வியாழன், 14 ஜனவரி, 2021

அடைசல் இல்லம் - குப்பை வீடு

 வீடு எப்பவும் அடைசலா, குப்பையாக  காட்சி அளிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  

இதென்ன கேள்வி?  அப்படி இருக்கக் கூடாது என்றுதான் சொல்வீர்கள்.    

எவ்வளவு சுத்தம் செய்தாலும் அடைசலாகவே காட்சி அளிக்கும்.  இரண்டு நாட்கள் கூட அதை மெயின்டெயின் செய்ய முடியாது.  உதாரணமாக ஒரு நாற்காலியை ஓரமாகப் போடுகிறோம் என்று வையுங்கள்...   முதலில் அதில் ஒரு புடைவை தொங்கும்.  அப்புறம் ஒரு துண்டு.   அப்புறம் வேறு ஏதாவது ஒரு பொருள்..   அப்புறம் அதில் உட்கார முடியாத அளவு வெவ்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.   ஒரு ஸ்டூல் இருந்தால் அதன்மேல் சில புத்தகங்கள், அல்லது பாத்திரங்கள்..  அது அது அதன் உண்மையான உபயோகத்தை விட இந்த மாதிரி உபயோகத்துக்குதான் உதவும்!

பீரோக்களின் மேல்பகுதிகள், மேஜையோ எங்கும் கண்ணில் பட்டுவிடக் கூடாது.  அதன்மேல் சம்பந்தமில்லாத பொருட்கள் அமர்ந்தவண்ணம் இருக்கும்.  நான் என் துணிகளை பீரோவில் வைத்திருந்தாலும், இந்தக் கொரோனா காலத்தில் போடுவதற்கு என்று ஐந்து செட் துணிகளை மட்டும் வெளியில் வைத்திருக்கிறேன்.  என் கட்டிலில் ஓரமாக அவ்வப்போது அலசி மடித்து வைத்திருப்பேன்.  வெளியிலிருந்து வந்ததும் அதை அலசி காயவைத்து, மடித்து வரிசையின் அடியில் வைத்துவிடுவேன்.  சலவை செய்யும் வழக்கம் எல்லாம் இல்லை.  ஒரு நாளைக்கு இரண்டு முறை அலசும் துணிகளுக்கு சலவை என்ன வேண்டி கிடக்கிறது!  அந்தத் துணிகளை பார்த்ததும் மற்றவ யாருக்கும் அவர்கள் துணிகளை அதே இடத்தில போடும் ஆவல் வந்து விடுகிறது.  கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் துணிக்குவியலாய் இருக்கும்.  நான் அடுத்து போடப்போகும் செட் எங்கிருக்கிறது என்று தேடவேண்டும்!

கையில் எடுத்த பொருட்களை வேலை முடிந்ததும் நின்ற இடத்தில், கைக்கு வந்த இடத்தில் வைத்து விடும் வழக்கம்...  வீட்டை நீட் செய்ய என்று ஒரு நாள் செலவு செய்வோம்.  அடுத்த இரண்டு நாட்களில் மழைத்துளி விழுந்து ஈரமாகும் காய்ந்த நிலம் போல மறுபடியும் ஆங்காங்கே பொருட்கள் இறைந்து காணப்படத் தொடங்கும்!

பீரோக்களின் மேல் பார்த்தால் ஊரில் இருக்கும் பொருட்கள் எல்லாம் அங்கு இருக்கும்.  வீட்டில் உள்ள பரண்கள் ஏற்கெனவே ஹவுஸ்புல்.  முன்பு டைனிங் டேபிள் வைத்திருந்தோம்.  அதன்மேலும் அப்படிதான் துணிகள் உட்பட எல்லா குப்பையும் இருக்கும்.  நல்லவேளையாய் இப்போது அது இல்லை.  தரையில் அமர்ந்து சாப்பிடுகிறோம்.

ஆனாலும் பாருங்கள்...  சமையலறையின் சுவர் ஓரங்களில் எல்லாம் குட்டிக்குட்டிப் பாத்திரங்களில் என்னென்னவோ இருக்கும். 

அவ்வப்போது நிறைய பொருட்களைக் கழித்துக்கட்டிக் கொண்டே இருந்தாலும் எவ்வளவு பொருட்கள் இன்னும்?   இவ்வளவு பொருட்களா வாங்கி குவித்திருக்கிறோம் என்று தோன்றும்.  ஒவ்வொன்றுக்கும் எப்போதாவது ஏதாவது தேவை இருக்கும் என்று வாங்கி ஸ்டாக் வைத்திருப்பார்கள்.

'பின்னே?  ஒரு குடும்பம்னா சும்மாவா ?  வீடு லைவ்லியா இருக்குன்னு நினையுங்களேன்' என்பார் பாஸ்.  'அப்படிநீட்டா  இருக்கணும்னா நீங்கள் கல்யாணமே பண்ணியிருக்கக் கூடாது!' என்பார்.  ஆமாம், காலங்கடந்த ஞானோதயம்!  ஆனாலும் ஒரு சுத்தத்தை எதிர்பார்க்கும் என் மனம்.  ரொம்ப சுத்தமாய், எல்லாம் வைத்த இடத்தில் அப்படியே, காலியாக இருந்தாலும் போர் அடிக்குமோ!  மேஜர் சந்திரகாந்த் மேஜர் நினைவுக்கு வருகிறார்!

இவ்வளவும் இருந்தும் நாம் தேடும் பொருள் தேடும் நேரத்தில் கிடைக்காது.  அப்புறம் தேவைப்படாத நேரத்தில், வேறு எதையோ தேடும் நேரத்தில் இது சிக்கும்.  அததற்கென்று ஒரு இடம் என்று வைக்கவே முடிவதில்லை.

என்னவோ போங்க....

======================================================================================

பேஸ்புக்கில் போட்ட ஒரு பதிவு...

நாம் கட்டமைத்துக் கொள்ளும் மன பிம்பங்களின் வடிவங்களை நம்மாலேயே அவ்வளவு சீக்கிரம் மாற்றிக் கொள்ள முடியாது!

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரங்கராட்டினம் திரைப்பாடலான "முத்தாரமே" பாடலைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

எல் ஆர் ஈஸ்வரியின் குரலை க்ளப் டான்ஸ் பாடல்களுக்கு, நடன மங்கைகளுக்குக் குரல் கொடுத்தே  கேட்டு பழகி விட்டேன்.  அல்லது நாயகியின் தோழிக்கு குரல் கொடுப்பவராய்...

கதாநாயகனுக்குப் பாடும் குரலோடு அவர் குரலைக் கேட்டால் நாயகன் ஏதோ ஆசை நாயகியோடு பாடும் உணர்வு வருகிறது, அல்லது வில்லியுடன் பாடும் உணர்வு வருகிறது!

அதற்காக நான் எல் ஆர் ஈஸ்வரி குரலுக்கு எதிர்ப்பு சொல்கிறேன், எனக்கு அவர் பாடல்கள் பிடிக்காது  என்று நினைத்து விடாதீர்கள்.  நான் அவர் பாடல்களின் பெரும் ரசிகன்.

===========================================================================================

தனிமைத்தாத்தா கவிதைக்கு தனித்திரு விழித்திரு என்று தலைப்பிட்டிருந்தேன்.  அதற்கு இன்னொரு தலைப்பும் வைத்திருந்தேன்...  இன்னும் ஒரு நாள் என்று வைத்திருந்தேன்.  அதே பாணியில் இன்னொன்று அப்போதே எழுதி வைத்திருந்தேன்.  அதை இப்போது வெளியிடுகிறேன்!

என் வீட்டில்தான்
நான் இருக்கிறேன்.
அடுத்த அறையில் மனைவி
வசிக்கிறாள்.
இருவருக்கும் பொதுவாய்
என்றும் எங்கும் உண்டு
தனிமை.

பெரிய திரைகொண்ட
தொலைக்காட்சியில் 
வாரத்துக்கொருமுறை
பார்க்கிறோம்
மகனையும் மகளையும்
அவரவர் குடும்பங்களோடு

வெளிநாட்டில்
அவர்கள் வசித்தாலும்
எங்களுக்கும் 
வசதிகள் பண்ணிக் 
கொடுத்திருக்கிறான் மகன்.

உணவுக்குக் கவலை இல்லை.
உடைகள் அதிகம் தேவை இல்லை
வசிக்கப் பெரிய வீடும்தான்.

குறையில்லை. 
ஏனோ
சந்தோஷமுமில்லை

(இதோடு கவிதையை நிறுத்தி விடலாம்.  ஆனாலும் அப்புறமும் தோன்றியதை தொடர்ந்திருக்கிறேன்)

ஆமாம் ...
இதேபோல மகனுக்கான வீடு 
வெளிநாட்டில் அமையுமா?
உள்நாட்டிலா?
கேட்கவேண்டும் பேரனிடம்
பிறிதொரு ஸ்கைப் மீட்டில்

=====================================================================================================

பொக்கிஷம்  :=========================================================================================================

இந்த எம் சீல் விளம்பரம் பார்த்திருக்கிறீர்களா?  சுவாரஸ்யமான விளம்பரம்.  ஒரு சிறுகதையைப்போல...
= = = = 


= = = = 

184 கருத்துகள்:

 1. அனைத்துயிரும் இன்புற்று வாழ்க..
  அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 2. பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
  பொங்கலோ.. பொங்கல்
  பொங்கலோ.. பொங்கல்!...

