுத்த மறந்துவிட்டேன்)

    பதிலளிநீக்கு
  86. ஸ்ரீராம் - நான் நீங்கள்தான் கூப்பிடணும்னு நினைத்தேன். இதை இனிமேலும் படிப்பார்கள் என்று (இந்த இடுகையையும் என் கமென்டையும்) தோன்றினால், நான் கீழ்க்கண்டவர்களை அழைக்கிறேன்.

    ரஞ்சனி நாராயணன் அவர்கள்
    வல்லி சிம்ஹன் அவர்கள்
    அப்பாதுரை சார்
    ஜீவி சார்

    இவர்கள்தான், தங்கள் அனுபவங்களின்மூலம் எழுதி கௌரவப்படுத்தமுடியும்.

    பதிலளிநீக்கு
  87. //"நல்ல அப்பா என்றால் ஒன்றும் சொல்லாதிருப்பவர்களைத்தான் " - அது எப்படி? நாம சொல்லித்தராம, கண்டிப்பு காட்டாம, பசங்க அவங்களாவே தெரிஞ்சுக்குவாங்கன்னு எப்படி விடறது?//என்னோட புக்ககத்தில் அப்படித் தான்! எதுவுமே சொல்லித் தரக் கூடாது! தானாத் தெரியும்னு சொல்லிடுவாங்க! அதனால் அவங்களுக்கு அவங்க செய்யும் தப்பை நாம் சுட்டிக் காட்டினாலே கோபம் பயங்கரமாக வரும்! வயசிலே சின்னவங்களுக்குக் கூட எதுவுமே சொல்லித் தரக்கூடாது! தப்புச் செய்தாலும் கண்டிக்கவோ, அதைச் சுட்டிக் காட்டவோ கூடாது!

    பதிலளிநீக்கு
  88. கீசா மேடம் - இரண்டு முறைகளிலும் வளர்க்கலாம். ஆனா, பசங்க, அவங்களாகவே கத்துக்குவாங்க என்று விடுவது, என்னைப் பொறுத்தவரையில் தங்கள் பொறுப்பைக் கைகழுவி விடுவது போல. நாம கண்டிக்கும்போதோ அல்லது புத்திமதி சொல்லும்போதோ, நம் அனுபவங்களின் வாயிலாகச் சொல்லுவோம். அதில் தவறுகள் வர நேரிடலாம். ஆனால், கண்டிக்காமல் இருக்கும் பெற்றோரை, குழந்தைகளோ (அவர்கள் வளர்ந்தபிறகு) அல்லது அயலவர்களோ விரும்பமாட்டார்கள்.

    சில சத் சங்கங்களுக்குப் போகும்போது, பயங்கர வால்களை, பசங்க என்ற ஹோதாவில் சில பெற்றோர் அழைத்துக்கொண்டுவந்துவிடுவார்கள். பசங்களை கன்ட்'ரோல் பண்ணவும் மாட்டாங்க. அப்படி இருக்கறவங்களை அழைக்கும்போது 'பசங்களைத் தவிர்த்துவிடவும்' என்று சொல்லித்தான் அழைப்பாங்க. சில குழந்தைகள், இடது கையால் சாப்பிடும். அதனையும் சிலர் சரி செய்வதில்லை. நமக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதனைச் சொல்லித்தான் குழந்தைகளை வளர்க்கணும் என்பது என் கட்சி.

    பதிலளிநீக்கு
  89. உங்கள் வருகைக்கு நன்றி ஆதி. 'கடன் கொடுப்பது உதவி'தான், அதனால் நமக்கு மனஸ்தாபமோ, சங்கடமோ, நட்புக்குக் குந்தகமோ ஏற்படாத வரையில். பொதுவா, எதையும் எதிர்பார்க்காம உதவி செய்வது மிக நல்ல செயல்தான்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!