முன்குறிப்பாய் ஒரு வேண்டுகோள் :
அன்புள்ள சியாமளா அக்கா.. நான் ஒவ்வொரு முறையும் சொல்வதுதான். கதைகள் அனுப்புவதற்கு நன்றி. அப்படி அனுப்பும்போது அதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து, பிழைகள் இருந்தால் திருத்தி, பத்திகள் பிரித்து, கமா, முற்றுப்புள்ளி, பேசுவதைக் குறிக்கும் மேற்குறியீடுகள் ஆகியவற்றை போட்டு அனுப்பவும். - ஸ்ரீராம்.
சியாமளா வெங்கட்ராமன்
"கந்தா
அம்மாவுடைய பொருட்கள் எல்லாம் பெட்டியில் வைத்து விட்டாயா மாத்திரைகளை ஹேண்ட்
பேக்கில் வைத்து ஜிப்பை போடு,"
என உத்தரவு
போட்டுக் கொண்டு அட்சயா வந்தாள். 'எல்லாம் சரியாக வைத்து விட்டேன் அம்மா' என்று
கந்தா கூறக் கேட்ட லட்சுமி முகத்தில் வெளிநாடு போகக்கூடிய வாய்ப்பை நினைத்து
சந்தோஷம் பரவியது
மறுநாள்
காலை காரில் அட்சயா கிரிதரன் பெட்டிகளை ஏற்றிய பின் லக்ஷ்மி அம்மாவின் பெட்டியை
மேலாக வைக்கும்படி அட்சயா கட்டளையிட்டாள்
கார் கிளம்பும் முன் "கந்தா வீட்டை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்" என்று கூறிவிட்டு காரை ஸ்டார்ட் செய்தான் கிரிதரன்.
" என்ன கிரிதர் இங்கே நிற்கிறது கார்?" என்று
லட்சுமி கேட்க,
“அம்மா இனி
இங்குதான் இருக்க போகிறாய் என்று கூறினான்.
"என்னடா
விளையாடுகிறாய் நாம் இப்போது வெளி நாட்டுக்குதானே போகப் போகிறோம் ?" என்று
கேட்க
“நாங்கள்
போகிறோம் நீ இங்கு இருக்கப் போகிறாய் உன்னை இங்கு தான் விட்டு விட்டு போக போகிறோம்" என்று கிரிதரன் சொன்னதும்,
லட்சுமி, “நான்
உன்னுடன் வருகிறேன் இங்கு நான் இருக்க மாட்டேன்" என்று கூற அக்ஷயா கதவை
திறந்து "இறங்குங்கள் கீழே" என கையைப் பிடித்து இறக்கினாள்.
அதற்குள்
கிரிதரன் லட்சுமியின் சாமான்களை எல்லாம் எடுத்துச் செல்ல அங்குள்ள வேலைஆளை
கூப்பிட்டான். "இதெல்லாம் எடுத்துக் கொண்டு தலைவர் அறைக்குச் செல்"
என்று உத்தரவிட்டான்.
சத்யா
லட்சுமியின் கையைப் பிடித்து இழுக்காத குறையாகக் கட்டிடத்தின் உள்ள அழைத்துச்
சென்றாள். கிரிதர் இல்லத்தலைவரிடம், "நான் நேற்று உங்களிடம் போனில்
பேசினேன் இவர்கள்தான் இங்கு சேரப் போகிறவர்" என்று கூறிவிட்டு உடனே பணத்தைக் கொடுத்தான். அவர் ரசீது போட்டுக் கொடுத்ததும் "சரி நான் கிளம்புகிறேன்" என்று கூறிவிட்டு
காரை நோக்கி நடந்தான்.
லட்சுமி, "கிரி என்னைவிட்டு போகாதே" என்று கதற அவன் திரும்பி
பார்க்காமல் காரில் ஏறி காரை ஸ்டார்ட் செய்து கிளம்பி விட்டான். லட்சுமி பிரமை
பிடித்தவள் போல் நிற்க, இல்லத் தலைவி அவர் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டு உள்ளே
அழைத்துச் சென்றாள்.
"மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள் இந்த வாழ்க்கை தான் நமக்கு நிரந்தரம்" என்று கூறி உள்ளே
அழைத்துச் சென்றாள்.
நாட்கள் மாதங்கள் என ஓடியது.
அந்தப் பெண்மணியின் புடவை நழுவ அவருடைய மூஞ்சி தெரிந்தது. அதைப் பார்த்து
லட்சுமி அதிர்ச்சி அடைந்தாள். "சம்பந்தி நீங்களா" எனக் கூறவும் அந்தப் பெண்மணி, "சம்பந்தி நீங்களா?
நீங்கள் யூ எஸ் செல்லவில்லையா?" எனக் கேட்க "இதுதான் எனக்கு யூ எஸ்" என்று
சிரித்துக் கொண்டே சொன்னாள். அதைக் கேட்ட கமலா என்ற பெண்மணி "என்ன சம்பந்தி
சொல்கிறீர்கள்" என்று கேட்க லட்சுமி நடந்த விஷயங்களை ஒன்று பாக்கியில்லாமல் கூறினாள்.
"லட்சுமி நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்" என்று கேட்க "என்
பெண் உங்களுக்கு செய்ததை என் மருமகள் எனக்கு செய்து இருக்கிறாள்" என்று
வருத்தத்துடன் கூறினாள். இருவரும் தங்கள் வருத்தத்தை பகிர்ந்து கொண்டு உள்ளே
சென்றார்கள். இருவரும் மிக ஒத்துமையாக இல்ல வேலைகளை அனைவருடன் சேர்ந்து செய்து மன
நிம்மதியுடன் இருந்தார்கள்.