  பதிலளிநீக்கு
 3. காலை வணக்கம் அனைவருக்கும். இனிய பொங்கல் எங்களுக்கு எந்தவிதமாக இருக்கப் போகிறதோ என்ற கவலை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் நெல்லை சகோதரரே

   ஏன்? என்னவாயிற்று கவலை கொள்ளுமளவிற்கு? அனைவருக்கும் நலமே நடக்க பிரார்த்திக்கிறேன். நன்றி.

   நீக்கு
  2. வணக்கம் நெல்லை.   எதுவாயிருந்தாலும் நல்லபடியாகவே இந்நாள்மட்டும் அல்லாமல் எந்நாளும் கடக்க பிரார்த்தனைகள்.

   நீக்கு
  3. என்ன கலவரம் நெல்லைத்தமிழனுக்கு.
   எல்லாம் நன்றாக இருக்கட்டும்.

   நீக்கு
  4. என்ன ஆச்சு உங்களுக்கு நெல்லை? இந்த வருஷம் உங்களுக்குப் பண்டிகை இல்லையே? அப்புறமும் என்ன கவலை?

   நீக்கு
  5. எல்லாத்துன்பங்களும் கடந்து இனிமையும் இன்பமும் பெருக வாழ்த்துகள் அனைவருக்கும்.

   நீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. வீட்டைப் பற்றிய இடுகை...மிகவும் யோசிக்க வைக்கும். கொரோனா காலத்தில் எது வெளில இருந்து வந்தாலும் அப்படியே ஹாலின் ஓரத்தில் ஓரிரண்டு நாட்கள் அப்படியே இருக்கவிடுவது என ஆரம்பித்து ஒரே அடைசலாக இருப்பதைக் காண நேரிடுகிறது. கொரோனா தந்த மனப்பிரம்மை... கொஞ்சம் அளவுக்கு அதிகமான ப்ரொவிஷன்ஸ் வாங்கி அதில் சில வீணாவது.

  ஶ்ரீராம் எழுதினதுபோலத்தான் அனேக வீடுகளும்னு நினைக்கிறேன்.

  ஆனா பாருங்க...குஷன் வாங்கி அதன் உறையாக மேட்சிங்காக இருக்கணும்னு கர்ட்டன் துணிகள் வாங்கித் தைக்கும்போதே பத்து குஷன் கவரும் தைத்தோம். இப்போ புதுசா நாலு குஷன் சென்ற வாரம் வாங்கினோம். குஷன் வாங்கும்போது எடுக்கலாம் என பத்திரமாக குஷன் கவர்களை எங்கு வைத்தோம் என நினைவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னதான் ப்ரொவிஷனஸ் வாங்கி ஹாலின் மூலையில் வைத்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் பாதுகாப்பு இருக்குமா?  யு எஸ்ஸில் கார் பார்க்கில் வைப்பர்களாம்.  ஹால் நாம் புழங்கும் இடம்தானே? வேறு எதிலாவது 'அது' ஏறிக்கொள்ளாதா?!!

   ஆமாம், எல்லாப் பொருட்களும் வீட்டில் இருக்கும்.  ஆனால் தேடும்போது கிடைக்காது.

   நீக்கு
  2. பீரோ, துணிகள் வைக்கும் இடம்னு தேடுங்க நெல்லை. கிடைச்சுடும்.

   நீக்கு
 6. தனிமைத் தாத்தா - கவிதை நன்று. மனதில் கலவரத்தை ஏற்படுத்துகிறது.... ஜிம்முக்கும் யோகாவிற்கும் போகணும்...பிறகு பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி...  மெதுவா வாங்க...  அதுசரி, ஜிம்முக்குப் போனா கலவரம் தீர்ந்துடுமா?!

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். அனைவர் இல்லங்களிலும் நல்லபடியாக தைத்திருமகள் பிறந்திட மனமாற இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி.  இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  இன்றைய கதம்பம் அருமை. தங்களின் தொகுப்பான முதல் செய்திகள் எப்போதுமே சுவாரஸ்யம் தருபவை. இன்றும் அதைதான் முதலில் படித்தேன். குப்பை இல்லாத வீடேது? அருமையாக மனிதர்களின் எண்ணங்களை சொல்லியிருக்கிறீர்கள்.

  என்றாவது தேவைப்படும் என்று வாங்கி வாங்கி சேர்த்து வைப்பது கூட சமயங்களில் எடுத்து உபயோகிக்க முடியாமல் அதுவும் பிறர் கண்களுக்கு குப்பையாகிப் போகிறது.நமக்கு அதன் அருமையும், வாங்கும் போது பட்ட சிரமங்களும் மனதுக்குள்/கண்ணுக்குள் தெரிந்தாலும் ஒன்றும் சொல்வதற்கில்லை.

  /இவ்வளவும் இருந்தும் நாம் தேடும் பொருள் தேடும் நேரத்தில் கிடைக்காது. அப்புறம் தேவைப்படாத நேரத்தில், வேறு எதையோ தேடும் நேரத்தில் இது சிக்கும். அததற்கென்று ஒரு இடம் என்று வைக்கவே முடிவதில்லை./

  அருமையான வரிகள். நானும் இப்படித்தான் திண்டாடுகிறேன். எல்லாமே உண்மை. மற்றதையும் படித்து விட்டு வருகிறேன். (கொஞ்சம் தாமதமானும் ஆகும்.) பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், எல்லா வீடுகளும் இதுமாதிரிதான் இருக்கின்றன என்பதுதான்.    வைக்கும் பொருள் எங்கே வைத்தோம் என்பதை மறப்பதும், தேடுவதும், தேவைப்படாத சமயத்தில் அவை கிடைப்பதுவும்...    

   நன்றி கமலா அக்கா.

   நீக்கு
 9. பதில்கள்
  1. மின்நிலா பொங்கல் மலரா?    நன்றி.  எல்லாம் உங்கள் அனைவரின் ஒத்துழைப்புதான்.

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  அடுத்து கவிதையை மட்டும் உடனே படித்து விட்டேன். எல்லா வயதானவர்களின் மனக்கவலைகளில் பிறந்த ஆழமான வரிகள். இப்போதைய சூழலுக்கு தகுந்த மாதிரி நன்றாக உள்ளது. நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  /குறையில்லை.
  ஏனோ
  சந்தோஷமுமில்லை/

  உண்மை... தினமும் இதே வரிகள்தான் தவிர்க்க நினைத்தும், தன் போக்கில் மனதுக்கிடையே ஊர்வலமாக வருகின்றன. கவிதையை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கமலா அக்கா...   குறையொன்றும் இல்லை பாடலில் ஒரு வரி அழுத்தம் திருத்தமாக வரும்..  "ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா"  மனதுக்குள் அவற்றை மறைத்து  வெளியில் குறையில்லை, நீ பார்த்துக்கொள்வாய்என்கிற நம்பிக்கை' என்னும் மனோபாவம்! 

   நீக்கு
  2. உண்மை.. அதை உணர்வதற்கு அவனருள் பரிபூரணமாக வேண்டும். பிரார்த்திப்போம்.

   நீக்கு
 11. அனைவருக்கும் இனிய பொங்கல் திரு நாள் வழக்கம்.
  பழைய கசப்புகள் மறைந்து
  புதிய இனிமைகள் நிறைய வேண்டும்.
  இறை அருள் நிறைந்து நிற்க அவனே துணை.

  பதிலளிநீக்கு
 12. மின் நிலாவைப் புரட்டிப் பார்த்து விட்டு வரத் தாமதமாகி விட்டது!!!
  அத்தனை இனிமை.
  எவ்வளவு உழைப்பு இந்த மின் நூலுக்குள் சென்றிருக்கும்
  என்று யோசிக்கவே பிரமிப்பாக இருக்கிறது.

  மனம் நிறை வாழ்த்துகள். அன்பு ஸ்ரீராம், கௌதமன் ஜி.
  மற்றும் பங்கு கொண்ட அனைவரின் சிறப்பான எழுத்துக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிம்மா...    கேஜிஜி செமையா உழைச்சிருக்கார்.

   நீக்கு
  2. உங்கள் ஆர்வம்தான் எங்களுக்கு உரம். நன்றி.

   நீக்கு
  3. வல்லிம்மாவின் காதலும் காமமும் கதை மிகவும் பிடித்தது .பலபேர் வாழ்க்கை  இப்படி வீணான அற்ப பொய்ப்பேச்சுகளால் சிதிலமாகி போவது உண்மையே .

   நீக்கு
 13. வீட்டில் இருக்கும் அத்தனை குறைகளும் எல்லார் வீட்டிலும் உண்டானதுதான்.
  அதுவும் பெரிய பசங்க இருக்கும் வீட்டைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

  துணிமணிகளுக்கு என்று தனி வீடே வாங்க வேண்டும் என்று மகள்
  சொல்வாள்.
  நல்ல வேளை அவரவர் அறையில் அந்தந்த பொருட்கள் அடங்கி விடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பாடி...    இப்படி எல்லோரும் சொல்லக்கேட்டால்தான் நிம்மதி!  ஆமாம்...   துணி வகையறாதான் ரொம்ப அதிகம்!

