செவ்வாய், 7 ஜூன், 2011

கே யைத்தேடி 08

                    
அத்தியாயம் 08: "யாரும்  இல்லை"

(அய்யா / அம்மா பதிவாசிரியரே - ரொம்ப இழுக்காம சுருக்கமா ஒரு அத்தியாயம் எழுதுங்க!)

கார்த்திக்கின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாயிற்று. வீட்டை, கார்த்திக் தன்னுடைய சாவிக்கொத்திலிருந்து சாவியை எடுத்துத் திறந்தார்.

சோபனா: "போன பதிவுல, செல்லுல உங்க மனைவியோட பேசினீங்களா?"

கார்த்திக்: "அட எப்படித் தெரியும்?"

சோபனா: "நீங்க பேசினது எல்லாமே ஒரு வார்த்தையில் பதில் சொன்னீங்க. ஆமாம், இல்லை,  உம்,   ஊஹூம்.  இதெல்லாம்தான் அதிகமாக சொன்னீங்க. செல் ஃபோனை அவசரம் அவசரமாக - நான் எடுப்பதற்குள் எடுத்துப் பேசியதால், என் குரலை மறுமுனையில் இருப்பவர் கேட்டால் உங்களுக்குப் பிரச்னை ஆகிவிடும் என்று நீங்கள் பயந்தது போலத் தெரிந்தது. மேலும் ....."

கார்த்திக்: "மேலும் என்ன? சொல்லுங்க."

சோபனா: "அதில் H.A calling  என்று வந்ததால், அநேகமாக நீங்க 'Head ache' என்று நினைப்பது உங்கள் மனைவியாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்."

கார்த்திக் உண்மையிலேயே திகைத்துப் போனார். "நீங்க என் மனைவியை சந்திக்கும் சந்தர்ப்பம் எதுவும் வாய்த்துவிடக் கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளப் போகின்றேன். மேடம் எப்பிடி இப்படி எல்லாம் சிந்திக்கிறீங்க! என் மனைவி பெயர் அர்ச்சனா. அவங்க ஹைதராபாத்ல என் பையன் கூட இருக்காங்க. நான் H.A என்பதற்கு விளக்கமாக ஹைதராபாத் அர்ச்சனா என்று கூட சொல்லலாம் இல்லியா?"

எ சா : "உம்ம்... சொல்லலாம். ஆனால் எந்த ஊரில் இருந்தாலும் உங்க மனைவி அர்ச்சனாதான். ஹைதராபாத் அர்ச்சனா என்று ஸ்பெஷலா ஏன் போட்டுக்கணும்?"

கார்த்திக்: "சார் நம்ப வேற சப்ஜெக்ட் பேசலாமா?"

எ சா : "சரி, சரி! நீங்க என்னை மன்னிக்கவேண்டும். நீங்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சமயத்தில், உங்க விலாசத்தை ரங்கன் சாரிடம் ஃபோனில் தெரிந்துகொண்டு , நான் முன்பே இங்கே வந்து,  உங்கள் வீட்டுப் பக்கம் வந்த மனிதர்களை, என் செல் காமிராவால் படம் எடுத்துள்ளேன். அந்தப் படங்களை உங்களுக்கு இப்போ காட்டுகின்றேன், அவர்கள் எல்லோரையும் உங்களுக்குத் தெரியுமா என்றும், அதில் உங்கள் காரை வாங்கிய இருவர் போல யாராவது இருக்கின்றார்களா என்பதைக் கூறுங்கள்."

கார்த்திக், எ சா காட்டிய படங்களைப் பார்த்தார். அடையாளம் தெரிந்த சிறு வியாபாரிகள், கார் துடைப்பவர், காய்கறிக்காரர், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோரை அடையாளம் காட்டினார். "இந்தப் படங்களில், கார் வாங்கிச் சென்ற இருவரில் யாரும் இல்லை." என்றார்.
   
(வர வர, 'கே யைத் தேடி' பதிவுக்கு, வோட்டும் விழமாட்டேங்குது, கமெண்ட்ஸ் எண்ணிக்கையும் குறைகிறது. எனவே இது, இனிமேல் ...

தொடருமா? )
                

14 கருத்துகள்:

 1. //சோபனா: "அதில் H.A calling என்று வந்ததால், அநேகமாக நீங்க 'Head ache' என்று நினைப்பது உங்கள் மனைவியாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்."//

  ஆஹா, சூப்பர் ஐடியாவாக உள்ளது. அனைவரும் இதுபோல ஏதாவது ஒரு கோடுவேடு வைத்துக்கொண்டு கடைபிடிக்க உதவியுள்ளீர்கள்.

  நகைச்சுவையாகவே எழுதுகிறீர்கள்.
  கட்டாயம் தொடருங்கள் ஆனால் இந்தப்பகுதி போல சற்றே சுருக்கமாக ஒரு 60 to 75 வரிகளுக்கு மிகைப்படாமல்.