இல்லத்தின்
ஆண்டு விழா நடைபெற இருந்தது. அதற்கு யாரெல்லாம் இந்த இல்லம் நடத்த உதவியாக
இருக்கிறார்களோ அவர்களை இல்லத் தலைவி விருந்திற்கு அழைத்தாள். விழா சிறப்பாக நடக்க
அனைவரும் ஒத்துழைக்கத் தயாராக இருந்தார்கள். அந்த நேரத்தில் தலைமைச் சமையல்
செய்யும் பெண்மணிக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள்.
இல்லத் தலைவி இதனால் விழாவை எப்படி நடத்துவது என்று கவலை அடைந்தாள் வருபவர்களை
எப்படி சமாளிப்பது என்று புரியாமல குழப்பத்தில் இருந்தாள்.
அதைப்
பார்த்த லட்சுமி தலைவியைப் பார்த்து, "நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?
நானும் கமலாவும் விருந்திற்குத் தேவையான பதார்த்தங்களை நல்ல முறையில் சமைப்போம். ஏனென்றால்
எங்கள் வீட்டில் விருந்திற்கு நாங்கள்தான் சமைப்போம் நீங்கள் கவலைப்பட வேண்டாம்
இங்கு உள்ள மற்றவர்கள் உதவியுடன் நாங்கள் உங்களுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுப்போம்
கவலைப்படாதீர்கள்" என்று ஆறுதல் கூறினார்கள். அது கேட்ட மற்றவர்களும் இல்ல
தலைவியை சமாதானப்படுத்தினார்கள்.
விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. வந்த அத்தனை விருந்தினர்களும் சமையலை ஆகா
ஓகோ என்று புகழ்ந்து தள்ளினார்கள். தங்கள் வீடுகளுக்குத் தினசரி சமையல்
செய்து அனுப்ப முடியுமா என்று இல்லத் தலைவியைக் கேட்க அவர்களும் லட்சுமி,
கமலாவிடம் சம்மதம் வாங்கி தினசரி சாப்பாடு வேண்டுபவர்களுக்கு சப்ளை செய்தார்.
அனைவரும் இவர்களுடைய சமையலை வாங்க ஆரம்பித்தனர். இதனால் அந்த இல்லத்திற்கு வருவாய் வர ஆரம்பித்தது.
அதில் ஒரு பகுதியை லட்சுமி, கமலாவிற்கும் மற்ற உதவி செய்பவர்களுக்கும் இல்லத்
தலைவி பேங்கில் அவர்கள் பெயருக்குக் கணக்கு ஏற்படுத்தி போட ஆரம்பித்தாள். இதனால்
அனைவரும் சந்தோஷம் அடைந்தனர்.
ஒரு நாள் பிற்பகல் சமையல் முடிந்து லட்சுமி, கமலா இருவரும் வாசலில் உள்ள
ஒரு பெஞ்சில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள் அப்போது ஒரு வெள்ளை நிறக்
கார் வந்து நிற்க அதிலிருந்து கிரிதர், அக்ஷயா இருவரும் இறங்கினார்கள். இருவரும் மிக இளைத்து கருத்து
இருந்தார்கள்.
அதைக் கேட்ட லக்ஷ்மி, "நமக்கு ஏது வீடு" என்று கூற, "ஏன்
நாம் வசித்த வீடுதான். கந்தா தான் சுத்தமாக வைத்திருப்பானே" என்று கூற, "உன்
குணம் தெரிந்துதான் உன் அப்பா எனக்கே தெரியாமல் என் பெயருக்கு அந்த விட்டை எழு
எழுதி வைத்திருக்கிறார். நீ வெளிநாட்டிற்குப் போனதும் நான் இங்கு இருப்பது
தெரிந்து நம்முடைய வக்கீல் என்னைப் பார்க்க வந்தார். அப்போது எல்லா விஷயங்களையும்
கூறினார். நான் அவர் மூலம் நம் வீட்டை விற்று அந்தப் பணத்தில் இல்லத்திற்கு நான்கு
அறைகள் கட்டிக் கொடுத்து விட்டேன். ஏனென்றால் என் வாழ்நாள் முழுவதும் நான்
இங்கு தான் இருக்க போகிறேன்" என்று கூறி சிரித்தாள். அதைக் கேட்ட கிரிதர், "என்னை
கேட்காமல் எப்படி விற்கலாம்" என்று கேட்க, "அதில் ஏகபோகமாக நான் தான்
வாரிசு என்று உன் அப்பா உன் குணம் தெரிந்து எழுதி உள்ளார்" என்றாள்.
"நான் அந்த வீட்டை விற்று என் பிசினஸை தொடங்குவதற்கு என்று நினைத்து
வந்தேன். இப்படி செய்து விட்டாயே" என்று அம்மாவை வசை பாடினான். அதற்கு
லட்சுமி, "அன்று என்னை யூ எஸ் அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றிச் சென்றாயே
அதான் கடவுள் உன்னை ஏமாற்றி விட்டார்" என்று சிரித்துக் கொண்டேகூறினாள்.
"நாங்கள் தெரியாமல் செய்த தவறை மன்னித்து என்னுடன் நீயும் கமலா அம்மாவும்
வாருங்கள்" என்று கூப்பிட்டான். "நாங்கள் இருவரும் வருவதாக இல்லை
எங்களுக்கு இங்கே அனைத்து மரியாதைகளும் உள்ளன. மேலும் இருவரும் சுயமாகச் சம்பாதிக்கிறோம்
அந்தப் பணத்தை எங்களுக்காக இல்லத் தலைவி பேங்கில் போட்டு இருக்கிறார்கள். அது கணிசமாகச்
சேர்ந்த பின் இருவரும் இந்த இல்லத்திற்கு மேலும் சில அறைகளைக் கட்டிக் கொடுப்பதாக
இருக்கிறோம் ஏனென்றால் எங்களைப் போன்று பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்குத்
தங்கும் இடமாக இருப்பதற்கு என முடிவு செய்துள்ளோம்.