   நீக்கு
 14. இன்னும் முழுதாகப் படிக்கவில்லை..
  வல்லியம்மா அவர்கள் சொல்வது போல பிரமிப்பாக இருக்கின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு துரை,
   பாலும் பொங்கி வாழ்வும் சங்கடங்கள் நீங்கி
   நிறைவாழ்வு கிடைக்கப்
   பிரார்த்தனைகள்.

   நீக்கு
  2. நன்றி துரை செல்வராஜூ ஸார்...    ஒரு மூச்சில் படித்து முடிவது போல இருக்கக் கூடாது என்று தீர்மானித்திருந்தோம்!  பங்கு கொண்டு படைப்புல அனுப்பிய அனைவருக்கும்  மற்றும் அவ்வப்போது ஆலோசனைகள் பகிர்ந்த பானு அக்காவுக்கும் காந்தன் ஸாருக்கும் நன்றி.

   நீக்கு
  3. இந்த அணிலுக்கும் நன்றியா? அந்த அளவிற்கு நான் எதுவும் செய்யவில்லை என்றாலும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. நன்றி . 

   நீக்கு
  4. நீங்கள் கொடுத்த யோசனையில்தான் முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டது.

   நீக்கு
 15. முத்தாரமே பாடல் மிக அருமை. எனக்கு மிகவும் பிடிக்கும். ஆமாம் எல் ஆர் ஈஸ்வரி
  என்றால் வில்லிப் பாடல்கள் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் ஜெயலலிதாவுக்கும் நிறைய
  பாடி இருக்கிறார். வெர்சடைல் சிங்கர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்..  ஓரளவு ஜெயலலிதாவுக்கு பாடி இருக்கிறார்தான்.  ஆனாலும் என்னவோ அவர் குரல் பாடல்கள் அப்படி ஒரு உணர்வைத் தோற்றுவிக்கும்!  அவர் பாடல்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

   நீக்கு
 16. தனிமைத்தாத்தா கவிதை
  பெருமூச்சு விடச் சொல்கிறது:)
  தாத்தாவின் அப்பா எப்படி இருந்தாரோ!!!!
  வாழ்த்துகள் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தக் காலத்தில் இந்த சிரமங்கள் இருந்திருக்காது.  வயற்காடும், பண்ணையும், கூட்டுக்குடும்பமுமாய் சந்தோஷமாய்த்தான் இருந்திருப்பார்.

   நீக்கு
 17. ஜோக்ஸ் அத்தனையும் சிரிக்க வைக்கிறது:) மிக அருமை.
  அபூர்வ சகோதரர்கள் படச் சித்திரம்
  எத்தனை தத்ரூபம். அப்போது வரும் கார்ட்டூன் கள்
  எல்லாமே மிகச் சிந்திக்க வைக்கும்.
  அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்.   இப்போதும் ரசிக்க வைக்கின்றனவே...

   நீக்கு
 18. எம் சீல் விளம்பரம் சிரிக்க வைத்தது.
  எம் சீல் உபயோகித்து இருந்தால்
  இந்த மகன் எல்லோரையும் ஏமாற்றி இருப்பார்!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 19. அனைவருக்கும் காலை வணக்கம். இனிய பொங்கல் வாழ்த்துகள்! பின்னர் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானு அக்கா...  வணக்கம்.  பொங்கல் வாழ்த்துகள்.  அப்புறமா மெதுவா வாங்க...

   நீக்கு
 20. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
  அன்பு நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்!
  இல்லங்கள் தோறும் அன்பும் மகிழ்வும் பொங்கி வழியட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன் மேடம்...  வாங்க.  வாழ்த்துகளுக்கு நன்றி.  உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

   நீக்கு
 21. கதம்பம் அருமை!
  கவிதையின் சோகம் மனதை கொஞ்சம் பாதித்தது!
  அந்தக் கால ஸ்ரீதரின் ஓவியங்களை மறுபடியும் பார்த்ததில் மகிழ்வாக இருந்தது. இந்த ஸ்ரீதர் என்னும் பரணீதரன் தான் எனக்கு விகடனில் ஓவியங்கள் வரையவும் கதைகள் எழுதவும் ஊக்கம் கொடுத்தவர்.அதையெல்லாம் நினைத்துப்பார்க்க இன்று ஒரு வாய்ப்பு கிடைத்தது.
  எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் விஷயத்தில் எனக்கும் உங்கள் கருத்தே தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி மனோ சாமிநாதன் மேடம்.   ஆஹா...   ஸ்ரீதர் ஸார்தான் வாய்ப்பு கொடுத்தாரா?  மகிழ்ச்சியாக உள்ளது.  பாராட்டுகளுக்கு நன்றி.

   நீக்கு
 22. தனிமைக் கவிதை முன்பே எபி யில் வந்ததோ? இது வேறு ஒரு வர்ஷனா! கடைசிப்பாராவில் கவிதையின் சாயல்! நிற்கவைக்கிறது... Wordsworth சொன்னதுபோல : 'Stop here.. Or gently pass..'

  கதையோ, கவிதையோ - ஆரம்பிப்பது எவராலும் முடியும் (அதனால்தான் எல்லோரும் எழுத ‘ஆரம்பித்து’விடுகிறார்கள்!) ஆனால் அதை ஒழுங்காய், சரியாய், சரியான இடத்தில் முடிப்பது? எழுத்தாளனால், கவிஞனால்’தான்’ முடியும்!


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனிமைக்கவிதை முன்ப வந்தது வேறு மாதிரிதான்.   நானே சொல்லி இருக்கிறேனே...   

   //ஆனால் அதை ஒழுங்காய், சரியாய், சரியான இடத்தில் முடிப்பது? எழுத்தாளனால், கவிஞனால்’தான்’ முடியும்!//

   இங்கு எப்படி?

   நீக்கு
  2. இங்கு எப்படி!?..

   சொல்லித் தெரிய வேண்டுமா!..

   நீக்கு
  3. இங்கு எப்படி? //

   ஏனோ
   சந்தோஷமுமில்லை

   - இதைத் தாண்டி அங்கே, கவிதை... இல்லை!

   நீக்கு
  4. அப்பாடி...     அதே உனர்வில்தானே நடுவில் ஒரு விளக்கம் கொடுத்தேன்!

   நீக்கு
 23. `முன்னேற்றங்கள் வாழ்க்கைத் தேவைகளை அதிகரிக்கின்றன. அதற்கேற்றாற்ப் போல் பணப்புழக்கமும் அதிகமாக, வீட்டில் பொருட்கள் குவிகின்றன. குவியும் பொருட்களை உபயோகம் முடிந்தவுடன் தூக்கிப்போட இடமும் இல்லை. உதாரணமாக என் வீட்டில் பியூஸ் ஆன tube light 10 இப்போதும் உள்ளது. குப்பையில் போடக்கூடாது. பழைய பொருள் வாங்குபவரும் எடுக்க மாட்டார். இது போன்றே அடைசல்கள் சேருகின்றன. அதே போன்று 2 மின்விசிறிகளும் உள்ளன. 

  //குறையில்லை. ஏனோசந்தோஷமுமில்லை//இந்த வரிகள் கொஞ்சம் நெருடின. வாழ்க்கை என்பது பிள்ளைகள் நன்றாக இருப்பதற்கே என்ற மனப்பான்மையுடன் இன்று ஒரு நாள் கழிந்தது என்று நாட்களை எண்ணிக்கொண்டு தான் நாங்களும் இருக்கின்றோம். 
  பொங்கல் பொக்கிஷமும் நன்றாக இருந்தது.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கா ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்...  என்ன முன்னேற்றமானாலும் பொருட்கள் வாங்குவதைக் குறைக்கலாம் எனது அனுபவ ஐடியா...

   அந்த ஒரு நாள் கழிந்தது''(புதுமைப்பித்தனின் கதைத்தலைப்பு!) என்கிற எண்ணமே ஒரு குறையை மறைக்கும் வரிகள் இல்லை?

   நன்றி ஸார்...

   நீக்கு
  2. 'அந்த ஒரு நாள் கழிந்தது’ எனச் சொல்வதே - குறையை, இயலாமையை அடிக்கோடிடுவதுதான்..

   நீக்கு
  3. அதைத்தான் சொல்ல வந்தேன்!

   நீக்கு
 24. வெளிநாட்டு அவா நீங்(க்)க ஆவல்...!

  வாழ்வதற்கு பொருள் வேண்டும்...
  வாழ்வதற்கும் பொருள் வேண்டும்...

  பதிலளிநீக்கு
 25. எல் ஆர் ஈஸ்வரியின் பேட்டிக் காணொளிகளைக் கண்டிருக்கிறேன். அம்மா கோரஸ் பாடகி, தானும் கோரஸில் ஆரம்பித்து எப்படி தனித்துவம் மிக்கவராக வளர்ந்தேன் என்று சொல்லியிருப்பார்.

  அம்மன் பாடல்கில், பல சினிமாப் பாடல்களில் அவர் மிளிர்வார். பட்டத்து ராணி மறக்கவே இயலாத பாடல். டேக் இல்லாமலேயே அவர் பாடியதாக்க் குறிப்பிட்ட நினைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  லதா மங்கேஸ்கரோ ஆஷா போன்ஸ்லேயே இதை தன்னால் ஹிந்தியில் கொண்டுவர முடியாது என்று சொல்லி இருந்ததாக நினைவு.

