செவ்வாய், 24 மே, 2011

கே யைத் தேடி! 01

                            
ஆமாம் - கதை அங்கே முடிவடைந்துவிடவில்லை. நாம் எல்லோரும் தமிழ்ப் பட ரசிகர்கள் ஆயிற்றே! அது எப்படி ஒரு 'தீ' இறப்பதோடு கதையை முடிக்க முடியும்? 
               
'கே' யைக் கண்டுபிடித்து 'கீசு கீசு' என்று கீசிவிடவேன்டாமா? நம்பியார் சாட்டையால் அடித்தால் அதை வாங்கிக் கொண்டு எம் ஜி யார் சும்மா போய்விட முடியுமா! பாட்டுப் பாடாமல் அடித்த நம்பியாரை, பாட்டுப் பாடி, புரட்டி புரட்டி சாட்டையால் அடிக்க வேண்டாமா! வெடி வைத்த கே'யைக் கண்டு பிடித்து பீஸ் பீசாக்கி விட வேண்டாமா! 
                             
இனி கே' யைக் கண்டு பிடிக்க நம்ம லேடி ஜேம்ஸ் பாண்ட் காசு சோபனாவிடம் கேசை ஒப்படைத்துவிடலாம். 

*************************
"டீ குடித்தார் போக்குவரத்துக் காவலர்! 
  தீ குளித்தார் பழுது பார்த்தவர் !!"
   
என்று ஏராளமான ஆச்சரியக் குறிகளுடன் வெளியாகி இருந்தது - அந்தச் செய்தி, பிரபல நாளிதழ் ஒன்றில். சின்னா பின்னமாகிவிட்ட காரின் படங்களும் வெளியாகி இருந்தது. 

'ஊருக்கு வெளியே நெடுஞ்சாலையில் ஒதுக்குப் புறமான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது பழுதடைந்த கார் ஒன்று. காரை பழுது பார்த்துக் கொண்டிருந்த மெக்கானிக்கின் கவனமின்மையால், அருகில் வந்த ஒரு பெட்ரோல் கண்டெய்னர் லாரி காரின் பெட்ரோல் டாங்க் மீது உரசி, கார் தீப்பிடித்து எரிந்தது. மெக்கானிக்கை அவர் விபத்தில் பலியாவதற்கு சற்று முன்பு பார்த்துப் பேசிய போக்குவரத்துக் காவலர் பொன்னுசாமி, சற்று தூரத்தில் இருந்த டீக்கடையில் டீ அருந்திக் கொண்டிருக்கும் பொழுது இந்தப் பரிதாப விபத்து நடந்தது. சம்பவ இடத்திலிருந்து அப்பொழுதுதான் வந்து டீக்கடையில் அமர்ந்த பொன்னுசாமி, விபத்து நடந்த நேரம், பெட்ரோல் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று அதிவேகமாக நிறுத்தப்பட்டிருந்த கார் இருந்த திசையில் சென்றதையும், அது அந்தக் காரை முந்திச் செல்லும் நேரத்தில், நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததை, தான் பார்த்ததாகவும், நமது நிருபரிடம் தெரிவித்தார். 
       
அதை உன்னிப்பாகப் படித்த கா சோ - 'ஹும் வழக்கம்போல கேசை முடிக்க ஏதோ ரீல் விட்டு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். யார் பேருல கேஸ் புக் பண்ணப் போறாங்களோ?'என்று சொன்னார். 
                   
அவருடைய உதவியாளர் திருவாளர் சோணகிரி (அம்மா அப்பா வெச்ச பெயரே அதுதானா என்றெல்லாம் கேக்கப்படாது! ) கேக்கப்படாது என்றவுடன் ஞாபகம் வருகிறது திருவாளர் சோணகிரிக்கு ஒரு காதுதான் நன்றாகக் கேட்கும். பாஸ் நோட்ஸ் கொடுக்கும் பொழுது, கேட்காத காது அவர் பக்கம் திரும்பி இருந்தால் - சில வார்த்தைகள் அவருக்குக் கேட்காது - அது அவர் அடிக்கின்ற மின் அச்சிலும் வராது. உதாரணத்திற்கு, 'Shilpa shetty denies reports that she is pregnant' என்று நோட்ஸ் கொடுத்தால் அவர் பவ்யமாக அதில் உள்ள denies என்ற வார்த்தையை காதில் வாங்கிக் கொள்ளாமல் மீதியை டைப் செய்து, பிரிண்ட் எடுத்துவிடுவார்! 