மரங்கள் எப்படித் தன் இலைகள் பழுத்து விழுந்ததும், தான் பட்டுப் போகாமல் மீண்டும் துளிர்த்து கம்பீரமாக அடுத்த வசந்த காலத்தை துவங்குகிறன! அதேபோல் நாங்களும் எங்கள் பழைய வாழ்க்கையை மறந்து எங்களால் முடிந்த அளவு உழைத்து இந்த இல்லத்திற்கு உதவ நினைத்துள்ளோம். இதனால் நாங்கள் மிக மகிழ்ச்சியாக உள்ளோம். இனி எங்களுக்கு வசந்த காலம் தான்" என்று கூறிக்கொண்டு லட்சுமியும் கமலாவும் கருணை இல்லத்தின் உள்ளே சென்றார்கள்
பின்குறிப்பாய் ஒரு வேண்டுகோள் :
அன்புள்ள சியாமளா அக்கா.. நான் ஒவ்வொரு முறையும் சொல்வதுதான். கதைகள் அனுப்புவதற்கு நன்றி. அப்படி அனுப்பும்போது அதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து, பிழைகள் இருந்தால் திருத்தி, பத்திகள் பிரித்து, கமா, முற்றுப்புள்ளி, பேசுவதைக் குறிக்கும் மேற்குறியீடுகள் ஆகியவற்றை போட்டு அனுப்பவும். - ஸ்ரீராம்.
=======================================================================================
ரங்கராஜன் என்கிற பெயருடைய மூன்று பிரபலங்கள் உண்டு. ஒன்று சுஜாதா ரங்கராஜன். இன்னொருவர் வாலி ரங்கராஜன். இருவருமே ஸ்ரீரங்கத்துக் காரர்கள்!


அவர்கள் இருவரும் வேறு பெயரில் எழுதினார்கள் என்றால் மூன்றாவது, ஆனால் முதலாம் ரங்கராஜன் வெவ்வேறு பெயர்களில் எழுதினர்.
அவர்தான் நம்ம ரா கி ர.
அவர் எழுதிய கதைகளில் ஒன்று "கோஸ்ட்". அதற்கான முன்னுரையை குமுத மூவரில் ஒருவரான ஜ ரா சு கொடுத்தார். இந்தக் கதையைப் படிததவர்கள் எல்லாம் குரல் கொடுங்க...!
பயபக்தியான நாவல்!
'பேய் உண்டா இல்லையா?' என்ற கேள்வியை ஒருத்தரிடம் பகலில் கேட்டால் “அதெல்லாம் ஒண்ணுமில்லை, மனப்பிரமை “ என்பார், சாயந்தரம் இருட்டுகிற போது கேட்டால், 'நல்ல விஷயமா ஏதாவது பேசுவோமே’ என்பார். நடு ராத்திரியில் கேட்டால், 'ப்ளீஸ். எதுவும் பேசாதே, எனக்குப் பயமாக இருக்கு’ என்பார்.
இருட்டு - வெளிச்சம், சீதம் - உஷ்ணம், சுகம் - துக்கம், லாபம் - நஷ்டம், வெற்றி - தோல்வி, பிறப்பு - இறப்பு என்ற இயற்கையின் அருமைகளை யாரும் மறுக்க முடியாது. கோஸ்ட்கள், பிசாசுகள், ஆவிகள் மீடியம்கள், ஸ்பிரிட் ஆகிய விஷயங்களும் அப்படித்தான் என்கிறார்கள். இறப்புக்கு முன் என்னும் நிலை இருந்தால் இறப்புக்குப் பின் என்ற ஒரு நிலையும் இருக்கத்தான் இருக்கும்.
எத்தனையோ பேர் கோஸ்ட்களை, ஸ்பிரிட்டுகளைப் புகைப்படம் பிடித்திருக்கின்றனர். அவை தெளிவாக இல்லையென்றாலும் பதிவாகியுள்ளன. காமெரா ட்ரிக் என்று அந்தப் புகைப்படக் கலைஞர்களை அவமதிக்க இயலாது, ஏனெனில் அவர்கள் மலிவான தந்திரம் செய்கிற சாதாரணவர்கள் அல்ல. விஞ்ஞானிகள், ஒவ்வொரு அசைவுக்கும், காரண காரிய ஆதாரத்தோடே கருத்தை வெளியிடுகிற ஆராய்ச்சியாளர்கள்.
தமது இந்த நாவலில் (பித்ருலோகம் போல ஸ்பிரிட்டு லோகம்), 'மீடியம்', (‘ஆவித் தொடர்பு’) பற்றி திரு. ரா.கி.ர. அவர்கள் ஓர் இடத்தில் அருமையான, ஆணித்தரமான விளக்கம் அளித்துள்ளார்.
“மின்விசிறி வேகமாகச் சுழலும் போது அதனுடைய இறக்கைகள் நமக்குத் தனித்தனியே புலப்படுவதில்லை, ஒரே மொத்தையாகத்தான் தெரிகிறது. காரணம், நம் கண்ணின் சக்தியும் விசிறியின் வேகமும் ஒன்றாக இல்லை. அதாவது இரண்டும் ஒரே வேவ் லெங்க்த்தில் இல்லை. ஆகவே தனித்தனியே தெரியவில்லை.”