   நீக்கு
  2. ஆஷா போன்ஸ்லே - பட்டத்து ராணியைக் கேட்டு, பதைபதைத்து ஈஸ்வரியின் புகழ் பாடினார்!

   நீக்கு
  3. டேக் இல்லாமலேயே -- ரிஹர்சல் இல்லாமலேயே Jayakumar

   நீக்கு
  4. எல் ஆர் ஈஸ்வரி போல் ஒரு பாடகி தமிழில் இனியும் வருவார் என யாரேனும் சொன்னால் நம்பக் கஷ்டமாயிருக்கும். அவரின் தனித்துவக் குரல், பாடல்திறன்.. அவர் ஒரு நவரச நாடகம். அவருக்குகந்த, உச்சபட்ச அங்கீகாரம் கிடைக்கவில்லை.

   தமிழனுக்குத் தன் அருமை தெரியாது என்பதும் நாட்டில் தொடரும் சோகம்.

   நீக்கு
 26. எங்கள் ப்ளாக் வாசகப் பெருமக்களுக்கும், எங்கள் ப்ளாக் ஆசிரியப் பெருமக்களுக்கும் மற்றும் இங்கே வருகை தரும் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள், எல்லோர் இல்லங்களிலும் அவரவர் மனம் போல் மகிழ்ச்சி அடைந்து பால் பொங்குவதைப் போலப் பொங்கிப் பெருகி அமைதியான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 27. எங்க வீட்டில் குப்பைகள் சேர நான் விடுவதில்லை. நம்மவருக்கு வாங்கிச் சேர்க்க ஆவல் தான். நான் குறுக்கே படுத்துக்கொண்டு எதையும் உள்ளே விடுவதில்லை. யார் எப்போ வந்தாலும் சோஃபாக்களோ, நாற்காலிகளோ அல்லது படுக்கக் கட்டில்களோ காலியாகவே இருக்கும். சமையலறையிலும் அதிகப்படிப் பொருட்கள் வைக்கவென 2,3 தூக்குகள், டப்பாக்கள் வைச்சிருக்கேன். அடிக்கடி எடுக்க வேண்டியது அந்தந்த பாட்டில்கள்/டப்பாக்களில் உடனுக்குடனே தேய்த்துக்கழுவிக் காய வைத்து நிரப்பிவிட்டால் மிச்சம் இருப்பதைத் தனியாக ஒரு தூக்கு/டப்பாவில் ஸ்டாப்லர் போட்டு வைத்துவிட்டால் தேவைக்குப் பின்னர் எடுத்துக்கலாம். அதே போல் அன்றன்று மிஞ்சும் குழம்பு,ரசம், கறி போன்றவை கூட உடனுக்குடனே வேலை செய்யும் பெண்ணைக் கூப்பிட்டுக் கொடுத்துடுவேன். எங்களுக்குத் தேவை என்றால் மட்டும் இரவுக்கு வைச்சுப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீசா மேடம். என் FIL inspirationல, இங்க சமையலறை தவிர, கொஞ்சம் ஸ்டாக் வச்சுக்க ஒரு கப்போர்ட் ஹாலில் டிசைன் பண்ணிவைத்திருக்கோம். ஆனால் இந்த கொரோனா பிஸினெஸ்ல, கொஞ்சம் பதைபதைப்பாகி (ஆரம்பத்துல) கொஞ்சம் அதிகமாகவே ஸ்டாக் செய்ய ஆரம்பித்தோம்.

   நான் ஒரு காய்கறி வாங்கும் பை..ம். எங்க ஃப்ரெஷா பார்தாலும் கொஞ்சம் அதிகமாகவே வாங்கிடுவேன். வெளில போனா காய், பழங்களோடத்தான் திரும்புவேன். அதுக்காகவே மனைவி, ஒண்ணும் வாங்கிண்டு வரவேண்டாம் என்பாள். சில சமயம் ஏண்டா இப்படி வாங்கறோம்னு தோணும்.

   நீங்க ரொம்ப டிஸிப்பிளினா வச்சிருக்கீங்க. பாராட்டுகள்.

   நீக்கு
  2. ஹாஹாஹா, இதுவே பலருக்கு என்னை வெறுக்கவும் வைக்கிறது. எல்லோரும் இதைக் குறையும் நிறையச் சொல்லுவார்கள். வீடுனா குப்பை இருக்கத்தான் செய்யும், எப்படி இந்த மாதிரி உன்னால்/உங்களால் செய்ய முடியுது? வீட்டிலே சமைப்பீங்களா? என்றெல்லாம் கேட்பார்கள்! சமைத்தால் அதிகம் வழியும்படி விடுவதில்லை/ அடுப்பு எப்போவுமே சின்னதாகவே எரியும். வழிந்தாலும் உடனே துடைத்துடுவேன். ஆகவே பின்னர் அடுப்பைச் சுத்தம் செய்யும்போது காய்ந்து வரவரப்பு இருக்காது! இதைப் பார்த்துட்டுச் சிலர் சமைக்கவே பயம்மா இருக்கே என்றும் சொல்வார்கள். என்னவோ அப்படியே பழகிட்டேன். :(

   நீக்கு
  3. இது மாதிரி ஆரம்ப காலங்களில் மெயின்டெயின் செய்தேன்.   இப்போதெல்லாம் எல்லாம் கைவிட்டுப்போச்சு!  தடுக்கவே முடிவதில்லை. 

   நீக்கு
  4. //சமைத்தால் அதிகம் வழியும்படி விடுவதில்லை/ அடுப்பு எப்போவுமே சின்னதாகவே எரியும். வழிந்தாலும் உடனே துடைத்துடுவேன். ஆகவே பின்னர் அடுப்பைச் சுத்தம் செய்யும்போது காய்ந்து வரவரப்பு இருக்காது!// Same Same Geetha akka!

   நீக்கு
  5. கூட்டுக்குடும்ப வாழ்க்கையிலேயே இதைக் கடைப்பிடித்ததால் நிறையக் கெட்ட பெயர்! அம்மி, ஆட்டுக்கல்லைக் கூட அரைத்ததும் உடனே அலம்ப மாட்டார்கள். நான் போய் அலம்பிட்டு வருவேன். வாங்கிக் கட்டிப்பேன். :((((( சாப்பாடு முடிஞ்சதும் அடுப்பைத் துடைக்க மாட்டாங்க. ராத்திரிக்கு மறுபடி பத்து ஆகிடுமே அப்போத் திரும்ப அலம்பித் துடைக்க முடியுமா என்பாங்க! எல்லாத்தையும் மீறிக்கொண்டு இந்தக் காதில் வாங்கி மறு காது வழியே வெளியே விட்டுட்டு நான் பாட்டுக்குக் கருமமே கண்ணாக இருப்பேன்! அதெல்லாம் தப்போ? :(

   நீக்கு
  6. கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் இது போன்றவைகள் மனதில் நிற்காது.  ஏனெனில் அடுத்தடுத்த பிரச்னைகள் காத்துக்கொண்டிருக்கும்!  ஆனால் அதுதான் சுவாரஸ்யமும் கூட!

   நீக்கு
 28. புத்தகங்கள் மட்டும் எங்க வீட்டில் என் கட்டிலுக்கு அருகே சிலதும், அங்கே உள்ள அலமாரியில் சிலதுமாகக் கிடக்கும். ஆனால் அவற்றுக்கு எப்போது வேண்டுமானாலும் தேவை இருக்கும் என்பதால் தேடி எடுக்க வேண்டாம். உடனே எடுத்துடுவேன். அதே போல் வீட்டில் எந்த சாமான்களும் நான் எடுப்பதை நான் எடுத்த இடத்தில் வைப்பதே வழக்கம். மாற்றினால் நம்மவர் தான் எப்போவானும் மாற்றி விடுவார். அதோடு இல்லாமல் எப்போவுமே சமையலறையில் மளிகை சாமான்கள் முதல் பாத்திரங்கள் வரை வைப்பதும் எடுப்பதும் நான் ஒருத்தியே என்னும் வழக்கத்தைக் கட்டாயமாய்க் கடைப்பிடிப்பதால் யாரானும் வந்தாலும் எடுத்து மாற்றி வைக்க வாய்ப்பே இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் அம்மா அததற்கென்று ஒரு இடம் வைத்து, அந்த இடத்தை மாற்றாமல் அங்கேயே வைத்துப் பழகு என்று சொன்னார்கள்.  முடிந்த வரை பின்பற்றினேன்.

   நீக்கு
 29. ஸ்ராத்தம், மற்ற விசேஷங்களில் சமைக்க வரும் மாமி மாற்றி வைப்பார்கள். ஆனால் நான் கிட்டேவே இருப்பதால் உடனுக்குடன் பார்த்து எடுத்து உரிய இடத்தில் வைத்துவிடுவேன். குளிர்சாதனப் பெட்டியில் அதிகப்படியான சில துவையல்கள், (தக்காளி, புதினா போன்ற வீணாகாதது) பால், மாவு, ஊறுகாய் வகைகள், காய்கள், பூக்கள் தவிர்த்து வேறே ஏதும் வைக்க மாட்டோம். சமைத்த உணவு மிஞ்சினால் உடனுக்குடன் செலவு செய்து விடுவதால் அதை வைக்கும் வாய்ப்பும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்...   இது மாதிரி சமயங்களிலும் இப்படி மெயின்டெயின் செய்வது கடினம்.   உண்மையிலேயே  உங்களை பாராட்ட வேண்டும்.

