புதன், 25 ஜனவரி, 2012

கோடு போடுங்கள்!

                                
புதிர்கள் வெளியிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டனவே - சீக்கிரம் ஒரு புதிர் பதிவிடுங்கள். நாங்கள் எல்லோரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றோம் என்று மின்னஞ்சலும், கெஞ்சலும், கோபமும் காட்டிய வாசகர்களுக்காக இந்தப் பதிவு. 

பதிவுக்கு விடையை ஒரு காகிதத்தில் வரைந்து, அதைப் படம் எடுத்து, அல்லது கம்பியூட்டர் பெயிண்ட் / மற்ற வழிகள் மூலமாக வரைந்து, engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். ஒருவரே எவ்வளவு விடைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். (ஆனால் எங்களுக்குத் தெரிந்து இதற்கு ஒரே ஒரு சரியான விடைதான் உள்ளது.)

இதோ புதிர்: 

A,B,C,D,E,F,G,H,I, என்று ஒன்பது புள்ளிகள், படத்தில் காட்டியுள்ளபடி 3 X 3 வரிசையில் உள்ளன. 

                                           
இதோ விதிகள்: 

* இந்த ஒன்பது புள்ளிகளையும் (அதிக பட்சம்) நான்கு நேர்க் கோடுகளால் இணைக்கவேண்டும். 
                    
* அந்த நான்கு நேர்க் கோடுகளையும் ஆரம்பத்திலிருந்து, கடைசி வரையிலும் கை எடுக்காமல் (without break) வரையவேண்டும். 
            
* எந்த ஒரு கோட்டின் மீதும் மீண்டும் கோடு போடக் கூடாது. 
            
* கோடுகள் ஒன்றை ஒன்று கிராஸ் செய்து (குறுக்காக) கடக்கலாம். 
              
ஆன் யுவர் மார்க், கெட் செட், ரெடி ................ கோ! 
           

25 கருத்துகள்:

  1. "எக்கோடோ" போட்டு போங்க..... ஹி,ஹி,ஹி,ஹி...

    பதிலளிநீக்கு
  2. எங்கள் ப்ளாக்25 ஜனவரி, 2012 அன்று 7:19 PM

    சித்ரா மேடம் - அப்படி எல்லாம் போட்டு போக மாட்டோம்!!

    பதிலளிநீக்கு
  3. ஸால்வ் பண்ண ட்ரை பண்ணிப் பாக்கறேன். ஆனா கடைசியில... இதுக்கு ஆன்ஸரே கிடையாது. சும்மா வெளாட்டுக்குன்னு சொல்லி கொலவெறியக் கிளப்பிட மாட்டிங்களே...

    பதிலளிநீக்கு
  4. எங்கள் ப்ளாக்25 ஜனவரி, 2012 அன்று 8:51 PM

    கணேஷ் சார் - அப்படி எல்லாம் சொல்லமாட்டோம். நெசமாவே ஒரு விடை இருக்கின்றது. முயற்சி பண்ணுங்க. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. எங்கள் ப்ளாக்25 ஜனவரி, 2012 அன்று 9:00 PM

    சரியான பதில் மீனாக்ஷி அவர்களிடமிருந்து வந்துள்ளது. மீனாக்ஷி - நீங்க எழுதிய வரை முறையை, வரைந்து அனுப்ப இயலுமா?

    பதிலளிநீக்கு
  6. நிச்சயமா நாளைக்குள்ள வரைஞ்சு அனுப்பறேன்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள (எங்கள) நெனச்சா பாவமா இருக்கு..
    புள்ளி வெச்சு கோலம் போடுறதுலாம் போன மாசமே ஆயிட்டுது..

    பதிலளிநீக்கு
  8. 2 கோடு கொசுறாச் சேத்துக்கலாமா !

    பதிலளிநீக்கு
  9. எங்கள் ப்ளாக்26 ஜனவரி, 2012 அன்று 8:50 AM

    ஹேமா - ரெண்டு கோடு கொசுறா சேர்த்துக்கொண்டால், ரெண்டு முட்டைதான் மார்க்!!

    பதிலளிநீக்கு
  10. எங்கள் ப்ளாக்26 ஜனவரி, 2012 அன்று 8:51 AM

    மாதவன் - முதல் படமே ஓ கே. ஆப்டிமைசுடு படம் சரியான விடையாக இருந்த போதிலும், முழுமை இல்லை என்று தோன்றுகிறது. ஒவ்வொரு புள்ளியும் குறைந்த பட்சம் இரண்டு புள்ளிகளோடு இணைக்கப் படவேண்டும் என்று ஒரு விதி சொல்லப்பட்டிருந்தால், உங்கள் இரண்டாவது படம் அடி(லயிடு) பட்டுப் போயிருக்கும்!