பெரும்பாலோருக்கு அப்படித்தான். ஆனால் வேறு சிலருக்கு, கண்ணின் சக்தி, மனோ சக்தி ஆகியவற்றால் விசிறியின் எத்தனை வேகத்தையும் சமாளித்து தனித்தனியே சிறகுகளைக் காண முடியும்.
சூட்சுமமான பல சக்திகள் இப்படித்தான். சராசரி மனிதராகிய நமக்குப் புலப்படாத சில தோற்றங்கள் வேறு சிலருக்குப் புலப்படும்.
கோஸ்ட் உண்டா இல்லையா என்பதை ஆராயும் நூலாக திரு. ரா.கி.ர, இந்த நாவலை எழுதவில்லை, ஆவிகளின் வழக்கறிஞராக அவர் வாதாடித் தம் நேரத்தையும் வாசகர் நேரத்தையும் வீணாக்கவில்லை, நிலவி வரும் ஆவியுலக நம்பிக்கையை இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளுக்குப் பின் புலமாக அமைத்து வெகு அற்புதமாகப் புனைந்துள்ளார்.
புதுமையான தொடர் கதையாக அவர் இதை எழுதிக் கொண்டிருந்த போது அவரோடு அடுத்த நாற்காலியில் உட்கார்த்து நான் எட்டி, எட்டிப் பார்த்து அவர் எழுத எழுதப் படிப்பேன்.
எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு என்னை மறு படியும் பயந்தாங் கொள்ளியாக்குவதென்று நண்பரும் என் இலக்கிய குருமார்களின் முக்கியமானவருமான திரு. ரா.கி.ர. தீர்மானித்து கோஸ்ட் நாவலுக்கு முன்னுரை எழுதும்படி ஆணை இட்டு விட்டார்.
முப்பது வருடத்துக்கு முன் குமுதம் இதழில் தொடர் கதையாக வந்த போது படித்ததை மறுபடி படிக்கிறேன். எனது மடிந்த முடிகள் குத்திட்டுச் சிலிர்த்து நிற்கின்றன. வெறுமே காமாசோமா மிரட்டல் அல்ல. ரா.கி.ர.வின் பண்பட்ட எழுத்து பய உணர்ச்சியை நமது நரம்புகளில் இஞ்செக்ட் செய்யும் விதத்தில் கலை அழகுடன் கொப்புளிக்கிறது.
ஆவி செய்யும் ஆபரேஷன் பற்றிய கதைகளைப் படிக்கும் போது ரா.கி.ர. அவர்கள் எழுத்தாளரா, எம்.எஸ். பட்டம் பெற்ற சர்ஜனா என்ற பிரமை ஓரொரு வாசகருக்கும் ஏற்படும். ஒரு ஆபரேஷன் எப்படி நடைபெறுகிறது. அங்கே கூடியுள்ள டாக்டர்கள் என்ன பேசிக் கொள்வார்கள், செயல்பாடுகள் என்ன, எந்த அறுவைக்கு என்ன கருவி, அதைப் பயன்படுத்துவது எப்படி - இந்த விவரங்களெல்லாம் மண்டையோட்டு வித்தை காட்டும் பேய்க் கதை ஆசிரியர்களுக்கு வேண்டுமானால் அவசியமில்லாதிருக்கலாம்.
'மெனக்கெடுதல்' என்று ஒரு வார்த்தை உண்டு. எடுத்துக் கொண்ட விஷயத்தை முழு முனைப்புடன் வெளிப்படுத்து தலைத் தன் வெற்றி ரகசியமாகக் கொண்டுள்ள ரா.கி.ர.வின் 'கோஸ்ட்’ தமிழ் நாட்டில் மிகப் பரபரப்பும் சுவாரசியமும் ஏற்படுத்திய நாவல்.
தமது கற்பனையில் உதித்த சம்பவங்களுக்கு ஆதாரம் தேடி. அவர் அலைந்த லைப்ரரிகள் ஏராளம். அனுபவஸ்தர்களிடம் துருவித் துருவி விசாரித்ததற்கு அளவில்லை. பயம் கிளப்பும் அந்த கோஸ்ட் கதைகளின் அடி நாதத்தில் அந்தப் பயத்தைக்களையும் வழிகளையும் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.
மந்த்ராலய மகானின் சக்தி மனித குலத்துக்கு எப்படிக் கேடயமாக விளங்குகிறது, கந்த சஷ்டிக் கவசம் எவ்வாறு துணை செய்கிறது, ஆஞ்சநேயர் எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதெல்லாம் பிரசாரமாக தரப்படாமல் பிரசாதமாகத் தரப்பட்டுள்ளன.
- ஜ.ரா. சுந்தரேசன்
சேத்துப்பட்டு
சென்னை - 31
ஜ.ரா. சுந்தரேசன்
(ரா.கி.ர.வின் சீடர்களில் இவரும் ஒருவர்)


வசந்தகாலம் சிறுகதை நல்லா இருக்கு, இருந்தாலும் நாடகம் மாதிரி இருக்கு, இயற்கையா இல்லை.
பதிலளிநீக்குஊரில் ஒரே ஒரு முதியோர் இல்லமா? நல்லா சமைக்கும் அம்மாக்களை, எப்படியாவது தங்களுடன் அழைத்துச் சென்று தங்களுக்குக் கிடைக்கும் இலவச சேவையை விட்டுவிடும் மனம் வருமா? கூடவே குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதும்.