   நீக்கு
  2. நாங்க சொப்பு வைச்சுத் தானே விளையாடறோம், சமையலில். அதையும் மீறி மிஞ்சும்போது வேலை செய்யும் பெண்ணே சிரிப்பார்/என்னத்தைச் சாப்பிட்டீங்கனு! :)))) ஆகவே இப்போதெல்லாம் சாப்பாடு வீணாவதில்லை. அது ஒரு சந்தோஷமான விஷயம்.

   நீக்கு
 30. ஆனால் மற்ற வீடுகளில் சாப்பாடு மேஜை மேல் துணிகள், பாத்திரங்கள் என இருக்கும். அவற்றை ஒதுக்கிவிட்டுச் சாப்பாடு போடுவார்கள். அதே போல் சோஃபாக்கள் மேலேயும், நாற்காலிகளிலும் துணிகள் வழியும். குழந்தைகள் இருக்கும் வீடாக இருக்காது. எங்களைப் போல் இருவர் இருக்கும் வீடுகளிலும் தான். போட்டு வைத்துவிட்டுப் பின்னால் நேரம் செலவு செய்து ஒழுங்கு செய்வதை விட உடனேயே அதற்கென உள்ள இடத்தில் வைத்துவிட்டால் வேலை குறையும் என்பது என் கருத்து. கூடுமானவரை அதைக் கடைப்பிடிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படிதான் நானும் நினைப்பேன்.  நான் செய்யும் வேளைகளாக இருந்தால் ஓகே.  பாஸும் அவர் அம்மாவும் செய்வதைத் தடுக்க முடிவதில்லை!

   நீக்கு
 31. வேலை செய்யும் பெண் விடுமுறை எடுத்தால் கூட நான் பாத்திரங்களைப் போட்டு வைப்பதில்லை. கையோடு தேய்த்து வைத்துவிட்டுத் தான் உட்காருவேன். அந்தப் பெண் விடுமுறை முடிந்து வரும்போது பாத்திரங்கள் சுமையாக இருக்காது. துணிகள் கூட என்னோடதை அன்றாடம் கைகளாலேயே துவைத்து விடுவேன். கைகளுக்கும் பயிற்சியாக இருக்குமே! எப்போவானும் 2,3 நாட்களுக்கு ஒரு முறை உள்ளாடைகள், துண்டுகள் போன்றவற்றை வாஷிங் மெஷினில் போட்டு எடுப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களைபோல் ஆருண்டு அவனியிலே..

   நீக்கு
  2. நிச்சயம் பாராட்ட வேண்டும்.  நான் சமையல் திப்பிடங்கள் செய்யும் நாட்களில் பாத்திரங்களை உடனுக்குடன் பைசல் செய்துவிடுவேன்.  எப்போதாவது வேலை செய்பவர்களுக்கு இது ஈஸியாகத்தான் இருக்கும் என்று நொடிப்பார் பாஸ்!

   நீக்கு
  3. ஹாஹாஹா, பாஸுக்குக் கோபம் வரும்படி ஏன் நடந்துக்கறீங்க?

   பி.கு. @ஏகாந்தன்! நான் வேலைக்கு ஆளே 2018 ஆம் ஆண்டில் எனக்கு அக்கி வந்தப்புறமாத் தான் வைச்சுக்க ஆரம்பிச்சேன். அதுவரை நான் தான் எங்க வீட்டில் சகலகலாவல்லி! :))))))

   நீக்கு
  4. கோபம் மாற்றி மாற்றி வரும்!  அப்பப்போ சரியாகி விடும்!

   நீக்கு
 32. தனிமைத்தாத்தா/பாட்டி நிலைமைதான் எங்களுக்கும். ஆனால் பெண்ணும், பிள்ளையும் அவரவர் இடங்களில் சந்தோஷமாய்க் குடும்பம் நடத்துகிறார்கள். தினமும் எங்களைப் பார்த்துப் பேசுகிறார்கள். குழந்தைகளையும் பார்க்க முடிகிறது என்பது தான் ஒரே சந்தோஷம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் நல்லபடியாத்தான் நடக்கும் கீசா மேடம்....சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கட்டும். ப்ரார்த்தனைகள்.

   நீக்கு
  2. நன்றி இருவருக்கும். அவங்க அவங்க குடும்பத்தில் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் இந்தத் தொழில் நுட்பம் முன்னேறியதால் நாங்க குழந்தைகளைப் பார்க்க முடிகிறது. அதான் மனதுக்கு ஆறுதலும் கூட!

   நீக்கு
  3. அதுவும் உண்மைதான். நீங்கள் இந்த வாழ்க்கை முறையில் குறை எதுவும் படுவதில்லை என்று தெரியும்.

   நீக்கு
 33. ஶ்ரீதர் என்னும் பரணீதரன் கார்ட்டூன்கள் ரொம்பப் பிடித்தவை. ஆர்.கே.லக்ஷ்மண், ஆர்.கே.நாராயணன் இருவரும் அவருக்கு உறவினர்கள் என்பது தெரியும் அல்லவா? தெரிந்திருக்கும். புரசவாக்கம் கெங்காதரேஸ்வரர் கோயில் வீதியில் அவங்க வீடு ரொம்பப் பிரபலம். சென்னைக்கு முதல் முதல் 62-63 ஆம் ஆண்டில் வந்தப்போ அங்கெல்லாம் போகையில் தேடிக் கண்டுபிடிப்பதில் ஒரு சந்தோஷம் வரும். அநேகமாக பரணீதரனின் எல்லா பக்திச் சுற்றுலாக் கட்டுரைகளும் படித்திருக்கேன். நல்ல பலனுள்ள பல தகவல்களைக் கொண்ட பொக்கிஷம் அது.அதே போல் மெரினா என்னும் பெயரில் எழுதியவற்றையும் படித்திருக்கேன். "தனிக்குடித்தனம்"நாடகம் சக்கைப் போடு போட்டதே! அம்பத்தூரில் எனக்குக் கல்யாணம் ஆன புதுசிலே அந்த நாடகம் சபாவில் போட்டு நாங்க இரண்டு பேரும் முதல் முதல் சேர்ந்து பார்த்த நாடகம் அது தான். அதற்குப் பின்னரே சயானியில் ஏதோ திரைப்படம் போனோம்.அதன் பிறகும் பலபேர் தனிக்குடித்தனம் நாடகத்தைப் போட்டாலும் இந்தக் குழுவினர் நடிப்புப் போல் அமையவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனிக்குடித்தனம் நாடகம் 1971 / 1972 கால கட்டத்தில் நானும் பார்த்தேன். அதில் பூர்ணம் விஸ்வநாதனின் மனைவியாக நடித்தவர், ஜயகாந்தனின் இரண்டாவது மனைவி என்று ஞாபகம். நான் சென்னைக்கு வேலை பார்க்க வந்த புதிதில் முதலாவது பார்த்த நாடகம் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  2. அந்த ஸ்ரீதர் வீட்டில்தான் பின்னாட்களில் எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம் குடிவந்ததாகச் சொன்ன நினைவு!  அவருக்கே அது பின்னாட்களில்தான் தெரியும் என்று எழுதியிருந்த நினைவு.  நானும் தனிக்குடித்தனம் பார்த்து மிகவும் ரசித்திருக்கிறேன்.  கூத்தபிரானும் நடிப்பார்.  தஞ்சையில் தனிக்குடித்தனமும் இன்னொரு நாதமும் அடுத்தடுத்த நாள் பார்த்த நினைவு.  அந்த இன்னொரு நாடகத்தில் கூத்தபிரான் குடைநாயுடுவாக நடிப்பார் என்று ஞாபகம்.

   நீக்கு
  3. @கௌதமன் சார், ஆமாம், கௌசல்யா! குடைநாயுடுவும் நான் பார்த்த நாடகம் தான்.எதிலே? யோசிக்கணும்.
   @ஸ்ரீராம், வித்யாசுப்ரமணியம் இருப்பது சென்னை, மயிலையில். பரணீதரன் இருந்தது புரசவாக்கம் கெங்காதரேஸ்வரர் கோயில் தெரு. அந்த வீடு எண் 5 என நினைக்கிறேன். ரேவதிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு.

   நீக்கு
  4. அப்போ வித்யா சுப்பிரமணியம் மேடம் இருப்பது அல்லது இருந்தது  எந்த பிரபலத்தின் வீட்டில் என்று யோசிக்கணும்!

   நீக்கு
  5. அவங்க சின்ன வயசிலே இருந்த வீட்டைத்தான் வாங்கி இப்போவும் அங்கேயே இருக்கார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே! அப்பா, அம்மா, அக்கா, அண்ணா, தம்பிகளோடு இருந்த மயிலை வீடு. அதே வீட்டை வாங்கிப் புதுப்பித்துக் கொண்டு இருப்பதாகச் சொல்லி இருக்கார்.