    செந்தில் வேலாயுதன் சார்! நான்கு நேர்க கோடுகள் மட்டுமே அனுமதிக்க முடியும்! வளைவு கோடுகள் எதுவும் கூடாது!

    மீனாக்ஷி. படம் தெளிவாக, சரியாக உள்ளது. இது போதும்.

    பதிலளிநீக்கு
  11. எங்கள் ப்ளாக்26 ஜனவரி, 2012 அன்று 10:22 AM

    கு கு - நீங்க ஸ்கூல் நாட்களில் வேண்டுமானால், பதில் தாளில், கேள்வியை அப்படியே எழுதி, மடிச்சுக் கொடுத்தால், 'நீட்நெஸ்' மார்க் கிடைக்கும். எங்களுக்கும் அதே மாதிரி, கேள்விப் படத்தை அனுப்பி வைத்து விட்டு, ஏதேனும் கொஞ்சம் மார்க் போடுங்க என்று கேட்பது நியாயமா?

    பதிலளிநீக்கு
  12. போட்டியில் இறங்கியாச்சு!

    பதிலளிநீக்கு
  13. // ஒவ்வொரு புள்ளியும் குறைந்த பட்சம் இரண்டு புள்ளிகளோடு இணைக்கப் படவேண்டும் என்று ஒரு விதி சொல்லப்பட்டிருந்தால், //

    Where.. where.. where this is mentioned, Sir ?

    2nd picture sent by me is optimized because it saves ink compared to the 1st one :-)

    பதிலளிநீக்கு
  14. இப்பதான் உங்க புதிரை பார்த்தேன் கொஞ்சம் டைம் கொடுங்க முயற்சி செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. in that curve portion have to be drawn in another paper by keeping downside.

    பதிலளிநீக்கு
  16. //where this is mentioned, Sir ?

    ஹிஹி.. Madhavan Srinivasagopalan.. விதி போடுறதுல சூரர்களாச்சே எபி?

    பதிலளிநீக்கு
  17. First join c , E, G.

    Then join g , D, A.
    and extend the line a little further

    Now join B ,F , and fnish the line after I..

    Finely join I , H ,G..

    இப்போது முக்கோணமும் நடுவில் ஒரு கோடும் கிடைத்து எல்லாப்புள்ளிகளும் இணைக்கப்பட்டிருக்கும்..

    பதிலளிநீக்கு
  18. ஹையோ ...ஹையோ..... மார்கழி மாசம் காலத்தில் இந்த கோலப்புதிரை போட்டு கிழவிகளும் குமரிகளும் சண்டைக்கு நிற்பார்கள். மகா வேடிக்கையாய் இருக்கும். கல்லூரிக்கலங்களில் வகுப்பு போரடித்தால் இந்த புதிரை போட்டுத்தான் காலம் தள்ளுவார்கள் அக்கால "மாப்பிள்ளை " பென்ச் காரர்கள். விடையோ மிக எளிது. :))

    பதிலளிநீக்கு
  19. I have two more answers without violating your rules....

    Method 1)

    Step a) I took one pencil each for my hands (left, right)

    Step b) Righthand pencil kept on the point 'A', while left hand pencil kept on the point 'E'

    Step c) I drew a straight line from 'A' to 'C' via 'B' (Straight Line -- SL#1)

    Step d) Using the same pencil another SL(#2) from 'C' to 'I' (via 'F')

    Step e) 3rd SL from'I' to 'G' via 'H', at the same time, 4th SL drawn between 'E' to 'D'


    Method 2)

    It is not said that the points should not to moved. So, I move the point 'E' to a place in between 'A' and 'B'. Now, just SL along the path 'AC', 'CI', 'IG' & 'GA' & get this.

    :-)
    நாங்களும் வித்தியாசமா யோசிப்போமில்ல..

    பதிலளிநீக்கு
  20. Thanks அப்பாதுரை Sir.
    :-)
    நீங்கள் பின்னூட்டைத்தையும் ஃபாலோ பண்ணுறீங்கபோல.. !!

    பதிலளிநீக்கு
  21. இதுவரை சரியான விடை வரைந்து அனுப்பியவர்கள்:
    மீனாக்ஷி.
    மாதவன்.
    மிடில் கிளாஸ் மாதவி.
    சென்னைப் பித்தன்.
    எழுதியவர்கள்:
    இராஜராஜேஸ்வரி
    மாதவன்.
    யாருடைய பெயராவது விட்டுப் போயிருந்தால் சொல்லுங்க.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!