வாங்க நெல்லை.. சியாமளா அக்கா இதை எப்போது பார்ப்பார்கள் என்று தெரியாது. பதில் கொடுப்பாரா தெரியாது. கொடுத்தாலும் மொத்தமாக ஒரே பதிலாக கொடுத்து விடும் வாய்ப்புகள் உண்டு.. இவர் எழுதிய இன்னொரு கதையும் முதியோர் இல்லம் கதைதானோ...
நீக்குஇப்போதைல்லாம் நடுத்தர வர்கத்தினரின் குழந்தைகள் வெளிநாட்டு வாழ்க்கையை விரும்பிச் சென்றுவிடுவதால், அம்மா அப்பா வசிக்கும் வீடே அவர்களுக்கு முதியோர் இல்லம் ஆகிவிடுகிறதே.
பதிலளிநீக்குஎன் அண்ணனிடம் கேட்டேன், பிற்காலத்தில் ரிட்டர்மென்ட் ஹோம் போகணும்னு எண்ணம் இருக்கா என. அவன் சொன்னான், இந்த பெரிய டவரில் இருப்பவர்களில் அனேகமா எல்லோருடைய மகன்களும் வெளிநாட்டில். இதுவே எங்கள் ரிடயர்மென்ட் ஹோம் என்றான்.
ஆமாம். அப்படிதான் ஆகிக்கொண்டு வருகிறது. பாஸின் சித்தி மகன்கள் வெளிநாடு போகும் வாய்ப்பு இருந்தும் சென்று உடனே வ்நதர்கள். அங்கேயே செட்டில் ஆகவில்லை. ஒரு ஆச்சர்யம் என்ன என்றால் மருமகள்கள் இருவரும் தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த நல்ல வேலையை மிக நல்ல வேலையை விட்டு விட்டு குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துகிறாரார்கள்.
நீக்குwonderful!
நீக்குஎங்க வீட்டிலும் என் சொந்த அண்ணா பையர், இன்னொரு பெரியப்பா பிள்ளை(அண்ணா) பையர் இன்னும் சிலர் வெளிநாடு போக மறுத்துவிட்டார்கள். அவ்வப்போது போய் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ வேலைக்காகப் போவார்கள்.
நீக்குகுமுதம் ஆசிரியர் குழு பற்றிய செய்திகளை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. பிறகு வருகிறேன்.
பதிலளிநீக்குஆமாம் . சுவாரஸ்யம். ஆனால் பாருங்கள் குமுத ரசிகரை இன்னும் காணோம்!
நீக்குபாக்கியம் ராமசாமியை விட ஜ.ரா.சுந்தரேசனைத் தான் எனக்குப் பிடிக்கும். ரா.கி.ர. வைப் (சுஜாதாவையும்) பற்றியே எழுதி எழுதி சலிக்க வைத்தவர்கள் ஜ.ரா.சு -- புனிதன் பற்றி எழுத முன் வரவேண்டும். அப்பொழுது தான் சொல்லாத விஷயங்களைப் பற்றியெல்லாம் சொன்னேனே என்ற பெருமையும் வாசகர்களுக்கு மாற்று வாசிப்பை அறிமுகப்படுத்திய சிறப்பும் கிடைக்கும்.
நீக்குரெண்டு பேரும் ஒருத்தர் தானே. எனக்கு ஜராசு முகநூலில் ரவாதோசை பத்தி எழுதிய பதிவும் அதன் பின்னர் ரவாதோசை ரசிகர் சங்கம் தோன்றியதும் நான் உள்பட அதில் உறுப்பினர் ஆனதும் மறக்கவே முடியாத ஒண்ணு. இந்த முகநூல், வலைப்பக்கங்கள் தயவில் கடுகு சார், ஜராசு அவர்கள், பாரதி மணி ஐயா போன்றவர்கள் அறிமுகமும் நட்பும் கிடைச்சது. இன்னும் இருக்காங்க.
நீக்குராகிர-வுக்கு ஜராசு தந்திருக்கும் முன்னுரை விளக்கவுரையாக மிளிர்கிறது! இப்படி ஒரு முன்னுரை அந்த நாவலுக்குப் பொருந்துமாயிருக்கலாம். நான் வாசித்ததில்லை.
பதிலளிநீக்குஹிஹிஹி... நானும் வாசித்ததில்லை. இப்போதுதான் எடுத்து வைத்திருக்கிறேன். வாங்க ஏகாந்தன் ஸார்.
நீக்குகோஸ்ட் குமுதத்தில் வந்த காலத்தில் படித்திருக்கிறேன்
நீக்குபெயரெல்லாம் கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் நாவலை வாசிச்சேனா இல்லையானு தெரியலை. நீங்க கொஞ்சமானும் சுருக்கிச் சொல்லி இருக்கக் கூடாதோ? அது சரி, இணையத்தில் கிடைக்குமா?
நீக்குசியாமளா மாமிக்கே உரிய டிபிகல் ஸ்டைல் கதை.
பதிலளிநீக்குஆமாம். ஆமாம். வாங்க பானு அக்கா.
நீக்குகோஸ்ட் கதை படித்த நினைவு இல்லை. முன்னுரை அமர்க்களம்!
பதிலளிநீக்குபடித்திருக்க வாய்ப்பில்லை. ஏன் சொல்கிறேன் என்றால் படித்திருந்தால் உங்கள் இயல்புக்கு மறந்திருக்க மாட்டீர்கள். அதிலிருந்து சில பகுதிகளை மனப்பாடமாக எடுத்து விடுவீர்கள்.
நீக்குஇந்தியா வந்து விட்டீர்களா?
முருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம்.
நீக்குநலம் வாழ்க..
பதிலளிநீக்குவாழ்க...