   நீக்கு
  6. குடைநாயுடு வரும் நாடகம் ஊர்வம்பு 

   நீக்கு
  7. குடை நாயுடு வரும் நாடகம் தனிக்குடித்தனம் என்று நான் சொல்வதற்குள் உங்களுக்கே நினைவுக்கு வந்து விட்டது. ஊர் வம்பு நாடகத்தில் பட்டம்பியாக வருவார். அதில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஒரு ரூபா ஐம்பது காசு என்றால் இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய்.?மேலே ஒண்ணு ஐம்பது, கீழே ஒண்ணு ஐம்பது என்று அவர் கணக்கு போடுவதை பார்த்து அரங்கமே அதிரும். மாப்பிள்ளை முறுக்கு என்னும் நாடகத்தில் அம்மாஞ்சியாக வருவார். 
    

   நீக்கு
  8. //ஶ்ரீதர் என்னும் பரணீதரன் கார்ட்டூன்கள் ரொம்பப் பிடித்தவை. ஆர்.கே.லக்ஷ்மண், ஆர்.கே.நாராயணன் இருவரும் அவருக்கு உறவினர்கள் என்பது தெரியும் அல்லவா?// ஆர்.கே. நாராயணனும், ஆர்.கே.லக்ஷ்மணனும் பரணீதரனின் அத்தை மகன்கள்.  

   நீக்கு
  9. பூர்ணம் விஸ்வநாதன் சுஜாதாவின் நாடகங்களை மேடையேற்றத் தொடங்கியதும் பரணீதரனுக்கும், பூரணத்துக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு, பரணீதரனின் உறவினர்கள் அவருடைய நாடகங்களை போடத் தொடங்கினார்கள். பூரணம் விஸ்வநாதன் மறைவுக்குப் பிறகு அவருடைய நாடகங்களை பூவராக மூர்த்தி போடுகிறார்.

   நீக்கு
 34. எல்.ஆர்.ஈஸ்வரியைப் பல முறை நேரில் பார்த்திருக்கேன். கச்சேரிகளையும் கேட்டிருக்கேன். இந்த எம்சீல் விளம்பரம் நான் பார்த்தது இல்லை. என்னால் இதை ரசிக்கவும் முடியலை! மன்னிக்கவும். :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளம்பரம் ரசிக்காததில் பாதகமில்லை.  அவரவர் ரசனை!  எல் ஆர் ஈஸ்வரி கச்சேரிகள் நேரில் கேட்டிருக்கிறீர்களா?

   நீக்கு
  2. ஆமாம், மதுரையில் இருந்தப்போப் பார்த்திருக்கேன். பி.சுசீலா, சௌந்தரராஜன், பி.பி ஶ்ரீநிவாஸ், என அனைவர் கச்சேரிகளும் கேட்டிருக்கேன். இன்னும் சொல்லப் போனால் மதூரை மணி ஐயர், அரியக்குடி, எம்.எஸ்.அம்மா, எம்.எல்.வி. ஸ்வாமி ஹரிதாஸ் ஆகியோரின் கச்சேரிகள், பஜனைகள்னு நிறையப் பார்த்துக் கேட்டு அனுபவிச்சதாலோ என்னமோ கல்யாணத்துக்கு அப்புறம் எதுவும் லபிக்கவில்லை! :)))))

   நீக்கு
 35. மின் நிலா பொங்கல் மலர் சிறப்பான வெளியீடு. மிகுந்த உழைப்புத் தேவைப்பட்டிருக்கும். மின் நிலா பொங்கல் மலர் தயாரிப்பில் ஈடுபட்ட திரு கௌதமன், ஶ்ரீராம், பானுமதி வெங்கடேஸ்வரன், காந்தன்(மௌலியின் தம்பியா) அனைவருக்கும் வாழ்த்துகள். இதே போல் சிறப்பாகச் சித்திரை மலரும் வருவதற்கு முன் கூட்டிய வாழ்த்துகள். இன்னும் முழுசும்/முழுசும் என்ன? கொஞ்சம் கூடப் படிக்கவில்லை. சும்மாப் புரட்டிப் பார்த்துவிட்டு வந்து சொல்றேன். படிச்சுட்டுப் பின்னர் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி, மீண்டும் வருக. ஏகாந்தன் அவர்களைத்தான் காந்தன் என்று சொல்லிவிட்டார்கள் போலிருக்கு.

   நீக்கு
  2. நானும்கூட நமக்குத் தெரியாமல் ஒரு காந்தன் இருக்கிறார்போலிருக்கிறதே என நினைத்தேன். அதுக்குப் பின் வந்த கமெண்ட்டைப் பார்த்தால்.. சுற்றுகிறது தலை!

   நீக்கு
 36. மின் நிலாவில் வெளியாகியுள்ள கதை கவிதைகளுக்கான கருத்துகளை எப்படித் தெரிந்து கொள்வது?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரைகள் engalblog மெயிலுக்கு வந்தால், அதை மின்நிலா வலைப்பூ பக்கத்தில் உடனுக்குடன் வெளியிடலாம் என்ற திட்டம்.

   நீக்கு
  2. உண்மைதான்.  படிக்க நிறைய இருப்பதனால் ஒவ்வொன்றாகப் படித்து கருத்துகள் வர தாமதமாகும். 
    
   ஒன்று அதற்கென்று தனி மின்நிலா புத்தகம் கொண்டுவர வேண்டும்!  அல்லது மொத்தமாகத் தொகுத்து நம்ம ஏரியா - மின்நிலா வலைப்பூவில் பகிரவேண்டும்!

   நீக்கு
 37. பரிட்சை எழுதி விட்டு காத்திருக்கிற மாதிரி இருக்கின்றது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்களுக்கும் அதே மன நிலை !

   நீக்கு
  2. பேப்பர் திருத்தும் வாத்தியார்களைப் பொறுத்தது மதிப்பெண்ணைக் குறைப்பதும் கூட்டுவதும். தேர்வு எழுதியவர்களின் பாடு தான் தொங்கலில்.

   நீக்கு
 38. இனிய பொங்கல் வாழ்த்துகள் அனைவருக்கும்...

  பதிலளிநீக்கு
 39. பொங்கல் நல்வாழ்த்துகள் எபி ஆசிரியர்கள், நண்ப, நண்பிகள், வாசகர்கள் அனைவருக்கும்!

  வருகிறேன் கொஞ்ச நேரத்தில்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி.   உங்களுக்கும் வாழ்த்துகள்.  

   //வருகிறேன் கொஞ்ச நேரத்தில்..//


   வாங்க...   வாங்க...   (அடடா...   ஏதோ விஷயம் இருக்கும் போலவே.....)

   நீக்கு
 40. ஒரு quick comment:

  மலரின் அட்டைப்பட ஓவியம்பற்றிக் கவலைப்பட்டேன் ஆரம்பத்தில். வந்து நின்றதோ அழகு!

  சித்திரைக்கும் தரட்டும் அவர், மேலும் மேலும் சித்திரங்களை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா...   ஆரம்பம் இன்றே ஆகட்டும்...   (இதுவும் எஸ் பி  பி பாட்டுதான்!)

   நீக்கு
 41. எங்கள் வீட்டில் என் மகன் ஒரு cleanliness freak. நான்தான்  புத்தகங்களை ஆங்காங்கே வைத்து விட்டு அவனிடம் திட்டு வாங்குவேன். முன்பெல்லாம் மூக்கு கண்ணாடியை எங்கேயாவது வைத்து விட்டு தேடுவேன். இப்போது திருந்தி விட்டேன். சமையலறையில் சாமான்களை வைக்கும்  ஆர்டரை  மாற்ற மாட்டேன். 
  இப்போதெல்லாம் தனிமையில் வாடும் முதியவர்களைப் பற்றி நிறைய படிக்க நேரிடுகிறது. நேற்று கூட மத்யமரில் ஒருவர் எழுதியிருந்தார். 
  பொக்கிஷம் வழக்கம் போல் சிறப்பு.  தூக்கு தண்டனையம் விசிறி மடிப்பும் ஜோர்!. 

  பதிலளிநீக்கு
 42. இந்த மின் மலரைப் பார்த்துவிட்டு ஒரே பிரமிப்பு. எப்படி வாசிக்கப் போகிறோம் என்று.. சும்மா அப்படியே ஒரு திருப்பு திருப்பிவிட்டு நிதானமாக ஒவ்வொன்றாகப் படிப்போம். தயாரி்க்க எடுத்துக் கொண்ட உங்கள் யாவரையும் மனதில் நினைத்து நன்றி கூறுகிறேன். அருமையான தயாரிப்பு. யாவருக்கும் வாழ்த்துகள். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி காமாட்சிம்மா...   நிதானமாக நேரம் கிடைக்கும்போது வாசியுங்கள்.  உங்கள் கருத்துகளையும் அனுப்புங்கள்.

   நீக்கு
 43. அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
  ஜோக்ஸ் செம கலக்கல்.
  ஓரளவுக்கு ஒழுங்காக வைத்திருப்பேன்.வேலை ஆட்கள் கிடையாது.