 கா சோ கூறியது அவர் காதில் அரைகுறையாக விழுந்ததால் - 'என்ன பாஸ்? வீட்டுல காஸ் தீந்து போச்சா? புக் பண்ணனுமா?' என்று கேட்டார்.

கா சோ இடது உள்ளங்கையில் வலது கை ஆள்காட்டி விரல் + நடு விரல் இரண்டையும் ஒரு தட்டுத் தட்டி, வலது கை கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் இணைத்துக் காட்டினார். சோணகிரி தெரிந்துகொண்டார் - 'நோ'.

அந்த நேரத்தில், அறை வாயிலில் போலீஸ் பூட்ஸ் சத்தம் கேட்டது. இன்ஸ்பெக்டர் கு. ரங்கன்தான் வந்துகொண்டு இருந்தார். (ஆமாம் - ஆமாம் அப்பா, அம்மா வைத்த பெயர்தான் - அப்பா பெயர் குழந்தை, அவர் பெயர் ரங்கன்!)  

"வாங்க அங்கிள் - சௌக்கியமா? என்னுடைய உதவி எதுவும் தேவையா?"

"நியூஸ் படிச்சியாம்மா? அது பற்றி என்ன நினைக்கிறே?"

"படிச்சேன் அங்கிள். அந்த நியூஸ்ல முக்கால்வாசி புளுகு என்று, சேதமான காரின் படத்தைப் பார்த்தாலே நன்றாகத் தெரியுது. கேசை முடிச்சுட்டீங்களா? இல்லை, இன்னும் ஏதாவது விசாரணைகள் தொடருமா?" 

"கேசை இத்தோடு முடிக்க முடியாதம்மா. உங்க 'எ சா & கா சோ துப்பறியும் நிறுவனம்' இதில் எங்களுக்கு உதவ முடியுமா?" 

"நிச்சயம் உதவ முடியும்" என்று சொன்னவாறு உள்ளே நுழைந்தார் எலெக்ட்ரானிக் சாமியார்! 

(தொடரும்) 
              
நீலக் கமெண்ட்: வாசகர்களை கேள்வி எதுவுமே கேட்கலையா? அவ்வ்வ்வவ்வ்வ்வவ் !

9 கருத்துகள்:

  1. எலக்ட்ரானிக் சாமியாரா? கேயைத் தேடி அவியலா?

    பதிலளிநீக்கு
  2. எலெக்ட்ரானிக் சாமியார் ...... சுவாரசியமான பெயர் ஆக இருக்கிறதே....

    பதிலளிநீக்கு
  3. துப்பறியும் கதையா. சங்கர்லால், கணேஷ்-வசந்துக்கு போட்டியாக சோபனாவா.

    பதிலளிநீக்கு
  4. தமிழ் உதயம் சார்! ஆமாம்! So & So company! E Saa & kaa so detective agency!

    பதிலளிநீக்கு
  5. துப்பறியும் கதை களை கட்டுது .,..

    பதிலளிநீக்கு
  6. கேள்வி எதுவுமே கேட்கலையா? அவ்வ்வ்வவ்வ்வ்வவ் !
    :-))

    பதிலளிநீக்கு
  7. "நிச்சயம் உதவ முடியும்" என்று சொன்னவாறு உள்ளே நுழைந்தார் எலெக்ட்ரானிக் சாமியார்! //
    காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  8. சோணகிரி...வீட்ல திட்டு வாங்கி நிறையக் காலத்துக்குப் பிறகு ஞாபகப்படுத்திட்டீங்க.கதை தொடரட்டும் !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!