நீக்குமுதியோர் இல்லம் கதைகள் அலுத்து விட்டன. கொஞ்ச நாளைக்கு எ பி யில் தடை செய்யணும் என்று தோணுகிறது. கதை நடை கொஞ்சம் மாற்றி அமைத்து விறுவிறுப்பு என்ற பெயரில் ஒரே ஓட்டமாக செல்லாமல் கதையை நிதானமாக சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குJayakumar
// முதியோர் இல்லம் கதைகள் அலுத்து விட்டன. கொஞ்ச நாளைக்கு எ பி யில் தடை செய்யணும் என்று தோணுகிறது.//
நீக்குஹா. ஹா.. ஹா.. இனி ஃபில்டர் செய்து விடுகிறேன்!!
விறுவிறுப்புக்காக இல்லை. சட்சட்டென அடுத்த கட்டத்துக்கு விரைவது சியாமளா மாமியின் பாணி!
முன்னுரை சூப்பர். ராகிர வைப் பற்றியும் நாவலைப் பற்றியும் நல்லா எழுதியிருக்கார் ஜராசு. அடுத்த எழுத்தாளரைப் பாராட்ட நல்ல மனமும் அனுபவித்து வாசிக்கும் ஆர்வமும் வேண்டும். நல்ல பகிர்வு
பதிலளிநீக்குஅவர் ரா கி ர வின் சீடர் வேறு.. கேட்க வேண்டுமா?
நீக்கு//நான் ஒவ்வொரு முறையும் சொல்வதுதான்....// வேறு எந்த வழியில் நீங்கள் கதை படித்ததை உறுதி செய்துகொள்வது ஶ்ரீராம்? ஹா ஹா ஹா
பதிலளிநீக்குGrrrrrrrrrr...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வசந்த காலம் சிறுகதை நன்றாக உள்ளது. தங்கள் வாழ்வுக்கேற்ற வசந்த காலங்களை தேடிச் செல்லும் இளைய தலைமுறைகளுக்கு ஒரு பாடமாக கதையை அமைத்து இருக்கிறார் கதாசிரியர் சியாமளா வெங்கட்ராம் அவர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.
கோஸ்ட் கதை படிக்கும் போதே மிக பயத்தை உண்டு பண்ணும் என நினைக்கிறேன்.ஆனாலும், படிக்கும் ஆவலை ஐ. ரா அவர்கள் எழுதிய முன்னுரை உண்டாக்கி விட்டது. . இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்.? இங்கு அருகில் உள்ள புத்தக கடைகளில் தமிழ் புத்தகங்கள் கிடைப்பதே அரிதாக உள்ளது. இன்றைய இரு பகிர்வுகளும் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.. உங்களிடமிருந்து இங்கு படைப்புகள் வந்து ரொம்ப நாட்களாகிவிட்டன.... வீ ஆர் வெயிட்டிங்.
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குஉங்களின் அன்பான காத்திருப்புக்கு மிக்க நன்றி. நானும் என் கற்பனையில் கலந்து சில கதைகள் எழுதி எல்லாம் பாதியாக நிற்கிறது. ஒரு கோஸ்ட் கதையும் அதில் அடக்கம். அதை எப்போது எழுதி முடிப்பேனோ தெரியவில்லை.? நானே கோஸ்டாக மாறி வந்துதான் அதை எழுதி முடிப்பேன் என எனக்குள் சொல்லிக் கொண்டு உள்ளேன்:))
எனக்கும் இங்கு கதைகளை படிக்கும் போது என் (முடிக்கப்படாத) . கதைகளை எழுத வேண்டுமென ஆவல் தோன்றுகிறது. இப்போது உங்கள் கருத்தும் அதை, அந்த எண்ணங்களை வலியுறுத்துகிறது. எல்லாம் இறைவன் சங்கல்பம். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கதை மட்டுமா கேட்கிறேன்? சமையல் குறிப்பு, நான் படிச்ச கதை, இல்லை ஏதாவது எண்ணங்கள்.... எங்கு வேண்டுமானாலும் அதை நுழைத்து விடுவேனே!
நீக்குஓ.. அப்படியா? புரிந்து கொண்டேன். கண்டிப்பாக எழுதி அனுப்புகிறேன். உங்கள் ஊக்கம் மிகுந்த வரவேற்புக்கு மிக்க நன்றி சகோதரரே. 🙏.
நீக்குமுடிக்கபடாத கதையை copy செய்து, Chat GPTயில கொடுத்து மீதி கதை அவுட் லைன் கொடுங்க - அது மீதி கதையை எழுதிவிடும்!
நீக்குஇதெல்லாம் இருக்கா? நான் இந்தப்பக்கமெல்லாம் தலை வைச்சுக் கூடப் படுக்கிறதில்லை. :))) ஏனோ ஒரு வெறுப்பு. அதீதமான தொழில் நுட்பமும் ஆபத்து என்னும் உணர்வு.
நீக்குகதை ஓகே. கரு நன்றாக இருந்தாலும், பெரிதாகச் சொல்ல எனக்கு எதுவும் தோன்றவில்லை. இதே போன்ற கருவில் தான் நம்ம நாபா அவர்களின் பெண் மீரா அவர்கள் திரு இராயசெல்லப்பா நடத்திய கதைப் போட்டியில் எழுதியிருந்தார்/ ஸ்ரீராம் நீங்க எழுதி பங்குபெற்று பரிசு பெற்ற அத்தொகுப்பில்.
பதிலளிநீக்குகீதா
மீரா எழுதியதா? ஸ்ரீராம் அவருடைய நட்பு வட்டத்தில் இருக்காரே? முடிஞ்சால் பகிர்ந்துக்கோங்க ஸ்ரீராம்.