  நான் இப்போது நானே உங்களுக்கு பதிலாக இன்ட்லியில் இணைப்புக்கொடுத்து வோட்டளித்து விட்டேன். 0 to 1 எனது வோட்டு என்பதை அறியவும். அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 2. இன்ட்லியில் இணைப்புக்கொடுத்து தங்களுக்கு பதிலாக நானே முதல் வோட்டைப்போட்டதற்கு நன்றி என்று மட்டும் சொல்லாமல் உடனடியாக என்னுடைய கீழ்க்கண்ட இரண்டு பதிவுகளுக்கு வோட்டுப்போட்டு விடவும்:

  http://gopu1949.blogspot.com/2011/06/2-of-3.html

  http://gopu1949.blogspot.com/2011/06/3-of-3.html

  ஓக்கேவா ?

  பதிலளிநீக்கு
 3. நன்றி VGK சார்!
  உங்கள் ஆர்வம எங்களுக்குப் பெருமகிழ்ச்சியூட்டுகிறது!

  (ஆனாலும் பதிவாசிரியர் கோபித்துக் கொண்டு குமரன் குன்றம் சென்றுவிட்டார். யாராவது அவ்வையார் அவரை அங்கே பார்த்தால் சமாதானம் செய்து எங்கள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும்!)

  பதிலளிநீக்கு
 4. H.A calling நல்லா இருக்கு. எப்படியெல்லாம் சிந்திக்கிறிங்க.

  பதிலளிநீக்கு
 5. H A callingக்கு Home Adhikari callingன்னு கூட வைச்சுக்கலாம்!!
  :-))
  வோட் போட்டுடறேன்!

  பதிலளிநீக்கு
 6. குரோம்பேட்டைக் குறும்பன்7 ஜூன், 2011 அன்று பிற்பகல் 1:54

  நான் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை ஜூன் பன்னிரெண்டாம் தேதி,காலையில் குரோம்பேட்டைக் குமரன் குன்றம் செல்வேன். அப்போ அங்கே பதிவாசிரியர் (அடையாளங்கள் சொல்லவும்) இருந்தால், அவரைப் பிடரியில் அடித்து, உங்கள் அலுவலகத்திற்கு (விலாசம் சொல்லவும்) அனுப்பி வைக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 7. குரோம்பேட்டைக் குறும்பன்7 ஜூன், 2011 அன்று பிற்பகல் 2:00

  மேலும், இந்தப் பதிவை அவர் தொடர்ந்து எழுதவில்லை என்றால் யாரும் கவலைப் படாதீர்கள். பிளாட் ஃபார்ம் கடையில் எங்காவது Erle Stanley Gardner எழுதிய Perry Mason solves the case of the Missing Car என்ற புத்தகம் கிடைத்தால் சல்லிசான விலையில் பேரம் பேசி, வாங்கி, படித்துக் கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 8. தொடரணும் தொடரணும்... அடிக்கடி போடுங்க.... அப்ப கமெண்ட்ஸ் கொட்டும்...:))

  பதிலளிநீக்கு
 9. நாங்க வேற ஏதாச்சும் பேசலாமான்னு ...!

  பதிலளிநீக்கு
 10. என்னங்க இது! கதையை இவ்வளவு தூரம் அழகா கொண்டு வந்துட்டு சரியான சமயத்துல 'தொடருமா?' போடறீங்க. தொடருங்கள்! கதை ரொம்ப விறுவிறுப்பா போறது.

  பதிலளிநீக்கு
 11. ம்ம்ம்.. ஒருத்தர் கூட கதையைப் படிச்சு கமென்ட் போட்ட மாதிரி தெரியலிங்களே? :))

  இழுபறியாத் தோணுறது ஒரு காரணமா இருக்கலாம்.

  விறுவிறுப்பான ஆரம்பத்த்துக்குப் பிறகு (வெடிவைக்கக் கார் வாங்கும் உத்தி) ஒவ்வொரு தடவையும் 'யாரோ போனில் அழைத்தார்கள்'னு தொடரும் போட்டா கொஞ்சம் விறுவிறுப்பு புஸ்ஸாகுதோனு தோணுறது ஒரு காரணமா இருக்கலாம்.

  இல்லையின்னா எங்கள் ப்ளாக் காரங்க நல்லவங்களாச்சே, மனசு கோணாம இருக்க 'ஆகா!' 'தொடருங்கள்!' அப்படினு தோராயமா கமென்ட் போடுறாங்களா இருக்கும்..

  அதுவும் இல்லேன்னா கமென்ட் போட சோம்பலா இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 12. என்னது அடுத்த பகுதி எங்க . பேசமா சோபனா மேடத்தை வெச்சு பதிவாசிரியரை தேட சொல்லலாமா

  பதிலளிநீக்கு
 13. அண்ணன் அப்பாதுரையின் கமெண்ட்டை வழிமொழிகிறேன். ;-))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!