  பதிலளிநீக்கு
 44. மின் நிலா பொங்கல் மலர் அட்டை மிகவும் கவர்ந்தது. தொடர்ந்து படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 45. இன்றைய தலைப்பு என்னவோ மனதை நெருடுகிறது. 'குப்பை வீடு' என்று எதுவுமே கிடையாது.... அடைசல் இல்லம் தலைப்புதான் சரியானது.

  நாங்களும் வீடு கிளீன் செய்பவரை (அவங்க வந்ததே 10 நாட்கள். அதற்குப் பிறகு நாங்க பஞ்ச துவாரகா டிரிப் சென்றுவிட்டோம். வந்த உடன் கொரோனா ஊரடங்கு) இன்றுவரை நாங்கள் வைத்துக்கொள்ளவில்லை.

  என்றைக்காவது வீட்டை கிளீன் செய்ய நேர்ந்தால் (சென்னையிலிருந்து புறப்பட்டு வந்தபோது செய்ததுமாதிரி), 30 சதவிகிதம் தேவையில்லாத பொருட்களைத்தான் வைத்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வோம். (ஆனா பாருங்க..அங்க விட்டுட்டு வந்த ஏகப்பட்ட பொருட்கள், எனக்குத் தேவையா இருக்கு. திரும்பவும் வாங்கணும்னா.. இவ்வளவு கொடுத்து வாங்கணுமா என்று யோசனையாவும் இருக்கு. ஹாஹா)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கு கூட இந்த வீட்டு உள்வேலைகள் முடிந்ததும் அர்பன் கிட்ட சொல்லி க்ளீன் செய்ய ஆள் ஏற்பாடு செய்யலாம்னு பேசிக்கொண்டிருந்தார்கள்.  இன்னும் அழைக்கவில்லை.  இதில் நாளை கணு வேறு.  சகோதரிகள் வருவார்கள்.  ஒரு மினி கெட் டுகெதர் இருக்கும்!

   நீக்கு
 46. மின்நிலா பொங்கல் எடிஷன் மிகவும் அருமையாக வந்திருக்கு .அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 

  பதிலளிநீக்கு
 47. /பின்னே?  ஒரு குடும்பம்னா சும்மாவா ?  வீடு லைவ்லியா இருக்குன்னு நினையுங்களேன்' என்பார் பாஸ்.//
  ஹாஹாஹா உண்மைதானே .அதது அந்த இடத்தில இருந்தா அது மியூஸியம் :) வீடுன்னா அப்படி இப்படித்தான் இருக்கும் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி இல்லாமல் இப்படியே இருப்பதுதானே பிரச்னை!

   நீக்கு
 48. /அப்படிநீட்டா  இருக்கணும்னா நீங்கள் கல்யாணமே பண்ணியிருக்கக் கூடாது!' என்பார்.  ஆமாம், காலங்கடந்த ஞானோதயம்!//
  கர்ர்ர்ர்ர்ர்ர் :) என் கணவரும் இப்படித்தான் வைத்த பொருள் அந்தந்த இடத்தில இருக்கணும்னு ஆனா நான் குப்பையையும் ரீசைக்கிள் கிராப்ட் செய்யும் ஆளாதலால் என்வலப் கவர் கூட சேர்த்து கிடைச்ச இடத்தில சொருகி வைப்பேன் .இப்போ எங்கே எதை வைச்சேன்னே எனக்கே தெரிலா 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில சமயங்களில் வழக்கம்போல அடைசலாகவே இருந்தால் கூட தேடி எடுத்து விடலாம்.  ஆனால் 'அடையாளமாக' எடுத்து வைக்கும்போதுதான் காணாமல்போய் தேட வேண்டி இருக்கிறது!

   நீக்கு
  2. அடைசலே நமது அடையாளம் என அறிந்து தெளிக !

   நீக்கு
 49. எங்கப்பாவுக்கு இந்த குணம் உண்டு அவர் வைக்கும் பொருட்கள் அந்தந்த இடத்தில இருக்கணும்னு .என் தங்கைதான் எல்லாத்தையும் உடனே க்ளியர் பண்ணி குப்பைக்கு அனுப்பும் ஆள் .அவள் டேபிளை சுத்தபண்ணும்போது குப்பைத்தொட்டிக்கு அவலாளனுப்பி வைக்கப்பட்டவை அம்மாவின் தங்க ஜிமிக்கி ஒரு ஜோடி ,அப்புறம் கொலுசு ரூபாய் நோட்டுக்கள் செக் புக் இப்படி எவ்வளவு இருக்கு எதையும்ப்பிரிக்காம அப்படியே வீசி வாங்கி கட்டுவா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த ரீதியில் சமீபத்தில் ஒரு மின்னம் மினி வெள்ளி நாகமும், சீரியல் லைட் ஒரு கொத்தும் க்ளீன் பண்ணும் வகையில் குப்பைக்குப்போய் நஷ்டமாகியது!

   நீக்கு
  2. ஹாஹாஹா என் தங்கச்சிக்கு பெரிய ஒருவர் உங்க வீட்ல இருக்காங்க :))))))))

   நீக்கு
 50. எல் ஆர் ஈஸ்வரி என்றாலே எனக்கு நினைவு வருவது மாரியம்மா பாடல்கள்தான் .அவரை பார்க்கும்போது வேப்பிலை ஆடிக்கூழ் தான் நினைவு வருது .அவரவர் PERCEPTION வேறுபடுது இல்லையா 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அச்சச்சோ...     அவர் மிக அற்புதமான திரைபடப் பாடல்கள் பாடி இருக்கிறார்.

   நீக்கு
 51. /மகனுக்கான வீடு
  வெளிநாட்டில் அமையுமா?
  உள்நாட்டிலா?
  கேட்கவேண்டும் பேரனிடம்
  பிறிதொரு ஸ்கைப் மீட்டில்//
  தனிமைத்தாத்தா மனம் கனக்க  வைக்குது .இங்கே பஸ்ல போகும்போது  சூப்பர்மார்கெட்டில் எவ்விடமும் அதுவும் இப்போ pandemic காலத்தில் இந்த தனிமை முதியோர் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது .தாத்தாகிட்ட சொல்லுங்க ரிட்டயர்மெண்ட் வில்லேஜ் இங்கே வெளிநாடுகளில் வந்தாச்சுன்னு 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வரிகளை எழுதும்போது தாத்தாவுக்கு தன் வாரிசின்மேல் இப்படி கோபம் வருமா என்று யோச்சிக்க வைத்தது.  அதனால்தான் அதனை எடிட் செய்யும் நோக்கில் பிரித்து வெளியிட்டேன்!

   நீக்கு
  2. எந்தக்காலத்திலும் தாத்தாக்களுக்கோ பாட்டிகளுக்கோ வாரிசுமேல் கோபம் வராது ஸ்ரீராம்.மனக்கஷ்டம் அப்புறம் கவலை ஏக்கம் மட்டுமே இருக்கும் ...நிறைய எழுதலாம் ஆனா பின்னூட்டம் யாரையும் கலங்க வைக்கக்கூடாது அதனால் முற்றுப்புள்ளி வைக்கிறேன் 

   நீக்கு
  3. நாம் நடக்க பழகும்போது தள்ளாடி விழுந்து நடத்திருப்போம் அப்போ கைபிடிச்சு நடக்க கற்றுக்கொடுத்த பெரியவங்களுக்கு அவங்க தடுமாறும்போது கைகொடுப்பதுதானே நம் கடமை .

   நீக்கு
  4. அதெல்லாம் உண்மைதான் ஏஞ்சல்.  அதனால்தான் பிற்சேர்க்கையாக சேர்த்தேன்.  ஏனெனில் நான் கேள்விப்பட்ட சம்பவத்தில் அந்தப் பெரியவரின் உணர்வு அது!  பேரன் எடுத்து வைக்கும் அலுமியத்தட்டை நினைவு படுத்திப் பேசினார்.

   நீக்கு
 52. இந்த பொக்கிஷம்லாம் பத்திரமா அவச்சிருக்கீங்க க்ரேட் .தூக்குத்தண்டனை :) ஹஹ்ஹா .ஒரு சம்பவம் நினைவு வருது ..எப்பவும் ஏசியன் ஷாப் இல்லைன்னா சூப்பர்மார்க்கட் போகும்போது பாக் தூக்குற பழக்கமே எனக்கில்லை :) அப்படி ஒருமுறை நாங்க போகும்போது ஒருவர் சொன்னார் //திஸ் ப்ரூவ்ஸ் யூ ஆர் தி boss என்று :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய பைண்டிங் புத்தகங்கள் வீணாகப் போய்விட்டன ஏஞ்சல்...   மனசுக்கு மிகவும் கஷ்டமான விஷயம் அது...

   நீக்கு
 53. கௌதமன் சார், ஸ்ரீராம் & கோ.வின் உழைப்பு, முனைப்பில் மிளிர்கிறது மின்நிலா பொங்கல் மலர் 2021. எபி யிடமிருந்து வந்த முதல் proper மலர்! வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 54. உள்ளடக்கம் படிக்கையில் இது பொங்கல் மலரா இல்லை.. ஊறுகாய் ஸ்பெஷலா என மனம் குழம்பியதும் நடந்தது!

  உள்ளே இறங்கிப் பார்க்கையில், அப்பப்பா! இத்தனைப் பங்களிப்பாளர்களா - எழுத்தாவது, படமாவது.. இறங்குவோம்..ஒரு கை பார்த்துவிடுவோம் .. என திமுதிமுவென வந்துவிட்டார்களோ 2021-ல் !