நீக்குஸ்ரீராம் உங்கள் முன் குறிப்பு, பின் குறிப்பு!! வேண்டுகோள் apt.
பதிலளிநீக்குகீதா
ஒரு வழியாக படித்து விட்டேன்...
பதிலளிநீக்குஒன்றும் தெரியாத நான் என்ன சொல்வது?..
சியாமளா வெங்கட்ராமன் தன் வழக்கமான பாணியில் எழுதி இருக்கும் இந்தக் கதைக்கரு பல உண்மைச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டது தான் இல்லையா? டெல்லி ஏர்போர்ட்டில் வயதான படிப்பறிவு அதிகம் இல்லாத தாயை ஏமாற்றிவிட்டு அம்பேரிக்கா போன பிள்ளையையும், அந்தத் தாயைக் கண்டு விஷயங்கள் தெரிந்து கொண்டு நல்லதொரு முதியோர் இல்லத்தில் சேர்த்த காவலரையும் நினைவூட்டுகிறது. ஆனால் கதை தொடங்கிய உடனேயே அடுத்த பத்தியில் லக்ஷ்மி வெளிநாடு போவதைப் பற்றிப்படிச்சதுமே கதைப் போக்கு புரிந்து விடுகிறது. நல்லவேளையா நமக்கெல்லாம் இப்படியான பிள்ளைகளோ, மருமகள்களோ இல்லைனு மனதில் சாந்தியும் ஏற்பட்டது/ஏற்படும்./ஏற்படுகிறது.
பதிலளிநீக்குகோஸ்ட் - ஜ ரா சு அவர்களின் முன்னுரை மிக அருமை.
பதிலளிநீக்குகீதா
பதிலளிநீக்கு//சத்யா லட்சுமியின் கையைப் பிடித்து இழுக்காத குறையாகக்//
இம்மாதிரி ஸ்டீரியோ டைப் கதைகள் எங்கள் ப்ளாகில் நிறையப் படிச்சாச்சு. திருமதி சியாமளா ஒரு இடத்தில் மருமகள் பெயரைத் தன்னையும் அறியாமல் மாத்தி இருக்கார். இது ஒரு கவனக்குறைவு தான். கிட்டத்தட்ட இதே கதைக்கருவில் உள்ள இன்னொரு கதையும் வாட்சப், முகநூல் எனச் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அதில் சொந்த மாமியார் இல்லை. மாமியாரின் மாமியார். இருவருக்கும் அதி பயங்கர ஒற்றுமை. ஆனால் புதுசாக வந்த மருமகளோ மாமியார் பரவாயில்லை. அவள் மாமியார் பிடுங்கல்னு சொல்லி கணவன் மூலம் பாட்டிக்கு முதியோர் இல்லம் செல்லத் தயார் பண்ண, விஷயம் தெரிந்து கொண்ட மாமியார் தன் மாமியாரை விட்டுக் கொடுக்காமல் தானும் கூடவே சென்று ஒரு வீடு பார்த்துத் தான் முன்னர் செய்த காடரிங் தொழிலைத் தொடங்கிப் பணக்காரர்கள் ஆவதுடன் அவர்களே ஒரு முதியோர் இல்லமும் தொடங்குவார்கள். பின்னர் என்ன? டிட்டோ, டிட்டோ, டிட் டொ மருமகள் கர்ப்பமாக ஆகியிருக்கத் துணைக்குக் கூப்பிடும் பிள்ளையையும், மருமகளையும் நான் சமைத்துத் தருகிறேன். பணம் கொடுத்துவிடு. எனக்கு இங்கே பல பெண்கள், பிள்ளைகள், மருமகள்கள் என இருக்கின்றனர். நான் அவங்களுக்கும் செய்யணும் இல்லையா? என்பாள் அம்மா. இத்தோடு அது முடியும்னு நினைக்கிறேன். வரேன். சார்ஜ் இல்லை லாப்டாப்பில்.
இதே கதைக்கருவில் உள்ள இன்னொரு கதையும் வாட்சப், முகநூல் எனச் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அதில் சொந்த மாமியார் இல்லை. மாமியாரின் மாமியார். இருவருக்கும் அதி பயங்கர ஒற்றுமை. ஆனால் புதுசாக வந்த மருமகளோ மாமியார் பரவாயில்லை. அவள் மாமியார் பிடுங்கல்னு சொல்லி கணவன் மூலம் பாட்டிக்கு முதியோர் இல்லம் செல்லத் தயார் பண்ண, விஷயம் தெரிந்து கொண்ட மாமியார் தன் மாமியாரை விட்டுக் கொடுக்காமல் தானும் கூடவே சென்று ஒரு வீடு பார்த்துத் தான் முன்னர் செய்த காடரிங் தொழிலைத் தொடங்கிப் பணக்காரர்கள் ஆவதுடன் அவர்களே ஒரு முதியோர் இல்லமும் தொடங்குவார்கள்.//
நீக்குகடவுளே! இதுவும் திரு இராயசெல்லப்பா அவர்கள் நடத்திய கதைப் போட்டியில் வென்ற கதை.
கீதா
பின்னர் என்ன? டிட்டோ, டிட்டோ, டிட் டொ மருமகள் கர்ப்பமாக ஆகியிருக்கத் துணைக்குக் கூப்பிடும் பிள்ளையையும், மருமகளையும் நான் சமைத்துத் தருகிறேன். பணம் கொடுத்துவிடு. எனக்கு இங்கே பல பெண்கள், பிள்ளைகள், மருமகள்கள் என இருக்கின்றனர். நான் அவங்களுக்கும் செய்யணும் இல்லையா? என்பாள் அம்மா.//
நீக்குஅடப் பாவி! லோகு பிரசாந் எழுதிய அக்கதையில் இப்படி கூடச் சேர்த்து யாரோ விட்டிருக்காங்களா?