  சித்திரை மலருக்காக எத்தனை பேரின் நித்திரை கலையுமோ யாரே அறிவார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் நன்றி ஏகாந்தன் ஸார்.

   எங்கள் வேண்டுகோளுக்கிணங்கி அதில் பங்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி.

   நீக்கு
 55. எப்படி முயற்சி செய்தாலும் வியாளனில் வர முடியாமல் போய் விடுகிறது கொஞ்சக்காலமாக...

  வீடு... பொருட்களைக் குறைக்க வேண்டும்... ஒருவர் மட்டும் மனசு வைத்தால் போதாது அனைவரும் தத்தமது பொருட்களை அந்தந்த இடத்தில் வைத்தாலே அழகாகிடும்.. பொதுவாக வெளிநாட்டில் வீடுகள், குறை சொல்ல முடியாமல்தான் இருக்கின்றன..

  //ஆமாம் ...
  இதேபோல மகனுக்கான வீடு
  வெளிநாட்டில் அமையுமா?
  உள்நாட்டிலா?
  கேட்கவேண்டும் பேரனிடம்
  பிறிதொரு ஸ்கைப் மீட்டில்//

  ஹா ஹா ஹா மேலேயே நிறுத்தியிருக்கலாமோ:)).. இந்தக் கடசிப்பரா என்ன சொல்லிச் செல்கிறதெனில்.. மகனுக்குச் சாபம் போடுவதைப்போல இருக்குது ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா..  ஹா..   வியாழனில் வேண்டுமென்றே வராமல் இருக்கிறீர்கள் என்றா நினைக்கப் போகிறேன்?!!    

   // மகனுக்குச் சாபம் போடுவதைப்போல இருக்குது //

   அப்படியும் சில பெரியவர்கள் இருக்கிறார்கள் அதிரா...

   நீக்கு
 56. பொங்கல்மலருக்கு வாழ்த்துக்கள்.. அழகாக இருக்கிறது நிறையப் படைப்புக்கள் தாங்கி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///அழகாக இருக்கிறது நிறையப் படைப்புக்கள் தாங்கி..//

   எங்களை யாராலும் பேய்க்காட்ட முடியாதது ஸ்கொட்டிஷ் சுனாமி ஈ :)
   யார் யார்  எத்தனை படைப்பு என்னென்னென படைப்புன்னு சொல்லுங்க பாக்கலாம் :) அதுவும் வெள்ளையர்களை வானவில் பார்த்தா குட்லக்ன்னு ஏமாத்தி வச்சிருக்கீங்க ஒழுங்கா அதில் எத்தனை கவிதை கதை துணுக்கு டைப்ஸ் of ஊறுகா  எல்லாம் வந்ததுன்னு சொல்லுங்க பார்க்கலாம் :))
   நான் வேலைக்கு போரின் பாஅய்ய்ய்ய் byeeeee 

   நீக்கு
  2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர் நான் ஜொன்னனே என் எடிரி வெளியில இல்ல:) வீட்டுக்குள்ளயேதான்ன்ன்ன்:)...

   வெந்தய ஊற்காய் செய்யப்போகிறேன்...
   16 வயசு துரை அண்ணனைப் பார்த்திட்டேன்ன்:)..

   முகத்துக்குப் பெட்டி போட்டு மறைத்திருப்பது நெ டமிலனும் அண்ணியுமோ:)... றான்ஸ்பரண்ட் என்பதனால மூக்கு கண் எல்லாம் பார்த்திட்டனே:)... ஹா ஹா ஹா

   இது போதுமோ இன்னும் வேணுமோ?
   அங்கு கும்மி கோலாட்டம் போடக்கூடாதெல்லோ... அச்சம் மடம் நாணம் பயிர்ப்பா இருக்கோணும் எலெக்ரிக் நூலில்:)

   நீக்கு
  3. என்னாதூஊஊ வேலைக்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்:)... இந்த சுனாமியை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊ:)

   நீக்கு
  4. ஹாஹா .அதில் 298 பேஜஸ் இருக்கு மற்றது பற்றி  ஒன்னும் சொல்லலியே நீங்க 
   naanananaanaa :))

   நீக்கு
  5. நன்றி ஏஞ்சல்.  அதிராவை குறை சொல்ல முடியாது ஏஞ்சல்.  தவறான மெயிலுக்கு அவருக்கு அனுப்பப்பட்டது.  விவரம் அறிந்து நான் சரியான முகவரிக்கு அனுப்பினதால் தாமதமாகத்தான் அவருக்கு கிடைத்திருக்கும்.  

   நீக்கு
 57. மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள். குப்பை வீடு - ஆஹா..... பலரது வீடுகளில் இப்படித்தான் தேவை இருக்கிறதோ இல்லையோ சேர்ந்துகொண்டே இருக்கிறது குப்பை. தேவையற்றவை என்பதை அவ்வப்போது விலக்கினாலும் மீண்டும் எப்படியும் சேர்ந்துவிடுகிறது. பதிவின் மற்ற பகுதிகளும் சுவாரசியம்.

  பதிலளிநீக்கு
 58. என்னுடைய பின்னூட்டத்தில் மட்டும் பதிலளி நீக்கு இரண்டாம் அடியில் வருகிறது அது ஏன் அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது "நீக்கு" என்பது உங்களுக்கு மட்டும் தெரியும்னு நினைக்கிறேன். அந்தக் கருத்துத் தேவையில்லை எனில் நாமே நீக்கலாம் என்பதற்காக அந்த ஆப்ஷனும் வருது போல! எனக்கும் என்னோட கருத்தில் மட்டும் தெரியும்.

   நீக்கு
 59. எழுது பொருள் தேடிக்களைக்கும்ம் என்போன்றோருக்கு அடைசலும் குப்பையும் அழகாக உங்களுக்கு கை கொடுகிற்து பாராட்டுகள்எடுத்த ஒவ்வொருபொருளையும் அதனதன் இடத்தில் வைக்க பழகி விட்டால் மறதியின் தாக்கம் குறையலாம்

  பதிலளிநீக்கு
 60. நகைச்சுவைத் துணுக்குகளை அதிகம் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 61. வீட்டில் உள்ள அனைவரும் நினைத்தால் மட்டுமே வீடு குப்பையாய் இருக்காது. பெரிய வீடாக இருந்தால் இன்னும் சிரமமே...ஒவ்வொரு அறையாக சுத்தப் படுத்தி பார்த்தால், மீண்டும் தொடங்கிய இடத்தில் குப்பை பல்லிளிக்கும் . முக்கியமாக சமையல் அறை சுத்தம் செய்வதே மிகவும் கஷ்டம். இரண்டு வாரம் ஒரு முறை சிம்னி மற்றும் அதில் பொருத்தி இருக்கும் வலைத்தட்டை சுத்தம் செய்ய வேண்டும். fan துடைத்து வைக்க வேண்டும். அதற்கு வீட்டில் உள்ள ஆண்கள் துணை புரிய வேண்டும்.
  குழந்தைகள் எல்லா விளையாட்டு சாமான்களும் பரப்பி வைத்திருப்பர். ஒரு புறம் வாட்டர் கலர் செய்து அதை தரையில் கொட்டிவைப்பர். ஒரு புறம் படித்து எழுதிய note , pen ,pencil ... பார்க்கவே தலை சுற்றும். இது போதாதென சப்பாத்திக்கு மாவு பிசைந்தால், எனக்கும் கொடு, நானும் கொஞ்சம் செய்வேன் என்று அதையும் பரப்பி வைப்பர். இதெல்லாம் பள்ளிக்கு செல்லாது பிள்ளைகள் வீட்டில் செய்யும் pandemic அலம்பல்கள்...
  பின் பெரியவர்கள் அவர்கள் பங்குக்கு செய்யும் விசேஷ அலம்பல்கள். பேப்பர் படித்து விட்டு அப்படியே கிடக்கும். T.V ரிமோட்டுக்காக பிள்ளைகளுக்கும் , பெரியவர்களுக்கும் ஒரு குட்டி சண்டை நடக்கும். அதன் நடுவில் ஒன்லைன் கிளாஸ் வேறு. எல்லா வேலையும் முடித்து கொஞ்சம் நேரம் புத்தகம் , blogspot வருவது இதம் .
  சுஜாதா , தனது துப்பறியும் நாவலில் , கணேஷிற்கு அனைத்தும் சிதறி கிடந்தால் மட்டுமே யோசிக்க முடியும் என சொல்லியிருப்பார். An order in disorder என்பார். இதையே, Arthur Conan Doyle , தனது sherlock Holmes ல் பிரதிபலித்திருப்பர்.
  நம்மால் என்ன செய்யமுடியும். பொருட்கள் நம் எல்லை மீறி சிதறி கிடைக்கும்போது இப்படி நினைத்து தேற்றிக்கொள்வேன்! (நீங்கள் அனைவரும் சிரிப்பது கேட்கிறது...ஹீ ஹீ ஹீ ).
  கவிதை அருமை. இப்பொழுது அனைவரும் இப்படி தானே தனி தீவாகி விட்டோம்.
  நகைச்சுவை துணுக்கு old is gold.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!