கீதா
அதை ஏன் கேட்கறீங்க? முகநூலில் மட்டும் இது பலரால் அவங்க எழுதினது போலப் பகிரப்பட்டிருக்கிறது. உண்மையில் யார் எழுதினது என்பது எனக்குத் தெரியாது.
நீக்குகோஸ்ட் கதை வாசிப்பதற்கு எடுத்த நினைவு இருந்தது. அப்பாவுக்கு எடுத்துக் கொடுத்துவிட்டு என் ஃபோல்டரில் போட்ட நினைவு. போய்ப் பார்த்தேன். இருக்கிறது. வாசித்துவிட வேண்டும்.
பதிலளிநீக்குகீதா
If possible please share with me.
நீக்குபாலகுமாரன் உட்படஎழுதிய இந்த மாதிரி வயதானோர் அடைக்கலமாகும் விடுதிகளைப் பற்றிய கதைகளை வாசிக்க நேர்ந்தாலும் சி.வெ. அவர்களின் கதையின் முடிவு வித்தியாசமாக இருந்தது. நீங்களெல்லாம் பத்திரிகைகளில் கதைகள் பிரசரமாவதற்கான நடைமுறை தந்திரங்களைக் கற்று வெகுஜன வாசிப்புக்கு உங்கள் படைப்புகளை உட்படுத்த வேண்டுமென்பது எனது விருப்பம்.
பதிலளிநீக்குஇது முன்னரே பலரும் எழுதி இருந்த ஒரு முடிவு தான். புதுசா எல்லாம் இல்லை. அநேக முதியோர் இல்லங்களில் சமைப்பவர் வரவில்லை எனில் அங்கே இருப்பவர்களில் சிலர் முறை போட்டுக் கொண்டு சமைப்பதும், பரிமாறுவதும், பாத்திரங்கள் சுத்தம் செய்வதும் உண்டு எனச் சொல்லி இருக்கின்றனர்.
நீக்குஇன்றைக்கு முதியோர் இல்லத்தில் அறைகள் கட்டிவிட்ட அந்தப் பெண்மனி நாளைய காலகட்டத்தில் அந்த முதியோர் இல்லத்திற்கே பங்குதாரர் ஆகப்போகிறார், தெரியுமா சேதி?
நீக்குஉழைப்பிற்கேற்ற பரிசு தராமல் காலம் விடாது. இந்த இறைவனின் கருணை தெரிந்து தான் சி.வெ. இந்தக் கதையே எழுதியிருப்பார் என்பது என் அனுமானம்.
இத்தனை வயசுக்கு மேல் பணம் வந்து என்ன செய்ய முடியும்? கணவனும் இல்லாமல், குழந்தைகளும் இல்லாமல் பணத்தை மட்டும் சேர்த்து வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? மத்தவங்களுக்குக் கொடுத்து மனதைத் தேத்திக்கலாம். அதுக்கு இப்படி உழைச்சுச் சேர்க்கணும்னு எல்லாம் இல்லையே. அது இதெல்லாம் இல்லாமலேயே செய்ய முடியும். வயதான காலத்தில் எல்லோராலும் அடுப்புடனும், சமையலுடனும் தொடர்ந்து செய்ய முடியாது. இது தான் யதார்த்தம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகதை பணம் கொடுக்கும் முதியோர் இல்லத்தில் எல்லா வேலைகளுக்கும் வேலை ஆட்கள் இருப்பார்களே ! கதையில் இல்லம்வேலைகளை இருவரும் பார்த்து கொண்டு மகிழ்வாக இருந்தர்கள் சமையல் ஆளுக்கு உடம்பு சரியில்லை என்று இவர்கள் சமைத்தார்கள் என்று எல்லாம் வருகிறதே!
பதிலளிநீக்குகதை படிக்க நன்றாக இருக்கிறது.முதியவர்களுக்கு கையும்,காலும் திடமாக இருக்க வேண்டும். மனமும் திடமாக இருக்க வேண்டும்.
இதெல்லாம் அதிர்ஷ்டசாலிகளான சிலருக்கு மட்டுமே வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்புகள். முதியோரின் நலன் காக்கும் முதியோராய் இவர்களும் நாளை துவங்க இருக்கும் முதியோர் இல்லத்திற்கு ஆரம்ப பயிற்சியாய் இதெல்லாம் அமைந்தால் அது வரவேற்க வேண்டிய விஷயம் தானே?..
நீக்குகோமதி அரசு, ஒரு சில முதியோர் இல்லங்களில் அங்கே தங்குபவர்கள் ஒவ்வொருத்தருக்கும் சில பொறுப்புகள் உண்டு. எங்க உறவுப் பெண்மணி (இப்போ உயிரோடு இல்லை.) கோவையில் பிரபலமான முதியோர் இல்லத்தில் தங்கி இருந்தார். கடைசியில் மன நலம் பாதிக்கப்பட்டுக் கஷ்டப்பட்டு வெளியேறி உறவினர்களை எல்லாம் இம்மாதிரி இல்லத்தில் சேர்ந்து என்னைப் போல் கஷ்டப்படாதீர்கள் எனச் சொல்லிக் கொண்டிருப்பார். இப்போத்தான் ஆறு மாதம் முன்னர் இறந்து போனார். என்னை விட ஓரிரு வயது மூத்தவர்.
நீக்குகோஸ்ட் முன்னுரை நன்றாக இருக்கிறது படிக்க தூண்டும் விதமாக இணையத்தில் கிடைத்தால் படிக்க வேண்டும்.
பதிலளிநீக்கு